“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Saturday, October 17, 2026

சித்தர்கள் ஆட்சி - 763 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - கலியுகத்தில் முதன் முறையாக நந்தியம் பெருமான் வாழ்க்கை ரகசியங்கள்.- 01/10/2026 அன்று இலங்கையில் உள்ள கொட்டகலை - பத்தனை தமிழ் வித்தியாலயத்தில் உரைத்த கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 3

 இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும். இறைவா, எங்களை நன்றாகப் படைத்தாய்! அனைத்தையும் நன்றாகக் கொடுத்திருக்கின்றாயே! இறைவா உந்தனுக்கு நன்றி! நன்றி!! நன்றி!! 

அன்பு அன்னை லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகள் போற்றி! போற்றி!! போற்றி!!!! 


கலியுகத்தில் முதன் முறையாக நந்தியம் பெருமான் வாழ்க்கை வரலாறு ரகசியங்கள்.

அன்புடன் அகத்திய மாமுனிவர் புரட்டாசி மாதம், 01/10/2026  அன்று இலங்கையில் உள்ள கொட்டகலை - பத்தனை தமிழ் வித்தியாலயத்தில்  உரைத்த கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 3 - கலியுகத்தில் முதன் முறையாக நந்தியம் பெருமான் வாழ்க்கை வரலாறு ரகசியங்கள்.


வாக்குரைத்த தேதி: 01 அக்டோபர் 2026

வாக்குரைத்த நாள்: கன்னி திங்கள் , புரட்டாசி மாதம்,  வியாழக்கிழமை

வாக்குரைத்த நேரம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை 

வாக்குரைத்த இடம்: பத்தனை தமிழ் வித்தியாலயம், கொட்டகலை நகரம். நுவரெலியா மாவட்டம்.


இவ் கூட்டுப்பிரார்தனையின் 4 பகுதிகளின் லிங்க் இங்கு உங்கள் பார்வைக்கு. 


சித்தர்கள் ஆட்சி 761 :-பகுதி 1

https://siththarkalatchi.blogspot.com/2026/10/761.html


சித்தர்கள் ஆட்சி 762 :-பகுதி 2

https://siththarkalatchi.blogspot.com/2026/10/762.html


சித்தர்கள் ஆட்சி 763 :- பகுதி 3

https://siththarkalatchi.blogspot.com/2026/10/763.html


சித்தர்கள் ஆட்சி 765 :-பகுதி 4

https://siththarkalatchi.blogspot.com/2026/10/765.html



===========================

# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 

===========================


ஆதி சிவசங்கரியின் பொற் கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன், அகத்தியன். 


அனைவருக்குமே எம்முடைய ஆசிகள். 


( பகுதி 2..அதன் தொடர்ச்சியாக…) 


===========================

# கலியுகத்தில் முதன் முறையாக நந்தியம் பெருமான் வாழ்க்கை ரகசியங்கள்.

===========================

 

கலியுகத்தில் முதன் முறையாக நந்தியம் பெருமான் வாழ்க்கை வரலாறு ரகசியங்கள்.

குருநாதர்:-   இதைத்தன் அறிய நந்தியனைப் பற்றி இப்போது சொல்லப் போகின்றேன். நந்தியன் ஏன் இருக்கின்றான்? எவ்வாறு?  என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது இவ் உலகத்திற்கு. ஆனால் உங்களுக்கு இப்பொழுது சொல்லப் போகின்றேன், நந்தியம் பெருமானைப் பற்றி. 


அடியவர்:- எல்லாரும் கொஞ்ச நேரம் அமைதியா கேளுங்க. நந்தியம்பெருமான்.  நந்தியம்பெருமானுடைய உண்மையான வாழ்க்கை வரலாறு, அவருடைய இதுவரைக்கும் எங்கேயுமே சொல்லலையாம். இந்த ஜீவநாடியில, நந்தியம் பெருமானுடைய வாழ்க்கை வரலாறு எங்கேயுமே சொல்லல. உங்களுக்காக, நந்தியம் பெருமானுடைய வாழ்க்கை வரலாறை அப்பா சொல்ல போறாரு. எல்லாரும் கவனமா கேட்டுக்கோங்க. 


===========================

# நந்தியம் பெருமானின்  தாய் , தந்தையர் காட்டிய உயர் சிவ பக்தி.

===========================


குருநாதர்:-  நிச்சயம், பின் ஏது என்று புரிய, அதாவது பின் நந்தியன் எவை என்று புரிய, ஏது என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, பின் எவை என்று அறிய, பின் இமயம் தன்னில் கூட, நன்றாக ஏது என்று இவ்வாறாக, அவன் தாய் தந்தையர் உயர்ந்த இடத்தை, அதாவது ஈசனே கதி என்று, நிச்சயம் வாழ்ந்தார்கள். 


குருநாதர்:-   இவ்வாறாக, நிச்சயம் தன்னில் கூட, அழகாக, நிச்சயம் எதை என்று புரிய, ஈசன் நிச்சயம் எவ்வாறு புரிய. ஆனாலும், ஈசனே, அதாவது இருவரும், பின் எதை என்று , ஈசன் தான் குழந்தை என்று வாழ்ந்தார்கள். 


===========================

# ஈசனாரின் திருவிளையாடல் ஆரம்பம்…..

===========================

குருநாதர்:-   ஆனாலும், நிச்சயம், பின் கைலாயத்தில் எதை எதை என்று  புரிய, அனைத்தும் பார்த்து ரசித்துக்கொண்டு.  இவ்வாறாக, இப்புவிதனில் கூட, இப்படி ஒரு பக்தியா என்று, ஈசன் கண்கலங்கி, நிச்சயம் பார்ப்போம் என்றெல்லாம், நிச்சயம் தன்னில்…. எவ்வாறு என்பதெல்லாம்.

===========================

# மகிமை புகழ் நந்தியம் பெருமான் அவதாரம்….

===========================


குருநாதர்:-   ஒரு குழந்தையை, பின் எதை என்று , அதாவது ஈசன், பின் போட்டு விட்டு சென்று விட்டான். 


அடியவர்:- இங்க பாருங்க, ஒரு ஞானியர் பத்தி சொல்றாரு. ஒரு முக்கியமான ஒரு விஷயத்தை சொல்றாரு. கவனமாக கேளுங்கள். அதாவது, சிவபக்தியில உயர்ந்த ரெண்டு பேர் இருந்தாங்க. ஒரு கணவன் மனைவி. அவங்களுக்கு வந்து சிவனை தவிர, அவ்வளவு பக்தி. அவங்க சிவனை தன்னுடைய பிள்ளையாக கூட நினைச்சு, அவங்க வாழ்ந்துட்டு வரும் பொழுது, சிவன் என்ன செய்றாரு? அவங்களுக்கு ஒரு சோதனையை செஞ்சு பார்க்கலாம்னு சொல்லி, ஒரு பிள்ளையை கொடுக்கிறார். 


