மதுரை அகத்திய மஹரிஷி ஆலயம் முகவரி

திருவாசகம் - உரை

அகத்திய பிரம்ம ரிஷி அருளிய , முதல் தர புண்ணியம் உங்களுக்கு பெற்றுத்தர உதவும் நாடி வாக்குகள்.

Wednesday, October 18, 2023

சித்தர்கள் ஆட்சி - 201 : அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 4-9-2023 உரைத்த வாக்கு - பகுதி 4

 



அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - அடியவர் ஒருவர் இல்லத்தில் உரைத்த வாக்கு - 04.09.2023 ( பகுதி 4)


இந்த வாக்கின் முந்தைய பகுதி கீழே உள்ள பதிவில் படிக்கவும்


https://siththarkalatchi.blogspot.com/2023/10/196-4-9-2023-3.html?m=0


(பகுதி 4 - வாக்கு ஆரம்பம் ) 


ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 


அப்பனே அதனால் உன் வழியில் சென்று கொண்டே இருங்கள் அப்பனே. யான் தருகின்றேன் மாற்றத்தை. அவ்வளவுதான் அப்பனே. 

ஓர் தந்தைக்குத் தெரியும் அப்பனே தன் பிள்ளையை எப்படிக் காப்பாற்ற , எப்படி பக்குவங்கள் படுத்தப்படுத்த என்பதெல்லாம். அதனால் அப்படித்தான் கொடுப்பேன் சொல்லிவிட்டேன் அப்பனே. 

இதனால் அப்பனே பின் பொய் கூறலாம். அப்பனே அவ் பரிகாரங்கள் செய்தால் இது நடக்கலாம் என்று. இவ் பரிகாரங்கள் செய்தால் அவை நடக்கலாம் என்று. அவ் பரிகாரங்கள் செய்தால் உந்தனுக்கு அனைத்தும் கிட்டும் என்று. இவ் பரிகாரங்கள் செய்தால் திருமணம் நடக்கும் என்று. ஆனால் நடக்காதப்பா நடக்காது. எல்லாம் பொய்களப்பா. இதைத் தெரிந்து கொள்ளுங்கள் முதலில். 

ஆனால் நடக்கும். ஆனாலும் அப்பனே பின் மீண்டும் கஷ்டங்கள் வந்து விடுமப்பா!!!!!!!!!!!!!!!!!. 

ஆனாலும் பின் மீண்டும் ஓடி ஒடி அங்கு ( பரிகாரம் செய்ய ) சென்றுவிடுவீர்கள் அப்பனே. 

இதுதான் அப்பா உங்களுடைய தரித்திரம் என்பேன் அப்பனே. 

அதனால் தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே. இதனால் நிச்சயம் அகத்தியன் இருக்கின்றான். அகத்தியன் பார்த்துக்கொள்வான். என் தந்தை இருக்கின்றான், என்னைப் பக்குவப்படுத்துவான் என்றெல்லாம் நீங்கள் உணர்வீர்கள். 

ஏன்? எதற்காக இவ்வளவு நேரம் உங்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கின்றேன்?. அனைவருக்குமே கஷ்டங்கள்தானப்பா. அதனால்தான் ஓடி ஒடி இங்கு வந்து உட்கார்ந்துவிட்டீர்கள் அப்பனே. 

அதனால் அப்பனே உண்மை நிலையை அறியுங்கள் அப்பனே. 

உண்மை நிலை அறியாவிடில் துன்பம்தானப்பா. 

அப்பனே பின் உங்கள் முதுகின் பின்னாலே துன்பத்தை (கர்மாவை) வைத்துக்கொண்டு சென்று கொண்டே இருக்கின்றீர்கள். ஆனால் அத்துன்பமும் உங்கள் பின்னாலே வந்து கொண்டேதான் இருக்கின்றது. ஆனால் அதற்கு ஒருவனும் கூட அப்பனே லாயக்கு இல்லாதவன். 

(யாங்கள் மனிதர்களுக்குப் பல முறை) சொல்லிச்சொல்லி (மனிதர்கள்) மீண்டும் மீண்டும் (கர்ம) துன்பத்தில் நுழைந்து நுழைந்து, அப்பனே அத்துன்பத்தை முதலில் இறக்கி வையுங்கள். எப்படி இறக்க வேண்டும் என்று யாராவது கேட்டானா? யாரும் இல்லையப்பா? 

ஒருவொருவனுக்கும் இன்னும் பொருள் தேவை, இன்னம் பணம் தேவை, இன்னும் புகழ் தேவை, இன்னும் என்னென்னவோ தேவை அப்பனே. அனைத்தும் கொடுத்து விட்டால் இறைவன் எதற்கப்பா? கூறுங்கள் நீங்களே அப்பனே?. 

