அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - அடியவர் ஒருவர் இல்லத்தில் உரைத்த வாக்கு - 04.09.2023 ( பகுதி 7)
இந்த வாக்கின் முந்தைய பகுதி கீழே உள்ள பதிவில் படிக்கவும்
https://siththarkalatchi.blogspot.com/2023/10/204-4-9-2023-6.html?m=0
(பகுதி 7 - வாக்கு ஆரம்பம் )
ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.
அடியவர்:- நன்றி குருவே.
குருநாதர்:- அப்பனே, எதற்காக நன்றி சொன்னாய்?
அடியவர்:- (எங்களுக்கு) அறிவு இல்லை.
குருநாதர்:- அப்பனே
அடியவர்:- எனக்கு என்னங்க தெரியும். (குருநாதா) உங்களுக்குத்தான் தெரியும்.
குருநாதர்:- அப்பனே, யான் சொல்லியதை நீ செய்யவில்லை அப்பா. அதனால்தான் பல அடிகளை வைத்து அப்பனே ஆனாலும் சில சில வகைகளிலும் கூட பக்குவங்கள் ஏற்படுத்தி ஒரு மனிதனாக வாழ வைக்கப்போகின்றேன். நீ கேட்கலாம் (இதுவரை) இப்போது நான் மனிதனாக வாழவில்லையா என்று. நிச்சயம் வாழவில்லையப்பா. இனிமேல்தான் நீ மனிதனாக வாழப்போகின்றாய் அப்பனே. போதுமா?
( குருநாதரின் கருனை மழை இங்கு இந்த
அடியவர்:- நன்றிங்க ஐயா. (அடியவர் குருநாதரின் அன்பு
குருநாதர்:- அப்பனே அதனால் உன் பக்கத்தில் இருக்கின்றானே இவன்தனும் சில சில தவறுகள், அதாவது சில
(அனைத்து அகத்திய பிரம்ம ரிஷி அடியவர்களுக்கும் ஓர் வேண்டுகோள் - ஒரு மிக முக்கிய நிகழ்வை இந்த அடியவர் மூலம்
எனக்கு ஏன் நாடி வாக்கு பல முயற்சி செய்தும் கிடைக்கவில்லை? என நல் உள்ளங்கள் பல ஏங்கும் நேரங்கள் பல உண்டு.
அதே நேரத்தில் அந்த நல் உள்ளங்கள் கர்மத்தினால் திசை திருப்பப்பட்டு வழி தவறிய ஆடு போல் ஜோதிடம்/இதர சுவடிகளிடம் சென்று பணம் கொடுத்து பரிகாரம் என்ற கர்ம
ஆனால் இதன் பின்னால் உள்ள சூட்சுமத்தை உணர இந்த வாக்கு ஒரு உதாரணம்.
நாடி வரும் வரை பொறுமை காத்தலே சிறந்த சீடனுக்கு/பக்தனுக்கு அழகு. வேறு கர்மம் பிடித்த வழிகளில் சென்று
கர்மா இருக்கும் நேரங்களில் அகத்திய பிரம்ம ரிஷி நாடி வாசிக்கும் அகத்தியர் மைந்தன், அருளாளர் திரு.ஜானகிராமன்
அடியவர்:- (உடைந்து அழுதுகொண்டே இருக்கின்றார்கள்…)
குருநாதர்:- இதுபோலத்தான் அப்பனே ஒவ்வொருவருக்கும் ஒரு கர்மா வினை. அதனுள்ளே எந்தனுக்கு அதைத்தா, இதைத்தா என்றெல்லாம் பின் கேட்டால் யான் எப்படியப்பா தருவது?தெரிந்துகொள்ளுங்கள் அப்பனே.
இவ் அகத்தியன் அப்பனே எப்பொழுது யாருக்கு (நாடி வாக்குகள்) தர வேண்டும் என்று எண்ணி அப்பனே நிச்சயம் கொடுப்பான் அப்பா. நிச்சயம் கைவிடமாட்டேன் அப்பா. ஆனால்
அப்பனே (வேறு எங்கு) சென்றாலும் உன் கர்மா விடாதப்பா. அப்பனே சொல்லி விட்டேன். இப்பொழுது பின் இருவரை (ஒற்றைக்காலில்)
அதனால்தான் முதலில் கர்மத்தை (நீக்க வேண்டும்). அதனால் சில துன்பங்கள் அதனால்தான்
அப்பனே யார் யார்க்கு
பல தலங்களைக்கூட யானே வடிவமைத்தேன் என்பேன் அப்பனே. அங்கெல்லாம் யான் நிச்சயம் வரும் காலங்களில் அப்பனே யான் எதை எங்கு எவை என்று அனைத்தும் எடுத்துரைக்கப்போகின்றேன். உலகம் அப்பனே பின் பக்திமயமாகட்டும். அதனால்தான் யாங்கள் வந்தோமப்பா.
