அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - அடியவர் ஒருவர் இல்லத்தில் உரைத்த வாக்கு - 04.09.2023 ( பகுதி 9)
இந்த வாக்கின் முந்தைய பகுதி கீழே உள்ள பதிவில் படிக்கவும்
https://siththarkalatchi.blogspot.com/2023/10/208-4-9-2023-8.html?m=0
(பகுதி 9 - வாக்கு ஆரம்பம் )
குருநாதர்:- அதனால் இப்படித்தான் பக்குவங்கள் பட வேண்டும். பக்குவங்கள் பட்டுவிட்டால் உன் விதியைக்கூட யான் சொல்வேன் அப்பனே. அதை மாற்றும் சக்திகள் கூட என்னிடத்திலே இருக்கின்றது அப்பனே. பிரம்மாவிடம் எடுத்துச்செல்வேன் அப்பனே. புரிகின்றதா?
அடியவர்:- புரிகின்றது.
குருநாதர்:- அப்பனே, புரிகின்றது என்று சொல்லிவிட்டாய் என்ன புரிகின்றது? கூறு.
அடியவர்:- பக்குவ நிலையை
குருநாதர்:- அப்பனே இனிமேல் என்னை எதாவது கேட்பாயா என்ன?
அடியவர்:- ஆசிர்வாதம் வேண்டும்.
குருநாதர்:- அப்பனே, என்னுடைய ஆசிர்வாதம் இல்லாமலா இங்கு வந்திருந்தாய் நீ சொல்?
அடியவர்:- சரிங்கய்யா. உண்மைதான்.
குருநாதர்:- அப்பனே, சரி என்று எதற்கு கூறினாய்?
அடியவர்:- நீங்க இல்லன்னா இங்கு வரமுடியாது. தெரியும்.
குருநாதர்:- அப்பனே இதை முதலிலேயே சொல்லலாம் அல்லவா?
அடியவர்:- புரிஞ்சுதுங்கய்யா. மன்னித்துக்கொள்ளுங்கள்.
குருநாதர்:- அப்பனே, பின் அப்பொழுது நீயே புரிந்து கொண்டாயா? நீ தவறு செய்தாயா? தவறு செய்தவன்தான் மன்னிப்பு கேட்க வேண்டும் அப்பனே. அதுதான் அப்பனே உன் வாயிலிருந்தே. அப்பனே தவறு செய்தவன் அப்பனே நிச்சயம் தண்டனைகள் அனுபவிக்க வேண்டும். தவறு செய்தவனுக்குத்தான் அப்பனே அப்பொழுது நீ தவறு செய்தவனா?
அடியவர்:- ஆமாங்க
குருநாதர்:- அப்பனே, யான் இல்லை என்று சொல்கின்றேன்.
அடியவர்:- தெரியல அய்யா.
குருநாதர்:- அப்பனே தெரியவில்லை என்றால் என்ன?
அடியவர்:- (மௌனம்)
குருநாதர்:- அப்பனே இப்படியே தெரியாது , தெரியாது என்று சொல்லிக்கொண்டே இரு அப்பனே. அனைத்தும் தெரிந்துவிடும். யான் இருக்கின்றேன் அப்பனே.
அடியவர்:- ( அமைதி )
குருநாதர்:- அப்பனே, உந்தனுக்கு ஒரு மந்திரம் சொல்லட்டுமா? (அந்த மந்திரம்) அப்பனே “தெரியாது”.
அடியவர்:- (நாடி அருளாளர் திரு.ஜானகிராமன் அவர்கள் அடியவருக்கு விளக்கம் தருகின்றார்.அதன் பின்..)
குருநாதர்:- அப்பனே எதை தெரியாது என்று கூற வேண்டும்?
அடியவர்:- இறைவன் கூட…
குருநாதர்:- அப்பனே, இப்பொழுது புரிகின்றதா? அப்பனே கடன் எதற்க்காக? என்பதைக்கூட இதுவும் கூட தெரியாதப்பா. அதனால் அமைதியாக இரு. சிறிது சிறிதாக மாறும் என்பேன்.
அடியவர்:- ( அமைதி )
குருநாதர்:- அப்பனே நல்முறையாக சில விசயங்கள் , கேள் அப்பனே.
…………………………………..
அடியவர்:- (தனிப்பட்ட 5 முதல் 6 கேள்வி பதில் இங்கு நீக்கப்பட்டது)
……………………………………
குருநாதர்:- அப்பனே அப்படி இருக்க, அப்பனே அனைத்தும் செய்வது மனிதனப்பனே. அதை திருத்துவது யான். ஆனாலும் அப்பனே சில துன்பங்களை கொடுத்துத்தான் திருத்திவிடுகின்றேன். இது தவறா?
