இறைவா !!!!! நீயே அனைத்தும்.
இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.
அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளிய மதுரை கூட்டுப் பிரார்த்தனை வாக்கு - 05.10.2025 - பகுதி 3
நாள் : 05.10.2025 ஞாயிற்றுக்கிழமை. நேரம் : காலை 8 மணி - மாலை 6 மணி.
ஆதி மூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்.
(இத்தொடர் வாக்கின் முந்தைய பகுதியை இதற்கு முன் உள்ள பதிவில் படித்து பின் இந்த வாக்கினை படிக்க நன்று )
===================================================
# இறைவனை , படைத்தவனை நம்புங்கள்.
===================================================
குருநாதர் :- அப்பொழுது இன்னும் கஷ்டத்தில் உள்ளெடுக்குவான். பாவத்தை நிச்சயம் நீங்கள் தான் சேர்த்து வைத்து, சேர்த்து வைத்து. படைத்தவனை நம்புங்கள்.
கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- ( அடியவர்கள் சந்தோஷம் அடைந்து , மிகவும் பலத்த கை தட்டல்கள் )
சுவடி ஓதும் மைந்தன், அடியவர் உரையின் சுருக்கம் :- ( மனிதனை நம்ப வேண்டாம். மனிதனை நம்பக்கூடாது. படைத்தவனை நம்புங்கள். உன்னை யார் படைத்தது? இறைவன். அவரால்தான் உங்களை தீர்ப்பை மாற்றி வைக்க முடியும். உங்கள் தலையெழுத்தையும் அவரால்தான் மாற்றி வைக்க முடியும். மனிதனால் மாற்ற முடியாது.)
குருநாதர் :- அறிந்து கூட, அனைவரையும் நிச்சயம் தன்னில் கூட, பின் ருத்ராட்சையை நிச்சயம் பின் இட்டுக்கொண்டு, ஈசனே நிச்சயம் இருந்து கொண்டு, மனிதனின் ஆனதினால் என்ன பயன்? ஈசனுக்கு என்ன மரியாதை? கஷ்டங்கள் தான் வரும்.
சுவடி ஓதும் மைந்தன், அடியவர் உரையின் சுருக்கம் :- (கடவுள்தான், ஈசன் தான்—ருத்ராட்சம் என்பதையும் சொல்கிறார்கள் ஐயா. ஈசன் தான். நீங்கள் அதை அணிந்து கொண்டு, மனுஷனிடம் போகிறீர்களேப்பா? போகிறீர்களே? என்னப்பா?, கடவுளை உங்களுக்குள்ளே வைத்துக் கொண்டிருக்கும் போது, ஏன் வெளியே போகிறீர்கள் என்று கேட்கிறார்கள். உங்களுக்குள்ளேயே கடவுள் இருக்கிறார். எல்லோரிடமும் இறைவன் இருக்கிறார். ஆனால் அதை நீங்கள் புரிந்து கொள்ள முடியவில்லை. இல்லை, அதை உணர்ந்து விட்டீர்கள் என்றால், ஈஸியாக இருக்கும் என்கிறார். எந்தக் கஷ்டமும் வராது.)
குருநாதர் :- அறிந்தும் நிச்சயம் தன்னில் கூட, இதற்காகத்தான் சித்தர்கள் யாங்கள் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றோம்.
சுவடி ஓதும் மைந்தன், அடியவர் :- இதை மாத்தணும். நீங்க எல்லாம் தெளிவு பெறனும். தெளிவு பெறனும்.
குருநாதர் :- இதனால் நிச்சயம் உங்களுக்கு அத்தக்தியை யாங்கள் இட்டு விட்டால், நீங்கள் அச் சக்தியை பயன்படுத்திக் கொண்டு, மற்றவர்களுக்கு நல்லது செய்து விடுவீர்கள். அவர்கள் மற்றவர்களுக்கு நல்லது செய்கின்ற பொழுது, தெளிவு பெறும்.
சுவடி ஓதும் மைந்தன், அடியவர் உரையின் சுருக்கம் :- ( நீங்க எங்களுக்கு எல்லாரும் ஒன்னுதான்ப்பா. மேல இருக்கிறவர்களாக இருந்தாலும், கீழ இருக்கிறவர்களாக இருந்தாலும், வாசிக்கிற ஐயாவாக இருந்தாலும், எல்லாரும் ஒன்னுதான்ப்பா. ரகசியங்களை எல்லாருக்கும் சொல்றோம். நீங்க இதை செஞ்சீங்க, பயனடைந்தீங்க,
பிறருக்கு நீங்க சொல்லுங்க. அப்போ எல்லாரும் பயன்பெறலாம். உங்களுக்கு அந்த சக்தி கொடுத்துட்டார்னா, கொடுத்துட்டார்னா என்ன? நீங்க என்ன பண்ணுவீங்க? ஐயா, எப்போ இங்க போனோம்? நடந்தது என்ன? இது நீயும் பயன்படுத்திக்கோனு சொல்லுவாங்க. அவர் என்ன பண்ணுவாரு? நாலு பேருக்கு தெரிவிப்பார். அவர் என்ன பண்ணுவாரு? பத்து பேருக்கு தெரிவிப்பார். பெரிய புரட்சி நடத்துறாங்க. ஐயா )
குருநாதர் :- அறிந்தும் இதனால் நிச்சயம் பின் உங்களையே, பின் உங்களால், பின் காக்க முடியவில்லை என்றால், இறைவனும் நிச்சயம் அமைதிப்படுத்தி விடுவான்.
சுவடி ஓதும் மைந்தன், அடியவர் உரையின் சுருக்கம் :- ( அப்ப உங்களுக்கு அந்த சக்தி இருக்குது. அதை நீங்க உணர முடியவில்லைன்னா, இறைவன் என்ன செய்வாரு? அமைதியா இருந்துருவார். “அட பாவி, அந்த சக்தி கொடுத்துட்டேன். அது கூட உன்னால உணர முடியல”ன்னு நினைப்பார். என்ன செய்வாரு? அமைதியா இருந்துருவாராம். அப்ப அந்த சக்தியை நம்பி இயக்கணும் )
===================================================
# எத்தனை திருத்தலங்கள்? - ஆனால் ஏன் பட்டினி ?
===================================================
குருநாதர் :- அறிந்தும் எத்தனை, எத்தனை திருத்தலங்கள், எத்தனை, எத்தனை எதை என்று அறிய, நிச்சயம் பின் அதாவது ஒருவேளை பின் எதை என்று ஒரு சோறு இல்லாமலும் தவிக்கின்றானே ஏன்?????
சுவடி ஓதும் மைந்தன் :- எத்தனை, எத்தனை கோயில்கள் இருந்தாலும் ஒருவேளை சோறு இல்லாம கஷ்டப்படுறான். நிறைய பேர் கஷ்டப்படுறாங்க, கஷ்டப்படுறாங்க. ஏன்?
குருநாதர் :- அறிந்தும் எதை என்று புரிய? இதை ஏற்கனவே தெரிவித்துவிட்டேன். நன்கு உணருங்கள்.
குருநாதர் :- அறிந்தும் எவை என்று புரிய. பின் அதாவது ஈசனுக்கே இவ்வாறு சேவை செய்து கொண்டிருப்பவர்கள், நிச்சயம் பின் சில ஆண்டுகள், நிச்சயம் சென்றால், அவர்களை இவனுக்கு எங்களுக்கு இவ்வளவு எதை என்று ஒரு சேவைகள் செய்தோம். கஷ்டம் தான் வருகின்றது என்று.
சுவடி ஓதும் மைந்தன் :- ( நான் இவ்வளவு ஈசனுக்கு சேவை செய்தேனே, அருகிலே இருந்தேனே, பாலாற்றினேன், குளிப்பாட்டினேன், எல்லாம் பண்ணுனேன். எனக்கு வந்து கஷ்டம் தான் அமைஞ்சுச்சு. அப்படின்றாங்க. அப்ப நீ எதுக்குன்னு இறைவன்ட்ட கேட்பாங்க. )
குருநாதர் :- ஆனால் இங்கு மனிதன் தான் தவறு செய்கின்றான் என்று.