அதனால்  இனிமேலும் என்பக்தர்கள் சொல்லிக்கொடுங்கள் அனைவருக்குமே அப்பனே. 

“யாருக்காவது , ஒரு உயிருக்காவது அப்பனே நன்மை செய்ய வேண்டும் அனுதினமும்” என்று கூற யானே உங்களிடத்தில் வந்து இச்சுவடியை (மும்மூர்த்திகளால் ஆசிர்வாதம் பெற்ற உலகின் ஒரே ஜீவநாடியை ) வைத்து எதை என்று அறிய அறிய உங்களுக்கே வாக்குகள் தெரிவிக்கின்றேன் அப்பனே நன்முறைகளாக. 

( அகத்திய பிரம்ம ரிஷிகள் பக்தர்கள் இந்த உத்தரவை அவர்கள் சிரசில் ஏற்று குறைந்த பட்சம் 1008 பேர்களுக்காவது  நேரில் எடுத்துக் கூறுங்கள். அதிகம் முடிந்தவரை உலகெங்கும் இந்த மகத்தான நல் வாக்கை எடுத்துச் சொல்லுங்கள்). 

பிழைத்துக்கொள்ளுங்கள் அப்பனே. பிழைக்கத்தெரியாமல் வாழுகின்றீர்களே என்பதுதான் சித்தர்களுக்கும் கூட ஏக்கம் என்பேன் அப்பனே. 

அதனால்தான் எப்படி இவர்களை வாழ வைப்பது, எப்படி என்பதை எல்லாம் யாங்கள் காட்டுக்குள்ளே சென்று தவங்கள் மேற்கொண்டு அப்பனே இறைவனை எப்படி என்பதைக் கூட அப்பனே சித்தர்கள் பலபேர் சொல்லிவிட்டார்கள் ஏற்கனவே. இறைவன் எங்கிருக்கின்றான் என்பது தெரியாமல் யாங்கள் படாதபாடுகளா? 

யுகங்கள் யுகங்களாகப் பட்டுப் பட்டு இறைவன் எங்கிருக்கின்றான் என்பதை எல்லாம் தேடி அலைந்து, கடைசியில் பார்த்தால்... அப்பனே இப்பொழுது யான் சொல்லமாட்டேன். அப்பனே பின்பற்றிக்கொள்ளுங்கள். 

வாழக் கற்றுக்கொள்ளுங்கள்.  அப்பனே அனைத்தும் தெரிவிக்கின்றேன். 

இறைவன் எங்கிருக்கின்றான் என்பதைக்கூட சொல்லிவிட்டால் ஆனால் சொல்லி விடுகின்றேன். பொறுத்திருந்தால் அப்பனே. இதனால் சொல்லிவிட்டேன். அப்பனே யான் தெரிவித்து விட்டேன். 

இதனால் நன்மையைச் செய்யுங்கள் எதையும் எதிர்பார்க்காமல். 

அனைவருமே கர்மத்தை எதை என்று கூற பெட்டியில் சேமித்துக்கொண்டே இருக்கின்றீர்கள். ஆனால் இது என்ன செய்யும் என்பதை எல்லாம் யாருக்குமே தெரியவில்லை அப்பனே. 

ஏன் திருத்தலங்கள் இவ்வளவு இருக்கின்றன?. ஏன் அமைக்கவேண்டும்? ஏன் இவ் தேசத்திலே இவ்வளவு திருத்தலங்கள் இருக்கின்றது என்பதை யாராவது ஒருவன் பின் அறிந்திருக்கின்றானா? நிச்சயம் இல்லையப்பா. அவை எல்லாம் வரும் காலங்களில் எடுத்துரைப்பேன் அப்பனே. 

இன்னும் இன்னும் அமானுஷ்ய சக்திகளெல்லாம் இவ்வுலகத்தில் இருக்கின்றது. அவை எல்லாம் அப்பனே கர்மா ஏற்றினால் (அதிகரித்தால்) அப்படியே அப்பனே நம் உடலை பின் சேராமல் அப்பனே எவை என்றும் தெரியாமல் அப்படியே இருக்கின்றதப்பா. அவை எல்லாம் வரும் காலங்களில் அப்பனே நிச்சயம்.

ஆனாலும் நீங்கள் கஷ்டம் என்று வந்து விட்டீர்கள் அப்பனே. ஆனாலும் உங்கள் கீழே எத்தனைப் பேர்கள் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கின்றார்கள் என்பதைத் தெரியுமா அப்பனே? ஆனால் இப்பொழுது தெரிந்து கொண்டீர்களா நீங்கள் சுயநலவாதிகள்  என்று கூட. அப்பனே இச்சுயநலவாதிதான் வேண்டாம்ப்பா. எந்தனுக்கு அவை வேண்டும், இவை வேண்டும்.

