“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Tuesday, October 20, 2026

சித்தர்கள் ஆட்சி - 765 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - 01/10/2026 அன்று இலங்கையில் உள்ள கொட்டகலை - பத்தனை தமிழ் வித்தியாலயத்தில் உரைத்த கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 4

இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும். இறைவா, எங்களை நன்றாகப் படைத்தாய்! அனைத்தையும் நன்றாகக் கொடுத்திருக்கின்றாயே! இறைவா உந்தனுக்கு நன்றி! நன்றி!! நன்றி!! 


அன்பு அன்னை லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகள் போற்றி! போற்றி!! போற்றி!!!! 




அன்புடன் அகத்திய மாமுனிவர் புரட்டாசி மாதம், 01/10/2026  அன்று இலங்கையில் உள்ள கொட்டகலை - பத்தனை தமிழ் வித்தியாலயத்தில்  உரைத்த கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 4  (நிறைவு பகுதி) 


வாக்குரைத்த தேதி: 01 அக்டோபர் 2026

வாக்குரைத்த நாள்: கன்னி திங்கள் , புரட்டாசி மாதம்,  வியாழக்கிழமை

வாக்குரைத்த நேரம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை 

வாக்குரைத்த இடம்: பத்தனை தமிழ் வித்தியாலயம், கொட்டகலை நகரம். நுவரெலியா மாவட்டம்.


இவ் கூட்டுப்பிரார்தனையின் 4 பகுதிகளின் லிங்க் இங்கு உங்கள் பார்வைக்கு. 


சித்தர்கள் ஆட்சி 761 :-பகுதி 1

https://siththarkalatchi.blogspot.com/2026/10/761.html


சித்தர்கள் ஆட்சி 762 :-பகுதி 2

https://siththarkalatchi.blogspot.com/2026/10/762.html


சித்தர்கள் ஆட்சி 763 :- பகுதி 3

https://siththarkalatchi.blogspot.com/2026/10/763.html


சித்தர்கள் ஆட்சி 765 :-பகுதி 4

https://siththarkalatchi.blogspot.com/2026/10/765.html




===========================

# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 

===========================


ஆதி சிவசங்கரியின் பொற் கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன், அகத்தியன். 


அனைவருக்குமே எம்முடைய ஆசிகள். 


( பகுதி 3..அதன் தொடர்ச்சியாக…) 


(மதிய உணவு முடித்த பின்னர் மீண்டும் வாக்குகள் ஆரம்பமானது ……)


சுவடி ஓதும் மைந்தன்:- அமைதி. எல்லாரும் அமைதி காக்கணும். நமக்கு வந்து சித்தர்கள் வந்து நல்ல அறிவையும், நல்ல ஞானத்தையும், நல்ல ஒரு எல்லாத்தையும் கொடுப்பார். அதனால சித்தர்கள் என்ன சொல்றாங்களோ அதை கேட்போம், அதன்படியே நடப்போம். 


===========================

# ஒவ்வொரு ஞானியைப் பற்றியும் நிச்சயம் தெரிந்து கொண்டால்….

===========================


குருநாதர்:- அப்பனே, நல் வழிகளாக அனைத்தும் எதை என்று புரிய, அனைத்து குழந்தைகளுக்கும் ஆசிகள். 


அதாவது ஒவ்வொரு ஞானியைப் பற்றியும் நிச்சயம் தெரிந்து கொண்டால், அவ் ஞானியின் ஆற்றல் நிச்சயம் பல வழிகளில் கூட யான் சொல்லியிருக்கின்றேன். 


இதனால் நிச்சயம் பெற்று, நன்காகவே பின் நிச்சயம் தன்னில் கூட அறிவுகள் பலப்படும். 


இதனால் நன்காகவே ஓதி, அனைத்து நலன்களும் ஏற்படும். 


குருநாதர்:- இதனால் அனைத்து ஞானிகளையும் கூட போற்றி, பின் இவர்களையும் சொல்லித் தர நன்று, நிச்சயம் தன்னில் கூட. 


சுவடி ஓதும் மைந்தன்:-  எல்லாருக்கும் என்ன பண்ண சொல்றங்கன்னா… ஞானிகள் இருக்காங்க இல்ல…  ஞானிகள்  போற்றி, அதை நீங்க படிங்க. இவங்க சொல்லுவாங்க, அந்த ஞானிகள்  போற்றி படிக்கும் பொழுது, இவங்க சொல்லுகின்ற பொழுது, அந்த ஞானிகள் கூட வந்து அருள் ஆசிகள் கொடுக்கட்டும் குழந்தைகளுக்கு என்றார் வந்து. அதனால எல்லாரும் சொல்லணும். 


