“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Tuesday, October 31, 2023

சித்தர்கள் ஆட்சி - 215 : அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 4-9-2023 உரைத்த வாக்கு - பகுதி 13


 “அனைத்தும் இறைவா நீ”


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - அடியவர் ஒருவர் இல்லத்தில் உரைத்த வாக்கு - 04.09.2023 ( பகுதி 13)


இந்த வாக்கின் முந்தைய பகுதி கீழே உள்ள பதிவில் படிக்கவும்


https://siththarkalatchi.blogspot.com/2023/10/214-4-9-2023-12.html?m=0




அடியவர்:- ( அடுத்தவருக்காக அடியவர் வாக்கு கேட்ட போது )


குருநாதர்:- அவரவர் கேட்கட்டும். புத்திகள் இருந்தால் பிழைத்துக்கொள்ளலாம். புத்திகள் இல்லாவிடில் எதை என்று கூற முருகனை வணங்கச்சொல். அனைவரையுமே செந்தூரானை ( திருச்செந்தூர் முருகனை ) நாடச்சொல். 


அடியவர்:-  ( அடுத்தவருக்காக மற்றொரு அடியவர் வாக்கு கேட்ட போது )


குருநாதர்:- அப்பனே சொல்லிவிட்டேன். யார் யாருக்கெல்லாம் வாக்குகள் வேண்டுமோ அவர்கள் எல்லாரும் பஞ்ச பூத தலங்களுக்கு சென்று வாருங்கள். பின்பு உரைக்கின்றேன். சிறிதளவாவது புண்ணியங்கள் சேர்கட்டும். சில கஷ்டங்கள் அனைவருக்குமே இருக்கின்றது. பாவங்கள். அவ் பாவங்கள் சிறிதளவாவது தொலையட்டும். இதனால் யார் யாருக்கு ( வாக்கு ) கேட்க வந்தீர்களோ அவர்கள் எல்லாம் பின் பஞ்ச பூத தலங்களுக்கு செல்லுங்கள். சொல்லுங்கள். சொல்லிவிட்டேன். பின்பு கேளுங்கள். 


அடியவர்:-  ( ஒரு தனி வாக்கு கேட்டார்) 


குருநாதர்:- அனைவருமே எதையும் கேட்டுவிடாதீர்கள். அனைவருக்குமே அப்பனே இல்லத்தில் இருக்கின்றாயே அனைவருக்கும் எழுந்து சொல் யான் என்ன சொன்னேன் என்று. 


நாடி அருளாளர்:- ( மதுரை அடியவரிடம் எடுத்து சொல்ல சொன்னார்கள்)


அடியவர்:- (இந்த அடியவர் இல்லத்தில்தான் இந்த வாக்குகள் உரைக்கப்பட்டது) பஞ்ச பூத தலங்கள் அனைத்தும் தரிசனம் செய்துவிட்டு (அகத்தியர்) ஐயா வாக்கு கேட்க சொல்லி இருக்கின்றார்கள். திருவண்ணாமலை, ஶ்ரீ காளஹஸ்தி, காஞ்சிபுரம் (ஏகாம்பரநாதர் ஆலயம்), சிதம்பரம் , திருவாணைக்காவல் அனைத்தும் தரிசனம் செய்து குருநாதர் வாக்கு கேட்க சொல்லி இருக்காங்க. 


குருநாதர்:- அப்பனே அவ் அனைவருக்குமே ஒவ்வொரு வினைகள். அவ் வினைக்கான தீர்வுகள் இதனால் அப்பனே அங்கே இருக்கின்றது என்பேன் அப்பனே. ( பஞ்ச பூத தலங்களை) சுற்றி வாருங்கள். மீண்டும் மீண்டும் சொல்கின்றேன் அப்பனே. பணம் வேண்டும் என்றால் ஓடி ஒடி உழைக்கின்றீர்கள் அப்பனே. அதாவது ஏற்கனவே சொல்லிவிட்டேன் அனைத்தும் கூட. அதனால் தொழில் வேண்டும் என்றால் ஓடி ஓடி (உழைக்கின்றீர்கள்) அப்பனே ஆனால் இறை அருள் வேண்டும் என்றால் வாக்குகள் வேண்டும் என்றால் அப்பனே இதை செய்யுங்கள். எதுவுமே செய்யத்தேவை இல்லை. யான் (வாக்குகள்) கொடுக்கின்றேன் உங்களை தேடி வந்து. போதுமா? 


