“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Tuesday, November 18, 2025

சித்தர்கள் ஆட்சி - 511 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் பெங்களூர் சத்சங்கம் - 12.November.2024 - பகுதி 2

 இறைவா நீயே அனைத்தும்.

இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.





அன்புடன் அகத்திய மாமுனிவர் பெங்களூர்  சத்சங்கம் - 12.November.2024 - பகுதி 2


ஆதி முதல்வனை மனதில் எண்ணி செப்புகின்றேன், அகத்தியன். 


( இவ் தொடர் வாக்கின் பகுதி 2 ஆரம்பம் )


========================================================

# அன்னை மகாலட்சுமியின் மறு பெயர் —  நோய்

========================================================


குருநாதர் :-  அப்பனே, யான் ஒன்றை, அப்பனே, ஏனைய வாக்குகளில்  கூட, யான் தெரிவித்துவிட்டேன். மீண்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்வதற்கு, உங்களுக்கு சொல்கின்றேன் அப்பனே.  


“““““““ மகாலட்சுமியின் மறு பெயர், அப்பனே, நோய் என்பேன். ”””””” 


சுவடி ஓதும் மைந்தன் :-  பணம் வந்தா, நோய் வந்துரும். மகாலட்சுமியின் மறு பெயர், நோய். பணம் நிறைய வந்தா, நோய் வரும், நோய் வரும், கண்டிப்பாக. 


========================================================

# பணத்தை கொடுத்து, உங்களிடத்தில்  விளையாடுவான் இறைவன். 

========================================================


குருநாதர் :-  ஏன், எதற்கு என்றால், பணத்தை கொடுத்து, உங்களிடத்தில்  விளையாடுவான் இறைவன். 


சுவடி ஓதும் மைந்தன் :- உங்க கையில பணத்தை கொடுத்து தான், விளையாடுவாங்களாம் இறைவன், அய்யா புரியுதுங்களா? 



குருநாதர் :-  ஆனால், அனைத்தும் போய்விட்டது என்றால், என்னுடைய பணம் என்பான். இதுதான் முட்டாள்தனம். மனிதனின் முட்டாள்தனம், எவ்வளவு கீழாக இருக்கின்றான் என்று பார். 

சுவடி ஓதும் மைந்தன் :- ( இறைவன் மனிதனிடம் பணம் கொடுத்து விளையாடுவார். ஆனால், மனிதன் எல்லாவற்றையும் இழந்த போதும் "என்னுடைய பணம்" என்று பிடித்துக்கொள்வது முட்டாள்தனம். இது மனிதனின் கீழான மனநிலையை வெளிப்படுத்துகிறது. உண்மையில், இறைவன் மனிதனின் அகந்தையை சோதிக்கிறார்; மனிதன் பணத்தை தன் சொத்தாக நினைக்கிறான் என்பது தான் அவன் தவறு.)


குருநாதர் :- அப்பனே, அவை மட்டுமில்லை. அப்பனே, மீண்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் அப்பனே. ஏனென்றால், இடையிடையே இவையெல்லாம் சொன்னால்தான் அப்பனே. 


குருநாதர் :- அப்பனே, உடம்பும் உங்களுக்கு சொந்தமில்லை. உயிர் கூட சொந்தமில்லை. அப்பொழுது, அனைத்தும் பின் எங்களுக்கு சொந்தம் என்று, நீங்கள் எவ்வாறு அப்பனே முடிவு கட்டியிருக்கிறீர்கள் என்பது, என் பின் தெரிய வேண்டும்? அப்பனே, யாம் உணர்வோம். ஆனால், நீங்கள் சொல்லுங்கள்?



சுவடி ஓதும் மைந்தன் :-  அய்யா புரியுதுங்களா? 


குருநாதர் :- அப்பனே, அறிந்து கூட, அப்பனே, எதை என்று அறிய, அறிய, மனதை கட்டுக்கொண்டு கொண்டு வந்துவிட்டால், அப்பனே, நிச்சயம், பின் இறைவனுக்கு ஏதப்பா வேலை? 


சுவடி ஓதும் மைந்தன் :-  மனதை நீங்க கண்ட்ரோல் பண்ணீங்கன்னா, இறைவனுக்கு வேலை இல்லை என்று சொல்கின்றார். 


