“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Google Translate

Saturday, November 22, 2025

சித்தர்கள் ஆட்சி - 518 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் பெங்களூர் சத்சங்கம் - 12.November.2024 - பகுதி 7

 இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.






அன்புடன் அகத்திய மாமுனிவர் பெங்களூர்  சத்சங்கம் - 12.November.2024 - பகுதி 7


ஆதி முதல்வனை மனதில் எண்ணி செப்புகின்றேன், அகத்தியன். 


(இவ் தொடர் வாக்கின் முந்தைய பகுதிகள்

(1) பகுதி 1 https://siththarkalatchi.blogspot.com/2025/11/510.html (2) பகுதி 2 https://siththarkalatchi.blogspot.com/2025/11/511.html (3) பகுதி 3 https://siththarkalatchi.blogspot.com/2025/11/512.html (4) பகுதி 4 https://siththarkalatchi.blogspot.com/2025/11/514.html (5) பகுதி 5 https://siththarkalatchi.blogspot.com/2025/11/516.html

(6) பகுதி 6 https://siththarkalatchi.blogspot.com/2025/11/517.html

( இவ் தொடர் வாக்கின்- 7 ஆம் பகுதி - குருநாதர் வாக்குகளை மட்டும் இப்போது பார்ப்போம் )


குருநாதர் :-  அப்பனே, அனைவரும் குறைந்த குறைகளை கூட யான் ஆராய்ந்தேன். ஆனால் அதற்கெல்லாம் நீங்கள் செய்த தவறுதான் என்பேன். 


குருநாதர் :- நீங்கள் செய்துவிட்டு என்னிடத்தில் ஓடோடி  வந்து கேட்டால், யான் என்ன செய்வேன்? நீயே கூறு  தாயே? 


சுவடி ஓதும் மைந்தன் :- உங்களுக்கு தான் கேக்குறாரு. எல்லாம் நீங்க செஞ்சிருந்து,  அப்புறம் வந்து என்ன கேட்டா? அப்புறம் நான் என்ன பண்றது? 


அடியவர் :- ஒன்னும் பண்ணல. நம்ம தப்புதான்.


குருநாதர் :- எதை என்று புரிய, புரிய, தாயே. இதனால்தான், நிச்சயம், அதில் கூட வந்து யான் உதவி செய்து கொண்டிருக்கின்றேன். 


==================================================

# ஏன் அனைவருக்கும் நோய் வருகின்றது? - ரகசியம் 

==================================================


குருநாதர் :- தாயே. இதனால்தான்.  தாயே, ஒன்றை சொல்கின்றேன். இறைவன் நாமத்தை உச்சரிப்பவனுக்கும் நோய் வருகின்றது. பாடல் பாடுபவனுக்கும் நோய் வருகின்றது. நிச்சயம், பல மந்திரங்கள் செப்புவருக்கும் நோய் வருகின்றது. கஷ்டங்கள் வருகின்றது. ஏன், தாயே? 


சுவடி ஓதும் மைந்தன் :- இறைவன் நாமத்தை சொன்னாலும், கஷ்டம் வந்தாலும்,  இறைவன் பாட்டு பாடினாலும், நோய் வருது, நோய் நொடி வருது. ந என்ன சொன்னாரு? அதுக்கு மந்திரம் சொன்னாலும், மந்திரம் சொன்னாலும், நோய் வருது. ஏன்பா, சொல்லுப்பா.


அடியவர் :-  ஏதோ எதிர்பார்த்துட்டு தான் எல்லாம் செஞ்சுட்டு இருக்கேன். 


குருநாதர் :- அப்பனே, இதுதான் உண்மை. 


சுவடி ஓதும் மைந்தன் :- இதுதான் உண்மை, 


அடியவர் :-   கரெக்ட். எல்லாமே எதிர்பார்ப்பு, எதிர்பார்ப்பு ..தேவை, தேவை. 


குருநாதர் :- அப்பனே, சொல்லிவிடுகின்றேன், அனைத்தும் பணத்திற்காகத்தான். அப்பனே, 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்பா, நான் சொல்லிடுறேன்ப்பா. எல்லாமே பணத்திற்காகத்தான். 



================================================

# அப்பனே, பணம்தான் பிணம் என்று தெரியாதப்பா.

================================================


குருநாதர் :- அப்பனே, எதை என்று அறிய, அறிய, ஆனால் அப்பனே, பணம்தான். அப்பனே, பின் பிணம் என்று, பின் தெரியாதப்பா.


குருநாதர் :-   அப்பனே, ஆனால் நிச்சயம் என்னுடைய பக்தர்களும் சொல்லிக் கொண்டே இருக்கின்றார்கள். பணம் இருந்தால்தான் வாழ முடியும் என்று, பின் அடியோடு முட்டாள் அப்பா.


சுவடி ஓதும் மைந்தன் :-  அகத்தியர் வணங்கிக்கொண்டே சொல்லி இருக்கிறாங்க. பணம்தான் முக்கியம் என்று.


குருநாதர் :- அகத்தியருக்கு என்ன தெரியும்? பணம் இருந்தால்தான் வாழ முடியும் என்று.  யான் பார்த்துக் கொண்டே இருக்கின்றேன். 


======================================

# அன்பு இருந்தால் தான் வாழ முடியும்

======================================


குருநாதர் :- ஆனால், நிச்சயம், அறிந்து கூட, அன்பு இருந்தால்தான் வாழ முடியும் என்று யாரும் சொல்வதில்லையே. 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஆனால், அன்புதான், அன்புதான் முக்கியம். 


======================================

# “தந்தையே”  - பெரிய மந்திரம், அதற்கு மிஞ்சிய மந்திரம் இங்கில்லை. 

======================================


குருநாதர் :- நிச்சயம், தந்தையே என்று அழைத்துவிட்டால் போதும். அதையே பெரிய மந்திரம், அதற்கு மிஞ்சிய மந்திரம் இங்கில்லை. 


குருநாதர் :- அப்பனே, அனைத்தும் செய்துவிட்டு, அப்பனே, அகத்தியா என்று சொல்லிவிட்டால், அப்பனே, யான் தந்து விடுவேனா? 


சுவடி ஓதும் மைந்தன் :-   ( எல்லாம் - தவறும் -  செஞ்சுட்டு, செஞ்சுட்டு, அகத்தியான்னு சொல்லிட்டா, நான் விடுவேனா என்ன? )


குருநாதர் :- அப்பனே, அன்போடு இருந்தாலே, அப்பனே, நிச்சயம், அப்பனே, யானே தருவேன். அப்பனே, அனைத்தும் 


சுவடி ஓதும் மைந்தன் :-   அன்பாக இரு. 


