இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும். இறைவா, எங்களை நன்றாக படைத்தாய்! இறைவா, அனைத்தையும் நன்றாக கொடுத்திருக்கின்றாய்! இறைவா உந்தனுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!
அன்பு அன்னை லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகள் போற்றி! போற்றி!! போற்றி!!!
21/10/2026 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த வாக்கு.
![]() |
| தர்மத்தை தலை நிமிரச் செய்ய அனுமனின் அதிசய மூலிகை தேடல் |
![]() |
| ரகுநாத் மந்திர்.ரிஷிகுண்ட். திரிவேணி காட்.ரிஷிகேஷ். |
வாக்குரைத்த ஸ்தலம்: ரகுநாத் மந்திர். ரிஷிகுண்ட். திரிவேணி காட்.ரிஷிகேஷ்.
(ரகுநாத் மந்திர். திருவேணி காட், 324, மயாகுண்ட், ரிஷிகேஷ், உத்தராகண்ட் - 249201, இந்தியா.)
Triveni Ghat, 324, Mayakund, Rishikesh, Uttarakhand 249201, India
கூகிள் மேப் லிங்க் :-
https://maps.app.goo.gl/dupnCDAdn8iT3K8BA
===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
===========================
ஆதி சிவசங்கரியின் பொற் கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன், அகத்தியன்.
அப்பனே, எம்முடைய ஆசீர்வாதங்கள்.
அப்பனே, உண்மை ஞானத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும், அப்பனே.
உண்மை ஞானத்தைத் தெரிந்துகொண்டால், அனைத்தும் அப்பனே, பின் இறைவன் பின் வழங்குவானப்பா.
===========================
# தானாகவே அதிர்ஷ்டங்கள் ஏற்படும் ரகசியங்கள்.
===========================
அதனால் தான், அப்பனே, பல உண்மைகள் தெரிவித்து!!!!, அப்பனே, உண்மை ஞானத்தை அறிந்துகொண்டால், அப்பனே, தானாகவே அதிர்ஷ்டங்கள் ஏற்படுமப்பா.
ஆனாலும் மனிதர்கள் கலியுகத்தில் உண்மையான ஞானம் என்றே தெரியாமல் அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றார்கள் என்பேன், அப்பனே.
இதனால் இறைவனின் ஆற்றல் எப்படி கிடைக்குமப்பா?????????
நீங்களே கூறுங்கள்.
===========================
# ஸ்ரீ இராமர் பிரான் தொடர்புடைய ஒரு சம்பவம்.
===========================
அப்பனே, எதை என்று புரிய, அப்பனே. இப்பொழுது, அப்பனே, நிச்சயம் ஒரு சம்பவத்தை எடுத்துரைக்கின்றேன். அப்பனே!!!!
அதாவது பின் எதை என்று அறிய, அப்பனே!!!
**** ராமன், அப்பனே, பின் இதை அறிவித்து, அப்பனே, சில, அப்பனே, பின் எதற்காக? என்றெல்லாம், அப்பனே,
ராமனுக்கே, அப்பனே, சில தோஷங்கள் ஏற்பட்டு விட்டது அப்பனே.
இதனால் பின் ராமன் தர்மத்தை அழகாக காத்து வந்தான்ப்பா.
அப்பனே, இவை தன் அறிய, அப்பனே, நிச்சயம், அப்பனே, பின் அவ் தோஷத்தால், அப்பனே, தர்மம் தலைக்கீழாக போய்விடுமே என்று, அப்பனே, நிச்சயம், பின், அதாவது பல, அப்பனே, பின் நிச்சயம், ஞானிகளும் எடுத்துரைத்தனர்.
இதற்கு என்ன செய்ய வேண்டும்???? என்றெல்லாம், பின் அழகாக, பின் ராமன், அதாவது ஞானிகளை வணங்கி, பின் என்ன செய்ய வேண்டும்,???
பின் நீங்கள், பின், அதாவது தர்மம் தலைக்கீழாக போய்விடக்கூடாது, தலைக்கீழாக போய்விடக்கூடாது,
===========================
# ஸ்ரீ ராமர் = தர்மம்
===========================
![]() |
| ஸ்ரீ ராமர் = தர்மம் |
பின்!!!! அதாவது, பின் ராமன் என்றால், பின் ராமன் என்ற சொல்லுக்கு, நிச்சயம், தர்மம் என்றே,!!!!! (பொருள்)
பின் நிச்சயம், பின், அதாவது உலகம் அழியும் வரை, நிச்சயம், இப்பொருள் நிச்சயம் இருக்க வேண்டும்.
இதனால், நிச்சயம், நீங்கள் சொல்லுங்கள், அதாவது தெரிந்தும் தெரியாமலோ, ஏதோ அறிந்தும் அறியாமலோ ...
ஏதோ தோஷத்தை, பின், அதாவது, நிச்சயம், என்னிடத்தில் வந்துவிட்டது.
இதனால், நீங்கள் கூறுங்கள், என்ன?, ஏது?, என்றெல்லாம்,
ஞானிகளும் நிச்சயம், பின், அதாவது, உன்னுடைய சீடன், அதாவது, பின் அனுமான், நிச்சயம், அனுமானால் மட்டுமே அது முடியும்.
