இறைவா நீயே அனைத்தும்.
இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.
அன்புடன் அகத்திய மாமுனிவர் பெங்களூர் சத்சங்கம் - 12.November.2024 - பகுதி 5
ஆதி முதல்வனை மனதில் எண்ணி செப்புகின்றேன், அகத்தியன்.
(இவ் தொடர் வாக்கின் முந்தைய பகுதிகள்
(1) பகுதி 1 https://siththarkalatchi.blogspot.com/2025/11/510.html (2) பகுதி 2 https://siththarkalatchi.blogspot.com/2025/11/511.html (3) பகுதி 3 https://siththarkalatchi.blogspot.com/2025/11/512.html (4) பகுதி 4 https://siththarkalatchi.blogspot.com/2025/11/514.html (5) பகுதி 5 https://siththarkalatchi.blogspot.com/2025/11/516.html
( இவ் தொடர் வாக்கின்- 5 ஆம் பகுதி உரையாடல்களை இப்போது பார்ப்போம் )
குருநாதர் :- அறிந்து கூட, வண்டியில் ஏறு. நிச்சயம், பின் எப்படி? அதாவது, நிச்சயம், ஓட்டுநரிடம் கேள். எப்படி இயக்குவது என்று.
சுவடி ஓதும் மைந்தன் : - வண்டியில யார் சொல்றாங்க? உட்கார்ந்து, டிரைவர் சீட்ல, டிரைவர் சீட்ல, ஏதோ ஒரு சீட்ல, இது எப்படி ஸ்டார்ட் பண்றதுன்னு கேட்க சொல்றாரு.
அடியவர் :- ஓ…
குருநாதர் :- தாயே, இதற்கு தீர்வு நீ நிச்சயம் சொல்ல வேண்டும்?.
சுவடி ஓதும் மைந்தன் : - இது கண்டிப்பா நீ சொல்லணும். ஒன்னும் இல்ல. யாராவது கேட்டு சொல்லுங்க. இப்ப, வண்டியில உட்கார்ந்து இருக்கீங்க. நீங்க கேக்குறதே திரும்பி அந்த வண்டி மூலம் வந்துட்டாரு. ஸ்டார்ட் பண்ணி,
அடியவர் :- ஸ்டார்ட் பண்ணவேண்டும்.
சுவடி ஓதும் மைந்தன் : - எப்படி ஓட்டுறது? எப்படி மூவ் பண்ணுவீங்க?
அடியவர் 2 :- ஓட்டத் தெரிஞ்சா, ஓட்டணும் இல்ல? ஓட்டுபவர்களை வைத்து வண்டியை ஓட்ட வைக்கணும்.
அடியவர் :- அது வேறயா?
அனைத்து அடியவர்கள் :- ( சிரிப்புகள் )
சுவடி ஓதும் மைந்தன் : - அதுதான். எப்படி ஓட்டுவதுன்னு கேக்குறீங்க இல்ல?
=======================================
# புண்ணியத்தை செயல்பட வைக்க சித்தர்கள் இருக்கின்றார்கள்
=======================================
குருநாதர் :- தாயே, இதற்காகத்தான் சித்தர்கள் நாங்கள் இருக்கின்றோம். கற்பித்ததற்காகவே. அவை இல்லாமல், திருவாசகம் தேனாக இருக்கின்றது. இன்னும், பின் பாரதம், இன்னும் அறிந்தும் கூட, இன்னும், இன்னும், பின் ராமாயணம், இன்னும், இன்னும் இருக்கின்றது. ஆனால், அதில் கூட, பின் நிச்சயம் கற்று, பின் கொள்வதில்லையே.
சுவடி ஓதும் மைந்தன் : - ( புரியுதுங்களா? ஓட்ட தெரிஞ்சா, ஓட்டனும். இல்ல, தெரிஞ்சு ஓட்டணும். அவர் சொன்னாரு பாருங்க. அதற்காகத்தான் இதிகாசங்கள் எழுதி வச்சிருக்காங்களாம். )
அடியவர் :- அதெல்லாம் பின்பற்றனும்.
சுவடி ஓதும் மைந்தன் : - பின்பற்றனும்
அடியவர் :- கரெக்ட்.
குருநாதர் :- தாயே, நிச்சயம், இப்பொழுது புரிகின்றதா? பின் உந்தனுக்கு (வாகனத்தை ) ஓட்டத் தெரியுமா? தெரியாதா?
