“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Monday, October 16, 2023

சித்தர்கள் ஆட்சி - 196 : அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 4-9-2023 உரைத்த வாக்கு - பகுதி 2


 

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - அடியவர் ஒருவர் இல்லத்தில் உரைத்த வாக்கு - 04.09.2023 ( பகுதி 2) 


இந்த வாக்கின் முதல் பகுதி கீழே உள்ள பதிவில் படிக்கவும்

https://siththarkalatchi.blogspot.com/2023/10/191-4-9-2023-1.html?m=0

(பகுதி 2 - வாக்கு ஆரம்பம் ) 


ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 


ஒன்றும் முடியாதப்பா.  மனிதன் அதாவது மண்ணைத்தான் திங்க வேண்டும் கடைசியில் அப்பனே. உண்மை நிலையில் பின் செய்ய முடியாதப்பா. ஆனால் உண்மை நிலையில் எங்களுக்குத் தெரியும் அப்பா. 

யாங்கள் சொல்லிக்கொடுக்கின்றோம் அப்பனே. எதற்காகத் தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே. 

அப்பனே  முதலில் வாழ்க்கையைப் பற்றிக்கூட இதனால் தர்மம் செய்ய மறந்து விடாதீர்கள் என்பேன் அப்பனே. 

ஆனாலும் இன்றைய நிலையில் அப்பனே அனைத்தும் பொய் ஆகி விட்டதப்பா. யான் எழுதி வைத்த நூல்கள் எல்லாம் மாற்றி விட்டார்கள் அப்பா. அதாவது சித்தர்கள் எழுதி வைத்த நூல்கள் எல்லாம் மாற்றி விட்டார்கள் அப்பா.  

ஏன் மாற்றிவிட்டார்கள் அப்பனே?. 

மனிதன் பின் சரியாக வாழக்கூடாது என்பது எல்லாம். ஆனாலும் யாங்கள் பல பல வழிகளிலும் கூட சுவடிகள் எழுதி வைத்து விட்டோம் அப்பனே. 

ஆனாலும் அப்பனே அவை எல்லாம் எடுத்துவிட்டு மனிதன் இப்போது கண்டுபிடித்துக்கொண்டிருக்கின்றான். நிச்சயம் முடியாதப்பா. தோல்வி அடையச்செய்து விடுவோம். 

காசுக்காகச் சுவடிகளையே விற்று விட்டார்கள் அப்பனே. இதற்காக மனிதனும் அப்பனே காசுக்காக இறைவனையும் விற்றுவிடுவார்கள் அப்பா. அதனால்தான் எல்லாம் பொய் என்று யாங்கள் சொல்லிக்கொண்டு இருக்கின்றோம். 

எங்குக் காசுகள் அப்பனே நடமாடுகின்றதோ யாங்கள் சத்தியமாக அங்கு இருக்க மாட்டோம் சொல்லிவிட்டோம் அப்பனே.  

கஷ்டங்கள்தான் கொடுத்துக்கொண்டு இருப்போம் அப்பனே. ஆனால் எதற்குக் கஷ்டம் என்பது கூட தெரியாமல் போய்விடும். 

அதனால் புரிந்து கொள்ளுங்கள். புரிந்து கொண்டு வாழுங்கள். அப்படி வாழ்ந்தாலே போதுமானதப்மா. எவையும் தேவை இல்லையப்பா. 

திருத்தலம் முதலில் உன் மனதில்  சரியாகவே சமநிலைப்படுத்தி அமைதியாகத் தியானங்கள் செய்து இறைவனை உன் மனதில் வைத்து அங்கேயே பின் திருத்தலத்தை அமைத்தால் நிச்சயம் இறைவன் அது போலவே   உன் எண்ணம்போலே ஆகட்டும் என்று சொல்லி விடுவான் அப்பனே. 