சுவடி ஓதும் மைந்தன் :- ஆனால் இங்கு மனுஷன் தான் தவறு செய்கிறான். அது வந்து நம்ம செஞ்ச செயலுக்கு வினையை அனுபவிக்கிறோம் என்ற ஒரு அறிவில்லாம, இறைவன் மேல அந்த பலியை போட்டா, இறைவன் என்ன பண்ணுவார்?
குருநாதர் :- இருவினை அறிந்தும் புரிந்தும், பாவம் புண்ணியம். அறிந்தும் புரிந்தும் கூட, இப்பாவம் எது என்று அறிய, புண்ணியமாகிவிட்டால்? எது என்று அறிய, எப்படி?
சுவடி ஓதும் மைந்தன், அடியவர் உரையின் சுருக்கம் :- ( இந்த பாவத்தை எப்படி புண்ணியமாக்குறது? இந்த பாவத்தை எப்படி புண்ணியமாக்குவீங்க? உங்களையே கேள்வி கேட்கிறார். “அகத்தியர், பாவத்தை எப்படி புண்ணியமாக்குறது?” யாருக்கும் தெரியாது. ஏதாவது சொல்லுங்க. அப்புறம் அகத்தியர் சொல்லுவாரு. ஏதாவது சொல்லுங்க. அவ்வளவுதான். ஐயா, ஏதாவது சொல்லணும். )
===================================================================
# பழைய திருத்தலங்கள் அங்கு தீபத்தை ஏற்றி வைக்க உதவுங்கள்
===================================================================
குருநாதர் :- எது என்று புரிய சொல்கின்றேன். கேளுங்கள். கேளுங்க. பழைய திருத்தளங்கள் எல்லாம் நிச்சயம் வருங்காலத்தில் அழிவுகள். இதனால் நிச்சயம் நீங்கள் பின் சென்று, பின் எதை என்று அறிய, சரியாகவே அங்கு தீபத்தை ஏற்ற வைக்க, பின் தீப எண்ணெயை அழகாக வழங்குங்கள்.
சுவடி ஓதும் மைந்தன், அடியவர் உரையின் சுருக்கம் :- (முதலில், இத்தனை பழைய கோயில்கள் உங்க ஊரில் தான் இருக்குல்ல. சக்தி வாய்ந்த திருத்தலங்கள் இருக்குது, சக்தி வாய்ந்த திருத்தலங்கள். அங்கே போயிட்டு விளக்கு ஏத்தணும். விளக்கு ஏத்தணும். விளக்கு ஏத்துறதுக்காக தீப எண்ணெய் வாங்கி கொடுங்கள்)
குருநாதர் :- நிச்சயம் அதற்கும் காசுகள் இல்லையே என்று எண்ணி விடாதீர்கள். நிச்சயம் யாங்கள் தருவோம்.
கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- ( அடியவர்கள் சந்தோஷம் அடைந்து , மிகவும் பலத்த கை தட்டல்கள் )
===============================================================
# உங்கள் பல முன்னோர்கள் செய்த தவறுகள் இதில் கழியும்
===============================================================
===============================================================
# இது மிகப்பெரும் புண்ணியம் - நீங்களே களத்தில் இறங்கி செய்க
===============================================================
குருநாதர் :- அறிந்தும் இது ஒரு மிகப்பெரும் புண்ணியம். அப்பா, நிச்சயம் பின் எதை என்று அறிய. அப்பனே, பல பின் முன்னோர்கள் செய்த தவறுகள் இதில் கழியும். அப்பா,
மற்றொரு அடியவர் :- நம்ம அடியார்கள் காஞ்சிபுரம், உத்தர காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு மாவட்டம், திருவண்ணாமலை மாவட்டம் ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட 108 சிவாலயங்களில் இது போல எண்ணெய் கொடுத்து ஒரு பணியை செய்து கொண்டிருக்கிறோம். அகத்தியர் அடியார்கள் அந்த பணியை செய்து கொண்டிருக்கிறார்கள்.
குருநாதர் :- ( உடனே குறுக்கிட்டு ) அறிந்தும் புரிந்தும் கூட, அப்பனே, எவை என்று அறிய இங்கு அனைவருமே செய்ய வேண்டும் என்பேன் அப்பனே. எதை என்று அறிய இப்பொழுது இதைப்பற்றி பேசாதே இங்கு.
சுவடி ஓதும் மைந்தன் :- ( இதைப் பற்றி இங்க பேசாதீங்கப்பா, எல்லாரும் இவங்க செய்யட்டும். அவங்க செய்றதை செய்யட்டும். “இவங்களுக்கு யாரு கத்துக்கொடுப்பாங்க?”ன்றாரு. ஐயா, புரிகிறதா? ஏற்கனவே ஒருத்தர் செஞ்சுட்டு இருக்காங்க. அவங்க செய்யட்டும். ஆனால், இது எல்லாரும் செய்யணும்னு சொல்றாங்க.)
குருநாதர் :- அப்பனே, ஒன்றை சொல்கின்றேன். இப்படி நீ சொன்னால், அப்பனே, நிச்சயம் அவன் செய்கின்றானே. அவனிடத்திலே காசுகள் கொடுத்து விடுவோம் என்று இவர்கள் சோம்பேரி ஆகிவிடுவார்கள். அப்பா,
கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- ( அடியவர்கள் சந்தோஷம் அடைந்து , மிகவும் பலத்த கை தட்டல்கள் )
குருநாதர் :- அப்பனே, தன் குறையை தான் நீக்க வேண்டும்.
===============================================================
# பிறரிடம் காசு வாங்கி புண்ணியம் செய்தால் …….
===============================================================
குருநாதர் :- அப்பனே, (பிறரிடம் காசு வாங்கி புண்ணியம்) இப்படி செய்கின்றானே. அவன் வாழ்க்கை பார், எப்படி இருக்கின்றது என்று?.
சுவடி ஓதும் மைந்தன் :- ( அப்ப, உங்கள் குறையை நீங்களே நீக்கணும். நீங்களே நீக்க வேண்டும். உங்கள் குறையை அவனிடம் குறைத்தால், காசு வாங்கிய அவர் இன்னும் குற்றவாளி ஆகிவிடுவார், எல்லாருக்கும் அவர் காசு கொடுத்தா, என்ன செய்வாங்க? காசு வாங்கினால் அவ்வளவுதான். காசு கொடுத்தவரின் கர்மா, காசு வாங்கினவருக்கே. காசு வாங்கினவர் வாழ்க்கை போய்விடும். அவரது கர்மா அதிகமாகிவிடும். அவ்வளவுதான். இப்படி செய்கிறானே என்று நீங்கள் கேட்டு பார்த்தால் , அவன் “வாழ்க்கை போய்விட்டது ஐயோ, கஷ்டம் தான்”ன்னு சொல்லுவாங்க )
=====================================================================
=====================================================================
# புரியாமல் புண்ணியம் செய்தாலும், அவை பாவங்களாக போய்விடும்.
=====================================================================
=====================================================================
குருநாதர் :- அப்பனே, எதை என்று புரிய? அப்பனே, எவை என்று அறிய? எதை என்று புரியாமல் பின் செய்தாலும், அப்பனே, நிச்சயம் புரியாமல் புண்ணியம் செய்தாலும், அவை பாவங்களாக போய்விடும்.
குருநாதர் :- அறிந்தும் எதை என்று அறிய, நீங்களும் கஷ்டத்திற்கு வெவ்வேறு மனிதர்களை தேடிச் செல்கிறீர்கள். அப் பரிகாரம், இப் பரிகாரம் என்று சொல்லிவிடுவார்கள். ஆனால் தீர்ந்த பாடில்லை. கலியுகத்தில் தீராது.
குருநாதர் :- நிச்சயம், அப்பனே, எதை என்று அறிய, எப்படி எல்லாம் இக்கலியுகத்தில் மனிதனை ஏமாற்ற வேண்டுமோ, அப்படியெல்லாம் பின் ஆசை வார்த்தை கூறுவான்.