அடியவர்:- ( தனிப்பட்ட கேள்வி ) 


குருநாதர்:- ( அடியவருக்கு தனிப்பட்ட வாக்கு) அனைவருமே ஏன் உயர் பெரியவர்கள், ஞானியர்கள் பேசவில்லை என்றால் இதற்காகத்தான். ஆனாலும் யான் சொன்னேனே நெற்றியில் பின் வரிசையாக செல்கள் இருக்கும் என்று, ( அவ்செல்கள் ) இவ்வாறு பேசினாலும் உதிர்ந்து விடும் கீழே. அப்படியே மூக்கு பின் வாய் என்று அப்படியே சென்று விடும். இதனால்தான் இவைஎல்லாம் ஞானிகள் மட்டுமே உணர்ந்திருப்பார்கள். அதனால்தான் பேசத்தெரியாமல் அனைத்தும் சாதித்தார்கள். பேசிக்கொண்டே இருப்பார்கள் தரித்திரர்கள். தெரிந்து கொள்ளுங்கள். ஆனால் யாங்கள் பேசாமல் வாழ முடியாது எனபதைக்கூட நீங்கள் தெரிவிப்பீர்கள். ஆனால் கர்மத்தை இப்படித்தான் யாரால் அழிக்க முடியும்? 


அடியவர்:- (அமைதி)


குருநாதர்:- அப்பனே பேசாமல் பேசி வாழ்வது எப்பொழுது? இதற்கு நிச்சயம் அர்தங்கள் கூறவேண்டும். (இங்கு) அனைவருக்கும் வாக்குகள் வேண்டும் அல்லவா? ஆனால் இறக்கு கூறுங்கள்? 


அடியவர்:- அய்யா அனைவரும் பஞ்ச பூத தலத்தில் வழிபாடு செய்ய சொன்னீங்க. எந்த வரிசையில் வணங்க வேண்டும்? 


குருநாதர்:- அம்மையே இப்பொழுது உண்ணும் நேரம் வந்து விட்டது. இப்பொழுது உண்பாயா ? இல்லை நாளை உண்பாயா? 


அடியவர்:-  இப்பொழுது


குருநாதர்:- அம்மையே நீ இதற்கும் தவறான பதில்தான். அவரவர் விருப்பம் என்று சொல்லி விட்டிருந்தால் போய் விடுகின்றது அவ்வளவுதான். ( பஞ்ச பூத தலங்களை அவர் அவர் விருப்பம் போல் சொன்று வணங்கலாம். கால நேரம் கிடையாது) 


அடியவர்:- ( இதற்கு முந்தைய கேள்விக்கு பதில் என்ன என்று நாடி அருளாளர் மீண்டும் கேட்க… இதற்கு ஒரு அடியவர்) மனசுல எந்த எண்ணம் இல்லை என்றால்…


குருநாதர்:- அப்பனே இறைவன் அனைத்தும் செய்வான் என்று மனதில் இருந்தாலே போதுமானதப்பா. இதற்கே இவ் அர்த்தம் என்பேன். அனைவருக்குமே ஒவ்வொரு சூழ்நிலையில் கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கின்றது. ஆனாலும் இறைவனுக்கு தெரியும். இப்பொழுது கூட கேட்டார்கள் இப்பிள்ளைக்கு திருமணம் எப்பொழுது என்று ஆனால் உடனடியாக எதை என்றாலும் பிரிவு நிலைகள் வந்து விடும். ஆனால் இறைவன் இவ்நேரத்தில் இவ்வயதில் ஆகவேண்டும் என்று எண்ணிக்கொண்டு அதாவது (விதியை ) எழுதி வைத்து அனுப்புகின்றான் அதை மீறி நடந்தால்தான் அப்பா துன்பங்கள். இப்பொழுது சொல்லுங்கள் அப்பனே ஏன் எதற்காக தடைபட்டு தடைபட்டு நடக்கின்றது. நல்லதா? தீயதா? அப்பனே இறைவன் செய்வது அனைத்தும் நல்லதே. ஆனால் நீங்கள்தான் தவறாக எண்ணிக்கொண்டு இருக்கின்றீர்கள் அப்பனே. அதனால் சொல்லிவிட்டேன் அம்மையே இப்பொழுது இதன் முன்னே திருமணம் நடந்திருந்தாலும் பின் கனவன் மனைவிமார்களுக்கு பிரச்சினைகள் ஏற்பட்டு இவை மீண்டும் இங்கிருந்து வந்து மீண்டும் பின் எங்கெங்கோ சென்று பணத்தை இழந்து பரிகாரங்கள்தான் செய்து கொண்டிருக்க வேண்டும். அப்பொழுது இறைவன் உந்தனுக்கு நல்லது செய்தானா?  கெட்டது செய்தானா? என்று கூறு. ஆனாலும் அம்மையே நீயும் பரிகாரங்கள் பரிகாரங்கள் என்று ஓடுவாய். 


