“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Thursday, October 12, 2023

சித்தர்கள் ஆட்சி - 188 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - ஏன் சோதனைகள்?


 

உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:- 


அனைத்திலும் இறைவன் எதை என்று அறிய அறிய அப்பனே யான் ஒன்றைச்சொல்கின்றேன் அப்பனே. இதை சரியாக கேட்டுக்கொள்ளுங்கள். அப்பனே எவை என்றும் அறிய அறிய வாழ்க்கை இன்பமாகவே இருந்தால் அப்பனே நீங்கள் இறைவனையே வணங்கமாட்டீர்கள் என்பதை எல்லாம் நீங்கள் அறிந்ததே. அறிந்தும் அறிந்தும் கூட ஆனால் அப்பனே இறைவன் எதை என்றும் கூற அனைவரையுமே படைக்கின்றான். ஆனாலும் அப்பனே நீங்கள் பின் இறைவன் விரும்பியது போல் இல்லை. அதனால்தான் அப்பனே எதை என்று கூற ஒரு கஷ்டத்தை எதை என்று கூற வைத்து பின் இறைவன் விரும்பியதைப்போல் உங்களைச்செய்கின்றான். இது தவறா அப்பனே?. எதை என்று அறிய அறிய இதனால் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே. என்னை நம்பியவர்கள் கூட நிச்சயம் கஷ்டங்களுக்கு உட்படுத்துவேன் அப்பனே. யார் ஒருவன் எதை என்று உரிய உரிய நம்பிக்கைவைத்து என் அகத்தியன் காப்பாற்றுவான் என்று அப்பனே நிச்சயம் வருகின்றானோ அவன்தனக்கு அனைத்தும் கொடுத்து அப்பனே மேலே உயர்த்திவைப்பேன். அவை விட்டு விட்டு  எதை என்றும் அறிய அறிய இப்படி நம்பினோனே எதை என்றும் அறிய அறிய ஒன்றுமே நடக்கவில்லையே. மீண்டும் அங்கு செல்வோமா இங்கு செல்வோமா அலைந்து கொண்டிருந்தால் அப்பனே வாழ்க்கையே இப்படித்தான் அலைந்து கொண்டிருக்க வேண்டும் என்பேன் அப்பனே. 


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!