பின் ஆனாலும், ராமனும், பின் இதை என்று அறிய, இப்படியா???
===========================
# ஸ்ரீ ராமபிரானின் முதன்மை சீடன் - “ஜெய் ஹனுமான்”
===========================
![]() |
| ஸ்ரீ ராமபிரானின் முதன்மை சீடன் - “ஜெய் ஹனுமான்” |
பின் தேவர்களே, அறிந்தும் அழகாக, இதை தன் அறிய, ஞானியர்களே, நிச்சயம், தன்னில் கூட அறிந்தும்,
அதாவது என்னுடைய சீடன் எனக்காக என்ன வேண்டுமானாலும் செய்வான்.
நிச்சயம், பின், அதாவது, சொல்லுங்கள் என்று.
இதனால், ஞானிகளும்!!!....,
ராமனே!!!.....
நிச்சயம், அதுவும் கிடைப்பதற்கு, நிச்சயம், அதாவது, பின் உன் சீடனும் அதற்கு கஷ்டங்கள் தான் பட வேண்டும் என்று.
===========================
# பக்தியின் உச்சம் - “ஜெய் ஹனுமான்”
===========================
![]() |
| பக்தியின் உச்சம் - “ஜெய் ஹனுமான்” |
அதனுள்ளே, அனுமானும்!!....
நிச்சயம், ஞானிகளே, எவ்வளவு கஷ்டங்கள் பட்டாலும், பரவாயில்லை, பரவாயில்லை!!!
என் ராமனுக்கு, நிச்சயம், யான் இதை தெரிந்து உதவி செய்தே தீருவேன்…
ராமனுடைய கட்டளையே, நிச்சயம், ஏற்பேன் என்று.
அதாவது, அறிந்தும், ராமனே!!!
ராமன்!!, அதாவது, அனுமானே, சற்று நில்லும் !!!
அதாவது, ஞானியர்கள், இவர்களும் தவம் செய்து, ஈசனை கண்டுள்ளார்கள்.
அதனால், இவர்கள் என்ன சொல்கின்றார்களோ, அதற்கேற்ப்பவே, யாம் செய்வோம் என்று.
ஞானிகளும் கூட!!!
===========================
# இவ் உரையாடல் நடந்த இடம்:-
# ரிஷிகேஷ் திரிவேணி காட் கங்கை நதிக்கரை
===========================
அழகாக, அதாவது, இது, பின், அதாவது, இங்கு வாழும், அதாவது, இவ் கங்கை நதியில் தான், இவ் உரையாடல் எல்லாம் நடந்தது.
இதை தன் அறிய, எவ்வாறு என்பதை எல்லாம், ஞானிகள் அழகாக, ராமனே,!!!
நிச்சயம், பின், அது தோஷத்தை போக்கிட வேண்டும்.
அவ்வாறு போக்கவில்லை என்றால், நிச்சயம், எப்பொழுதும், அதாவது, ராமன், எதை புரிய, நிச்சயம், தன்னில் கூட, உலகம் அழியும் வரை, நிச்சயம், பின், தர்மத்திற்கு மதிப்பு, மதிப்பு ஏது?,
===========================
# இமயமலையில் உள்ள அதி ரகசிய மூலிகை
===========================
இதனால், நிச்சயம், அதை, பின், அது தோஷத்தை அழிக்க, அதாவது, வேண்டுமென்றால், நிச்சயம், இவ் மலையில், அதாவது, இவ் இமயம் தன்னில் கூட
(இமயமலையில்) ரகசியமாக ஒரு மூலிகை இருக்கின்றது.
அது அழகாக பேசும்!!!, அழகாக பாடும்!!!
அதை தொட்டாலே, பின், அனைத்து சாபங்களும் நீங்கிவிடும்.
மனித பிறவியும், அதாவது, அறிந்தும், இவை தன், அதாவது, பின், புவி உள்ளவரை, அது, பின், அதாவது, ஒளிந்து கொண்டே இருக்கும்.
அதாவது, தலையை மட்டும் ஆட்டும்!! ஆட்டிக் கொண்டே இருக்கும்.
அதாவது, மனிதனை பார்த்தால், அமைதியாகிவிடும்.
அசைவும், எவ் அசைவும் ஏற்படாது. காற்றடித்தாலும், எவ் அசைவும் ஏற்படாது என்றெல்லாம், ஞானியர்கள்.
இதை தன் அறிய, இவை எதை, எதை என்று புரிய, இதனால், பின், ராமனும்!!!
நிச்சயம், அதாவது, ஞானியர்களே, தர்மத்தை காத்திட வேண்டும்.
இதனால், என்ன செய்வது? என்றெல்லாம்,
ஞானியர்கள்!! அதாவது, ராமனே, பின், நீ, அதாவது, கடவுளின் குழந்தை,
இதனால், ஏது, இவை தன் அறிய, எவ்வாறாக, அதை, நிச்சயம், பின், ஆனாலும், உன்னாலும்,!!!...
அதாவது, நிச்சயம், நீங்கள் இருவர் ( ஸ்ரீ ராம பிரானும், ஸ்ரீ ராம பக்த அனுமானும்) சென்றால் மட்டுமே, பின், அங்கு, அதை தன், அதாவது, அதுவும் கூட, பின், ஆடும்,
இதைதன், அழகாக, அப்பொழுது, நீங்கள் அதை, பின், பறித்து வந்தால், அனைத்தும் இத்தோஷங்கள் மாறி, நிச்சயம், எவ்வாறு என்பதை எல்லாம்.
