“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Friday, October 23, 2026

சித்தர்கள் ஆட்சி - 767 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - அன்புடன் ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய ஆதி ஈசன் 23/10/2026 அன்று கேதார்நாத் திருத்தலத்தில் உரைத்த வாக்கு.

இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும். இறைவா, எங்களை நன்றாக படைத்தாய்! அனைத்தையும் நன்றாக கொடுத்திருக்கின்றாயே! இறைவா உந்தனுக்கு நன்றி! நன்றி!! நன்றி!! 

அன்பு அன்னை லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகள் போற்றி! போற்றி!! போற்றி!!!

அன்புடன் ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய ஆதி ஈசன்  23/10/2026  அன்று கேதார்நாத் திருத்தலத்தில் உரைத்த வாக்கு.




===========================

# அன்புடன் ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய  ஆதி ஈசன் வாக்கு 

===========================

கேதார்நாத் ஆலய மூலவர் ஆதி ஈசன்.


கேதார்நாத் ஆலய நந்தியம் பெருமான் 


அறிவித்து சங்கரனே பேசுகின்றேன். 

எவை அறிந்து மனிதன் என்னிடத்தில் வருகின்றான் என்பதையெல்லாம் தெரியவில்லையே மனிதனுக்கு. 

உண்மைதனை உணர்த்தினேனே.

ஆனாலும் பல ஞானிகளை அனுப்பினேனே. 

உண்மையை மனிதன் உணரவில்லையே. உணராமல் இருப்பது தரித்திரமே. தரித்திரமே மிஞ்சும். 

ஏன், எதற்கு என்னிடத்தில் வருகின்றீர்கள்? 

அழகாகவே அனைத்து அறிவுகளையும் படைத்து அனுப்புகின்றேன்.

===========================

# கலியுகத்தில் இறைவனுடன் சண்டையிடும் அரக்கர்கள்..

===========================

ஆனால் கொடிய பாவமான அரக்கனை….. அதாவது உலா வந்து….. அவனும்….. அவன் பக்கத்தில் நிற்கின்றான். 


மனிதன், அதாவது இங்கே அரக்கன் எனப்படுபவன், அதாவது என்னிடத்திலே சண்டைகளிட்டு, சண்டைகளிட்டு இதைத்தன் சங்கரனே….. பார்ப்போம். 


பின், அதாவது உன்னால் அனுப்பப்பட்டவர்களை அனைவரையும் யான், அதாவது உனக்குள்ளே, அதாவது உன் பக்தை, அதாவது உன் பக்தன் போல் நடிக்க வைத்து, அங்கேயே தவறு செய்ய  வைத்து, அனைத்தும், அதாவது பக்தி என்று. 

அதாவது நீ இல்லை என்று நிரூபிக்கின்றேன் என்று ஒரு அரக்கன். 

அதாவது அரக்கர் கூட்டம். 

(மனிதர்களை கெடுக்க ஒரு அரக்கர் கூட்டமே உள்ளது.) 

அதனால்தான் இதைத்தன் அறிய மீண்டும் கலியுகத்தில் இன்னும் பலமாக அறிவுகளை கொடுத்து கொடுத்து.

(இவ் அரக்கர் கூட்டத்தில் இருந்து தப்பிக்க, இறைவன் மனிதர்களுக்கு  கலியுகத்தில் இன்னும் பலமாக அறிவுகளை கொடுத்து கொடுத்து அருளுகின்றார்.)

ஆனால் அரக்கன் என்னவோ போட்டி, பொறாமைகள், இன்னும் பலவிதத்தில் எண்ணங்களை மாற்றி, இதோ பக்திக்குள் நுழை என்று.

===========================
# அரக்க குணங்கள் எவை? போலி பக்தி: இறைவனின் உண்மையான பக்தனைப் போல நடித்துக் கொண்டே தவறுகளையும் வஞ்சகத்தையும் செய்தல். தீய எண்ணங்கள்: போட்டி, பொறாமை, ஏமாற்றுதல், குறை கூறுதல், மற்றும் நம்பிக்கை துரோகம் செய்தல். அறியாமை: இறைவன் மீண்டும் மீண்டும் பலமான அறிவைக் கொடுத்தபோதிலும், அதை ஏற்காமல் அரக்கத்தனமான எண்ணங்களுக்கு அடிமையாகுதல்.

