“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Saturday, November 15, 2025

சித்தர்கள் ஆட்சி - 509 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - 02.11.2025 - திருவண்ணாமலை - சிவபுராணம் கூட்டுப் பிரார்த்தனை வாக்கு.- பகுதி 5

 இறைவா நீயே அனைத்தும்.

இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும். 




02.11.2025 - திருவண்ணாமலை - சிவபுராணம் கூட்டுப் பிரார்த்தனை வாக்கு.- பகுதி 5


(இந்த வாக்கு (1) அன்புடன் போகர் சித்தர்,  (2) அன்புடன் இடைக்காடர் சித்தர்,  (3)  அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு - என 3 வாக்குகள் அடங்கிய பதிவு)


==========================================

# (1) அன்புடன் போகர் சித்தர் வாக்கு

==========================================


அகிலமெல்லாம் ஆளக்கூடிய அகிலாண்டேஸ்வரியை பணிந்து போற்றுகின்றேனே. போகனவனே. 


அறிந்தும் மனிதனின் நிலைமைகள் மாறுபட்டு, கற்பனையிலே மிதந்து கொண்டிருக்கின்றான். இவ்வாறாக மாறுபட, மனிதனின் அழுக்குகள் நீங்கிட குற்றால நாதனிடம் செல்க. 


போகர் சித்தர் :- இதை அறிந்து, இதற்கும் புண்ணிய பலன்கள், அதை எதை என்று நிரூபிக்க ஆனாலும், மனிதனிடத்தில் பாவங்கள் தான் அதிகம். 


போகர் சித்தர் :- இதனை அறிவித்து, எத் துன்பமாயினும் அறிந்தும், இவைத்தன் போக்க நீராடி, அங்கிருந்து அழகாக நீரை நிரப்பிக் கொண்டு, இதைத்தன் அனுதினமும் அதில் அவ்நீரில் நன்முறையாக ருத்ராட்சையும், அறிந்தும், பின் தூய, பின் சிறிது சந்தனத்தையும், நல்விதமாக எவை என்று புரிய, எத்தனை பின் மஞ்சளையும் இட்டு, நன்முறையாகவே, பின் நெல்லிக்கனியும், பின் வேப்பிலையும், பின் முருங்கை இலைகளையும் கூட, இன்னும் சில மூலிகைகள், மிளகு, சீரகம், இவையெல்லாம், பின் நிச்சயம் இடித்து, நன்கு கசக்கி, பின் இரவு வேறெனில், பின் அதில், பின் நன்முறையாக இட்டு, அதிகாலையில் எழுந்து பருகிட, சில தரித்திரங்கள் நீங்கும். 


உடம்பினில் அழுக்குகள் புகுந்து உள்ளது, அவை நீக்கிட, இவைதன் அனுதினமும், பின் குறைந்தபட்சமாவது, பின் நான்கு மாதங்கள், பின் செய்து வர, உடல் தெளிவு பெறும். ஈசனை, அதாவது இறைவனை நினைக்கத் தோன்றும், எது உண்மை, எது பொய் என்று நினைக்கத் தோன்றும். இவைதன் தொடர்ந்து செய்து வர, நன்று. 


மனிதனிடத்தில் பல நோய்கள் வரப்போகின்றது.  இதைத்தன், பின் அதாவது, இவ் நோயை எதிர்த்து போராட, இங்கு செப்பினேனே. 


அவை மட்டுமில்லாமல், இடையிடையே, பின் அதிமதுரத்தையும் அறிந்தும், இவைத்தன் நன் விதமாக, பின் திரிபலா, திரிகடுகம் எனும் மூலிகையும் கூட, இரவு தனிலே அழகாக, பின் சொன்னேனே. குற்றாலத்தில், பின் நீராடி, அவ் நீரை, பின் எடுத்திட்டு, அதன் உள்ளே, நிச்சயம் தன்னில் கூட, இதையிட்டு, சரி சமமாக அறிந்தும், பின் அதிகாலையிலே, பின் உண்டு வர, மாற்றங்கள் ஏற்படுமே, 


ஏற்படுமே எதை என்று அறிவித்த, பின் சுத்த, பின் அறிந்தும், இவை என்று, பின் தென்னை தன்னில் கூட, அறிந்து, எவை என்று, தேங்காய் தன்னில் கூட, சுத்தமானதை, பின் அரைத்து, பின் எண்ணெயாகவே அறிந்தும், இவைதன், பின் பன்மடங்கு, நல்விதமாக, பின் மந்திரத்தைச் செப்பி, அவ் மந்திரத்தை ரகசியமாக செப்புவேன். 


இன்னும் அறிந்தும், இவைதன், பின் அதிகாலையிலே, பின் வெறும் தன் வயிற்றில், தன்னில்  கூட, இதனுடன், எதை என்று, இவை என்று புரிய, பின் சொன்னேனே. பின் குற்றாலத்தின் நீரில் அறிந்தும், இவைதன் கூட, பின் அதாவது, பின் அப்படியே, பின் இதைத்தன் நிறைந்த அதில் உள், பின் இட்டு, இதையும், பின் அறிந்து வர, ஆரோக்கியம் மேம்பட்டு, பின் பாவ வினைகளால் எண்ணங்கள், பின் மாறுபட்டு, புண்ணிய வகைகள், பின் சேர, நல் எண்ணங்கள் தோன்றி, புண்ணிய பாதையில் சென்று, அனைத்தும் கிட்டிடுமே, சொன்னேனே. அறிந்து போகனவன். 



வாக்கு விளக்கம் :- 

இது போகர் சித்தரின் ஆழமான ஆன்மீக, உடல் மற்றும் மன சுத்திகரிப்பு வழிமுறைகளை விளக்கும் ஒரு உன்னத வாக்கு . இதன் சாரம் கீழே தெளிவாக  தொகுக்கப்பட்டுள்ளது:- 

போகர் சித்தரின் சுத்திகரிப்பு வழிமுறை – சுருக்கம்

அறிவும் இருந்தும் மனிதன் கற்பனையிலும் பாவங்களிலும் சிக்கி, உண்மையை மறந்து வாழ்கிறான். இவ்வாறு மாறுபடும் மனநிலையை மாற்ற, குற்றால நாதனிடம் சென்று புனித நீராடல் செய்ய வேண்டும். இது பாவங்களை கழிக்கும் ஒரு புண்ணிய வழி.

போகர் சித்தர் கூறுவது:
மனிதனிடம் பாவங்கள் அதிகம். அதனால், புனித நீராடல் செய்த பின், அந்த குற்றால நீரை சேமித்து, அதில் பின்வரும் மூலிகைகளை சேர்த்து, தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் பருக வேண்டும்:

  • மூலிகைகள்:

    • ருத்ராட்சம்

    • தூய சந்தனம்

    • மஞ்சள்

    • நெல்லிக்கனி

    • வேப்பிலை

    • முருங்கை இலை

    • மிளகு

    • சீரகம்

    • திரிபலா

    • திரிகடுகம்

    • சில மூலிகைகளும்

இவை அனைத்தையும் நன்கு இடித்து, கசக்கி, இரவில் தயார் செய்து, அதிகாலையில் பருக வேண்டும். குறைந்தபட்சம் நான்கு மாதங்கள் தொடர்ந்து செய்தால்:

  • உடல் அழுக்குகள் நீங்கும்

  • மனம் தெளிவாகி, உண்மை–பொய் பற்றி சிந்திக்கத் தோன்றும்

  • இறைவனை நினைக்கும் எண்ணம் பிறக்கும்

  • தரித்திரம் விலகும்

  • நோய்கள் எதிர்க்கப்படும்

மேலும், தேங்காயை அரைத்து எண்ணெயாக மாற்றி, அதில் ரகசிய மந்திரம் செப்பி, புனித எண்ணெயாக பயன்படுத்தலாம். இது பன்மடங்கு நன்மை தரும். மந்திரத்தை ரகசியமாக செப்புவேன் என்று போகர் சித்தர் உரைத்துள்ளார்கள்.


போகர் சித்தர் :-  அறிந்தன்னும், இவைதன் நிச்சயம் தன்னில் கூட சில தீய சக்திகள் மனிதனை ஆட்கொண்டு, அதை இயக்குகின்றது. இவ்வாறு பின் இயக்க இயக்க, மனதில் தெளிவும், நிச்சயம் தன்னில் கூட நிம்மதியும் கிட்டாது. 