======================================

# “அன்பு இல்லாவிட்டால்”  - எத்தனை பூஜைகள், பிரயோஜனம் இல்லை

# எத்தனை தரிசனங்கள் சென்றாலும் பிரயோஜனம் இல்லை

======================================


குருநாதர் :- அப்பனே, அன்பு இல்லாவிடில், அப்பனே, எத்தனை பூஜைகள், எத்தனை, எத்தனை, அப்பனே, தரிசனங்கள் சென்றாலும், பிரயோஜனம் இல்லை. அப்பா, 


சுவடி ஓதும் மைந்தன் :-    ( அந்த அன்பு இல்லைன்னா, எத்தனை பூஜை செய்தாலும் , எதனை ஆலயங்கள் சென்று தரிசனம் செய்தலும் , ஒன்றும் பலன் இல்லை. )


==================================================

#  “முருகப்பெருமானே , நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்”

==================================================


குருநாதர் :- அப்பனே, நிச்சயம், அப்பனே, பழனி தன்னில் முருகனை பார்த்தேன். ஆனால், அப்பனே, ஓடோடி  வருகிறார் அப்பா.  ஆனாலும், அப்பனே, பின் நிச்சயம், பின், பின், (முருகப்பெருமான் அகத்திய மாமுனிவரிடம் - ) அகத்தியர் மாமுனிவரே, என் பக்கத்தில் நில்லும். நிச்சயம், அதாவது இன்றைய நாளில், நிச்சயம், அறிந்தும் எது என்று அறிய, அறிய, இப்பொழுது. சஷ்டி சென்றதே, அப்பொழுதுதான், அதாவது, பின் செந்தூரில் கூட, நிச்சயம், பின் மாமுனிவரே , என் பக்கத்தில் நில்லும். யார், யார் என்ன நினைக்கின்றார்கள் என்று சொல்ல வேண்டும் என்று. ஆனால், நிச்சயம், அறிந்தும் எவை என்று அறிய, அறிய, பின் பார்த்துக் கொண்டே இருந்தேன். அனைவரும் முருகா, முருகா என்று, பின், நிச்சயம், சொல்கின்றார்கள். ஆனால், அனைவருமே முருகனின், அதாவது, நிச்சயம், பின் வாகனத்தை (கோழி / சேவல் )  கொன்று வந்து கொண்டிருக்கின்றார்கள். அதாவது, பின் அவை தர வேண்டும், இவை தர வேண்டும் என்று, ஆனால், முருகா, நீ நன்றாக இருக்க வேண்டும்” என்று யாருமே சொல்லவில்லை. அப்பா, 


குருநாதர் :- அப்பொழுது சொல்வான், பின் யான் செந்தூருக்கு சென்றிருந்தேன், பழனிக்கு சென்றிருந்தேன், பார்த்தேன், சஷ்டி விரதம் இருந்தேன் என்று. ஆனால், அனைத்தும் சுயநலத்திற்காகவே, 


சுவடி ஓதும் மைந்தன் :-   ஆமா, கரெக்ட், சுயநலத்துக்காக தான் விரதம் இருக்கிறது. 


அடியவர் :- ஊரை சுத்திட்டு வந்திருப்பாங்க, அதேதான். 


குருநாதர் :- அப்பனே, இப்படி சொன்னாயே, இதுதானப்பா, 


சுவடி ஓதும் மைந்தன் :- கரெக்ட்.  ஊரை சுத்திட்டு வந்திருப்பாரு, அவ்வளவுதான். 


குருநாதர் :- அப்பனே, அறிந்தும், அதாவது, வேலைக்கு செல்கிறீர்கள் என்பேன் அப்பனே. அங்கு, அப்பனே, இவ்வாறு சுற்றிக் கொண்டிருந்தால் என்ன ஆகும்? 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஒரு வேலைக்கு போறீங்க, வேலை செய்யாம, அங்க சுத்தி இருந்தா என்ன ஆகும்? வேலை போகும், வேலை போயிடும், புரியுதுங்களா? 


==============================================

# சுற்றுலாவுக்காக ஆலயம் சென்றால் புண்ணியம் கூட போய்விடும்

==============================================


குருநாதர் :- அப்பனே, இவை போன்று இருந்தால், புண்ணியம் கூட போய்விடும். அப்பா, 


சுவடி ஓதும் மைந்தன் :-  இது மாதிரி சாப்பிட்டு, சும்மா ஏதோ முருகனை பார்க்க போறேன்னு சொல்லிட்டு, முருகா, முருகா சொன்னா, உன் புண்ணியம் கூட போயிடும்பா. 


============================================

# இறைவனை இல்லத்தில் இருந்து காண வேண்டும் 

============================================


குருநாதர் :- அப்பனே, நிச்சயம், அப்பனே, பின் அருகிலே இருந்து, அப்பனே, பின் காண வேண்டும் என்பேன். அப்பனே, 


குருநாதர் :- அப்பனே, அதற்கு யான் சொல்லிக் கொடுத்தால், அப்பனே, நிச்சயம், அப்பனே, பின் நீங்களும் உயர்ந்து விடுவீர்கள். 


குருநாதர் :- அதனாலதான், அப்பனே, இத்தனை வாக்குகள், 


============================================

# எப்போது இறைவன் உங்களை தேடி வருவார்.?

============================================


குருநாதர் :- அப்பனே, பின்பு, பின் உணர்ந்து கொண்டான் இவன் (என்று) ,  இறைவன் உன்னை தேடி வருவானாப்பா. 


சுவடி ஓதும் மைந்தன் :- ( "இவன் இறைவனை உண்மையை அறிந்தவன். அதனால் நம்மையும் உணர்ந்துவிட்டான். இவன் நல்லவன். அதனால், இறைவனே நேரில் வந்து இவனைப் பார்ப்பதற்குத் தயார். 'போய் பார்ப்போமா?' என்று யாரும் அழைக்க வேண்டியதில்லை. இறைவனே நேரில் வருவார்." )


குருநாதர் :- “““அப்பனே, நிச்சயம், அனைத்தும் கொடுத்து சென்று விடுவான் அப்பனே.””” 


குருநாதர் :- அப்பனே, ஆனால், அனைத்தும் பின் தெரியாவிடில், அப்பனே, அங்கு செல், இங்கு செல் என்றெல்லாம் யான் சொல்லிக் கொண்டிருந்தால், ஒரு பிரயோஜனமும் இல்லையப்பா. 


குருநாதர் :- அப்பனே, நிச்சயம், ஒன்றை சொல்கின்றேன், தாயானவள் , தாய், தந்தையானவனும், நிச்சயம், தன் பிள்ளைக்கு சிறுவயதிலிருந்து ஒழுக்கத்தை கற்பித்தால், அனைத்தும் தெரிந்து கொள்வார்கள். அதேபோலத்தான், என் பக்தர்கள், பின் என் பிள்ளைகள், இவை தெரிந்து கொண்டாலே, நிச்சயம், உயர்ந்து விடுவார்கள். 