குருநாதர் :- மனிதனுக்கு பணங்கள் வேண்டும், அதை புரிந்து வைத்திருப்பான். இவ்வாறு செய்யுங்கள் என்று பணம் வரும் தானாக வரும் என்று உழைக்காமல் வந்துவிடுமா? என்ன?
குருநாதர் :- அறிந்து கூட யார் ஒருவன் புண்ணியத்தை நிச்சயம் செப்புகின்றானோ, அவன் உத்தமன்.
======================================================
# அனைத்து ஜீவராசிகளுடன் அன்பாக பழக வேண்டும்
======================================================
குருநாதர் :- அப்புண்ணியம் என்னவென்றால், நிச்சயம் அறிந்தும் புரிந்தும், அதாவது அனைவரும் எதை என்று அறிய, அனைத்து ஜீவராசிகளும் அன்பாக பழக வேண்டும் என்று முதல்.
=============================
# இறைவன் இருக்கின்றான்
=============================
குருநாதர் :- நிச்சயம் எதை என்று அறிய, அறிய பின் எதை என்று புரிய, இன்னும் சமநிலையான பின் வார்த்தைகளை கூறி, பக்குவப்படுத்தி, இறைவன் இருக்கின்றான். சில காலங்கள் எதை என்று அறிந்தும் கூட, நிச்சயம் எவை என்று அறிய, அறிய இன்னும் இன்னும் சில சில நீங்களே அதை உணர்ந்து கொள்வீர்கள். உங்களுக்கே அவர் பக்குவத்தை நான் தருகின்றேன்.
குருநாதர் :- நிச்சயம் எதை என்று அறிய. அதாவது பிருகு வானவன் இருக்கின்றானே, ( பிருகு மகரிஷி ) நிச்சயம் எவை என்று அறிய. உன் உள்ளத்தை பார்த்துத்தான் அவன் குழந்தைக்கும் லட்சுமி தேவிக்கும் நிச்சயம் பின் அவன் சொல்வான், கொடுத்துவிடு என்று. உள்ளமே சரியில்லை.
சுவடி ஓதும் மைந்தன், அடியவர் உரையின் சுருக்கம் :- ( பிருகு மகரிஷி , நமது மனதின் தூய்மையை ஆராய்வார். உங்களுக்கு பணம் தேவைப்படுகிறது என்றால் உங்கள் மனம் பக்குவமடைந்திருந்தால்,பிருகு மகரிஷி அதை பரிசீலிப்பார். “நீங்கள் உண்மையில் நல்ல மனப்பான்மையுடையவனாக இருக்கின்றீர்களா?” என்று பார்ப்பார். நீங்கள் யாருக்கும் தீங்கு செய்யாமல், நேர்மையாக வாழ்கின்றீர்கள் என்றால், “அவர்களுக்கு பணம் கொடு” என்று தனது மகள் லட்சுமி தேவிக்கு உறுதியாக எடுத்துச் சொல்வார். எனவே, நாம் என்ன செய்ய வேண்டும்? நம் மனம் சுத்தமாக இருக்க வேண்டும். பிறருக்கு உதவும் மனப்பான்மை இருக்க வேண்டும். அப்படி இருந்தால், பணம் தானாக வரும். )
குருநாதர் :- அறிந்தும் மனதே சுத்தமில்லை. பரிகாரங்கள் செய்தால் பணம் வந்துவிடுமா என்ன? பாவம் தான் வந்து சேரும்.
======================================================
# இறைவனை வழிபடுவது சுயநலத்திற்காக
======================================================
குருநாதர் :- இறைவனை ஓடி ஓடி, எதற்காக ஓடி ஓடி, தன் எவை என்று அறிய, தன் நினைக்கும் காரியத்தை நிறைவேற ஓடி ஓடி.
குருநாதர் :- அறிந்து கூட மனது தூய்மை இல்லாமல் எதை செய்தாலும் பாவம் தான். நிச்சயம் எதை என்று அறிய, இறைவன் ஒன்றும் செய்யப்போவதில்லை.
குருநாதர் :- அறிந்தும் எவை என்று கூற, சித்தர்கள் ஏற்கனவே எழுதி வைத்துள்ளார்கள். நிச்சயம் சுவடிகளில் கூட, இறைவனை கூட ஏன் வணங்குகிறீர்கள் என்று
குருநாதர் :- அறிந்தும் அனைத்தும் தன் சுயநலமே,
குருநாதர் :- அறிந்தும் இது பொதுநலம் என்றால், நிச்சயம் நல் மனதைத்தான் யான் சொல்வேன்.
குருநாதர் :- நிச்சயம் பொதுநலமாக இருந்தால், நிச்சயம் இறைவன் பின் உங்கள் மனதில் குடி கொள்வான். அனைத்தும் செய்து வைப்பான்.
கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- ( அடியவர்கள் சந்தோஷம் அடைந்து , மிகவும் பலத்த கை தட்டல்கள் )
குருநாதர் :- நிச்சயம் அழகாக மரியாதையுடன் தன் இல்லத்திற்கு அழைத்துச் செல்வான். அதாவது இல்லம் என்பது இங்கு திருத்தலம்.
குருநாதர் :- இல்லையென்றால், நிச்சயம் அடித்து நொறுக்கி, நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று அடிபட்டு உதைபட்டு தான் வரவேண்டும்.
குருநாதர் :- அதாவது நீங்களும் கேட்கலாம். இவ்வாறு பின் வரிசையில் நின்று, நின்று யாங்கள் அலுத்துவிட்டோமே என்று.
சுவடி ஓதும் மைந்தன், அடியவர் உரையின் சுருக்கம் :- ( ஒருவர் கோயிலில் மூன்று மணி நேரம் நின்ற அனுபவத்தை பகிர்கிறார். அவர் சொல்கிறார், “நாம் வரிசையில் நின்றோம், நிக்கிறோம், இதுவும் ஒரு புண்ணியம்.” இறைவன் அந்த புண்ணியத்தால் மரியாதையுடன் உள்ளே அழைத்துக் கொள்வார். ஒரு அம்மா திருவண்ணாமலைக்கு சென்ற போது, பட்டர் அவரை நேரடியாக உள்ளே அழைத்து தரிசனம் செய்ய வைத்தார். இது அந்த புண்ணியத்தின் பலனாகும். அதனால்தான், மனசு சுத்தமா, புண்ணியம் செய்யும் மனப்பான்மை இருக்கணும். அதுவே தகுதி)
கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- (பலத்த கை தட்டல்கள் )
குருநாதர் :- எதை என்று புரிய, இறைவனிடத்திலும் சண்டையிடலாம்.
குருநாதர் :- நீங்களும் கேட்கலாம். சில பேரிடம் பணம் இருக்கின்றது. அவர்கள் மட்டும் பார்த்துவிட்டு சென்று விடுகிறார்கள் என்று.
சுவடி ஓதும் மைந்தன் :- ( நீங்கள் கேட்கலாம் — “அவங்க மட்டும் பணம் 100, 200 கொடுத்து தரிசனம் பார்த்து போயிடுறாங்க; நான் கால் கடுக்க நிக்கிறேன். ஃப்ரீ தரிசனத்தில் இது நியாயமா?” என்று கேட்கும் உரிமை உங்களுக்கு இருக்கிறது )
குருநாதர் :- எதை என்று அறிய, முதலில் நீ வெளியே சென்று துரத்தி விடுவார் என்று எண்ணிவிடுங்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- (பணம் கொடுத்து தரிசனம் செய்தால் இறைவன் அவர்களை சீக்கிரம் வெளியே அனுப்பி விடுவார் என்று நினைத்துக் கொள்ளுங்கள். பணம் கொடுக்காமல் தரிசனம் செய்பவர்கள் , இறைவன் தயாளு இல்லத்தில் நீண்ட நேரம் வைத்திருக்கின்றார். ஆனால் பணம் கொடுத்து விரைவு தரிசனம் செய்பவர்களை, இறைவனே சீக்கிரம் வெளியே துரத்தி விடுகிறார் என்று நினைத்துக் கொள்ளுங்கள். )
கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- ( அடியவர்கள் சந்தோஷம் அடைந்து , மிகவும் பலத்த கை தட்டல்கள் )
சுவடி ஓதும் மைந்தன், அடியவர் உரையின் சுருக்கம் :- ( மனப்பக்குவம் வளர வேண்டும். பிறர் சீக்கிரம் தரிசனம் செய்து சென்றாலும், அது அவர்களுடைய புண்ணிய பலன். அவர்களைப் பார்த்து பொறாமை கொள்ள வேண்டாம். நம்மால் நீண்ட நேரம் இறைவனை சேவிக்க முடிகிறது என்பதே ஒரு பெரிய புண்ணியம். அந்த எண்ணத்துடன் இருப்பது தான் உண்மையான வளர்ச்சி.)
