உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:-
“மனதாலும் எதையும் நினைக்காமல் ( இறைவனை ) வணங்கினால் அப்பனே முதன்மை ஏறப்படும் என்பேன்.”
எளிய புரிதல் விளக்கம்:-
நம் மனதில் ஏதாவது ஒன்று வேண்டும் என்று வேண்டினால், அது இந்த பரந்த பிரபஞ்சத்தில் ஒர் மிகச்சிறிய அணுவை வேண்டுவது போல ஆகிவிடும். இறைவன் என்ற மாபெரும் சக்தியை உணராத அறியாமை மடமை போல ஆகிவிடும். அதுவே மனிதர்கள் புரியும் மாபெரும் தவறு.
அதே சமயத்தில் நீங்கள் ஏதும் உங்கள் மனதில் நினைக்கவில்லை எனில், உங்கள் மனம் இந்த ஒட்டு மொத்த பிரபஞ்சத்தையே தன்னுள் அடக்க ஆரம்பித்துவிடும். அதாவது பேராசையின் அதி உச்சம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதாவது இறைவனையே உங்கள் மனதில் வரவழைக்கும் அதி சூட்சுமம் - எதையும் வேண்டாமல் இறைவனை வணங்குவது. எனவே குருநாதரின் இந்த அதி சூட்சும வாக்கை நன்கு உள் வாங்கி எதையும் வேண்டாமல் இறைவனை, குருநாதரை, சித்தர்களை வணங்குங்கள். அதுவே உங்களுக்கு அது உச்ச பலனை முதன்மையை அளிக்கும்.
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!
No comments:
Post a Comment