“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Tuesday, October 17, 2023

சித்தர்கள் ஆட்சி - 199 : அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 4-9-2023 உரைத்த வாக்கு - பகுதி 3


 

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரை அடியவர் ஒருவர் இல்லத்தில் உரைத்த வாக்கு - 04.09.2023 ( பகுதி 3)


இந்த வாக்கின் இரண்டாம் பகுதி கீழே உள்ள பதிவில் படிக்கவும்


https://siththarkalatchi.blogspot.com/2023/10/196.html?m=0

(பகுதி 3 - வாக்கு ஆரம்பம் ) 


ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 


நீங்கள் நன்மையாகச் செய்திருந்தாலே கூட அப்பனே அவ் ஆன்மாவை எப்படிப் பக்குவப்படுத்து்வேண்டும் என்பதை எல்லாம் இறந்த பிறகு அப்பனே அவ் ஆன்மாவிற்க்கு தெரியுமப்பா. 

உயிர் போய் விட்டதே என்று பந்த பாசங்களோடு அப்பனே அலை பாயுமப்பா. நோக்கி நோக்கி அலைபாயுங்களப்பா. எதை என்றும் தெரியாமல், எவை என்றும் புரியாமல் அப்பனே பாவம் அப்பா அவ் ஆன்மா.  ஒரு ஆன்மா, பிறவி எடுக்கத் துடிக்கும் , இன்னொரு ஆன்மா இறைவனை நோக்கி (செல்ல) துடிக்கும். ஆனாலும் அப்பனே இவை இரண்டுமே கர்மா இருந்தால் அப்பனே செல்லுபடி ஆகாதப்பா. அலைந்து திரிந்து பாச பந்தங்களோடு அப்பனே எவ்வாறப்பா எதை என்றும் அறிய அறிய அவ்ஆன்மாக்களும் சில சில வழிகளில் கூட விடுதலை கொடுத்துக்கொண்டுதான் இருக்கின்றோம் அப்பனே. எங்களால் செய்ய முடியாதது அப்பனே மனிதனால் செய்ய முடியாதப்பா பொய்களப்பா பொய்கள். 

அப்பனே இக்கலியுகத்தில் இன்னும் திருடர்கள் வருவார்களப்பா. யான் அகத்தியன், யான் இறைவன் என்றெல்லாம் பொய்கூறி யான் (பரமகுரு, பரமஞானி, பரமயோகி..…) பரமசித்தன். யான் சொன்னால் அனைத்தும் நடக்கும் என்றெல்லாம் கர்வம் மிகுந்து பின் பொய் பேசுவானப்பா. அவ் பொய்பேசுபவனிடத்தில் அப்பனே ஒன்றுமே இருக்காதப்பா. சொல்லிவிட்டேன் அப்பனே. அதனால் ஏற்கனவே அவன் கர்மத்தில் இருக்கின்றான். நீங்கள் அவனிடத்தில் சென்றால் (உங்களுக்கு) கர்மாதானப்பா. ஆனால் யான் அவனிடத்தில் சென்றேனே. ஒன்றும் நடக்கவில்லை என்று பிதற்றக்கூடாது. பிதற்றக்கூடாது. சொல்லிவிட்டேன் அப்பனே. 

அதனால் அப்பனே என் பக்தர்கள் யாருக்காவது ஒருநாள்  அனுதினமும் அப்பனே ஏதாவது நன்மைகள் செய்து கொண்டே இருங்கள் அப்பனே.யான் பார்த்துக்கொள்கின்றேன் அப்பனே. 

அப்பனே மீண்டும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் அனைவருமே பக்குவப்பட்டவர்கள்

உங்களுக்கு அனைவருக்குமே யான் கஷ்டத்தைக் கொடுத்திருக்கின்றேன் அப்பனே. சொல்லிவிட்டேன் அப்பனே. 

அப்பனே ஏன்? எதற்காக? என்பவை எல்லாம் அப்பனே உங்களுக்குக் கஷ்டம் கொடுத்ததனால்தான் நீங்கள் என்னிடத்தில் தேடி வந்திருக்கின்றீர்கள். அப்படி கஷ்டமே இல்லை என்றால் நீங்கள் வந்திருக்க மாட்டீர்கள். தன் வேலையை பார்த்திட்டு சென்றிருப்பீர்கள் என்பேன் அப்பனே. 