சுவடி ஓதும் மைந்தன்:-   குருவுக்கு வந்து மரியாதை எப்படி கொடுக்கறது? ஆசிரியர் என்ன சொல்றாரோ அதை செய்யணும். காலையிலே குருவை பார்த்து வணக்கம் சொல்லணும், தலை குனிந்து வணக்கம் சொல்லணும். எப்படி சொல்லணும்? 


மாணவ, மாணவிகள் :- (ஒருமித்த குரலில்) தலை குனிந்து வணக்கம் சொல்லணும்.


சுவடி ஓதும் மைந்தன்:- அது மாதிரி செஞ்சுட்டு, நல்லா இறைவனை நினைச்சு, பாடங்களை அன்றை அன்றைக்கே படிக்கணும். புரியுதுங்களா? அன்றை அன்றைக்கே படிக்கணும். இப்ப பாடம் ஆசிரியர் வந்து, "இதை படிச்சுட்டு வா"ன்னு சொன்னா, நாளைக்கு நாளடைக்கு எல்லாம் இது பண்ணக்கூடாது. அன்னைக்கே படிக்கணும். என்னைக்கு படிக்கணும்? ஒரு வாரம் கழிச்சு எல்லாம் படிக்கக்கூடாது. அன்னைக்கே படிக்கணும். சரிங்களா? 


===========================

# அன்பு குழந்தைகளின் கேள்விகள் ஆரம்பம்…..

===========================


குருநாதர்:-  அழகாக, குழந்தைகளே, உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேளுங்கள். 


சுவடி ஓதும் மைந்தன்:- அகத்திய பெருமான்  ஒரு சான்ஸ் கொடுக்கிறார்: 


அடியவர் :- என்ன வேணும்னு கேட்கிறார்.


சுவடி ஓதும் மைந்தன்:-  யாருயாருக்கு என்ன வேணுமோ, அவர் கேட்கிறார். அதனால, உங்களுக்கு என்ன வேணுமோ, யாராவது ஒருத்தர் உங்களுக்கு என்ன வேணுமோ, இங்க வந்து முன்ன கேளுங்க. அகத்திய பெருமான் அதுக்கு பதில் சொல்வார். 


அடியவர்:- வாங்க, யாராச்சும் யாராவது என்ன வேண்டும்? 


மாணவி 1:- ( எழுந்து வந்தார் கேள்வி கேட்க..) 


சுவடி ஓதும் மைந்தன்:-  வாங்க. கேளுங்க.


===========================

# உங்கள் குழந்தைகளுக்கு சிறந்த கல்வி கிடைக்க….

===========================


மாணவி 1:- கல்வி வேண்டும்.


சுவடி ஓதும் மைந்தன்:-  பாப்பா வந்து என்ன தெரியுமா கேள்வி கேள்விக்குது? கல்வி வேண்டும். உங்களுக்கு கல்வி வேண்டும். அவ்வளவுதானேமா? 


குருநாதர்:-  தாயே, நல்விதமாக அனைவரும் எதை என்று கூற, பின் அனைவருக்கும், இவ்வுலகத்தில் உள்ள அனைவருக்குமே கல்வி வேண்டும் என்று இறைவனிடத்தில் அனுதினமும் பிரார்த்தனை, பின் நிச்சயம் வைத்துக்கொண்டே இரு. நிச்சயம் எவை என்று புரிய, அனைத்தும் அனைவருக்கும் கிடைக்கும் என்று….. உனக்கு தானாக கிடைக்கும். 


சுவடி ஓதும் மைந்தன்:-  சரியா? பாப்பா, கல்வி வேண்டும்னு சொல்லுச்சு நல்லா. அதனால, எல்லாருக்காக நீ வேண்டிக்கோ. உலகத்துல எத்தனை பேர் உன்ன போல இருப்பாங்க வந்து. அதனால, எல்லா குழந்தைகளுக்கும் நல்ல கல்வி அறிவு வேண்டும். அதான் ஏழைகளுக்கு அதான் சொன்னாருல, அப்பவே வந்து ஒன்னும் சாப்பாடு இல்லாம, ஒண்ணுமே இல்லாம, அப்பா அம்மா இல்லாம, ரொம்ப கஷ்டப்பட்டு இருக்காங்க. ஓகேங்களா? அவங்களுக்காக நீ வீட்ல வந்து நல்லா வந்து விளக்கேத்தி, நல்லா வந்து வணங்கு. உனக்காக இறைவன் எல்லாம் செய்வார். ஓகே, நெக்ஸ்ட். 