அடியவர்:- ( சில தனிப்பட்ட கேள்விகள் )


குருநாதர்:- ( குருநாதரின் தனுப்பட்ட அருள் பதில் வாக்கு)


அடியவர்:- ( அடியவர் பொதுவாக அனைவருக்கும் உரைத்தது ) எப்போ நம்ம எதிர்பார்ப்புக்கு தடை வருகின்றதோ அப்போ ( இறைவன் ) நம்மை புடம் போடுகின்றார் என்று அர்த்தம். 


குருநாதர்:- (இந்த அடியவர் பொதுவாக உரைத்தது) அனைவருக்கும் தெரிந்ததா இது? 


அடியவர்:- ( அமைதி ) 


குருநாதர்:- ( தனிப்பட்ட வாக்கு ) 


அடியவர்:- ஜீவ சமாதிக்கு போகச்

சொன்னீங்க. 


குருநாதர்:- அனைத்தும் தெரிவித்து விட்டேன். மீண்டும் இதைத்தான் கேட்கின்றீர்கள். 


அடியவர்:- தொழில் மேன்மைக்கு ஆசிர்வாதம்..


குருநாதர்:- அப்பனே பரமா , நீ என்ன சொன்னாய்? 


அடியவர்:- பஞ்ச பூத தலம் போய்தான் வாக்கு கேட்கனும் எல்லாருமே.


குருநாதர்:- அப்பனே யான் சொல்வதை கேட்பதில்லை (நீங்கள்). ஆனால் நீங்கள் சொல்வதை மட்டும் யான் சொல்ல வேண்டுமா. இல்லையப்பா சென்று வாருங்கள். அப்பனே இதிலே அடக்கமப்பா.


அடியவர்:- இதில் சூட்சும்…


குருநாதர்:- அப்பனே பஞ்ச பூதங்களை எதை என்று அறிய அப்பனே ஏன் நாவை அடக்கவேண்டும், செவியை அடக்க வேண்டும், இவற்றை எல்லாம் ஏன் போகச்சொன்னேன் ஏன் இதற்கு பஞ்ச பூத ஸ்தலங்கள் என்றெல்லாம் பெயர் வைத்திருக்கின்றார்கள் என்றெல்லாம்  அப்பனே யான் தெரிவிக்கின்றேன். அங்கு செல்லாமல் அப்பனே பக்தியும் வராதப்பா உங்களுக்கு. அதனால்தான் (அங்கு) செல்லச்சொன்னேன். இப்பொழுது சொல்லிவிடலாம் நீங்கள் பக்திக்கே வரமாட்டீர்கள். இதுதான் விசயமப்பா உங்களுக்கு. 


அடியவர்:- ( அமைதி ) 


குருநாதர்:- அப்பனே இப்படியே சொல்லிக்கொண்டு இருந்தால் அதனால் சென்று வாருங்கள். அகத்தியன் சொல்வது உங்கள் நன்மைக்கே. அப்பனே மீண்டும் பின் வந்து ( இதுபோல் செல்லச்) சொல்வீர்களா என்றால் அப்பனே சொல்வேன். அப்பொழுது கூட மற்ற திருத்தலத்திற்கு ( உங்களை ) செல்லச்சொல்வேன். அப்படி சென்று கொண்டே இருந்தால் அனைத்தும் மாறும் அப்பா. அனைத்து பிரச்சினைகளும் தீரும் அப்பா. அப்பனே கஷ்டங்கள் பட்டால்தான் அனைத்தும் கிடைக்கும் என்பேன். கஷ்டப்படாமல் ஏதும் கிடைக்காதப்பா. இதை ஏற்கனவே உரைத்து விட்டார்கள் அப்பனே. தெரியுமா? தெரியாதா? தெரிந்தவர்கள் அறிவாளி. தெரியாதவர்கள் முட்டாள். அப்பனே முட்டாள்தான் கேள்விகள் கேட்பான் அப்பனே. தெரிவித்து விட்டேன் பின். 