( உங்கள் மனதிலேயே நீங்கள் விரும்பும் வண்ணம் இறைவனுக்கு திருத்தலம் அமைக்கும் மகா சூட்சும அருள் வாக்கு. இந்த பகுதியை மூன்று முறை படிக்கவும் ) 

இதனால்தான் எதை என்று அறியாமல், புரியாமல் மனிதன் இப்பொழுது கூட வாழ்ந்து கொண்டிருக்கின்றான். என்ன லாபம்? இறைவனை வணங்கினாலும் கஷ்டங்கள் வந்துகொண்டேதான் இருக்கின்றது. 

ஆனாலும் எப்படி வாழவேண்டும் என்பதை  எல்லாம் நிச்சயம் தெரிந்து கொள்ளாமல் ,  எப்படி வணங்கி வந்தால் இறைவன் காட்சிகள் அளிப்பான் என்பதை எல்லாம் தெரியாமல் வணங்கி வந்து கொண்டிருக்கின்றீர்கள். 

அதனால்தான் அவ்மூட நம்பிக்கை எல்லாம் ஒழித்திட வேண்டும் என்பதற்காகத்தான் யாங்கள் பாடுபட்டுக்கொண்டிருக்கின்றோம். 

ஆனாலும் யான் ( ஏதும் உங்களுக்கு உரைக்காமல் ) சென்றுவிடலாம். எப்படியாவது செல்லுங்கள் என்று. என்னையே நம்பிக்கொண்டிருக்கின்றீர்கள் நீங்கள்.  அதனால் சில பக்குவங்கள் ஏற்படுத்தி, ஏற்படுத்தி, ஏற்படுத்தி...

ஆனாலும் என் பெயரைச்சொல்லியும் கூட அநியாயங்கள், அக்கிரமங்கள் எல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. ஆனாலும் சிறிது நேரம்தான் யான் பொறுத்திருப்பேன். ஆனாலும் பின்பு  அடிகள் விழுந்தால் தாங்கவும் மாட்டீர்கள் என்பேன். ஆனாலும் அதை அறிந்தும் கூட தவறுகள் செய்கின்றார்கள். இதுதானப்பா பெரிய இழப்பு என்பேன் அப்பனே. 

இதனால் இறைவன் மிகப்பெரியவன் அப்பனே. 

அதனால் (இறைவனை) நெருங்குவது சாதாரணமில்லை என்பேன் அப்பனே. 

அப்படி நெருங்க நெருங்க, மீண்டும் சொல்கின்றேன் அப்பனே. ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். துன்பங்கள் வரும் என்பேன். 

பின் நெருங்க நெருங்க நிச்சயம் அத்துன்பங்கள் பொறுத்துக்கொண்டிருந்தால், இறைவனை நெருங்கிவிட்டாலே இறைவன் பார்த்துக்கொள்வான் உங்கள் வாழ்க்கையை. செப்பிவிட்டேன் அப்பனே. 

ஆனாலும் அப்பனே பாதியிலேயே திரும்பி வந்து விடுகின்றீர்கள். ஒன்றும் நடக்கவில்லை என்று. இங்குதான் அப்பா கஷ்டங்கள் மீண்டும், மீண்டும். 

அனைத்திற்கும் காரணம் மிக சக்திகள். அப்பனே அவ்சக்தி அதாவது இறைவன் எங்கு இருக்கின்றான் என்பவை எல்லாம் யாங்கள் தெரிவிப்போம் வரும் காலங்களில். யாருக்கும் தெரியாதப்பா. யாங்கள் சொல்வோம் எக்கிரகத்தில் (இறைவன்) இருக்கின்றான்.  அங்கே எப்படி இருக்கின்றான். தேவாதி தேவர்கள் எப்படி எல்லாம் வாழுகின்றார்கள். பிரம்மா எங்கிருக்கின்றான் என்பவை எல்லாம் யானே எடுத்துரைப்பேன் உங்களுக்கு. முதலில் தெரிந்து கொண்டு வணங்கினால்தான் உத்தமம். தெரியாமல் வணங்கினால் ஒன்றுமே லாபம் இல்லை. இதனால் யான் சொல்கின்றேன் அப்பனே. 