சுவடி ஓதும் மைந்தன்:-  ஓகே, நெக்ஸ்ட் யாரு? 


( இவ் நேரத்தில் கேள்வி கேட்க பல மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் வரிசையில் நிற்க ஆரம்பித்தனர்…)


===========================

# உங்கள் குழந்தைகளை,  எப்படி இறைவனை  வணங்க வேண்டும்? என்று நீங்கள் அவசியம் உங்கள் குழந்தைகளுக்கு சொல்லி கொக்க வேண்டிய கேள்வி பதில் வாக்கு….

===========================


மாணவி 2:- நான் படிக்கிறதுக்காக கேக்குறேன். ரொம்ப கஷ்டப்படுறாங்க. நான் பெரியாளாக  வந்து, அவங்க கஷ்டப்படாம பாத்துக்கணும்.


சுவடி ஓதும் மைந்தன்:-  பாப்பா என்ன கேக்குது தெரியுங்களா? என்னை படிக்க வைக்கிறதுக்கு, அம்மா அப்பா ரொம்ப கஷ்டப்படுறாங்க. நான் பெரிய ஆளாகி, அவங்கள நல்லபடியா பாத்துக்கணும். அப்படி கேக்குறாங்க. அதுக்கு அகத்திய பெருமான் என்ன சொல்றாருன்னு பார்ப்போம். 


குருநாதர்:- தாயே, எதை என்று புரிய, பின் ஏற்கனவே தெரிவித்துவிட்டேன். 


நல்விதமாக எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட அவ்வாறு நினைக்காமல், நிச்சயம் தன்னில் கூட அனைத்து பின் பெற்றோர்களும் நன்றாக இருக்க வேண்டும். 


தன் தன் குழந்தைகளுக்கு என்னென்ன பின் தேவையோ, அனைத்தும் பின் செய்ய வேண்டும். 


இதனால் பெற்றோர்களுக்கு நல்விதமாக, நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது உடம்பு தன்னில் கூட, உபாதை இருக்காமல், நல் பின் எதை என்று புரிய, பின் நல் செல்வத்தையும், நல் பின் புத்தியையும், நல் எவை என்று புரிய, அனைத்தையும் கொடுத்து, அனைத்து குழந்தைகளையும் கூட, நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது என் போல், பின் யோசித்து, நிச்சயம் தன்னில் கூட யானும் நன்றாக இருக்க வேண்டும். 


பின் யானும், பின் தாய் தந்தையையும் பார்த்துக் கொள்ள வேண்டும். 


நிச்சயம் இவ்வுலகத்தையும், பின் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று, நிச்சயம் தன்னில் கூட அழகாக, அனுதினமும் இறைவனை நினைத்து, நிச்சயம் நினைத்து, நினைத்து, நிச்சயம் தன்னில் கூட, 


பின் இறை வழிபாட்டை, நிச்சயம் தன்னில் கூட, அனைவருக்கும், பின் எவை என்று புரிய, பின் அனைத்தும் சொல். 


பின் இவ்வாறாக வேண்டிக்கொள்ளுங்கள். 


நன்றாக, பின் படியுங்கள். எதை என்று புரிய, நன்றாக படியுங்கள். 


நன்றாக படித்தால், தாய் தந்தையரும், பின் கஷ்டம் இல்லாமல் பார்த்துக்கொள்ளலாம். 


பின் அதேபோல், உலகத்தில் உள்ள எத்தனையோ ஏழை குழந்தைகள் இருக்கின்றது. 


அவர்களுக்காகவும், நிச்சயம் தன்னில் கூட, பின் யாம் உழைப்போம். 


குருநாதர்:- இதனால் யாம் முன்னுக்கு வந்து, அனைவரையும் காப்போம். இவ் தேசத்தை காப்போம் என்று, நிச்சயம் வேண்டிக்கொள், தாயே. அனைவரிடத்திலும் நீ சொல்ல வேண்டும். சொல். 