குருநாதர் :- எவை என்று அறிய, அறிய, இவ் அகத்தியன் எனக்கு ஏன் வேலையா? உங்களுக்கு வாக்குகள் சொல்வதற்கு ?


சுவடி ஓதும் மைந்தன் :- எனக்கு வேலையா?  அகத்தியர் சொல்றாரு, உங்களுக்கு என்ன வாக்கு சொல்வதற்கு வேலையா எனக்கு ?


=======================================================

# “அகதியனின் வாக்கு, வாக்குத்தான், நிச்சயம், பின் பொய்யாகாது. “

=======================================================


குருநாதர் :- ஆனாலும், நீங்கள் ஒரு பிறவில், நிச்சயம், பின் அதாவது பிறப்பா!!! என்று நான் பயந்து, நிச்சயமாய், பின் என்னை சந்தித்து தான், அனைத்து ஆன்மாக்களும் செல்லும். நிச்சயம், வரிசையில் நிற்கும். பின் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அழுதுகொண்டே, நிச்சயம், யான் வந்து பக்குவப்படுத்தி, அடுத்த பிறவியிலாவது உங்களுக்கு சொல்லித் தருகின்றேன் என்று வந்துவிட்டேன். அதனால்தான் செப்பிக் கொண்டிருக்கின்றேன். “அகதியனின் வாக்கு, வாக்குத்தான், நிச்சயம், பின் பொய்யாகாது. “


குருநாதர் :- பின் சித்தர்களை சந்தித்து தான், ஏனென்றால், நிச்சயம், நாங்கள் தவம் செய்து கொண்டே இருப்போம். நிச்சயம், பின் எங்களை மீறித்தான், நிச்சயம், பின் மேலோகம் செல்ல வேண்டும். 


சுவடி ஓதும் மைந்தன் :- (  "சித்தர்களின் அனுமதி இல்லாமல் எதுவும் நடக்காது. அவர்களை மீறி எந்த ஆன்மாவும் முன்னேற / முக்தி பெற  முடியாது. அகத்தியர் போன்ற சித்தர்கள் கணிக்கிறார்கள் — இது சரியில்லை. உனக்கு இப்போ புரியவில்லை, அடுத்த பிறவியில் தெளிவாக சொல்லி தருகிறேன். அதற்காகவே வாக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதை உணர்ந்து, செயல்பட்டு வர வேண்டும். ) 


குருநாதர் :- அப்பனே, யான் உங்களை அனைவருமே உயர்த்த. அப்பனே, யான் தயார். ஆனாலும், அப்பனே, அதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும். 


குருநாதர் :- ஆனால், அப்பனே, ஆசைகள், அப்பா, பேராசைகள், அப்பா. 


சுவடி ஓதும் மைந்தன் :- ஆனா, ஆசைகள், அப்பா, அது ஆசைகள் இருந்தாலும் பரவாயில்லை. பேராசைகள், அப்பா, 


அடியவர் :- மலை போல இருக்கு. 


குருநாதர் :-அப்பனே, நிச்சயம், அமைதியாக, தன் தன் வேலையை, பின் செய்து கொண்டே இருங்கள் அப்பனே. யான் வந்து உங்கள் இல்லத்திற்கு, பின் ஆசிகள் கொடுத்து, அனைவரும் உயர்த்தி வைப்பேன். 


சுவடி ஓதும் மைந்தன் :- உன் வேலை, நீ பாருப்பா, புரியுதுங்களா? உன் வேலை, அமைதியா பார்த்துட்டே இரு. நான் என்ன பண்ணனுமோ, உன் வீட்டுக்கு வந்து நான் பண்றேன்றார். 


=======================================

# “அன்புடன் அகத்திய மாமுனிவர் ரகசியங்கள்” 

=======================================


=======================================

# ஏன் கடந்த 20 வருடங்களாக - அகத்திய மாமுனிவரை பற்றி நாம் அறிந்துள்ளோம்?

=======================================


குருநாதர் :- அம்மையே, நிச்சயம், என்னைப் பற்றி இன்னும், அதாவது, ஒரு 20 வருடத்திற்கு முன்பே எது என்று கூட எவை என்று அறிய, அறிய, பின்னே என் கூட செல்லலாம். ஆனாலும், யாருக்குமே தெரியாது. 


=======================================

# “மக்களுக்கு புரிய வேண்டும் என்று அகத்தியன் யானே வந்துவிட்டேன்.”

=======================================


குருநாதர் :- எது என்று புரிய, புரிய, ஆனால் மக்களுக்கு புரிய வேண்டும் என்று யானே வந்துவிட்டேன். 


சுவடி ஓதும் மைந்தன் :- ஆனால், இப்ப, அகத்தியர் யாருன்னு புரிய வைக்க, நானே வந்துட்டேன். 


==========================================

# அகத்திய மாமுனிவர் கருவிகள் - யார் யார்?

===========================================


குருநாதர் :- இன்னும் யார் யார் மூலம் எதை ஏற்படுத்த வேண்டும் என்று என்னை நானே வெளிகாட்டிக் கொண்டேன் அவ்வளவுதான். ஏன்?  எதற்காக? மக்கள் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். 


சுவடி ஓதும் மைந்தன் :-  ( அப்ப, நானே என்னை வெளிகாட்ட உள்ளேன்.   அவசியம் இல்லை. அனால் எதற்காக? நீங்க நல்லா  வாழ்வதற்காக தான், நான் வந்து நிக்கிறேன். ஏன்னா, ஒன்னும் தெரியாமல் வாழ்ந்து இருக்கீங்க. கலியுகத்துல. ) 


குருநாதர் :- நிச்சயம், கலியுகத்தில் பிறந்தாலே, பின் பாவம் அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம். 


குருநாதர் :- நிச்சயம், அறிந்தும், அதனால்தான், நிச்சயம், அடியோடு இன்னும், இன்னும், நிச்சயம், வாக்குகள் பரப்பி, நிச்சயம், அதாவது, திருந்தாவில் அடித்தும் திருத்துவேன். 


குருநாதர் :- அதற்குள்ளே இன்னும் தீபம் ஏற்றுங்கள் என்று அனைத்தும் செய்துவிட்டு, 


குருநாதர் :- எதை என்று அறிய, அறிய மந்திரம் செப்பிவிடு. 