குருநாதர் :-  அப்பனே, திருடன் திருந்திவிட்டால், அப்பனே, காவலாளிக்கு ஏதப்பா வேலை? அப்பனே, ஏன் திருடன் திருந்தவில்லை? நீ கூற வேண்டும், அப்பனே, விளக்கத்தை? 


சுவடி ஓதும் மைந்தன் :- ( திருடன் திருந்திவிட்டால் காவலருக்கு வேலை இல்லாதது போல, மனிதன் தன் மனதை அடக்கி விட்டால் இறைவனுக்கும் வேலை இருக்காது. ஏனெனில், மனதை கட்டுப்படுத்தியவனுக்கு பிறவிகள் தேவையில்லை. நல்லது, தீயது என்ன என்பதை தெளிவாக உணர முடியும். )


குருநாதர் :-  அப்பனே, நிச்சயம், மனதை அப்ப, நிச்சயம், கட்டிவிட்டால், 


குருநாதர் :- அப்பனே, பிறப்பு என்பதே இல்லையப்பா. அப்பனே, நிச்சயம், இவைதன் பின் அறிவியல் வழியாகவும் , வேதியியல் வழியாகவும் , நிச்சயம், கணக்கியல் வழியாகவும் இன்னும், அப்பனே விளக்குகின்றேன் அப்பனே தெளிவாக.  ஆனால், திருத்தலத்தில் மட்டுமே. ஏனென்றால், அங்கங்கு இருக்கும் சக்தியை வைத்து தான், அப்பனே, யாங்கள் வந்து வாக்கை செப்ப முடியுமப்பா. 


குருநாதர் :- அதனால, அப்பனே??


சுவடி ஓதும் மைந்தன் :- கொஸ்டின் மார்க் போட்டுவிட்டார், சொல்லுவோம். அதனால, அப்பனேன்னு சொல்லிட்டு, கொஸ்டின் மார்க் வந்துச்சு. அதனால, ஒரு என்ன சொல்றாரு, 


அடியவர் :- அப்படின்னா, வந்து இந்த இந்த சிருஷ்டின்றது, வந்து இந்த வேறுபாடு இருக்கிறதுனாலதான், நான் வந்து நல்லது கெட்டதுன்றதுனாலதான் நடக்கிறது. இல்லைன்னா, நடக்காது, அப்படின்றதுதான் புரியறது. ஆமா, 



குருநாதர் :- அப்பனே, அறிந்து கூட, இதனால் அப்பனே, நிச்சயம், மனதிற்கு பல விஷயங்கள் தேவை அப்பா. இதனால்தான், அப்பனே, பாவங்கள் சேர்ந்து கொண்டே இருக்கின்றது. அப்பனே, உண்மையா? 


சுவடி ஓதும் மைந்தன் :- உண்மைதான், மனதிற்கு பல விஷயங்கள் தேவை. அதற்காகத்தான், பாவங்கள் சேர்ந்து கொண்டே இருக்கின்றது. 


========================================================

# உங்களுக்கு தானாக புண்ணியம் சேரும் ரகசியம் 

========================================================


குருநாதர் :-  அப்பனே, மனதிற்கு ஏது தேவையில்லை என்றால், அப்பனே, புண்ணியம் தான் சேருமாப்பா. 


சுவடி ஓதும் மைந்தன் :- மனசுக்கு வந்து, எதுவும் தேவையில்லாத போது, புண்ணியம் சேர்ந்தது. 


குருநாதர் :-  அப்பனே, இதனால், நிச்சயம், நீங்கள் சொல்ல வேண்டும். அப்பனே, மனதை எவ்வாறு, நிச்சயம், பின் கட்டுக்குள் வரவேண்டும்? 


சுவடி ஓதும் மைந்தன் :-  நீங்க யாராவது சொல்லுப்பா? மனசு இப்ப வந்து கட்டுக்குள் வரவேண்டும். நீங்க யாராவது சொல்லலாம்னு சொல்லுங்க. 