ஆனால், அங்கு செல்வது கடினம் தான்.
ஆனாலும், அனுமான், அதற்குள்ளே, நிச்சயம், எவ்வாறு என்பதெல்லாம்,...
அதாவது, முனிவர்களே, இதை தன் அறிய, எவ்வாறு என்பதெல்லாம், நிச்சயம், ராமனுக்காக, இதை யான் செய்வேன் என்றெல்லாம்.
இவ்வாறாக, மாறுபட்டு, மாறுபட்டு, பேச்சுக்கள் நடந்து கொண்டே!!!!.
இதை எவ்வாறு என்பதை எல்லாம், எதை என்று புரிய, ஞானியர்களும், நிச்சயம், அதை செய்தே ஆக வேண்டும்.
ஆனாலும், அனுமானும், பின், ஞானியர்களுக்கு தெரிவித்தான்.
இவ்வளவு??? உண்மைகள் சொல்கின்றீர்களே!!...
அது உங்களுக்கு தெரியும் அல்லவா?
அழகாக, இவ் ராமன், எவ்வளவு??, பின், கஷ்டங்கள்,???
எதை புரிய, அதனால், அதை (ஞானிகள்) நீங்களே (ஞானிகள்) எடுத்து வந்து, கொடுத்து விடலாம் அல்லவா?
நிச்சயம், ராமன், அதாவது, தர்மம், நீங்களும் தர்மத்தை நிலைநாட்டத்தான், நீங்கள் தவங்கள் செய்து கொண்டிருக்கின்றீர்கள்.
இதனால், பின், நீங்களே அதை எடுத்து வந்து, ராமனுக்கு கொடுத்தால், தர்மம் தலை காக்குமே என்றெல்லாம்.
ஆனாலும், ஞானியர்களும், பின், அனுமானே, நில்லும்!!!
அப்படியெல்லாம் எப்படி ஏற்பது?
இதனால், நிச்சயம், அவரவர், நிச்சயம், எதை என்று புரிய, ஏதோ ஒரு விதத்தில், எப்பொழுதோ, எப்பிறவியிலோ, பின், இவ் தோஷமானது பற்றிக் கொண்டது.
ஆனாலும், இதை தன் எப்படி?, பின், ஆனாலும், ராமனால் மட்டுமே, பின், அதாவது, அதை தன் பறித்து வந்தால் மட்டுமே, பின், இதுவும் ஒரு கட்டளையாகவே ஏற்று, இது ஜென்ம ஜென்மமாக…
இதனால், இச் ஜென்மத்திலே, இதை நிவர்த்தி செய்ய வேண்டும்.
அப்பொழுதுதான், பின், ராமனுக்கு அனைத்தும், பின், கிடைத்து, அதாவது, நீயும் எப்பொழுதும் சிரஞ்சீவியாக வாழ்வாய்.
சிரஞ்சீவி பட்டத்தை பெற்று, எப்பொழுதும், அவ் மூலிகைகளும் கூட, பின், அதாவது, உலகம் இருக்கும் வரை, அழியாமல் இருந்து, பின், மக்களுக்கு, வருவோருக்கெல்லாம், அவ்வாற்றல், பின், பல பல்லாயிரக்கணக்கான, பின், அதாவது, மைல் தொலைவில் செல்கின்ற பொழுது, நிச்சயம், அறிந்தும், பல மனிதர்களுக்கு, நிச்சயம், வாழ்வளிக்கும்.
இதனால், பின், (ஞானிகள்) யாங்களே, அதை, பின், பறித்து வந்தாலே, அதை ஆற்றல், எதை, என்ன என்று சொல்வது?,
உங்கள் ஆற்றல் குறைந்துவிடும்.
அதனால், நீங்கள் தான் செல்ல வேண்டும்.
===========================
# இமயமலையில் உள்ள அதி ரகசிய மூலிகையை பறிக்க அனுமனின் பயணம்
===========================
![]() |
| இமயமலையில் உள்ள அதி ரகசிய மூலிகையை பறிக்க அனுமனின் பயணம் |
பின், அதாவது, அனுமானும், நிச்சயம், செல்கின்றோம்.
அதாவது, அறிந்தும், ராமன், இங்கு இருக்கட்டும்,
பார்த்து, அதாவது, பார்த்திட்டு, யான் வருகின்றேன் என்று,
ராமன், அறிந்தும் கூட,
அதாவது, நிச்சயம், பின், அதாவது, ராமரே, நிச்சயம், நீ இங்கே இருங்கள். யான் ஒருமுறை சென்றிட்டு வருகின்றேன், பார்ப்போம் என்று.
இதனால், பின், அனுமான் பறந்தான்.
பறந்து சென்று கொண்டே இருந்தான்.
ஆனாலும், கடுமையான பனிப்பொழிவும், இன்னும், பின், அனைத்தும், அதாவது, மலைகள் மூடிக்கொண்டது.
எங்கு, பின், பார்த்தாலும், பின், வெண்மை நிறம்.