குருநாதர் :- அறிந்து, எவை என்று அறிய, அறிய, நிச்சயம், எவை என்று புரிய, புரிய. இவ் மந்திரத்தை சொன்னால், அனைத்தும் வருமாம். தாயே, உணவு கூட வராது, 


குருநாதர் :-  ஆனால் வரும், தாயே, 


குருநாதர் :- ஆனால் தாயே, பக்குவங்கள் பட வேண்டும்


குருநாதர் :- பக்குவம் படாமல், நிச்சயம், பின் தீபம் ஏற்று, மந்திரங்கள் செப்பிக்கொண்டே இருந்தால், நிச்சயம், பின் காசுகளுக்காகத்தான். 


அடியவர் :- ஐயா, மந்திரத்தால் மாங்காய் விழுமா? - என்று  நாத்திகர்கள் தானே சொல்றாங்க. அகத்தியர் சொல்றதுக்கு என்ன இருக்கு? 


குருநாதர் :- அப்பனே, நிச்சயம் விழும் அப்பா. ஆனால், அப்பனே, அவ் பக்குவங்கள் மனிதனுக்கு இல்லையே. இறைவன் மீது நம்பிக்கை இல்லாமல் தான் மந்திரங்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றான் அப்பா. 


சுவடி ஓதும் மைந்தன் :- ( நாத்திகர்கள் “மந்திரத்தால் மாங்காய் விழுமா?” என்று கேட்கிறார்கள். ஆனால் அகத்திய மாமுனிவர்  உறுதியாக “விழும்” என்று சொல்கின்றார். காரணம், மந்திரத்தின் பலன் இறைவன் மீதான நம்பிக்கையுடன் தான் நிகழும். இன்று மனிதனிடம் அந்த நம்பிக்கையும், அந்த பக்குவமும் இல்லை. பலர் மந்திரம் சொல்கிறார்கள், ஆனால் இறைவன் மீது உண்மையான நம்பிக்கை இல்லாமல் செய்கிறார்கள். உண்மையான நம்பிக்கையுடன் மந்திரம் சொன்னால், மாங்காய் நிச்சயமாக விழும். நம்பிக்கையுடன் செயல் இணைந்தால் தான் அதிசயம் நிகழும் என்பது இங்கு வலியுறுத்தப்படுகிறது. )


குருநாதர் :- அப்பனே, அறிந்து கூட, இப்பொழுது ஏன் உங்களை இங்கு அழைத்தேன்? அப்பனே.


========================================

# அனைவருக்கும் முன்னேற்றங்கள் உண்டு வாழ்க்கையில்.

========================================


========================================

# நிச்சயம் அனைவரும், அப்பனே, அனைத்தும் கிடைக்கும். 

========================================


குருநாதர் :- அப்பனே, அனைவருக்கும் முன்னேற்றங்கள் உண்டு வாழ்க்கையில். அப்பனே, நிச்சயம், அனைவரும், அப்பனே, அனைத்தும் கிடைக்கும். 


குருநாதர் :- அப்பனே, ஆனால், அப்பனே, தெரியவில்லை வாழ்வதற்கு. 


குருநாதர் :- அப்பனே, புண்ணியம் இருந்தும் செயல்பட முடியாமல் இருக்கின்றது. 


சுவடி ஓதும் மைந்தன் :-  புண்ணியம் நிறைய இருக்குது. அது ஆக்டிவேட் பண்ணல. 


குருநாதர் :- அதனால்தான், அப்பனே, நிச்சயம், யான் கூறிக் கொண்டிருக்கின்றேன்  அப்பனே. நிச்சயம், மீண்டும் சொல்கின்றேன். அகத்தியனுக்கு எவை என்று அறிய, அறிய, அனைத்தும் எவை என்று அறிய அப்பனே.  அப்பனே, யான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டாம். 


சுவடி ஓதும் மைந்தன் :- ( அகத்தினால் எல்லாமே செய்ய முடியும். நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டாம் அப்பா. அது எனக்கு  பெருமை இல்லை அப்பா. )


=============================================================

# “அகத்தியன்” - “அ + க + த் + தி + ய + ன்” - மந்திரம் இதன் உள்ளே 

=============================================================


குருநாதர் :- அதனால், அப்பனே, அதனால்தான், அப்பனே, “அ”  முதல், அப்பனே, எதை என்று அறிய, அறிய, அனைத்தும். அப்பனே, பின் கடைசியில், அப்பனே, அதில் உள்ளே, அப்பனே, பல, பின், பொன் மொழிகள் ஆகவே  இருக்கின்றது. பின், அப்பனே, அதை மந்திரங்களாகவே இருக்கின்றது. பின், அப்பனே, அதை சரியாக யார் ஒருவன் பயன்படுத்துகின்றானோ, அவன் தன் நிச்சயம், அனைத்தும் தெரிந்து கொள்வான். 


சுவடி ஓதும் மைந்தன் :-  அ , க,.... அகத்தியன், அ… ல இருந்து இன்னும் வரையும் எல்லாம் எழுத்து இருக்குது. அதுலயும் மந்திரம் இருக்குது. அதுலயே வாழ்க்கை முறை இருக்குது. எல்லா நோய்க்கும் அதுலயே மருந்து இருக்குது. அது சரியாக தெரிஞ்சுக்கொண்டவன்…


அடியவர் :- அந்த மந்திரத்தை சொல்ல சொல்லுங்க. 


குருநாதர் :- அப்பனே, நல்லவிதமாக, பின், அனைத்தும் சொல்லிக் கொடுப்பேன். பின், அப்பனே, இப்பொழுது சொல்லிக் கொடுத்தாலும், அப்பனே, நிச்சயம், அப்பனே, நீங்கள் மறந்து விடுவீர்கள். 


சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாம் சொல்லிக் கொடுக்கிறோம். இப்ப சொல்லிக் கொடுத்தாலும், மறந்துடுவோம். 


குருநாதர் :- அப்பனே, அதனால்தான் யார் யாருக்கு என்ன குறை என்று யான் ஆராய்ந்து விட்டேன் அப்பனே. மீண்டும், அப்பனே, பின் யான் கேட்டால், எந்தனுக்கு அந்த குறை, இந்த குறை என்றுதான் சொல்லிக் கொண்டிருப்பான் மனிதன்.


குருநாதர் :- அப்பனே, நிச்சயம், நீயே சொல். யார் யாருக்கு என்ன கேள்விகள் வேண்டும் என்று நீ முதலில், அப்பனே, பின் கேட்டு என்னிடத்தில் சொல். 


( அங்குள்ள ஒரு அடியவரை எழுப்பி , அவரை பிறரிடம் கேள்விகளை கேட்டு சொல்ல சொன்னார்கள்.)



அடியவர் :- பக்தியோட பார்த்தா, அகஸ்தியர் இன்னைக்கு எப்போ கண்ணுக்கு தெளிவா? 