அடியவர் :- இன்பமோ, துன்பமோ, ஒண்ணுமே தெரியல. இவ்வளவு வெறும் அந்த உடலை வச்சுதான், அந்த இன்பமோ, துன்பமோ, அதுல விளையாடுது. 


குருநாதர் :- அப்பனே, அறிந்து கூட, இவை தெளிவான பதில் இல்லை. 


அடியவர் :- சரணாகதி.


குருநாதர் :- அம்மையே, சரணாகதி கூட ஏன் அடைகின்றாய்? மனதை, மனதை கட்டுப்படுத்தி விட்டால், 


அடியவர் :- …………..



========================================================

# எப்போது உங்களால் இறைவன் சந்தோஷம் அடைவார் ?

========================================================


குருநாதர் :-  அம்மையே, அப்பனே, அனைவருக்கும் ஒன்றை சொல்கின்றேன். மனதை கட்டுப்படுத்தி விட்டால், நிச்சயம், இறைவன் நேரில் வந்தாலும், யான் இறைவன் என்று சொன்னாலும், உந்தனுக்கு ஏதப்பா வேலை? நீ சென்று விடு  என்று நீங்கள் சொல்லிவிடுகிறீர்கள் அப்பனே, 



சுவடி ஓதும் மைந்தன் :-   ( ஒருவன் தன் மனதை முழுமையாக கட்டுப்படுத்திவிட்டால், இறைவன் நேரில் வந்து “நான் தான் இறைவன்” என்று சொன்னாலும், அவன் அதில் ஈடுபட மாட்டான். “நீ போ, உன் வேலை பார்த்துக்கொள்; என் வேலை நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று சொல்வான். இதுவே மன அடக்கத்தின் உச்ச நிலை — எந்த வெளிப்பாடுகளும் அவனை குலைக்க முடியாது.) 



குருநாதர் :- அப்பனே. அப்பொழுதுதான் இறைவனுக்கு சந்தோஷம். அப்பா, நாம் படைத்த படைப்பு இப்படியா என்று, ஆனால் உலகத்தில் யாருக்கும் இப்படி இல்லையப்பா. 


சுவடி ஓதும் மைந்தன் :-  இறைவன் நல்லது பண்ண, துடிச்சுட்டே இருக்கிறார். 


அடியவர் : ஆனால்,  உங்களுக்கு முழுமை அடைஞ்சிட்டா, மனம் கட்டுப்பாடு ஆயிடும். 


குருநாதர் :- அம்மையே, நிச்சயம், (மனம்) முழுமை அடைந்து விட்டாலும், பிறவிகள் வந்து கொண்டே இருக்கும். 


சுவடி ஓதும் மைந்தன் :-   முழுமை அடைந்து விட்டாலும், பிறவி , புரியுதுங்களா? 


குருநாதர் :- அம்மையே, உன் எண்ணங்கள் முழுமை அடைந்து விட்டது என்று எண்ணிக்கொள். ஆனாலும், பின் இதுவே நடக்கட்டும், இதுவே நடக்கட்டும். இன்னும் அனுபவிக்க வேண்டும். இன்னும் பிறவில் கூட வேண்டியதுதான் நீ கேட்பாய்?. 


சுவடி ஓதும் மைந்தன் :-  நிறைவு அடைந்து விட்டால், எல்லா ஆசைகளும் நிறைந்து, என்ன பண்ணுவீங்க? இன்னும் கொஞ்ச நாள் சூப்பரா இருக்குதுப்பா. லைஃப் இன்னும் கொடுப்பா, இன்னும் கொடுப்பான்னு சொல்லுவீங்க.


அடியவர் :- இப்படியே கண்டினியூ ஆட்டும்பா. 


குருநாதர் :- ஆனால் துன்பத்தை கொடுத்துவிட்டால், போதுமான சாமி என்று சொல்லிவிடுவீர்கள். 


சுவடி ஓதும் மைந்தன் :- உண்மை, ஆனால் ஒரு துன்பத்தை எடுத்து வந்து வச்சாருன்னா, எப்பா, இந்த வாழ்க்கை புரியுதுங்களா? போதும்.


