இறைவா நீயே அனைத்தும்.
இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.
அன்புடன் அகத்திய மாமுனிவர் பெங்களூர் சத்சங்கம் - 12.November.2024 - பகுதி 1
ஆதி முதல்வனை மனதில் எண்ணி செப்புகின்றேன், அகத்தியன்.
அனைவருக்குமே எம்முடைய ஆசிகள்.
========================================================
# முன்னோர்கள் ஆசி இருந்தால்தான் - வெற்றி உண்டாகும்
========================================================
குருநாதர் :- அப்பனே, அனைவருமே பக்குவங்கள் பட்டுத்தான். அவை மட்டுமில்லாமல், ஒவ்வொருவருக்கும் நல்விதமாகவே குலதெய்வத்தின் அருளும் கூட, நிச்சயம் முன்னோர்களின் ஆசையும் கூட, நிச்சயம் இவைதன் முதலில் இருக்க வேண்டும்.
குருநாதர் :- இவ்வாறு இருந்தால்தான் வாழ்க்கையில் நிச்சயம் அப்பனே, அம்மையே ஜெயிக்க முடியும். அப்படி இல்லை என்றால், நிச்சயம் எத் திருத்தலம் பின் சென்றாலும், நிச்சயம் பின் கஷ்டங்களோ, தோல்விகளோ தான் மிஞ்சும். அதனால் பல வகைகளில் கூட உங்களுக்கு யான் பின், பல பல பல வாக்குகள் கூட எடுத்துரைத்துக் கொண்டே இருக்கின்றேன்.
========================================================
# அகத்திய மாமுனிவர் வைக்கும் தேர்வு - அனைவருக்கும்
========================================================
குருநாதர் :- ஆனால் இன்றைய பொழுதில் உங்களுக்கு ஒரு நிச்சயம் பின், அதாவது பின் தேர்வை வைக்கப் போகின்றேன். அதில் நீங்கள் நிச்சயம் வெற்றி பெற, வெற்றி பெற. பின் நிச்சயம் அத்தேர்வு எப்படி இருக்கும் என்பதை எல்லாம் நிச்சயம். ஆனால் சுலபமாகத்தான். ஆனாலும் இதில் கூட நீங்கள் (எப்படி) வெற்றி பெறுவீர்களா என்றெல்லாம் நிச்சயம் யான் உங்கள் இல்லத்திற்கெல்லாம் வந்து நிச்சயம் பார்ப்பேன்.
========================================================
# முன்னோர்கள் ஆசி இருந்தால்தான் - அகத்திய மாமுனிவரை நாட முடியும்
========================================================
குருநாதர் :- ஏன், எதற்கு நிச்சயம் பின்? அதாவது முன்னோர்களின் ஆசிகளும், குல தெய்வத்தின் அனுக்கிரகம் இருந்தால் மட்டுமே பின் என்னையும் கூட நாட முடியும். பின் அவர்கள் நிச்சயம், அதாவது புண்ணியங்கள் பலமாக இருந்தால், நிச்சயம் குலதெய்வத்தின் அருளும் கூட, முன்னோர்களின் ஆசியும் கூட, பின் நிச்சயம் பின் அதி விரைவாகவே கிடைக்கும்.
குருநாதர் :- இவ்வாறு கிடைக்கப்பெற்றால், நிச்சயம் பின், அதாவது பின் அறிந்தும் கூட திருத்தலத்திற்கு சென்றாலும், உடனடியாக இறைவனின் பின் அனுக்கிரகம் கிடைக்கும்.
குருநாதர் :- ஏன், முன்னோர்கள் ஆசிகள் இங்கு வேண்டும் என்றால், நிச்சயம் பின், அதாவது முன்னோர்களுக்கு முன்னோர்கள், முன்னோர்களுக்கு முன்னோர்கள் எல்லாம் பயன்படுத்தியது இன்றெல்லாம் மறந்துவிட்டார்கள். இதனால் அவர்களும் கூட இறைவனிடத்தில் வேண்டிக் கொண்டு, நிச்சயம் பின், அதாவது எங்கள் சந்ததிகள், நிச்சயம் யாங்கள் வாழ்க்கை பின் வாழ வேண்டும். பின் யாங்கள் எப்படி வாழ்ந்தோமோ, அப்படித்தான் வாழ வேண்டும் என்றெல்லாம் இறைவனிடத்தில் பின் கூறுகின்ற பொழுது, நிச்சயம் பின். ஆனாலும் இப்பொழுது அது போல் வாழ்வதே இல்லை.
