மதுரை அகத்திய மஹரிஷி ஆலயம் முகவரி

திருவாசகம் - உரை

அகத்திய பிரம்ம ரிஷி அருளிய , முதல் தர புண்ணியம் உங்களுக்கு பெற்றுத்தர உதவும் நாடி வாக்குகள்.

Thursday, October 19, 2023

சித்தர்கள் ஆட்சி - 202 : அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 4-9-2023 உரைத்த வாக்கு - பகுதி 5


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - அடியவர் ஒருவர் இல்லத்தில் உரைத்த வாக்கு - 04.09.2023 ( பகுதி 5)


இந்த வாக்கின் முந்தைய பகுதி கீழே உள்ள பதிவில் படிக்கவும்


https://siththarkalatchi.blogspot.com/2023/10/201-4-9-2023-4.html?m=0 


(பகுதி 5- வாக்கு ஆரம்பம் ) 


ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 


அப்பனே இவை எல்லாம் யான் எடுத்துரைப்பேன் அப்பனே யான் தெளிவாகவே. 

யான் கண்டுபிடிப்பதை யாரும் தடுக்க வழிகள் இல்லை. இறைவனும் அறிவியலையும் கூட ஒன்றாக இனைத்து அனைத்தும் ஒன்றே என்று உங்களுக்குத் தெரிவிக்கப்போகின்றேன். அதற்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகும் அப்பா. 

ஏனென்றால் உடனடியாக சொல்லிவிட்டாலும் பைத்தியக்காரனாகி விடுவீர்கள். ஏனென்றால் பைத்தியக்காரனுக்கு எவ்வளவு சொன்னாலும் பைத்தியக்காரனப்பா. அறிவுள்ளவனுக்கு எவ்வளவு சொன்னாலும் அவனும் ஒரு பைத்தியக்காரனப்பா. பொய்களுக்கு (பொய் சொல்லுபவனுக்கு) எவ்வளவு சொன்னாலும் அவனும் ஒரு பைத்தியக்காரனப்பா. 

அதனால் நீங்கள் கேட்கலாம் இவ்வுலகத்தில் சிறிதாவது உண்மைகள் இருக்கின்றதா என்று. சத்தியமாக இல்லை அப்பா. 

அப்பனே நீங்கள் மீண்டும் கேட்கலாம் உண்மையான அகத்தியர் பக்தர்கள் இருக்கின்றார்களா என்று. அப்பனே நிச்சயம் யான் என்ன சொல்வது. சொன்னாலும் யான் என்று நீங்கள் சொல்லிவிடுவீர்கள் என்பேன் அப்பனே. இப்பொழுது சொல்ல மறைமுகமாக பின் சென்று இப்படிச் சொல்லிவிட்டானே அகத்தியன் என்று நீங்களும் ஏங்கிக்கொண்டு இருப்பீர்கள் அப்பனே.

அதனால் உண்மையைத் தெளிவடையுங்கள் அப்பனே. 

எதற்கும் ஆசைப்படாதீர்கள் அப்பனே. 

சென்று கொண்டே இருங்கள் அப்பனே. 

கிடைக்கும் அப்பனே.

அதனால் எதையுமே எதிர்பார்க்காமல் வருவது இரண்டுதான் அப்பனே. ஒன்று கர்மா. மற்றொன்று அப்பனே நிறுத்தி வைக்கின்றேன் யாராவது ஒருவன் சொல்லட்டும். 

(இதன்பின் மதுரையில் நாடி வாக்கு கேட்க வந்த அடியவர்களிடம் குருநாதர் கேள்வி பதில் முறையில் மகத்தான மகிமை புகழ் நல் வாக்கு அளிக்க ஆரம்பித்தார்கள். இங்கு அடியவர் என்பது பல அடியவர்களைக் குறிக்கும். அவர்கள் அருமையான கேட்ட பல கேள்விகள், அதற்கு குருநாதர் அளித்த அற்புத வழிகாட்டும் பதில்/கேள்விகள் உங்களுக்குத் தனிப்பட்ட நல்ல புரிதல்களை உண்டாக்கும். அனைவரும் வாருங்கள். இந்த மகத்தான கேள்வி பதில் உரையாடல் உள் நுழைந்து ஞான அமுத ரசத்தை நம் அனைவரும் சுவைத்து ஞானத் தெளிவு பெறுவோம்) 

அடியவர்:- புண்ணியம்

குருநாதர்:- அப்பனே, கர்மா என்பது என்ன?