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பலம், தன்னில் கூட பின் எவை என்று புரிய. இதனால், அப்பனே, நிச்சயம் அப்பனே பலமாக பின் சிந்திக்க தொடங்குங்கள். என்பேன், அப்பனே, பலமாகவே அனைத்தும் நடக்கும்.
================================================================
# அப்பனே, புருவ மத்தியில் இன்னொரு மூளை இருக்கின்றது
================================================================
குருநாதர் :- அப்பனே, அனைவருக்குமே பின் புருவ மத்தியில். அப்பனே, இன்னொரு மூளை இருக்கின்றது. அப்பா, யாருக்காவது தெரியுமா இது?
================================================================
# புருவ மத்தியில் இன்னொரு மூளை - மிகப்பெரிய அறிவு
================================================================
குருநாதர் :- அப்பனே, இதுதான். அப்பனே, மிகப்பெரிய அறிவு. இதை யார் ஒருவன் உபயோகிக்கின்றானோ, அவன் மிகப்பெரிய ஆள்.
குருநாதர் :- அறிந்து கூட, இதனால்தான் இறைவனை நினைத்து, நீங்களே எதை என்று அறிய. அதாவது பின். போகணும் அழகாக, யாங்களும் நிச்சயம் சொன்னோம் அல்லவா? நிச்சயம் ஒரு திருத்தலத்தை எண்ணி, நிச்சயம் அத்திருத்தலத்தில் இருக்கும் இறைவனை, நிச்சயம் புருவ மத்தியில் பின், நிச்சயம் பின் நிற்க வைத்தால், உங்களுக்கு அவ்வறிவு தானாக எழும்.
சுவடி ஓதும் மைந்தன், அடியவர் உரையின் சுருக்கம் :- ( எந்த தெய்வ ஸ்தலத்திற்கு போனாலும், அந்த இடத்தை மனதின் மத்தியில், குறிப்பாக புருவ மத்தியில் கொண்டு வர வேண்டும். வீட்டில் அமர்ந்து, அந்த தெய்வத்தை மனதில் அழகாக நிலை நிறுத்தினால், அறிவு வளரும். மனம் தெளிவடையும். உங்கள் குறைகளை நீங்களே சரி செய்யும் ஆற்றல் உங்களுக்குள் உருவாகும். )
குருநாதர் :- அறிந்தும் கூட, அப்பனே, அறிந்தும் அனைவருக்கும் சமன் அறிவை படைத்து, அழகாக உலகிற்கு அனுப்பியுள்ளான் இறைவன்.
குருநாதர் :- ஒருவன் அறிவை பயன்படுத்துகின்ற, அறிவை பயன்படுத்தி என்னென்னவோ செய்கின்றான். ஒருவன் பயன்படுத்துவதே இல்லை. இதனால்தான், நிச்சயம் எதை என்று கூட கஷ்டங்கள்.
================================================================
# ஏழுமலையான் போல உழைத்தால் தான் அனைத்தும் கிட்டும்
================================================================
குருநாதர் :- அறிந்தும் எதை என்று அறிய, நிச்சயம் பின் ஏனைய சித்தர்கள் பின், நிச்சயம் பின் சொல்லிவிட்டார்கள். ஞாபகத்தில், நிச்சயம் இதையும் வைத்துக் கொள்ளுங்கள். அறிந்தும் கூட, உழைத்தால் தான் அனைத்தும் கிட்டும் என்பதற்கு சான்று. பின், நிச்சயம் பின் திருப்பதி எதை என்று அறிய ஏழு மலையானே.
சுவடி ஓதும் மைந்தன், அடியவர் உரையின் சுருக்கம் :- ( சித்தர்கள் கூறியது போல, உழைத்தால் முன்னேற்றம் கிடைக்கும். அதற்கான சிறந்த எடுத்துக்காட்டு திருப்பதி பெருமான். அவர் தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருக்கிறார், அதனால்தான் அங்கு பணம் பெருகுகிறது. ஆனால், அந்த பணம் கொட்டுகிறது என்பதையே மட்டும் நினைக்காமல், அதன் பின்னால் உழைப்பையும் ஞாபகத்தில் வைத்துக் கொண்டு வாழ வேண்டும் )
குருநாதர் :- அறிந்தும், அவன் தனக்கு ஓய்வே இல்லை. எதை என்று புரிய, புரிய எதை என்று அறிய, அனைவரும் ஒவ்வொரு வரத்தை அவனிடத்தில் கேட்பார்கள். இவனுக்கு கொடுக்கலாமா, வேண்டாமா என்றெல்லாம், நிச்சயம் அவன் இவன் எதை என்று அறிய, அறிய அவனுக்கு இதுவே எவை என்று உழைத்துக் கொண்டே இருக்கின்றான்.
(24 மணி நேரமும் தரிசனம், பத்தர்கள் சேவை - திருப்பதி பெருமாளுக்கு , ஏழு மலையானுக்கு ஓய்வே இல்லை .)
குருநாதர் :- அப்படி நீங்களும் நல்லதை, பின் செய்ய, நிச்சயம், யோசித்துக் கொண்டே இருந்தாலே, நீங்களும், நிச்சயம், தலை நிமிர்ந்து, பணத்தோடு, உங்களுக்கு என்ன தேவையோ, அவையோடு, நிச்சயம், வாழலாம் என்பேன்
சுவடி ஓதும் மைந்தன், அடியவர் உரையின் சுருக்கம் :- ( இறைவன் நமக்கு அறிவை கொடுத்திருக்கிறார், அதை பிறரின் நன்மைக்காக பயன்படுத்த வேண்டும். ஒவ்வொருவரும் சிறப்பாக வாழ, அவர்களுக்கு உதவ என்ன செய்யலாம் என்று யோசிக்க வேண்டும். பிறருக்காக நீங்கள் சிந்திக்கும்போது, இறைவன் தானாகவே இறங்கி வந்து உங்கள் பிரச்சனைகளை சரி செய்வார். )
================================================================
# பிறரை குற்றம் சொல்பவர்கள் முன்னேற்றம் அடைய இயலாது.
================================================================
குருநாதர் :- அப்பனே, நிச்சயம், பிறரை குற்றம் காண்பதே வேலையாக, மனிதனுக்கு இருந்துவிட்டால், எப்படி, அப்பா, முன்னேறுவான்? எப்படி அப்பா, இறைவன் இருப்பான்?
குருநாதர் :- அப்பனே, பின் அவை போலேயே ஆகும், எண்ணம் போலேயே ,
சுவடி ஓதும் மைந்தன், அடியவர் உரையின் சுருக்கம் :- ( குருநாதர் கூறுவது போல, சில நேரங்களில் கலிபுருஷன் நம்முள் குறை சொல்வதற்கான எண்ணங்களை தோன்றச் செய்கிறார். ஆனால் இறைவன் அந்த எண்ணங்களை மாற்றுவதற்காக நமக்கு அறிவை வழங்கியுள்ளார். அந்த அறிவைப் பயன்படுத்தி, குறைகளைச் சொல்லாமல், பிறரைப் பற்றி நல்லவையாக பேச வேண்டும். அவர்கள் முன்னேற்றத்திற்காக என்ன செய்யலாம் என்று யோசித்து, வழிகாட்ட வேண்டும். இப்படிச் செய்யும்போது, விதியும் மாறும், வாழ்க்கையும் உயரும். )
குருநாதர் :- அப்பனே, நல்விதமாக, அனைத்தும் அமையும், அப்பா, இதனால்தான், அப்பனே, நிச்சயம், இன்னும், அப்பனே, இக்கலியில் மனிதனுக்கு வாழவே தெரியவில்லை. அதனால்தான், அப்பனே, உங்களை அழைத்து, நிச்சயம், தன்னில் கூட, எவை என்று புரிய, அனைவரும், எங்கள் குழந்தைகளே.
