“அனைத்தும் இறைவா நீ”
அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - அடியவர் ஒருவர் இல்லத்தில் உரைத்த வாக்கு - 04.09.2023 ( பகுதி 10
இந்த வாக்கின் முந்தைய பகுதி கீழே உள்ள பதிவில் படிக்கவும்
https://siththarkalatchi.blogspot.com/2023/10/209-4-9-2023-9.html?m=0
(பகுதி 10 - வாக்கு ஆரம்பம் )
குருநாதர்:- அப்பனே, துன்பங்கள் இல்லாமல் எதுவும் கொடுக்க முடியாதப்பா. அப்பனே இப்பொழுதே அப்பனே துன்பம் வேண்டுமா? இன்பம் வேண்டுமா?
அடியவர்:- (பல அடியவர்கள் சொல்லியது) துனபம்.
குருநாதர்:- அப்பனே இங்கு துன்பம் என்றால் இறைவன். இன்பம் என்றால் கர்மா. அப்பொழுது நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள். புரிகின்றதா?
அடியவர்:- புரிந்தது
குருநாதர்:- அப்பனே தெரிந்து வாழ கற்றுக்கொள்ளுங்கள். என்னிடத்திலே இருந்து கொண்டு அகத்தியா, அகத்தியா என்று சொல்லிக்கொண்டிருந்து அப்பனே வாழத்தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் அப்பா. அதனால்தான் அப்பனே இவை எல்லாம் யான் சொல்லிக்கொடுத்து, அப்பனே ஒரு சிறு பிள்ளைக்கு ஒரு தாய் தந்தையர் எப்படி சொல்லிக்கொடுக்கின்றார்களோ அவை எல்லாம் சொல்லிக்கொடுத்துத்தான் உன் விதிகளைக்கூட உள்ளதை யான் அனைத்தும் சொல்வேன் அப்பனே. அப்பொழுதுதான் அனைத்தும் மாறும் அப்பா. பின் யான் சொல்லிவிடலாம். ஓடு, அங்கு ஓடு , இங்கு ஒடு என்றெல்லாம். நீ ஓடிக்கொண்டிதான் இருக்க வேண்டும். அதனால் நம்பிக்கையோடு வாருங்கள். அவ்நம்பிக்கையே உங்களை உயர்த்தி வைக்கும். அப்பனே நம்பிக்கைத்தான் யான் என்று உணர்ந்து கொண்டீர்கள் நீங்கள்.
அடியவர்:- ( ஆதி குருவின் ஞான ரசம் திருப்தியாக உண்ட அமைதி)
குருநாதர்:- அப்பனே யாருக்காவது பின் கேள்விகள் இருக்கின்றதா என்று கூட்டு எந்தனுக்கு தெரிவி.
அடியவர்:- ஐயா குருநாதர் அகஸ்தியப்பெருமான் (மீது உள்ள) நாட்டத்தில் நண்பர் வந்துள்ளார். அவர் நல்லா வந்து திருப்பி இப்போ தீய வழிக்கு போய்ட்டாங்க. இப்போ ( உயிருடன்) இல்ல. ஆனா குருநாதர் வந்து முதல்ல கெட்டவங்களா இருந்த அவங்கள நல்ல வழியில் மாத்தி உட்டாங்க. ஆனா இவரு நல்ல வழியில வந்துதுட்டு , கெட்டதா போனதுக்கு காரணம் என்ன?
குருநாதர்:- அப்பனே நீ பார்த்தாயா? நல்லதை செய்து கொண்டிருக்கின்றான் என்று? அப்பனே உன் வேலையை செய்யவே உந்தனுக்கு நேரம் இல்லை. அவன்தனை நீ பார்த்தாயா? சொல்.
அடியவர்:- அவர் அன்னதானம் பன்னிக்கிட்டு இருந்தார்.
குருநாதர்:- அப்பனே அனைவருமே அன்னதானம் செய்கின்றார்கள் அப்பனே. யாருக்கு கஷ்டம் வரவில்லை கூறு.