சுவடி ஓதும் மைந்தன் : - இப்ப புரிகின்றதா? எனக்கு சொல்லுமா? உனக்கு (வாகனத்தை ) ஓட்டத் தெரியுமா? தெரியாதா?
அடியவர் :- ஓட்டத் தெரியாது.
குருநாதர் :-அறிந்து கூட, அதனால்தான், யாங்கள் சித்தர்கள் செப்பிக்கொண்டே இருக்கின்றோம். பிழைப்பதற்கு. நிச்சயம், அதை கூட பின்பற்றுவதில்லை. பின், நிச்சயம், பின்பற்றாமல், நிச்சயம், பின் (வாகனத்தை ) ஓட்டிவிட்டால் என்ன ஆகும்?
அடியவர் :- ஆக்சிடென்ட் ஆகும்.
சுவடி ஓதும் மைந்தன் : - அவ்வளவுதான். (வாகனம் மோதி) டூமிலு. அப்படித்தான் சொல்றாரு. அப்ப, நாங்க சித்தர்கள் சொல்லிக் கொடுத்துட்டே இருக்கிறோம் உங்களுக்கு, அப்பா , இப்படி பண்ணுப்பா, இப்படி போகாதப்பா, இப்படி இருப்பான்னு சொல்லிக் கொடுத்துட்டே இருக்கிறோம். நீங்க….
அடியவர் :- பின்பற்றது இல்ல?
சுவடி ஓதும் மைந்தன் : - பின்பற்றது இல்ல? அப்ப என்ன ஆகும்?
அடியவர் :- ஆக்சிடென்ட் ஆகும் .
சுவடி ஓதும் மைந்தன் : - அம்மா சூப்பரா சொல்றாரு அம்மா, உங்களுக்கு புரியுதுங்களா?
(ஓர் அடியவர் அங்கு வந்தார் அப்போது அவருக்கு… )
சுவடி ஓதும் மைந்தன் : - ஐயா, வணக்கம்.
=======================================
# இறைவன் செயல்படும் ரகசியங்கள் - ஏன் கஷ்டங்கள் வருகின்றது ?
=======================================
குருநாதர் :- தாயே, இவன் வணக்கம் தெரிவித்தான். ஆனால், பின் இன்று உயிருடன் இருப்பதே இறைவன் இட்ட பிச்சை.
சுவடி ஓதும் மைந்தன் : - ( அவர் வந்த உடன் சொன்னாரு பாருங்க.இந்த அளவு உயிரோடு இருப்பதே பெரிய விஷயம் என்று சொல்கின்றார். )
மற்றொரு அடியவர் :- ஓ, என்ன? ( அவருக்கு நடந்தது? )
குருநாதர் :- ஆனால், நிச்சயம், பின், அதாவது, இறைவன், பின், அதாவது, உயிரை எடுக்காமல், அதன் மூலம் மற்றொரு கஷ்டத்தை கொடுத்து விட்டான் அவ்வளவுதான்.
சுவடி ஓதும் மைந்தன் : - ஆனால், அந்த உயிரை எடுக்காம, அதன் மூலம் ஏதோ ஒரு கஷ்டத்தை கொடுத்துட்டார்.
=======================================
# சில நேரங்களில் ஏன் கஷ்டங்கள் வருகின்றது ?
=======================================
குருநாதர் :- தாயே, இதே போலத்தான், இறைவன் செய்து கொண்டே இருக்கின்றான். பலபேருக்கு. ஆனால், தெரிவதில்லை.
சுவடி ஓதும் மைந்தன் : - இதேபோலத்தான் , இறைவன் செஞ்சு கொண்டே இருக்கிறார். ஆனால், தெரிவதில்லை.
குருநாதர் :- ஆனால், எந்தனக்கு பணம் போய்விட்டது. எந்தனக்கு அது போய்விட்டது. இது போய்விட்டது என்று புலம்பிக் கொண்டிருக்கின்றான்.
சுவடி ஓதும் மைந்தன் : - ( ஆனா, இறைவன் செய்தது நல்லது தான் நமக்கு. ஐயா, ஜீவநாடி. direct ஆக அப்படியே வரும். அப்ப, உயிரே போயிருக்கணும். அதுக்கு தகுந்தார் போல் வேற ஏதோ கொடுத்துட்டாரு. கஷ்டத்தை, அது அவருக்கு தான் தெரியும். )
அடியவர் :- அவருக்கு தான் தெரியும். அவருக்கு தான் தெரியும்.