சுவடி ஓதும் மைந்தன்:-   அகத்திய பெருமான் என்ன சொல்றாரு தெரியுங்களா? அகத்திய பெருமான் என்ன சொல்றாருன்னா, இந்த பாப்பாக்கு… என்ன கேட்டாங்க கேள்வி? நான் நல்லா படிச்சு, தாய் தந்தையர் பார்த்துக்கணும்னு சொல்றாரு. அதே மாதிரி, இந்த உலகத்தில் உள்ள எத்தனை பேர் குழந்தைகள் எல்லாம் இருக்காங்க. எல்லாருக்காக வேண்டிக்கோங்க. நல்லா இருக்கணும், நல்லா படிக்கணும். அப்படி எல்லாம் வந்து நீ வேண்டிக்கணும்னா, நானும் அதே மாதிரி வந்து, தாய் தந்தை நல்லா இருக்கணும். மத்தவங்களையும் நான் வாழ வைக்கணும். இந்த உலகத்தையும் காக்கணும். அப்படி வேண்டிக்க சொல்றாரு. டெய்லி வேண்டிக்கிட்டீங்கன்னா என்ன பண்ணுவாங்க? இறைவன் ஆசீர்வதித்தால, எல்லாமே கொடுப்பாங்க. எல்லாமே நல்லா இருப்பாங்க. ஓகேங்களா? 


சுவடி ஓதும் மைந்தன்:-  உனக்கு என்னப்பா வேண்டும்?


===========================

# அனுதினமும் தாய் தந்தையரை முதலில் வணங்க வேண்டும். 

# பின் குருவை வணங்க வேண்டும். 

===========================


மாணவர் 3:- நல்ல கல்வியும், நல்ல ஒழுக்கமும் வேணும்.


குருநாதர்:- அப்பனே, அனைத்தும் கொடுக்க தயார் என்பேன். அப்பனே, ஆனாலும் நீ, அப்பனே, முதலில் அப்பனே, நிச்சயம் அனைவருக்கும் சொல்லித்தா. இங்கிருந்து, அப்பனே, பின் தாய் தந்தையரை முதலில் வணங்க வேண்டும். பின் குருவை வணங்க வேண்டும் என்று. 


சுவடி ஓதும் மைந்தன்:- எல்லாம் தருகின்றோம்பா. ஒழுக்கம் எல்லாம் நான் தந்துறேன். எல்லாருக்கும் ஒரு வார்த்தை சொல்லுங்க. என்ன சொல்லணும்? தாய் தந்தையர் அதிகாலையில் வணங்க வேண்டும். சொல்லுங்க, எல்லாருக்கும் இந்தாங்க மைக்ல சொல்லுங்க. அப்பா, அம்மாவை எல்லாரும் காலையில வணங்க வேண்டும். சொல்லுங்க.


மாணவர் 3:- (அங்குள்ள அனைவருக்கும் தெரிவித்தார்) அப்பா, அம்மாவை எல்லாரும் காலையில வணங்க வேண்டும்.


சுவடி ஓதும் மைந்தன்:- அப்புறம் குருவை வணங்க வேண்டும்.


மாணவர் 3:-  அப்புறம் குருவை வணங்க வேண்டும்.


குருநாதர்:-  குருவை, பின் எதை என்று புரிய. குருவை, அதாவது பின் வணங்கி என்ன சொல்கின்றானோ, அதை கேட்க வேண்டும். 


சுவடி ஓதும் மைந்தன்:-  சொல்லுங்க, குருவை வணங்கி, குருவானவர் என்ன சொல்கின்றாரோ, அதை கேட்கணும்.


மாணவர் 3:-   குருவை வணங்கி, குருவானவர் என்ன சொல்கிறாரோ, அதை கேட்கணும்.


===========================

# எப்போது தானாக அனைத்தும் கிடைத்துவிடும்?

===========================


குருநாதர்:-  நிச்சயம் கேட்பீர்களா என்று நீயே கூறு. 


சுவடி ஓதும் மைந்தன்:-  எல்லாரும் இது மாதிரி செய்வீங்களா? கேட்பீங்களா? கேளுங்க.


மாணவர் 3:-  எல்லாரும் இது மாதிரி செய்வீங்களா? கேட்பீங்களா?


மாணவ மாணவிகள் :- (ஒருமித்த குரலில் ) செய்வோம் 


குருநாதர்:-   அப்பனே, தானாக இப்படி செய்தால், தானாக ஒழுக்கம் வந்துவிடும் அப்பா. அப்பனே, அனைத்தும் கிடைத்துவிடும் அப்பா. 


சுவடி ஓதும் மைந்தன்:-  இது மாதிரி செஞ்சீங்கன்னா, தானா ஒழுக்கம் வந்துரும். தானா எல்லாமே கிடைச்சிரும். ஓகேவா? ஓகே, ரைட்ப்பா. அடுத்து, நெக்ஸ்ட் யாரு? 


சுவடி ஓதும் மைந்தன்:- அகத்திய பெருமான் சரியான  சூப்பரா கொடுத்திருக்காரு சான்ஸ் குழந்தைகளுக்கு. 


சுவடி ஓதும் மைந்தன்:-  எல்லாரும் கிளாப் தட்டுங்க. எல்லாரும் கிளாப் தட்டுங்க. 