போகர் சித்தர் :- இதைத்தன் எதிர்த்து நிற்க, எதிர்த்து நிற்க, இன்னும் சில மூலிகைகள் அவசியம். இதைத்தன் நன்றாக பயன்படுத்தி, இதைத்தன் எவை என்று கூர்ந்து இட்டாலும், இதற்கு சமமாக ஒன்றின் பின் இதை என்று அறிவித்து, பல மூலிகைகளான நிச்சயம் தன்னில் கூட, அதாவது ஓம திரவியங்கள், இதை புரிந்து கொண்டு, அவை தன் நிச்சயம் தன்னில் கூட சரியாகவே அமாவாசை தன்னில் கூட, அதாவது அமாவாசை முடியும் பின் நேரத்தில், அதாவது கடைசி பாகத்தில், நிச்சயம் தன்னில் கூட, இவை எரிய விட்டு, பின் இதனுள்ளே அறிந்தும், எதை எவை என்று அறிய, நன்றாக எறிந்திட்டு, இதன் தன்மையை, பின் எதை என்று ஐந்து அருவிகள், அதாவது சொல்லப்போனால், ஐந்து அறிந்தும், இதை என் புரிய பல வழிகளில் கூட, புண்ணிய நீர்களில் எடுத்து, பின் ஐந்தாவது நாள்…. 


போகர் சித்தர் :- இதைத்தன் நிச்சயம் தன்னில் கூட, அவைதலில் இட்டு, நன் கசக்கி, கசக்கி, அதனுடன் நெய்யும் இட்டு, நல் கசக்கி, எதை புரிந்து, இவைதன் சரியாகவே எடுத்துட்டு, நிச்சயம் தன்னில் கூட, சில மூலிகைகளும் சேர்க்க, கர்ப்ப மூலிகம் ஆகுமாம். இவைத்தன் நிச்சயம் இதில் கூட, அருகம்புல்லையும் அறிந்தும், இவைத்தன் நிச்சயம் தன்னில் கூட, ஈசனுக்கு சேர்க்க வேண்டிய பொருட்கள், வில்வத்தையும், சிறிதளவு மஞ்சளையும், இன்னும் எதை புரிய, நிச்சயம் அறிந்தும், இவைத்தன் இன்னும் இன்னும் சம அளவு, இன்னும் புரிந்தும், எடுத்திட்டு, எவை என்று, பின் நீந்த, அவையெல்லாம் பசையாக்கி, அனுதினமும், நிச்சயம் தன்னில் கூட, இவற்று உடனே, பின் அதாவது தேங்காய் தன்னில்  கூட, பின் சரியாக எண்ணெயும் இட்டு, நல் கசக்கி. 


போகர் சித்தர் :- இதைத்தன் நிச்சயம் தன்னில் கூட, பல பரிசுத்தழகான இடங்களுக்குச் சென்று, முக்கியமான ஸ்தலங்களான ஐந்து, எதை என்று கூறிய பஞ்சலோக ஸ்தலங்களையும் தரிசித்து, அங்கு வந்து அறிந்தும், இவை தன் பிரசாதங்களையும் கூட, இவை என் இட்டு , அறுபடை வீதியில் கூட எடுத்திட்டு, பின் ராமேஸ்வரம் சென்று, நீரையும் எடுத்திட்டு, செந்தூரையும், எதை என்று கனிவாக மீண்டும் ஒருமுறை, பின் அரு எவை என்று அறிய, பின் மண்ணையும் எடுத்திட்டு, அதில் தன் சரியாகவே, பின் கலக்கிட, அனுதினமும், நிச்சயம் தன்னில், பின் அறிந்தும், இவைதன், பின் அதாவது, பின் வலது இடது காதுகளின் ஓரத்தில், அதாவது, பின் தன்னில், பின் தலை தன்னில் கூட, எவையென தேர்த்து தேர்த்து வந்தாலே, சில தரித்திரங்கள் நீங்குமடா. நீங்குமடா. இதைச் செய்ய பரிசுத்தமான ஆற்றல்கள், நிச்சயம் இதை செய்து வர, தரித்திரங்கள் நீங்கி, பரிசுத்தமான ஆற்றல்கள் ஏற்பட்டு, இறைவன் ஆசிகளும் கிட்டி, இன்னும் உயர்வீர்களாக நீங்கள். 


போகர் சித்தர் :-  இவைதன் மனிதனுக்கு புரியவில்லையே. வெற்றிகள் மனிதனிடத்தில் ஆனால் முயல்வதில்லையே. 


போகர் சித்தர் :- இதில் தன் முயற்சி செய்பவன் வெற்றியாளன், முயற்சி செய்யாதவன் தோல்வியாளன். 


வாக்கு விளக்கம் :-  போகர் சித்தர் வழங்கும் இந்த தீய சக்தி நீக்கம் மற்றும் ஆன்மீக சுத்திகரிப்பு முறையை ஒரு தெளிவான படிநிலை செயல்முறை (clear stepwise process) கீழே   தொகுக்கப்பட்டுள்ளது:

போகர் சித்தர் வழிமுறை – தீய சக்தி நீக்கம் & ஆன்மீக சுத்திகரிப்பு

படிநிலை 1: அமாவாசை முடியும் நேரத்தில்

  • ஓம திரவியங்கள் (புனித மூலிகை தூவல்கள்) எரியவிட்டு, அதன் புகையை மனதுடன் உணர்ந்து, தீய சக்திகளை அகற்றும் எண்ணத்துடன் செயல்பட வேண்டும்.

படிநிலை 2: ஐந்து புனித அருவிகளில் நீராடல்

  • புண்ணிய நீரை சேகரிக்கவும்.

  • ஐந்தாவது நாளில், அந்த நீரில் மூலிகைகள் சேர்த்து பசையாக்கவும்.

படிநிலை 3: மூலிகை பசை தயாரிப்பு

தேவையான மூலிகைகள்:

  • அருகம்புல்

  • வில்வ இலை

  • மஞ்சள்

  • கர்ப்ப மூலிகைகள்

  • தேங்காய்

  • நெய்

செய்முறை:

  • இவை அனைத்தையும் நன்கு கசக்கி பசையாக்கவும்.

  • தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும்.

படிநிலை 4: பசை பூசும் நடைமுறை

  • பசையை வலது/இடது காதுகள் ஓரம், தலை மையம், மற்றும் தேவையான புள்ளிகளில் தினசரி பூசவும்.

படிநிலை 5: புனித ஸ்தல தரிசனம்

தரிசிக்க வேண்டிய இடங்கள்:

  • பஞ்சலோக ஸ்தலங்கள் (5)

  • அறுபடை வீடுகள் (6)

  • ராமேஸ்வரம்

  • செந்தூர்

செய்முறை:

  • அங்குள்ள பிரசாதங்கள், மண், நீர் ஆகியவை சேகரித்து பசையுடன் கலக்கவும்.

படிநிலை 6: தினசரி தொடர்ச்சி (4 மாதங்கள்)

  • பசையை தினமும் தயாரித்து பூசவும்.

  • மன தெளிவு, நிம்மதி, ஆன்மீக உயர்வு நோக்கி செயல்படவும்.

பலன்கள்

  • தரித்திரம் நீங்கும்

  • தீய சக்திகள் அகலும்

  • பரிசுத்த ஆற்றல்கள் ஏற்படும்

  • இறைவன் ஆசிகள் கிடைக்கும்

  • ஆன்மீக உயர்வு பெறுவீர்கள்

போகர் சித்தர் கூறும் முடிவுரை

“முயற்சி செய்பவன் வெற்றியாளன்; முயற்சி செய்யாதவன் தோல்வியாளன்.”



======================================

# இறுதி , கடைசி வாய்ப்பு உலகத்திற்கு 

======================================


போகர் சித்தர் :-  இவைதன் நிச்சயமாய்  இன்னும் கிரகங்கள் வெல்ல, யாங்கள் சொல்வோம், காத்திடுவோம். உங்கள் அனைவருமே எதை என்று புரிய, இன்னும் பின் அறிந்தும், எவை என்று சித்தர்கள் வந்து வந்து செப்பி செப்பி, உயர் ஆற்றலை கொடுத்து விட்டால், நீங்கள் அனைவருமே எதை என்று கூற, இறைவன் பால் சிந்தித்து, மற்றவர்களையும் கூட, இறைவன் பாதையில் அழைத்து வருவீர்களாக. 