(அடியவர்கள் இங்கு ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். துன்பங்கள் அகத்தின் ஈசன் மூலம் நமது அனைவரின் கர்மம் நீக்கும் நண்மைக்காக வழுங்கப்பட்டு, நமது கர்மங்கள் ஆணிவேரோடு முற்றிலும் களை எடுக்கப்படுகின்றது. அதன்மூலம் நல்வாழ்வு கிட்டுகின்றது.)
அடியவர்:- சரிதான்
குருநாதர்:- அப்பனே இப்பொழுது சொல் உந்தனுக்கு துன்பம் கொடுத்தது நல்லதா? கெட்டதா?
அடியவர்:- நல்லதுதான்
குருநாதர்:- அப்பனே இதனால் சில கர்மங்களையும் தொலைத்துவிட்டாய் அப்பனே. அதனால்தான் அப்பனே துனபம் கொடுத்தால் அதன்மூலமே யான் கர்மத்தை துடைப்பேன் ( நீக்குவேன் ). உந்தனுக்கும் அதுபோலத்தான். உன் பக்கத்தில் இருப்பவனுக்கும் அதுபோலத்தான். யாரை நம்ப வேண்டும் முதலில்?
அடியவர் 1:- இறைவனை
அடியவர் 2:- குருநாதரை
குருநாதர்:- அப்பனே முதலில் அப்பனே உன்னை நம்புங்கள் முதலில். அப்பனே எப்படி என்னை ( எங்களை நாங்கள்/ அடியவர்களை அடியவர்கள் ) நம்புவது என்று நீங்கள் கூறுவீர்கள் அப்பனே. முதலில் யோசித்து செய்யவேண்டும் ஒரு விசயத்தை அப்பனே. இதை செய்தால் நல்லவயையா? கெட்டவையா? நிறக்கின்றேனே பின் கடன் என்று சொல்லிவிடேன் அப்பனே. அதை முதலிலே யோசித்திருந்தால் பின் தெரிந்திருக்கும் அப்பனே இதனால் என்ன துன்பம் என்று. அதனால்தான் முதலில் உன்னை உணர் என்று. இது தவறா?
அடியவர்:- தவறில்லை
குருநாதர்:- அப்பனே இதை புரியாமல் சுற்றி திரிந்து அப்பனே வலங்கள் (இறைவனை / குருநாதரை சுற்றி) வந்து வந்து ஒன்றும் நடக்கவில்லை என்றால் எப்படியப்பா? உன் விதியில் இருப்பதுதான் நடக்கும். ஆனாலும் உயர்ந்த பக்தியும் உயர்ந்த புண்ணியங்களும் செய்து கொண்டிருந்தால் அப்பனே யானே மாற்றி அமைப்பேன் இப்புண்ணியங்களை பிரம்மாவிடத்தில் கூறி.
அடியவர்:- அதுக்கும் நீங்கதான் வழி சொல்லனும்
குருநாதர்:- அப்பனே இதனால் பலகர்மாக்கள் உந்தன் விதியில் கூட. யான் பலமுறை பிரம்மாவிடம் சென்று விட்டேன். ஆனால் பின் அகத்திய மாமுனிவரே துன்பங்களை அனுபவித்துத்தான் ஆக வேண்டும் இவன் என்று சொல்லிவிட்டான். அதே போலத்தான் உன் பக்கத்தில் உள்ளவனுக்கும் சொல்லிவிட்டான் அப்பனே ஆனால் யாங்கள் உங்களை விட வில்லை.
அடியவர்:- ( மௌனம் )
குருநாதர்:- அப்பனே நீ கேட்கலாம். அறிவுள்ளவன்தானே. அகத்தியனே பின் அனைவருக்கும் நண்மை செய்கின்றீர்களே. என் விதியை மாற்றலாமே என்று. அப்பனே அனைத்திற்க்கும் மூலப்பொருள் ( ஆதி ஈசன் ) இருக்கின்றது. அவ்மூலப்பொருளை அடைந்து உந்தனுக்காக யான் விதியை மாற்றி விடுகின்றேன். பின் நாளை என்னைப்பார்த்து பிரம்மன் முறைத்துக்கொள்வான் என்பேன் அப்பனே. அதனால்தான் அப்பனே எப்பொழுது பின் எவ்மனிதனுக்கு தகுதி பின் எவ்விடத்தில் இருக்கின்றதோ அதை பார்த்துத்தான் யான் கொடுப்பேன் சொல்லிவிட்டேன். இதனால்தான் சில கர்மாக்களை உங்களை கஷ்டத்தை உள் அடக்கி மாற்றி அமைத்துக்கொண்டே இருக்கின்றேன். அனைத்தும் மாறும் அப்பா கவலையை விடுங்கள். அப்பனே இதை இருவருக்கும் மட்டும் சொல்லவில்லை. (உலகத்தில் உள்ள ) அனைவருக்கும் சொல்கின்றேன்.