குருநாதர் :- தாயே, ஆனால், நீ சொல்லவில்லையே. அகத்தியனே, உனக்கும் தெரியும் என்று
சுவடி ஓதும் மைந்தன் : - நீங்க ஏன்மா சொல்ல?
அடியவர்:- ஓ, அவருக்கு தெரியாது. ஆனா, அகத்தியருக்கு…
சுவடி ஓதும் மைந்தன் : - அகத்தியருக்கு தெரியும்னு நீங்க ஏன் சொல்லல?
அடியவர்:- (ஓ…)
குருநாதர் :- தாயே, இவ்வளவுதான் பக்குவங்கள். மனிதனுடைய பக்குவங்கள்.
சுவடி ஓதும் மைந்தன் : - இப்படித்தான் மனிதர்கள் இருக்கின்றார்கள். (குருநாதர்) அவருக்கும் தெரியும். நீங்க என்ன சொல்லிக்கணும்? அகத்தியருக்கும் தெரியும்னு சொல்லிக்கணும். ஆனா,
அடியவர்:- யோசனை பண்ணல.
குருநாதர் :- தாயே, இப்படி யோசனை செய்யாமல் இருந்தால், மற்றவன் உன்னை ஏமாற்றி விடுவான்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( அப்ப, இப்படி யோசனை செஞ்சிருந்தா ஒகே. இல்லையென்றால் மத்தவங்க உங்களை ஏமாத்திருவங்க என்று சொல்கின்றார். )
=======================================
# எப்படி பூஜைகள் / பரிகாரங்கள் செய்து பணத்தை இழக்கிறார்கள்?
=======================================
குருநாதர் :- நிச்சயம், அதாவது, பின், பின், இவ் தாய், நிச்சயம், ஏமாறுவது போல் இருக்கின்றாள். நிச்சயம், பின், (இவ் தாய்யை) ஏமாற்றி விடலாம் என்று (பரிகாரம் சொல்லும் பிற மனிதர்கள் ). பின், தாயே, இதைச் செய். இறைவன் கொடுப்பான். அதைச் செய். அங்கு செல். இங்கு செல். இப்போ பூஜைகள் செய். பணம் தா என்று. தாயே, இப்படித்தான் நிச்சயம் அப்பொழுது யார் மீது குற்றம்?
அடியவர்:- என் மீதுதான் குற்றம்.
சுவடி ஓதும் மைந்தன் :- (உங்கள் மீதுதான் குற்றம். கரெக்டா சொல்லிட்டீங்க. இதாவது கரெக்ட் ஆ சொல்லிடீங்க)
அடியவர்:- அது கரெக்ட்
சத்சங்க அடியவர்கள் :- (சிரிப்பு)
சுவடி ஓதும் மைந்தன் :- ( அப்ப, நீங்க இது சரியா அறிவை பயன்படுத்தவில்லை என்றால், மத்தவங்க உங்களை ஏமாத்துவாங்க. )
அடியவர்:- ஆமா.
======================================
# ஏமாற்றுபவன் கர்மா - ஏமாறுபவனுக்கு வந்துவிடும்.
======================================
சுவடி ஓதும் மைந்தன் :- நீ அது கொடுப்பா நான் அது செய்கின்றேன் இது செய்கின்றேன். அப்ப, யாரோட தப்பு?
அடியவர்:- நம்ம தப்பு.
சுவடி ஓதும் மைந்தன் :- ( உங்களதான் கர்மா என்று சொல்கின்றார். )
(அடியவர்கள் கவனிக்க - அடுத்து வரும் வாக்கை இங்கு சுவடி ஓதும் மைந்தன் முன்பே சொல்லிவிட்டார் இங்கு. )
குருநாதர் :- அறிந்து கூட, அவனுடைய கர்மாவை கூட நீங்கள் ஏற்க வேண்டும்.
உண்மைதான்.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப, அந்த ஏமாற்றுகிறான் பாருங்க உங்களை,
அடியவர்:- ஆமா,
சுவடி ஓதும் மைந்தன் :- ( அவனுடைய கர்மத்தை நீங்க ஏற்றுக்கொள்வீர்கள். )
(ஏமாற்றுபவன் கர்மா - ஏமாறுபவனுக்கு வந்துவிடும். ஆனால் கொஞ்ச நாள் மட்டும் ஏமாற்றுபவனுக்கு வாழ்வு. )
குருநாதர் :- ஏன்? எதற்கு? என்று. இறைவன் பின், அட பாவியே , அறிந்து கூட, எவ்வளவு அறிவுகள், பின், உன்னிடத்தில் கொடுத்துள்ளேனே. அதை கூட பயன்படுத்தி தெரிவிலையே என்று.