இதனால், பின், ஒன்றும் தெரியாமல், அறிந்தும், மீண்டும், அதாவது, வந்துவிட்டான், கீழே!!.
ஞானியர்களை அனுமான் பார்த்து, அறிந்தும், பின், இப்படி தேடிச் சென்றேன்.
இப்படி ஆகிவிட்டது, ஒன்றும் தெரியவில்லை.
அதாவது, மரங்களும், கிளைகளும், எங்கு? என்ன? இருக்கின்றது என்று தெரியவில்லை.
இதனால், அனைத்தும் சூழ்ந்தது. எதை என்று புரிய, எவ்வாறு, பின், வெண்மை நிறமாகவே போய்விட்டது.
மேகமூட்டங்கள் அடைத்து விட்டன.
என்ன செய்வது??? என்றெல்லாம்.
இதனால், நிச்சயம், பின், அறிந்தும், இதை தன் அறிய, ....
ஞானியர்கள் ராமனை பார்த்து!!!!!!
ராமனே, நீ இங்கே தவம் செய். ஈசனை நோக்கி.....
![]() |
| ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி தவம் செய்த இடம் தான் திரிவேணி காட் கங்கை நதிக்கரையில் உள்ள ரகுநாத் ஆலயம்... ஆலயத்தின் எதிரே... ஆலய வளாகத்திற்கு உள்ளே ரிஷிகுண்ட் என்னும் புனித குளம் |
===========================
# ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி தவம் செய்த இடம் தான் திரிவேணி காட் கங்கை நதிக்கரையில் உள்ள ரகுநாத் ஆலயம்... ஆலயத்தின் எதிரே... ஆலய வளாகத்திற்கு உள்ளே ரிஷிகுண்ட் என்னும் புனித குளம் உள்ளது. இந்த குளத்தின் கரையில் தான் ஸ்ரீ ராமர் ஈசனை நோக்கி தவங்கள் புரிந்தார்.. இந்த தகவல் ஆலய வரலாற்றிலும்.. அங்குள்ள பண்டிதர்கள் வழி வழியாகவும் அனைவருக்கும் தெரிவிக்கப்படுகின்றது.
===========================
நிச்சயம், பின், அதாவது, இவ்வாறு தவம் செய்து கொண்டே இருந்தாலே!!!!!!!,
நிச்சயம், அவ் மேகமூட்டங்கள் கலைந்து, அதாவது, அங்கு, பின், பனிப்பொழிவுகள் எல்லாம், எப்பொழுதும், பின், அதாவது, பின், இவ் வெண்மை நிறம் கலைந்து, நிச்சயம், தெரியும் என்றெல்லாம். ஞானியர்களும் கூட.
இதனால், ராமன் அமர்ந்தான். தியானத்தில், அழகாக, தியானம் செய்தான்.
ஆனாலும், மீண்டும், அறிந்தும், சரியாகவே, மீண்டும் பறந்தான் அனுமான்.
மீண்டும், அப்படியே, பலத்த மழை, அறிந்தும்....., இதை தன் அறிய, இவ்வாறாக, பின், பலத்த மழை பெய்து, மீண்டும், அதாவது, பின், ராமனிடத்திற்கு, அதாவது, இவ் மலை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால், ராமனின், மீண்டும், அடியில், தவம் செய்து கொண்டிருந்தான்.
மேலே, பின், நீர், ஆனாலும், விடவில்லை என்றெல்லாம்.
ஆனாலும், இதை தன் அறிய, இவ்வளவு மழை பெய்கின்றதே, எங்கு, ராமன்??? என்று பின், அனுமான் தேடுகின்றான்.
எங்கு?, ராமன்??, எனது ராமன், எங்கு????, எங்கு???? என்றெல்லாம்.
அதாவது, ஞானியர்கள், இங்கு இருந்தார்களே, எங்கு????
ஞானியர்கள் எங்கெல்லாம்??? என்று தேடினான்... அனுமான்.
ஐயோ!!!!......, இப்படி ஆகிவிட்டதே.
அனைத்தும் நீர் வந்து!!!!!!
ராமன் தன் இங்குதானே தவம் செய்து கொண்டிருந்தார்.
பின், என் அன்பானவன், இன்னும், அன்பானவர்கள் எல்லாம், ஞானியர்கள், இங்குதானே தவம் செய்து கொண்டிருந்தார்கள் என்றெல்லாம்.
ஆனாலும், பின், பின், இதை தன் அறிய, பின், மனதில் நினைத்தான். இவ்வாறாக, எங்கு,? எங்கு ?என்றெல்லாம்
அதாவது, பேசிக்கொண்டே,!!! பறந்து கொண்டே!! இருந்தான்
இவ்வாறு நீர் வந்து, இவ்வாறு அழிவு தொடங்கிவிட்டதே, எவ்வாறு என்றெல்லாம்.
ஆனாலும், இதை தன் அறிய, அதையெல்லாம் நிறுத்துவதற்கு, அனுமானுக்கு சக்தி உள்ளது.
ஆனாலும், பின், அன்பினால், பின், எங்கே??? என்றெல்லாம், பின், நிச்சயம்,
===========================
# கூட்டு பிரார்த்தனை தவம் - தர்மத்தை காக்க அனைவரும் ஒன்று கூடி
===========================
![]() |
| கூட்டு பிரார்த்தனை தவம் - தர்மத்தை காக்க அனைவரும் ஒன்று கூடி |
ஆனாலும், பின், பின், அறிந்தும், ஞானிகளும் கூட. பின், அனுமானே, பின், நீ கவலைப்படாதே.