குருநாதர் :- அப்பனே, யான் இங்கேதான் இருக்கின்றேன் அப்பனே.


சத்சங்க அடியவர்கள் :- ( சிரிப்புகள் )


அடியவர் :-  ஐயா, என்னோட வீட்டுக்கார அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. அது ஐயா, அகத்தியன் சரி பண்ணி கொடுக்கணும். 



=========================================================

# நோய் குணமாவது - ரகசியங்கள்  

=========================================================


=========================================================

# நோய் குணமாவது - உங்கள் பாவம் , புண்ணியத்தை பொறுத்தது 

=========================================================


குருநாதர் :- அப்பனே, எதுக்கு கேக்குறேன்? எதை என்று புரிய? அப்பனே, ஒன்றை சொல்கின்றேன். அப்பனே, அப்பனே, அனைவருமே வாகனம் அப்பனே, சென்று கொண்டே இருக்கின்றது. அப்பனே ஆனால், அப்பனே, அங்கு யாரும் இல்லை  அப்பனே. நிச்சயம் அப்பனே, அங்கு பழுதானால் என்ன ஆகும்?... 


குருநாதர் :-  அப்பனே நிச்சயம், ஆனால், அனைவரும் இருக்கும் இடத்தில் பழுதானால் என்ன ஆகும்?... அப்பனே, நிச்சயம், அறிந்தும் கூட, இதுதான் அப்பனே. பாவம், புண்ணியம். அப்பனே, சரியாக பல புண்ணியங்கள் சென்றிருந்தால், அனைவரும் இருக்கும் இடத்திலே பழுதாகிவிடும். சரி செய்து கொள்ளலாம் என்பேன் அப்பனே. 


சுவடி ஓதும் மைந்தன் :- (குருநாதர் ஒரு உவமையின் மூலம் வாழ்க்கையின் உண்மையை விளக்குகிறார். மனிதர்கள் அனைவரும் ஒரு வாகனத்தில் பயணிக்கிறவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அந்த வாகனம் எங்கே போகிறது, யாரும் உள்ளதா என்பதை யாரும் கவனிக்கவில்லை. அந்த வாகனம் ஒரு வெறுமையான இடத்தில் பழுதாகி விட்டால், யாரும் உதவ முடியாது. ஆனால், அது மக்கள் நிறைந்த இடத்தில் பழுதானால், சரி செய்யும் வாய்ப்பு உண்டு. எனவே புண்ணியம் அவசியம் வேண்டும். )


மற்றொரு அடியவர் :- புண்ணியம் வேண்டும் 


அடியவர் :- உண்மையை ஏத்துக்கிறார். 


குருநாதர் :- அப்பனே, அப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்று நீ விளக்குவத்துடன் கூறு?. 


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப, என்ன செய்யணும்? 


அடியவர் :- நீங்க அப்ப என்ன செய்யணும்? 


மற்றொரு அடியவர் :- புண்ணியம் செய்ய சொல்லுங்க. போதும், புண்ணியம் தான் செய்யுண்டே இருக்கணும். 


மற்றொரு அடியவர் :-   ( உங்கள் துணைவியார் அவங்க பேர்ல யாரும் எதிர்பார்க்காத இருக்கிறவங்களுக்கு போயிட்டு, நீங்க உதவி செய்ங்க. )


குருநாதர் :- அப்பனே, இதனால், அப்பனே, யாரும் இல்லாத இடத்திலிருந்து, அப்பனே, பழுதாகின்றது என்பேன்  அப்பனே.  அதனால் யான் சீர் செய்து விடுகின்றேன் சென்று. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப, யாருமே இல்லாத தனிக்காட்டில வண்டி  பழுது ஆச்சு வண்டி. அப்ப, யார் போகணும்? 


அடியவர் :- ஐயா தான்,.


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா தான், போகணும்ப்பான்னு சொல்லிட்டு பண்றோம். 

 அப்ப, நான்தான் சரிப்படுத்தணும். 


அடியவர் :- ஐயா, ஏதோ ஒரு மூலமா, 


சுவடி ஓதும் மைந்தன் :- டாக்டர் மூலமாவோ, ஏதோ மெக்கானிக்கல் மூலமாவோ, ஏதோ ஒரு வார்த்தை,  அய்யா புரியுதுங்களா?


மற்றொரு அடியவர் :- யார் மூலமாகவோ உங்களுக்கு உதவி கிடைக்கும். கிடைக்கும், 


அடியவர் :- ஐயன் மூலமா கிடைக்கணும்.


சுவடி ஓதும் மைந்தன் :- கிடைக்கும். 


சுவடி ஓதும் மைந்தன் :- நெக்ஸ்ட் கேளுங்க, ஐயா. ஐயா, 


அடியவர் :- இந்த கேஸ் போயிட்டே இருக்கு. ஒன்னும் புரியல. 


குருநாதர் :- அப்பனே, ஏற்கனவே வாகனம் பழுதடைந்து விட்டது என்பேன். அப்பனே, அப்பனே, இது பழைய வாகனம். அப்பா.


குருநாதர் :- அப்பனே, இதை யார் சரி செய்வார்கள் என்பேன். 


குருநாதர் :- அப்பனே, ஒன்று பின், அதாவது, இவை இதனை விட்டுவிட்டு புதிதாக வாங்கு என்று சொல்வார்கள். ஆனாலும், அப்பனே, இது சரியா, தவறா? 


மற்றொரு அடியவர் :- ( பல வருஷமா அந்த பிரச்சனை இருக்குதுனாக்க, அதை வித்துட்டு நீங்க நிம்மதியா இருக்குறது பெட்டர். அப்படியா? இல்ல, ஐயா, சரி பண்ணுவாரு.  அப்படித்தான் வரணும். ஐயா, ஏற்கனவே அது வண்டியே சரி பண்ண முடியாது. அந்த வண்டி, நம்ம ஒன்னும் பண்ண முடியாது. அப்ப, என்ன சொல்றாருன்னா, பழைய வண்டி, அது கரெக்ட். ரிப்பேர் பண்ண முடியாது, அப்ப, யார் பண்ண முடியும்? ஐயா தான் பண்ண முடியும். நீங்க ரிக்வெஸ்ட் கொடுங்க. ரிக்வெஸ்ட், நீங்க வைங்க. )


குருநாதர் :- அப்பனே, நிச்சயம், அப்பனே, யானும் பின் ஆட்களை அனுப்பலாம். அவர்களுக்கெல்லாம் தெரியாதப்பா, யான் தான் நிற்க வேண்டும். 


அடியவர் :- ஐயாவே, வரணும். 