சுவடி ஓதும் மைந்தன் :-  போட்டு சோதனை செய்யலாம்னு சொல்லிட்டு, ஈசன் வந்து அந்த பிள்ளையை அவங்க முன்னாடி போட்டு விட்டு போயிட்டாரு. 


அடியவர்:-  அதாவது என்ன செய்றாருன்னா, இவங்க வந்து ஈசனையே பிள்ளையா நினைச்சுட்டு வாழ்ந்துட்டு இருக்காங்க. அதனால என்ன செய்றாரு? உங்களுக்கு செய்றேன்னு, ஒரு பிள்ளையை கொண்டு வந்து, அவங்களுக்கு கண்ணுக்கு தெரியுற மாதிரி போட்டுட்டு போயிட்டாரு. 


குருநாதர்:- இதைத்தன் அறிய, அவர்கள் எதை என்று புரிய. ஆனாலும், குழந்தை, பின் அழகாக, நிச்சயம் தன்னில் கூட, பின் எதை என்று  கூற. இவர்கள் நிச்சயம் தன்னில் எதை என்று புரிய  அழு குரலோடு அக்குழந்தை. 


குருநாதர்:-  இதனால், பின் நிச்சயம் சென்றார்கள் அங்கு. பின் நிச்சயம் யாருடைய குழந்தை? யாருமே இல்லையே? எப்படி?  எதை என்று அறிய, திரும்பத் திரும்ப பார்த்தார்கள். 


குருநாதர்:- பின் அதனால், எதை என்று  புரிய நாம் இருவரும் தான் இங்கு இருக்கின்றோம். ஆனாலும், யாருமே இல்லையே இவ்மலை தன்னில் கூட. எப்படி என்றெல்லாம், நிச்சயம் சிந்தித்தார்கள். 


அடியவர்:- இப்ப, சிவபெருமான் பிள்ளையை போட்டு போன உடனே, இவங்க வந்து பாக்குறாங்க. ஒரு அழகான குழந்தை. அப்பா என்று அழுதுட்டு இருக்கு. தேடி பாக்குறாங்க. அதுக்கு  அம்மா அப்பா யாருமே இல்லை. இவ்வளவு ஒரு அழகான குழந்தையை போட்டு போயிட்டாங்களே. யாருமே இல்லையேன்னு சொல்லி, அவங்க என்ன செய்றாங்க? எல்லா இடமும் தேடி பாக்குறாங்க. குழந்தையோட அழுகுரல் மட்டும் தான், அவங்களுக்கு கேட்குது. வேற ஒருத்தரையுமே காணல. 


குருநாதர்:-  இதைத்தன் அறிய, எவ்வாறு என்பதை எல்லாம், இதைத்தன் உருவாக. ஆனால், நிச்சயம் தன்னில் கூட அழகாக எடுத்து, எதை என்று புரிய. 


குருநாதர்:-  ஆனால், நிச்சயம் தன்னில் கூட அறிதும். அக்குழந்தை எதை என்று பாதுகாத்தனால், நிச்சயம் அதுவும் போல், ஈசனை போலே, நிச்சயம் எதை என்று அறிய. 


சுவடி ஓதும் மைந்தன் :-   அவங்க வந்து எடுத்து, அந்த குழந்தையை ஈசன் போல், இவர்தான் ஈசன்னு சொல்லிட்டு வளர்த்தார்கள். 


அடியவர்:- ஏன்னா, அவங்க ஏற்கனவே ஈசனை குழந்தையா நினைச்சுட்டு இருந்தாங்க. இந்த குழந்தை வந்தவுடன் என்ன செஞ்சுட்டாங்க? இதுதான் ஈசன்னு சொல்லி, அந்த சிவபெருமானாவே நினைச்சு, அந்த குழந்தையை வளர்க்க தொடங்கிட்டாங்க. 


சுவடி ஓதும் மைந்தன் :- ஆமா. 


===========================

# சிவபதம் அடைந்த பெற்றோர்கள்.

===========================


குருநாதர்:- இதைத்தன் அறிய, எதை அதாவது, நிச்சயம் அவர்களும் விருப்பமே, நிச்சயம் பின் ஈசனை, பின் நிச்சயம் காண. ஆனாலும், நிச்சயம் இக்குழந்தையை, பின் எதை என்று கூட கண்டவுடன், பின் மகிழ்ச்சி, அதாவது வளர்ந்து, நிச்சயம் தன்னில் கூட. ஆனாலும், நிச்சயம் அவர்களுக்கும் எதை என்று கூற  போதும். 


***** நிச்சயம் தன்னில் கூட, இவர் ஈசன் தான். *****


அதனால், நிச்சயம் தன்னில் கூட, அடியோடு பார்த்துவிட்டோம். 


இதற்காகத்தான் வந்தோம் நிச்சயம் தன்னில் கூட. 


குருநாதர்:- அதாவது மலையிலிருந்து குதித்து விடுவோம். நிச்சயம், இவர் தன் வேலையை பார்த்துக் கொள்வார் என்று, நிச்சயம் மலையிலிருந்து குதித்தனர். 


சுவடி ஓதும் மைந்தன் :-  அந்த ரெண்டு பேரும்… அந்த அப்பா அம்மையும் வந்து, ஈசனையே நினைச்சுட்டு இருந்தாங்க. ஈசனையே நினைச்சுக்கிட்டு இருக்கும் பொழுது, என்ன ஆயிடுச்சு? நான் ஈசனை தான் நான் பார்த்துட்டேன். இவர் ஈசனாதான் இருப்பாருன்னு சொல்லி, கெஸ் பண்ணிட்டாங்க இந்த  அப்பா அம்மா. அவ்வளவுதான். இனிமேல் நம்ம என்ன பண்ணனும்? பார்த்துட்டோம். நம்ம எங்க போகணுமோ, அங்க போயிடலாம்னு சொல்லிட்டு, என்ன பண்ணிட்டாரு? மலையில இருந்து? 

………

சுவடி ஓதும் மைந்தன் :-   அவங்க வந்து குதிச்சிட்டாங்க. 


===========================

# ஈசனார் எண்ணங்கள்..

===========================


குருநாதர்:- எதை என்று புரிய ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட எவ்வாறு என்பதை எல்லாம், இதனை அறிந்து, ஈசனும் பின் மனம் வருந்தினான், எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாக, பின் ஏது என்று புரிய இவர்கள், இவ்வாறு பின் செய்துவிட்டார்கள் என்று, ஈசன் மனம் வருந்தினான். 


சுவடி ஓதும் மைந்தன் :-  எதற்காக மனம் வருந்தினார்? அடடா, இந்த குழந்தையை பாதுகாத்து எப்படி எல்லாம் பார்ப்பான்னு பார்த்தா, இவங்க என்ன பண்ணிட்டாங்க? 


அடியவர்:- மலையிலிருந்து கீழ விழுந்துட்டாங்க. 


சுவடி ஓதும் மைந்தன் :- மலையிலிருந்து கீழ விழுந்துட்டாங்கன்னு சொல்லிட்டு, ஈசன் என்ன பண்ணாரு? மனம் ?..... 