அடியவர் :- நாம பயன்படுத்தல.
சுவடி ஓதும் மைந்தன் :- ( இறைவன் கேட்கிறார்: “ஏன்? எதற்கு?” என்று. அதற்குப் பின், அவர் சாடுகிறார்: “அட பாவியே! நான் உனக்குத் தெரிந்த அறிவுகளை எத்தனை அளவில் கொடுத்துள்ளேன்.” அறிந்தும், அந்த அறிவைப் பயன்படுத்தி சரியான தேர்வை செய்யாமல் தவறியிருக்கிறாய். )
======================================
# இறைவன் பாகுபாடு இன்றி, அனைவருமே சமமாகத்தான் படைத்திருக்கின்றார்.
======================================
குருநாதர் :- இறைவன், பின், பாகுபாடு இன்றி, அனைவருமே சமமாகத்தான் படைத்திருக்கின்றான்.
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாருக்கும், எல்லாம் கொடுத்து, சமமாகத்தான் படைத்திருக்காங்களாம்.
குருநாதர் :- ஆனால், பின், அறிந்து கூட, எதை என்று புரிய புரிய. ஆனால், கலியுகத்தில், பக்தியை தவறான பாதையில் எடுத்துச் செல்ல வேண்டும் என்பது விதி.
சுவடி ஓதும் மைந்தன் :- கலியுகத்துல, பக்தியை தவறான வழியில் பயன்படுத்த வேண்டும். இதுதான் விதி என்றார். நல்லவங்க பயன்படுத்த முடியாது.
======================================
# கலியுகத்தில், நல்லோர்கள் மறைந்து தான் வாழ வேண்டும்.
======================================
குருநாதர் :- அப்பனே, கலியுகத்தில், நல்லோர்கள் மறைந்து தான் வாழ வேண்டும்.
சுவடி ஓதும் மைந்தன் :- மறைஞ்சுதான்,
அடியவர் :- ஒளிஞ்சுதான் இருக்கணுமாம்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஒளிஞ்சுதான் இருக்கணுமாம்.
குருநாதர் :- அறிந்தும் கூட, ஏன் இதை யான் செப்பினேன்? இங்கு என்றால், நிச்சயம், இறைவனும் கூட, பின், நிச்சயம், மறைந்து, மறைந்து இருந்து தான் நல்லது செய்வான்.
குருநாதர் :- தாயே, நிச்சயம், இக்கலியுகம் அதுபோல், இறைவன் வரும் வரும் காலங்களில், வருவரும் காலங்களில், நேரடியாக வருவான் தாயே. நிச்சயம், யான்தான் இறைவன் என்று சொல்லுவான். ஆனால் யாரும் நம்ப போவதில்லை.
குருநாதர் :- அப்பனே, இதை பல வாக்குகள் சொல்லிவிட்டேன்.
குருநாதர் :- அறிந்து கூட, அப்பனே, நிச்சயம், அப்பனே, பின், முன்னே இருப்பவனே, அறிந்து கூட, எவை என்ற அனைவரிடத்திலும், நிச்சயம், எதை என்று புரிய புரிய. அப்பனே, ஏதாவது ஒன்றை சொல்.
அடியவர் :- கலியுகத்துல இவ்வளவு போர் நடக்குது இல்லைங்களா?
(அமர்ந்தவாறே பதில்கள் உரைத்தார். அதற்கு …. )
குருநாதர் :- அப்பனே, இவை போன்று, அதாவது, இறைவன் போன்று அமர்ந்திருக்கின்றாய் அப்பனே. இறைவன் நீயே என்று அப்பனே. நிச்சயம், எழுந்து நில்லப்பா.
அடியவர்கள் :- ( சிரிப்புகள் )
(அந்த அடியவர் எழுந்து நின்றார்கள் )
அடியவர் :- எல்லாரும் தவம் செஞ்சு, அந்த போர் செய்யற மக்களுக்காக, அந்த போரால பாதிக்கப்பட்டிருக்கிறவங்களுக்கு, ஆத்மங்களை சாந்தி அடையானும் என்று தவம் செஞ்சா நல்லா இருக்கும்னு என்னுடைய விருப்பம் இருக்கு.