========================================================
# ஏன் முன்னோர்கள் உங்கள் வெற்றியை தடுக்கின்றனர் ?
========================================================
குருநாதர் :- ஆனாலும் நிச்சயம் அறிந்து கூட, இறைவனிடத்தில் கூட, அதாவது திருத்தலத்திற்கு சென்றாலும், நிச்சயம் அவ் ஆன்மாக்கள், இறைவா, இவர்கள் நிச்சயம் பின் எங்களுக்கு, அதாவது அறிந்து கூட, இவ்வாறுதான்.
குருநாதர் :- அதாவது எங்கள் சந்ததிகள் , நிச்சயம் இவர்களுக்கு எதையும் கொடுத்து விடாதீர்கள். பின், அதாவது கொடுத்து விட்டாலும், நிச்சயமாய் இவைதன், நிச்சயம் பின் யாங்கள் செய்ததை கூட பல புண்ணியங்கள் செய்து செய்து வாழ்ந்தோம். இவர்கள் நிச்சயம், அதாவது இப்பொழுது கெட்ட பெயர் பின் வாங்கிக் கொண்டே இருக்கின்றார்கள். அதனால் செய்திடாதே, நிச்சயம் சில கஷ்டங்கள் கொடுத்து, பின் அவர்களை திருத்தி, பக்குவம் படுத்தி, எங்களைப் போல் வாழ வையுங்கள், பின்பு கொடுங்கள் என்று.
குருநாதர் :- அப்பனே, இது சரியா, தவறா? அனைவருமே கூற வேண்டும்.
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- ( இறைவனிடம் சென்ற முன்னோர்கள் ஆன்மாக்கள், பக்குவமில்லாமல் இருக்கும் வாரிசுக்குகளுக்கு நேரடியாக புண்ணியம் கொடுக்கக்கூடாது. முதலில் எங்கள் வாரிசுகள் அவர்கள் பக்குவம் பெற வேண்டும்; இறைவா அதற்காக சில கஷ்டங்கள் அவர்களுக்கு ஏற்படுத்தி. அந்த கஷ்டங்கள் மூலமாகவே அவர்கள் திருத்தி, இறைவனின் சந்நிதியில் நிலைபெறும் நிலைக்கு வர வேண்டும். இல்லையேல், நாங்கள் சேமித்து வாய்த்த புண்ணியங்களை , கொடுத்தாலும் புண்ணியங்கள் வீணாகி, அவர்களுக்கும் எங்களுக்கும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, எங்கள் வாரிசுகளை முதலில் பக்குவப்படுத்தி, பிறகு புண்ணியம் வழங்க வேண்டும்.)
குருநாதர் :- அப்பனே, அதுமட்டுமில்லாமல், அப்பனே, மந்திரங்கள் கூட ஓதுவான் என்பேன். அப்பனே, ஆனால் எடுபடாது என்பேன்.
சுவடி ஓதும் மைந்தன் : அப்ப மந்திரம் கூட நிறைய சொல்லுவாங்க, ஆனா ஒன்னும் லாபம் இல்லை.
குருநாதர் :- அப்பனே, உங்கள் அனைவருக்குமே நிச்சயம் எம்முடைய ஆசிகள். அப்பனே, நிச்சயம் பின் பன்மடங்கு கிட்டியுள்ளது என்பேன். அப்பனே, ஆனாலும் நீங்கள் பக்குவப்பட வேண்டும். அப்பனே, அதனால் பின் சொல்கின்றேன். அப்பனே, பல விஷயங்களை கூட. அப்படி பல விஷயங்கள் நீங்கள் தெரிந்து கொண்டால், பின் மனசாந்தி அடைந்து விடுவீர்கள். அப்படி இல்லை என்றால், நிச்சயம் தேடுதல் வேட்டையிலே ஈடுபட்டுக் கொண்டிருப்பீர்கள்.
குருநாதர் :- அப்பனே, இது எப்படி இருக்கும் என்றால், அப்பனே, தேர்வை, அப்பனே, பின் எழுதி, பின் தோல்வி அடைந்து, மீண்டும் எழுதி, எழுதி, லாபம் இல்லை. அப்பா,
குருநாதர் :- அப்பனே, நன்முறைகளாகவே. அதனால், அப்பனே, இப்பொழுது நிலைமையில், அப்பனே, யாருக்கு எம்முடைய ஆசிகள் கிடைக்க வேண்டுமோ, அப்பனே, யான் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் அப்பனே. பின் நிச்சயம், அப்பனே, உங்களைப் போன்று இவன் (சுவடி ஓதும் மைந்தன்) அப்படித்தான் அறிந்து கூட, பின் அதாவது படிப்பவன் தான். அவ்வளவுதான்.