அடியவர்:- ( அமைதி )
குருநாதர்:- அதனால் மனிதன் என்றால் கஷ்டம்தான். அப்பனே கடலில் நீந்த வேண்டும். கடலில் நீந்துவது எவ்வளவு கஷ்டம் என்று அனைவரும் உணர்ந்ததே என்பேன். அதில் என்னென்ன ஜீவராசிகள் இருக்கும். உங்களை துரத்தும். மீண்டும் பிறவிகள் தேவையா? அப்பனே. அதனால் சித்தர்களை நம்பினோர்க்கு நிச்சயம் மறுபிறவி இல்லையப்பா சொல்லிவிட்டேன். அதனால் கஷ்டங்களை இப்போதே தீர்த்துக்கொள்ள வேண்டும். ஆனால் உங்களை யான் விடமாட்டேன் சொல்லிவிட்டேன். அப்பனே சித்தனை வணங்குவதற்கும் , சித்தன் நாமத்தை உச்சரிப்பதற்க்கும் ஒரு தகுதி வேண்டுமப்பா. அத்தகுதி இல்லாவிடில் நிச்சயம் எங்களை வந்தடையவும் முடியாது. எங்கள் பெயரை உச்சரிக்கவும் முடியாது என்பேன் அப்பனே. அப்பொழுது நீங்கள் எல்லாம் புண்ணியவாதிகளே.
அடியவர்:- ( இந்த அமுத வாக்கை கேட்ட அடியவர்கள் பல துன்பங்களில் இருந்தாலும் மிக்க மனம் மகிழந்தனர். ) மிக்க நன்றி ஐயா.
குருநாதர்:- அதனால் தெரிந்து கொள்ளுங்கள். தெரிந்து வாழ கற்றுக்கொள்ளுங்கள். முதலில் இவ்வாறு வாழந்தாலே உன் விதியின் ரகசியத்தையே யான் சொல்லி அப்பனே ஏனைய சித்தர்களும் சொல்வார்களப்பா. அதில் இருந்து நீ எதற்க்காக வந்தாய் என்பதை கூட சுலபமாக தெரிந்து கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் போராடினாலும் உன் விதியை யாராலும் சொல்ல முடியாதப்பா. பணங்கள் பின் ஏமாந்து ஏமாந்து கர்மத்தையும் சேகரித்து சேகரித்து மீண்டும் மீண்டும் பிறவிக்குள் நுழைந்து கஷ்டங்கள்தான் பட வேண்டும். சொல்லிவிட்டேன் அப்பனே. அப்பனே அகத்தியன் வாக்குகள் கேட்பதற்க்கும் தகுதி இருக்க வேண்டும். அப்படி தகுதி இல்லாவிடில் அப்பனே நிச்சயம் அவன் என்ன செய்தாலும் புரயோஜனம் இல்லையப்பா. புரயோஜனம் இல்லை.
அப்பனே நீங்கள் அனைவருமே கஷ்டங்களுக்குள் நுழைந்து நுழைந்து வந்து கொண்டுதான் (இருக்கின்றீர்கள்). அதனால்தான் இவ்வாக்குகள் உங்களுக்கு சேரட்டும் என்று அப்பனே இன்னும் (உலகெங்கும் உள்ள) என் பக்தர்களுக்கு சேரட்டும் என்று (இந்த வாக்கை) சொல்லிஇருக்கின்றேன் அப்பனே.
(இந்த மதுரை வாக்கின் அனைத்து பகுதிகள் அனைத்தும் மிக மிக அதி மிக அடியவர்கள் அனைவருக்கும் இந்த வாக்கு உங்களுக்கு என்று நன்கு உணர்ந்து இந்த வாக்குகளில் குருநாதர் சொல்லிய அறிவுரைகளை அன்புடன் ஏற்று , அதன்படி செயல்பட்டு, உங்கள் உயர் முதல் தர புண்ணிய பலங்கள் அதிகரித்து, உங்கள் கர்மங்கள் வினைகள் நீக்கப்பட்டு , அருள் நல் வாழ்வை அடைந்து, பிறருக்கு சேவை செய்து மாமனிதனாக வாழுங்கள்.)
அதனால் வாழ்க்கையில் உயர்தவராக வேண்டும். இறைவன் பக்கத்தில் இருக்க வேண்டும். அப்பனே நண்மைகளே பின் மனிதனுக்கு ஆகவேண்டும் என்றால் அப்பனே நிச்சயம் துன்பத்தில் மிதக்க வேண்டும் அப்பனே. அவ்துன்பத்தில் மிதந்தால்தான் அப்பனே வெற்றிகளும் உண்டு. அப்பனே இன்பமும் உண்டு. பின் இறைவன் பக்கத்தில் பின் இருக்கும் வாய்ப்பும் கிட்டும்.
(மதுரையில் அகத்திய பிரம்ம ரிஷி அடியவர் இல்லத்தில் உரைத்த இந்த வாக்கு தொடரும் ………)
https://siththarkalatchi.blogspot.com/2023/10/210-4-9-2023-10.html?m=0
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!
No comments:
Post a Comment