போகர் சித்தர் :- அதற்குத்தான் எவை என்று கூற, பின் அகத்தியன் அறிந்தும், இறைவனிடத்தில் கடைசியாக, பின் அதாவது கடைசி வாய்ப்பு ஒன்று தருவீர். பின் தாயே, தந்தையே என்று முறையிட்டு வாங்கிக் கொண்டு வந்துள்ளான் அகத்தியன். அதனாலே யாங்கள் சொல்ல வந்தோமே, வாக்குகள். 



போகர் சித்தர் :- இவைத்தன் அறிந்து, இன்னும் கிரகங்கள் வெல்லவும், எதை என்று புரிய, இடைக்காடன் வரட்டும். 


=================================================

# (2) அன்புடன் இடைக்காடர்  சித்தர் வாக்கு - ஆரம்பம் 

=================================================


இடைக்காடர் சித்தர் :- இவைதன் போகன் அருளாசியுடனே , ஈசனின் அருளாசிகளுடனே சொல்ல வந்தேனே இடையன். 


இடைக்காடர் சித்தர் :- இவைதன் பின் கட்டம் கட்டமாக அறிந்தும், பன்னிரண்டு, இதைத்தன் பின் அவ்வவ் கட்டத்தில் ஜனன ஜாதகத்தில் எவை என்று புரிந்து, அவ்வவ் நேரத்தில் எத்தனை எதை என்று கிரகங்களும் இட்டு, இதை தன்னில் கூட, அவற்றுக்கெல்லாம் நிச்சயம் தன்னில் கூட, பின் எவ்  பின் எதை என்று உண்ட உணவு, எதை என்று கொடுத்து, எதை என்று அறிய, பின் அவ்வவ் ஓரையில் நிச்சயம் எடுத்து உண்ண, எடுத்து உண்ண, நோய்கள் பரவிப் போகும், அருள்களும் கிட்டும். 



செயல் முறை விளக்கம் : -  


  1. உங்கள் ஜனன ஜாதகத்தில் உள்ள 12 கட்டங்களை (பன்னிரண்டு பாவங்கள்) தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். வாக்கிய பஞ்சாங்கத்தை பயன்படுத்தவும்.  

  2. உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் இவ் 12 கட்டத்தில் இடவேண்டும். அதாவது இது தான் உங்கள் ஜாதகம். வாக்கிய பஞ்சாங்கத்தை பயன்படுத்தவும்.  

  3. எந்த ஒரு ராசியில் , எந்த ஒரு கிரகம் இருக்கிறதோ - அந்த ராசி குறிக்கும் ஹோரையில் , அந்த ராசியில் அமர்ந்த கிரகத்தின் தானியம் உணவாக உண்ண வேண்டும். 

  4. உதாரணமாக தர்ம தேவதை / தர்ம தேவன் ( முப்பெரும் தேவன் - சனி தேவன்) 12 ராசிகளில் இருந்தால் என்னென்ன ஹோரை உணவு என்று பார்ப்போம். 

    1. ரிஷப , துலாம் ராசியில் தர்ம தேவன்  - சுக்கிர ஓரையில், எள் உணவு

    2. மிதுன , கன்னி ராசியில் தர்ம தேவன்  - புதன் ஓரையில், எள் உணவு

    3. தனுசு , மீன ராசியில் தர்ம தேவன்  - குரு ஓரையில், எள் உணவு

    4. மகர , கும்ப ராசியில் தர்ம தேவன்  - சனி ஓரையில், எள் உணவு

    5. மேஷ , விருச்சிக ராசியில்  தர்ம தேவன் - செவ்வாய் ஓரையில், எள் உணவு

    6. கடக ராசியில் தர்ம தேவன்  - சந்திர ஓரையில், எள் உணவு

    7. சிம்ம ராசியில் தர்ம தேவன்  - சூரிய ஓரையில், எள் உணவு


  1. இதேபோல் 9 கிரகத்திற்கும் நீங்களே ஹோரை, தானிய உணவுகளை எடுத்து வைத்துக்கொண்டு உண்ணவேண்டும். அவசியம் கூட்டுப் பிரார்த்தனை குழுவினருடன் கலந்து ஆலோசித்து இதனை செய்ய நன்று. வாக்கிய பஞ்சாங்கத்தை பயன்படுத்துவது மிக நன்று.

  2. உணவை எடுக்கும் முன்னர் இறைவழிபாடு செய்வது நன்று. தந்தை திரு அண்ணாமலையார் , அன்னை  உண்ணாமலை தேவி , தந்தை அகத்திய மாமுனிவர் , அன்னை லோபாமுத்திரை தேவி , முருகப்பெருமான் போகர் சித்தர் , இடைக்காடர் சித்தர் , குலதெய்வம் , முன்னோர்கள்  - அவர்களை வணங்கி அருள் செய்யுங்கள் என்று வேண்டி பின்னர் இந்த நவ தனியா உணவுகளை எடுத்துக் கொள்ள மிக நன்று.  


பலன்கள் :- (1) நோய்கள் விலகி போகும். (2) இறைவன் , சித்தர்கள் அருள்கள் கிட்டும்.



இடைக்காடர் சித்தர் :- இவைதன் நிச்சயம் தன்னில் கூட, இவைதன் இவ்வாறாக அமைத்து, பின் மாற்றி மாற்றி, எதை என்று புரிய, இவ்வாறாகவே தீபங்களும் இட்டு, இவைதன் பின் நதியில், பின் நிச்சயம், பின் எவை என்று கரைக்க, நன்று தீமைகள் விலகும். 


இடைக்காடர் சித்தர் :-இவைதன் இவ்வாறாக கட்டங்களாக இட்டு, இட்டு, ஒவ்வொரு எதை என்று அறிந்து கூட, கிரகத்திற்கும் நிச்சயம் தன்னில் கூட 108 மந்திரத்தை செப்பி செப்பி. 


சுவடி ஓதும் மைந்தன் வாக்கின் சுருக்கம் :-  ( இடைக்காடர் சித்தர் கூறும் செயல் முறையின் சாரம்: ஒவ்வொரு ஜாதக கட்டத்திலும் உள்ள கிரக நிலையைப் புரிந்து, அதற்கேற்ப தானியங்களை தேர்வு செய்து, அந்த கிரகத்துக்குரிய ஹோரை நேரத்தில் தீபம் ஏற்றி, 108 மந்திரங்களை செப்பி, அந்த தானியத்தை சமைத்து ஒரு பகுதியை உணவாக எடுத்துக்கொண்டு, மற்ற பகுதியை நதியில் கரைக்க வேண்டும். இது தீமைகளை விலக்கி, கிரக சாந்தி ஏற்படுத்தி, சித்தர்களின் அருளைப் பெறும் ஒரு பரிசுத்த ஆன்மீக வழிமுறை )


இடைக்காடர் சித்தர் :- இவையன் பின் தொடர, நிச்சயம் தன்னில் கூட, ஒவ்வொரு எதை என்று நாட்களை குறித்து, இவைதன் அவ்வோரையில் சமைத்து உண்டிட, பறக்கும் நோய்கள். 


இடைக்காடர் சித்தர் :-இவைதன் நிச்சயம் தன்னில் கூட, இவை தன் பயன்பெற்ற தென்னை தன்னில் கூட, 


சுவடி ஓதும் மைந்தன் வாக்கின் சுருக்கம் :-  (இடைக்காடர் சித்தர் கூறும் வழிகாட்டலின் சாரம்: ஒவ்வொரு நாளும், குறிப்பிட்ட ஹோரை நேரத்தில், கிரகத்துக்கேற்ப தானியங்களை தேர்வு செய்து, அவற்றை சுத்தமான தேங்காய் எண்ணெயில் வறுத்து சமைத்து உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும். இது நோய்களை விலக்கி, உடலின் சூட்சும சக்தியை தூண்டும். எந்த நோயாக இருந்தாலும், தேங்காய் எண்ணெய் பயன்படுத்த வேண்டும் என்பதே முக்கியமான பரிந்துரை. இந்த முறையை நிச்சயமாக, ஒழுங்காக தொடரும் போது, பறக்கும் நோய்கள் விலகி, ஆரோக்கியம் மற்றும் அருள் கிடைக்கும்.)