நீர் எப்படி வந்தாலும், நாங்கள் கீழே தவம் செய்து கொண்டிருக்கின்றோம்.
ஆனாலும், ராமனும் தவம் செய்து கொண்டிருக்கின்றான்.
இதனால், தர்மத்தை காத்திட வேண்டும்.
இதனால், பின், அதை மூலிகையை எடுத்து, நிச்சயம், தோஷத்தை கழிப்பதற்காக, நிச்சயம், பின், உன் முயற்சியை கைவிடாதே!!!!.
மழை எவ்வளவு வந்தாலும், மீண்டும், மீண்டும் செல் என்று.
இவ்வாறாக, இதை தன் அறிய, இதை தன் அறிய, மீண்டும், அனுமான் பறந்தான்.
பறந்து, இதை தன் அறிய, எவ்வாறு என்று எல்லாம்.
===========================
# அதிர்ந்த இமயமலை….. என்ன கரணம்?
===========================
இதனால், நிச்சயம், பின், மலை ஆடியது. அதாவது, குலுங்கியது.
இதை தன் அறிய, மீண்டும், பின், வந்தான் அனுமான் இங்கு.
இதை தன் அறிய, ஞானிகளே, இதை தன் அறிய, எவ்வாறு? ஒவ்வொரு முறையும் சென்றாலும், ஒவ்வொரு ஆபத்துக்கள் வந்து கொண்டே இருக்கின்றது.
இப்படி வந்தால், எப்படி??, எதை என்று புரிய, இப்பொழுது, பின், அதாவது, இவ் மலையே, இவ் இமயமே, குலுங்குகின்றது என்றெல்லாம்.
நிச்சயம், அதாவது, முனிவர்களும், பின், அனுமானே, நிச்சயம், இதற்காகத்தான், அதாவது, நிச்சயம், இவ்வாறாக, மனிதனுக்கு பல தோஷங்கள் ஏற்படுகின்ற பொழுது, இவ் மலை அடிக்கடி குலுங்கும்.
நிச்சயம், கலியுகத்தில், இவையெல்லாம், பின், நடக்கும்.
இங்கு, பின், எதை என்று தெரிய, அதாவது, நிச்சயம், இங்கு ஒரு அறிந்து, பல,!!!!
ஏன், எதற்காக என்றெல்லாம், அவ் மூலிகையை பறித்தே ஆக வேண்டும்.
அவ் மூலிகையை, அதாவது, பின், எதை என்று புரிய, பறிக்காவிடில், இன்னும், தர்மம் தலைகீழாக போகும் கலியுகத்தில்.
இதனால், பறித்தே ஆக வேண்டும் என்றெல்லாம், ஞானியர்களும் கூட.
===========================
# எதிர்வினை மூலிகை...
===========================
இதனால், பின், இதற்கு மாற்றாக, ஒரு மூலிகை உள்ளது.
இதை பறிக்காவிடில், நிச்சயம், அவ் மூலிகை, பின், அதாவது, செயல்பட்டு,
நிச்சயம், உலகத்திற்கு, அதாவது, பின், நிச்சயம், பின், அவ், அவை, பின், வாசனைகள் செல்கின்ற பொழுது, நிச்சயம், மனிதனுக்கு, பின், நல் மூச்சு கிடைக்காது.
அதாவது, நல் மூச்சு என்பது, நல் காற்று கிடைக்காது.
அதாவது, பின், அதாவது, தூசி நிறைந்த, பல வகையான, அசுத்தமான காற்று கிடைத்து, அவரவர், பின், நுரையீரலும் கெடும், வயிற்றுப் பகுதியில் கெடும்.
இதனால், நோய்கள் வந்துவிடும்.
இதனால், பறித்தே ஆக வேண்டும் என்று, ஞானியர்கள் எல்லாம்.
===========================
# அனுமான் மீண்டும் பறந்தார்…
===========================
இதனால், அனைவரும், மீண்டும், அதாவது, அனுமான் பறந்தான்.
இவ்வாறு, பின், இதை தன் அறிய, பறக்கின்ற பொழுது, அனுமானின் ஆற்றல், இதை தன் அறிய, எவ்வாறு என்பதை எல்லாம்.
அனைத்தும் பனிமலைகளாக ஆகிவிட்டது. இதை தன் அறிய…
ஆனாலும், அனுமான்....மீண்டும், ஐயோ!!!...... , இவ்வாறு ஆகிவிட்டதே.
மீண்டும், ஞானியர்களிடம் செல்வோம் என்றெல்லாம்.
இதனால், நிச்சயம், தன்னில் கூட, ஞானிகளே, எவ்வாறு, இப்பொழுது, மலை பனிமலையாக மாறிவிட்டது. எங்கு???, அவ் மூலிகையை யான் தேடப் போகின்றேன்???? என்றெல்லாம்.
===========================
# கலியுகத்தில் பேரழிவுகளை எல்லாம் காக்க….
# அனுமானே உன் முயற்சியை கைவிட்டு விடாதே…
===========================
நிச்சயம், அனுமானே, பின், உன் முயற்சியை, அதாவது, கைவிட்டு விடாதே. !!!!