ஆனால் தெரியாமலேயே வாழ்ந்து வருகின்றீர்கள். அதனால் தெரிந்து தெரிந்து வாழுங்கள். தெரிந்து வாழக் கற்றுக்கொள்ளுங்கள். (வாழ்வு) மேன்மைகள் பெறும். 

நீங்கள் எதையுமே கேட்கத்தேவை இல்லை. உங்களைப் படைத்தவன் இறைவன். அவனுக்குத் தெரியாதா அப்பா? தெரியாதாப்பா எதை என்றும் கொடுக்க? இதனைப் பல வழிகளில் கூட யான் எடுத்து உரைத்துவிட்டேன். 

மீண்டும் என்னிடத்தில் கேட்பது.  இதைத்தா , அதைத்தா என்றெல்லாம். ஆனாலும் அப்படி கேள்விகள் கேட்பதும், அப்பனே (பதில்) சொல்வதும் தவறுகள். 

உந்தனுக்கு எந்நேரத்தில் எதைக்கொடுக்க வேண்டும். ஏற்கனவே அப்பனே இறைவன் அழகாகவே குறித்து வைத்திருக்கின்றான் என்பேன். இதனால் அப்பொழுது அனைத்தும் நடக்குமப்பா. ஆகையால் அதுநாள் வரையில் பொறுத்திருக்க வேண்டும் அப்பனே. 

ஆனால் அதன் முன்னே முந்திச்சென்றால்தான் கஷ்டங்களப்பா. 

ஆனாலும் எங்கள் வழியில் வந்துவிட்டால் அது எப்பொழுது நடக்கும் என்பவை எல்லாம் யாங்கள் நிச்சயம் தெளிவு படுத்துவோம். சொல்லிவிட்டோம் அப்பனே.

அதைத் தெரியாமல் சுற்றிக்கொள்ளாதீர்கள் அப்பனே. வாழ்க்கையை வீணாக்கிக்கொள்ளாதீர்கள் அப்பனே. அங்கும் இங்கும் திரிந்தும் அப்பனே மனிதரிடத்தில் மறை பொருளை யார் ஒருவன் நம்புகின்றானோ நிச்சயம் அவன் வாழ்க்கைச் சிறப்படையும் சொல்லி விட்டேன். இதைப் பல வாக்குகளிலும் கூட யான் தெரிவித்துக்கொண்டேதான் வருகின்றேன் அப்பனே. 

நலன்களாக எதை என்று அறிய அறிய மறைமுகப் பொருள் யார்? இறைவனே என்பேன் அப்பனே. 

ஆனால் இறைவன் இருப்பதை மறந்து விட்டு மனிதன் வழியில் சென்றடைந்தால் அப்பனே  ஒருநாள் நிச்சயம் பள்ளத்தில் விழவேண்டும் சொல்லிவிட்டேன். 

ஆனால் இறைவன் மறைமுகமாக இருக்கின்றான். அவனை நம்பினால், பள்ளத்தில் விழுந்தாலும் அப்பனே எழுந்து விடுவீர்கள். 

ஆனால் மனிதனை நம்பினால் நிச்சயம் பள்ளமப்பா. யாரும் கடைசியில் காப்பாற்றக்கூட ஆள் இல்லாமல் போகும். ஆனால் மீண்டும் மனிதனிடத்தில் சென்றால் நீங்கள் இப்படிச் சொன்னீர்களே யான் செய்தேனே என்றால் , (அவன் உடனே ) யான் என்ன செய்வது உன் கர்மா என்று ஒரே அடியில் அடித்து விடுவான் அப்பனே. அதனால் மனிதன் ஏமாற்றுக்காரனப்பா.

புரிந்து கொள்ளுங்கள் அப்பனே. 

இதைத் தெரிந்து கொண்டாலே ஏன் பக்தியை செலுத்த வேண்டும்? எதற்காக? அனைத்தும் காசுகளுக்காகத்தானப்பா. 