குருநாதர் :- அப்பனே, எப்படி தவம் செய்வது என்று கூறு.
சுவடி ஓதும் மைந்தன் :- எப்படி தவம் செய்றது? எழுதி நிக்கிறோம். ஐயா, உங்களுக்கு உட்காரவே சொல்லுங்க.
அடியவர் :- அது ரொம்ப நாள், ரொம்ப வருஷமா எனக்கு ஒரு அந்த சங்கல்பம் இருக்குது. ஏன்னா, எல்லா பக்கமும் குருமார்கள், எல்லா பக்கமும் உலக அளவுல இருக்கிறாங்க. சோ, உலக அளவுல இருக்கிற எல்லாருமே ஒரே சங்கல்பத்தோட இந்த போர் நிக்குது.
==========================================
# போட்டி மனப்பான்மை உள்ள குருமார்கள்
==========================================
குருநாதர் :- அப்பனே நிச்சயம், அப்பனே, ஒருவன் ஒருவன். அதனால்தான் பக்தி என்பது கலியுகத்தில் பொய்யாக போகும் என்று. ஆனால் ஒருவன் ஒருவன், அப்பனே, எப்படி இருக்கின்றான் தெரியுமா? அப்பனே, யான்தான் பெரியவன். என் பேச்சைத்தான் கேட்க வேண்டும். அவன் சிறியவன். அவன் பேச்சை நிச்சயம் கேட்கக்கூடாது என்று அப்பனே. ஒருவன் கூட அப்பனே, எவை என்பது அறிய. பின், கர்வம் கொண்டிருக்கின்றான் அப்பா. யான் பெரியவன். யான் பெரியவன் என்று. இது பக்தியா?
அடியவர் 2 :- இல்லவே இல்ல.
சுவடி ஓதும் மைந்தன் :- ( இன்றைய குருமார்கள் ஒருவரை பற்றி ஒருவர் குறை சொல்லிக்கொண்டு உள்ளார்கள் )
குருநாதர் :- அப்பனே, இவர்களைப் பற்றி இவர்களே குறை கூறிக்கொண்டிருக்கின்றார் அப்பனே. இது பக்தியா?
குருநாதர் :- அப்பனே, இப்பொழுதுதான் சொன்னேன் அப்பனே. பக்திக்குள் வந்துவிட்டால், பொறாமை இருக்கக்கூடாது என்று இருக்கக்கூடாது என்று.
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் அப்பனே, சொல்வதெல்லாம் உண்மை என்பேன் அப்பனே. நிச்சயம், உண்மையான குருமார்களால், அப்பனே, இதை காக்க முடியுமப்பா. ஆனால் இல்லையே அப்பா.
அடியவர் :- அப்போ, பல ஞானம் அடைஞ்ச சித்தர்கள் எல்லாம் சமாதியில இருக்கிறாங்க. இல்லீங்களா ? அவங்க மூலம் …..
குருநாதர் :- அப்பனே, அதனால்தான், அப்பனே, யாங்கள் சிறிதளவாவது காத்துக் கொண்டிருக்கின்றோம் அப்பனே. இன்னும், அப்பனே, காக்கலாம் என்பேன் அப்பனே. நிச்சயம் அப்பனே அனைத்தும் அழிந்து போய் சென்று விடுவான் என்பேன் மனிதன். அதனால்தான் அப்பா, பல கஷ்டங்களை யாங்களே கொடுக்கின்றோம்.
அடியவர் :- ஏன்னா, குருமார்கள்ல வித்தியாசம் இருக்குது. சோ, சித்தர்கள் ஞானம் அடைஞ்சவங்களுக்கு அந்த பக்கம் அடைஞ்சது.
சுவடி ஓதும் மைந்தன் :- அதுதான் என்ன சொல்றாருன்னா திருந்துங்கப்பா, திருந்துங்கப்பான்னு சொல்லிட்டே இருக்காங்க. ஆனாலும், திருந்தவில்லை. திருந்தவில்லை.
குருநாதர் :- அப்பனே, கீதையில் இல்லாத வார்த்தையாப்பா? அப்பனே, வாசகத்தில் இல்லாத பின், எவை என்று இருக்கின்றதப்பா?
குருநாதர் :- அப்பனே, இப்பொழுதே திருவாசகத்தில், அப்பனே, பின் 34வது பாடலை பாடு.