அடியவர்:- நாம் செய்யக்கூடிய பாவச் செயல்.

குருநாதர்:- அப்பனே, பாவத்தின் சம்பளம் என்ன? 

அடியவர்:- மரணம். 

குருநாதர்:- அப்பனே, மரணம் வந்து விட்டால் அப்பொழுது என்ன லாபம் என்பேன் அப்பனே. அப்பொழுது எவன் ஒருவன் கஷ்டத்தை அனுபவிப்பது? 

அடியவர்:- அவனுடைய வாரிசுகள். 

குருநாதர்:- அப்பனே, அப்படி இல்லையப்பா. அவனவன் கஷ்டத்தை அவனவன் தான் அனுபவிக்க வேண்டும் என்று யான் சொல்கின்றேன் தீர்மானமாக. 

அடியவர்:- மறுபிறவி எடுத்து (கழிக்க /அனுபவிக்க வேண்டும் )

குருநாதர்:- அப்பனே ஏன் மறு பிறவி எடுக்கின்றாய்?

அடியவர்:- கர்மா மிச்சம் இருக்கு. 

குருநாதர்:- அப்பனே, இப்பொழுதான் யான் சொல்லிக்கொண்டு இருக்கின்றேன் அப்பனே அவ்கர்மாவைத்தான் கழிக்க வந்துள்ளீர்களே மீண்டும் ஏன் நீங்கள் பிறவி எடுக்கின்றீர்கள்? 

அடியவர்:- கர்மாவை கழிக்காமல் பாவம் சேர்த்ததால்

குருநாதர்:- அப்பனே, சொல்லிவிடுகின்றேன். இங்கு இருப்பவர்கள் அனைவருமே பாவத்தைச் சேர்த்து வைத்திருக்கின்றீர்கள் என்பேன் அப்பனே. 

அடியவர்:- நீங்கதான் காப்பாற்றவேண்டும்

குருநாதர்:- அப்பனே, இறைவன் காப்பாற்றி விடுவானா என்ன? சொல். 

அடியவர்:- திருந்துவதற்கு வாய்ப்பு

குருநாதர்:- அப்பனே அதனால்தான் அப்பனே பொதுப்படையாகவே சில விசயங்களைச் சொல்லிச்சொல்லி அப்பனே அவ் பாவத்தை அப்பனே ஒன்றைச்சொல்கின்றேன் அப்பனே. 

மனிதனாகப் பிறந்துவிட்டாலே அவன் பாவத்தைச் சம்பாதித்துக்கொள்கின்றான். எப்படியப்பா கஷ்டங்கள் வராது? இதில்கூட இறைவன் கூட அப்பனே கஷ்டத்தை வேற கொடுத்து விடுகின்றான் அப்பனே. 

அதை எப்படித் தடுக்க வேண்டும்? அதனால் அனுதினமும் உன்னால் முடிந்தவரை நல் எண்ணத்தோடு அப்பனே பிறருக்கு ஏதாவது ஒரு நல்லதைச் செய்து கொண்டே இரு அப்பனே. 

அப்படி நல்லதைச் செய்ய முடியவில்லை என்றால் இப்படி இரு. இறைவனை வணங்கு. என்றெல்லாம் அப்பனே பின் சொல்லிக்கொண்டே இரு அப்பனே. எவை என்று கூற (உன் வாழ்க்கை மற்றும் உலக நிலைகள்) மாறுதல்கள் அடையும் என்பேன். 

அப்பனே பின் இவ்வுலகத்திற்கு  அப்பனே இரண்டு தேவை வாழ்வதற்கு என்ன?

அடியவர்:- அருளும், பொருளும். 