சுவடி ஓதும் மைந்தன்:- (அப்ப, எல்லாரையும் யார் தேர்ந்தெடுக்கனும்? அகத்தியர் தான் தேர்ந்தெடுக்கனும். நான் சும்மா சுவடி படிக்கிறது, அவ்வளவுதான். கருவி. கருவி மாதிரிதான், அவ்வளவுதான்.)
குருநாதர் :- அப்பனே, அதில் கூட, அப்பனே, நிச்சயம் பலபேர், அப்பனே, ஏமாற்றுவர்களாகவும் இருக்கின்றார்கள் அப்பனே. நிச்சயம், அப்பனே, (குருநாதரை , இறைவனை) சோதனை செய்பவர்களாகவும் இருக்கின்றார்கள் அப்பனே.
குருநாதர் :- அது மட்டுமில்லாமல், அப்பனே, அங்கு சென்றால் நல்லது நடக்குமா? இங்கு சென்று நல்லது நடக்குமா? என்றெல்லாம், அப்பனே, விரும்புகிறார்கள். அப்பனே, நம்பிக்கை இல்லை. அப்பா, அனைத்திலும் நம்பிக்கை இருக்க வேண்டும். அப்பனே, நம்பிக்கை இருந்தால்தான் வெற்றியும் பெற முடியும். அப்பனே, பின் நிச்சயம், அப்பனே, நீங்களே அறிவீர்கள் இதனை கூட.
========================================================
# நிச்சயம் நம்பிக்கை இருந்தால் உயர்வான இடத்திற்கு அழைத்துச் செல்லும்
========================================================
குருநாதர் :- அப்பனே, வெற்றியோ, தோல்வியோ, அப்பனே, நிச்சயம் நம்பிக்கை இருந்தால், அப்பனே, பின் அவ் நம்பிக்கையை உயர்வான இடத்திற்கு பின் அழைத்துச் செல்லும் என்பேன். அப்பனே, நம்பிக்கை இல்லை என்றால், அப்பனே, நிச்சயம் எவ்வளவு, அப்பனே, பின் பயன்படுத்தினாலும் வீணப்பா. அதனால்தான் நம்பிக்கை, நம்பிக்கை.
குருநாதர் :- அப்பனே, நம்பிக்கை என்பது தும்பிக்கை போல என்பேன். அப்பனே, பின் தும்பிக்கை, அப்பனே, நிச்சயம் அழகாகவே, பின் உயர்த்தி வைக்கும் என்பேன். அப்பனே. பின் நம்பிக்கை, அதாவது, அப்பனே, பின் இல்லை என்றால், பின் அப்பனே, அத்தும்பிக்கை, அப்பனே, கீழே, பின் அதாவது உன்னை வைத்து, பின் நிச்சயம் அடித்து விடும் என்பேன். அப்பனே, புரிகின்றதா அனைவர்க்கும்?
குருநாதர் :- அப்பனே, முதலில் தோல்வியோ, வெற்றியோ, அவையெல்லாம் நீ கண்டு கண்டுகொள்ள, பின் இருப்பதே நிச்சயம் ஆச்சரியம். ஏனென்றால், அப்பனே, தேர்வை எழுதுகின்றாய். நிச்சயம், அப்பனே, உந்தனுக்கு தெரியும். அப்பனே, நிச்சயம், பின் இதில் தேர்வு பெறுவோமா இல்லையா என்று அப்பனே.
குருநாதர் :- ஆனாலும், அப்பனே, நிச்சயம், ஏன் இவை மட்டும், வாழ்க்கை பற்றி உங்களுக்கு தெரிவதில்லை? அதனால்தான், அப்பனே, பெரியோர்கள், உன் வாழ்க்கை உன் கையில் என்று. அப்பனே, ஆனால் அதை சரியாக பயன்படுத்துவதே இல்லை யார் என்று.
குருநாதர் :- அப்பனே, பல பல இதிகாசங்கள், அப்பனே, இன்னும் ராமாயணம், இன்னும், அப்பனே, இன்னும் கீதை, அப்பனே, இன்னும் தேவாரம், இன்னும், அப்பனே, திருவாசகத்தில் இல்லாத சொற்களா அப்பனே!!!. ஆனால் அதையே நீங்கள் பயன்படுத்துவதில்லை என்பேன். அப்பனே, அப்பொழுது இறைவன் எப்படி? அப்பா, நிச்சயம், அப்பனே, அருள்கள் ஈவான் என்பேன். அப்பனே, அப்பொழுது யாருடைய தவறு? நீங்களே சொல்லுங்கள்?.