=============================================
# எட்டாம்-திருமுறை-திருவாசகம் - 34வது - பாடல்
=============================================
=============================================
# உயிருண்ணிப்பத்து - பைந்நாப் பட அரவேரல்குல்
=============================================
(அடியவர்கள் பாடலை பாட தயார் ஆனார்கள் )
குருநாதர் :- தாயே, முதலில் எழுந்து நில்று. கற்றுக்கொள், தாயே. இதுதான் பெண்களுக்கு ஒழுக்கம்.
குருநாதர் :- தாயே, நிச்சயம், அதைப்பற்றி இவன் தனக்கு நீ எடுத்துரை.
சுவடி ஓதும் மைந்தன் :- அந்த பாடலை பத்தி, இவருக்கு எடுத்துரைக்கிறேன்றார்.
மற்றொரு அடியவர் :- முன்னாடி வாங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- இவங்களுக்கு எக்ஸ்பிளைன் பண்ண சொல்றாரு.
(அடியவர் மெதுவாக பாட ஆரம்பித்தார் )
குருநாதர் :- தாயே, அனைவருக்குமே கேட்கவில்லை தாயே.
மற்றொரு அடியவர் :- சத்தமா சொல்லுங்க.
குருநாதர் :- பின், நிச்சயம், ஏனென்றால் உன்னை நிற்க வைத்திருக்கின்றேன். பின், இதைச் சொன்னால், உந்தனக்கும் சிறிது புண்ணியமாகும். அதனால்தான். நீயே புண்ணியத்தை பெற்றுக்கொள்ளவில்லையே. எவ்வாறு நியாயம்?
சுவடி ஓதும் மைந்தன் :- அதாவது, இதை சொன்னேன்னா, உங்களுக்கு சில புண்ணியம் ஏற்படும். நீங்க புண்ணியத்தை விரும்பவில்லையேன்றார். சத்தமா சொல்லுங்க (பாடுங்க )
அடியவர் 3:- சத்தமாக படுறேன் ங்க.
அடியவர் 3:- ( சத்தமாக , முதலில் நால்வர் துதி அதனை பாடினார் )
பூழியர் கோன் வெப்பொழித்த புகலியர் கோன் கழல் போற்றி
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான் அடி போற்றி
வாழி திருநாவலூர் வன் தொண்டர் பதம் போற்றி
ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி.
மாணிக்கவாசக பெருமான் திருவடி போற்றி, போற்றி.
சுவடி ஓதும் மைந்தன் :- அவருக்கு எக்ஸ்பிளைன் பண்ணுங்க. அவருக்கு எக்ஸ்பிளைன் பண்ணனும், புரிய வைக்கணும்.
அடியவர் :- ( திருவாசகம் - உயிருண்ணிப்பத்து - பின் வரும் முதல் பதிகத்தை பாடினார் )
பைந்நாப் பட அரவேரல்குல் உமைபாகமதாய் என்
மெய்ந்நாள்தொறும் பிரியா வினைக்கேடா விடைப்பாகா
செந்நாவலர் பரசும்புகழ்த் திருப்பெருந்துறை உறைவாய்
எந்நாட்களித் தெந்நாள் இறுமாக்கேன் இனியானே.
அடியவர் 3:- (விளக்கம் அளிக்க ஆரம்பித்தார் மற்றொரு அடியவருக்கு )
அடியவர் 3 :- சுவாமி வந்து, அரவம் அணிஞ்சிருக்காரு. உமையோர் பாகமா இருக்கிறார். என்னோட எப்பொழுதுமே பிரியாமல் இருப்பவர். என்னுடைய வினைகளை, நீக்கக்கூடிய, உமையோர் பாகமாக இருக்கக்கூடிய, பெருமானே, திருப்பெருந்துறையில, உறைந்திருக்கும் எம்பெருமானே,
எந்நாட்களும், தென்னாள், இருமார்க்கே, இனியானே.
எல்லா நாளும் எனக்குள்ள இருக்கும், இனிய, இனிய எம்பெருமானே.
குருநாதர் :- அறிந்து கூட, தாயே, போதும். அனைவருக்கும் இது புரிந்ததா?
அடியவர் :- ஒன்னும் புரியல.
குருநாதர் :- தாயே, நிச்சயம், எவை என்று அறிய, அறிய, நிச்சயம், நீ கேட்டாலே, ஒன்னும் புரியவில்லை என்று சொல்லிவிட்டாய்.
சுவடி ஓதும் மைந்தன் :- நீங்க ஒண்ணுமே கேட்கல.