===========================

ஆனாலும் இதோ இதனோடு தான், அதாவது அரக்கனுடைய, அதாவது குணங்கள்,

போட்டி,

பொறாமை,

இன்னும் ஏமாற்றுதல்,

குறை சொல்லுதல்,

நம்பிக்கை துரோகம் செய்தல்,

இன்னும் வஞ்சகம் செய்தல்,

இவையெல்லாம். 

ஆனாலும் கீழிருந்தே….

சங்கரனே!!!!!   பார்….. 


உன்னால் ஏற்படுத்தியவனை பக்தன் போல் நான், அதாவது உன்னிடத்திலே நடிக்க வைக்கின்றேன் என்றெல்லாம். 


===========================

# இறைவனின் கருணை, மனிதர்கள் திருந்த இன்னும் பலமாக அறிவுகளை கொடுத்து கொடுத்து..

===========================

ஆனாலும் இன்னும் பலமாக அறிவுகளை கொடுத்து…… கொடுத்து…..

அதனால்தான் உண்மை பக்தன் இங்கு தோற்று விடுகின்றான், 

தோற்றுவிடுகின்றான் மானிட ஜென்மங்களே. 

சுவடியை ஓதுபவனை (ஜானகிராமன்)  அனுப்பினேன் அகத்தியன் பின் பார்த்துக்கொள்ள. 

அதாவது கட்டளையிட்டேன். 

ஆனாலும் மனிதன் எதை எதையோ சொல்லி, எதை எதையோ செப்பி, அதாவது அறிந்தும் புரியாமலும், அதாவது பின் அனாதையாக (சுவடி ஓதும் மைந்தனை தனி ஆளாக) அகத்தியனையே பார்த்துக்கொள் என்று. 

===========================

# சுவடி ஓதும் மைந்தன் திரு.ஜானகிராமன் அவர்களை குற்றம் சாட்டிய போலி அகத்திய பக்தர்கள். 

===========================

ஆனாலும் இவ்வாறாக அகத்தியனை வணங்குபவர்கள்… 

இன்னும் இச்சிறுவன் முன்னேறி விடுவான் என்பதையெல்லாம் பேசி தீர்த்துக்கொண்டு….

பல வகையில் குற்றங்களைச் சாற்றி…. 

நிச்சயம் அமுக்க வைக்க பார்த்தனர். 

===========================

# ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய  ஆதி ஈசன் எச்சரிக்கை.

===========================


***** ஆனாலும் விட்டுவிடுவேனா? என்னிடத்திலே ( கேதார்நாத் ஈசன் ஆலயம் ) இருந்தே எச்சரிக்கின்றேன். *****


என், அதாவது என்னால் அனுபவப்பட்டவனை யாரெல்லாம் எதை செய்தார்களோ, அவர்களுக்கு நிச்சயம் தன், அதாவது எதை புரிய, அனாதையாக ( தனி ஆளாக)   விட்டுவிட்டேன் அகத்தியனிடம். 


அதேபோல் நிச்சயம் தன்னில் கூட அவர்களிடத்தில், அதாவது நிச்சயம் தன் தன் பிள்ளைகளையும் கூட, நிச்சயம் எதை தன் அறிய, எவ்வாறு குற்றம் சாற்றினீர்களோ, அதனால் யான் நிச்சயம் தன்னில் கூட, நிச்சயம் அவரவர் மேல், நிச்சயம், அதாவது குழந்தை இருப்பவர்களுக்கு, அவர்கள் நிச்சயம் பின் பழிச்சொல், அதாவது எதை ஏது என்று அறிய, நிச்சயம் எங்கு வைப்பேனே, அங்கு வைக்கின்றேன். 


பின் அறிந்தும் அகத்தியன் அமைதியானவன். 


ஆனால் இவ் சங்கரன், பின், அதாவது அனைத்து அறிவுகளையும் கொடுத்தும் அனுப்பி இருந்தாலும், புத்திகள் இல்லையேடா! 