குருநாதர் :- நீங்களும் பக்தியை காண்பித்தவர்கள் தான், நிச்சயம், உங்கள் அனைவருமே, நான் ஏழு மலையனிடத்தில் பார்த்திருக்கின்றேன்.
குருநாதர் :- அறிந்தும், அப்பப்பா, இதை விட மேலாக சொல்ல வேண்டுமென்றால், அப்பனே, முன் ஜென்மத்திலே, எதை என்று அறிய, அழுது புலம்பி, பாவத்தை செய்து விட்டோமே என்று, பின், அதாவது, எங்களை, பின், தாண்டி தான் செல்ல வேண்டும், நீங்கள். இதனால், தாண்டித்தான் சென்றுள்ளீர்கள், அதனால்தான், இப்பிறப்பில் அழைத்து, உங்களுக்கு, நாங்கள், வாக்குகள் உரைத்துக் கொண்டிருக்கின்றோம். எங்களுக்கு வேலை இல்லையா என்ன?
குருநாதர் :- அறிந்தும் புரிந்தும், பிறவி எது என்று அறிய, நிச்சயம் பின் மனிதனின் பிறப்பு எடுத்துவிட்டால், எவ்வளவு கஷ்டங்கள் என்று உங்களுக்கு புரிந்திருக்கும். இப்பொழுதே,
சுவடி ஓதும் மைந்தன், அடியவர் உரையின் சுருக்கம் :- ( மனித பிறவி என்பது இயல்பாகவே கஷ்டங்களால் நிரம்பியது. ஒவ்வொருவரும் தங்களுக்கே உரிய துன்பங்களை அனுபவிக்கிறார்கள்—பணக்கஷ்டம், மனக்கஷ்டம், உடல் நிலை பிரச்சனைகள், குடும்ப சிக்கல்கள் என வாழ்க்கை சோதனைகளால் நிரம்பியுள்ளது. இந்த வாழ்க்கை இவ்வளவு துன்பமா இருக்க வேண்டுமா? )
குருநாதர் :- அறிந்தும் எது என்று புரிய. இதனால்தான் இதை மாற்றவே, யாங்கள் வந்திருக்கின்றோம். நிச்சயம் கவலை கொள்ளாதீர்கள்.
குருநாதர் :- அறிந்தும் சில காலம் நல்லவை, சில காலம் தீயவை. ஏன்????
சுவடி ஓதும் மைந்தன், அடியவர் உரையின் சுருக்கம் :- ( வாழ்க்கையில் சில காலம் நல்லது நடக்கிறது, பின்னர் எதிர்பாராதவிதமாக கெட்டது நடக்க ஆரம்பிக்கிறது. இது பலருக்கும் ஒரு கேள்வியாகவே இருக்கிறது—ஏன் இப்படிச் சுழற்சி? )
குருநாதர் :- அறிந்தும் பின், நிச்சயம் நல்லதே நடக்க வேண்டும். அதை கற்றுக் கொடுக்கின்றேன்.
சுவடி ஓதும் மைந்தன், அடியவர் உரையின் சுருக்கம் :- ( ஒரு நேரம் ஒருவர் நன்றாக இருக்கலாம், ஆனால் அடுத்த நேரம் திடீரென கீழே தள்ளப்படலாம். வாழ்க்கையின் நிலைகள் எப்போதும் நிலைத்தவை அல்ல. ஆனால் இந்த எல்லா மாற்றங்களுக்கும் இடையில், ஒருவர் நல்ல பாதையில் நடக்க வேண்டும். அதற்காகவே, “நான் உங்களுக்கு ஒரு நல்ல வழி காட்டுகிறேன்” என்று குருநாதர் வழிகாட்டுகின்றார். )
============================================
# முதல் வகுப்பில் தேர்ச்சி பெற வேண்டும்
============================================
குருநாதர் :- அனைத்து உபதேசங்களையும் சொல்லித் தருவேன். நிச்சயம் தந்தையானவன் தன் குழந்தை முதல் வகுப்பில் தேர்ச்சி பெற வேண்டும் என்று தான் எண்ணுவான்.
சுவடி ஓதும் மைந்தன், அடியவர் உரையின் சுருக்கம் :- ( நாம் எல்லாம் இறைவனின் குழந்தைகள். ஒவ்வொரு தகப்பனும் தன் பிள்ளை நல்ல கல்வி பெற்று, நல்ல வேலைக்கு சென்று, கௌரவமாக வாழ வேண்டும் என்பதே விருப்பமாக இருக்கும். அதேபோல், குருநாதர் நம்மை வாழ்க்கையின் பரீட்சையில் ஃபர்ஸ்ட் கிளாஸ் தேர்ச்சி பெறச் செய்ய விரும்புகிறார். நம்மை உயர்வடையச் செய்வதற்காக அவர் வழிகாட்டுகிறார்.)
============================================
# மந்திரங்களும் , தந்திரங்களும் ………………
============================================
குருநாதர் :- இதற்கு மந்திரங்களும் இன்னும், அப்பனே, தந்திரங்களும் கூட. பின், நிச்சயம், அப்பனே, வருங்காலத்தில் சித்தர்கள் செப்புவார்கள். அப்பா, அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
சுவடி ஓதும் மைந்தன், அடியவர் உரையின் சுருக்கம் :- ( ஓம் நமசிவாய. குருநாதர் தெளிவாக — பாபநாசம் கூட்டு பிரார்த்தனையில் கூறியிருப்பது , தேவையான மந்திரங்கள், தந்திரங்கள், ஹோமங்கள் அனைத்தையும் உங்களுக்கு சொல்லித் தருவார்கள். ரிஷிகள் வழிகாட்டுவார்கள். பிற்காலத்தில் உங்களுக்குத் தேவையானதை நீங்களே பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் அதற்கான புண்ணியத்தை “ஆக்டிவேட்” செய்ய வேண்டும். அதற்கான வழிமுறைகளையும் அவர்கள் உங்களுக்கு பகிர்ந்து கொடுக்கிறார்கள். இதன் மூலம், முன்னேற்றம் சாத்தியமாகும். )
குருநாதர் :- அப்பனே, அறிந்து கூட, இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட உங்களிடத்தில் இருக்கும். நிச்சயம், அப்பனே, சக்தி. அப்பனே, அதாவது, அப்பனே, நிச்சயம் எதை என்று அறிய. அப்பனே, இப்பொழுது கூட (light) வெளிச்சம் தந்து கொண்டே இருக்கின்றது அல்லவா? அதை யாராவது இயக்கினால் மட்டுமே உண்டு. அதேபோலத்தான், நிச்சயம், அப்பனே. அது அவிழ்ந்து போயிட்டு இருப்பா.
சுவடி ஓதும் மைந்தன், அடியவர் உரையின் சுருக்கம் :- (ஒவ்வொருவருக்குள்ளும் “லைட்” இருக்கிறது — அதாவது ஆன்ம ஒளி. ஆனால் அது சிலருக்கு “ஆஃப்” நிலையில் இருக்கலாம். அந்த ஒளியை “ஆன்” செய்ய வேண்டியது நம்முடைய பொறுப்பு. சுவிட்ச் போடுவது போல, ஆன்ம ஒளியை எரிவிக்க வேண்டும். ஒருமுறை அந்த ஒளி எரிய ஆரம்பித்தால், வாழ்க்கை பிரகாசமாகும்; உண்மை தெரியும்; அறிவு, ஞானம், தெளிவு—all will shine from within )
குருநாதர் :- நிச்சயம், உங்கள் மனதிற்கு ஏற்பவே, அதையும் யாங்கள் செய்வோம்.