அடியவர்:- நாங்கள் எல்லோரும் அறிவாளிகள். 


குருநாதர்:- சந்தோசம் தாயே. அனைவருக்கும் சொல் அதை. 


அடியவர்:- ( அடியவர்கள் சிரிப்பு ) 


குருநாதர்:- அம்மையே இப்பொழுது வேலை இல்லாவள் என்று சொல்லிவிட்டார். முருகனை அம்மையே மாதத்திறக்கு ஒரு முறை பழனி தன்னை ஏறிவா. 


அடியவர்:- சரிங்க


குருநாதர்:- அப்பனே அனைவருக்கும் பின் தெரியாத விடயத்தை ஒன்று கூறுகின்றேன். பழனிதன்னில் ராகு கேதுக்கள் அங்கு சென்றாலே அக்கிரகங்களின் சில துன்பங்கள் அதி விரைவிலேயே ஈர்க்கும் அப்பா. அங்கு (அடிக்கடி) சென்று கொண்டிருந்தாலே பல துன்பங்கள் ஈரத்துவிடும் என்பேன் அப்பனே. எளிதாக உயர்வு பெற்று விடலாம் என்பேன் அப்பனே. இதனால் சொல்லிவிட்டேன் அப்பனே. எதற்காக அங்கு, அங்கு சென்று கொண்டு இருந்தாலே அப்பனே ஞானம் தித்தித்து உயர்ந்த இடத்தை அடைந்து விடலாம் என்பேன் அப்பனே. அதனால் உயர்ந்த இடத்தை அடைய வேண்டும் என்றால் அப்பனே கஷ்டங்கள் அப்பனே அதை ராகு பின் கொடுக்கும் என்பேன் அப்பனே. அதனால் அதை கொடுத்து அப்பனே அங்கு சென்று கொண்டிருந்தாலே அனைத்து கர்மாக்களை எளிதில் ஈர்த்துக்கொள்ளும் என்பேன் அப்பனே. இதனால் வெற்றி உங்களுக்கே என்பேன் அப்பனே. அதனால் பழனி மலையின் சிறப்பு இதுதானப்பா. இன்னும் சொல்கின்றேன் வரும் காலங்களில் அப்பனே. பொறுத்திருந்தால் அப்பனே. ஒவ்வொன்றாக அதை பயன்படுத்திக்கொண்டால் வெற்றி வாழ்க்கையில். இல்லை என்றால் தோல்வி. 


அடியவர்:- ( அமைதி ) 


குருநாதர்:- அப்பனே செந்தூரானை பற்றியும் சொல்கின்றேன். வெற்றி வெற்றி என்பதெல்லாம். ஆனாலும் அப்பனே பின் ஒருவன் சொன்னான் குரு ஸ்தலமா என்று கூட. அங்கு சனியும் அழகாக இருக்கின்றான் அப்பனே. அதனால் தான் வெற்றி. குரு , சனி இருவர் கொடுத்தால்தான் அனைத்து தோசங்களும் நீங்கும் என்பேன். இவர்கள் கொடுக்காவிடில் ஒன்றும் இல்லையப்பா. அதனால்தான் முக்கியத்துவம் அங்கு அப்பனே. 


அடியவர்:- ( அமைதி ) 


குருநாதர்:- அப்பனே அனைவருக்குமே புரிகின்றதா? 


அடியவர்:- புரிகின்றது. 


குருநாதர்:- அப்பனே புரிகின்றதென்றால் யான் என்ன சொன்னேன் என்று கூறுங்கள். 


அடியவர்:- பஞ்ச பூத ஸ்தலம்….


குருநாதர்:- ( தனிப்பட்ட வாக்கு) இறைவன் செய்வது அனைத்தும் நல்லதே. அனைவருக்குமே எம்முடைய ஆசிகள். ஆசிகள். இன்னும் பல வாக்குகள் காத்துக்கொண்டிருக்க நிச்சயம் சொல்கின்றேன். ஆசிகள். ஆசிகள்!!!


(மதுரையில் அகத்திய பிரம்ம ரிஷி அடியவர் இல்லத்தில் உரைத்த இந்த வாக்கு பின் வரும் பதிவில் தொடரும் ………)

https://siththarkalatchi.blogspot.com/2023/11/216-4-9-2023-14.html?m=0


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!

No comments:

Post a Comment