அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - அடியவர் ஒருவர் இல்லத்தில் உரைத்த வாக்கு - 04.09.2023 ( பகுதி 6)
இந்த வாக்கின் முந்தைய பகுதி கீழே உள்ள பதிவில் படிக்கவும்
https://siththarkalatchi.blogspot.com/2023/10/202-4-9-2023-5.html?m=0
(பகுதி 6 - வாக்கு ஆரம்பம் )
ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.
குருநாதர்:- இன்பங்களே
அப்பனே, வாழ்க்கை என்பது என்ன?
அடியவர்:- பிறருக்கு உபகாரமாக இருப்பது.
குருநாதர்:- அப்பனே, உந்தனுக்கே அதாவது உபகாரமாக நீ இல்லையப்பா எப்படியப்பா பேசுகின்றாய்?
அடியவர்:- (அடியவர்கள் அமைதி. சில
குருநாதர்:- அப்பனே எழுந்து நில் அப்பனே.
(இங்குதான் அந்த மகத்துவம் மிக்க மகிமை புகழ் நிகழ்வு
அடியவர்:- (அடியவர் எழுந்து நின்றார்)
குருநாதர்:- அப்பனே ஒரு காலில் நில்.
அடியவர்:- (ஒரு காலில் நிற்க ஆரம்பித்தார்)
குருநாதர்:- அப்பனே கைகளை மேலே துக்கி ,
அடியவர்:- ( இரு கைகளை மேலே தூக்கி ஒற்றைக்காலில் நிற்க ஆரம்பித்தார்)
குருநாதர்:- ஏதாவது அனைவருக்கும் ஓர் உரை, உரை.
அடியவர்:- (அடியவர்
குருநாதர்:- அப்பனே, உன் மனதிலேயே தான் நீ சொன்னாய்
அடியவர்:- எல்லோரும் அன்பாக இருங்கள். எல்லோரையும் அகத்தியப்பெருமான் பார்த்துக்கொள்வார்.
( இப்போது ஒற்றைக்காலில் நிற்கும் அடியவர் , நிற்க இயலாமல் ஆடிக்கொண்டே இதை அனைவருக்கும் உரைத்தார். )
குருநாதர்:- அப்பனே, ஏன் ஆடினாய்,? அப்பனே இவையே உன்னால் நிற்க முடியவில்லையே அப்பனே வாழ்க்கை எப்படியப்பா வாழ்வாய்? அப்பா. அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே.
இப்படித்தான் மனிதன் பிறந்து விடுகின்றான். பின் வாழத்தெரியாமல்
ஆடாமல் நிற்கவேண்டும் என்றால் அப்பனே எங்களை நிச்சயம் சரண்டைதல் அதாவது
அப்பனே (ஒரு) பாடலைப்பாடு முருகனை நோக்கி.
அடியவர்:- (முருகன் பாடலை பாட ஆரம்பித்தார் அடியவர். ஆனால் கால் ஊன்றிவிட்டு - திரு.அருணகிரிநாதர் அருளிய திருப்புகழில் உள்ள - வாதினை அடர்ந்த (பழமுதிர்ச்சோலை) என்ற பாடலை பாட ஆரம்பித்தார்.)
குருநாதர்:- அப்பனே, நிறுத்து. அப்பனே கால்களை யான் ஊனச்சொன்னேனா என்ன?
அடியவர்:- (மறுபடியும் இந்த அடியவர் குருநாதர் உத்தரவை ஏற்று ஒரு காலில் நின்று கையை
வாதினை யடர்ந்த வேல்விழியர் தங்கள்
மாயமதொ ழிந்து ...... தெளியேனே
மாமலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து
மாபதம ணிந்து ...... பணியேனே
ஆதியொடு மந்த மாகிய நலங்கள்
ஆறுமுக மென்று ...... தெரியேனே
ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்ட
தாடுமயி லென்ப ...... தறியேனே
நாதமொடு விந்து வானவுடல் கொண்டு
நானிலம லைந்து ...... திரிவேனே
நாகமணி கின்ற நாதநிலை கண்டு
நாடியதில் நின்று ...... தொழுகேனே
சோதியுணர் கின்ற வாழ்வுசிவ மென்ற
சோகமது தந்து ...... எனையாள்வாய்
சூரர்குலம் வென்று வாகையொடு சென்று
சோலைமலை நின்ற ...... பெருமாளே.