அப்பனே இப்படியே சென்று கொண்டு இருந்தால் பக்தி என்ற
யான் பக்தன், எந்தனுக்கு அனைத்தும் தெரியும் பின் வாயில் வந்தவை எல்லாம் சொல்வது அப்பனே. பின் வாயில் வருவதை எல்லாம் சொல்லி பின் பணங்கள் பறிப்பது. அப்பனே இவை இருந்தால் அப்பனே இக்கலியுகத்தில் இப்படித்தானப்பா நடக்கும். அதனால்தான் நாங்கள் சித்தர்கள் விட வில்லை அப்பா. பக்தி எப்படி காண்பிப்பது எப்படி என்று வரும் காலங்களில் யாங்கள் அங்கங்கு தெரிந்து தெரிந்து காண்பிப்போம் என்பேன்.
அதனால் அப்பனே முதலில் அகத்தியனுக்கு எங்கு திருத்தலம் கட்ட வேண்டும் அப்பனே? சொல்லுங்கள்.
அடியவர்:- மனதில், உள்ளத்தில்
குருநாதர்:- அப்பனே,
அப்பனே என்னை வைத்துக்கொண்டே அப்பனே யான் சொல்கின்றேன் அப்பனே. அதாவது பின் என்னையும் லோபாமுத்ராவையும் அமைத்து விட்டார்கள் அழகாக. ஆனால் பக்கத்திலேயே அமர்ந்து விட்டான் (ஆலயம் கட்டியவர்). பின் ஆனால் பொய்களப்பா பொய்கள். வாய்கள் வருவதெல்லாம் சொல்லிக்கொண்டே இருக்கின்றான் ஒருவன் அப்பனே. என்னதான் அவன்தனக்கு யான் செய்வது அப்பனே. ஆனால் கடைசியில் பார்த்தால் அகத்தியனுக்குத்தான் தொண்டு செய்தேன். ஒன்றுமே செய்யவில்லை என்று சொன்னால் எப்படியப்பா (யான்) பொறுப்பு? இதை நீ சொல்ல வேண்டும் அப்பனே. நீ அலைந்தவன். அப்பனே அதனால் நீ தான் சொல்ல வேண்டும்.
அப்பனே அதனால் நிச்சயம் எந்தனுக்குக்கூட சேவைகள் செய்யாதீர்கள் சொல்லிவிட்டேன்.
(இதுவரை ஒற்றைக்காலில் கைகளை மேலே தூக்கி நின்ற அடியவர்களை) அப்பனே, நின்று கொண்டிருக்கின்றீர்களே நீங்கள். சேவை என்பது என்ன?
அடியவர்:- தன்னலமில்லாமல் பிறருக்கு உதவி என்று செய்யாமல் நமக்கு நாமே சேவை செய்வது.
குருநாதர்:- அப்பனே எதை என்று கூற சேவை என்பது உன் பக்கத்தில் இருப்பவன் சொல்லட்டும்.
அடியவர்:-
குருநாதர்:- அப்பனே, எதற்காகத் தொண்டு செய்கின்றாய்?
அடியவர்:- தேவையான உணவு தேவைப்படுபவர்களுக்கு உணவு கொடுக்கிறது.
குருநாதர்:- அப்பனே, பிறருக்கும் சேவை செய்கின்றாய். உந்தனுக்கும் சேவை செய்கின்றாய். உந்தனுக்கும் சேவை செய்து கொண்டு இருக்கின்றாய். அவ்வளவுதான். பிறருக்கு யார் ஒருவன் சேவை செய்கின்றானோ அவன் தன் தனக்கே சேவை செய்கின்றான். தன் கர்மத்தை போக்கிக்கொள்கின்றான் என்பதே அர்த்தம் இதன் பொருள்.
அப்பனே கர்மத்தை நீக்க வேண்டும் என்றால் அப்பனே
அனுதினமும் ஏதாவது உயிருக்காவது என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை என்றால் கூட ஒருவனுக்காவது இவ்திருத்தலத்திறக்குச்செல் நலமாகும்.
எதாவது பின் நல்லதை பின் சொல்லிக்கொண்டிருந்தாலே (நல் சேவை/புண்ணியங்கள்)
ஆனாலும் அப்பனே பின் உண்மைகள் தெரியாமல் , பொய்கள் பரப்பிக்கொண்டிருந்தாலே அதுவும் கர்மாதானப்பா. இன்றைய நிலையில் அதுபோலத்தான் நடந்து கொண்டிருக்கின்றது என்பேன் அப்பனே.
அதனால் அப்பனே நீங்கள் ஒன்றும் இறைவன்கள் இல்லை. உங்களால் ஒன்றும் செய்ய முடியாதப்பா.