அடியவர் :- கேட்டேன்.
குருநாதர் :- தாயே, கேட்டிருந்தால், நன்றாக புரிந்திருக்கும்.
அடியவர் :- பெருந்துறை தான் கேட்டுது..
குருநாதர் :- எதை என்று மரியறிய, தாயே, பின், அனைத்தும் இதற்கு என்ன அர்த்தம் என்று யானே சொல்லிவிடுகின்றேன். இறைவன் தான்.
சுவடி ஓதும் மைந்தன் :- பாடலுக்கு என்ன அர்த்தம்னா? இறைவன் தான் எல்லாமே, எல்லாமே, இறைவன்.
குருநாதர் :- தாயே, தெரியவில்லை என்று சொல்லிவிட்டாய். ஆனால் நீ என்ன சொல்லி இருக்க வேண்டும்? முதலில் அதை கூறு.
சுவடி ஓதும் மைந்தன் :- ஒன்றுமே கேட்கவில்லை. தெரியவில்லை என்று சொல்லிவிட்டீர்கள். அப்படி சொல்லலாமான்னு கேக்குறாரு உங்கள.
குருநாதர் :- தாயே, ஒன்று, நீ என்ன என்ன? பின், அவளிடத்தில் சொல்லி இருக்க வேண்டும். தாயே, நிச்சயம், கேட்கவில்லை என்று சொல்லி இருக்க வேண்டும். பின், இன்னும், பின், அனைவருக்கும் எடுத்துரை. பின், அர்த்தம் புரியவில்லை என்று சொல்லி இருக்க வேண்டும். ஏன் இதனால் சொல்லவில்லை?
சுவடி ஓதும் மைந்தன் :- ஏன் நீ அதெல்லாம் சொல்லல?
மற்றொரு அடியவர் :- கேக்குறாரு, பதில் சொல்லுங்க
அடியவர்கள் :- (சிரிப்புகள்)
அடியவர் :- ஏன் சொல்லலயா ? (குருநாதர் ) அவர் சொல்ல வைக்கல. அதனால..
குருநாதர் :- தாயே, நிச்சயம், என்மேல் பழி போடுகின்றாயா?
சுவடி ஓதும் மைந்தன் :- கடைசில, என் மேல பழி போட்டுறியா?
அடியவர் :- அந்த சிந்தனையே வரலையே.
குருநாதர் :- தாயே, இதுவும் உண்மைதான்.
அடியவர் :- ம்.
=========================================
# யார் குருநாதரை குறை சொல்லுவார்கள் ?
=========================================
குருநாதர் :- பலபேர், நிச்சயம், பின், அகத்தியனை வணங்கு. அவை செய்வான், இவை செய்வான் என்று சொல்லிட்டு, கடைசியில் ஒன்றுமே, பின், அகத்தியன் செய்யவில்லை என்று அகத்தியன் இல்லை என்று சொல்லிவிட்டு சென்று கொண்டே இருக்கின்றார்கள். பக்குவம் இல்லாத மனிதர்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- ரைட் தான் நீங்க சொல்றது.
அடியவர் :- கரெக்ட், அவர் தானே அந்த thought போடணும் நம்மகிட்ட.
குருநாதர் :- தாயே, அறிந்து கூட, அப்படி என்றால், நீ அதாவது அறிந்து கூட, எவை என்று புரிய புரிய, நீ மாணவன் என்று கொள். மாணவன் என்று பின் எண்ணிக்கொள். அறிந்து கூட, அப்பனே, எழுந்து நில்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, எழுந்து நில்லுங்க
அடியவர்கள் :- (அடியவர் 1 மாட்டிக்கொண்டார் என்று சிரிப்புகள்)
அடியவர் 1 :- ( எழுந்து நின்றார் )
குருநாதர் :- (அடியவர் 1 - டீச்சர்) நீ ஆசிரியன், இவள் (அடியவர் - மாணவர்) தனக்கு பாடத்தை ஏதாவது கற்பி.
சுவடி ஓதும் மைந்தன் :- (அடியவர்) நீங்க வந்து ஸ்டுடென்ட். (அடியவர் 1) இவங்க டீச்சர், ஏதாவது பாடத்தை கத்துக்கொடுப்பா என்று சொல்கின்றார்.
அடியவர் 1 :- சும்மா மூச்சை கவனிங்க. மௌனமா இருக்கணும்.
மற்ற அடியவர்கள் :- அதான் முடிஞ்சு போச்சு.
குருநாதர் :- அப்பனே, ஏதாவது ஒன்று சொல்லப்பா.
சுவடி ஓதும் மைந்தன் :- ஏதாவது ஒன்னு சொல்லுப்பான்றார்.
அடியவர் 1 :- மௌனமா இருங்க.
குருநாதர் :- இதற்கு நீ என்ன, நிச்சயம் சொல்ல போகின்றாய்? அவனிடத்தில்
அடியவர் :- சும்மா இரு சொல்லற.
அடியவர் :- சரி டீச்சர். பண்றேன். ( நீங்கள் சொன்ன அறிவுரையை செயல்படுத்துகின்றேன்)
குருநாதர் :- தாயே. அப்பொழுது என்னிடத்தில் மட்டும் ஏன் இவை போன்ற செப்பமில்லை?
அடியவர்கள் :- (பலத்த சிரிப்புகள்)
அடியவர் :- ஐயோ, ரொம்ப கஷ்டப்படுத்துகின்றார். சரி, சரி, சரி, சரி, சரி, சொல்லிடுறேன். அகத்தியர் அய்யா மன்னிச்சுக்கோங்க, அகத்தியர் ஐயா, மன்னிச்சுக்கோங்க.
குருநாதர் :- தாயே, இதுபோலத்தான் தாயே, பலபேர்கள் எவ்வாறு என்பதெல்லாம், நிச்சயம், இவ்வாறு தான் நடந்து கொண்டிருக்கின்றார்கள். அனைத்தும் தெரியும். ஆனால் எவை என்று அறிய, அறிய.
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாமே தெரியும். ஆனால் தெரியாத போல் இருக்கிறாங்க.
குருநாதர் :- தாயே, நிச்சயம், அறிந்தும் கூட, எவை என்று அறிய, அறிய. அதாவது, ஒரு பிறவில், அனைவருமே இங்கு இருப்பவர்கள் எல்லாம் என்னை பார்த்தவர்கள் தான்.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப இங்க யார் யாரெல்லாம் இருக்கிறாங்களோ, எல்லாரும், எல்லாருமே ஒரு பிறவியில, அகத்தியர் பார்த்துட்டு தான் வந்திருக்காங்க. அதனாலதான் நீங்க அந்த வாயில, அகத்தியர்ன்னு சொல்ல முடியுது. இல்லனா சொல்ல முடியாது,
தெரியாது எங்களுக்கு.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப நீங்க யார் யார் இருக்கிறீர்களோ, எல்லாருமே அகத்தியர் பார்த்தவங்க தான்.
=============================================
# இறைவன் - காந்தகம். மனிதர்கள் - இரும்பு துகள்கள்
==============================================
குருநாதர் :- தாயே, நிச்சயம், பின் பந்தங்கள் இருந்தால்தான், பின் நிச்சயம் ஒட்ட முடியும்.
சுவடி ஓதும் மைந்தன் :- அந்த அகத்தியரோட பந்தம் இருக்குது, உங்களுக்கெல்லாம் வந்து. அதனாலதான் நீங்க ஜென்மத்துல, அவருடைய வந்து பாக்குறீங்க, கேட்டு தேடிட்டு இருக்கீங்க. அவர் வந்து அந்த பந்தம் இருக்குது.
குருநாதர் :- தாயே, இது எப்படி என்றால், நிச்சயம், காந்தத்துடன் அணு ஒட்டுவது போல், இங்கு நிச்சயம், அறிந்து கூட, எவை என்று அறிய, அறிய. இரும்பை அறிந்து கூட, எவை என்று அறிய, அறிய. காந்தகத்தை, நிச்சயம், காந்தகத்தை, நிச்சயம், பின் இறைவனாகவும், பின் இரும்பை, நிச்சயம், நீங்களாகவும் எண்ணிக்கொண்டால், நல்லது.
அடியவர் :- ஓகே, ஓகே, புரியுது.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப காந்தகம் யாரு?
அடியவர்கள் :- (ஒருமித்த குரலில் ) இறைவன்,
(எப்படி இரும்பை , காந்தகத்துடன் ஓட்ட வைப்பது என்று அடுத்த பதிவில் பார்ப்போம்….. அன்புடன் அகத்திய மாமுனிவர் பெங்களூர் சத்சங்கம் - தொடரும் …. )
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!
சர்வம் சிவார்ப்பணம்!!!!!
No comments:
Post a Comment