இடைக்காடர் சித்தர் :-இவைதன் உணர, இன்னும் இதனுள்ளே ஏன் சனீஸ்வரன் எதை என்று அறிய, பின் அதாவது அவனை முதலில் கட்டுப்படுத்த வேண்டும், வேண்டுமென எதை பின் புரிய, நிச்சயம் தன்னில் கூட, முன்னோர்களின் சொத்துக்களை, பின் எதை என்று அறிய, பின் எவை என்று அறிந்து கூட, அவர் சொத்துக்களை நீங்கள் அனுபவித்துக் கொண்டே வந்ததால், அவர் கர்மாவையும் அனுபவிக்க நேரும், சரியான தண்டனை, பின் கொடுத்துக் கொண்டே வருவான் சனீஸ்வரன். இதைத்தன் யாராலும் கட்டுப்படுத்த முடியாது. 


சுவடி ஓதும் மைந்தன் வாக்கின் சுருக்கம் :-  (இடைக்காடர் சித்தர் அருளிய இந்த உன்னதமான அறிவுரை, தர்ம தேவன் சனீஸ்வரரின் கர்ம தண்டனைச் செயல்பாடுகளை ஆழமாக விளக்குகிறது. ஒருவர் தனது முன்னோர்களின் சொத்துக்களை அனுபவிக்கும் போது, அந்த சொத்துடன் சேர்ந்து அவர்களின் பாவங்களும், கர்ம வினைகளும் தொடரும். இந்த பாவச் சங்கிலி, அந்த சொத்தை பின்வரும் தலைமுறைகளுக்கும் பரவுகிறது. தர்ம தேவன் சனீஸ்வரன், இந்த கர்ம வினைகளுக்கான தண்டனையை நேர்மையாக வழங்குவார்., அதை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. இதனால், பிறவி பிறவியாக கஷ்டங்கள் தொடரும். )


இடைக்காடர் சித்தர் :- இதைத்தன் நிச்சயம் தன்னில் கூட, எவை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, இவைதன் சரியாகவே நெல் விதைத்து, பின் அதாவது பின் ஈசன், பின் ஆலயங்களுக்கு, பின் கொடுக்க, புண்ணியங்கள் பெருகும். 


சுவடி ஓதும் மைந்தன் வாக்கின் சுருக்கம் :-  (இடைக்காடர் சித்தர் கூறும் ஆன்மீக வழிகாட்டல்: ஒருவர் முன்னோர்களின் சொத்துக்களை அனுபவிக்கும் போது, அந்த சொத்துடன் தொடர்புடைய கர்ம பாவங்கள் அவரை தாக்கக்கூடும். இதைத் தவிர்க்க, நெல் விதைத்து, அதை ஈசன் ஆலயங்களுக்கு தானமாக வழங்க வேண்டும். இந்த தானம் புண்ணியத்தை பெருக்கி, பாவங்களை நீக்கும். இது ஒரு பரிசுத்த தர்ம செயல், முன்னோர்களின் சொத்துக்களை அனுபவிக்கும் போது ஏற்படும் கர்ம வினைகளை சமநிலைப்படுத்தும் ஒரு உயர்ந்த வழிமுறை. அடியவர்கள் பயன்படுத்தி கொள்க. )


இடைக்காடர் சித்தர் :- இவ்வடைப்பில், இறைவன் படைப்பில் இடங்கள் அனைத்துமே இறைவனுக்கு சொந்தம். எதை என்று கூற, ஆனால் மனிதன் என்னவோ தான் சொந்தம் என்று, ஆனால் இவ்வாறு தான் மனிதன் தெரியாமலே, பின் அனுபவித்துக் கொண்டிருக்கின்றான். கஷ்டங்களை 


இடைக்காடர் சித்தர் :- இதைத்தன் உணராதவர் வாழ்க்கையில் எங்கு சென்றாலும் விடிவெள்ளி இல்லையே. இதனால் பின் மனதில் நிச்சயம் அறிந்தும் சக்திகள் இழந்து, இறைவன் எங்கு இருக்கின்றான் என்று சந்தேகம் வருகின்றது. 

சுவடி ஓதும் மைந்தன் வாக்கின் சுருக்கம் :-  ( இடைக்காடர் சித்தர் கூறும் இந்த ஆன்மீக வழிமுறை :-  இந்த உலகத்தில் உள்ள அனைத்து இடங்களும் இறைவனுடையவை; ஆனால் மனிதன் அவற்றை தனக்கே சொந்தம் என எண்ணி, தெரியாமலே அனுபவித்து வருகிறான். இந்த அறியாமை காரணமாக, அவன் செய்த தவறுகளால் கஷ்டங்களை அனுபவிக்க நேரிடுகிறது. இறைவனுடைய இடத்தில் இருக்கும் பாவங்களைப் பற்றிய புரிதல் இல்லாமல் வாழும் மனிதன், வாழ்க்கையில் சக்திகளை இழந்து, இறைவன் எங்கு இருக்கிறார் என்ற சந்தேகத்திற்கு ஆளாகிறான். இறைவன் மீது சந்தேகம் ஏற்படுவது, மனிதன் செய்த தவறுகளின் கடைசி விளைவாகும். எனவே, இடத்தின் உரிமையை இறைவனுக்கே உரியது என உணர்ந்து, பாவங்களைத் தவிர்த்து, ஆன்மீக விழிப்புடன் வாழ வேண்டும் என்பதே சித்தரின் உயர்ந்த அறிவுரை.)

இடைக்காடர் சித்தர் :- இவதன் நிச்சயம் இன்னும் பல பல உரைகளில் கூட அறிந்தும், உலகமெல்லாம் நிச்சயம் தன்னில் கூட நல் நல்வாழ்க்கைக்காக, நிச்சயம் தன்னில் கூட அனைவருக்கும் பின் செப்பி, அவரவர் நிச்சயம் தன்னில் கூட எண்ணங்களை நிறைவேற்றி, அவரவர் பின் நிச்சயம் தன்னில் கூட, பின் உடம்பை பெரிதாக்கி, எதை என்று அறிய வெற்றி கொள்வீர்களாக. 


இடைக்காடர் சித்தர் :- இதனை தன் பரிசுத்தமாக யாங்கள் வரும் வரும் பின் வாக்கியத்தில் உரைப்போமாக, உரைப்போமாக வரும் சந்ததிகளுக்கு இது பயன்படும். நிச்சயம் தன்னில் கூட ஒரு அழிவு காத்துக் கொண்டிருக்கின்றது. இன்னும் நிச்சயம் அவ்வழிவு வந்துவிட்டால், அனைவரும் திருந்தி விடுவார்கள். ஆனால் அவ்வழிவை நிச்சயம் பின் நெருங்கக் கூடாது. இதனால்தான் நிச்சயம் தன்னில் கூட அனைவரும், பின் நிச்சயம் தன்னில் கூட, பின் கூட்டு பிரார்த்தனையில் எதை என்று அறிய, எவை என்று அறிய, அகத்தியன் பின் இயக்கி, நிச்சயம் பின் சாந்தப்படுத்துகின்றான். இறைவனை. 


சுவடி ஓதும் மைந்தன், அடியவர்  வாக்கின் சுருக்கம் :-  (இடைக்காடர் சித்தர் மிகுந்த மரியாதையுடன் வழங்கும் இந்த உயர்ந்த அறிவுரை, உலகம் முழுவதும் நல்வாழ்க்கை நிலை பெற, ஒவ்வொருவரும் தங்களது எண்ணங்களை நிறைவேற்றி, உடல்–மன ஆற்றலை பெருக்க வேண்டும் என்பதைக் கூறுகிறது. 


இது பரிசுத்தமான வழிகாட்டலாக, வரும் சந்ததிகளுக்கும் பயன்படும். ஆனால், ஒரு அழிவு நெருங்கிக் கொண்டிருக்கிறது; அது வந்துவிட்டால், மனிதர்கள் திருந்துவார்கள் என்றாலும், அந்த அழிவை நெருங்க விடக்கூடாது. இதற்காக, அகத்திய மாமுனிவர் தனது பெருங்கருணையால் இறைவனை சாந்தப்படுத்த முயல்கிறார். 