மாணவ, மாணவிகள்:- ( பலத்த உற்சாக கைதட்டல்கள் ) 


சுவடி ஓதும் மைந்தன்:-  உட்காருப்பா. அகத்தியரை என்ன கேட்க போற?


மாணவர் 4:-  அம்மா, அப்பா நல்லா பாத்துக்கணும்.


சுவடி ஓதும் மைந்தன்:-   அது கேட்டாங்க. வேற கேளு.


மாணவர் 4:-  அம்மா, அப்பாக்கு உழைச்சு நான் சாப்பிடணும்.


சுவடி ஓதும் மைந்தன்:-   சரி. படிப்போம். 


குருநாதர்:-  அப்பனே, எழுது. இதை யான் கொடுத்து விடுகின்றேன் . அப்பனே. நீ மற்றவர்களுக்காக என்ன செய்வாய்? 


சுவடி ஓதும் மைந்தன்:-   நான் இது வந்து, நான் வந்து கொடுத்துறேன். உனக்கு ஆசி. மத்தவங்களுக்காக நீ என்ன செய்யப் போகின்றாய்? கேக்குறாரு அகத்தியர்.


மாணவர் 4:-   …….


சுவடி ஓதும் மைந்தன்:-  அடுத்து என்ன செய்ய போற?  உங்க அப்பா, அம்மாவை இறைவன் பார்த்துப்பார்.ஆசிகள்  கொடுத்துட்டார். நீ அடுத்தது என்ன செய்ய போற எல்லாருக்கும்?.


மாணவர் 4:-  அடுத்து படிக்காதவங்களுக்கு எல்லாம் படிக்க வச்சு, அவங்க சாப்பாடு எல்லாம் போடணும்.


குருநாதர்:-  அப்பனே, எதை என்று புரிய நிச்சயம் எம்முடைய ஆசிகள். நிச்சயம் செய்வாய் வருங்காலத்தில் அப்பனே, 


சுவடி ஓதும் மைந்தன்:-  அகத்திய பெருமான் சொல்றாரு தெரியுங்களா?.....  இவர் (மாணவர் 4)  என்ன சொன்னாரு? படிக்காதவர்கள் எல்லாம், இவர்  நல்லா பெரிய ஆளாகி, படிப்பு கொடுத்து, எல்லாருக்கும் சாப்பாடு போடுவாராம். எல்லாரும் கிளாப் தட்டுங்க. 


மாணவ, மாணவிகள்:- ( பலத்த உற்சாக கைதட்டல்கள்…… )


சுவடி ஓதும் மைந்தன்:-  இதே போலத்தான், இதே போலத்தான் என்ன வேண்டும். நம்ம நல்லா படிச்சிட்டு, பெரிய ஆளாகி, எல்லாருக்கும் கல்வி இல்லாதவர்களுக்கு எல்லாம் வந்து, கல்வி கொண்டு வந்துட்டு, சாப்பாடும் கொடுக்கணும். ஓகேவா? சந்தோஷம். அதெல்லாம் உங்களுக்கு ஆசி கொடுத்துட்டாருப்பா. ரொம்ப சந்தோஷம். அடுத்து, 


சுவடி ஓதும் மைந்தன்:-  அடுத்து யாரு? அகத்திய பெருமான் கேட்க போறீங்க. நல்ல சான்ஸ். 


(ஒரு மாணவி எழுந்து கேள்வி கேட்க முன் வந்தார்…..)


மாணவ, மாணவிகள்:- ( பலத்த உற்சாக கைதட்டல்கள்…… )


சுவடி ஓதும் மைந்தன்:- வாங்க, வாங்க. கேட்காத கேள்வி கேட்கணும்.  அகத்திய பெருமான் என்ன கேட்க போறீங்க. இந்தாங்க மைக்.


===========================

# சிறு குழந்தையாக இருந்து, பெரிய கேள்வி கேட்டு விட்ட மாணவி.

===========================

# இயற்கை அனர்த்தங்கள் எப்படி தடுத்து நிறுத்துவது?

===========================

மாணவி 5:- இந்த உலகத்துல நிறைய பேர் இயற்கை அனர்த்தங்கள் எல்லாம் வந்து, நிறைய பேர் எல்லாம் அவங்க உடமைகள் எல்லாம் இழந்துட்டாங்க. அந்த மாதிரி இனிமேல் எதுவும் நடக்காம இருக்கனும்.