அடியவர்:- அவர் அகத்தியர் குருநாதர் வாக்குகளுடன் வந்தாரு. அதுக்கப்புறம்…
குருநாதர்:- அப்பனே இதுவரை யான் சொல்லிக்கொண்டிருந்தது என்ன? மீண்டும் சொல்கின்றேன் அப்பனே. இவனதனக்கு புத்தியில்லை. இப்பொழுதிலிருந்தே புரிகின்றது அப்பனே. இவன் பின் ஏற்க்கவே யான் சொல்லிவிட்டேன். இறைவன் என்பவன் நெருப்பு என்று. அதை நெருங்க நெருங்க துன்பம் வரும். ஆனால் பாதியிலேயே திரும்பி வந்துவிட்டால் அவ்வளவுதான் வாழ்க்கை என்று. இதை நீ அப்பனே மீண்டும் மீண்டும் செல்வதற்க்கு அகத்தியன் (நெருப்பு என்று உணர்க) அப்பனே புரிந்துகொள். மூளை இல்லாதவனே.
அடியவர்:- (திரு.ஜானகிராமன் அவர்கள் இந்த அடியவருக்கு விளக்கம் தந்தார்கள்)
குருநாதர்:- அப்பனே உன்னை அறிவாளி என்றே சொல்கின்றேன் (மீண்டும் என்னைக்கேள்வி) கேள்.
அடியவர்:- அதனாதலதான் அய்யா மனசுல…
குருநாதர்:- அப்பனே இதனால்தான் எங்கு வாய்யை வட வேண்டுமே அங்கு வாயை விடவேண்டும் அப்பனே. எங்கு எப்படி நடக்க வேண்டுமோ அங்கு அப்படி நடந்துகொண்டால் சிறப்பு. அப்படி இல்லை என்றால் படைப்பு. அப்பனே எதைச்சொன்னேன் என்றால் மீண்டும் பிறவியப்பா. அதனால் உணருங்கள். தெளிவு பெறுங்கள். அப்பனே அப்படி இல்லை என்றால் யானே கஷ்டத்தை தருவேன் என்று கூட சொல்லிவிட்டேன். அதைக்கூட நீ கேட்க்கவில்லையா?
அடியவர்:- சரிங்க
குருநாதர்:- அப்பனே, எதறக்காக அப்பா நீ வந்தாய் இங்கு?
அடியவர்:- குருநாதருடைய வாக்கை கேட்ப்பதற்க்கு
குருநாதர்:- அப்பனே அனைத்தும் சொல்லிக்கொண்டேதான் இருக்கின்றேன் நீ கேட்கவில்லையே. அதனால் என்ன சொன்னேன் என்று சில வாரத்தைகளை அனைவருக்கும் மீண்டும் கூறு?
அடியவர்:- ஐயா கஷ்டப்பட்டாதான் கர்மாவை போக்க முடியும்.
குருநாதர்:- அப்பனே இதை தெரிந்து கொண்டே என் நண்பன்
கஷ்டப்படுகின்றான் என்று கூறி விட்டாயே அப்பனே. இவைதன் எப்படியப்பா நீ நான் சொன்னாய் அப்பனே அதனால்தான் அப்பனே. மூளை இருக்கின்றது. மனிதனுக்கு உபயோகப்படுத்த தெரியவில்ரையப்பா. அப்பனே தெரிகின்றதா இப்பொழுது? அவன் எதற்க்காக கஷ்டப்படுகின்றான் என்று.
அடியவர்:- அவர் இப்ப இல்லங்க. புரியுதுங்க. அவர் மீண்டும் பிறவி எடுத்து (கஷ்டப்பட) வரப்போறார்.
குருநாதர்:- அப்பனே என்னை நம்பியவர்கள் கூட கஷ்டப்படுத்திக்கொண்டே அதாவது கஷ்டப்பட்டுத்தான் கொண்டிருக்கின்றார்கள் இருக்கின்றார்கள். எதற்க்காக நீ கூற வேண்டும்.