அதனால் இறைவனே சில சோதனைகள் வைத்து தன்பால் அப்பனே அணைத்துக்கொள்வது சிறப்பு. 

"'''''''அதனினும் சிறப்பு தான, தர்மங்களப்பா'''''''''. 

அதனால் நிச்சயம் என்னை சரணடைந்தவர்கள் அனுதினமும் யாருக்காவது உதவிகள் செய்து கொண்டே இருக்க வேண்டும். சொல்லிவிட்டேன் அப்பனே. 

அப்படிச் செய்யாவிடில் துன்பம் நெருங்கிக்கொண்டே இருக்கின்றது. அப்பனே அதாவது பின் நோய்கள் நெருங்கிக்கொண்டே இருக்கின்றது. 

இன்னும் அப்பனே ஒன்றைச்சொல்கின்றேன். பூலோகத்திலிருந்து ஓர் கிரகத்திற்கு அப்பனே எதையோ விட்டான் மனிதன். ஆனால் என்ன லாபம்? 

ஆனால் மேல் லோகத்திலிருந்து (அவர்கள்) பின் விட்டுவிட்டால் அனைவருக்கும் நோய்களப்பா. 

அவர்களும் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள் அப்பனே. கிரகங்களில் மனிதர்கள் வாழ்ந்துகொண்டேதான் இருக்கின்றார்கள். அதை யாராலும் கணிக்க முடியாதப்பா. யான் சொல்கின்றேன் அப்பனே. 

அவன் பூமியில் மனிதர்கள் அதாவது பூமியிலிருந்து இப்படி (மனிதர்கள்) விடுகின்றானே என்று அவன் யோசித்தால் அவன் இங்கு விட்டால் அனைவருக்குமே நோய்கள்தானப்பா. சொல்லிவிட்டேன் அப்பனே. அதனால் மனிதர்களால் (வேற்று கிரகவாசிகள் / தேவர்கள்) எதையும் கண்டுபிடிக்க முடியாதப்பா. பின் அதை இதை என்று சொல்லலாமே (தவிர) கடைசியில் தோல்விதானப்பா. 

மனித வாழ்க்கையே அப்பனே நரக வாழக்கையப்பா. 

அப்பனே சொர்க்கமாக்க வேண்டும். எப்படி ஆக்கவேண்டும்? அதை எங்களால் மட்டுமே முடியும் சொர்கத்தை, எங்கள் பின்னே வந்தால் சொர்க்கத்தையும் காட்டுவோம். 

அப்பனே நரகத்தையும் காட்டுவோம். ஆனால் சொர்கத்தைக் காட்டிவிட்டு  நரகம் இப்படித்தான் எதை என்று அறிய அறிய அப்பனே நீங்கள் பார்த்துப் பயந்து விடுவீர்கள் என்பேன் அப்பனே. அதனால்தான் அப்பனே.

பொய் சொன்னால் என்ன தண்டனை என்பதை எடுத்துரைக்கின்றேன். 

பொய் சொல்லிக்கொண்டு இருந்தால் பின் தலைவலி வந்து கொண்டே இருக்கும் அப்பா. கடைசியில் பார்த்தால் உண்ணக்கூட முடியாதப்பா. 

அப்பனே இது போலப் பல பல மனிதர்கள் பக்திக்குள்ளேவே நூழைந்து விட்டு பொய் சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள் அப்பனே. அப்பொழுது வாழ்க்கையைப் பார் அப்பனே. 

கடைசியில் வாய் கூட பேச முடியாமல் போகும். அப்பனே எவை என்று கூற (அவனால்) தின்பதற்குக் கூட ஒழுங்காக முடியாதப்பா. 

இதனால் இறைவனைக் குற்றம் சொல்வதாம்? இதை, அதை என்று கூற. எவை என்று புரியாமல் கூட இப்படிச் செய்தேனே என்பவை எல்லாம். தெரிந்து கொண்டு வாழுங்கள் அப்பனே. 

ஏன், எதற்காக இவ்வுலகத்தில் பலபேர்கள் இருக்கின்றார்கள் அப்பனே. 

ஆனாலும் அப்பனே சனியவன் இருக்கின்றானே  அவனை யாராலும் அடக்க முடியாதப்பா. ஏனென்றால் ஈசனிடமே (ஈஸ்வர) பட்டம்.