குருநாதர் :- அப்பனே, அம்மைகளை நல்விதமாக, இறைவன் உங்களுக்கு சேவை செய்து கொண்டே தான் இருக்கின்றான். ஆனால், நீங்கள் தான் அதை உணரவே இல்லை. 



சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப, இறைவன் உங்களுக்காக சேவை செஞ்சு கொண்டேதான் இருக்கின்றார்.  ஆனால் நீங்கள் தான் உணரவில்லை. 


==========================================

# இறைவா நீயே அனைத்தும் - அதி ரகசியம் 

==========================================


குருநாதர் :- பின் ஒன்று சொல்லுங்களேன், நிச்சயம், அனைத்தும் இறைவன் செயலே என்று, அப்பொழுது இறைவனும் சந்தோஷப்படுவான். 


சுவடி ஓதும் மைந்தன் :- ( அனைத்தும் இறைவனின் செயலாகவே பார்க்க வேண்டும். “அனைத்தும் நீ” என்று உணர்ந்து, எதையும் தனிப்பட்டதாக எண்ணாமல், இறைவனின் லீலையாக ஏற்றுக்கொள்வது தான் உண்மையான பக்குவம். இப்படியான மனநிலையை அடைந்தவனைக் கண்டு இறைவன் சந்தோஷப்படுகிறார். ) 


அடியவர் :- சர்வம் சிவார்ப்பணம் 


========================================================

# இறைவன், நீங்கள் கேட்டாலும், கொடுக்கப் போவதில்லை

========================================================


குருநாதர் :- அப்பனே. இதனால், அப்பனே, பின் இறைவன், நீங்கள் கேட்டாலும், கொடுக்கப் போவதில்லை. அப்பொழுது ஏன், இறைவனிடத்தில் நீங்கள் கேட்டுக் கொண்டு, கேட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்? 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப, இறைவன், நீங்க கேட்டாலும், கொடுக்க போறதில்லை. அப்ப, இறைவன் கிட்ட , நீங்க ஏன் கேக்குறீங்க? 


அடியவர் :- கேட்டா, சாமி, அழுவுற குழந்தைக்கு, சாமி, பால் குடிக்குதே. 


குருநாதர் :-  அறிந்து கூட, படைத்தவனுக்கு தெரியாதாப்பா? அப்பனே, உன் பிள்ளைக்கு எப்பொழுது பசி இருக்கும் என்பது, உனக்கு தெரியாதாப்பா? 


அடியவர் :- சாமி, அம்மாவுக்கு எல்லா குழந்தையும் ஒன்னுதான். ஆனா, அழுவுற குழந்தைக்கு, சாமி, பால் கொடுக்குது. 


குருநாதர் :- அப்பனே, எதை என்று அறிய, அறிய. அப்பனே, எதுவோ கடித்துவிட்டது. அப்பொழுது கூட, அழுகின்றது. அப்பொழுது, நீ பின் பாலை பின் கொடுப்பாயா அப்பனே?


சுவடி ஓதும் மைந்தன் :- ( ஒரு குழந்தை ஏதோ கடித்து விட்டது. அழுகிறது. ஆனால், அந்த அழுகை உண்மையில் பசியால் வந்ததா, வேறொரு காரணத்தால் வந்ததா என்பதை அறியாமல், பசிக்காக கொடுக்கும் பாலை கொடுக்கலாமா? இதுபோல், வாழ்க்கையில் உண்மையான காரணத்தை அறிந்து செயல்பட வேண்டும். )


குருநாதர் :- அப்பனே, அதை தெரியாமல், அப்பனே, நிச்சயம், பின் எவை என்று கூற, குழந்தை இறந்துவிடும் அப்பா. 