குருநாதர்:- அப்பனே இவை இரண்டும் இருந்தால் எவை என்று அறிய அறிய இப்பொழுது யான் தந்து விடுகின்றேன் அருளும், பொருளும் கூட. அதை வைத்துக்கொண்டு உன்னால் என்ன செய்ய முடியும்? 

அடியவர்:-  அது வள்ளுவர் சொன்னது. 

குருநாதர்:- அப்பனே அருளும், பொருளும் கொடுத்துவிடுகின்றேன். 

( இவை இரண்டு மட்டும் போதுமா?  என்பதைப் போலக் குருநாதர் வேறு சில  கேள்வி கேட்டார்கள். அதறகு அடியவர் உரைத்த சில பதில்கள் அதற்கு குருநாதர் உரைத்த பதில் கேள்விகள் முதலிய தனி நபர் சார்பான பதிவுகள் இங்கு நீக்கப்பட்டுள்ளது). 

அடியவர்:- இல்ல. அறிவு கிடையாதுங்க அய்யா (குருநாதா) அந்த அளவுக்கு. 

குருநாதர்:- அப்பனே அறிவு இல்லாமலா இவை எல்லாம் செய்து கொண்டிருந்தாய் இப்பொழுது? 

அடியவர்:- குருநாதரிடம் பேசி ஜெயிக்க முடியாது அய்யா. 

குருநாதர்:- அப்பனே, ஜெயிக்கலாம் என்பேன் யான். 

அடியவர்:- ( பல அடியவர்களின் சிரிப்பு அலை இங்கு) அதுக்கும் நீங்கதான் வழி நடத்தனும். 

குருநாதர்:- அப்பனே, நடத்திக்கொண்டே தான் இருக்கின்றேன்.  

அடியவர்:- நன்றி!

குருநாதர்:- அப்பனே கடைசியில் பாரத்தால் அப்பனே நன்றி என்று சொல்லி விடுவது அப்பனே. 

அடியவர்:- (பல அடியவர்களின் சிரிப்பு அலை இங்கு)

குருநாதர்:- அப்பனே எதற்கு நன்றி சொல்கின்றீர்கள் என்று யாருக்காவது தெரியுமா அப்பனே? 

அடியவர்:- இறைவனுக்கு அருகில் வைத்துச் சொல்வது 

குருநாதர்:- அப்பனே, உன்னிடத்தில் அறிவுகள் இல்லையப்பா. அதை மற்றொருவன் செய்கின்றான். அதனால்தான் நன்றி. 

அடியவர்:- (பல அடியவர்களின் சிரிப்பு )

குருநாதர்:- அப்பனே, அப்பொழுது நீங்கள் அறிவை வளர்த்துக் கொண்டிருக்கின்றீர்களா? அப்பனே உங்களிடையே ஓர் சக்திகள். அதாவது பிறக்கும் பொழுது நெற்றியில் ஓர் சக்தி குவித்து விடுகின்றான் இறைவன். அதை யாருமே சரியாக பயன்படுத்துவதில்லை அப்பா. 

அதைப் முதலில் பயன்படுத்திக்கொண்டாலே உன் வாழ்க்கை உன்னைப்பற்றித் தெரியும் அனைத்தும் கூட. 

ஆனாலும் அப்பனே அதை பற்றித்தான் வரும் காலங்களில் எடுத்துரைத்து, அவ்சக்தியை அப்பனே எப்படி என்று வரும் காலங்களில் உங்களுக்கும் கூட சிறிது சிறிதாக உங்களுக்கும் எப்படிச் செயல்பட என்று கற்றுக்கொடுத்துக்கொண்டே இருப்பேன். ஆனால் தானாகவே  அப்பனே முக்கால் பங்கு ஒருவனுக்கு வந்துவிட்டது இங்கு ஆனால் இப்பொழுது  அதை யான் தெரிவிக்க மாட்டேன். 

அப்பனே கேளுங்கள் ஏதாவது ஒரு கேள்வியை. 

அடியவர்:- இல்ல. இத்தனை அறிவுரைகளும் சிறு வயதிலே கிடைக்காமல், ஆசைகள் நிறைந்து, குடும்பம் அமைந்து, மனைவி வந்து, குழந்தைகள் வந்து இத்தனை கடமைகளையும் ஏத்தினதுக்கு அப்புறம் சொல்லுறீங்களே அப்புறம் எப்படி மனுசன் தப்பு பன்னுனான்னு சொல்றீங்க? 