குருநாதர் :- அப்பனே, அதனால்தான், நிச்சயம், என் பக்தர்கள் புரிந்து கொண்டு வாழ வேண்டும் என்பேன் அப்பனே. அப்படி புரியும் நிலைக்கு வந்துவிட்டால், உங்களுக்கு அனைத்தும் நான் தந்து விடுவேன் என்பேன் அப்பனே. ஆனால் இப்போது நிலைமை தரலாம். ஆனாலும், பின் அதாவது எவை என்று அறிந்து கூட செலவு செய்து விடுவீர்கள். அப்பனே, அதாவது பணத்தை கொடுத்தாலும், அதை உபயோகப்படுத்த தெரியாது அப்பா உங்களுக்கு.
குருநாதர் :- அப்பனே, அறிந்து கூட இறைவன் அனைத்தும் உணர்ந்தவன். அப்பா, அப்பனே, இறைவனுக்கு தெரியாதா? அப்பா, பின் உங்களுக்கு எப்பொழுது கொடுக்க வேண்டும், எப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்று அப்பனே, நீங்களே கூறுங்கள்?.
குருநாதர் :- அப்பனே, நீங்களும் கேட்கலாம். சில பேருக்கு ஏன் கஷ்டம் வருகின்றது? கஷ்டம் வருகின்றது என்று. அப்பனே, சரியான கேள்விதானே? அப்பனே, அதாவது நல்விதமாகவே. அப்பனே, நீங்கள் கேட்க வேண்டியது யானே கேட்கின்றேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( சிலர் தங்களுக்கே ஏன் இவ்வளவு கஷ்டம் வருகிறது என்று கேட்டு வருத்தப்படுகிறார்கள். ஆனால், அந்தக் கேள்வியை அவர்கள் கேட்க வேண்டியது நான் தான் கேட்டுவிட்டேன். அதற்கான பதிலும் பெரும்பாலும் நான் தான் சொல்லி விடுகிறேன். )
குருநாதர் :- அப்பனே, நிச்சயம், அப்பனே, பக்குவங்கள் இல்லை. அவ்வளவுதான். என்ன பக்குவங்கள் இல்லை என்று நீங்கள், நீங்கள் கேளுங்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( உங்களுக்கு பக்குவங்கள் இல்லை. அதனாலதான் கஷ்டம் வருது. என்ன பக்குவம் இல்லைன்னு கேட்கலாம். கேட்கலாம். இப்ப வந்து சான்ஸ் கொடுத்துட்டார். புரியுதுங்களா? ஐயா, புரியுதுங்களா? எல்லாருக்கும் அப்ப கஷ்டங்கள் ஏன் வருது? பக்குவம் இல்லாததுனால தான் வருது. அப்ப என்ன பக்குவம் இல்லை? நீங்க கேட்கலாம். யாருக்காவது கேட்கலாம். )
அடியவர் :- (அந்த பக்குவம்ங்கிறது எந்த பக்குவம் கேக்குறது? மனசு, மனசுதான். )
குருநாதர் :- அப்பனே, அறிந்து கூட எவ் பக்குவம், பக்குவம் என்று. அப்பனே, யான் சொல்வது அப்பனே. அறிந்தும் இதை என்று அறிய. அப்பனே, உன்னிடத்தில் பின் ஒரு கோடி ரூபாயை கொடுக்கின்றேன். அப்பனே, அதை எப்படி நீ செலவு செய்வாய் கூறு?
சுவடி ஓதும் மைந்தன் :- ( "சரியா? உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் கொடுக்கிறேன்," என்று அவர் கூறுகிறார். "நீங்கள் அந்த பணத்தை எவ்வாறு செலவழிக்கப் போகிறீர்கள்?" என்று அவர் கேட்கிறார். அதற்கான பதிலை நீங்கள் சொல்ல வேண்டும். அவர் உங்களை பக்குவப்படுத்தி அந்த பரிசை வழங்கப் போகிறார். அதுதான் உண்மை. வேறு எதுவும் இல்லை. இப்போது, உங்களுக்கு ஒரு கோடி கொடுக்கிறார். "நீங்கள் அதைப் பயன்படுத்தி என்ன செய்யப் போகிறீர்கள்?" என்று அவர் கேட்கிறார். )
அடியவர் :- தர்ம காரியங்களுக்கு செலவு செய்வேன் அய்யா.
குருநாதர் :- அப்பனே, வாயால் தான் சொல்ல முடியும் என்பேன் அப்பனே,
சுவடி ஓதும் மைந்தன் :- வாயால் தான் சொல்ல வேண்டும்;
சத்சங்க அடியவர்கள் :- ( சிரிப்புகள் )
அடியவர் :- மனம் மாறாமல் இருக்க வேண்டும்.