சுவடி ஓதும் மைந்தன் :- ( ஒரு குழந்தை அழுவதற்கான உண்மையான காரணத்தை அறியாமல், "பசிக்குது" என்று பால் கொடுத்தால், அது தவறான தீர்வாகி, குழந்தையின் உயிரையே இழக்கச் செய்யலாம். இதுபோல், வாழ்க்கையிலும் நிகழ்வுகளுக்கு பின்னால் உள்ள உண்மையான காரணங்களை புரிந்து செயல்பட வேண்டும். தவறான புரிதல், நல்ல நோக்கத்துடன் செய்தாலும், தீங்கு விளைவிக்கலாம். சரியாக புரிந்து செயல்படுவதே ஞானம். )


குருநாதர் :-  அப்பனே, அதனால்தான் பக்குவங்கள் பட வேண்டும். அப்பனே, எப்படி அழுதால், அப்பனே, எப்படி இருக்கும் என்பதெல்லாம், தாய்க்கு தெரியுமப்பா. உந்தனுக்கு தெரியாதப்பா, நீ என்ன, பத்து மாசம் சுமந்தாயா? என்ன 


அடியவர்கள் :- ( சிரிப்பு அலைகள் )


சுவடி ஓதும் மைந்தன் :- ( உண்மை. அப்ப, ஒரு தாய்க்கு தெரியும், சார். எப்படி அழுதால், எப்படி இருந்தால், எதுக்கு அவங்களுக்கு தெரியும்ன்றாரு. அப்ப, நீ பத்து மாசம் சுமக்கவில்லை  அப்பா, அதை விட்டுவிடு அப்பா என்று சொல்கின்றார் அய்யா. ) 


குருநாதர் :-  அப்பனே, அறிந்து கூட, இதனால், அப்பனே, கேளுங்கள். அப்பனே, 


அடியவர் :-  வேலைக்கு நம்ம ரிசல்ட் எதிர்பார்க்கிறதுக்கு ஆசை. 


குருநாதர் :- அப்பனே, நிச்சயம், அப்பனே, எவை என்று அறிய அறிய . அப்பனே, தேர்வை எழுதுகின்றாய். அப்பனே, ஆனாலும், அப்பனே, பின் நிச்சயம், இவ்வளவுதான் வரவேண்டும் என்று நீ எண்ணுகின்றாயா? என்ன 



வரணும்னு எண்ணுகின்றாயா? இல்ல, இப்ப, தேர்வு எழுதுற, நீங்க வந்து எக்ஸாம் எழுதுறீங்க. வந்து மார்க், எனக்கு 50 தான் வரணும், 60 தான் வரணும், 70 தான் வரணும்னு எண்ணுகின்றாயா? அப்பனே, அப்படி இருந்தாலும், நீ நினைத்தபடி தான் வருகின்றதா? என்ன, 


குருநாதர் :- அப்பனே, அப்படி இருந்தாலும், நீ நினைத்தபடி தான் வருகின்றதா? என்ன அப்பனே ?


அடியவர் :-  ஆபீஸ் வேலை பண்ணாலும் , சேலரி எவ்வளவுதான் வரும்னு எதிர்பார்க்கிற ஆசை. 


குருநாதர் :-  அப்பனே, அறிந்து கூட, அப்பனே, கடமை செய் என்று, அப்பனே, ஏற்கனவே சொல்லிவிட்டார்கள். அப்பா, 


சுவடி ஓதும் மைந்தன் :-  கடமையை செய். பலனை எதிர்பார்க்காதே. 


குருநாதர் :- அப்பனே, நிச்சயம், அப்பனே, நடத்த வைப்பதும், அப்பனே, பின் நடக்க வைப்பதும், அப்பனே, இன்னும், அப்பனே, அனைத்தும் கொடுப்பதும், அப்பனே, பின் அவனுடைய செயலாப்பா. 


சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லாமே அவனுடைய செயல். 



குருநாதர் :- அப்பனே, நிச்சயம், அதாவது ₹10000 உந்தனுக்கு தருகின்றார்கள் என்பேன் அப்பனே.  நீ தலை கீழே நில். எந்தனுக்கு ₹20000 வேண்டும், ₹20000 வேண்டும் என்று, அப்பனே, மரியாதையுடன் உன்னை (வேலையை விட்டு ) அனுப்பி விடுவார்கள். அப்பா.