(இயற்கை அனர்த்தங்கள் - இயற்கையின் மாற்றங்களால் தாமாகவே ஏற்படுபவை (எ.கா: நிலநடுக்கம், சுனாமி, வெள்ளப்பெருக்கு, சூறாவளி, மண்சரிவு, வறட்சி, எரிமலை வெடிப்பு) )


சுவடி ஓதும் மைந்தன்:-  என்ன கேக்குறாங்க தெரியுங்களா? இயற்கை அனார்த்தங்களால, நிறைய பேர் வந்து, தன் உடைமைகள் எல்லாமே இழக்குறாங்க. இனிமேல் அது நடக்கக்கூடாது அப்படின்னு கேள்வி கேக்குறாங்க. அகத்திய பெருமான் இதற்கு என்ன பதில் சொல்லப் போகின்றார்? 


மாணவ, மாணவிகள்:- ( பலத்த உற்சாக கைதட்டல்கள்…… )


குருநாதர்:- தாயே, நிச்சயம் தன்னில் கூட ஒழுக்கத்தை கடைபிடித்தாலே, மனிதன் அனைத்தும் எதை என்று கூட, இறைவன் ஏது என்று புரிய, எதுவும் செய்ய மாட்டான் தாயே.  இதனால் நிச்சயம் தன்னில் கூட வருங்காலத்தில் ஒழுக்கத்தை கடைபிடித்தால், அழிவுகள் என்று வளராது தாயே. ஒழுக்கத்தை பயன்பட, பின் அதாவது, நிச்சயம் பயன்படுத்த எவை என்று கூட, நிச்சயம் பயன்படுத்த வேண்டும். பயன்படுத்த வேண்டும். 


சுவடி ஓதும் மைந்தன்:-  ஒழுக்கத்தை பயன்படுத்த வேண்டும். கடைபிடிக்க வேண்டும். ஒழுக்கத்தை யார் ஒருவன் சரியாக பயன்படுத்துகின்றானோ, அதுக்கு வந்து உலகம் அழியாது. 


குருநாதர்:- தாயே, நிச்சயம் சிறு குழந்தையாக இருந்து, பெரிய கேள்வி கேட்டுவிட்டாய். நிச்சயம் யான் காப்பாற்றுவேன். கவலைகள்  வேண்டாம். 


சுவடி ஓதும் மைந்தன்:-  அகத்திய பெருமான் என்ன சொல்றாரு? சிறு குழந்தையாக இருந்து, பெரிய கேள்வி கேட்டு விட்டாய். அதனால நான் வந்து, நிச்சயமாய் என்னால் முடிந்த வரை நான் தடுப்பேன். அகத்திய பெருமான்  சரி பண்ணுவாருன்னு சொல்லி இருக்காரு. அதனால எல்லாரும் ஒழுக்கமா இருக்கணும்னு சொல்லுங்க. எல்லாரும், எல்லாருக்கும் சொல்லுங்க.


மாணவி 5:-  எல்லாரும் ஒழுக்கமா இருங்க.


சுவடி ஓதும் மைந்தன்:-  ஐயா, எல்லாரும் ஒழுக்கமா இருக்கணும். ஒழுக்கம்னா என்ன? தாய் தந்தையர் பேச்சு கேட்கணும். ஆசிரியர் பேச்சு கேட்கணும்.. ஆசிரியர் அவர் என்ன சொல்றாரோ, அதை கேட்கணும். அதுதான் ஒழுக்கம். ஆசிரியர் சொல்றது யார் ஒருத்தர் கேக்குறாங்களோ, அந்த உலகத்துல பெரிய ஆள் ஆகலாம். ஆசிரியர் சொல்றது யார் ஒருத்தர் கேட்காமல் போனாங்களோ, அவங்க ஒன்னும் படிப்பே வளராது. வந்து அதனால குரு சொல்வதை சத்தியமா கேட்கணும். ஓகேங்களா? எல்லாரும் சொல்லுமா? அதே மாதிரி சொல்லுங்க. ஃபர்ஸ்ட்ல சொல்ற மாதிரி, தாய் தந்தையரை வணங்கணும். முதல்ல வீட்ல இருந்து, தாய் வணங்கணும். அப்புறம் குரு வணங்கணும். குரு பேச்சை கேட்கணும். எல்லாரும் சொல்லுங்க.


மாணவி 5:-  தாய் தந்தையரை வணங்கணும். குருவை வணங்கணும். குரு சொல்றதை கேட்டு நடந்து கொள்ளவேண்டும்.


மாணவ, மாணவிகள்:- ( பலத்த உற்சாக கைதட்டல்கள்…… )


சுவடி ஓதும் மைந்தன்:- சந்தோஷம். அடுத்து யாராவது கேள்வி கேக்குறீங்களா?  ஒருத்தர் ஒருத்தரா கேளுங்க. அகத்தியரை.