மானிடா! 

அரக்கன் இடத்தில் மாட்டிக்கொண்டு, சிக்கித் தவித்து, என்னிடத்தில் வந்து, என்ன பயன், என்ன பயன்? 

மீண்டும் புத்திகளை கொடுத்திட்டேனே….. கொடுத்திட்டேனே….. 

===========================

# அன்னை பார்வதி தேவி வாக்கு…..

===========================

என்று அறிந்தும், பின், அதாவது அழகாக….. 


மனாளனே !!!!! 


அன்பானவனே !!!!! 


ஏன் இவ்வாறு கோபப்படுகின்றீர்கள்? 


அனைவரையும் நீதான் படைத்தாய் அல்லவா? 


உன்னால் தீர்க்க முடியும் அல்லவா? என்றெல்லாம். 


===========================

# அன்புடன் ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய  ஆதி ஈசன் வாக்கு 

===========================


தேவியே !!!!! 


அறிந்தும் எதை என்று புரிய, புரியாமல் இருக்கின்றான். 


நீயும் புரியாமல் இருக்காதே. 


அதாவது அனைவருக்கும் அறிவு ஒன்றை , அதாவது வைத்திருக்கின்றேன். 


***** ஆனால் இவ் அரக்கனோ எப்படி எல்லாம் செய்கின்றான் பார்? *****


(இந்த உலகத்தில் இறை பக்தியை கெடுக்கும் ஒரு அரக்கன்) 


===========================

# அன்னை பார்வதி தேவி வாக்கு…..

===========================


அதாவது பின் மணாளனே, அவ்வளவு அதிகமாக கோபம் கொள்ளாதீர்கள். 


அதாவது அவ் அரக்கனும் உன்னால் அனுப்பப்பட்டவன் தானே. 


அதாவது உன் பக்தியில் சிறந்தவன் தானே. 


இதனால் என்ன, எதை என்று புரிய. 


===========================

# அன்புடன் ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய  ஆதி ஈசன் வாக்கு 

===========================


ஆனாலும் தேவியே, அதனால்தான் இன்னும் அவ் அரக்கனை நிச்சயம் பாதுகாக்க, அதாவது எப்படி, எதை என்று கூற.. 


அதாவது மனிதனை, அதாவது பாதுகாக்க, அறிந்தும் அனைத்து விஷயங்களையும் கூட, அதாவது பலத்த அறிவுகளையும் கூட, பின் வென்றிடுங்கள் இவனை என்று மறைமுகமாகவே… 


பின், அதாவது அறிவுகளை கொடுத்துள்ளேன் தேவியே. 


ஆனால் அதைத்தன் மனிதன் ஏற்கவில்லையே….. 


ஏற்கவில்லையே….. 


===========================

# யார் ஆதி ஈசனாரிடம் செல்ல தகுதியானவர்கள்?

===========================


இனிமேல் சொல்கின்றேன். 


என்னிடத்தில் வந்தால் 


தூய எண்ணம் வேண்டும். 


அறிவு வேண்டும். 


அன்பு வேண்டும். 


அழகாக பாசம் வேண்டும். 


அப்படி இருந்தால் என்னிடத்தில் வாருங்கள். 


இல்லையென்றால் யான் அசைத்து விடுவேன். 


எச்சரித்து இருக்கின்றேன். 


===========================

# எங்கிருந்து அழிவின் ஆரம்பம் வரும்? 

===========================


இன்னும் இங்கிருந்து (இமயமலை கேதார்நாத்தில் இருந்து) பின் ஒரு கல்லை தட்டினால், அது கீழே செல்லும் கடல் அடி தன்னில் கூட. 


அங்கு பூகம்பம் ஏற்பட்டு, அனைத்தும் அழியும் மானிடர்களே. 


தெரிந்து கொள்ளுங்கள். 


என்னிடத்திலிருந்தே… இதைத்தன் பின் இவைத்தன் அறிய எவ்வாறு என்பதையெல்லாம் எடுத்துரைக்கின்றேன். 