சுவடி ஓதும் மைந்தன், அடியவர் உரையின் சுருக்கம் :- ( சிவாய நம. அப்ப, உங்கள் எண்ணத்திற்கு ஏற்பவார் தான். அதை நாங்க லைட்ட ஆன் பண்ணுவோம். ஆன் பண்றதா? வேண்டாமா? வேண்டாமான்னு, நீங்க அதை நாங்க முடிவு செய்வோம். அவர் இருட்டா இருக்குதுன்னா, லைட் போடுறாரு. அப்படி இல்லன்னா, நம்ம இருட்டுல இருந்தோம்னா, இருட்டுல இருப்பான்னு விட்டு போயிருவாரு. நீ வெளிச்சத்துக்கு வரணும்னு நினைச்சீங்க, அப்படின்னா, சொல்றத செஞ்சீங்கன்னா, லைட்ட போட்டு விடுவாரு. )
===============================================================
# சித்தர் வழியில் வருவதற்கும் புண்ணியம் இருக்க வேண்டும்
===============================================================
குருநாதர் :- அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அதாவது சொல்கின்றேன், சித்தர் வாக்குகள் கேட்பதற்கும், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அதன் வழியில் வருவதற்கும், அப்பனே, இவையெல்லாம் நான் ஏற்கனவே எடுத்துச் சொல்லி விட்டேன். அப்பனே, புண்ணியம் இருக்க வேண்டும் என்பேன். அப்பனே, அப்புண்ணியத்தை பின், நீங்கள், அப்பனே, எவை என்று அறிய, யாங்கள் கொடுத்துட்டு, அப்பனே, பின் உங்களை செய்ய.
சுவடி ஓதும் மைந்தன், அடியவர் உரையின் சுருக்கம் :- ( இறைவன் முதலில் நமக்கு புண்ணியம் கொடுக்கிறார். அந்த புண்ணியம் இல்லாமல் எந்த நல்ல செயலையும் செய்ய முடியாது. நம்மிடம் புண்ணியம் இல்லையென்றாலும், “அதையும் நான் தான் கொடுக்கிறேன்” என்று இறைவன் கூறுகிறார். அதாவது, வாய்ப்பையும், ஒளியையும் (அந்த "லைட்"-ஐ) அவர் தருகிறார். நம்மால் செய்ய வேண்டியது — அந்த வாய்ப்பை பயன்படுத்தி, அந்த ஒளியை ஏற்றி, வாழ்க்கையை நறுமணமாய் வாழ்வது. “பொழைச்சுக்கோங்கப்பா” என்பது, அந்த புண்ணியத்தை வைத்து உயர்வடையுங்கள் என்பதற்கான அழைப்பு. )
===============================================================
# சித்தர்கள் புண்ணியங்களை உங்களுக்கு கொடுக்கின்றோம்
===============================================================
குருநாதர் :- எதை என்று புரிய, கவலைப்படாதீர்கள். எதை என்று அறிய, எங்களிடத்தில் மிகுந்த புண்ணியம் இருக்கின்றது. நிச்சயம், அதையெல்லாம் பங்கிட்டு கொடுக்கின்றோம் . பிழைத்துக் கொள்ளுங்கள்.
கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- ( அடியவர்கள் சந்தோஷம் அடைந்து , மிகவும் பலத்த கை தட்டல்கள் )
சுவடி ஓதும் மைந்தன், அடியவர் உரையின் சுருக்கம் :- ( ஓம் நமச்சிவாய. எவ்வளவு பெரிய இதைவிட யார் சொல்லுவாங்க? ஓம் நமச்சிவாய. அப்ப, உங்களிடத்துல புண்ணியம் இல்லை. புண்ணியம் இல்லை. அப்ப, எங்களிடத்தில் நிறைய இருக்குது. பொழைச்சுக்கோங்கப்பா. பொழைச்சுக்கோங்கப்பான்றாரு. )
குருநாதர் :- அறிந்தும் எது என்று அறிய, அறிய போக போக புரியும். ( இப்ப தெரியாது உங்களுக்கு. போக போக நல்லது நடக்கும் பொழுது உங்களுக்கே புரியும்.) நிச்சயம், புரியாத புதிர் தான். இறைவன் புரியாத புதிர் தான்.
குருநாதர் :- அறிந்தும் எவை என்று புரிய, அதாவது எதை என்று அறிய, அறிய. நிச்சயம், தன்னில் கூட உயிர் இரண்டு. யான் சொல்வேன் இங்கு ?
அடியவர் :- இங்க ஆத்மா, பரமாத்மா இல்லையா?
குருநாதர் :- எவை எப்படி? இது?
அடியவர் :- நம்ம ஜீவாத்மா, பரமாத்மா.
குருநாதர் :- அம்மையே, இவை எது என்று அறிய, அனைவரும் இப்படித்தான் சொல்லித் திரிகின்றார்கள்.
குருநாதர் :- அறிந்தும் தாயே, நிச்சயம் எவை என்று கேள். நீயே,
குருநாதர் :- அப்பனே, எது என்று புரிய. அப்பனே, இவ்வாறாகச் செல், அவ்வாறாகச் செல் என்பதையெல்லாம் ஒரு உயிர் இயக்கிக் கொண்டிருக்கின்றது. மறைமுகமாக இன்னொரு உயிர், நிச்சயம், தன்னில் கூட பின் சொப்பனமாக இயக்கிக் கொண்டிருக்கின்றது.
மேடை கீழ் நின்ற அடியவர் : - ( சில பதில்கள் உரைத்தார். அவ் அடியவரை மேடை எற சொன்னார்கள் )
குருநாதர் :- எது என்று அறிய. இப் பைத்தியக்காரனை மேலே வரச் சொல்.
மேடை ஏறிய அடியவர் :- (மேடை ஏறிய பின் ) பைத்தியக்காரன் வந்துச்சு. பைத்தியக்காரனாவே இருக்கலாம். அகத்தியர் கிட்ட அதுல ஒன்னும் தப்பு இல்லை. இங்க வந்து பைத்தியக்காரனா இருந்தது எவ்வளவு புண்ணியம். வீட்ல இருந்து நம்ம என்ன பண்ண போறோம்? ஏதோ பேச்சு, புரட்டு, ஏதோ சமையல், சாப்பாடு. இங்க வந்து உட்கார்ந்து பைத்தியக்காரன் பட்டம் வாங்குறது வந்து பைத்தியருக்கு வைத்தியம் பார்க்கிற பைத்தியர் அவர் (குருநாதர் ).
ரெண்டாவது. நான் ஏன் இந்த புண்ணியம் பாவத்தை சொன்னேன்னா, இப்ப நிறைய வாட்டி சொல்லிட்டே இருக்காரு. புண்ணியம் பண்ணுங்க, புண்ணியம் பண்ணுங்கன்னு. கெட்டவன் வாழறான், செத்து போயிடுறான், நல்லா இருக்கான். பாவம் பண்ணி, பாவம் பண்ணி, நல்லா. உயிரா வச்சுக்கலாம். புண்ணியம் பண்ணவன் தான் இங்க வந்திருக்கோம். இந்த உயிர் புண்ணியம் பண்ண உயிர் மீது எல்லாம் பாவம் பண்ண உயிர்.
கரெக்டா சொல்லுங்க, தாத்தா.
(குருநாதரை தாத்தா என்று அழைத்த ஒரு அடியவர் குறித்த முந்தைய வாக்கு ----சித்தன் அருள் - 1099 - அந்த அம்மையார்... குருநாதரை, தாத்தா என்று தான் அன்போடு அழைப்பார். அம்மையார் அன்போடு தாத்தா தாத்தா என்று அழைப்பதை குருநாதரும் ரசித்துக் கொண்ட, அம்மையே யானும் இளமையானவன் தான். எனக்கொன்றும் வயதாகி விடவில்லை நித்திய சிரஞ்சீவி அம்மா யான். நீ என்னை தாத்தா தாத்தா என்று அழைக்கும் பொழுது உன் தாய் லோபமுத்ரா சிணுங்குகின்றாள். செல்லமாக கோபமும் கொள்ளுகிறாள்.----)
( அவ் அடியவர் குருநாதரை தாத்தா என்று அழைத்தார். அதற்கு உடனே… )
குருநாதர் :- அப்பனே, ஒரு இளைஞரைப் போய், அப்பனே, பின் கிழவன் என்றலாமா? பைத்தியக்காரன் என்று.
