“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Saturday, October 17, 2026

சித்தர்கள் ஆட்சி - 764 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - அன்புடன் போகர் சித்தர் சென்னையில் உரைத்த வாக்கு. - புவனேஸ்வரி அன்னை மந்திரம்

இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும். இறைவா, எங்களை நன்றாகப் படைத்தாய்! அனைத்தையும் நன்றாகக் கொடுத்திருக்கின்றாயே! இறைவா உந்தனுக்கு நன்றி! நன்றி!! நன்றி!! 


அன்பு அன்னை லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகள் போற்றி! போற்றி!! போற்றி!!!! 



அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் , புரட்டாசி மாதம், 16/அக்டோபர்/2026 அன்று அன்புடன் போகர் சித்தர் - அகத்திய மாமுனிவர் யாத்திரை குழுவினருக்கு சென்னையில் உரைத்த வாக்கு. 

வாக்குரைத்த தேதி: 16 அக்டோபர் 2026

வாக்குரைத்த நாள்: கன்னி திங்கள் , புரட்டாசி மாதம்,  வெள்ளிக்கிழமை

வாக்குரைத்த இடம்: அகத்திய மாமுனிவர் யாத்திரை குழுவினருக்கு சென்னையில் உரைத்த வாக்கு.


வணக்கம் அடியவர்களே, அகத்திய மாமுனிவர் யாத்திரை குழுவினருக்கு சென்னையில் உரைத்த வாக்கு அதனில் ஒரு மந்திரம் பொதுவாக வழங்கப்பட்டது. தற்போது நவராத்திரி நடந்துகொண்டு உள்ளது. எனவே இவ் மந்திரத்தை மட்டும் அடியவர்கள் பலன் பெற இங்கு வழங்குகின்றோம். முழு வாக்குகள் பின்னர் வெளிவரும் என்று அறிய தருகின்றோம். வாருங்கள் வாக்கின் உள் செல்வோம்.


===========================

# அன்புடன் போகர் சித்தர் வாக்கு 

===========================


உலகத்தை அழகாக வழிநடத்தும் இறைவா, இறைவி போற்றியே, மனதில் நிறுத்தியே உரைப்பேன், போகனவன். 


( இதன் பின்னர் பல பொது வாக்குகள் உரைத்தார்கள். பின்னர் அவ் வாக்குகள் வெளிவரும்..இவ் வாக்கின் இறுதியில் உரைத்த வாக்கு….) 

……………

……………

……………

……………

போகர் சித்தர்:- நன்மையே நடக்கும், அதாவது என் பிள்ளையைப் பிடித்துக் கொள்ளுங்கள், அழகாக. 


சுவடி ஓதும் மைந்தன்:- என் பிள்ளைன்னா யாரு? முருகப்பெருமான். 


போகர் சித்தர்:-  என் தாய்க்கும் நிச்சயம் பின் நல் விதமாகச் செய்யுங்கள், போதும். 


சுவடி ஓதும் மைந்தன்:- என் தாய்க்கன்னா யாரு?


அடியவர்கள் :- அம்பாள்.


சுவடி ஓதும் மைந்தன்:- அம்பாளுக்கு செஞ்சிருங்கன்னு சொல்லிட்டார் அய்யா. அம்பாளுக்கு வந்து ஒரு டெய்லி வந்து ஒரு புடவை சாத்திருங்க, ஐயா. ஒரு கோயில்ல போயிட்டு கொடுத்துருங்க. 


(இதனை இயன்ற போது செய்து வாருங்கள்.)


போகர் சித்தர்:-   இதைத் தன் அங்க இருப்பவர்களுக்கு ஏதாவது இனிப்பை தானம் செய்யுங்கள். அதாவது தானம் என்று பின் எதை என்று நினைக்கக்கூடாது.


சுவடி ஓதும் மைந்தன்:-  செய்யுங்க. நீங்க எதையும்  நினைக்கக் கூடாது. நீங்க வந்து கொடுத்துட்டு வந்தீங்கன்னா இருக்கணும். போகர் சித்தர் இவர் சொன்னாரா? அவ்வளவுதான். முடிஞ்சு போச்சு. அதனால் அது வந்து இல்லைன்னா தானத்துல போயிடும்ன்றாரு. 


அடியவர்கள் :-  யோசிக்க கூடாது.


சுவடி ஓதும் மைந்தன்:-  அதுதான்.


போகர் சித்தர்:-   இதை தன் அறிய இதனால் அனைவருக்குமே எம்முடைய ஆசிகள். அறிந்தும் இதை தன்  அறிய அழகாக புவனேஸ்வரி பின் அறிந்தும் என் அன்னையாக பின் அறிந்தும் அவள் நாமத்தை பின் செப்பி வர நன்று. 


***** ஓம் ஐம் க்லீம் புவனேஸ்வரி  தாயே வருக. ***** 


***** குறைகள் நீக்குக. ***** 


***** எப்பொழுதும் என் உள்ளத்தில் குடியிருக்க. ***** 


***** குடியிருந்து காக்குக. ***** 


***** காத்து அருளுக. ***** 


***** மக்கள் அனைவரும் செழிப்புடன் வாழ. ***** 


*****  ஓம் மம மம வசி மம வசி ஐம் க்லீம் புவனேஸ்வரியே  நமஹ. ***** 


எனும் மந்திரத்தை உள்ளத்தில் ஒலிக்கட்டும். ஆசிகள், ஆசிகள். 


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.  சர்வம் சிவார்ப்பணம்.  


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.