உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:-
அப்பனே உந்தனுக்கு கீழே உள்ளவர்களை யோசி. அவர்களுக்கு ஏதாவது உதவி செய். அப்பனே தானாகவே நீ முன் வந்து விடுவாய் அப்பனே. இதனால் தனக்காக வேண்டும் இன்னும் அனைத்தும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இன்னும் பிள்ளைகளுக்கு வேலை வேண்டும். இன்னும் படிப்புக்கள் வேண்டும். இன்னும் எதை எதையோ வேண்டும் என்று நீ கேட்டுக்கொண்டிருந்தால் கூட இறைவன் தர மாட்டான் அப்பா. மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே.
மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுபோனாலும் பரவாஇல்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!
No comments:
Post a Comment