மேடை ஏறிய அடியவர் :- எனக்கு நீங்க தானே தாத்தா. நீங்க என்னை மைந்தன்றீங்க, நான் உங்களை தாத்தான்றோம்.
குருநாதர் :- அறிந்தும் எவை என்று கூற, எது என்று அறிய. அதாவது, நிச்சயம் இரண்டு உயிர் எது என்று புரிய. உயிரை தனித்தனியாக பிரித்தெடுத்து, பின் பொருள் சொல்க. பார்ப்போம்,
குருநாதர் :- எது என்று அறிய. அப்பொழுது புரிந்து கொள்கின்றேன் உன் பாசத்தை.
மேடை ஏறிய அடியவர் :- அதான் நான் புண்ணியம் பண்ணது ஒரு உயிர், பாவம் பண்ணது ஒரு உயிர். ரெண்டு உயிர் தானே உலகத்துல இருக்கும்னு தானே சொல்றேன். அதை அவர் ஒத்துக்க மாட்டேங்குறாரு.
அது இல்ல, தாத்தா, நீங்க முதல்ல அதுக்கு பதில் சொல்லுங்க.
குருநாதர் :- அப்பனே, எது என்று அறிய, அறிய. பின் பாவம் என்ற உயிர், பின் எதனைச் சொன்னாய்? இங்கு பாவம் என்ற உயிரை என்ன? எதை வச்சு? எதை சொன்னாய்? எதை சொல்ற?
மேடை ஏறிய அடியவர் :- தப்பு பண்றவன் எல்லாம் பாவம் தானே? உலகத்துல தப்பு, கரெக்ட் எல்லாம் இருக்குன்னு நீங்க சொல்லிட்டீங்க. தப்பு பண்றவன் எது என்று அறிய.
குருநாதர் :- அப்பனே, கனவாக வந்து செல்கின்றது. அப்பனே, மறைமுகமாக எது என்று அறிய, இயக்குகின்றது. அதுதான், நிச்சயம், தன்னில் கூட எவை என்று ஒரு பாவத்தை அழைத்துச் செல்லும்.
மேடை ஏறிய அடியவர் :- அதாவது சொப்பனத்தில் வர சிந்தனைகள் எல்லாமே பாவம்ங்கிறாரு. அது ஒரு உயிர், அந்த உயிர்தான் வந்து, அந்த அந்த நீ கனவு உலகத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறாய். ஆள் மனசு சொல்றாருன்னு நினைக்கிறேன். கனவு உலகத்திலேயே இருக்காத, நிஜ வாழ்க்கைக்கு வா. அந்த பொருளை சொல்றாரு. நிச்சயம், தன்னில் கூட
===============================================================
# அப்பனே என்னை நினைத்து பாடு பாடலை.
===============================================================
குருநாதர் :- அப்பனே என்னை நினைத்து பாடு பாடலை.
மேடை ஏறிய அடியவர் :- ( அருமையான பாடலை பாடினார். “உம்மை தேடிச் சென்ற வழிகள் என்னை அழைத்துச் சென்றது ஆண்டவனிடம்” என்ற பாடலை பாடினார்கள். )
( இங்கு இந்த நேரத்தில் பல உரையாடல்கள் நடந்தன. அவற்றில் குருநாதர் வாக்குகளை மட்டும் இங்கு அளிக்கின்றோம் )
குருநாதர் :- நிச்சயம் இவை இப்பாடலில் என்ன உள்ளது என்பதை எல்லாம் பின், நிச்சயம் பின் எவை என்று கூற வளர்ந்து கெட்டவனே. இன்னொரு முறையும் பாடு.
மேடை ஏறிய அடியவர் :- ( மீண்டும் பாடினார். ராமேஸ்வரத்தில் ஆதி ஈசன் சிவபெருமானே நாடியில் நேரடியாக வந்து பாடலை பாடச் சொன்ன அந்த கதையை சொன்னார் அங்கு. அத்துடன் அந்த பாடலையும் பாடினார்கள் அவ் அடியவர். இது குறித்து சித்தன் அருள் - 1099 பதிவில் படித்து தெரிந்து கொள்க. மீண்டும் பாடினார். பாடலின் இடையே கூட்டுப்பிரார்த்தனை அடியவர்கள் பலத்த கைதட்டல்கள் - அவ்வளவு அருமையாக பாடினார்கள் அவ் அடியவர். ஆதி ஈசனே நாடியில் வந்து பாடச் சொன்னார்கள் என்றால் நீங்களே புரிந்து கொள்ளுங்கள் இவ் அடியவரின் குரல் வளத்தை.)
===============================================================
# பெருமானை வரவழைக்க ஒரு பாடலை அப்பனே பாடு
===============================================================
குருநாதர் :- அப்பனே, அறிந்தும் கூட எதை என்று அறிய அறிய. அப்பனே, சில பாடல்களுக்கு இறைவன் அப்பனே நிச்சயம் மயங்கி விடுவான் என்பேன். அப்பனே, இப் புரட்டாதி திங்களில் அப்பனே நிச்சயம் பெருமானை வரவழைக்க ஒரு பாடலை அப்பனே பாடு. அனைவருக்கும் அது ஆசீர்வாதமாக இருக்கட்டும்.
மேடை ஏறிய அடியவர் :- ( பெருமாளை வரவழைக்க , குறை ஒன்றும் இல்லை, மறைமூர்த்தி கண்ணா. - என்ற பாடலை அருமையாக பாடினார்கள். பாடலை பாடி முடித்த பின்னர் )
குருநாதர் :- அப்பனே, அறிந்தும் கூட, அப்பனே, அதாவது குறை இல்லை என்றே சொல்லிவிட்டாய். அப்பனே, இதுபோல், அப்பனே, நிச்சயம் அனைவருமே மனமகிழ்ந்து, இறைவனும், அப்பனே, சமமாக எதை என்று அறிய. அப்பனே, மனமகிழ்ந்து, அப்பனே, நிச்சயம் பின் எதை என்று அறிய. அறிய, அப்பனே, சில பாடல்களுக்கு, அப்பனே, பின் இறைவனே, மனம் இறங்கி, அப்பனே, பின் அமைதி எதை என்று புரிய. அப்பனே, சமமாகவே, பின் கேட்டும், கேட்கும் வரத்தை தந்து விடுவானப்பா. நலங்களாகவே, அப்பனே, எதை என்று புரிய. இதனால்தான், அப்பனே, இவை ஒருமுறை பாடினாய் என்பேன். அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, பின் எத்தனை, பின் ஒளி அலைகள் , (இறைவனின் ஆசீர்வாதங்கள்) அப்பனே, பின் வந்து வந்து, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, மனிதனுக்குள் உள் புகுந்து, அப்பனே, நிச்சயம் சில சில எவை என்று கூற, புண்ணியங்களும் கூட, ஆசீர்வாதங்கள் கூட, அப்படியே, பின் நிச்சயம் எதை என்று அறிய. அப்பனே, சிவபுராணத்தில், அப்பனே, நிச்சயம் சொன்னேனே, (சிவபுராணம்) அதையும் பாடு.
மேடை ஏறிய அடியவர் :- ( சிவபுராணம் பாட , அடியவர்களும் சேர்ந்து பாடினார்கள்)
குருநாதர் :- அறிந்தும் எவை என்றும் புரிய அனைவருமே ஒவ்வொரு குழப்பங்கள். ஒவ்வொரு குழப்பத்திலும் கூட ஆழ்ந்து இருக்கின்றான். இறைவி அனைத்தும் இணைந்தது மீனாட்சியே !!!!! பின் அனைவருக்காகவும் பின் நிச்சயம் மீனாட்சியிடம் கேட்கும்படி ஒரு பாடலை பாடு. பாடலை பாடு பைத்தியக்காரனே !!!!!