நிச்சயம், பின், எப்படியாவது, அதாவது, நிச்சயம், இன்னும், அதாவது, பின், இங்கு இருக்கும், பல ஞானியர்கள், பின், குருமார்கள், ரிஷிமார்கள், நிச்சயம், இன்னும், பல வழிகளில் தவம் செய்து கொண்டிருக்கின்றார்கள்.
தவம் செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.
அவர்களையெல்லாம் அழைத்து, நிச்சயம், பின், அதாவது, தவங்கள் செய்தால், ஈசனை நோக்கி, ஈசன், நிச்சயம், மனம் மகிழ்வான்.
***** இதனால், கலியுகத்தில், இன்னும், பேர் பேரழிவுகளை எல்லாம் காக்கப்படும் என்றெல்லாம். *****
===========================
# மீண்டும் தொடங்கிய கூட்டு பிரார்த்தனை தவம்
===========================
![]() |
| கூட்டு பிரார்த்தனை தவம் |
இதனால், எவ்வாறு என்பது எல்லாம், மீண்டும், பின், அனைவரும், பின், இதை தன் அறிய, ஈசன் அருளால், பின், ஒன்று கூடினர்.
தவம் மேற்கொண்டனர். தவம் மேற்கொண்டனர்.
பல வகையான, மீண்டும், இதை தன் அறிய, எவ்வாறு என்பது எல்லாம். மீண்டும், நீரும் குறைந்தது.
(கங்கையில் வெள்ளப்பெருக்கு)
அழகாக காட்சி அளித்தது மலை.
இதனால், நிச்சயம், எவ்வாறு, மீண்டும், பின், அனுமான் பறந்தான்.
பறந்து, இதை தன் அறிய, எவ்வாறு என்பது எல்லாம். எங்கு மூலிகை?? என்றெல்லாம்.
இன்னும், அதாவது, அழகாக, பின், அதாவது, பின், காற்றே அடிக்கவில்லை.
இதனால், நிச்சயம், அனைத்தும் அமைதியாக இருந்தது.
ஆனாலும், மீண்டும், பின், முயற்சி தோல்வியுற்றது.
===========================
# எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும், மீண்டும், மீண்டும், முயற்சி செய்தே ஆகவேண்டும். மனிதனுக்கு இதுதான் கட்டளை.
===========================
இதனால், மீண்டும், இதை தன் அறிய, அதனால் தான், பின், எவ்வாறு தோல்விகள் ஏற்பட்டாலும்???, எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும், மீண்டும், மீண்டும், முயற்சி செய்தே ஆகவேண்டும்.!!
மனிதனுக்கு இதுதான் கட்டளை.
அவ்வாறாக, முயற்சி செய்து கொண்டே இருந்தால், ஒரு நாள், அனைத்தும் மாறும்.
***** அதாவது, முயற்சி செய்யாதவனுக்கு, இறைவன், ஒன்றுமே கொடுக்க மாட்டான். *****
பின், எதை என்று புரிய, இதனால்,அனுமான் மீண்டும், முயற்சி செய்கின்றான்.
மீண்டும், வருகின்றான்.
மீண்டும், முயற்சி செய்கின்றான்.
===========================
# தர்மத்திற்காக கண்ணீர் சிந்திய ஸ்ரீ ராம பக்த ஹனுமான்
===========================
பின், நிச்சயம், கடைசியில், பின், ராமரை, பின், ராமனிடத்திலிருந்து, அழுகின்றான் அனுமான்.
நிச்சயம், ராமரே, எவ்வாறு என்பது எல்லாம். அதாவது, நிச்சயம், அடுத்தடுத்து, ஒரு, பின், யுகங்கள், நிச்சயம், தாழ்மையை சந்திக்கப் போகின்றது. அதாவது, தர்மம் தலைகீழாக போகப் போகின்றது. போகப் போகின்றது.
இதனால், தர்மம் என்ற சொல்லுக்கே, பின், அதாவது, அடையாளம் தெரியாமல் போய்விடும்!!!
இதனால், எப்படியோ, அதை, நிச்சயம், பின், அதாவது, காத்திரு!!!
காத்து, பின், அதை தன் அறிய, இவ்வாறாக, நிச்சயம், பின், பலமாக்க என்றெல்லாம். இதனால், அனைத்து முனிவர்களும் சேர்ந்து, !!!
நிச்சயம், பின், அனுமானே, நீ நினைத்தால், நிச்சயம், பின், அதாவது, பின், ஊதினால், வாயால், நிச்சயம், அவையெல்லாம், பின், அழகாக, அனைத்தும் ஆடும்.
அப்பொழுது, நீ மூலிகையை கண்டுபிடித்துக் கொள்ளலாம் என்றெல்லாம்.
===========================
# ஸ்ரீ ராம பக்த ஹனுமான் அன்பு, நிச்சயம், அளவிட முடியாது.
===========================
பின், என்னாலா முடியும்????? என்றெல்லாம்.அனுமன்!!!!
ஞானியர்கள் !!!அனுமானே நிச்சயம், உன் தவம் அப்படி போன்றது.