அப்பனே உந்தனுக்கு கீழே உள்ளவர்களை யோசி. அவர்களுக்கு ஏதாவது உதவி செய். அப்பனே தானாகவே நீ முன் வந்து விடுவாய் அப்பனே. 

இதனால் தனக்காக வேண்டும். இன்னும் அனைத்தும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இன்னும் பிள்ளைகளுக்கு வேலை வேண்டும். இன்னும் படிப்புக்கள் வேண்டும். இன்னும் எதை எதையோ வேண்டும் என்று நீ கேட்டுக்கொண்டிருந்தால் கூட இறைவன் தர மாட்டான் அப்பா. 

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில்  இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே. 

( வணக்கம் அகத்திய பிரம்ம ரிஷி அடியவர்களே, மேலே சொன்ன இந்த வாக்கின் படி உலகைக்காக்கும் இறைவன் பகவான் மகாவிஷ்ணுவான நாராயணரே மதுரையில் தொழுநோயால் வாடும் எழை எளியோர்களுக்குச் சேவை செய்யும் அகத்திய பிரம்ம ரிஷி அடியவர் ஒருவரிடம் மதுரை பசுமலையில் உள்ள அகத்திய பிரம்ம ரிஷி ஆலயத்தில் கை ஏந்தி யாசகம் கேட்டு உணவு உண்டார். அந்த மகத்தான நிகழ்வின் பதிவு கீழே உங்களுக்காக

https://siththanarul.blogspot.com/2022/02/1081.html?m=1

இதனால் ஓடி ஓடிச்சென்று மக்களுக்குக் கட்டாயம் உதவுங்கள். இறைவன் உங்களை நோக்கி கட்டம் வருவார். தான் எப்படிப்போனாலும் கவலை இல்லை, பிறர் வாழ வேண்டும் என்ற உங்கள் தன் சுய நலம் அற்ற நல் மனமே இறைவனை உங்களிடம் வர வைக்கும். குரு வாக்கை ஏற்று, பிறர் நலம் காண்பதே உங்கள் அனுதினம் பூசை ஆகட்டும் ) 


என் பக்தர்கள் கூட தெரியாமல் வாழ்ந்து வருகின்றார்கள் என்பேன் சொல்லிவிட்டேன். 

இதனால் சுவடிகளை வைத்து வைத்து ( அனைவரையும் ) ஏமாற்றி ஏமாற்றி, சித்தர்களே இல்லை (என்ற) நிலைமைக்கு அதாவது இன்னும் இன்னும் அப்பனே சித்தன் ஏதும் சொல்லவில்லையே. இன்னும் சித்தன் வரவில்லையே என்பதை எல்லாம் பொய்களாக்கி, அப்பனே அவை செய்தால் இப்பரிகாரம் செய்தால் காசுகள் பெருக்கிக்கொண்டு அவன்தனும் அப்பனே கர்மத்தை சேர்த்துக்கொண்டு, மற்றவர்களையும் கர்மத்தில் விழ வைத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றானே மனிதன். அப்பனே மிக அறிவாளியப்பா. 

மனிதனப்பனே, பொய்கள் சொல்வதில் அறிவாளியப்பா, கெட்டிக்காரனப்பா மனிதன். இதில் யான் இப்படித்தான் யான் சொல்ல வேண்டும். 

அப்பனே மீண்டும் சொல்கின்றேன் மனிதன் எதில் கெட்டிக்காரன் என்றால் பொய் சொல்வதில் அப்பனே. நடிப்பதில் அப்பனே. 

பக்தியைச் செலுத்தி நடிப்பதில் மிக வல்லவனப்பா. வல்லவனுக்கு அப்பனே ஒன்றும் உதவாதப்பா. ஏன், எதற்காக என்றால் அதனால்தான் சொல்லிவிட்டேன் அப்பனே. 

என் பக்தர்களுக்கு முதலில் பக்குவத்தை ஏற்படுத்த வேண்டும். அப்பனே பக் குவங்களே இல்லை அப்பா. 

அவ்பக்குவங்கள் வராவிடில் யான் என்ன சொன்னாலும் நடக்காதப்பா விதியில் உள்ளதுதான் நடந்திடுமப்பா. அப்படி என்றால் கஷ்டங்கள் வந்து கொண்டேதான் இருக்குமப்பா. 

அதனால் யான் சொல்லியவற்றைச் சரியாகவே இறைவன், மனிதன் (இறைவன்) மனிதர்களிடத்தில் என்ன எதிர்பார்க்கின்றான் என்று கூற அப்படி வாழ்ந்தால்தான் விதியும்கூட மாறுமப்பா, மாறும்ப்பா. அப்படி இல்லை என்றால் யான் என்ன சொல்லிக் கொண்டிருந்தாலும்  பிரோஜனமில்லையப்பா. 