மேடை ஏறிய அடியவர் :- ( அன்னை மீனாட்சி தேவைக்காக , கருணை தெய்வமே கற்பகமே எல் கருணை தெய்வமே கற்பகமே - என்ற பாடலை பாடினார். பாடலை பாடி முடித்த பின்னர் )
=================================================
# திருவாசகம் - திருவார்த்தை என்ற 43வது பதிகம்
=================================================
குருநாதர் :- அப்பனே அறிந்தும் இதன் உண்மையை தெளிவு பெற அப்பனே திருவாசகத்தில் அப்பனே அனைவரும் ஒன்றாக இணைந்து 43வது பதிகத்தை (திருவார்த்தை)
மேடை ஏறிய அடியவர் :- ( மேடை ஏறிய அடியவர் பாட அடியவர்கள் சேர்ந்து பாடினார்கள் திருவாசகத்தில் உள்ள திருவார்த்தை என்ற 43வது பதிகத்தை - மாதிவர் பாகன் மறைவயின்ற வாசகன் …….)
குருநாதர் :- அப்பனே இதன் விளக்கத்தை ஏன் இப்பாடலை பாடச் சொன்னேன்?
குருநாதர் :- அப்பனே அறிந்தும் கூட அப்பனே பின் ஏதும் இல்லாதவனும் கூட அப்பனே அதாவது எது என்று அறிய அன்புடன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட இறைவனை வணங்கினாலே நிச்சயம் போதுமானதப்பா. இறைவன் அப்பனே என்ன ஏது தன் மகனுக்கு, தன் மகளுக்கு என்ன பின் நிச்சயம் பின் செய்ய வேண்டுமோ அதை அழகாக செய்வானப்பா. இதனால்தான் அப்பனே இப்பாடலை யான் பாடச் சொன்னேன்.
======================================================
# உங்கள் புண்ணியம் - மிகப்பெரியதாக போகிறது
======================================================
குருநாதர் :- அறிந்தும் எவையென்று புரிய அதாவது உங்களிடத்தில் புண்ணியத்தை அதாவது சொல்லிக்கொண்டே தான் வருகின்றேன் புண்ணியத்தை உங்களுக்கு உருவாக்கிவிட்டால் நிச்சயம் சிறிதாக அதை பெரிதாக நீங்களே செய்து விடுவீர்கள் அதைத்தான் யான் பின் பெருக்கப் போகின்றேன் வருங்காலத்தில்.
குருநாதர் :- அறிந்தும் எதை என்று அறிய இன்னும் இடையனும் கூட அழகாக வாக்குகள் செப்புகின்ற பொழுது நிச்சயம் தான் தான் பின் சாதகத்தையும் கூட சரியாக சொல்வான் உபயோகித்துக் கொள்ளுங்கள் உயர்வை பெறுவீர்கள்.
குருநாதர் :- அதனுள்ளே மீண்டும் ( சிவபுராணம் பாடுக. ஆசிகள். )
=================================================
# திருவாசகம் - திருவார்த்தை 43 ஆம் பதிகம்
=================================================
மாதிவர் பாகன் மறைபயின்ற வாசகன் மாமலர் மேயசோதி
கோதில் பரங்கருணையடியார் குலாவுநீதி குண மாகநல்கும்
போதலர் சோலைப் பெருந்துறையெம் புண்ணியன் மண்ணிடை வந்திழிந்து
ஆதிப் பிரமம் வெளிப்படுத்த அருளறி வார் எம்பிரானாவாரே. (1)
மாலயன் வானவர் கோனும்வந்து வணங்க அவர்க்கருள் செய்தஈசன்
ஞாலம் அதனிடை வந்திழிந்து நன்னெறி காட்டி நலம்திகழும்
கோல மணியணி மாடநீடு குலாவு மிடைவை மடநல்லாட்குச்
சீல மிகக்கரு ணையளிக்குந் திறமறி வார்எம் பிரானாவாரே. (2)
அணிமுடி ஆதி அமரர்கோமான் ஆனந்தக் கூத்தன் அறுசமயம்
பணிவகை செய்து படவதேறிப் பாரொடு விண்ணும் பரவியேத்தப்
பிணிகெடநல்கும் பெருந்துறையெம் பேரரு ளாளன்பெண் பாலுகந்து
மணிவலை கொண்டுவான் மீன்விசிறும் வகையறிவார் எம்பிரானாவாரே. (3)
வேடுரு வாகி மகேந்திரத்து மிகுகுறை வானவர் வந்துதன்னைத்
தேட இருந்த சிவபெருமான் சித்தனை செய்தடி யோங்களுய்ய
ஆடல் அமர்ந்த பரிமாஎறி ஐயன் பெருந்துறை ஆதிஅந்நாள்
ஏடர் களையெங்கும் ஆண்டுகொண்ட இயல்பறி வார்எம் பிரானாவாரே. (4)
வந்திமை யோர்கள் வணங்கியேத்த மாக்கரு ணைக்கட லாய்அடியார்
பந்தணை விண்டற நல்கும்எங்கள் பரமன் பெருந்துறை ஆதி அந்நாள்
உந்து திரைக்கட லைக்கடந்தன் றோங்கு மதிலிலங்கை அதினிற்
பந்தணை மெல்லிர லாட்கருளும் பரிசளி வார்எம் பிரானாவாரே. (5)
வேவத் திரிபுரஞ் செற்றவில்லி வேடுவனாய்க்கடி நாய்கள்சூழ
ஏவற் செயல்செய்யுந் தேவர்முன்னே எம்பெருமான்தான் இயங்கு காட்டில்
ஏவுண்ட பன்றிக் கிரங்கியீசன் எந்தை பெருந்துறை ஆதியன்று
கேவலங் கேழலாய்ப் பால்கொடுத்த கிடப்பறி வார்எம் பிரானாவாரே. (6)
நாதம் உடையதோர் நற்கமலப் போதினில் நண்ணிய நன்னுதலார்
ஓதிப் பணிந்திலர் தூவியேத்த ஒளிவளர் சோதியெம் ஈசன் மன்னும்
போதலர் சோலைப் பெருந்துறையெம் புண்ணியன் மண்ணிடை வந்து தோன்றிப்
பேதங் கெடுத்தருள் செய்பெருமை அறியவல் லார்எம் பிரானாவாரே. (7)
பூவலர் கொன்றையும் மாலைமார்பன் போருகிர் வன்புலி கொன்றவீரன்
மாதுநல் லாளுமை மங்கைபங்கன் வன்பொழில் சூழ்தென் பெருந்துறைக்கோன்
ஏதில் பெரும்புகழ் எங்கள்ஈசன் இருங்கடல் வாணாற்குத் தீயில்தோன்றும்
ஓவிய மங்கையர் தோள்புணரும் உருவறி வார்எம் பிரானாவாரே. (8)
தூவெள்ளை நீறணி எம்பெருமான் சோதி மகேந்திர நாதன்வந்து
தேவர் தொழும்பதம் வைத்தஈசன் தென்னன் பெருந்துறை ஆளிஅன்று
காதல் பெருகக் கருணைகாட்டித் தன்கழல் காட்டிக் கசிந்துருகக்
கேதங் கெடுத்தென்னை ஆண்டருளும் கிடப்பறி வார்எம் பிரானாவாரே. (9)
அங்கணன் எங்கள் அமரர்பெம்மான் அடியார்க் கமுதன் அவனிவந்த
எங்கள் பிரான்இரும் பாசந்தீர இகபரம் ஆயதோர் இன்பமெய்தச்
சங்கங் கவரந்நதுவண் சாத்தினோடுஞ் சதுரன் பெருந்துறை ஆளிஅன்று
மங்கையர் மல்கும் மதுரைசேர்ந்த வகையறி வார்எம் பிரானாவாரே. (10)
=================================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு நிறைவு
=================================================
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம் !
சர்வம் சிவார்ப்பணம் !
No comments:
Post a Comment