ஏனெனில், இறைவன் கோபத்துடன் இருக்கிறார்; வாக்குகள் கடுமையாக வருகின்றன; உயர் ஆற்றல்கள், சித்தர்கள், முனிவர்கள்—all are deeply concerned. மனிதர்கள் தங்கள் நடத்தையை திருத்தாமல் இருந்தால், உலக அழிவை நோக்கி செல்லும். எனவே, கூட்டு பிரார்த்தனையின் மூலம், இறைவனை சாந்தப்படுத்தி, மனிதகுலத்தை பாதுகாக்க வேண்டும் என்பதே இந்த அருமை வழிகாட்டலின் மையம்.) 


இடைக்காடர் சித்தர் :- இதைத்தான் சரியாகவே ஒரு ஐந்து நாட்களுக்கு முன்பே பல வழிகளில் கூட எதை என்று அறிய, பெரித்த எவை என்று அறிய, ஒரு பூகம்பம் வந்திருக்க வேண்டியது. ஆனாலும் பின் காத்து விட்டான், எதை என்று அறிய. இன்னும் பின் சரியாக எவை என்று கார்த்திகை திங்களில், அதாவது மதுரை தன்னில் வீற்றிருக்கும் மீனாட்சி தாயிடம், இவை போன்று செய்க. பின் நிச்சயம் தன்னில் கூட மீனாட்சி, பின் காத்திடுவாள். 


சுவடி ஓதும் மைந்தன், அடியவர்  வாக்கின் சுருக்கம் :-  ( இடைக்காடர் சித்தர் மிகுந்த மரியாதையுடன் வழங்கும் இந்த ஆன்மீக அறிவுரை, ஒரு பெரிய பூகம்பம் நிகழ வேண்டிய சூழ்நிலை ஐந்து நாட்களுக்கு முன்பு இருந்ததாகக் கூறுகிறது. ஆனால் இறைவன் அதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார். 


இந்த அபாயத்தை முறியடிக்க, கார்த்திகை மாதத்தில் மதுரையில் வீற்றிருக்கும் மீனாட்சி தாயிடம் கூட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும் என இடைக்காடர் சித்தர் வலியுறுத்துகிறார். அடுத்த திரு நிகழ்வாக 2025 ஆண்டு) கார்த்திகை மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது, அதில் மீனாட்சி தாயின் அருளால் உலகம் பாதுகாக்கப்படும். இன்னும் ஒரு பேரழிவு நிகழப்போகிறது, ஆனால் அதற்கான நேரம் தெரியாத நிலையில், (2025 ஆண்டு) கார்த்திகை மாதத்தில் கூட்டு பிரார்த்தனையை முன்னதாகவே நடத்த வேண்டும் என்பதே இந்த உயர்ந்த வழிகாட்டலின் சாரம்.)


இடைக்காடர் சித்தர் :- இவைத்தன் உணர பொய்யாக்கவோ, மனிதனின் எதை என்று அறிய, எதை எதையோ பிதற்றுவது போலே. 


இடைக்காடர் சித்தர் :- இவைத்தன் உருவாக்க இன்னும் ஞானங்கள் ஆனாலும், எதை என்று அறிய புண்ணிய பலன்களை முதலில் கூட்ட வேண்டும். எங்கு இருக்கும் புண்ணிய பலன்கள் யாங்கள் அறிவோம். அங்குதான் நிச்சயம் வைத்திட்டு, பின் எங்கள் புண்ணியங்களையும் கூட உங்களுக்கு அளிப்போம். அதனால் பின் முன்னேற்ற பாதையில் சென்று, நிச்சயம் பின் மற்றவர்களையும் முன்னேற்ற பாதையில் அழைத்து, ஆனாலும் சிறிதாவது பின் சந்தேகம் வந்தால், அவர்களை யாங்களே நீக்கி விடுவோம். 

சுவடி ஓதும் மைந்தன், அடியவர்  வாக்கின் சுருக்கம் :-  ( இடைக்காடர் சித்தர் மிகுந்த பரிசுத்தத்துடன் வழங்கும் இந்த உன்னத அறிவுரை, ஞான வளர்ச்சிக்கு முன்னதாக புண்ணிய பலன்களை சேர்க்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது. சித்தர்கள் எங்கு புண்ணியம் இருக்கிறது என்பதை அறிவார்கள்; அங்கே தங்கள் புண்ணியத்தை வைத்து, அதை பகிர்ந்து, மனிதர்களை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்வார்கள். இந்த பாதையில் பயணிக்க விரும்புவோர், முழு நம்பிக்கையுடன் இறைவனின் வாக்குகளை ஏற்று நடக்க வேண்டும், ஏனெனில் மனிதன் சொல்வது பொய்யாகும்; இறைவன் சொல்வதுதான் மெய்யாகும். சித்தர்கள் வழி நடத்த தயாராக இருக்கிறார்கள், ஆனால் slightest, சிறிய சந்தேகமும் வந்தால், அந்த பயணத்திலிருந்து அந்த ஆட்களை நீக்கி விடுவோம் என்று இடைக்காடர் சித்தர் கூறுகின்றனர். எனவே, பாசிட்டிவான வழியில், புண்ணியத்துடன், நம்பிக்கையுடன், சித்தர்களின் அருளோடு பயணிக்க வேண்டும் என்பதே இந்த அறிவுரையின் மையம். )

இடைக்காடர் சித்தர் :- இவை தன் அறிய இதனால் ஒருவர் வந்தாலும் போதும். நிச்சயம் அவ்வொருவனைக் கொண்டு யாங்கள் இவ்வுலகத்தை இயக்குவோம். 


இடைக்காடர் சித்தர் :- அவ்வொருவனை வைத்து பல கோடி மக்களை அடித்திட எங்களால் முடியும். 

சுவடி ஓதும் மைந்தன், அடியவர்  வாக்கின் சுருக்கம் :-  ( இடைக்காடர் சித்தர் மிகுந்த பரிசுத்தத்துடன் வழங்கும் இந்த உன்னத அறிவுரை, உலகத்தை மாற்ற சித்தர்களுக்கு ஒரே ஒரு உண்மையான ஆன்மீக உணர்வுள்ள மனிதர் போதுமானவர் என வலியுறுத்துகிறது. அந்த ஒருவரின் மூலம், பல கோடி மக்களுக்கு ஆழமான மாற்றங்களை ஏற்படுத்த முடியும். சித்தர்கள் கூறுவது, அந்த ஒருவரை வைத்து உலகத்தை இயக்கவும், பாவங்களை அழிக்கவும், தர்மத்தை நிலை நிறுத்தவும் முடியும். இது அழிவுக்கான அழைப்பு அல்ல, மாற்றத்திற்கான அருள் வழிகாட்டல். மனிதர்கள் திருந்த வேண்டும், நேர்மறை (positive) வழியில் செல்ல வேண்டும், சித்தர்களின் வாக்குகளை ஏற்று, நம்பிக்கையுடன் முன்னேற்ற பாதையில் பயணிக்க வேண்டும் என்பதே இந்த அறிவுரையின் மையம்.) 

இடைக்காடர் சித்தர் :- ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட அவ்வாறெல்லாம் நிச்சயம் பின் சென்று விடக்கூடாது என்பதற்கே நிச்சயம் ஒரு வாய்ப்பு எதை என்று புரிய. அகத்தியன் மன்றாடி, ஈசனாரும் பின் பார்வதி தேவியிடம் மன்றாடி கேட்டு கேட்டு வந்திருக்கின்றான். 

சுவடி ஓதும் மைந்தன், அடியவர்  வாக்கின் சுருக்கம் :-  ( உலகம் அழிவை நோக்கி செல்லக்கூடிய சூழ்நிலையில் இருந்தபோதும், சித்தர்கள் — முன்னணியில் அகத்திய மாமுனிவர் — ஈசனை மன்றாடி, பார்வதி தேவியிடம் வேண்டி, ஒரு வாய்ப்பை பெற்றுத் தந்துள்ளார். இந்த வாய்ப்பு, மனிதகுலம் திருந்தி, தர்ம பாதையில் திரும்புவதற்கு இறைவனின் பரிசாகும். அகத்திய மாமுனிவர் நமக்காக போராடி இந்த வாய்ப்பை பெற்றுள்ளதால், அதை அனைவரும் முழுமையாக பயன்படுத்தி, உலகத்தை அழிவில் இருந்து மீட்கும் முயற்சியில் பங்கேற்க வேண்டும் என்பதே இந்த உயர்ந்த வழிகாட்டலின் சாரம்.)