அடியவர்கள் :- ( சிரிப்பு )


சுவடி ஓதும் மைந்தன் :-  ( ஒருவர் ₹10000 சம்பளத்தில் வேலை செய்கிறார். ஆனால் அவர் “தலைகீழாக நின்று, ₹20000 கொடு” என்று கோரினால், முதலாளி அதற்கு பதிலாக, மரியாதையுடன், அவர் செய்ய வேண்டிய பணியைச் செய்து, அமைதியாக வீட்டுக்கு அனுப்பி விடுவார். ) 


========================================================

# தேவையில்லாத கேட்டுக்கொண்டிருந்தால் - இறைவன் மரியாதையுடன் கஷ்டத்தை கொடுப்பார்

========================================================


குருநாதர் :- அதே போல தான், அப்பா, பின் தேவையில்லாத இறைவனை, பின் கேட்டுக்கொண்டிருந்தால், நிச்சயம், மரியாதையுடன், அப்பனே, இறைவன், அப்பனே, கஷ்டத்தை கொடுப்பான் அப்பா. 


சுவடி ஓதும் மைந்தன் :- கஷ்டத்தை கொடுப்பாரு. தேவையில்லாத எல்லாம் இறைவன் கையில கேட்டிருந்தால், என்ன சொல்லுவாரு? கஷ்டம், கஷ்டத்தை தான் கொடுப்பாரு. 


குருநாதர் :-  ஏனென்றால், அப்பனே, நீ உணர்ந்து விடுவாய் என்று. அப்பனே, இப்பொழுது கேட்டாயே பணியில் அப்பனே.  அதாவது பின் ₹10000 (உனக்கு) சம்பளம், அதற்கு தகுந்தார் போல், அப்பனே, நிச்சயம், பின் அதாவது அதிகம் கேட்டாலும், அப்பனே, ஏன் அதிகமாக கொடுப்பதில்லை உந்தனுக்கு? 


சுவடி ஓதும் மைந்தன் :- ( ஒரு ₹10000 தான் உங்களுக்கு சம்பளம் அந்த பொசிஷன்ல இருக்கின்றீர்கள் . ஏன் உங்களுக்கு ₹20000 அல்லது  ₹30000 சம்பளம் கொடுக்க மாட்டார்கள்?  )


குருநாதர் :- அப்பனே, உந்தன் பக்குவத்திற்கு ஏற்பத்தான் கொடுப்பார்கள். அப்பனே, புரிகின்றதா? 


சுவடி ஓதும் மைந்தன் :- ( ஒருவர் செய்யும் வேலை மற்றும் அவர் உழைக்கும் முறையைப் பார்த்து, அவருக்குத் தகுந்த மரியாதை, சம்பளம். )


========================================================

#  இறைவன் உங்களுக்கு சம்பளம் கொடுக்கும் உண்மைகள்

=======================================================


குருநாதர் :- அப்பனே, மனிதன் இப்படி பார்த்து கொடுக்கின்றான் என்றால், இறைவன் எவ்வளவு பெரியவன் அப்பா? 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஒரு சாதாரண மனிதனே, உங்கள் நிலைமை, கஷ்டத்தை பார்த்து, உங்களுடைய அறிவு பார்த்து, உங்களுடைய திறமை பார்த்து, சம்பளம் கொடுக்கிறார் என்றால் , இறைவன் எவ்வளவு பெரியவர்? அவர் எப்படி கொடுப்பார்? 


குருநாதர் :- இதனால், அப்பனே, பின் நல் மூலமாக, அப்பனே, பின் எங்களிடத்தில், அதாவது, அப்பனே, பின் வந்துவிட்டால், அறிவை பயன்படுத்துங்கள், போதுமானது என்று அப்பனே.  மற்றவையெல்லாம் தானாவே, நாங்கள் செய்து விடுவோம். 


சுவடி ஓதும் மைந்தன் :-  சித்தர்களிடத்தில் வந்துட்டா, அறிவை வந்து நல்லா பயன்படுத்திட்டா போதும். மீதி எல்லாம் நாங்களே கொடுத்துருவோம். 


குருநாதர் :- அப்பனே, நிச்சயம், அதாவது, பின் அறிவுள்ள குழந்தை, அப்பனே, அழாதப்பா. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அறிவுள்ள, இப்ப சொன்னீங்க பாருங்க  அறிவுள்ள குழந்தை அழுது, பால் கேட்காது. அய்யா  புரியுதுங்களா? 