அதாவது, நீ இருக்கும், அதாவது, இறைவன் மீது வைத்திருக்கும் அன்பு, நிச்சயம், அளவிட முடியாது.
அதனால், நிச்சயம், ஊதி, பின், அனைத்தும், பின், எதை என்று புரிய.
இதனால், அனுமான் அழகாக, பின், ஊதினான்.
காற்று அங்கும் இங்குமாக பறந்தோடியது.
நிச்சயம், அவ்வளவு எதை என்று கூட, மரங்களும் ஆடியது.
===========================
# ஸ்ரீ ராம பக்த ஹனுமான் கண்டுபிடித்த மூலிகை…
===========================
இதை தன் அறிய, அசைந்தாடியது. ஓ!!!!!....... என்ற சத்தம் கேட்டது. நிச்சயம், பின்,
இதுவாகத்தான் இருக்குமோ??? என்று, அழகாக சென்றான்.
அறிந்தும், பின், மூலிகையைப் பார்த்து மனமோடு, நிச்சயம், உன்னை யான் பறிக்கப் போகின்றேன். இதை தன் அறிய,
ஆனாலும், அனுமான் அழகாக கண்டுபிடித்துவிட்டான்.
===========================
# நடு நிசி - சூரியனும் சந்திரனும் ஒரு நேர்கோட்டில் அமையும்.
===========================
![]() |
| நடு நிசி - சூரியனும் சந்திரனும் ஒரு நேர்கோட்டில் அமையும். |
நிச்சயம், பின், அதாவது, அவை தன், பின், அதாவது, சரியாக, நடு நிசியில், அதாவது, பின், சரியாக, இவ் நேரத்திற்கும், பின், சரியாகவே, சூரியனும், பின், இதை தன், பின், பின், சந்திரனும், நிச்சயம், ஒரு எவை தன் அறிய, நேர்கோட்டில் அமையும்.
சரியாக, இத்தனை மைல் என்று. அப்பொழுது, அது ஒரு சத்தம் இடும்.
இது இப்பொழுதும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றது.
ஆனாலும், இவையெல்லாம் யாருக்கும் தெரியாது.
ரகசியமாகவே போய்விட்டது.
***** இதையெல்லாம் இன்னும் எடுத்து வந்து, உலகத்தை, உலகத்தில் தலை நிமிரச் செய்வோம். தர்மத்தை. *****
===========================
# ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயனே உந்தனுக்கு வெற்றி , வெற்றி, வெற்றி
===========================
இதனால், அழகாக, நிச்சயம், அதாவது, அனுமானும், உன்னை பறித்துக் கொள்கின்றேன்.
ஏனென்றால், தர்மம், பின், காக்கப்பட வேண்டும் என்று.
இதனால், எவ்வாறு, எதை என்றறிய, அழகாக மூலிகை, மின்னியது. நிச்சயம், அறிந்தும் கூட.
இதனால், பின், அதற்கு, பின், அழகாக, பணிந்து, பின், பறித்து, பின், அதாவது, எடுத்து வந்துவிட்டான்.
ராமனிடம் கொடுத்துவிட்டான்.
நிச்சயம், இதை தன் அறிய, பின், இவ்வாறு என்பது எல்லாம். தோஷமும் கலைந்தது.
இதை தன் அறிய, எவ்வாறு என்றெல்லாம்.
எனவே, தர்மம், பின், உலகம், அதாவது, பின், உள்ளவரை பேசும்.
இதனால், நிச்சயம், கலியுகத்தில், தர்மம், பின், தாழ்ந்தாலும், நிச்சயம், பின், அனைத்தும், அதாவது, இறைபலங்கள், அதிகரித்து, நிச்சயம், தன்னில் கூட, எவ்வாறு, ஞானியர்கள் காக்க, காத்து, எதை தன் அறிய, தர்மத்தை, மீண்டும், பின், கலியுகத்தில், நிச்சயம், நிலைபெறச் செய்யலாம்.
===========================
# கலியுகத்தில் அவ் ஜோதி மூலிகையை மீண்டும் தேடிக்கொண்டே….
===========================
சில அழிவுகள், பலத்த அழிவுகள் வந்தாலும், இதை தன் அறிய, இதனால்தான், அனுமான், மீண்டும், கலியுகத்தில், மூலிகை அதனை தேடிக்கொண்டே இருக்கின்றான், இதை தன் புரிய.
நிச்சயம், பின், கலியுகத்தில், அதை, அதாவது, மறைந்து காணப்படுகின்றது. அவ் ஜோதி விளக்கு.
அதை, நிச்சயம், தன்னில், இறைவனே, மறைத்தானா!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?.
ஆனாலும், சில ரகசியங்கள், சொல்லக்கூடாது, மனிதனுக்கு.
அதாவது, இப்பொழுதும் கூட.
இதனால், பின், அனுமான், நிச்சயம், மீண்டும், தலை நிமிர்ந்து, தர்மத்தை காக்திட வேண்டும் என்று, திரிந்து கொண்டே இருக்கின்றான்.
இதனால், மீண்டும், இதை தன் அறிய, இதனால், பின், இமயம் தன்னில் கூட, அழிவுகள், எதை என்று புரிய, வந்து வந்து.
இதனால், நிச்சயம், அதை, பின், பாதுகாப்பாக, மீண்டும், அனுமான் தொடுவான்.