இடைக்காடர் சித்தர் :- இன்னும் உங்களுக்கு என்ன மந்திரங்கள் என்றெல்லாம் யாங்கள் உரைப்போம். எவ்வாறு கிரகங்களை கட்டுப்படுவது என்றெல்லாம் உரைப்போம். எவ்வாறெல்லாம் நிச்சயம் தன்னில் உவமையம்  எதை என்று அறிய, பின் அறிந்தும் செயல்பட்டால் வெற்றிகள் கிடைக்கும் என்பதை எல்லாம் யாங்கள் சொல்ல நிச்சயம். பின் அதற்கும் புண்ணிய பலன்களை எதை என்று அறிய எங்களிடத்திலே, யாங்களை அளித்து, அதையும் நீங்கள் செய்ய வைப்போம். அறிந்தும் பின் செய்தால், நிச்சயம் பின் எதை என்று எவை என்று புரிய நினைக்கின்றீர்களோ, அதுவும் நடக்கும். பின் வரும் சன்னதிகளுக்கு சிறப்பாக வாழ்க்கையும் உண்டு. 

சுவடி ஓதும் மைந்தன், அடியவர்  வாக்கின் சுருக்கம் :-  ( கிரகங்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது, எந்த மந்திரங்களை எப்போது உச்சரிக்க வேண்டும், எவ்வாறு ஞானம் பெறலாம் என்பதனை அவர்கள் தெளிவாகக் கூறுவார்கள். இந்த அறிவுகளை அறிந்து, அதற்கேற்ப செயல்பட்டால் வெற்றி நிச்சயம். மேலும், அந்த செயல்களுக்கு தேவையான புண்ணிய பலன்களையும் சித்தர்கள் தாங்களே அளிக்கத் தயாராக இருக்கின்றனர். மனிதனின் எண்ணங்கள், நோக்கங்கள், செயல்கள்— உலக நன்மையை நோக்கி இருக்க வேண்டும். தேவைகள் இருந்தால், அதற்கான வழிகளும், எண்ணங்களும், சக்திகளும்— எல்லாம் வழங்கப்படும். மனிதன் முயற்சி செய்ய வேண்டும்; சித்தர்கள் வழி நடத்துவார்கள். இதை தொடர்ச்சியாக செய்வதன் மூலம், தனக்கும், பின் வரும் சந்ததிகளுக்கும் சிறப்பான வாழ்க்கை உறுதி செய்யப்படும்.) 

இடைக்காடர் சித்தர் :- எவை என்று நன்றிட, நிச்சயம் தன்னில் அறிந்திட எங்களுக்கு பின் தெரியும். எங்கு எவை என்று கூட சக்திகள் அதிகமாக விழுகின்றது என்றது. நிச்சயம் தன்னில் கூட அங்கெல்லாம் பின் அழைத்து, பின் நிச்சயம் தன்னில் கூட. ஐயோ, எங்களுக்கு ஒன்றும் தெரியாதே என்று சொன்னாலும், நிச்சயம் தன்னில் கூட. ஐயோ, பாவம் எப்படி செல்வதே என்று தெரியவில்லை. 


இடைக்காடர் சித்தர் :-  என்றாலும், அவர்களை அழைத்து யாங்கள் சக்திகளை உருவேற்றிக் கொடுத்து, நிச்சயம் தன்னில் கூட வளமாக்குவோம். குடும்பத்தையும் பின் இவ் நாட்டையும். 


சுவடி ஓதும் மைந்தன், அடியவர்  வாக்கின் சுருக்கம் :-  ( ஒவ்வொருவருக்கும் உள்ள குறைகள், அவர்களுக்குள் உள்ள ஒளி பற்றாக்குறையால் ஏற்படுகின்றன. அந்த ஒளி குறைவால் தான் குழந்தை பிரச்சனை, சொத்து இழப்பு போன்ற துன்பங்கள் உருவாகின்றன. மனிதர்கள் “எங்களுக்கு ஒன்றும் தெரியாது”, “எப்படி செல்வது” என்று குழப்பமடைந்தாலும், சித்தர்கள் அந்த இடங்களை அறிந்து, அவர்களை அழைத்து, தேவையான சக்திகளை உருவாக்கி, குடும்பத்தையும் நாட்டையும் வளமாக்குவார்கள்.


நீங்கள் வரவில்லை என்றாலும், அவர்கள் உங்களை அழைத்து சென்று, தேவையானதை செய்து தருவார்கள். ஏற்கனவே எங்கு சக்திகள் அதிகமாக விழுகின்றன என்பதை சித்தர்கள் அறிவார்கள்; அந்த இடங்களில் உங்களை அழைத்து சென்று, உங்கள் குறைகளை தீர்த்து, ஒளியை நிறைவு செய்து, வாழ்க்கையை முன்னேற்றுவார்கள்.) 


இடைக்காடர் சித்தர் :- இதை என்று அறிய, பின் ஒன்றுமே தெரியவில்லையே என்று இறைவா என்று சொன்னாலும், யாங்கள் அழைத்து, அதாவது நிச்சயம் இதுபோன்ற பின் மாபெரிய சித்தர்கள் வாக்கை கேட்டாலும், புண்ணியமே 


சுவடி ஓதும் மைந்தன்:- ( உங்களுக்கு ஒன்னும் தெரியல என்றாலும், பரவாயில்லை. நாங்க கூப்பிட்டு உங்களுக்கு எல்லாம் சொல்லித் தருகின்றோம் என்று சொல்றாங்க.) . 


இடைக்காடர் சித்தர் :- எதை எவை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட. இதனால் எவை என்று அறிய பல மக்களுக்காக ஓடோடி, எதை என்று அறிய வந்து, பின் அதாவது புராணத்தையும் ஓதி, நிச்சயம் அதுவும் புண்ணியமே ஒரு வகை 


சுவடி ஓதும் மைந்தன், அடியவர்  வாக்கின் சுருக்கம் :-  (  உலகை காப்பாற்ற சிவபுராணம் கூட்டு பிரார்த்தனைக்கு வந்தாலே ஒரு வகை புண்ணியம்)


===============================================

(எனவே அடியவர்கள் அனைவரும் இனி வரும் கூட்டுப்பிரார்த்தனிக்கு உங்கள் குடும்பத்துடன் வருக வருக. ஏதும் அறியாத உங்கள் குழந்தைகளுக்கும் புண்ணியம் உண்டாகும் அவர்கள் அறியாமலேயே )

====================================================


இடைக்காடர் சித்தர் :- இவைத்தன் உணர்ந்து, எதை என்று பெரிய இதனால் இப்படித்தான் புண்ணியங்களை சேர்க்க முடியும். சிறு சிறுதாக 



இடைக்காடர் சித்தர் :- இவை நிச்சயம் நீங்கள் பின் விரும்பியதை பின் அடைந்து விடலாம். நிச்சயம் தன்னில் கூட. ஏனென்றால், பின் கலியுகம் என்பது வாழ முடியாத காலம் என்பதை எல்லாம் சித்தர்கள் பின் எடுத்துரைத்து, எடுத்துரைத்தே. ஆனாலும், பின் வாய்ப்பை அளித்திருக்கின்றான் ஈசன். பின் அறிந்தும், இதனால் நிச்சயம் தன்னில் கூட அவ் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு, அறிந்தும், பின் உடனடியாக ஒரு அழிவும் காத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால், பின் ஈசனிடத்திலே வந்து முறையிட்டு விட்டீர்கள். ஈசனை பார்த்துக் கொள்வான். 