அடியவர்:- அய்யா, கர்மாவை போக்கி அவங்களை புணிதப்படுத்தி அவர்களை சுத்தப்படுத்துவதற்க்காக.
குருநாதர்:- அப்பனே தெரிந்து கொண்டாயா?. அனைத்தும் தெரிந்து கொண்டே கேள்விகள் கேட்கின்றாயே? அப்பனே
அடியவர்:- மௌனம்
குருநாதர்:- இதனால் அப்பனே (மீண்டும்) கேள்.
அடியவர்:- அய்யா அதாவது உயர் தர புண்ணியம்னா என்ன? உணவு வழங்குதல் ஓரு புண்ணியம் அப்டின்னு சொல்ரோம். கல்விக்கு வழி வகுத்தல் ஒரு புண்ணியம்ன்னு சொல்ரோம். அப்புறம் வந்து இறை வழிபாட்டுக்கு அழைச்சு வர்ரது புண்ணயம்ங்குறோம். இதுல வந்து எது புண்ணியம் அதிகமானது மனிதனுக்கு புண்ணியம் அதிகம் சேரத்து அவனது கர்மாவை பலனகளை குறைக்கும்?
குருநாதர்:- அப்பனே, “அனைத்தும் இறைவா நீ” என்று சொல்லிவிடு முதலில். அதிலிருந்து அப்பனே இறைவனே உனக்கு அனைத்தும் கொடுப்பான் அப்பனே. வாங்கிக்கொள். அதை மீறி என்னால் முடியும் என்று சென்றால் அங்குதான் அப்பனே கஷ்டங்களப்பா ( கர்மாக்கள் ). அதனால் புரிந்து கொள்.
அதனால் அப்பனே பரமனே ( மதுரை ஶ்ரீ அகஸ்தியர் இறைஅருள் மன்றம் ) தெரிந்து கொள். ஏன் எதற்க்காக வந்து கொண்டிருந்தாய்? உன்னை கஷ்டங்கள் நெருங்கப்போகின்றது. ஏன் எதற்க்காக நீ கூறுவாய். அகத்தியனே உந்தனுக்கு சேவைகள் செய்து கொண்டிருந்தேனே இப்படி கஷ்டங்கள் ஆகி விட்டதே என்று. ஆனாலும் அப்பனே அனைத்தும் உந்தனுக்கு சொல்லிவிட்டேன் அப்பனே. இதையும் பரப்பு. எப்படி மனிதன் வாழவேண்டும்? எப்படி இருக்கவேண்டும்? என்பதை எல்லாம் அப்பனே. உன் கடமையை செய். மற்றவர்கள் கடை பிடிக்கின்றார்களோ இல்லையோ. நீ சொல்லிவிடு அப்பனே. அப்பனே அது கர்மா. அவனையே போய் சார்ந்துவிடும் என்பேன் சொல்லிவிட்டேன் அப்பனே. உந்தனுக்காக மட்டும் இங்கு வந்தேன் அப்பனே. ஆனால் மற்றவர்கள் எல்லாம் கர்மாவை சேகரித்து வந்துகொண்டிருக்கின்றார்கள். அவ்வளவுதான்.
அடியவர்:- அமைதி
குருநாதர்:- அதனால் அப்பனே புரிகின்றதா? என் பக்த்தனை எப்பொழுதும் யான் விடமாட்டேன் அப்பனே. இப்பொழுதிலிருந்து அதனால் அப்பனே என் பக்தனை கஷ்டங்கள் வருகின்றதென்றால் யானே அவனிடத்திற்கு சென்று பாடங்களை கற்ப்பிப்பேன் போதுமா?
அடியவர்:- அமைதி
குருநாதர்:- நீ கேட்டாய் அப்பனே, அவை, இவை, இப்படிச்செய்தால் புண்ணியம் புண்ணுயம் என்று, செய்துகொண்டே இரு அப்பனே யான் வருவேன். அவ்வளவுதான் அப்பனே. அப்பனே அதனால் தான் அப்பனே புண்ணியங்கள் செய்பவர்களுக்கும் கர்மா ஏற்ப்படுகின்றது என்பேன் அப்பனே. யான் புண்ணியங்கள் செய்தேனே என்றெல்லாம். அதனால் அப்பனே யானே வந்து காத்தருளுவேன் வருங்காலங்களில் கூட அப்பனே. அதனால்தான் அப்பனே முதலில் என்னென்ன செய்ய வேண்டும் என்று கூட தெரிந்து தெரிந்து செய்தால்தான் அப்பனே வெற்றி கிடைக்குமே தவிர இல்லை என்றால் தோல்விகள் தான் மிஞ்சும் என்பேன் அப்பனே. அப்பனே தோல்விகள், தோல்விகள் ஏற்ப்பட, ஏற்ப்பட ஒரு நாள் வெற்றியாகிவிடும் என்பேன் அப்பனே. துன்பங்கள் ஏற்ப்பட ஏற்ப்பட ஒர் நாள் இன்பமாகிவிடும் என்பேன் அப்பனே. பொய்கள் சொல்லச்சொல்ல ஓர் நாள் உண்மை ஆகிவிடும் என்பேன் அப்பனே. இவ்வாறு மனிதன் பொய் சொல்லுச்சொல்லி அப்பனே கடைசியில் கலியுகத்தில் உண்மை ஆக்கிவிட்டால் பாவி மனிதன் அப்பனே. அதை தடுக்கவே யாங்கள் வந்து கொண்டிருக்கின்றோம் அப்பனே. முதலில் அதை தடுத்துவிட்டு உங்கள் அனைவருக்குமே மோட்சகதியை யான் கொடுக்கின்றேன். நலங்கள். ஆசிகள்.
அடியவர்:- அமைதி. ( அடியவர்கள் மோட்சகதி என்று கேட்டு ஆனந்தம்)
குருநாதர்:- அதனால் தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே. சித்தர்கள் ஏன் உங்களுக்காக வரவேண்டும்? அப்பனே உங்கள் மூளையில் உள்ள அனைத்து செல்களைக்கூட யான் ஆராயந்து விட்டேன். மனிதன் என்னென்ன வேலை செய்கின்றான் எங்கெல்லாம் (உடம்பில் உள்ள செல்களில்) சில தரித்திரங்கள் தங்கும். அவை எல்லாம் பின் அங்கங்கே நோய்கள் ஏற்ப்படும் என்பதை எல்லாம் யான் நன்றாக தெரிந்திருக்கின்றேன் அப்பனே.
( சித்த ரகசியம்:- 100 ட்ரில்லியன்/Trillion cells அதாவது ஒரு கோடி கோடி செல்கள் 100,000,000,000,000 உள்ள மனித உடம்பில் - நன்கு கவணிக்க - ஒருமனிதனின் உடலில் உள்ள இவ்வளவு செல்களை அகத்திய பிரம்ம ரிஷி அவர்களால் நொடிப்பொழுதில் ஆராய இயலும் இறை வல்லமை இது. மனிதனால் எந்நாளும் நினைத்தே பார்க்க இயலாத சித்தர்களின் மாபெரும் இறை வல்லமை இது. இது போல மனிதனால் உணர இயலாத பல இறை வல்லமைகள் சித்தர்கள் வசம் உண்டு. அதனை அவர்கள் கூறினால் மட்டுமே ஒரளவு தெரிந்து கொள்ள இயலும். புரியாதவற்றை சொன்னால் கர்மம் என்பதால் சித்தர்கள் இது போன்ற பல விசயங்களை மனிதர்களுக்கு உரைப்பதில்லை .கர்மங்கள் இத்துனை செல்களில் இருந்து நீக்கும் வல்லமை இருவருக்கு மட்டுமே உண்டு. உலகை ஆளும் ஆதி ஈசனாலும், அகத்திய பிரம்ம ரிஷியால் மட்டுமே இயலும் என்பதை உணர்க. )