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப, அந்த ரிப்பேர் பண்ண யாருக்கும் தெரியாது. சீடர் நிறைய பேர் இருக்கலாம். யாருக்குமே தெரியாது. அதை ரிப்பேர் பண்ண, அகத்தியர்  ஐயா தான், ரிப்பேர் பண்ணுவாரு. 


அடியவர் கேள்வி  :- ஐயா, சன் ( மகன் ) , தூரமா இருக்கின்றார். மாற்றல் வேற மெட்ராஸ் பார்க்கலாமா? இல்ல, அங்கேயே குஜராத்தில் இருக்கலாமா 


குருநாதர் :- அப்பனே, நீ கூறு. அப்பனே,


மற்றொரு அடியவர் :- அவங்க ரெண்டு பேருக்கும் பிரச்சனை இருக்குது. அவங்க பசங்களுக்கு அதுக்கு …


குருநாதர் :- அப்பனே இங்கு புரிதல் இல்லையப்பா. புண்ணியங்களும் இல்லையப்பா. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அங்க புரிதலும் இல்லை, புண்ணியமும் இல்லை. 


அடியவர் :- என்ன வழி இருக்கு? என்ன வழிங்க? 


குருநாதர் :- அப்பனே, புண்ணியங்கள் செய்யச் சொல்லு. அப்பனே, அப்பனே, பூஜ்ஜியத்தில் உள்ளதப்பா. 


சுவடி ஓதும் மைந்தன் :- புண்ணியம் வந்து ஜீரோ. புண்ணிய காரியம் செய்யுங்க. 


அடியவர் :- சரி, கொஞ்சம் அவன் செய்ய சொல்லணும்.


குருநாதர் :- ஆனாலும், அப்பனே, பின் சொல்வதை கேட்க மாட்டார்கள். அப்பா, 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்பா சொன்னது ஆனா சொன்னாலும் கேட்க மாட்டாங்களே. என்ன பண்றது? அப்பா, 


அடியவர் :- (நான்) புண்ணியம் செஞ்சாக்க, அவங்களுக்கு புண்ணியம் போய் சேரா இல்லைங்களா? 


குருநாதர் :- அப்பனே, இதுவரை அதற்காகத்தான் ஓடிக்கொண்டிருக்கின்றது. 


குருநாதர் :- அப்பனே கவலை இல்லை. அப்பனே, பார்த்துக் கொள்கின்றேன் என்று சொல். 


மற்றொரு அடியவர் :-  இடம் மாத்தணுமான்னு கேக்குறாங்க. 


குருநாதர் :- அப்பனே, எதற்காக இடம் மாற வேண்டும்? 


மற்றொரு அடியவர் :-  கூட இருக்கவேண்டும் என்று விருப்பப்படுறாங்க.


குருநாதர் :- அப்பனே, ஆசைகள் வேண்டாமாப்பா. விடச்சொல். செய்து கொண்டே  இருக்கின்றேன். அப்பனே, அனைத்தும் இறைவனுடைய பாரத்தை வைக்க சொல். 


அடியவர் :- அது ரொம்ப தூரமா இருக்குது. நம்மளால மறுபடியும் அங்கதான் வந்து நிக்கிறாங்க. 


குருநாதர் :- அறிந்து கூட, தாயே, நிச்சயம் எவ்வளவு பின். அதாவது, நேரங்கள் யான் சொல்லிக் கொண்டிருந்தேனே. நீ உறக்கம் கொண்டிருந்தாயா  என்ன?


==============================================

# இறைவன் பிரித்து வைத்தும் நல்லது செய்வார் 

==============================================


குருநாதர் :- தாயே. ஒன்றை சொல்கின்றேன், இறைவன் செய்வது அனைத்தும் சரியே. பின் அருகில் இருந்தால், பின் உங்களுக்கும் அவர்களுக்கும் சண்டை தான் வரும். இப்பொழுது வேண்டுமா? வேண்டாமா? 


சுவடி ஓதும் மைந்தன் :-   கரெக்ட். ( பெற்றோர்களும் , பிள்ளைகளும் ) ரெண்டு பேரும் ஒன்னா இருந்தா, சண்டைதான் தான் வரும், அப்ப இருக்கணுமா? வேணாமா? நீயே சொல் என்று கேட்கின்றார்.  சொல்லுங்க. 


அடியவர் :- அதுவே ஒரு குடுப்பனை தான். 


குருநாதர் :- அப்பனே, அதனால்தான் இறைவன் நல்லதுதான் செய்து கொண்டிருக்கின்றான். இங்கு வந்தால், அப்பனே, நிச்சயம் உங்களை மதிக்க கூட மாட்டார்கள். 


சுவடி ஓதும் மைந்தன் :-   கரெக்ட். அதனால, இறைவன் நல்லதுதான் செய்கிறார் என்றார். 


அடியவர் :-  ஐயாவோட ஆசீர்வாதம்.


குருநாதர் :- அப்பனே, அதனால் குறைகள் இல்லையப்பா. அப்பனே, எவை என்று அறிய. அப்பனே, (கேள்வி கேட்ட அடியவரை ) நீ அமர் அப்பனே. அறிந்து கூட, இதனால், அப்பனே, கவலை விடுங்கள். அப்பனே, அவர்கள் வந்தாலும், அப்பனே, நிச்சயம் அறிந்து கூட. அப்பனே, எவை என்ற உங்களுக்கு மனக்கஷ்டம் தானப்பா. இதனால், அப்பனே, நிச்சயம் யான் சரி செய்து வைக்கின்றேன் அப்பனே. 


சுவடி ஓதும் மைந்தன் :-  ( விளக்கங்கள்) 


குருநாதர் :- எவை என்ற தாயே, எழுந்து நில் சொல்லு. அனைவருக்கும், 


அடியவர் :- ( எழுந்து நின்றார்) நமக்கு என்னென்ன பிரச்சனை, என்ன ப்ராப்ளம் எது இருந்தாலும், இப்போ எல்லாத்தையுமே நம்ம அகத்தியர் கையில வந்து கால்ல விழுந்து சரணடைஞ்சிட்டோம்னா, அவர் வந்து எல்லாத்தையும் தீர்த்து வச்சிடுவாரு. நமக்கு அதனால, நம்ம எந்த டவுட்டும் நமக்கு இருக்கக்கூடாது. ஃபர்ஸ்ட், நம்ம ஃபுல்லா, அவரை கம்ப்ளீட்டா நம்பனும். பாதத்தை சரணடைஞ்சிடனும். அவர், ஐயா, நீங்க தான் எனக்கு விமோசனம் கொடுக்கணும். நீங்க தான் என்னை பார்த்துக்கணும். எனக்கு ஒண்ணுமே தெரியாது, அப்படின்னு சொல்லிட்டு, நம்ம சரணடைஞ்சோம். 