அடியவர்:-  வருந்துறாரு. 


குருநாதர்:- இதனால்தான், நிச்சயம் தன்னில் கூட அறிவுகள் தேவை. நிச்சயம் தன்னில் எவ்வாறு என்பதை எல்லாம், நிச்சயம் தன்னில் கூட. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அதனால்தான் அறிவுகள் நமக்கு தேவை. பலமாக அறிவுகள் நமக்கு தேவை. 


===========================

# தாய் தந்தை இல்லாமல் ஒரு ஆசிரமத்தை அடைந்த குழந்தை.

===========================


குருநாதர்:-  இதைத்தன் அறிய, எவ்வாறு என்பதை எல்லாம், நிச்சயம் தன்னில் கூட. அக்குழந்தை எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட. 


குருநாதர்:-  இவ்வாறாக, பின் ஒரு ஆசிரமத்தில், நிச்சயம் எதை என்று அறிய, நிச்சயம் அறிந்தும். 


குருநாதர்:-  ஆனாலும், எவ்வாறு அழுது, பின் நிச்சயம் தன்னில் கூட. ஆனாலும், பின் ஆசிரமத்திற்கு நோக்கி சென்றது. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப, அந்த குழந்தை என்ன பண்ணுது? அப்பா அம்மா இல்லாததுனால, ஒரு ஆசிரமத்தை அடைந்தது. அந்த குழந்தை  கொஞ்சம் வளர்ந்தே விட்டாங்க. ஓகேங்களா? அப்ப, ஒரு ஆசிரமத்துக்கு வந்து, அந்த குழந்தை போகுது. போகுது. 


குருநாதர்:- இதைத்தன் அறிய, நிச்சயம் பின் அவ் ஆசிரமத்தில் அனைவருக்கும் கல்வி கற்று, பின் நிச்சயம் தன்னில் கூட. ஆனாலும், இவனும் பின் எதை என்று கூற  அறிய, நிச்சயம் குருமாரும் எதை என்று  புரிந்து கொள்ள, நிச்சயம் தன்னில் கூட. யாரோ ஒருவன் பின் வருகின்றான். அவனை அழைத்து வாருங்கள் என்று. 


சுவடி ஓதும் மைந்தன் :- அந்த ஆசிரம குருவும்… யாரோ, ஒரு பையன் வராங்க. அவரை வந்து கூப்பிட்டு வாங்கன்றார். 


===========================

# குழந்தை பேசுவதற்கு வாய் வரவில்லை….

===========================


குருநாதர்:-  எதை ஏது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட. எவ்வாறாக என்பவனெல்லாம், நிச்சயம் அறிந்து கூட. இதைத்தன் அறிய, நிச்சயம் பின் வந்தான். அழகாக அழைத்து வந்தனர். உன் பெயர் என்ன என்றெல்லாம், நிச்சயம். ஆனாலும், எவை என்று கூற, பின் வாய் வரவில்லை பேசுவதற்கு. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப, அழைத்து வந்தாரு. ஆனா, வாய் வரவில்லை. நீ உன் பேர் என்னன்னு கேட்டதுக்கு, என்னது சொல்ல தெரியல அவருக்கு வந்து. யாருக்கு? யாருக்காவது தெரியுமா நந்தி பெருமானுடைய வாழ்க்கை வரலாறு? 


சுவடி ஓதும் மைந்தன் :-  இந்த சின்ன குழந்தைகள் முன் சொல்றாரு. இங்க வந்து தான் சொல்றாரு நந்தி பெருமானுடைய வாழ்க்கை வரலாறு. அப்ப, அந்த குழந்தை வந்து என்னது?  


சுவடி ஓதும் மைந்தன் :-  பேர் தெரியல. ஒன்னும் தெரியல. 


குருநாதர்:-  இதைத்தன் அறிய, தாய் தந்தை யார் என்று, பின் அவ் குருவும் கேட்கின்றான். 


சுவடி ஓதும் மைந்தன் :-   உன் தாய் தந்தை யாருப்பா என்று யாரு?  அந்த ஆசிரமத்துல கேக்குறாங்க. அந்த குழந்தைக்கு தன் பெயர் சொல்ல தெரியாது.  ( வாய் பேசவும் முடியாது )


குருநாதர்:-   ஈசன் எவ்வாறு எதை என்று  புரிய. ஆனாலும், பின் எதை என்று  புரிய பின் அவ் குழந்தை நிச்சயம் தன்னில் கூட பேச முடியாது. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அந்த குழந்தைக்கு பேச முடியாது. 


===========================

# பசியின் கொடுமை 

===========================


குருநாதர்:-  இதைத்தன் அறிய, எவ்வாறு என்பதை எல்லாம், இதனால் நிச்சயம் தன்னில் கூட. அக்குருமாரும் நிச்சயம் தன்னில் கூட,  எவை என்று கூட, நீ இங்கிருந்து சென்றுவிடு என்றெல்லாம். 


சுவடி ஓதும் மைந்தன் :-   அதனால, தாய் தந்தையரும் தெரியல. பேசவும் முடியல. அவர், நீ போயிடுப்பான்னு சொல்லிட்டார். 


குருநாதர்:-  ஆனாலும், பசியாக எதை என்று  கூட, பின் எவை என்று கூட, வயிறை தட்டினான். 


சுவடி ஓதும் மைந்தன் :-  அந்த குழந்தை பசிக்காக, பசிக்காக வயிறு தட்டியதாம். பசி எனக்குன்னு சொல்லிட்டு வந்து.. 


குருநாதர்:-   எதை என்று  புரிய,  நிச்சயம் தன்னில் கூட அறிந்தும். இதை யாரும் புரிந்து கொள்ளவில்லை. 


குருநாதர்:-   இதைத்தன் கூட தள்ளிவிட்டனர். 


சுவடி ஓதும் மைந்தன் :-  இதை கூட யாரும் கண்டுக்கல.  நீ வந்து போயிடு, இங்கிருந்துன்னு சொல்லிட்டு என்ன பண்ணிறாரு? தள்ளிவிட்டார். 


குருநாதர்:-  இதைத்தன் அறிய  இவ்வாறாகவே பல வழிகளில் கூட, எதை என்று புரிய, அங்கும் இங்கும் சென்றான். 


குருநாதர்:- எதை என்று புரிய, நிச்சயம் யாருமே சேர்த்துக்கொள்ளவில்லை. 


===========================

# தாய் மனம் கேட்ட கேள்வி.

===========================


குருநாதர்:- இதைத்தன் அறிய , பின் பார்வதி தேவியும் நியாயமா? இது பின் ஈசனாரே.  நிச்சயம் ஏதோ ஒன்று நிச்சயம் எவை என்று அறிய இவ்  குழந்தை எவ்வாறாக பாடுபடுகின்றது என்றெல்லாம் நிச்சயம் பார்வதி தேவியும். 


