“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Thursday, March 2, 2023

சித்தர்கள் ஆட்சி - 76 : யாருக்கு நாடி வாக்குகள் கிடைக்கும் ?

 


அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய மாமுனிவர் பாதம் போற்றி!



நமச்சிவாயம் வாஅழ்க

அகத்திய பிரம்ம ரிஷி வாஅழ்க

🌼🌸🌺🌼🌸🌺🌼🌸🌺


அகத்திய பிரம்ம ரிஷியின் நாடி வாசிக்கும் ஜானகிராமன் வைத்துள்ள நாடியில் யாருக்கு நாடி வாக்குகள் வரும் என்ற வாக்கு. 



எதை என்று அறிய அறிய யான் நீக்குவேன் என்னை நிச்சயம் என்னை முழு மனதோடு அன்போடு எதை என்று அறிய நிச்சயம் என்னிடத்தில் அகத்தியன் வருவான் என்று யார் நினைப்பார்களோ அவர்களுக்கு மட்டுமே நிச்சயம் (எந்தன்) வாக்குகள். எதை என்று அறிய அறிய அப்பனே தன் சுயநலத்திறக்காக வாக்குகள் கேட்கின்றார்கள் அப்பனே. அப்படிப்பட்ட மனிதர்களுக்கு  யான் எப்படித்தான் (வாக்குகள்) உரைப்பது சொல்லிவிடு. எதை என்று அறிய அறிய நீயே சொல். எதை என்று அறிய அறிய அப்பனே நிச்சயம் மற்றவர்களுக்காக யார் உழைக்கின்றானோ அவன்தனக்குத்தான் எதை என்று அறிய அறிய எங்களாலும் செய்ய முடியும் அப்பனே. அப்பொழுதுதான் கிரகங்களும் கூட ( எங்கள் அருளால்) வழிவிடும் என்பேன். ஆனால் அப்படி மனிதன் இல்லையப்பா இவ்கலியுகத்தில் அதனால் கட்டங்கள் பட்டே தீருவான் அப்பனே ஞாபகத்தில் வைத்துக்கொள். 


- அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு (2/26/2023)




நமச்சிவாயம் தாள் சரணம்

அகத்திய பிரம்ம ரிஷி பாதம் சரணம்