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் அதனாலதான். அப்பனே, மனம் என்பது ஒரு பேய் அப்பா. அப்பனே அதை அடக்க வேண்டும் அப்பனே. அதை அடைப்பதற்காக தான். அப்பனே, அறிந்து கூட பல யோகாசனங்கள், பின் தியானங்கள், மந்திரங்கள், இறைவனிடத்தில் செல்லுதல். ஆனால், அடக்க முடியவில்லையே. மனம் தான் ஜெயிக்கின்றதே அப்பனே. பெரியவனே, கேள். இன்னும்
அடியவர் :- ஆமாங்க, ஐயா, மனசு அடக்க முடியாது.
குருநாதர் :- அப்பனே, நிச்சயம், பின் இதனையே உன்னால் அடக்க முடியவில்லை என்பேன். அப்பனே, மற்றவை கொடுத்தால், நீ நிச்சயம், அப்பனே, வைத்துக் கொள்வாயா என்ன? அனைவருமே சொல்லுங்கள்?.
சுவடி ஓதும் மைந்தன் :- இந்த சின்ன மனசே வந்து அடக்க முடியல. அடக்க முடியல. அப்ப, மத்ததெல்லாம் வச்சு, மத்ததெல்லாம் கொடுத்தா, நீங்க வந்து எப்படி, எப்படி, எப்படி சமாளிக்க போறீங்க?
குருநாதர் :- அதனாலதான், அப்பனே, இறைவன் கஷ்டம் என்ற ஒரு சொல்லை வைத்து, அதன் மூலம் பக்குவப்படுத்தி, அனைத்தும் கொடுக்கின்றான். அப்பனே, பின் அதாவது, இறைவன் இங்கு தவறா?
சுவடி ஓதும் மைந்தன் :- ( அப்ப, அந்த மனசை பக்குவப்படுத்த , கஷ்டம் அவசியம். அந்த கஷ்டம் மூலம் ஒரு பக்குவத்தை கொடுத்து, மனசை பக்குவப்படுத்தி, எல்லாத்தையும் கொடுக்கிறார். )
குருநாதர் :-அப்பனே நிச்சயம், நீங்கள் கேட்டதெல்லாம் தந்து விடலாம் அப்பனே, ஆனாலும் அப்பனே, நீங்கள் கெட்டுப்போவீர்கள் என்பேன் அப்பனே. சிறந்த உதாரணம். அப்பனே, உங்கள் குழந்தையே இருக்கின்றது. பின் அக்குழந்தை, பின் அதாவது, கேட்டதெல்லாம் நீங்கள் வாங்கி தந்து விடுவீர்களா என்ன அப்பனே? சொல்லுங்கள் நீங்களே நியாயமாய் என்று ?
அடியவர் :- கேட்டது உடனே வாங்கி கொடுக்க மாட்டேன் அய்யா.
குருநாதர் :- அப்பனே, ஒரு குழந்தைக்கு, அப்பனே, பின் நல்லதா, பின் தீயதா என்று, பின் உங்களுக்கு தெரியும். அதேபோலத்தான் அப்பா, இறைவன் அனைவரையும் படைத்தான் என்பேன் அப்பனே. இறைவனுக்கு தெரியும், இவன் எனக்கு இதை கொடுத்தால், இவை சரியாக உபயோகப்படுத்துவானா என்று. அப்பனே, புரிகின்றதா அப்பனே?. தெரிந்து கொள்ளுங்கள். அப்பனே, ஏனென்றால், என் பக்தர்களாக இருந்து கொண்டு, ஏதும் தெரியாமல் இருந்து விடக் கூடாது என்பேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- ( ஒரு குழந்தைக்கு நல்லதா தீயதா என்பது பின்னால் தெரிந்தது போல, இறைவனுக்கும் உங்கள் பக்குவம் தெரியும். இறைவன் அனைவரையும் படைத்தவர்; அவர் கொடுக்கும் பரிசை நீங்கள் சரியாக பயன்படுத்துவீர்களா என்பதையும் அறிந்திருப்பார். அகத்திய மாமுனிவர் பக்தராக இருப்பவர்கள் எதையும் தெரியாமல் இருக்கக் கூடாது; உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.)
குருநாதர் :-அப்பனே, அறிந்தும் எவை என்று கூற, இன்னும் அப்பனே, பலமாகவே உங்களுக்கு வாக்குகள் சொல்லுவேன். அப்பனே, நீங்கள் விருப்பப்படி எல்லாம், பின் நடந்திடும் என்பேன் அப்பனே. ஆனால் பின் மீண்டும் அப்பனே, கெட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான், நிச்சயம், என்னுடைய பக்தர்களை பக்குவப் படுத்துவதற்காகவே, யான் மெதுவாகவே கொடுத்துக் கொண்டிருக்கின்றேன் அப்பனே. அதனுள்ளே, சித்தர்கள் பொய், இறைவன் பொய் என்றெல்லாம் சொல்லி விடுகின்றார்கள் என்பேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- அய்யா புரியுதுங்களா?