குருநாதர்:- தேவியே !!!!! எனக்கும் பின் எதை என்று, எதை என்று புரிய. அனைத்தும் புரிகின்றது. இவையெல்லாம் ஒரு விளையாட்டாக நினைத்துக்கொள். 


குருநாதர்:-  இதைத்தன் அறிய, இன்னும் வளர, வளர எதை என்று  அறிய. ஆனால் பேசும் திறன் வரவில்லை. 


சுவடி ஓதும் மைந்தன் :-  குழந்தை வளர்ந்துட்டு வருது. ஆனா பேச்சு வரல. 


குருநாதர்:- இதை தன் அறிய பல ஆலயங்களுக்கும் எதை என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட எவ்வாறு என்பதை எல்லாம், நிச்சயம் பின் எதை என்று  அறிய. 


சுவடி ஓதும் மைந்தன் :-  பல ஆலயங்களுக்கு போய், போயே எல்லாரும் விரட்டி அடிக்கிறாங்க. 


குருநாதர்:-  நிச்சயம் யாருமே எவை என்று கூற, பின் எதை என்று கூற, அறிய யாரும் உணவு இடவில்லை. ஏனென்றால் பேசும் திறனும் இல்லை. நிச்சயம் எவை என்று அறிய 


சுவடி ஓதும் மைந்தன் :-  யாருமே எந்த இடத்தில் போனாலும் சாப்பாடு கொடுக்கல அவருக்கு. என்ன செஞ்சாங்க?.... துரத்தி விடுறாங்க. 


குருநாதர்:-  எதை என்று  புரிய நிச்சயம் இவ்வாறாகவே பழங்களை பின் உண்டு கொண்டே வாழ்ந்தான். 


குருநாதர்:-   இதைத்தன் அறிய. ஆனாலும் அப்படியே வந்தது. நிச்சயம் தன்னில் கூட இதே போல். அதாவது, நிச்சயம் உணவும் கூட. அதாவது, திருத்தலம், திருத்தலம் ஏறினால் மட்டுமே உணவு கிடைக்கும் என்று தெரிந்துவிட்டது அக்குழந்தைக்கு. 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஒவ்வொரு கோயிலா போனா மட்டும்தான் நம்மளுக்கு உணவு கிடைக்கும். அதனால ஒவ்வொரு கோயிலா, கோயிலா போலாம். நமக்கு உணவு கிடைக்கும்னு சொல்லிட்டு, அந்த மனசுல எண்ணம் வந்துருச்சு.  அதனால என்ன ஆச்சுன்னா, ஒவ்வொரு கோயிலும், ஒவ்வொரு இடத்துக்கும் போய் கொண்டே  இருந்துச்சு அந்த குழந்தை. 


===========================

# பல இடங்களில் அலைந்த குழந்தை…

===========================


குருநாதர்:-  இதனால் காடும் மேடும் எதை என்று கூட தெரியாமல் சென்று கொண்டே இருந்தது. 


குருநாதர்:-   இதைத்தன் அறிய  பல வகையிலும் கூட கல்விச்சாலையை நோக்கி, நோக்கி உணவு கிடைக்குமா என்று. ஆனாலும், நிச்சயம் பின் விரட்டி விட்டார்கள். 


குருநாதர்:- இதைத்தன் அறிய  பல வழிகளில் கூட எவ்வாறு என்பதை கூட ஞானம் எவ்வாறு? நிச்சயம் தன்னில் கூட. இவ்வாறு ஆகவே. ஆனாலும், நிச்சயம் எவ்வாறு என்பதை கூட பல வகையில் கூட சென்று கொண்டே இருந்தான் எதை என்று அறிய. 


சுவடி ஓதும் மைந்தன் :-  பல வகையிலும்,  எல்லா இடமும் போறாரு. 


குருநாதர்:- நிச்சயம் எதை என்று  அறிய. இவ்வாறாக, நிச்சயம் தன்னில் கூட, அதாவது காடும் மேடும் சென்று, அங்கிருந்து நிச்சயம் வேட்டை ஆடுவதை நிச்சயம் பார்த்தான். அதாவது, மனிதன் எவ்வாறு என்பதெல்லாம். ஒரு உயிரை கொன்று, நிச்சயம் உண்ணுவதையும், நிச்சயம் எதை என்று அறிய. 


குருநாதர்:- இதைத்தன் அறிய எவ்வாறு எல்லாம் நீ எவ்வாறு உட்கொள்ளலாம் என்பதை எல்லாம், நிச்சயம் தன்னில் கூட தடுத்து சண்டையிட்டான். 


சுவடி ஓதும் மைந்தன் :-  மனிதனிடத்தில் சண்டை போடுறார்.  நீ எவ்வாறு இப்படி உயிர்க்கொலை செய்யலாம் என்று. அனால்  பேச்சு ஒன்னும் வரல காடு மேடு  ஏறும்போது யாரெல்லாம் வந்து வேட்டையாடுறாங்களோ,  அவங்க கிட்ட போய் சண்டை போடுறாரு இவர்.


===========================

# இறைவன் எப்போது மனிதனுக்கு அறிவை கொடுப்பார் ?

===========================


குருநாதர்:- எதை, எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட எவ்வாறு என்பதை கூட. ஆனாலும், நிச்சயம் இவை, அதாவது போக போக தெரிகின்றது. 


***** நிச்சயம், அதாவது அனைத்து உயிர்களும் காக்க வேண்டும் என்பதை எல்லாம், நிச்சயம் மனதில் நினைத்தான். ***** 


***** அப்பொழுதுதான் அறிவை கொடுக்கின்றான் ஈசன். *****


சுவடி ஓதும் மைந்தன் :-  உயிர் கொலைகள் அதை எல்லாம் பார்த்து, அவருக்கு மனசுல தோணுது. இந்த உலகத்தில் உள்ள எல்லா உயிர்களையும் நம்ம காப்பாத்தணும். அப்படி நினைக்கிறாங்க. அப்பதான் ஈசன்  அவருக்கு அறிவை கொடுக்கிறார். 


குருநாதர்:- நிச்சயம், அதேபோல் மற்ற பின், அதாவது 


***** அனைவரும் காக்கப்பட வேண்டும். ***** 


எதை என்று புரிய, 


குருநாதர்:-  ***** நீங்கள் நினைத்தால், உங்களுக்கு நிச்சயம் அப்பொழுதுதான் அறிவே வரும். *****


அடியவர்:- நந்தி பெருமான் வந்து எல்லா இடமும் போயிட்டு இருக்கும்  நேரம், எல்லாரும் என்ன செய்றாங்க? எங்கயாச்சும் ஒரு உயிரை கொன்று சாப்பிடுறாங்க. இவர் சண்டை போடுறாரு. ஏன்னா, இவர் கோவில் குளம் போய்ட்டு பழங்கள் மட்டும் தான் சாப்பிட்டு வராரு. என்னத்துக்கு ஒரு உயிரை கொன்று சாப்பிடுறீங்கன்னு சொல்லி சண்டை போடுறாரு. அவர் நினைக்கிறாரு. இந்த உலகத்திற்கு எல்லா ஜீவராசியையும் நான் காப்பாத்தணும்னு நினைக்கிறாரு. அந்த எண்ணம் இறைவனுக்கு தெரிஞ்சு இறைவன் என்ன செய்றாரு? அவருக்கு அப்பதான் அறிவு  இறைவன் கொடுக்கிறார். 


