மதுரை அகத்திய மஹரிஷி ஆலயம் முகவரி

திருவாசகம் - உரை

அகத்திய பிரம்ம ரிஷி அருளிய , முதல் தர புண்ணியம் உங்களுக்கு பெற்றுத்தர உதவும் நாடி வாக்குகள்.

Tuesday, October 17, 2023

சித்தர்கள் ஆட்சி - 198 : அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு

 


உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:- 

ஏன், எதற்காக இவ்வுலகத்தில் பலபேர்கள் இருக்கின்றார்கள் அப்பனே. எவை எல்லாம் பின் பற்றி, பின் பற்றி ஆனாலும் அப்பனே சனியவன் இருக்கின்றானே எவை என்றும் புரிய புரிய அவனை யாராலும் அடக்க முடியாதப்பா. ஏனென்றால் ஈசனிடமே எவை என்றும் புரியாமல் கூட பின் எவை என்றும் அறியாமலே (ஈஸ்வர) பட்டம் ஆனால் எதை என்றும் புரிய பின் “ஈசனாரே!!! நிச்சயம் யான்  தண்டனைகள் பின் கொடுத்தே தீருவேன் மனிதர்களுக்கு. ஏனென்றால் மனிதன் நிச்சயம் ஒழுங்காக வாழ எவை என்று கூற எதை என்றும் அறிய அறிய பின் அனைத்தும் கொடுத்தும் கூட அதை சரியாக (மனிதர்கள்) பயன்படுத்தவில்லை. இதனால் நிச்சயம் யான் கஷ்டங்கள் கொடுப்பேன்” என்று சனிபகவான் சபதம் ஏற்று அனைவருக்கும் ஒவ்வொரு விதத்தில் கூட கஷ்டங்கள் கொடுத்து திருத்த வழி பார்க்கின்றான். ஆனால் (மனிதர்களை சனிபகவான்) திருத்தி திருத்தி (நல் தர்ம வாழ்வு) கொடுத்துவிட்டால் அனைத்தும் லாபங்கள்தான். 

ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!

No comments:

Post a Comment