===========================

# ஒரு மாணவன் , மாணவி -  தான் விரும்பும் பணி/வேலை  எதிர்காலத்தில் கிடைக்க, அனுதினமும் என்ன செய்ய வேண்டும்?

===========================


மாணவர் 6:- நான் போலீஸ் ஆகி, தீமை செய்றவங்களை நான் திருத்தணும் .


சுவடி ஓதும் மைந்தன்:- என்ன சொல்றாங்க தெரியுங்களா? போலீஸ் ஆகி, தீமை செய்றவங்களை எல்லாம் திருத்தணும் என்று  கேட்டுட்டாரு. அகத்திய பெருமான் என்ன சொல்றாருன்னு கேட்போம். 


குருநாதர்:- அப்பனே, நல்விதமாக அனுதினமும், பின் ஏற்கனவே சொன்னேன். தாய் தந்தையரை வணங்கி, குரு சொல்வதை கேள். நிச்சயம் அதேபோல ஆகுவாய் என்பேன் அப்பனே. 


சுவடி ஓதும் மைந்தன்:- நிச்சயமா நான் உனக்கு அருளாசி கொடுக்கிறேன்பா. தாய் தந்தையரை வணங்கு. குரு பேச்சை கேள். நிச்சயம் நீ வந்து அதேபோல ஆயிடுவேன்ட்டார்.  ஓகேங்களா? சூப்பர், ரைட். 


சுவடி ஓதும் மைந்தன்:-  எல்லாரும் கை தட்டுங்க. 


மாணவ, மாணவிகள்:- ( பலத்த உற்சாக கைதட்டல்கள்…… )


சுவடி ஓதும் மைந்தன்:- அவர் என்ன கேள்வி கேட்டார்…… சந்தோஷம். இதேபோல், எல்லாரும் ஐஏஎஸ், ஐபிஎஸ், பெரிய பெரிய பதவியில வந்து, நல்லா படிச்சு மக்களை காப்பாத்தணும். எப்படி பண்ணனும்? மக்களை காப்பாத்தணும். 


சுவடி ஓதும் மைந்தன்:-  அடுத்து யார் கேள்வி கேட்க போறீங்க. 


===========================

# ஏன் வருங்காலத்தில் குழந்தைகள் தான் பெரிய தூண்கள்?

===========================


மாணவர் 7 :- போதை பொருள் எல்லாம் யூஸ் பண்றோம். அதை தடுக்கணும். 


சுவடி ஓதும் மைந்தன்:-   அருமையான கேள்வி கேட்டிருக்கார். போதை பொருள் எல்லாம் நிறைய யூஸ் பண்றாங்க. அந்த அழிவை தடுக்கணும். 


குருநாதர்:-  அப்பனே, சிறுவயதிலிருந்து பெரிய, அதாவது பெரிய கேள்வி கேட்டுவிட்டாய். 


அப்பனே, நிச்சயம் தன்னில் கூட….


***** வருங்காலத்தில், அப்பனே, சிறு குழந்தைகள் தான் பெரிய தூண்கள் என்பேன் அப்பனே. *****


அதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. 


அப்பனே, நிச்சயம் தன்னில் கூட இறைவன்…. 


அப்பனே, நிச்சயம் அதற்காகத்தான் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட 


சில அழிவுகளை ஏற்படுத்தி, அப்பனே, நிச்சயம் பாடம் புகட்டுவான் என்பேன் அப்பனே. 


குருநாதர்:-  நிச்சயம் அப்பனே, அனைவரும், அப்பனே, இதுபோல் என்ன வேண்டும்…. 


சுவடி ஓதும் மைந்தன்:-  இறைவன் வந்து சில அழிவுகளை ஏற்படுத்தி, மனிதனுக்கு  அறிவை புகுத்தி வைப்பார். நீங்க எல்லாமே சிறு குழந்தைகள். இதே, இதே போலத்தான் எல்லாருமே என்ன எண்ண வேண்டும்? நம்ம பெரிய ஆளாகி, எல்லா போதைகளும் தடுக்கணும். அருமையான கேள்வி கேட்டார். அதனால, நீங்கள் என்ன பண்ணனும்? விழிப்புணர்வு ஏற்படுத்தணும். எல்லாம் உங்களால முடியும். குழந்தைகளால் முடியும்ன்றார். 