இதை எவரும் தெரிந்திருக்கவில்லையப்பா. அதனை முதலில் ஒழித்திட வேண்டும் என்பேன் அப்பனே. ( ஒரு அடியவரின் வரப்போகும் நோய்குறித்து வாக்கு உரைத்தார் மாமுனிவர், பொதிகை வேந்தன் அகத்திய பிரம்மரிஷி. அதற்க்கு குருநாதர் அந்த அடியவர்க்கு இயலாதவர்களுக்கு உணவளித்துவர அருளினார்). இவை எல்லாம் வரும் காலங்களில் எப்படி கட்டுப்படுத்துவது என்பதை எல்லாம் யான் தெரிவித்துக்கொண்டே இருப்பேன் அப்பனே. அனைத்து செல்களும் அதாவது நெற்றியில் வலது கண்ணில் இருந்து இடது கண் வரை கூட அப்பனே பின் வரிசையாக செல்கள் இருக்கின்றதப்பா. அவ்செல்கள் மாறக்கூடாது என்பேன். (அவை) மாறிவிட்டால்தான் நோய்களப்பா நோய்கள். அப்பனே நலன்களாகவே நீங்கள் செய்யும் வினைகளுக்கு ஏற்ப்பவே அது அங்கு அங்கு தங்கிவிடும் அப்பா. உடம்பில் கூட. அதை மீண்டும் அப்பனே பின் எங்கு இருக்கின்றதோ அங்கு சேர்க்க வேண்டும். அதற்க்காகத்தான் சொல்கின்றேன் புண்ணியங்கள் செய். புண்ணியங்கள் செய் என்பேன் அப்பனே. ஆனால் அனைவருக்குமே அச்செல்கள் மாறிவிட்டதப்பா. அதை மாறக்கூடாது என்பதற்க்காகவே நீரைப்பூசுங்கள் என்று திருநீறு என்பது வந்துவிட்டது என்பேன். அப்பனே அதைப்பூசி அப்பனே பக்தியோடு இருந்தாலே பின் எண்ணங்கள் எங்கும் கர்மத்தையும் சேரக்க முடியாது. இறைவன் பாதத்தில் மனதை வைத்து அப்பனே அதிபோலவே பின் (அவ்செல்கள்) வரிசையாகவே நின்றால் அப்பனே புருவ மத்தியில் இறைவனை நிறுத்தி இறைவனையே காணலாம். அப்பனே இப்புவிதன்னில் அனைவருக்குமே (அவ்செல்கள்) சிதைந்தாகி விட்டது என்பேன். ஆனால் (அவ்செல்களை) ஒன்று சேரப்பது எவ்வளவு கடினம் அல்லவா அப்பனே. அதை யான்தான் ஒன்று சேர்க்க வேண்டும். ஆனாலும் அப்பனே அதற்க்கும் ஒரு ஒரு திருத்தலங்கள் இருக்கின்றது அப்பா. அங்கு சென்றால் மாறிவிடும். ஆனால் அங்கு செல்வதற்க்கும் அவ்செல்கள் விடாதப்பா. மேல்நோக்கி செல்கள் இதனை தடுக்கும் ( ஆலயத்திறக்கு செல்வதை ) . இதுதானப்பா வினை. அப்பனே அதை சேர்க்கவே வரும் காலங்களில் எத்திருத்தலத்திற்க்கு எல்லாம் செல்ல வேண்டும். எங்கெல்லாம் அமர வேண்டும். எங்கெல்லாம் தூ(ங்கி) எழுதல் என்பதை எல்லாம் சொல்கின்றேன் கடைபிடியுங்கள் அப்பனே. வாழந்து கொள்ளலாம் அப்பனே. இல்லை என்றால் வாழத்தெரியாமல் அப்பனே இப்படித்தான் கஷ்டங்களோடு இருக்க வேண்டும் சொல்லி விட்டேன் அப்பனே.
(மதுரையில் அகத்திய பிரம்ம ரிஷி அடியவர் இல்லத்தில் உரைத்த இந்த வாக்கு பின் வரும் பதிவில் தொடரும் ………)
https://siththarkalatchi.blogspot.com/2023/10/212-4-9-2023-11.html?m=0
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!
No comments:
Post a Comment