===========================

# ஆதி ஈசனார் பிள்ளைகள் வாயில்லா ஜீவராசிகள் மேல் கை வைத்தால்?

===========================


அனைத்தும் எந்தனுக்கே சொந்தம். 


அறிந்தும் இதைத்தன் அறிய யார் ஒருவன் நிச்சயம், அதாவது பின் வாயில்லா ஜீவராசிகள் பின் மேல் கையை வைக்கின்றானோ, அவனை நிச்சயம் எப்படி எல்லாம் ஆட்டிப் படைப்பது என்று.. 


பின் ஆட்டிப் படைப்பேன். 


மனக்குழப்பங்கள் ஏற்படுத்துவேன். 


அதாவது இருதயத்தில் நோய் ஏற்படுத்துவேன். 


வயிற்றில் நோயை ஏற்படுத்துவேன். 


சிறிது சிறிதாக கிள்ளுவேன். 


அதை தாங்கிக் கொள்ளாமல் இறைவா என்று மீண்டும் என்னிடத்தில் ஓடி வருவானே……


மானிடனே, தெரிந்துகொள். உண்மையை தெரிந்து கொள். 


அதாவது இச் சிறுவனை கூட (சுவடி ஓதும் மைந்தன் ஜானகிராமன்)  அனுப்பினேன் அகத்தியனிடம். பின் பார்த்துக்கொள் என்று.


ஆனால் அகத்தியன், அதாவது செல்லத்தை விட்டுவிட்டான். 


செல்லமாக…. 


அதாவது மன்னிக்கும் அருள் அகத்தியனுக்கு மட்டுமே உண்டு. 


===========================

# சுவடி ஓதும் மைந்தன் ஜானகிராமன் மீது அநியாயமாக குறை சொல்லி, பழி சொல்லி, சுவடியில் வரும்  இறைவன் மற்றும்  சித்தர்கள்  வாக்குகளை சில  வலை  தளத்தில், சமூக ஊடகங்களில் பதிவிடாமல் தடுத்த பல மனிதர்களுக்கு....

===========================


ஆனால் எல்லை மீறிவிட்டது. 


மனிதன் பொய்ச்சொல்லை, அதாவது அறிந்தும், அதாவது நம்பிக்கை துரோகங்கள் எப்படி மீண்டும் உரைக்கின்றேன். 


அதாவது என்னால் அனுப்பப்பட்டவனை (ஜானகிராமன் )…. 


பின் யார் சீண்டினார்களோ….


நிச்சயம் அவர்களுக்கு பின் இங்கே குறிப்பிடுகின்றேன். 


என்னிடத்திலிருந்து… 


அதி விரைவிலே  பெரிய பெரிய தண்டனைகள் ஏற்பட போகின்றது. 


இதை நிச்சயம் கண்கூடாகவே அவர்களுக்கு வாக்கும் போய் சேரும். 


இதைத்தன் அறிவித்து யார் என்பது… 


உண்மையான பக்தன் யார்?  


பொய்யான பக்தன் யார்? 


என்று உண்மை நிலை அறியவில்லையே. 


மானிடனே, மானிடனே, நீயே அழிந்து கொண்டிருக்கின்றாயே. 


குற்றம் குறை செப்பி, அனைத்தும் பொய்யடா. 


அனைத்தும் பொய்யடா, மானிடா. 


===========================

# சமீபத்தில் ஒரு தேசத்தில் அசைந்த மலை…. அதன் அழிவுகள்

===========================


அதனால்தான் பல வழியிலும் கூட இனிமேல் பின் அறிந்தும், அதனால்தான் என்னிடத்தில் யாரும் வரக்கூடாது என்று பின் அசைத்தேன் மலையை. 


மீண்டும் தவறு செய்தால் கையை எங்கு வைப்பேனே…. அங்கு வைத்து உதைப்பேனடா…. உதைப்பேன். 


===========================

# கள்ளம் கபடம் இல்லாத திரு.ஜானகிராமன்.

===========================


***** அதாவது கள்ளம் கபடம் இல்லாத மனிதனை யான் அனுப்பி வைத்திருக்கின்றேன். *****


(சுவடி ஓதும் மைந்தன் - திரு.ஜானகிராமன் அய்யா அவர்களை) 


யாராவது சீண்டினால்….