இதுபோலத்தான் மனிதன் செய்து கொண்டு இருக்கின்றான் அப்பனே. பின் அதை , இவை, யான் இறைவனுக்கே சேவை செய்பவன். இறைவனுக்கு அப்பரிகாரங்கள் செய்தால் நல்லவை நடக்கும். இவை எல்லாம் ஒரு வெற்று வேட்டுகளப்பா. பொய்களப்பா.
இதனையும் கூட வரும் காலங்களில் நிரூபிக்கப்போகின்றேன்.
அனைத்தும் தான் தன் வாழ்வதற்கே செய்து கொண்டிருக்கின்றான் மனிதன் அவ்வளவுதானப்பா.
ஆனால் கர்மா சேர்கின்றது என்பது தெரியாமல் போய் விட்டதப்பா.
பாவமப்பா மனிதனப்பா.
அடியவர்:- ( மொனம் )
குருநாதர்:- அப்பனே அதனால் உண்மை நிலை உணருங்கள். ஒருவொருவரும் எதை என்றும் அறிய அறிய யாருக்குமே உண்மைநிலை தெரியவில்லை அப்பா. அதனால்தான் உண்மை நிலை தெரிவித்திருக்கின்றேன் இன்று.
அடியவர்:- ( மொனம் )
குருநாதர்:- அதனால் உண்மையை உணருங்கள் அப்பனே. உண்மையாக வாழ எற்றுக்கொள்ளுங்கள் அப்பனே. இறைவன் நிச்சயம் நிச்சயம் உன்பால் நிச்சயம் பின் வந்து உதவிடுவான் இதனால் அப்பனே நல்முறைகளாக இன்னும் இன்னும் எதிர்பார்த்து எவை என்றும் புரியாமல் அப்பனே எதற்க்காக வந்தாய் இங்கு நீ?
அடியவர்:- குருநாதரை பார்த்து தரிசனம் செய்ய.
குருநாதர்:- அப்பனே, நீ சொல்லிவிட்டாய் உன்பக்கத்தில் உள்ளவனை சொல்லச்சொல்.
அடியவர்:- குருநாதர் ஆசிர்வாதம் வாங்க
குருநாதர்:- அப்பனே, என்னுடைய எப்பொழுதுமே இருக்குமப்பா உந்தனுக்கு.
அடியவர்:- கடன் ( இந்த அடியவர் கேட்ட விதம் பொதுவாக அனைவர் கேட்கும் கேள்வியாக பொருந்தும். உடனே கருனைக்கடல் அகத்திய பிரம்ம ரிஷி அளித்த அற்ப்புத பதில் கடனில் உள்ள உலகோர் அனைவருக்கும் பொருந்தும். )
குருநாதர்:- அப்பனே , தெரியாமலே கேட்க்கின்றேன். அனைவரையும் பார்த்தே கேட்கின்றேன். அதாவது என்னை கேட்டுத்தான் வாங்கினாயப்பா நீ? ( இங்கு நீ என்பது கடனில் உள்ள அனைவரையும் குறிக்கும் என்று உணர்க)
அடியவர்:- ( மொனம் )
குருநாதர்:- அப்பனே உன் சந்தோசத்திற்க்காகவே வாங்கி மீண்டும் சோம்பேறித்தனமாக கட்ட முடியாமல் மீண்டும் என்னிடத்தில் கேட்டால், யான் என்ன செய்ய வேண்டும் அப்பனே?
அடியவர்:-நீங்கதான் வழி சொல்லனும்.
குருநாதர்:- இதுதானப்பா, கர்மா செய்யும்போது யாருமே கேட்பதில்லை என்பேன் அப்பனே மனிதன். அப்பனே ஒரு முறையாவது யான் இப்படி செய்கின்றேன் என்று கேட்டானா? இல்லையப்பா. அதனால்தான், கர்மா சேகரித்துக்கொண்டு அப்பனே அவை பலங்கள் ஆகும் பொழுதுதான் இறைவனையே நோக்கிப்படை எடுத்துக்கொண்டிருக்கின்றான் மனிதன். அதனால் முன்னே உணரவேண்டும். இவை பின் செய்யலாமா? வேண்டாமா? என்று அப்பனே ஏன் எதற்க்காக என்றெல்லாம் அப்பனே. அதனால் அப்பனே இதைக்கூட யான் பார்த்துக்கொள்கின்றேன். பொறுத்திருக.
(மதுரையில் அகத்திய பிரம்ம ரிஷி அடியவர் இல்லத்தில் உரைத்த இந்த வாக்கு பின் வரும் பதிவில் தொடரும் ………)
https://siththarkalatchi.blogspot.com/2023/10/208-4-9-2023-8.html?m=0
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!
No comments:
Post a Comment