நன்றி : https://www.kaumaram.com/thiru/nnt1318_u.html
)
குருநாதர்:- (இந்த பாடலை முழுவதும் பாடி முடிக்கும் முன்னரே , இடையிலேயே குருநாதர் குறுக்கிட்டு ) அப்பனே, நிறுத்து. அப்பனே கர்மா வைத்துக்கொண்டிருக்கின்றாய் அப்பனே. இதிலிருந்தே தெரிகின்றது என்பேன் அப்பனே. ஆடி ஆடி பாடுகின்றாய் என்பேன் அப்பனே. உன் பக்கத்தில் இருப்பவனை எழச்சொல்.
அடியவர்:- ( அடியவர் எழுந்து நின்றார்)
குருநாதர்:- அப்பனே இது போலே நில். ( ஒற்றைக்காலில், இரு
அடியவர்:- ( அடியவர் குருநாதர் சொன்னது போல் நின்றார்)
குருநாதர்:- அப்பனே, முருகனைப்பார்த்து ஒரு பாடலைப்பாடு.
அடியவர்:- (திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி
உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.
( இப் பாடலின் விளக்கத்தை இங்கு காணவும்
நன்றி :- https://kaumaram.com/anuboothi/anuboothi_sn051_u.html )
குருநாதர்:- அப்பனே, இறைவனை நம்பினாலும் ஓர் பக்குவப்படுத்த அப்பனே
உன்னால் ஒன்றுமே அதாவது பக்கத்தில் உள்ளவன் கெட்டியாக (ஒற்றைக்காலில் நிற்கும் உன்னை) பிடித்தான். அதுபோலத்தானப்பா மனிதனுக்கு சில சில வினைகளில் யாங்களே வந்து அப்பனே அப்படியே பிடித்துக்கொள்வோம் அப்பனே. புரிந்து கொண்டாயா அப்பா?
உன் நிலமையும் உந்தனுக்கு அதனால்தான் அப்பனே வாக்குகள் உந்தனுக்கு கொடுக்கவில்லை என்பேன் அப்பனே. சில கர்மாக்களை எதை என்று அறிய
அடியவர்:- (அதே முருகன் பாடலை பாட ஆரம்பித்தார்)
குருநாதர்:- அப்பனே, யான் சொல்லியதை
எவை என்று அறிய
ஏனென்றால் அப்பனே ஏன்
அடியவர்:- கர்ம வினை என்பது நாம் செய்கின்ற பாவ புண்ணியங்கள் ஏற்ப வரும். நல்லது பன்னால் நல்லது வரும். கெட்டது பன்னா கெட்டதை வரும்.
குருநாதர்:- ( தனிப்பட்ட வாக்கு அந்த அடியவருக்கு மட்டும் உரைத்தார். அந்த பதிவுகள் நீக்கப்பட்டது. அந்த அடியவர் இல்லத்திலே குருநாதர் இருப்பதாக உரைத்தார்.) இறைவன் தான் செய்த வினைகளுக்கு ஏற்ப்பவே அப்பனே சில சில துன்பங்கள் கொடுத்துக்கொண்டு இருக்கின்றான். இது தவறா?
அடியவர்:- சரிதான்.
குருநாதர்:- அப்பனே எதை என்று கூற நீங்கள் இன்னும் அப்பனே தவறு
அடியவர்:- ( அனைவரும் அமைதியானார்கள். )
குருநாதர்:- அதனால் அப்பனே, உன்
அடியவர்:- (பாடல்
குருநாதர்:- அப்பனே அனுதினமும் உன்தாயை வணங்கிக்கொண்டே வா அப்பனே. நிச்சயம் மாறுதல்
முதலில் அப்பனே தாய் தந்தையரை வணங்குதல் வேண்டும். இதை வணங்காதவர்கள் (உலகில் உள்ள அனைவருக்கும் ) அப்பனே, எப்படியப்பா கொடுப்பது? அதனால் உங்களுக்கு அருகிலேயே யான் இருக்கின்றேன். ஆனால் நீங்கள் புரிந்து கொள்ளவே இல்லையப்பா. அதனால்தான் சில சில கஷ்டங்களை உங்களுக்கு யானே வைத்தேன் அப்பனே.
அடியவர்:- ( அனைத்து அடியவர்களும் அமைதி)
குருநாதர்:- இதனால் அப்பனே உணருங்கள். அப்பனே, (உங்களால்) சிறிது நேரம் கூட நிற்க முடியவில்லை என்பேன் அப்பனே. வாழ்க்கை எப்படித்தான் வாழப்போகின்றீர்கள் என்பேன் அப்பனே?
(மதுரையில் அகத்திய பிரம்ம ரிஷி அடியவர் இல்லத்தில் உரைத்த இந்த வாக்கு பின் வரும் பதிவில் தொடரும்………)
https://siththarkalatchi.blogspot.com/2023/10/207-4-9-2023-7.html?m=0
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!
No comments:
Post a Comment