அடுத்த ஒரு மாதமோ, இரு மாதமோ, அவர்கள் இல்லத்தில் பல வகையிலும் குழப்பங்கள் ஏற்பட்டு….


பின் ஆனால்…


அதாவது தன் குழந்தைகள் தான் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். 


ஆனால் அங்கேயே கை வைப்பேன். 


சொல்லிவிட்டேன். 


அறிந்தும் என் குழந்தை மேல் பழி சுமையை  சுமத்தினால், பின் அவர்கள் குழந்தைகள் மேலே ஏதோ ஒன்றை வைத்து சுமைப்பேன். 


ஏனென்றால் குழந்தைகள் எது என்று கூற, 


பின் அதாவது ஏது என்று உணராமல், 


அதாவது எப்படி என்றெல்லாம் தெரியாமல், நிச்சயம் தன்னில் கூட, 


பின் அதாவது இவன் இப்படி பேசுகின்றான் என்றால், அவர்கள் குழந்தைகளும் கூட அப்படித்தான் இருக்கும். =


இதனால் என்ன பயன்? 


===========================

# “ஒருவனுக்கு நன்மை செய்ய - பல பேர்கள் - யான் அழிக்க தயாராக இருக்கின்றேன்”

===========================


அங்கே கை வைத்து இதைத்தன் அறிய, பின் ஒருவன் போதும் எங்களுக்கு 

இதைத்தன் அறிய, பின் இவ்வுலகத்தை மாற்றுவதற்கு… 

ஒருவனுக்கு நிச்சயம், பின் ஒருவன் நன்மை செய்ய… 

பல பேர்கள் யான் அழிக்க தயாராக இருக்கின்றேன். தயாராக இருக்கின்றேன். 

எச்சரிக்கின்றேன். 

(பல பேர்கள் என்பது இங்கு அரக்கர் கூட்டத்தில் உள்ள போலியான பக்தி செலுத்தும் பலர் - அதாவது போட்டி, பொறாமை, உயிரை கொல்லுதல், பழி சொல்லுதல், கோபம் மற்றும் பகை, புறம் கூறுதல், அகம்பாவம், தீய பழக்கங்கள், பொய் வாழ்க்கை,  வஞ்சகம் உள்ள பல பேர்கள்)

மனிதனை கடைசி ஒரு வாய்ப்புக்காக.. 


ஒரு வாய்ப்புக்காக, அதனால் என்னிடத்தில் வராதீர்கள். 


===========================

# பொய் சொல்லி என்னிடத்தில் வராதீர்கள்.

===========================


என்னிடத்தில் வராதீர்கள். 


நமச்சிவாயா!!!!! என்று சொல்லாதீர்கள். 


அறிந்தும் இவைத்தன் உண்மையாக இருந்தால் வாருங்கள். இல்லையென்றால் உங்களோடே நீங்கள் இருந்து கொள்ளுங்கள். 


சித்தர்களை அனுப்பி என்ன தர வேண்டுமோ, அதை தருகின்றேன் யான். 


பொய் சொல்லி நடித்து ஏமாற்றி குறை கூறி இதைத்தன் அறிய பின் வராதீர்கள். 


ஏனென்றால் மீண்டும் அசைத்து விடுவேன். 


அசைத்து கொண்டே இருப்பேன். 


இவ் ஈசனை எதை புரிய யார் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றீர்கள்? 


சொல்லுங்கள், பார்ப்போம். 


இதைத்தன் அறிய அதனால் உண்மையாக இருங்கள். 


உண்மையாக இல்லாவிட்டால், பின் சென்று விடுங்கள். 


யார் வரச் சொன்னது என்னிடத்தில்????? 


சொல்லுங்கள், பார்ப்போம். 


இதைத்தன் அறிய யான் வரச் சொன்னேனா????? 


அனைத்தும் நீயே ஏற்படுத்திக் கொள்வது. 


நீயே அனைத்தும் இதைத்தன் அறிய எனக்கு செய்வது. 