ஆனாலும் அப்பனே இறைவன் யார் மனதில் தங்கி இருக்கின்றான் என்றால் காசுகளுக்காக ஆசைப்படக்கூடாது என்பேன் அப்பனே. ஆனால் காசுகளுக்காக ஆசைப்பட்டால் மனதில் முழுவதும் அழுக்குகளாக இருக்கும். 

அப்பனே யார் ஒருவன் காசுகளுக்காக ஆசைப்படாமல் வாழுகின்றானோ அவன் மனதில் இறைவன் தங்கி இருப்பான் அவ்வளவுதான் என்பேன் அப்பனே. 

ஏன்? எதற்காக?. 

அப்பனே அதனால் இன்னும் இன்னும் ஏழ்மையில் கூட மனிதர்கள் வாழத்தெரியாமல் கூட வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள் என்பேன் அப்பனே. 

அதனால்தான் முதலில் என் பக்தர்களைக்கூட எப்படி எதற்காகச் செய்ய வேண்டும் என்பதை எல்லாம் ( யான் சொன்னதை) அதை நீங்கள் செய்திட்டு வந்தாலே உங்களுக்கு வாழ்க்கை யான் தருவேன் அப்பனே. 

அனைத்தும் தருவேன். 

அதனால் அப்பனே ஒவ்வொருவருக்கும் ஏதாவது ரூபத்தில் நல்லது செய்து கொண்டே இருங்கள் அப்பனே. 

அவ்நல்லவை நிச்சயம் உங்களைக் காக்கும் என்பேன் அப்பனே. 

இவ்வுலகத்தில் யாரும் காக்க மாட்டார்கள் சொல்லிவிட்டேன் அப்பனே. 

அப்பனே உயிர் பிரியும் நேரத்தில் உணர்க. அப்பனே இறைவன்தான் வருவான் அப்பா. உந்தனுக்கு அதைச்செய் இதைச்செய் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு இருக்கின்றானே அவன்கூட வரமாட்டான் அப்பா. அப்பொழுது எண்ணிக்கொள்ளுங்கள் நீங்கள் அப்பனே ( அவன் சொல்வது அனைத்தும் ) பொய்கள் என்று அனைத்தும் கூட. 

அதனால் தெரிந்து கொள்ளுங்கள். இறைவனே மெய் என்று இறைவனை நாடி நாடிச் சென்றால், இறைவன் வலங்களாக அதாவது திருத்தலம், திருத்தலமாகவே இறைவன் சென்று கொண்டே இருக்கின்றான். யான் காண்பிப்பேன் இறைவன் எங்கு இருக்கின்றான் என்று கூற

அங்குச் சென்று (இறைவனை) ஏதாவது ரூபத்தில் அப்பனே நீங்கள் பார்த்துக்கொள்ளலாம். உங்கள் கர்மங்கள் அழிந்துவிடும் என்பேன் அப்பனே. 

இதை நீங்கள் நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும். மீண்டும் மீண்டும் சொல்கின்றேன் அப்பனே. உயிர் பிரியும்போது யாரும் இருக்கமாட்டார்கள் அப்பா. யாங்கள்தான் இருப்போம். அப்பொழுது அவ்ஆன்மா எங்களிடம் ஏங்கும். 

அய்யய்யோ இப்படி எல்லாம் செய்து விட்டேனே. இப்படி எல்லாம் தெரியாமல் வாழந்து விட்டேனே என்ன லாபம் என்று எங்களிடத்தில் வரும்ப்பா. காப்பாற்றுங்கள். காப்பாற்றுங்கள் என்றெல்லாம். அப்பனே யாங்கள் எப்படியப்பா காப்பாற்றுவது? அப்பனே நீங்களே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே. 


(மதுரையில் அகத்திய பிரம்ம ரிஷி அடியவர் இல்லத்தில் உரைத்த இந்த வாக்கு பகுதி -3 அதனை பின் வரும் பதிவில் படிக்கவும்)

https://siththarkalatchi.blogspot.com/2023/10/196-4-9-2023-3.html?m=0

ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!

No comments:

Post a Comment