===========================

# எப்போது மனிதன், மனிதனாக வாழ ஆரம்பிப்பான் ?

===========================


குருநாதர்:-  நிச்சயம் எவ்வாறு என்பதை எல்லாம், இதனால் எவ்வாறு பின் அதனால யோசிக்கின்றான். நமக்கு உணவு பின், அதாவது நிச்சயம் எவை என்று புரிய. பின், அதாவது எதுவும் வேண்டாம். உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்றே. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப அந்த அறிவு என்ன பண்ணுது? 


அடியவர்:- உயிர்களை காப்பாத்தணும். 


சுவடி ஓதும் மைந்தன் :- இனிமேல் உயிர்கள் மட்டும்தான் நம்ம காப்பாத்தணும் என்று அப்பதான் அவருக்கு மனசுல தோணுது. 


குருநாதர்:-  இதைத்தன் அறிய  


***** ஈசன் பலமாக சிரித்தான். *****


குருநாதர்:-  இப்பொழுதுதான் நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று வளர, அதாவது மனித நிலைமையில் வருகின்றான் என்று. 


சுவடி ஓதும் மைந்தன் :-  எப்போது நம்ம மனிதன் ஆகின்றோம்? 


அடியவர்:- நல்ல எண்ணம் வரும்போது. 


சுவடி ஓதும் மைந்தன் :- நல்ல எண்ணம் வளர்கின்ற பொழுதுதான் மனிதன் ஆகுகின்றாய். அப்ப ஈசன் என்ன சொல்றாரு? பரவாயில்லைடா, இப்பதான் இவன்?  நம்ம வழிக்கு வரான். 


===========================

# நந்தியம் பெருமான் பட்ட வேதனைகள், சிந்தனைகள்….

===========================


குருநாதர்:-  நிச்சயம் இதுபோலே நினைக்க வேண்டும். இவ்வாறாக, நிச்சயம் அனைத்து ஏது என்று புரிய. 


இதனால் நிச்சயம் தன்னில் கூட தாய் தந்தை இல்லை. எதை என்று  புரிய, நிச்சயம் ஏது என்று அறிய. 


இதனால் நிச்சயம் தன்னில் கூட ஆனாலும் பல வழிகளில் கூட இவனை அடித்து விட்டு சென்று விட்டார்கள் மனிதர்கள். 


குருநாதர்:-  இவன் நல்லது செய்கின்றானே. இப்படி உயிர்களை காப்பாற்றுகின்றானே என்று. 


குருநாதர்:- எதை, எதை என்று  புரிய, இப்படியே அடி வாங்கினான். பல இடங்களில் கூட 


குருநாதர்:-  பின் ஆனாலும், ஒரு பின் உயிருக்கு கூட சேதாரம் ஆகக்கூடாது என்றெல்லாம் நிச்சயம் சிந்திக்கின்றான். 


===========================

# இறைவன், நந்தியம் பெருமானுக்கு  கொடுத்த 10% அறிவு, அதன் மூலம்  “இறைவா நீயே அனைத்தும்” என்று உணர்ந்து கொண்டார்.

===========================


குருநாதர்:- இதைத்தன் அறிய மீண்டும் பின் எதை என்று புரிய. ஆனாலும் உணர்கின்றான். எதை என்று  புரிய. நிச்சயம் பின், அதாவது நிச்சயம், அதாவது ஒரு 10% தான் பின், நிச்சயம் அறிவு. அவ் அறிவு வைத்துக்கொண்டு, நிச்சயம் இதற்கெல்லாம் காரணம் இறைவன் தான் என்று உணர்ந்து கொள்கின்றான். 

சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப ஒரு 10%.... நம்ம எப்ப எல்லாரும் நல்லா இருக்கணும் என்று என்னவாமோ, அப்போ ஒரு 10% அறிவு கொடுப்பார். அந்த அறிவை வச்சுக்கொண்டு எல்லாத்துக்கும் காரணம் இறைவன். என்று உணர்ந்து கொள்கின்றார்.


===========================

# எது உலகத்தோருக்கு தெரியாத உண்மையான கல்வி?

===========================


குருநாதர்:- நிச்சயம் பின் இவ்வாறு காப்பாற்றிக் கொண்டே வந்தால், நிச்சயம் பின் அடிபட்டு, அடிபட்டு சாகத்தான் வேண்டும். தியானத்தில் இறங்குவோம். இறைவனைப் பற்றி சிந்திப்போம். இறைவன் ஆற்றலை தருவான். அப்பொழுது, நிச்சயம் தன்னில் கூட அனைத்து உயிர்களையும் காப்பாற்றலாம் என்று. 

குருநாதர்:- எதை என்று புரிய இதுதான் நிச்சயம் எவை என்று புரிய கல்வி. 


சுவடி ஓதும் மைந்தன் :-  இதுதான் கல்வி. மற்றவர்களுக்காக  எப்ப நம்ம சேவை செய்கின்றோமோ, மற்றவர்கள் பற்றி எண்ணுகின்றோமோ, அனைத்தும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றோமோ…. மற்றவருக்காக ஓதுகின்றோமோ, அதுதான் கல்வி என்று சொல்கின்றார். அப்ப நந்தியம் பெருமான் இவர் என்ன பாடத்தை படிக்கிறார்?  


மாணவ, மாணவிகள் :- ( அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தனர் )


சுவடி ஓதும் மைந்தன் :- இறைவனால் தான் அனைத்தும் காப்பாற்ற முடியும். எல்லா ஜீவராசிகளும் இறைவனால் தான் காப்பாற்றப்பட  வேண்டும் என்று எண்ணினார். அப்ப இதுக்கெல்லாம் யாரு காரணம் என்றால், இறைவன். அப்ப இறைவனை பார்க்க வேண்டும் என்று தவங்களை…அதாவது  தியானம் செய்கின்றார். 


===========================

# உலகத்தின் ஒலியை கேட்ட நந்தியம் பெருமான்.

===========================


குருநாதர்:-  நிச்சயம் எதை என்று  புரிய, பின், அதாவது அப்படியே அமர்ந்து கொண்டான். இறைவனை எப்படி அழைப்பது என்பது கூட தெரியாது. 


நிச்சயம், அதாவது அமர்ந்து கொள்வோம்  பார்ப்போம். 


இதேபோல் பல ஆண்டுகள் கழிந்தன. 


நிச்சயம் ஒலி…… பின், எதை என்று அறிய அறிவு, நிச்சயம் தன்னில் கூட உலகத்தின் ஒலி…. 