சுவடி ஓதும் மைந்தன், அடியவர்  வாக்கின் சுருக்கம் :-  (  கலியுகம் என்பது வாழ முடியாத காலம் என சித்தர்கள் எடுத்துரைத்தாலும், இறைவன் ஒரு அரிய வாய்ப்பை வழங்கியுள்ளார்.. அந்த வாய்ப்பை சிறு சிறு நல்ல செயல்கள் மூலம் புண்ணியங்களை சேர்த்து, சரியாக பயன்படுத்த வேண்டும். இதன் மூலம், நீங்கள் விரும்பியதை அடையலாம். ஆனால், இந்த வாய்ப்பை தவற விட்டால், உடனடியாக ஒரு அழிவு காத்திருக்கிறது. எனவே, இப்போது ஈசனிடத்திலே முறையிட்டு விட்டதால் , அவர் ஈசனை பார்த்துக் கொள்வார்) 


இடைக்காடர் சித்தர் :- இவைதன் அனைவருமே ஒரு ஐந்து நிமிடம் எதை என்று புரிய. அதாவது, ஈசன் பின் ஆலயத்தை நோக்கி, நிச்சயம் தன்னை கூட அனைவருமே  என்று மௌனத்தில் இருங்கள். 


(கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் அனைவரும் திருவண்ணாமலை ஆலயத்தை நோக்கி 10 நிமிடங்கள் மௌனத்தில் இருந்தார்கள். அதன் பின் ) 


====================================================================

# கோபம் கோபம் கொள்கின்ற பொழுது மௌனத்தை காத்தால், ஏற்றங்கள்

====================================================================


இடைக்காடர் சித்தர் :- நிச்சயம் தன்னில் கூட மௌனத்திற்கு எவ்வளவு சக்திகள் இருக்கின்றது என்பதை எல்லாம் நீங்கள் நிச்சயம் போகப்போக. அதனால் பின் கோபம் கோபம் கொள்கின்ற பொழுது மௌனத்தை காத்தால், பின் ஏற்றங்கள். அதாவது பேசும் பொழுது கூட மௌனத்தை காத்து பேசினால் யோகங்கள் கூடும். 


====================================================================

# உண்ணும்போது மௌனம் , இறைவன் சிந்தனையோடு உணவு உண்ண  யோகங்கள் கூடும்

====================================================================


இடைக்காடர் சித்தர் :-  இன்னும் பின், அதாவது பின் உண்ணுகின்ற பொழுதும், நிச்சயம் ( இறை ) யோசனைகளோடு, நிச்சயம் தன்னில் கூட யோகங்கள் கூடும். இதனால் நிச்சயம் மனது வலிமை பெறும். 


இடைக்காடர் சித்தர் :- அனைத்திலும் கூட, இதனால் பின் நினைத்தாலே எதை என்று அறிய அனைவருக்குமே பின் நிச்சயம் தெரியும். (நினைத்தாலே முக்தி அளிக்கும் தலம் திருவண்ணாமலை)   எதை என்று புரிய ( நீங்கள்) எங்கிருந்தாலும், நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது பின் எவை என்று அறிய, பின் ஒரு ஐந்து, பின் அல்லது அல்லது எது என்று இன்னும் பின் பத்து, பின் மைல் தன்னில் கூட சுற்றி, பின் அவ் பரிசுத்த ஆற்றல்கள் விழுந்து கொண்டே, விழுந்து கொண்டே, நிச்சயம் தன்னில் கூட திருவண்ணாமலை , மலை தன்னிலே எங்கு வேண்டினாலும், நிச்சயம் தன்னில் கூட ஈசன் இறங்கி வருவான் என்பது திண்ணமான வாக்கு. 


வாக்கு விளக்கம் :- ( திருவண்ணாமலை தலத்தின் மகிமை நினைத்தாலே முக்தி அளிக்கும் இந்த தலம், 10 மைல் சுற்றளவில் எங்கிருந்தாலும் நினைத்தால் கூட ஈசன் அருள் தரும் இடமாகும். ஒருவர் எதை பற்றி அறிய விரும்பினாலும், அந்த எண்ணத்தின் ஆழத்தில் ஈசனின் சன்னிதி நிச்சயமாக கிடைக்கும். திருவண்ணாமலையை சுற்றி—even ஐந்து மைல், பத்து மைல் தொலைவில்—even அங்கும் பரிசுத்த ஆற்றல்கள் விழுந்து கொண்டே இருக்கின்றன. அந்த மலை தன்னிலேயே ஈசனை எங்கு வேண்டினாலும் அவர் இறங்கி வருவார் என்பது சித்தர்களின் திண்ணமான வாக்காகும். இது ஈசனின் அருள் எப்போதும் அணுகக்கூடியது என்பதையும், திருவண்ணாமலையின் ஆன்மீக சக்தி எல்லா இடங்களிலும் பரவியிருப்பதையும் உணர்த்துகிறது.)



இடைக்காடர் சித்தர் :-  நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் எவை என்று அறிய, இன்னும் அவரவருக்கு வினைகள் சூழ்ந்து நிற்க, பின் உடம்பு தன்னில் கூட அங்கங்கு அழுக்குகள் தேங்கி நிற்க, நிச்சயம் தன்னில் கூட, பின் நோய்கள் வரும். அவை தன் எடுக்க, அடுத்து நிச்சயம் தன்னில் கூட அறிந்தும், இவைத்தன் இன்னும் பின் அதனுள்ளே ஞானங்கள் பெற்று, தேரையன் நிச்சயம் தன்னில் கூட வாக்குகள் செப்புகின்ற பொழுது, நிச்சயம் எங்கு, பின் எப்படி, பின் அழுக்குகள் தங்கி, பின் அதாவது ஊன் உடம்பை கெடுக்கும் என்பதை எல்லாம் அடுத்து, பின் பிரார்த்தனையில், நிச்சயம் தன்னில் கூட தேரையின் சொல்வான். அதுவரையில், நிச்சயம் பொறுத்தருளுக.  நிச்சயம் ஏற்றங்கள் உண்டு. யாங்கள் கொடுப்போம். 


இடைக்காடர் சித்தர் :- யாங்கள் சொல்லியதை, நிச்சயம் தன்னில் கூட கடைபிடித்து, நிச்சயம் பின் ஏற்றம் பெறுக. 


வாக்கு விளக்கம் :- ( மனிதனுக்கு வினைகள் சூழ்ந்து நிற்கும் போது, உடலில் அழுக்குகள் தேங்கி நோய்கள் உருவாகின்றன. இந்த அழுக்குகள் ஊன் உடம்பை பாதிக்கின்றன. ஆனால், இவையனைத்தையும் அறிந்து, ஞானம் பெற்று, தேரையர் சித்தர்  வழியாக அடுத்த கூட்டு பிரார்த்தனையில்  வாக்குகளைச் செப்பும் போது, எங்கு, எப்படி, என்ன காரணம்—all தெளிவாக விளங்கும். அடுத்த கூட்டு  பிரார்த்தனையின் மூலம் தீர்வு பெறலாம். அதுவரை பொறுமையுடன் இருக்க வேண்டும். சித்தர்கள் கூறியதை கடைபிடித்தால், நிச்சயமாக ஏற்றங்கள் உண்டாகும்; அவர்கள் அதனை வழங்குவார்கள். ) 


இடைக்காடர் சித்தர் :-  பின் அதாவது, பின் திருவாசகத்தில் 13 ஆம் பின் பதிகம், ( திருப்பூவல்லி ) பின் பாடல் அறிந்தும் எதை என்று கூட யோகங்கள். 


இடைக்காடர் சித்தர் :-  இதைத்தன் அறிந்து, இவைத்தன் நிச்சயம் தன்னில் அறிந்தும், பின் நவ, எவை என்று அறிய, பின் அதாவது தானியங்களுடனே தீபங்கள், பின் ஏற்றி, நிச்சயம் தன்னில் கூட, பின் காவேரி  தன்னில் , இப்பாடலை பாடிற்று, நிச்சயம் தன்னில் கூட, பின் அமாவாசை தன்னில் கூட, நீராட,  அகத்தியனின் ஆசிகளும் கிட்டும், இன்னும் ஞானங்களும் கிட்டி , இன்னும் அவரவருக்கு அகத்தியன் வந்து வாக்குகள் சொல்வான் பலமாக.


சுவடி ஓதும் மைந்தன் உரையின்  விளக்கம் : - (திருவாசகத்தின் 13ஆம் பதிகமான திருப்பூவல்லி பாடலை, பாடினால் யோகங்கள் கிட்டும்.


அமாவாசை நாளில் காவிரி ஆற்றில் நீராடி, இந்த பாடலை  பாட வேண்டும். நவ  தானியங்களுடனே  தீபங்களை ஏற்றி, பக்தியுடன் பாடும் போது, குருநாதர் அகத்திய மாமுனிவரின் அருள் ஆசிகள் மேலும் பலமாக கிடைக்கும்.  