===========================

# மகத்தான ஆசிகள் - தீயவற்றை அடியோடு தடுக்க, விழிப்புணர்வு ஏற்படுத்த…

===========================


குருநாதர்:- அப்பனே, ஆசிகள் கொடுக்கின்றேன். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அப்பனே, பின் தடுப்பாய் என்பேன்  அப்பனே, நிச்சயம் 


சுவடி ஓதும் மைந்தன்:-  கண்டிப்பா நீ தடுப்ப. ஆசிகள் கொடுத்துட்டார். இன்னும் பெரிய, நல்லா படிச்சு, படிச்சு, நீ கண்டிப்பாக சேவை செய்வாய். ஓகே, சந்தோஷம். ஓகேங்களா? ரைட். 


சுவடி ஓதும் மைந்தன்:-  என்னப்பா?  சொல்லுப்பா. 


மாணவர் 10 :- அப்பா, கண் பார்வை சரிக்ககனும். நல்லா படிச்சி அவங்களை பார்த்துக்கணும்.


குருநாதர்:-  அப்பனே, நிச்சயம் தன்னில் கூட கவலை வேண்டாம் என்பேன் அப்பனே. எதை என்று புரிய யான் பார்த்துக் கொள்கின்றேன். இதேபோல், நன்றாக, அப்பனே, பின் படித்து, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அனைவருக்கும், அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, கண் இழந்தோருக்கெல்லாம் சேவை செய்வாய்  அப்பனே, இப்பொழுது ஆசிகள் தந்து விடுகின்றேன். கவலைகள் வேண்டாம். 


சுவடி ஓதும் மைந்தன்:-  இவர் என்ன சொல்றாரு தெரியுங்களா? கண்டிப்பாக நீ பெரியவனாகி, எல்லாருக்கும் கண் சம்பந்தப்பட்டதெல்லாம் நீ எல்லாருக்கும் செய்வேன்ட்டார். அப்பாக்கு வந்து கண் தெரியல. அவருக்கு வந்து அகத்திய பெருமான் பார்த்துப்பார். அடுத்து நீ பெரிய ஆளாகி என்ன பண்ணுவ? என்ன பண்ணுவ?


மாணவர் 10 :-  டாக்டர் ஆகி , (சுகம் இல்லாதவர்கள்) அனைவரையும் சுகமாக்குவேன் (குணப்படுத்துவேன்).


சுவடி ஓதும் மைந்தன்:- டாக்டர் ஆகி சுகம் சுகமாக்குவார். சரிங்களா? அதே மாதிரி நீ பெரிய ஆளாகி வந்து எல்லாருக்கும் சுகமாக்குவார். நல்லா படிப்பேன்ட்டார். ஓகேங்களா? சரியா? அது நல்லா ஆயிடும். ஓகேங்களா? அகத்திய பெருமான் பார்த்து பாருங்க. 


சுவடி ஓதும் மைந்தன்:- எல்லாருக்கும் சந்தோஷம். எல்லாருக்கும் இந்த கூட்டுப்பிரார்தனையை ஏற்படுத்தினதுக்கு எல்லாருக்கும் ஆசிரியருக்கும், ஆசிரியர் பெருமக்களுக்கும் நல்லா சந்தோஷம். இது மாதிரி வந்து இந்த காலகட்டத்துல, நல்லது சொல்றவங்களுக்கு ஆளே இல்லை. அதனால இறைபக்தி எல்லாருக்கும் புகட்டணும். இறைபக்தி எல்லாருக்கும் புகட்டணும்னா நல்ல எண்ணங்களை தோன்றி, பெரிய ஆளாகி இந்த உலகத்துக்கு சேவை செய்யலாம். 


சுவடி ஓதும் மைந்தன்:- எல்லாருக்கும் ஆசிகள். அப்பவே அகத்திய பெருமான் சொல்லிட்டாரு. எல்லாரும் உங்களை பார்த்துட்டு ஆசிகள் கொடுத்துட்டாங்க. அதனால எல்லாருமே நல்லா இருப்பீங்க. இதேபோல் எப்பவுமே ஒழுக்கத்துடன் தாய் தந்தையரை மதித்து, ஆசிரியர் சொல்வதை கேட்டு, அப்படியே நடந்து வாருங்கள். ஓகேங்களா? சந்தோஷம், ஐயா. ரொம்ப சந்தோஷம். 


( அன்புடன் அகத்திய மாமுனிவர் புரட்டாசி மாதம், 01/10/2026  அன்று இலங்கையில் உள்ள கொட்டகலை - பத்தனை தமிழ் வித்தியாலயத்தில்  உரைத்த கூட்டு பிரார்த்தனை வாக்கு நிறைவு அடைந்தது.)  


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.  சர்வம் சிவார்ப்பணம்.  

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.