“ஈசனாரே!!! நிச்சயம் யான்  தண்டனைகள் பின் கொடுத்தே தீருவேன் மனிதர்களுக்கு. ஏனென்றால் மனிதன் நிச்சயம் ஒழுங்காக வாழ  பின் அனைத்தும் கொடுத்தும் கூட அதைச் சரியாக (மனிதர்கள்) பயன்படுத்தவில்லை. இதனால் நிச்சயம் யான் கஷ்டங்கள் கொடுப்பேன்” என்று சனிபகவான் சபதம் ஏற்று அனைவருக்கும் ஒவ்வொரு விதத்தில் கூட கஷ்டங்கள் கொடுத்துத் திருத்த வழி பார்க்கின்றான். 

ஆனால் (மனிதர்களைச் சனிபகவான்) திருத்தி திருத்தி (நல்ல தர்ம வாழ்வு) கொடுத்துவிட்டால் அனைத்தும் லாபங்கள்தான். 

ஒவ்வொருவருக்கும் எதை என்றும் புரியப்புரிய ஒவ்வொரு கிரகத்தின் ஆனாலும் சொல்கின்றேன். 

இத்தனை கிரகங்கள் இருக்கின்றதே ராகு கேதுக்கள் கிரகங்கள் எங்கு இருக்கின்றது? யாராவது அறிந்தானா? நிச்சயம் இல்லை. 

தேவாதி தேவர்களும் கூட எவ்வாறு என்பதைக்கூட ஞானிகளும் கூட அவ் ராகு கேது கிரகங்கள் கூட அடக்கம். 

ஆனால் அதை (யாராலும்) கண்டுபிடிக்க முடியாதப்பா. 

அது எங்கு உள்ளது என்பதைக்கூட யான் உங்களுக்கு கற்பிக்கப்போகின்றேன் வரும் காலங்களில் ஒவ்வொன்றாக. 

அதனால் முதலில் அப்பனே மீண்டும் மீண்டும் சொல்கின்றேன் அப்பனே. தவறைச் செய்யாதீர்கள். 

முதலில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற வேண்டும். 

இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற வேண்டும். 

அப்பனே இப்படி தேர்ச்சிகள் பெற்றுக்கொண்டே இருந்தால்தான் அனைத்தும் தெரியும்ப்பா. 

அப்பனே ஏற்கனவே யான் தெரிவித்து விட்டேன். முதல் வகுப்பிலே இருந்து கொண்டு, யான் உயர் கல்வி தேர்ச்சி பெற வேண்டும் என்றால் எப்படியப்பா உங்களால் முடியும்? அப்பனே. அதனால்தான் கஷ்டங்கள் அப்பா. 

பின் (ஊர் சுற்றி) திரிவது, இறைவனை வணங்குவது, தின்பது, உறங்குவது. இப்படியே வாழ்க்கை போகும் என்றால் அப்பொழுது நீ மனிதனாக எப்பொழுதுதான் வாழப்போகின்றாய் அப்பனே?. தெரிந்து கொள்ளுங்கள். அப்பனே தெரியாமல் அப்பனே வீணடித்து, வீணடித்து மீண்டும் மீண்டும் பிறப்புகள் நுழைந்து கஷ்டங்கள் சேர்த்துக்கொள்ளாதீர்கள் அப்பனே. இப்பொழுது அனைவருமே அனுபவித்து வந்திருக்கின்றீர்கள் என்பேன் அப்பனே.

அனுபவம் கூட ஏராளம் அப்பனே. அப்பனே எவ்வளவு கஷ்டங்கள் அப்பனே. எவ்வளவு துன்பங்கள் என்பேன் அப்பனே. இவ்வாழ்க்கை மீண்டும் தேவையா? சொல்லுங்கள் அப்பனே. தேவை இல்லை என்பேன் அப்பனே யான். 

இதனால் என்னிடத்தில் வந்தால் முதலில் உங்களுக்கு முதலில் என்ன கர்மா இருப்பது என்பதை யான் உணர்ந்து விடுவேன் அப்பனே. அதை முதலில் போக்க, மறு பிறவிக்கு எடுத்துச்செல்ல (விட) மாட்டேன் என்பேன் அப்பனே. 