மீண்டும், தர்மம், தலை ஓங்கி நிற்கும்.
ஆசிகள், ஆசிகள், அப்பா.
===========================
# உலக நன்மைக்காக 108 மூலிகைகளை சேர்த்து ஹோமங்கள்
===========================
வணக்கம் அன்பு அகத்திய மாமுனிவர் அடியவர்களே,
குருநாதர் முன்பு உரைத்த வாக்கின்படி நதிக்கரைகளில் மூலிகைகளை சேர்த்து ஹோமங்கள் அடிக்கடி அடியவர்கள் செய்ய வேண்டும் என்று குருநாதர் உத்தரவு கொடுத்திருந்தார்.
![]() |
| ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி தவம் செய்த இடம் - ரிஷிகுண்ட் குளம் |
அதன்படி ரிஷிகேஷ் திரிவேணி காட் கங்கை நதிக்கரையில், மேலே உள்ள புகைப்படத்தில் உள்ள, ரிஷிகுண்ட் குளம் அருகே, ஸ்ரீ ராமரின் தவ பீடமான இடத்தில் 108 மூலிகைகளை விட்டு, அனைத்து தெய்வங்களையும், உலக நன்மைக்காக வேண்டிக்கொண்டு, தர்மம் தலைத்தோங்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு, அனைத்து தெய்வங்களுக்கும் மகா பூர்ணாஹுதி செய்யப்பட்ட வழிபாடு செய்யப்பட்டது.
===========================
# பிருகு மகரிஷி ஆசி
===========================
குருநாதர் கங்கையை கரையில் நடந்த ஹோமத்தை குறித்து குருநாதர் வாக்கில் பிருகானவன் (பிருகு மகரிஷி) வந்து அமர்ந்தான் அப்பா அனைவருக்கும் ஆசிகள் வழங்கி சென்றானப்பா என்று வாக்கில் கூறினார்.
===========================
# அன்பு அகத்தியர் அடியவர்கள் அனைவரும் நினைவில் கொள்க.
===========================
புனித யாத்திரைகளில் ஆற்றங்கரையில், கடலோரத்தில் குருநாதர் உத்தரவு படி செல்லும் பொழுது அங்கு யாகங்கள் நடத்த வேண்டும் என்று கூறி இருக்கின்றார்.
அதை உணர்ந்து உங்களால் முடிந்தவரை குழுவாக உலக நன்மைக்கு வேண்டி செய்யுங்கள் குருநாதர் ஏற்கனவே உரைத்ததை இங்கு நினைவுபடுத்துகின்றோம்.
===========================
# ரகுநாத் மந்திர் ஆலயம் பற்றிய விவரங்கள்
===========================
![]() |
| உள்ள புகழ்பெற்ற ரகுநாத் மந்திர் ஆலயம் - மூலவர்: ஸ்ரீ ராமர் மற்றும் சீதா தேவி (லட்சுமணன், அனுமன் சிலைகளும் உள்ளன). |
திரிவேணி காட் ரகுநாத் மந்திர் (Raghunath Mandir) என்பது உத்தரகண்ட் மாநிலம், ரிஷிகேஷில் உள்ள புகழ்பெற்ற திரிவேணி காட் ஆற்றங்கரைக்கு மிக அருகில் அமைந்துள்ள ஒரு பழமையான மற்றும் மிகவும் புனிதமான இந்து ஆலயமாகும். இக்கோவில் ராமபிரானுக்கும் (ரகுநாத்) அவரது மனைவி சீதா தேவிக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
இக்கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள முக்கிய விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன:
🌟 முதன்மைத் தகவல்கள்
• மூலவர்: ஸ்ரீ ராமர் மற்றும் சீதா தேவி (லட்சுமணன், அனுமன் சிலைகளும் உள்ளன).
• அமைவிடம்: திரிவேணி காட் அருகே, மாயாகுண்ட், ரிஷிகேஷ்.
• கோவில் நேரம்: தினமும் காலை 6:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை
1. ரிஷிகுண்ட் (Rishi Kund): இக்கோவில் வளாகத்திற்குள் 'ரிஷிகுண்ட்' என்ற சிறிய புனித குளம் (குண்டம்) உள்ளது. புராணங்களின்படி, ராமபிரான் தனது வனவாசத்தின் போது இந்தக் குளத்தில் நீராடியதாக நம்பப்படுகிறது. மேலும், இந்தக் குளத்தின் நீரில் ரகுநாத் கோவிலின் நிழல் அப்படியே பிரதிபலிப்பது இதன் சிறப்பம்சமாகும்.
2. புனித நதிகள் சங்கமம்: கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகளின் ஆன்மீகச் சங்கமமாக இந்த இடம் (திரிவேணி காட்) கருதப்படுகிறது.
அருகிலுள்ள இடங்கள்: கோவிலை தரிசித்த பிறகு, அப்படியே சில அடிகள் தூரத்தில் இருக்கும் திரிவேணி காட்டில் மாலையில் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற மகா கங்கா ஆரத்தி நிகழ்வைக் அனுதினமும் காணலாம்.
![]() |
| திரிவேணி காட்டில் மாலையில் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற மகா கங்கா ஆரத்தி |
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.














Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete