“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Friday, December 15, 2023

சித்தர்கள் ஆட்சி - 254 : அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - “என் ஓர் சுண்டு விரலில் இருக்கின்றதப்பா விஞ்ஞானம்!!!!!!”


 

“இறைவா!!! அனைத்தும் நீ”


உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:- 


(சமீபத்தில் குருநாதர் அகத்தியர் பெருமான் உரைத்த வாக்கு வாக்குரைத்த ஸ்தலம். திரயம்பகேஷ்வர் ஜோதிர்லிங்கம். நாசிக்.)


இது உலகத்தை எவ்வாறு என்பதைக் கூட என்னால் ஒரு நொடியில் மாற்ற முடியும் என்பேன் அப்பனே இவ்வுலகத்தை அப்பனே

அவ்வாறெல்லாம் அப்பனே எதை என்று அறிய அறிய இப்பொழுது விஞ்ஞானம் வளர்ந்தாலும் அப்பனே என் ஓர் சுண்டு விரலில் இருக்கின்றதப்பா விஞ்ஞானம்!!!!!!!!

அப்பனே அதை அசைத்தால் போதுமானது அப்பனே பாவங்களும் தொலைந்து விடும்!!! புண்ணியங்கள் ஏற்பட்டு விடும்!!!

ஆனாலும் அப்பனே

ஈசன்!!!!!!!!

அகத்தியமாமுனிவரே!!!!!!!!!

எதை என்றும் அறிய அறிய

அகத்தியனே பொறுத்திரு!!!


எதை என்றும் அறிய அறிய காரணங்கள் அனைத்திற்கும் காரணங்கள் உண்டு என்பதை எல்லாம் நீ எதை என்று கூட அறிவாளியே இவ்வுலகத்தில் மிகச் சிறந்த அறிவாளி நீயே என்று நிச்சயம் ஈசன் குறிப்பிட்டு எதை என்றும் அறிய அறிய!!!


அதனால்தான் அமைதி பொறுத்துக் கொண்டிருக்கின்றேன் எதை என்றும் அறிய அறிய

மக்கள் செல்லட்டும் செல்லட்டும் என்று

ஆனாலும் அப்பனே திருந்துங்கள் அப்பனே !!!திருந்தி வாழ கற்றுக் கொள்ளுங்கள்!!! அப்பனே

அனைவரிடம் அன்பு காட்டுங்கள் !!!அப்பனே

ஏதும் தேவையில்லை!!! என்பேன் !!அப்பனே சித்தர்களுக்கு அப்பனே


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!