குருநாதர்:-  ***** ஓம் நமசிவாய ***** 


குருநாதர்:-  நிச்சயம் என்றெல்லாம் வந்தது. 


சுவடி ஓதும் மைந்தன் :-   ஏற்கனவே அகத்திய பெருமான்  சொல்லி இருக்காரு. அந்த ஒலியானது மேல இருக்குது. ஓம் என்று ஒரு சத்தம். இது சயின்ஸ். நந்தியம் பெருமான் கேட்டது காதுல. இதுதான்… எங்க இருந்து சத்தம் வருது  என்று நந்திய பெருமான் அவருக்கு தெரிஞ்சுச்சு. 


===========================

# இறைவனை வரவழைக்கும் உலகத்தின் விஞ்ஞானம் அறிந்த  நந்தியம் பெருமான்.

===========================


குருநாதர்:-  நிச்சயம் இதைத்தன் எவை என்று அறிய. பின், எவை என்று புரிய, 


குருநாதர்:-  ***** இதுதான் நிச்சயம் விஞ்ஞானம். *****


சுவடி ஓதும் மைந்தன் :-  இதுதான் விஞ்ஞானம். விஞ்ஞானம் யாரும் சொல்லிக் கொடுக்கல. என்ன ஆச்சு? அந்த சத்தம் வந்து அமைதியா இருக்குறப்ப, அவருக்கு கேட்டது. இதை புடிச்சுக்கினார் அவர். 


குருநாதர்:-  நிச்சயம் எதை என்று புரிய, அதாவது, நிச்சயம் எங்கிருந்து வருகின்றது என்று, நிச்சயம் மேல்நோக்கி எவை என்று புரிய பார்த்தான். 


பின், அதாவது மேலிருந்து தான் வருகின்றது சத்தம். 


இதனால் நாமும் பின் இப்படியே அழைப்போம். 


குருநாதர்:-  நிச்சயம் எதை என்று கூற  ஒரு நாள் செல்லும். அவனிடத்தில் என்று. 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஓ..இந்த சத்தம்  மேலிருந்து தான் வருது. அப்ப நம்ம என்ன பண்ணுவோம்? அந்த சத்தத்தை புடிச்சே, (இப்படியே அழைத்து , இவ் ஒலியை அனுப்பியவரிடம்  நோக்கி திருப்பி அனுப்புவோம் என்று  நினைக்கின்றார்)


குருநாதர்:-   நிச்சயம் ஒர்  முறை இல்லை. பின், பல லட்சம் எவை என்று கூற நாட்கள் ஆகிவிட்டது. ஓம் நமசிவாய, நமசிவாய என்று. இங்கு பின் இப்படியே சொல்லிக் கொண்டிருந்தால் தான் அங்கு கேட்டது. 


சுவடி ஓதும் மைந்தன் :- ஒரு தடவை  நமச்சிவாய எல்லாம் சொல்றது போதாது. பல லட்சங்கள், பல கோடிகள், நமச்சிவாய, நமச்சிவாய என்று வாயில சொல்லிக்கொண்டே இருக்கும்போது, என்ன ஆச்சு? நந்தியம் பெருமானின் “ஓம் நமசிவாய” மந்திர ஒலி அது  மேல் நோக்கி சென்றுவிட்டது. மேல அங்கிருந்து “ஓம் நமசிவாய” வருது. திருப்பி இங்கிருந்து “ஓம் நமசிவாய” மேல்நோக்கி செல்லுது. 


குருநாதர்:- அதேபோலத்தான், நிச்சயம் தன்னில் கூட எவ்வாறு நீங்கள் பின் கற்க விரும்புவதை ஒரு முறை இல்லை. பலமுறை கற்க வேண்டும். 


சுவடி ஓதும் மைந்தன் :-  அதனால, நீங்க வந்து ஒரு முறை படிச்சா பத்தாது. பலமுறை என்ன பண்ணனும்? 


அடியவர்:- என்ன செய்யணும்? 


மாணவ, மாணவிகள்:- படிக்கணும். 


சுவடி ஓதும் மைந்தன் :- படிக்கணும். ஒரு வகுப்பு ஆசிரியர் சொல்லிக் கொடுக்கிறார்னா, டக்குனு மறந்துடக்கூடாது. படிச்சுனே இருக்கணும். அதை படிச்சுனே இருந்தாதான் என்ன ஆகும்? அதான் மனதுல பதியும். 


சுவடி ஓதும் மைந்தன் :-  அது என்ன ஆகும்? அந்த பிரபஞ்ச சக்தியில இணையும் பொழுது, நீங்கள் எப்பவுமே அந்த பாடம் வந்து அழியாது. நீங்க இப்ப வந்து 10 வயசு, 20 வயசு ஆனாலும் சரி, 30 வயசு ஆனாலும் சரி, 40 வயசு ஆனாலும் சரி, 50 வயசு ஆனாலும் சரி, 60 வயசு ஆனாலும் சரி, என்ன ஆகாது? எப்பவுமே மறக்காது. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அதனால, அந்த பிரபஞ்ச சக்திக்கும் இதுக்கும் ஒரு இணைப்பு ஒரு கனெக்சன், இணைப்பு உண்டு. 


===========================

# என்ன கிடைக்கும் உலகத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்று அனுதினமும் தொடர்ந்து நினைத்தால்.?

===========================

# எப்போது எல்லா அறிவும் மனிதனுக்கு கிடைக்கும்?

===========================


குருநாதர்:- நிச்சயம் பல எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட. இதனால் எவை என்று அறிய, இவ்வாறாக, நிச்சயம் தன்னில் கூட அழகாக. பின், இவ்வாறாக, நிச்சயம் தன்னில் கூட. பின் சொல்லி சொல்லி பல அறிவுகளை பெற்றுக்கொண்டான். 


உலகத்தை எப்படி காப்பாற்றுவது? 


உலகத்தை எதை என்று  புரிய, இதனால், நிச்சயம் தன்னில் கூட. 


முதலில், அதாவது என்ன நினைத்தான்? நல்லது செய்ய நினைத்தான். 


குருநாதர்:- அப்படி, நிச்சயம் தன்னில் கூட நல்லது செய்ய பின் நினைக்கின்ற பொழுது, ஒன்று ஒன்றாக   வந்தது அந்த குழந்தைக்கு 


சுவடி ஓதும் மைந்தன் :-   முதல்ல என்ன நினைச்சாரு? 


அடியவர்:- நல்லது நினைச்சாரு. 


சுவடி ஓதும் மைந்தன் :-   நல்லது நினைச்சாரு. உலகத்துக்கு நல்லது செய்யணும் நினைச்சாரு. அப்ப என்ன ஆச்சு? 


அடியவர்:-  ஒன்னொன்னா வருது. 


சுவடி ஓதும் மைந்தன் :- ஒன்னொன்னா வருது. அப்ப இறைவன் யாருன்னு புரிஞ்சுக்கினாரு. அப்ப என்ன பண்ணிக்கினாரு? அப்ப என்ன ஆனாரு வந்து? 


அடியவர்:-   மேல போகுது. 


சுவடி ஓதும் மைந்தன் :-  மேல போகுது. அப்புறம், ஓகேன்னு சொன்னாரு. எல்லா அறிவுகளும் அவர் பெற்றார். 


சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லா அறிவுகளையும் பெற்றுட்டார். அதேபோலத்தான், அப்பா அம்மா யாருன்னு தெரியல. பேர் என்னன்னு தெரியல. அப்புறம் யாரும் சொல்லிக் கொடுக்கல. தன் அறிவை மட்டும் பயன்படுத்திக் கொண்டு வந்தவர் யாரு? நந்திய பெருமான் மட்டும்தான். அதனால, நம்ம எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும், எவ்வளவு துன்பங்கள் வந்தாலும், யாரும் இல்லையே என்று சொன்னாலும், இறைவன் ஒருத்தர் இருக்கின்றார். புரியுதுங்களா? இறைவன் ஒருவன் இருக்கின்றார். அப்படி நினைச்சோம்னா, எல்லா அறிவுகளும் நம்மகிட்ட வந்துரும். எல்லா அறிவும் நம்மகிட்ட வருகின்ற பொழுது, நம்ம எல்லாத்தையும் சாதிச்சிடலாம். 


===========================

# நந்தியம் பெருமானின் மகத்தான இறை சிந்தனை எண்ணங்கள்….

===========================


குருநாதர்:-  நிச்சயம் எதை, எதை என்று  புரிய, இவ்வாறாக, நிச்சயம் தன்னில் கூட அனைத்தும் பலமாக. நிச்சயம் தன்னில் எவ்வாறு என்பதை கூட. 


இதனால், பின் பல பின் லட்சங்கள் எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட பல வழிகள் கூட. 


பின், அதாவது பல எதை என்று புரிய நிச்சயம் தன்னில் நாட்கள் பின் வாழ்ந்து, நிச்சயம் இறையருள் பெற்று. 


குருநாதர்:-  ***** இதனால், பின் நிச்சயம் இறைவனே தன் முன் பின் நிற்பது எவை என்று புரிய, எப்படி என்றெல்லாம் யோசித்தான்.  ***** 


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப, இறைவன் தான் இந்த உலகத்தை காக்கணும். எல்லாத்தையும் பண்ணனும். அப்ப, இறைவன் நம்ம முன்னாடி கொண்டு வருவோம். 


அடியவர்:- அடுத்தது நினைக்கிறார். 


சுவடி ஓதும் மைந்தன் :- இறைவன் நம்ம முன்னாடி கொண்டு வருவோம் என்று நினைக்கிறார். 


===========================

# நந்தியம் பெருமான் தன் உடம்பை காந்தமாக்கினாரா?

===========================


குருநாதர்:- இதைத்தன் அழகாக, நிச்சயம் அதற்கும் பின் பல வழிகளில் கூட. பின் ஞானத்தை எதை என்று புரிய. 


இதனால், கடைசியில், நிச்சயம் தன்னில் கூட பின் அழகாக, 


உடம்பை காந்தமாக்கி, நிச்சயம் தன்னில் கூட 


பின், இறைவன் ஒரு காந்தகம். 


குருநாதர்:- இறைவனை பின், நிச்சயம் தன்னில் கூட முன்னே நிற்க வைக்கின்றான். 


சுவடி ஓதும் மைந்தன் :-  அதனால, தன் உடம்பை காந்தமாக்கிட்டார். இறைவன் மிகப்பெரிய காந்தகம். அப்ப, என்ன பண்ணிட்டாரு? 


அடியவர்:- நந்தியம் பெருமான் அவர் உடம்பை காந்தகம் ஆக்கிட்டார். 


சுவடி ஓதும் மைந்தன் :- இந்த காந்தகத்தை உருவேற்றி, இறைவன் என்ற காந்தகத்தை 


அடியவர்:- உள்ளே இழுக்கிறார். 


சுவடி ஓதும் மைந்தன் :- அதான், இவர் காந்தகம் ஆகி….. உடம்பு. அப்ப, இறைவன் வந்து…. நந்தியம் பெருமான் முன்னாடி வந்துட்டார் இறைவன்.  


===========================

# எப்படி வழிபட்டால், இறைவன் உங்கள் முன் வருவார்?

===========================


குருநாதர்:-  அதேபோலத்தான் நீங்கள் எவ்வாறு


 ***** உயர்வான எண்ணங்களோடு,   *****


 ***** எதையும் பின் எதிர்பார்க்காமல்,  *****


 ***** இறைவனிடத்தில் செய்யும் பிரார்த்தனைகள்,  *****


குருநாதர்:-   ***** நிச்சயம் இறைவனை பின் நேரே கொண்டு வந்து சேர்க்கும் உம்மிடத்தில்.  *****


சுவடி ஓதும் மைந்தன் :-  அதனால், நீங்களும் நல்லதையே பேசிட்டு, அம்மா அப்பா பேச்சை கேட்டுட்டு, குருவோட பேச்சை கேட்டுட்டு, எல்லாமே நல்லதேன்னு நினைச்சுட்டு, மற்றவர்களுக்காகவே நல்லது செய்யணும். நம்ம மத்தவங்களுக்காகவே படிக்கணும். இந்த உலகத்தை காப்பாத்தணும் என்றெல்லாம் நினைச்சு, நீங்க படிச்சுனே இருந்தீங்கன்னா, இறைவன் என்ன பண்ணுவாரு? உங்கள் முன் வந்தே நிற்பார். 


குருநாதர்:-  வந்து நின்றார். பின், நிச்சயம் தன்னில் கூட எவ்வளவு கஷ்டங்கள், ஏது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட.  பல லட்சம் பின் நாட்கள். 


சுவடி ஓதும் மைந்தன் :- பல லட்சம் நாட்கள். அப்பனா பாருங்க…. தவத்துல இருந்து என்ன பண்ணாரு? ஈசன் வந்து நின்றார். 


===========================

# ஆதி ஈசனார் தரிசனம் பெற்ற நந்தியம் பெருமான்.

===========================


குருநாதர்:-  எதை, எதை என்று  புரிய. நிச்சயம் தன்னில் கூட கடவுள். எதை என்று புரிய, நிச்சயம் எவ்வாறு என்பதை எல்லாம். 


குருநாதர்:-   அதாவது, நிச்சயம் பின், அதாவது நீ அழைத்ததற்கு வந்துவிட்டேன் என்று. 


குருநாதர்:- எதை, எவை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட என்ன வேண்டும் என்று நிச்சயம் எதை என்று கூட இறைவன் கேட்க. நிச்சயம் எவ்வாறு என்பதை எல்லாம். 


குருநாதர்:-  அதனால், நிச்சயம் பின் உனக்கு என்ன வேண்டுமோ, அதை செய். இவ்வுலகத்தை காப்பாற்ற வேண்டும். அதனால், நிச்சயம் நீ என்ன வேண்டுமானாலும் கொடுத்தால், அதை ஏற்றுக் கொள்கின்றேன் என்று. 


சுவடி ஓதும் மைந்தன் :- அப்பதான் அந்த அறிவு என்ன பேசுச்சு பாருங்க. இறைவன் கேட்கிறார், உனக்கு என்ன வரவேண்டும்? என்று ஈசன் கேட்கின்றார். அதற்கு நந்தியம் பெருமான்….. அப்பா !!!!! இந்த உலகத்தை காக்க எல்லாமே உனக்கு தெரியும். நீ எது கொடுத்தாலும், இந்த உலகத்தை காக்க எனக்கு வந்து… எது நல்லதோ, அது தா. 


===========================

# ஆதி ஈசனாரிடம், நந்தியம் பெருமான் கேட்ட வரம்.

===========================


குருநாதர்:-  இவ்வுலகத்தில் ஜீவராசிகள் மடிந்து போய்க்கொண்டே இருக்கின்றது. 


ஜீவராசிகளை கொன்று கொன்று மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கின்றான். 


*****   அதையெல்லாம் யான்  தடுக்க வேண்டும். ***** 


குருநாதர்:-  அதேபோல், என் உருவமும் ஒரு ஜீவராசியை போல் மாற்று. 


சுவடி ஓதும் மைந்தன் :-  முதல்ல என்ன கேட்கிறார்? இந்த ஜீவராசிகள் எல்லாம்…. உலகத்துல மனிதன் எல்லாமே ஜீவராசிகளை கொன்று சாப்பிட்டு இருக்கிறான். அதனால, முதல்ல திருப்பி எனக்கு அது ஒரு சான்ஸ் கொடு. என்னை ஜீவராசிகள் போலே மாற்று என்று. 


===========================

# ஆதி ஈசனார், நந்தியம் பெருமானுக்கு தந்த வரம் என்ன?

===========================

# அவசியம் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்…. 

===========================


குருநாதர்:- நிச்சயம் எதை என்று  உன் நிலை அனைத்தும் புரிகின்றது. 


இதனால், நிச்சயம் எதை என்று புரிய, அறிய எவ்வாறெல்லாம் மாற்றியும் கூட, முதலில் உனக்குத்தான் பின் மரியாதை. 


பின், நிச்சயம் தன்னில் கூட எனக்கு முன்பே உன்னை வைத்து யான் அழகை பார்க்கின்றேன். 


அதனால், மனிதன் வருவான். நிச்சயம் பின் அனைத்தும் என்னை தேடித்தான். 


அதாவது, அவன் மனது எப்படி என்றது கூட. 


பின், நிச்சயம் பின் எதை என்று  நீ அறிந்து, 


பின் அனைத்தும் நீ செப்பினால் தான், 


யான் வரத்தையே தருவேன் என்று நிச்சயம் தன்னில் கூட. 


குருநாதர்:-  புரிகின்றதா? நந்தி பெருமானின் வாழ்க்கை? 


அடியவர்கள் :- ( அரோகரா…பக்தி பரவசமானது அவ் அரங்கமே…….) 


சுவடி ஓதும் மைந்தன் :-   யாருக்காவது தெரியுமா? யாருக்கும் தெரியாது. இந்த சின்ன குழந்தைகள் முன்னாடி அழகா இந்து சொல்லிட்டார். புரியுதுங்களா? 


அடியவர்:- ரொம்ப அழகா அகத்தியர் அப்பா வந்து சொல்லிட்டார். அதாவது, நந்திய பெருமான் கேட்கிறார், இந்த உலகத்துல உயிரினங்கள் எல்லாம் அழிஞ்சிட்டு இருக்குது. இந்த உயிரினங்கள் எல்லாம் காப்பாத்தணும். அதனால, என்னையும் ஒரு உயிரினம் மாதிரி மாத்திடு அப்படின்னு. அப்புறம் மாத்திட்டாரு. மாத்திட்டு என்ன சொல்றாரு? நந்திய பெருமானை, அவருடைய காளை வாகனம் மாதிரி மாத்தி சொல்றாரு. என்னை யாரும் கும்பிடனும், நீதான் முன்னுக்கு நிக்கணும். உன்னைய கும்பிட்டு தான் என்னைய கும்பிடனும்.. என்கிட்ட எதுக்கு கேக்கணும்னா, உன் மூலமாதான் கேக்கணும். உன் மூலமா கேட்டாதான் எனக்கு வரும்னு சொல்லி, அவரை…. 


சுவடி ஓதும் மைந்தன் :-   உனக்கு எல்லாமே, உனக்கு எல்லாமே தெரியும். மனசு எல்லாம் ஆராய்ந்து, நீ என்கிட்ட சொன்னா மட்டும்தான், நான் வரத்தை தருவேன்னு சொல்லிட்டு, அப்ப கல்விக்கு எவ்வளவு முக்கியத்துவம் பாருங்களேன். 


சுவடி ஓதும் மைந்தன் :-   கல்விக்கு அப்படி கல்வி உயர்வாக யார் ஒருத்தர் நல்ல நல்ல எண்ணங்களோடு படிக்கிறாங்களோ, அவங்கள் வந்து இறைவன் என்ன பண்ணுவாரு? பக்கத்துல வச்சுக்குவாரு. நீ என்ன சொல்ற? நான் கேக்குறேன்டா? 


சுவடி ஓதும் மைந்தன் :-   யாருக்கும்…. இந்த உலகத்தில்  யாருக்குமே இந்த விஷயம் தெரியாது. நந்தி பெருமானின் வாழ்க்கை. 



குருநாதர்:-  இன்னும் பல ரகசியங்கள். இப்பொழுது போதும் அது. 


சுவடி ஓதும் மைந்தன் :-  இன்னும் நந்தி பெருமானுடைய பல ரகசியங்கள் இருக்குது. இப்பொழுது இது போதும். 


குருநாதர்:-  நிச்சயம் குழந்தைகளுக்கு உணவு கொடுங்கள் முதலில். 


அடியவர்:- குழந்தைகளுக்கு உணவு கொடுங்க. 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, எல்லாருக்கும் முதல்ல உணவு கொடுக்க சொல்றாரு குழந்தைகளுக்கு. அப்புறம் சொல்றேன்னு சொல்றாருங்க ஐயா.  முதல்ல உணவு கொடுங்க ஐயா, குழந்தைகளுக்கு.


அனைவரும் :- (மதிய உணவு உண்ண ஆயத்தமானார்கள்……)


( அன்புடன் அகத்திய மாமுனிவர் புரட்டாசி மாதம், 01/10/2026  அன்று இலங்கையில் உள்ள கொட்டகலை-பத்தனை தமிழ் வித்தியாலயத்தில்  உரைத்த கூட்டு பிரார்த்தனை வாக்கு தொடரும்…)  


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.  சர்வம் சிவார்ப்பணம்.  


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.