குருநாதர்:- அப்பனே ஒத்துக்கொள்கின்றேன் அப்பனே கேட்பதை. ஆனாலும் அகத்தியன் யான் உங்களை நோக்கி ஏன் வர வேண்டும்?. பின் நீங்களும் என்னை ஏன் அகத்தியன் என்று அழைக்க வேண்டும். சொல். 

அடியவர்:- கடைசி அடைக்கலம் நீங்கதானே.

குருநாதர்:- அப்பனே, இதை முன்னே தெரிவிக்கலாமே. 

அதனால் நீங்கள் என்னைத் தேடி வரவில்லை அப்பனே. யான்தான் உங்களைத் தேடி வந்திருக்கின்றேன் அப்பனே. 

நீங்கள் ஓர் பிறவியில் புண்ணியம் செய்தவர்கள் என்பேன் அப்பனே. அதனால்தான் யான் தேடிவந்து உங்களுக்கு அனைவருக்குமே கஷ்டங்கள் இருக்கின்றது. அதை எப்படி போக்குவது என்பதைக்கூட ஆனால் அதைத்தெரியாமல் நீங்கள் அலைந்து கொண்டு இருக்கின்றீர்களே!!!

வாழ்க்கையே வீணாக்கிக்கொண்டு இருக்கின்றீர்களே!!! அதற்காகத்தான் அப்பா யான் வந்தேன் அப்பனே. 

அதனால் புண்ணியங்கள் செய்தால் எங்களை நோக்கி நீங்கள் வரத்தேவையே இல்லை அப்பா. யான் உங்களை நோக்கி வருவேன் அப்பனே. 

உங்களுக்கு என்ன தேவையோ யான் பக்கத்திலே இருந்து ஓர் தாய் தந்தையர்போல் என்ன செய்ய வேண்டுமோ அதை யான் செய்வேன் அப்பனே. 

அதனால் தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே. எதையும் கேட்டு வாங்காதீர்கள் என்பேன் அப்பனே. 

கொடுப்பதைப் பெற்றுக்கொள்ளுங்கள். யார் ஒருவன் அதைப்பெற்றுக்கொள்கின்றானோ அவன்தான் மனிதன். 

ஆனால் மனிதனாக யாருமே வாழவில்லையே அப்பனே. எந்தனுக்கு அதை வேண்டும், இதை வேண்டும். 

அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே இறைவன் அனைத்தும் கொடுத்து விடுவானா என்ன? அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே. 

அதனால் ஒவ்வொன்றாக அப்பனே பைத்தியம் என்றால் எப்படி அப்பனே? பைத்தியக்காரன் என்று ஒருவனை ஏன் அழைக்கின்றார்கள்? (அடியவர்களிடம் அமைதி) 

நாடி அருளாளர் :- ஐயா யாராவது கூறலாம். 

அடியவர்:- நாங்க என்ன பதில் சொன்னாலும் தப்பாதாங்க அய்யா இருக்கும். ( அடியவர்கள் மத்தியில் சிரிப்பு) அகத்தியப்பெருமான் இடத்தில் இருந்து சிந்திக்கிற அளவுக்கு நமக்குத் தெரியாது. 

குருநாதர்:- அப்பனே, அதனால்தான் அப்பனே சிந்திப்பதற்கே சிறிது துன்பங்களப்பா. துன்பங்கள் கொடுத்தால்தான் மனிதனே சிந்திப்பான் என்பேன் அப்பனே. இன்பங்களே கொடுத்துக் கொண்டு இருந்தால்…..


(மதுரையில் அகத்திய பிரம்ம ரிஷி அடியவர் இல்லத்தில் உரைத்த இந்த வாக்கு கீழ் உள்ள பதிவில் தொடரும் ………)

https://siththarkalatchi.blogspot.com/2023/10/204-4-9-2023-6.html?m=0


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!

No comments:

Post a Comment