குருநாதர் :- நிச்சயம், அப்போது நீங்கள் எல்லாம், அதாவது, நாங்கள் எல்லாம் அறிவில்லாததா என்று நினைத்துக் கொள்ளலாம். ஆமாம், அப்படித்தான். 


அடியவர்கள் :- ( சிரிப்புகள் )



========================================================

#  அகத்திய மாமுனிவரை, இறைவனை குறை கூறுவது - பாவம் 

=======================================================


குருநாதர் :-  அப்பனே, அறிவில்லாததால்தான், அப்பனே, இவ்வளவு கஷ்டங்கள். அப்பனே, பின் இவ்வாறு உங்களுக்கு அறிவில்லாததால், நீங்கள் மற்றவர்களை தேடி செல்கிறீர்கள் என்று, அப்பனே, அவன் பயன்படுத்துகின்றான். ஆஹா, இவன் தன் நிச்சயம், இவனிடத்தில் பணங்கள் இருக்கின்றது. (பணங்கள்) பிடுங்குவோம் என்று, பரிகாரம் கூறி, அவை, அவை என்று, கடைசியில் நடுத்தெருவில் நிற்க வைக்க வைக்கின்றான். அப்பொழுது, நீங்கள் என்ன சொல்வீர்கள்? அகத்தின் பொய், இறைவன் பொய், அனைத்தும் செய்தேன் என்று, அனைத்தும் செய்தது எவை யாருக்காக செய்தீர்கள்? 


அடியவர்கள் :- ( அமைதி )


குருநாதர் :-  அப்பனே, உண்மையை சொல்கின்றேன். அப்பனே, நிச்சயம், கலியுகத்தில் இறைவன் அழகாக இருக்கின்றான் அப்பா. ஆனால் மனிதன் அதை உணர மாட்டான். அப்பா. ஆனால் மனிதன் என்ன செய்வான் தெரியுமா? இறைவன் பார்க்கத்தானா போகின்றான்? நிச்சயம், அவனைப் போலவே நாம் நடிப்போம் என்று, பின் ஆயுதத்தை எடுப்பான். அப்பா, 



சுவடி ஓதும் மைந்தன் :-  ( கலியுகத்தில் இறைவன் அழகாக இருப்பினும், மனிதன் உணர முடியாது. மனிதன் இறைவனைப் போல நடிக்க முயன்று, ஆயுதம் எடுத்து அதிகாரம் பிடிக்க விரும்புகிறான். இறைவன் வெளிப்படையாக எதையும் தர மாட்டார் என்பதால், சிலர் “இறைவன் இல்ல” என எண்ணுகிறார்கள். இதனால், மனிதன் போலி இறைவனாக நடித்து,போலி வேஷம் எடுக்கும் சூழ்நிலை உருவாகிறது. இது தவறு. )


குருநாதர் :- அப்பனே, அவனுடைய வாழ்க்கையே, அவனுக்கு பின் நிச்சயம் பார்க்க தெரியாதப்பா. 


சுவடி ஓதும் மைந்தன் :- புரியுதுங்களா? 


குருநாதர் :- இதனால், அப்பனே, அங்கு சென்றால், அப்பனே, இறைவன் கூட அட, முட்டாளே, உந்தனுக்கு எவ்வளவு அறிவுகள் கொடுத்திருக்கின்றேனே, அதை ஒழுங்காக பயன்படுத்தவில்லையே. நீ நிச்சயம், அவனை விட, நீ என் கீழானவன் என்று, கஷ்டத்தை தான் கொடுப்பான். 



சுவடி ஓதும் மைந்தன் :-  ( இறைவன் மனிதனுக்கு அறிவையும் அறிவாற்றலையும் கொடுத்திருக்கிறார். ஆனால் அவன் அதை பயன்படுத்தாமல் ஏமாறிக்கொண்டு, “நீ ஏன் இதைச் செய்தாய்?” என்று கேட்கும்போது, இறைவன் பதிலுக்கு இன்னும் கஷ்டங்களைத் தருவார். ஏனெனில், தெளிவும் விவேகமும் இருந்தும் தவறு செய்வது முட்டாள்தனம். இது பல உரைகளில் சொல்லப்பட்ட உண்மை. )


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!


No comments:

Post a Comment