நவதானியங்கள் வைத்து அதன்மேல் நவ தீபங்கள் ஒரே பாக்கு மட்டை தட்டில் ஏற்றலாம் அல்லது தனித்தனியாகவும் ஏற்றலாம். உங்கள் விருப்பமே. 

இந்த பாடலை காவிரி ஆற்று நீர் நிலைகளில், தீபம் ஏற்றி, பூ வைத்து, நவதானியங்களை வைத்து பாடும் போது,  குருநாதர் அகத்திய மாமுனிவரின் அருள் ஆசிகள்  மேலும் பலமாக கிடைக்கும்


மேலும், ஞானம் பெருகும். இதை உணர்ந்து, நிச்சயமாக இவ் வழிபாட்டை செய்தால்,  நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்,   உங்களுக்கு நேரடியாக, பலமான  வாக்குகள் உரைப்பார்கள்.  இதனை அடியவர்கள் நன்கு பயன்படுத்தி கொள்க. குருநாதரின் வாக்குகள் பெறுக. அனைவருக்கும் தெரிவியுங்கள். )


கூட்டுப்பிரார்த்தனை அடியவர்கள் :- (அடியவர்கள் திருவாசகத்தில் உள்ள 13ஆம் பதிகம் “திருப்பூவல்லி ” என்ற பதிகத்தை பாடினார்கள் ) 


====================================================

# (3) அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு ஆரம்பம் 

====================================================


அகத்திய மாமுனிவர் வாக்கு :-  45 பதிகத்தை ( பாடுங்கள் )


கூட்டுப்பிரார்த்தனை அடியவர்கள் :-  (அடியவர்கள் திருவாசகத்தில் உள்ள 45 ஆவது பதிகம் “யாத்திரைப் பத்து” என்ற பதிகத்தை பாடினார்கள் ) 


அகத்திய மாமுனிவர் வாக்கு :-   அப்பனே இதைத்தன் ஏன் எதற்காக இப்பாடலை பாடச் சொன்னேன்? எதை என்று புரிய பின் மாணிக்கவாசகன் எதற்காக எவை என்று அறிய எத்தனையோ நிச்சயம் தன்னில் கூட உன்னிடத்தில் வர முடியாதவர்களும் ஏங்கி தவிக்கின்றனர். ஆனாலும் பின் நிச்சயம் உனை நினைத்து எதை என்று கூற, ஏதாவது நீயே நிச்சயம் மனதில் இறங்கி நிச்சயம் உந்தனுக்கே எதை என்று கூற பொருள்பட பாடச் சொல். நிச்சயம் பின் வர இயலாதவர்களும் நிச்சயம் அத்திருத்தலத்திற்கு வரும்படியே என்று நிச்சயம் அருளாசிகள் அருளாசிகள். 


சுவடி ஓதும் மைந்தன், அடியவர்  வாக்கின் சுருக்கம் :-  (  மனசில் திருத்தலத்தை நினைத்து இந்த யாத்திரை பத்து பாடலை பாடினால், அந்த ஸ்தல யாத்திரையின் பலன் கிடைக்கும். திருத்தலம் செல்ல சந்தர்ப்பம் இல்லாதவர்களும், பாடலின் மூலம் அந்த இடத்திற்கே சென்றதுபோல் புண்ணியம் பெறலாம். மாணிக்கவாசகர், ஈசனிடம் பாடலால் அருள் தர வேண்டும் என முறையிடுகிறார். அருள் பாடலின் வழியாக, மனதின் ஈர்ப்பு மூலம் யாத்திரை பலனும், வாய்ப்பும் நிச்சயம் கிடைக்கும். )


அகத்திய மாமுனிவர் வாக்கு :-   இதை என்று அறிவித்து இப்பாடலை பாடினாலே எது என்று கூற அழகாகவே நிச்சயம் தன்னில் கூட பின் எங்கிருந்தாலும் எவை என்று அறிய நிச்சயம் ஈசன் தலத்திற்கு நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது அண்ணாமலையிலே. 

சுவடி ஓதும் மைந்தன், அடியவர்  வாக்கின் சுருக்கம் :-  (அடியவர்கள் உலகத்தில் எங்கு இருந்தாலும் , இப் பாடலை இருந்த இடத்தில் இருந்தே மனமார பாடும் ஒவ்வொருவரின் பாடல் சத்தமும் திருவண்ணாமலையில் ஆதி ஈசன் காதில் கேட்கும். உடனே ஆசிகள் கொடுத்துவிடுவார் ஆதி ஈசனார். எங்கிருந்தது இப்பாடலை பாடினாலும் திருவண்ணாமலை தலத்திற்கு வந்த பலன். )

அகத்திய மாமுனிவர் வாக்கு :-  இன்னும் ஞான ரகசியங்கள் ஒளிந்துள்ளது பல சித்தர்களும் வாக்குரைக்கும் பொழுது தெரியும் அனைத்தும் தெரிந்து கொள்வீர்களாக. 


உங்களை நீங்கள் வென்று மற்றவர்களும் பின் வெல்ல செல்வீர்களாக நிச்சயம் யாங்கள் பின் துணையிருப்போம் கடை நாளும் நிச்சயம் தன்னில் கூட. 


ஏன் எதற்கு எவ்வாறெல்லாம் நிச்சயம் உலகம் எதனை பின் நோக்கி செல்கின்றது என்பதை எல்லாம் நீங்கள் அறிந்ததே.  அத்தனையும் யாங்கள் மாற்ற நிச்சயம் தன்னில் கூட பின் யார் யார் எதனை மூலம் பின் இயக்கி,  நிச்சயம் தன்னில் கூட அனைத்தும் பின் மாற்ற வைப்போம். 


இன்னும் எதை என்று அறிய ஞான ரகசியங்கள், இன்னும் ஞான பாடல்கள் பாடலை பாடினால் நோய்கள் உடனடியாக குணமாகும் நிச்சயம் தன்னில் கூட அவ் பாடலை பின் பாடினால் பின் படம் எடுக்கும் பாம்பும் கூட நிச்சயம் அமைதி காக்கும். நிச்சயம் இவையெல்லாம் நிச்சயம் யாங்கள் சொல்லித் தருவோம் கவலை இல்லை பக்குவப்படுத்தி பின் மேன்மையாக நிச்சயம் தன்னில் கூட 


இன்னும் இன்னும் சிறப்பாகவே வாக்குகள் உண்டு. சித்தர்கள் நிச்சயம் தன்னில் கூட உங்களைப் பின் வழிநடத்துவார்கள். மீண்டும் சொல்கின்றேன்.


சித்தர்கள் பின் வழியில் வருவதற்கும் நிச்சயம் தன்னில் கூட புண்ணியம் வேண்டும்.


நிச்சயம் எவை என்று அறிய கீழானவர்களை யாங்கள் சேர்க்க மாட்டோம்.  நிச்சயம் இவ்வுலகத்தில் இரண்டு எது என்று கூற (1) ஒன்று மேலானவர்கள் (2) மற்றொன்று கீழானவர்கள்.


நிச்சயம் மேன்மையான எண்ணங்கள் உடையவர்கள் மேன்மையானவர்கள். மற்றவர்கள் கீழான எண்ணம் உடையவர் பின் நிச்சயம் கீழானவர்கள். 


நிச்சயம் அக் கீழானவர்கள் எங்கள் அருகில் வரவே முடியாது. அதனால்தான் மேன்மையான எண்ணங்கள் வையுங்கள். யாங்களே அழைத்து வருவோம். இறைவனிடத்தில் அழைத்துச் செல்வோம். இறைவனை காட்டுவோம் அருளை, ஆசிகளை பெற்றுத் தருவோம். 


நீடோடி வாழ்க!  ஆசிகள்! ஆசிகள்! அனைவருக்குமே!. 


(அன்புடன்  சித்தர்கள் 02.11.2025 அன்று நடந்த திருவண்ணாமலை கூட்டுப் பிரார்த்தனையில் உரைத்த  வாக்கு பகுதி 5   நிறைவு. இதுவரை 5 வாக்குகளுடன் இந்த கூட்டுப் பிரார்த்தனை தொடர் வாக்குகள் நிறைவு பெறுகின்றது.) 


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!


No comments:

Post a Comment