========================================

# ஒன்றும் தெரியாததால்  தான் பிறப்பு 

========================================


குருநாதர் :- தாயே, ஒன்றும் தெரியாத தான் பிறந்தார்கள் என்பேன் இவர்கள். 


சுவடி ஓதும் மைந்தன் :-   ஆனா, எல்லாருமே ஒன்னும் தெரியாத தான் பிறந்தீர்கள். 


========================================

# ஒன்றும் தெரியாததால்  தான் இறப்பு 

========================================


குருநாதர் :- ஒன்றும் தெரியாதது போலத்தான் செல்வீர்கள். 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஒண்ணுமே தெரியாமல் தான் போவீர்கள். 


========================================

# அனைத்தும் இறைவன் நடத்தும் நாடகமே  என்று புரிந்தாலே போதும்.

========================================


குருநாதர் :- அறிந்து கூட, நடுவில் அனைத்தும் இறைவன் ஏற்படுத்தியதுதான். அதனால், நிச்சயம்.


குருநாதர் :- இறைவன் ஏற்படுத்தியது, இறைவனே வாங்கிக் கொள்வான். 


குருநாதர் :- அப்பனே, நிச்சயம். அதனால், அப்பனே, நிச்சயம் நீங்கள் சரியான, அதாவது கடமையை செய்து கொண்டே இருங்கள். போதுமானது. 


அடியவர் :- நம்ம பக்குவப்படுறதுக்கு, அவர் பிரச்சனை. அவர் எல்லாத்தையும் தீர்த்து வைப்பாரு. 


சுவடி ஓதும் மைந்தன் :-   அப்ப, அவரே எடுத்துப்பாரு. அப்ப, நாடகம் முடிஞ்சுச்சு. நாடகம் முடிஞ்சிருச்சு. வேஷம் கடைஞ்சிருச்சு. இதுதான், 


குருநாதர் :- தாயே, நிச்சயம் அறிந்து கூட. ஆனால், இதை புரிந்து கொண்டாலே போதுமானது. 


========================================

#  நோயும் - இறைவன் தான் ஏற்படுத்துகிறார்.

========================================


குருநாதர் :-  எதை என்று புரிய  நோயும், இறைவன் தான் ஏற்படுத்துகின்றான். 


================

# எச்சரிக்கை 

================


குருநாதர் :- ஏனென்றால், இறைவன் விருப்பம் போல் நீங்கள் இல்லை என்றால், அனைத்தும் ஏற்படுத்துவான். 


சுவடி ஓதும் மைந்தன் :-  இறைவன் விரும்பியது போல் நீங்கள் இல்லை என்றால், அனைத்தும், எல்லாத்தையும் ஏற்படுத்துவார். 


குருநாதர் :- பின், அனைத்தும் என்பது இங்கு தீயவை சொன்னேன் யான்.


சுவடி ஓதும் மைந்தன் :- இறைவன் விருப்பப்படி நீங்கள் இல்லையென்றால், தீயவை ஏற்படுத்துவார். எல்லாம் நல்லவை ஏற்படுத்த மாட்டாரு. 


=================================

# விதியை மாற்ற என்ன வழி?

=================================


குருநாதர் :- நீங்களும் கேட்கலாம். பின், அப்போது என்ன செய்ய வேண்டும் என்று, பின் முதலே நான் சொல்லிவிட்டேன். விதியை மாற்ற என்ன வழி என்று, 


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப நீங்க கேட்கலாம். நான் எப்படி வாழ்றது என்று, நான் வந்து முதல்லயே சொல்லிட்டேன். ஐயா, புரியுதுங்களா? 


அடியவர் :- சரணாகதி, சரணாகதி. 


சுவடி ஓதும் மைந்தன் :- இதெல்லாம் சொன்னாருல, இப்படித்தான் இருக்கணும். நல்ல இடத்து மூலமா, புண்ணியத்தை ஆக்டிவேட் பண்ணுவார். 


(இதற்கு முன்பு சொன்ன வாக்கு சுருக்கம் கீழே, உங்கள் பார்வைக்கு. கெட்டியாக பிடித்து கொள்ளுங்கள்)


=================================

# விதியை மாற்றும் வழி

=================================


=================================================

(விதியை மாற்ற என்ன வழி? இறைவன் உங்களிடம் விரும்புவது என்ன ?

  1. தாய் தந்தையை  மதித்து , காலடியில் விழுந்து ஆசி வாங்க வேண்டும்.

  2. விதியை மாற்ற -   பொறாமை கொள்ள கூடாது

  3. விதியை மாற்ற -   கோபப்படக்கூடாது

  4. விதியை மாற்ற -   பிறரை தன்னைப்போல் எண்ண வேண்டும்.

  5. விதியை மாற்ற -   கருணை மனம் படைத்திருக்க வேண்டும். 

  6. விதியை மாற்ற -   உண்மையே  பேச வேண்டும்.

  7. விதியை மாற்ற -   மற்ற ஜீவராசிகள் கூட, நிச்சயம், தன் பின் இனமே

  8. விதியை மாற்ற -   இறைவா நீயே அனைத்தும் 

  9. தன்னைத்தானே அறிந்தால், பின் தானாக லட்சுமி தேவி வந்துவிடுவாள். 

)

=================================================



குருநாதர் :- தாயே, தன் கடமையை செய்யுங்கள் என்று சொல்லிவிட்டார்கள். உன் கடமை என்ன? 


சுவடி ஓதும் மைந்தன் :-  உன் கடமை என்னன்னு கேக்குறாரு. 


குருநாதர் :- தாயே, கடமை எல்லாம் முடிந்துவிட்டது. அமைதியா இரு. 


குருநாதர் :- தாயே, பிள்ளைகள் தான் உனக்கு கடமை செய்ய வேண்டும். அதை தவறிவிட்டார்கள். நிச்சயம் கஷ்டங்கள் தான் வரும்னு சொல்லிவிட்டேன். 


சுவடி ஓதும் மைந்தன் :-  உங்களோட கடமை முடிஞ்சு போச்சு. அப்ப பிள்ளைகளுக்கு வந்து ஒரு கடமை இருக்குது. என்ன கடமை? உங்களை மதிக்கணும். மதிக்கணும். அந்த கடமையை அவங்க செய்யல. அப்ப என்ன ஆகும்? அவங்களுக்கு பிரச்சனை. அவங்களுக்கு தான். 


அடியவர் :- இப்ப எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை. 


சுவடி ஓதும் மைந்தன் :-  உங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை. நீங்க வாய் பேசாம, இதுதான் உண்மை. 