ஆனால் யாராவது ஒருவன்  அனைத்தும் எந்தனுக்கு  கொடு என்று சொல்லிக்கொடுங்கள் ( கேளுங்கள்) , (யான் உடனே) கொடுத்து விடுகின்றேன். ஆனாலும் அப்பனே (உங்களுக்கு) அடுத்த பிறவி, அடுத்த பிறவி என்று போய் விடுமப்பா. 

அப்பனே அதனால் தான் அப்பனே சிந்தித்து யான் இங்கிருக்கின்றேன் நீங்கள் அங்கிருக்கின்றீர்கள் என்பது தெளிவாக. அதனால் தான் அப்பனே யார் யாருக்கு எதைக் கொடுக்க வேண்டுமோ அதைத்தான் கொடுப்பேன் என்பேன் அப்பனே. 

நீங்கள் கேட்டாலும் யான் கொடுக்கப்போவதில்லை என்பேன் அப்பனே. ஏன்? எதற்காக? 

அப்பனே ஒரு தந்தையிடம் போதைப் பொருளைக் கொடு என்று மகன் கேட்கின்றான். (அந்த மகனின்) தந்தை கொடுத்து விடுவானா என்ன?. அப்பனே நிச்சயம் (தன் மகன்) கெட்டுவிடுவான் என்று கொடுத்து விட மாட்டான் அப்பனே. 

அதே போலத்தான் அப்பனே நீங்கள் எதை பின் கேட்டுள்ளீர்களே (கர்மாவை- பணம், தொழில், பதவி முதலிய…) கர்மத்தை கேட்டுள்ளீர்கள் அனைவருமே. 

அதை யான் கெடுத்து,  அதாவது கொடுத்து விட்டால் அப்பனே நீங்கள் கெடுத்து பின் குட்டிச்சுவர் ஆக்கி விடுவார்கள் என்பார்களே அதுபோல் நீங்கள் ஆக்கி விடுவீர்கள் என்பேன் அப்பனே. 

அதனால் நீங்கள் மட்டும் கெடுவதில்லை , அப்பனே உன் இல்லத்தவளையும் கூட உன் பிள்ளைகளையும் கூட உன்னைச் சார்ந்தவர்களையும் கூட நீங்கள் எவை என்று (உங்களை) அறியாமல் (கெடுத்துவிட்டு) கெட்டுவிட்டுச் சென்று விடுவீர்கள். 

ஏன்? எதற்காக புரிந்து கொண்டீர்களா அப்பனே. 

இவ் அகத்தியன் ஒன்றைக்கொடுத்தால் அப்பனே பின் மீண்டும் வாங்கிக் கொள்ளவே மாட்டான்.  பின் ( அகத்தியன் எனது) சிறப்பு இதுதான் அப்பனே. ஆனாலும் அதை உணர்ந்து உணர்ந்துதான் கொடுப்பேன் அப்பனே. 

அதனால் மீண்டும் மீண்டும் சொல்கின்றேன் அப்பனே. நீங்கள் என்ன கேட்டாலும் யான் கொடுக்கப்போவதில்லை. என்னிடத்தில் இருந்து எதையும் எதிர்பார்க்காதீர்கள் அப்பனே. 

அப்பனே எதிர்பார்க்காமல் (மனதில் ஏதும் எண்ணாமல், கோரிக்கை ஏதும் வைக்காமல் தூய அன்புடன்) வணங்கினால் தான் உத்தமம். 

எதிர்பார்த்து வணங்கினால் அதற்கு ஒன்றுமே அர்த்தம் இல்லை என்பேன் அப்பனே. 

அப்பனே நீ எதிர்பார்ப்புடன் தான் பிறந்தாயா? 

அப்பனே எதிர்பார்ப்புடன் வளர்ந்தாயா? 

எதிர்பார்ப்புடன் திருமணம் செய்து கொண்டாயா? 

எதிர்பார்ப்புடன் பிள்ளைகள் பெற்றுக்கொண்டாயா? 

அப்பனே பின் எதிர்பார்த்துத்தான் கஷ்டங்கள் வந்து கொண்டிருக்கின்றதா? 


(மதுரையில் அகத்திய பிரம்ம ரிஷி அடியவர் இல்லத்தில் உரைத்த இந்த வாக்கின் தொடரச்சி கீழ்வரும் பதில் காணவும்)

https://siththarkalatchi.blogspot.com/2023/10/201-4-9-2023-4.html?m=0


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!

No comments:

Post a Comment