========================================================
# சித்தனை காண்பதற்கும் பேசுவதற்கும் தகுதி - கஷ்டம்தான் அப்பா
========================================================
குருநாதர் :- அப்பனே, சித்தனை காண்பதற்கும், அப்பனே, சித்தனிடம் பேசுவதற்கும், அப்பனே தகுதிகள் வேண்டும் அப்பா. அத்தகுதி என்னவென்றால் கஷ்டம்தான் அப்பா,
சத்சங்க அடியவர்கள் :- ( சிரிப்புகள் )
அடியவர் :- மொத்தமா முடிச்சிட்டாருப்பா. ஒரேடியாக முடிச்சிட்டாரு.
சுவடி ஓதும் மைந்தன் :- ( சித்தர்களிடம் பேசுவதற்கும், சித்தர்கள் நாடி வருவதற்கும் எது முக்கியம்? மூலாதாரம்? கஷ்டம் தான். )
குருநாதர் :- அப்பனே இக் கஷ்டத்தை தாண்டி வந்தால், இன்பத்தை கொடுக்க யாங்கள் தயார். ஆனால் அப்பனே, பாதியிலே நீங்கள் விட்டுச் சென்று விடுகிறீர்கள் அப்பனே. எப்படி அப்பா நியாயம்?
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப, இந்த கஷ்டத்தை தாண்டி வந்தால் தான், ஆனால் நீங்கள் பாதியிலே திரும்பி போயிருவீர்கள்.
குருநாதர் :- அப்பனே, அப்பொழுது எதை கொடுத்தாலும், அப்பனே, பின் நீங்கள், அப்பனே, அதை உபயோகித்து கொள்வீர்களா என்ன? நீங்களே சிந்தியுங்கள் அப்பனே உங்களைப் பற்றி?
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப, நான் உங்களுக்கு எதை கொடுத்தாலும், என்ன பண்ணுவீங்க? பாதியிலே விட்டுடுவீங்க. அவ்வளவுதான். அய்யா புரியுதுங்களா?
குருநாதர் :- அப்பனே அனைத்தும் அப்பனே, அனைவருக்கும் கொடுத்துவிட்டால், அப்பனே, பின் படைத்தவனுக்கு ஏதப்பா மரியாதை ?
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா புரியுதுங்களா? எல்லாத்தையும் கொடுத்துட்டாரு. எல்லாத்தையும் கொடுத்துட்டாருன்னா….
அடியவர் :- சாமியை நினைக்க வேண்டியது இல்லையே.
குருநாதர் :-அப்பனே, நீதான் கடவுள் என்று சொல்லிக்கொண்டு திரிந்து கொண்டிருக்கின்றாய்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( அப்ப, நான்தான்ப்பா கடவுள். இறைவன் எல்லாத்தையும் கொடுத்துட்டாருன்னா, நான்தான் கடவுள். நான்தான் கடவுள்னு சொல்லிட்டு போயிட்டே இருப்பீங்க. )
குருநாதர் :- அப்பனே நிச்சயம் அப்பனே, இப்படித்தான் கலியுகத்தில் நடக்கும் அப்பா. அப்பனே ஆனாலும் அப்பனே, ஏதும் பின் இறைவன் கொடுக்க மாட்டான் என்பேன் அப்பனே. ஆனால் இப்படி பக்திக்குள் நுழைந்து, அப்பனே, அனைத்தும் செய்வார்கள் என்பேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- ( என்ன செய்வாங்களாம்? ஒன்னும் கொடுக்க மாட்டார் இறைவன். ஆனால் என்ன பண்ணுவாங்க? புரியுதா? இது மாதிரி எல்லாம் மாலை அணிந்துகொண்டு தான் தான் இறைவன் என்று கூறுவார்கள். )
குருநாதர் :- அப்பனே, நிச்சயம், இறைவன் ஒன்றும் கிடைக்கவில்லை. நாம் இறைவன் வேடமாவது போடுவோம் என்றுதான் கலியுகத்தில் போடுவார்கள். அப்பா.