அடியவர் :-  கரெக்ட், கரெக்ட். 


குருநாதர் :- தாயே, இதை மட்டும் சரியாக சொல்கின்றாய். 


சுவடி ஓதும் மைந்தன் :-  இது மட்டும் கரெக்ட், கரெக்ட்ன்னு கரெக்டா சொல்றீங்க. 


========================================

# உங்களுடைய பிரச்சனைகள் நீங்கள் சொல்லித்தான் இவ் அகத்தியனுக்கு தெரிய வேண்டுமா? 

=========================================


குருநாதர் :- தாயே, இதனால்தான் தானே பிரச்சனை. நிச்சயம், நிச்சயம் எவை என்று புரிய புரிய. அதனால், அனைவருமே நிச்சயம் சில பாவங்கள். நிச்சயம் யானே, அதாவது நீங்கள் பின் சொல்ல தேவையில்லை. நிச்சயம், பின் உங்களுடைய பிரச்சனைகள், பின் சொல்லித்தான் இவ் அகத்தியனுக்கு தெரிய வேண்டுமா? என்ன, 


========================================

#  நீங்கள் சொல்லித்தான்  உங்களுடைய பிரச்சனைகள் யான் தெரிந்து கொண்டால், யான் அகத்தியனே இல்லை. 

=========================================


குருநாதர் :- தாயே, அப்படி உங்களிடம் இருந்தே யான் தெரிந்து கொண்டால், யான் அகத்தியனே  இல்லை. 


(சில உரையாடல்கள் ) 


குருநாதர் :- தாயே, இப்பொழுதுதான் அவன் பேசினான். பின்பு, இப்பொழுது பாரு, என்ன பேசுகின்றான் என்று. 


குருநாதர் :- அப்பனே, நிச்சயம் யான் பார்த்துக் கொள்கின்றேன். அப்பனே, 


குருநாதர் :- அதனால் நிச்சயம் அனைவருக்குமே என் துன்பம் இருக்கின்றது. அவை நிச்சயம் சிறு சிறிதாக யானை கழித்து விடுவேன். 


குருநாதர் :- தாயே, இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது மட்டும் என்ன? 


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப, நீங்கள் என்ன செய்ய வேண்டியது என்னன்னு கேக்குறாரு? 


அடியவர் :-  அவரை நம்பனும். அவர் மேல நம்பிக்கை வைக்கணும். ஃபுல் நம்பிக்கை வைக்கணும். 


அடியவர் 2 :- புண்ணியத்தை பண்ணிட்டு போயிட்டே இருக்கணும். புண்ணியமும் 

பண்ணனும். 


====================================

# அன்பை வையுங்கள். போதுமானது. 

====================================


குருநாதர் :- அப்பனே, நிச்சயம். அப்பனே, பின் அன்பை வையுங்கள். போதுமானது. 


அடியவர் :-  ஓ..


அடியவர் 2 :-  அன்பே சிவம். 


குருநாதர் :- தாயே, நிச்சயம் அவள் அன்பு வைத்து விட்டால், பின் நிச்சயம் புண்ணியங்கள் எப்படி செய்வது என்று யானை அழைத்துச் சென்று விடுவேன். 


குருநாதர் :- ஆனால், தாயே, இதை கூட செய்வதில்லை. 


குருநாதர் :- இதை செய்யாதவன் புண்ணியம் செய்யப் போகின்றானா? தாயே, கூறு. 


====================================

# அன்பை வையுங்கள் - உங்களுக்காக அனைத்தும் யான் செய்வேன்.  

====================================


குருநாதர் :- தாயே, நிச்சயம் அன்புடன் என்னிடத்தில் வந்து விட்டால், உங்களுக்காக அனைத்தும் யான் செய்வேன். 


குருநாதர் :- தாயே, மந்திரம் வேண்டாம், தந்திரம் வேண்டாம். நிச்சயம், பின் தீபங்கள் வேண்டாம். நிச்சயம், எவை என்று எரிய. தாயே, எவையும் வேண்டாம். யான் கையை பிடித்து நகர்த்துவேன். 


சுவடி ஓதும் மைந்தன் :- மந்திரம் சொல்ல தேவையில்லை. தந்திரம் தேவையில்லை. மந்திரம் அப்புறம் தீபம் யாத்திரை தேவையில்லை. எதுவுமே பண்ணாதீங்க. அன்பு வையுங்க. நான் வந்து அழகா கைய பிடிச்சு. தீர்த்து ….


அடியவர் :- அந்த அன்பு தான் எப்படி வைக்கிறதுன்னு கொஞ்சம் சொல்லுங்க. 


குருநாதர் :- தாயே, நிச்சயம் உன் மகன் மீது ஏன் நீ அன்பு வைத்திருக்கின்றாய்? எப்படி வந்தது? எப்படி வைத்தாய்? 


சுவடி ஓதும் மைந்தன் :-  உன் மகன் மீது எப்படி அன்பு வந்தது? எப்படி வைத்தாய்? எதற்காக வைத்தாய்ன்னு கேக்குறாருமா? 


அடியவர் :-  அது தானே வந்தது. என்ன பண்றது? 


குருநாதர் :- தாயே, நிச்சயம் பின் அகத்தினே என்று சொல்லிவிட்டால், அன்போடு யானும் தானாகவே, அதாவது நிச்சயம் தானாவே வந்துவிடும். இவ் அகத்தியன்  அருகிலே இருப்பான். 



குருநாதர் :- தாயே, எவை என்று அறியறிய? எவை என்று பிரிய? தாயே, நிச்சயம் நீங்கள் எல்லாம் புழுவாகவும், நிச்சயம் பின் மரங்களாகவும், நிச்சயம் பேயாகவும், நிச்சயம் பல பல வழியில் கூட, பின் நிச்சயம் அனுபவம் பட்டு பட்டு , நிச்சயம் வந்திருக்கின்றீர்கள். இதுவாவது கடை பிறப்பு  ஆகட்டுமே.


குருநாதர் :- தாயே, நிச்சயம் பல பிறவிகள் கடந்து, கடந்து கஷ்டங்களை அனுபவித்து, அனுபவித்து வந்தவர்களுக்கு மட்டுமே இவ் அகதியானின் ஆசியும் அருளும் கிடைக்குமே. தவிர, மற்றவர்கள் எல்லாம் கிடைக்காது. சொன்னாலும் வீண். 



குருநாதர் :- நிச்சயம், பின் கஷ்டங்கள் படவில்லை. இல்லை என்றாலும், அகத்தினும் பின் வணங்குவதும் வீண். 



(அன்புடன் அகத்திய மாமுனிவர் பெங்களூர்  சத்சங்கம் - தொடரும் …. )


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!


No comments:

Post a Comment