அதாவது பின் அறிந்தும் விட உனக்கு செய்து கொள்ளடா, மானிடா, மானிடா. 


***** அன்பு, நன்றி, கருணை, பாசம் இதைத்தன் அறிய பின் இவைத்தன் ஏற்படுத்திக் கொள்ளடா. ***** 


*****  தானாகவே யான் வருவேனடா. ***** 


இவையெல்லாம் இல்லாமல் இருந்தால் நிச்சயம் யான், அதாவது வரப்போவதும் இல்லை. 


தண்டனைகள் அதிகம் கிடைக்குமடா. 


===========================

# வாக்குகள் இன்னும் பரவும் அனைத்து இடத்திலும்…..

===========================


*****   இதைத்தன் யானே அறிந்தும் இச் சொல்லை அகத்தியன் எடுத்துச் செல்வான் அனைவரிடத்திலும். *****  


*****   அனைத்து இடத்திலும் இன்னும் பரவுமடா. *****  


===========================

# ஜானகிராமனை இவ் கேதார்நாத் மலையை விட அதிகம் உயரம் உயர்த்துவேன். ( இவ்விடத்தில் ஓங்கி ஒலித்தது ஆலய மணி ஓசை) 

===========================


அறிந்தும் இவைத்தன் இவ், அதாவது அறிந்தும் கூட இவ் மலையில் இருந்தே சொல்கின்றேனடா. 


இன்னும் ஓதுபவனை இவ் மலையை விட உயர்த்துவேனடா. 


பார்ப்போமடா. 


எவன் அறிந்தும் எதை என்று கை வைத்துக் கொண்டிருக்கின்றான் என்று. 


எவன் கை வைத்தால் என்ன??? என்று பார்ப்போமடா !!!!! 


பார்ப்போமடா !!!!! 


இதைத்தன் அறிய மனிதனே, மானிடனே, தெரிந்துகொள். 


===========================

# அடியவர்கள் எச்சரிக்கையாக இருக்கவும்.

===========================


அரக்கன் என்ற அறிந்தும் இவைத்தன் மானிடத்தில் மனதை விட்டுவிடாதே. 


இதைத்தன் அறிய எவ்வாறு உண்மைகளை புரிந்து. 


இதனால் அறிவை பலமாக்குகின்றேன். 


அறிவை பலமாக்குகின்றேன். 


ஆனாலும் மனிதன் வீழ்ந்து போகின்றானே. 


அறிந்தும் பொறாமை, போட்டி, பொய் சொல்லுதல் இன்னும்…


(இன்னும் என்பது இங்கு -  அதாவது போட்டி, பொறாமை, உயிரை கொல்லுதல், பழி சொல்லுதல், கோபம் மற்றும் பகை, புறம் கூறுதல், அகம்பாவம், தீய பழக்கங்கள், பொய் வாழ்க்கை,  வஞ்சகம், இன்னும் பல இது போன்ற தீய குணங்கள் என்று பொருள் கொள்ள வேண்டும்)


அதாவது அனைத்து இடத்திலும், அதாவது அன்பு காட்டாமை எதை என்று கூற… 


அழிப்பதற்கு யான் தயார். 


இதைத்தன் அறிய பின், அதாவது வருங்காலத்தில் சொல்கின்றேன். 


ஒரு நல்லவன் பின் அடுத்தவன் அழிக்க பார்த்தால், அவனிடத்தில் இருக்கும் அனைவரையும் அழித்து விடுவேன். சொல்லிவிட்டேன். 


(நல்லவனை கெடுக்க நினைத்த நபரின்  குடும்பம், அவர்களின் நண்பர்கள், சுற்றம் இருப்பவர்கள் அனைவரையும் அழித்து விடுவார்)


இதைத்தன் அறிய ( இதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்)


===========================

# அன்னை பார்வதி தேவி வாக்கு…..

===========================

பின் அறிந்தும் அன்பான மணாளனே!!!!! 


மணாளனே !!!!! 


ஏன் இக்  கோபங்கள்? 


===========================

# அன்புடன் ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய  ஆதி ஈசன் வாக்கு 

===========================


இதைத்தன் அறிய பின் தேவியே !!!!! நில்லும். 


