“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Tuesday, October 3, 2023

சித்தர்கள் ஆட்சி - 166 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - இராமேஸ்வரத்தின் முறையான வழிபாட்டு முறையும், சந்தோசமும்.

 





( அம்மை ஒருவர் இராமேஸ்வரம் செல்வது குறித்து கேள்வியைக் குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி பாதம் பணிந்து மதுரையில் அடியவர் இல்லத்தில் வைத்துக் கேட்ட போது, அன்பே வடிவான  அகத்திய பிரம்ம ரிஷி உலகோர்  இதுவரை உலகம் அறியாத ரகசிய வாக்கு ஒன்றை அருளினார்கள். அந்த வாக்கு உங்கள் பார்வைக்குச் சமர்ப்பிக்கின்றோம்)

ஆதி ஈசனின் பொற்கமலத்தைப்பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 

அம்மையே, அப்பனே அனைவரும் கேட்டுக்கொள்ளுங்கள். இராமேஸ்வரத்திற்கு எதற்குப் போகச்சொன்னேன்?  அதுவே கடைசி பின் ஈர்ப்புத்திறன் அதாவது தனுசுகோடி அங்குதான் இவ் ஆன்மாக்கள் ( முன்னோர்கள் ) அனைத்துமே தேங்கி நிற்கும். ஒரு சக்தியானது இவ் ஆன்மாக்களை அங்கு இழுத்துக்கொள்ளும்.  அங்குச் சென்றால்  (தனுசுகோடி) அருகே சென்றால் உங்களுக்கும் அவ்சக்திக்கும் நிச்சயம் ஈர்ப்பு விசை ஏற்பட்டு மீண்டும் அவ்ஆன்மா ( முன்னோர்கள் ) ஆனது உன்னிடத்தில் வந்து பின் பிறவி எடுக்க வில்லை என்றாலும் எதை என்றும் பின்பற்றி நிச்சயம் வேறு வேறு உயிருக்கு அதாவது அப்படியே அவ் ஆன்மா மாறிவிடும்(பிறவி எடுத்து விடும்) . (அப்படி பிறவி எடுக்கவில்லை) இல்லை என்றால் அங்கு நீ செல்கின்றாயே உள்ளே (அன்னை பர்வதவர்த்தினி உடனுறை ஆதி ஈசன் இராமநாத சுவாமி ) ஈசனிடத்தில் பின் அது சரணாகதி (முக்தி) அடைந்து விடும். இது யாருக்குமே தெரிவதில்லை. அதனால்தான் அங்குப் போகச்சொல்கின்றேன். போகச்சொல்கின்றேன். 


(முதலில் தனுஷ்கோடி அடிக்கடி சென்று பின் ஆதி ஈசன் இராமநாத சுவாமி தரிசனம் செய்ய வேண்டும். அப்போதுதான் முன்னோர்கள் ஆத்மா சாந்தி அடைந்து மனிதர்கள் வாழ்வில் சந்தோசங்கள் ஏற்படும்

(இங்கு மீண்டும் அம்மை ஒருவர் இது தொடர்பாகக் கேட்க) 

அகத்திய பிரம்ம ரிஷி:- அதனால் அம்மையே பல கஷ்டங்கள் (உந்தனுக்கு உள்ளது) அம்மையே அவ் ஆன்மா அங்கு அலைந்து கொண்டு இருந்தது என்பேன்.  (இது போல இராமேஸ்வரத்திற்கு ) அதாவது (அடிக்கடி) சென்று கொண்டே இரு. (அவ் ஆன்மா உன்னிடத்தில் வந்து உன்னை ) ஈர்க்கும். இறைவனிடத்தில் விட்டு விடு. அப்பொழுதுதான் (உனக்கு) சந்தோசங்கள் (உனது வாழ்வில் உண்டாகும்). 

அடியவர் கேள்வி:- எனது தம்பி ஈசனிடம் முக்தி அடைந்து விட்டாரா? 

அகத்திய பிரம்ம ரிஷி:- அப்பனே நிச்சயம்  (உனது தமையன் முக்தி அடையாமல்)  அலைந்து கொண்டு இருக்கின்றான் அப்பனே. (இராமேசுவரத்திற்கு அடிக்கடி ) சென்று கொண்டே இரு அப்பனே. யான் பார்த்துக்கொள்கின்றேன். அப்பனே இதன் ரகசியங்களும் முன்னே அப்பனே இப்பொழுது புரிகின்றதா? அப்பனே. அங்கேயே தான் இருக்கின்றான் அப்பனே. 


ஓம் அன்னை லோபாமுத்திரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம் !!!