குருநாதர் :- அப்பனே பல தோல்விகள். அப்பனே பல வழியில் துன்பங்கள் அனுபவித்திருக்கின்றீர்கள் நீங்கள். அதனால்தான் உங்களை அழைத்தேன் அப்பனே. (அடியவர்கள்) பல பேர் இருக்கின்றார்கள் அப்பனே. அவரவர் அப்பனே, பின் நிச்சயம். அப்பனே, யாருடைய? அப்பனே, எப்பொழுது, பின் எவ்வளவு நேரம் கேட்க வேண்டும்? அகத்தியன் நிச்சயம் சொல் என்றெல்லாம் அப்பனே, பின் எவை என்று அறிந்து கூட, யான் தான் வரவழைக்க வேண்டும் என்பேன் அப்பனே.
========================================================
# இலை அசைவு நேரத்தில் உங்களுக்கு அனைத்தும் யான் கொடுத்து விடலாம்
========================================================
குருநாதர் :- அப்பனே, இதனால்தான். அப்பனே, பக்குவங்கள் பட்டுவிட்டால், அப்பனே, பின் அதாவது, அப்பனே, பின் அறிந்து கூட, அப்பனே, பின் இலை அசைவு நேரத்தில் உங்களுக்கு அனைத்தும் யான் கொடுத்து விடலாம். ஆனாலும், அப்பனே, அதை நீங்கள், அப்பனே, பெற்றுக் கொண்டாலும், அப்பனே, நிச்சயம். அப்பனே, அதாவது, காற்று வந்தால், மாவு போல் பறந்துவிடும் என்பேன். அப்பனே, பக்குவம் கொடுத்துவிட்டால், அப்பனே, நிச்சயம் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- ( இலை அசைகின்ற நேரத்தில் , குருநாதரால் அனைத்தும் அப்படியே கொடுக்க முடியும். ஆனா, நீங்க என்ன பண்ணுவீங்கன்னா, இப்படி வாங்கிப்பீங்க. காத்து வந்தா, மாவு எப்படி பறக்கும்? அப்படி விட்டுருவீங்களேப்பா. அதனால உங்களிடம் ( கஷ்டங்களை கொடுத்து ) நல்ல ஒரு பக்குவத்தை ஏற்படுத்தி விட்டால், அதை அப்படியே தக்க வச்சுக்க முடியும். )
குருநாதர் :- அப்பனே, இதனால்தான். அப்பனே, யானும் சொல்லலாம். அப்பனே, ஒரு மந்திரத்தை சொல்லிவிடலாம். அப்பனே, திருத்தலத்தை சொல்லிவிடலாம். அங்கு செல், இங்கு செல், இது நடந்துவிடும் என்று. ஆனால் நடக்காதப்பா,
குருநாதர் :- அப்பனே, ஏன் நடக்காது என்று நீங்களே கூறுங்கள்?
சுவடி ஓதும் மைந்தன் :- ஏன் நடக்காது?
அடியவர் :- பக்குவம் இல்லை
குருநாதர் :- அம்மையே, இதை யான் சொல்லிவிட்டேன் முதலிலேயே.
அடியவர் :- கர்ம வினை தான்
குருநாதர் :- அறிந்து கூட, பின் இதனையும் என்னால் மாற்ற முடியும் என்று நினைத்துக்கொள்.
அடியவர் :- மனதை அடக்கினால்….
குருநாதர் :- அறிந்து கூட அடக்க முடியவில்லையே உன்னாலேயே தாயே,
சத்சங்க அடியவர்கள் :- ( சிரிப்புகள் )
குருநாதர் :- நீ அடக்கி இருந்தால், நிச்சயம், பின் மற்றவர்களுக்கு நீ உதவி செய்திருக்கலாமே !!!
அடியவர் :- உண்மைதானே ஐயா?
குருநாதர் :- அப்பனே, உண்மைதான். யானும் சொல்கின்றேன்.
அடியவர் :- மனசு அதுக்கு தான் இவ்வளவு நம்ம…. இது பண்ண வேண்டியது இல்லை, ஐயா.
========================================================
# நியாயமான கோரிக்கைகளை, நிச்சயம், இறைவன் ஏற்பானப்பா
========================================================
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் அறிந்து கூட, அப்பனே, நியாயமான கோரிக்கைகளை, நிச்சயம், இறைவன் ஏற்பானப்பா. பின் அதாவது, நீங்கள் அனைவருமே கர்மாத்தான் கேட்டுக்கொண்டிருக்கின்றீர்கள். அப்பனே, இதை பலமுறை நான் எடுத்துரைத்து விட்டேன்.
குருநாதர் :- அப்பனே, நிச்சயம், தன் பிள்ளை, அப்பனே, பின் கேட்கும் பொழுது கூட, பின் இது தேவை என்று, பின் தெரியும் என்பேன். அப்பனே, என் தாய்க்கும் தந்தைக்கும், அப்படி அதாவது, பன்மடங்கு, இறைவன் மிகப்பெரியவன். அப்பா, அப்பனே, பின் நீங்கள் கேட்கும் பொழுது, அவனுக்கு தெரியாதப்பா, உங்களுக்கு, பின் நல்லவையா, தேவையா என்று, நீங்களே சொல்லுங்கள்.
========================================================
# இறைவன் உங்களுக்காகவே உழைத்துக் கொண்டிருக்கிறார்
========================================================
குருநாதர் :- அப்பனே, இறைவன் உங்களுக்காகவே உழைத்துக் கொண்டிருக்கின்றான் அப்பனே. ஆனால் நீங்களோ, அப்பனே எப்படிப்பா?
========================================================
# குருநாதர் பல யுகங்களாக பார்க்கும் ஒரு நிகழ்வு
========================================================
குருநாதர் :- அப்பனே இதனால்தான் அப்பனே, நிச்சயம், அப்பனே, அதாவது, பன்மடங்கு, அப்பனே, யான் பார்த்துவிட்டேன் பல யுகங்களாக அப்பனே.
குருநாதர் :- நிச்சயம், இறைவனிடத்தில், அனைத்தும் பெற்றுவிட்டு, அப்பனே, நிச்சயம், மீண்டும், அப்பனே, பின், இறைவனை வணங்காமல் அப்பனே மீண்டும், அனைத்தும் இழந்து விட்டு, மீண்டும், இறைவனிடத்தில் வந்து சேருகின்றான் அப்பா. இதுதான் மனிதனின் வாழ்க்கை என்பேன் அப்பனே.
குருநாதர் :- இறைவன். ஐயோ, பாவம் என்று சொல்கின்றான். அவ்வளவுதான்.
========================================================
# இறைவன் கொடுக்கும் போது, வைக்கும் தேர்வு - புண்ணியம்
========================================================
குருநாதர் :- அப்பனே, ஆனால் இதில்தான் தேர்வு. அப்பனே, புண்ணியம் என்ற வார்த்தை வருகின்றது உள்ளே. ஆனால், பின் அனைத்தும் கொடுக்கும் பொழுது, அவன் புண்ணியம் என்ற தேர்வை மறந்து விடுகின்றான். மனிதன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- ( அப்பதான் தேர்வு. என்ன தேர்வு? எல்லாம் கொடுக்கும் பொழுது, நல்லவனா, கெட்டவனான்னு தெரியும். கொடுத்ததற்கு அப்புறம், புண்ணியம் செய்கின்றார்களா அவங்க? அது தான் இறைவன் வைக்கும் தேர்வு. அதைச் செய்வதே இல்லை. )
குருநாதர் :- அப்பனே, பின் இறைவன் பார்ப்பான் அப்பனே. ஏதோ ரூபத்தில், அப்பனே, இறைவனே வருவான் அப்பா. அப்பனே, அடேய், மனிதா, திருந்து போ. நிச்சயம், கர்மத்தில் விழுந்துகின்றாய். பாவத்தில் விழுந்து விழுந்துகின்றாய் என்று, நிச்சயம், காப்பாற்ற முடியாததா என்றெல்லாம், பல மடங்கு. அப்பனே, ஏதோ ரூபத்தில், தடைப்பட்டு, தடைப்பட்டு. ஆனாலும், அப்பனே, நிச்சயம், கர்மத்தை, அதாவது, பாவத்தை சம்பாதித்துக் கொண்டு, மீண்டும், பின் நோய்வாய்ப்பட்டு, இறைவன் கூட காப்பாற்ற மாட்டான் அப்பா. இறைவன் பார்த்து, பாவம் என்றுதான் நினைப்பான்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( இறைவன் எல்லாவற்றையும் கொடுக்கத் தயார், ஆனால் மனிதன் அதை தவறாகப் பயன்படுத்தினால், இறைவனே தடைகள் போட்டு எச்சரிக்கைகள் தருவார். "வேணாம்டா, இப்படி பண்ணாதே" என்று அடுக்கடுக்காக அறிவுறுத்துவார். ஆனாலும், மனிதன் அதை ஏற்காமல், மீனையும் இழந்து, இறைவன் வரும்போதும் நோயுடன் வாழும் நிலைக்கு தள்ளப்படுவான். இது பக்குவமில்லாத மனதின் விளைவாகும். )
( அன்புடன் அகத்திய மாமுனிவர் பெங்களூர் சத்சங்கம் வாக்குகள் தொடரும் )
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!
சர்வம் சிவார்ப்பணம்!!!!!
No comments:
Post a Comment