எத்தனை எத்தனை ஞானிகள் அனுப்பியுள்ளேன்? 


எத்தனை எத்தனை மானிடர்கள் திருந்துவதற்கு எத்தனை எத்தனை ஞானிகளை அனுப்பியுள்ளேன்? 


(பல பல மதங்களில்…பல ஞானியர்கள், சித்தர்கள்,  உலகில் யுகம் யுகமாக இறைவன் அனுப்பியுள்ளார்கள்.)


ஆனால் மனிதன் திருந்தியபாடு இல்லை. 


கடைசியில் ஞானியர்களை பொய்யாக்கி, இவன் பொய்யன் என்று பழி சுமத்தி…. 


அறிந்தும் மீண்டும் என்னிடத்தில் அனுப்பி விட்டார்களே. 


ஞானியர்கள் வந்து புலம்புகின்றார்களே. 


ஈசனே, அறிந்தும் எதனால் இப்படி எல்லாம் அனுப்பினீர்கள்? 


அதாவது மானிடன் கேட்கவில்லையே என்று… 


எச்சரிக்கின்றேன் !!!!!


எதைத்தன் புரிய…. ஒழுங்காக வந்தால் ஆசீர்வாதங்கள். 


ஒழுங்கு இல்லை என்றால், பின் அறிந்தும் செத்தவன் தான் அவன். 

(செத்த பிணம்)


அறிந்தும் இதைத்தன் புரிய என்னிடத்திருந்தே, பின் உரைப்பேன். 


இதைத்தன் அறிய காக்கும் எதை என்று அறிய கைகளே, நிச்சயம் அழித்துவிட நீங்கள் செய்ய விடாதீர்கள். 


நீங்கள் பின் இதைத்தன் அறிய, அதை கூட அறிவில்லை. என்னை பார்க்க நீங்கள் யார்? 


அறிந்தும் இதைத்தன் புரிய, என்னை பார்க்க எனக்கு தெரியும். 


யான் எங்கு எதை என்று அறிய பின் எனக்கு அபிஷேகமா? 


மழையாக பொழிய போகின்றேன்….. 


இன்னும் சந்தன மழையாக….. 


பாலாக….. 


இன்னும் இதைத்தன் அறிய எத்தனை எத்தனை கோமாதாக்கள் எனக்கு இதைத்தன் அறிய… 


எத்தனை எத்தனை எனக்கு வேண்டுமென்றால், யானே இல்லத்தை (ஆலயத்தை)  ஏற்படுத்த போகின்றேன். 


(ஆதி ஈசனாரிடம் வந்தால் , உண்மை உள்ளவர்களாக இருந்து சேவை செய்து வரவேண்டும். அப்படி இல்லை என்றால் அழித்துவிடுவார்.)


இதைத்தன் அறிய அப்படி இல்லாமல்… ஈசனுக்கு சேவை செய்கின்றேன். சேவை செய்கின்றேன் என்று சொன்னால், அழித்து விடுவேன். 


அழித்து விடுவேன். சொல்லிவிட்டேன். 


உண்மையாக இருங்கள். பொய்யாக இருக்காதீர்கள். 


===========================

# அன்புடன் முருகப்பெருமான் வாக்கு 

===========================


அறிந்தும் தந்தையே, அறிந்தும் இதைத்தன் அறிய வேலவன் பேசுகின்றேன். 


எப்படி இப்படி பேசினால் என்று 


===========================

# அன்புடன் ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய  ஆதி ஈசன் வாக்கு 

===========================


பின், அதாவது குழந்தையே, நீ ஒன்றும் அறியாத குழந்தை. 


இதைத்தன் அறிய அமைதி பொறுத்திரு. 


அறிந்தும்  கூட வேண்டுமென்றால், உன் ஆசிகள் இருக்கட்டும் உன் பக்தர்களுக்கு. 


இதைத்தன் அறிய.


அதனால் எச்சரிக்கையோடு இருக்கச் சொல். அனைவரையும். 


ஆசிகள் இப்பொழுது.


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.  சர்வம் சிவார்ப்பணம்.  

2 comments:

  1. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete
  2. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.