————————————————-

இந்த பொன்னான வாக்கின்  விளக்கம்:-

அகத்திய பிரம்ம ரிஷி பாதம் காப்பு


ஒரு மனிதனை மிக வேகமாகக் கீழே அதள பாதாளத்தில் தள்ளிவிடுவது 3 முக்கிய கர்மாக்கள். இந்த மூன்றும் அவனது வாழ்க்கை எனும் பாத்திரத்தில் உள்ள 3 பெரிய ஓட்டைகள். (கீழே கொடுக்கப்பட்டுள்ள சதவிகிதம் ஒரு தோராயமே - புரிதலுக்காக) 


1) பித்ரு கர்மா (70%) ( இந்த தளத்தில் உள்ளது போல் வழிபட இந்த மிகப்பெரிய ஓட்டை குரு அருளால் அடைபடும்) 

2) வம்சத்தின்/குலத்தின்/பரம்பரையின் பூர்வ பாவங்கள் (15%)

3) அந்த தனி மனித ஆத்மாவின் பூர்வ ஜென்ம பாவங்கள்.(15%)


இந்த ஓட்டைகளை அடைக்காமல் எந்த மகத்தான முன்னேற்றமும் ஒரு மனிதனின் வாழ்வில் சாத்தியமாகாது. ஓட்டை பாத்திரத்தில் நீர் ஊற்றுவது போல. 


நம்மைத் தாக்கும் எதிரிகள் இந்த மூவர் கூட்டணி. அதள பாதாளத்தில் உள்ள நம் அனைவரின் வாழ்க்கையில்  அதி மிக உச்ச இமாலய வெற்றி கொள்ள இந்த மூவரையும் அழிக்க வேண்டியது அவசியம்.  குருநாதர் இதனைப் பல வாக்குகளில் உணர்த்தி, அறிவுறுத்தி நம் அனைவரையும் நல் வாழ்வு வாழ வைக்க அருளுகின்றார். நாம் அனைவரும் குருநாதருக்கு ஒரு எறும்பு போல. இருப்பினும் நமக்கு , மனித குலத்திற்கு இந்த வழிமுறைகளை அருளுகின்றார். சித்த கருணாமூர்த்தியான அகத்திய பிரம்ம ரிஷியின் கருணையோ கருணை. 


இந்த தளத்தில் குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த படி அனைவரும் அடிக்கடி இராமேஸ்வரம் சென்று வழிபட்டு வெற்றி வாகை சூடுங்கள். உங்கள் குடும்பத்தில் சந்தோசங்கள் பொங்கி வழியட்டும். தலை நிமிர்ந்து பெருமையுடன் வாழ்க வளமுடன். குரு அருளால் இந்த வாக்கை அடுத்தவருக்கு எடுத்துச் சொல்லி புண்ணியத்தையும் பெற்றுக்கொள்ளுங்கள். இந்த வாக்கை அனைத்து தளங்களிலும் இட உதவுங்கள். தமிழகத்தில் உள்ள 7 கோடி மக்களுக்கும் கொண்டு சேர்க்க உதவுங்கள். 

ஒவ்வொரு குடும்பத்தின் குலத்திலும் 5 முதல் 10 முன்னோர்கள் மறு பிறப்பு எடுக்காமல், முக்தி/சாந்தி அடையாமல் தவிக்க வாய்ப்பு அதிகம். ஒரு சில நேரங்களில் ஒரு ஆன்மா பிறவி எடுக்க 1000 வருடங்கள் கூட ஆகலாம். ஒரு நூறு ஆண்டுகளுக்கு 3 தாத்தாக்கள்  பூத உடல் நீங்க, 1000 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட நம் தாத்தாக்கள் மறு உலகத்தில் சிரமப்பட வாய்ப்பு அதிகம். இது போல பாட்டிமார்கள், மற்றும் இதர முன்னோர்கள் அலைய வாய்ப்பு உண்டு. அங்கு அவர்கள் அல்லல் பட, இங்கு குடும்பங்கள் அல்லல் படும் என்பதே பித்ரு தோஷத்தின் உள் விளக்கம்.

இந்த மகத்தான செய்தியை அனைவருக்கும் பரப்புவது தமிழகமே கூடி ஒரு பெரிய தேர் இழுப்பது போல. 


ஒவ்வொருவரும் குறைந்த பட்சம் 108 நபர்களுக்குப் பேசி புரிய வையுங்கள். அனைவரும் நன்றாக வாழட்டும். 


உலகம் இதுவரை அறியாத இராமேஸ்வர ரகசியம். எப்படி ஒருவர் வாழ்வில் சந்தோசங்கள் உண்டாகும் என்ற அதி சூட்சும ரகசிய வாக்கு. இந்த வாக்கை அனைத்து இனைய தளங்களிலும் பகிர வேண்டுகின்றோம். 


உங்கள் நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என அனைவரிடமும் அவசியம் பகிரவும். அவர்களிடம் எடுத்துக்  கூறவும். 


மகத்தான, மகிமை புகழ் வாக்கு. அனைவரும் இதனைப் பின்பற்றி அவர்கள் குடும்பத்துடன் சந்தோசமாக வாழ உதவுங்கள்.



ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment