உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:-
குருநாதர்:- அப்பனே பின் தீபம் ஏன் ஏற்றுகின்றீர்கள்? கூறுங்கள்.
அடியவர்:- (மறுபடி கேள்வி பதில் ஆரம்பித்ததால் அடியவர்க்கள் மகிழச்சி, சிரிப்பு) ஜோதி வழியாக இறைவனை தரிசனம் செய்ய.
குருநாதர்:- அப்பனே அப்படி இல்லையப்பா. அப்பனே இவ்தீபம் இப்படி எரிகின்றதே (பிரகாசமாக அனைவருக்கும் ஒளி கொடுத்து) அதே போலத்தான் தன் வாழக்கையும் எரிய வேண்டும் என்பதற்க்கே தீபங்கள் என்பேன் அப்பனே. ஆனாலும் அப்படியே எரிந்திருக்க அப்பனே அதற்க்கு என்ன தேவை என்று பின் அனைத்தும் தெரியும் என்பேன். அது போலத்தான் நீங்கள் அழகாக பின் ஒளிர்வதற்க்கு அப்பனே புண்ணியங்கள் தேவைப்படுகின்றது என்பேன் அப்பனே. அப்படி புண்ணியங்கள் இல்லை என்றால் அப்பனே தானாக தீபமும் அனைந்துவிடும். நீங்களும் அனைந்து விடுவீர்கள். அவ்வளவுதான் வாழ்க்கை அப்பனே.
பச்சரிசி அதனை மாவாக இட்டு அதன் மேலே தான் தீபம் ஏற்ற வேண்டும்.இவ்வாறு ஏற்றினால் தான் சில சில உயிரினங்கள் அதை உண்டு வர சில கர்மாக்கள் தொலையும்.அவைதன் மகிழ்ச்சியும் இருக்குதப்பா அதனுள்ளே.அவை மகிழ்ச்சியுற இவந்தனும்(தீபமேற்றும் பக்தன்) மகிழ்ச்சியாக இருப்பான்.
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!
No comments:
Post a Comment