பல வழிகளிலும் கூட பல தொண்டுகள் என்னால் பல பல வழிகளிலும் கூட , பல பல யுகங்களில் கூட ஆற்றி ஆற்றி மனிதனைத் திருத்தி உள்ளேன். 

ஆனால் கலியுகத்தில் இருக்கின்றானே மனிதன் பொய் சொல்வதில் பின் அறிவுள்ளவனப்பா. மற்றவைகளில் அறிவில் அதனால்தான் அப்பனே கஷ்டங்கள் கொடுக்காமல் என்னால் நிச்சயம் திருத்த முடியாதப்பா. கஷ்டங்கள் கொடுத்துக் கொடுத்துத்தான் யான் நிச்சயம் திருத்த்துவேன் சொல்லிவிட்டேன் அப்பனே. 

இதை நிச்சயம் அனைவரையும் அதனால்தான் அப்பனே யானே இங்கு உங்கள் அனைவரையும் அழைத்தேன் இங்கு.

( இந்த வாக்கு 4.9.2023 அன்று மதுரையில் அகத்திய பிரம்ம ரிஷி அடியவர் வீட்டில் உரைத்த போது 50க்கும் மேற்பட்ட பல அடியவர்கள் வந்திருந்தனர்). 

ஏனென்றால் நிச்சயம் இதை (இந்த அதி முக்கிய நாடி வாக்கு அதனை யான் உங்களுக்கு) தெரிவித்து அப்பனே மற்றவர்களுக்கும் பின் நீங்கள் தெரிவிக்க வேண்டும் அப்பனே. 

மீண்டும் மீண்டும் இதைத்தான் சொல்கின்றேன் அப்பனே. ஓர் நாளைக்காவது, ஓர் வேளையாவது நீ என்ன நன்மைகள் இருக்கின்றாய் என்பதைக் கூட நீ யோசிக்க வேண்டும் என்பேன் அப்பனே. அப்போதுதான் இறைவன் உந்தனுக்கு நன்மை செய்வான் என்பேன் அப்பனே. 

பின்பு நீயே (யாருக்கும்) நன்மை செய்யவில்லை உந்தனுக்கு ஏன் இறைவன் நன்மை செய்ய வேண்டும் கூறுங்கள் அப்பனே?. 

இவை எல்லாம் நிச்சயம் தெரிவித்தாலே, அப்பனே மனிதனுக்குப் புரியாததை அப்பனே நீங்கள் தெரிவித்தாலும் அதனுடனும் கர்மா என்பேன் அப்பனே. 

இங்கு ஒருவன் அப்படித்தான் என்பேன் அப்பனே. கர்மா சேர்த்துக்கொண்டிருக்கின்றான் அப்பா.எவை என்று கூற இதில் தர்ம காரியங்கள் யான் செய்தேனே என்று. இல்லையப்பா. பின் அனைத்தும் கர்மாக்கள் அப்பனே. 

இனிமேலும் நிச்சயம் இதை ( மதுரையில் உரைத்த இந்த நாடி வாக்குகளைப் பிறரிடம்) செப்பு அப்பனே. யான் சொல்லியதை (கேட்டு, உணர்ந்து ) அப்பனே மனிதன் மாறட்டும். திருந்தட்டும். 


(  தர்மத்தின் கரம் ஓங்க, தர்மம் செழிக்க,  இறைவன் மகிழ்ச்சிக் கொள்ள,  சித்தர்கள் கருணை மழை என்றென்றும் மனிதர்களிடையே பொழிய  - அனைத்து அகத்திய பிரம்ம ரிஷி அடியவர்களும் இந்த நல் வாக்கினைப் பலருக்கும் அவசியம் எடுத்துச் சொல்லுதல் அவசியம். 

பல தளங்களில் இந்த வாக்கினைப் பதிவு இடுங்கள் என சிரம் தாழ்த்தி அனைத்து நல் உள்ளங்களை வேண்டிக்கொள்கின்றோம்  

அப்பனே மனிதன் புத்திகள் வளரட்டும். 

அப்பனே யான் ஒன்றைச்சொல்கின்றேன். அப்பனே வளர வளர புத்திகள் வளர வேண்டும். ஆனால் புத்திகள் வளர்வதில்லையே அப்பனே.

ஆனால் கர்மங்கள்தான் வளர்ந்து கொண்டிருக்கின்றது. 

இப்படி இருக்க அப்பனே கஷ்டங்கள் இல்லாமல் எப்படியப்பா தடுக்க முடியும்? அதனால் நன்கு உணர்ந்தீர்கள். 

அதனால் உங்கள் அனைவரையுமே யான் பார்த்து ஆசிகளும் கொடுத்திருக்கின்றேன் அப்பனே. 

இதனால் அப்பனே சேவைகள்,  அகத்தியனை நம்பினால் அப்பனே அகத்தியனை மட்டும் நம்புங்கள் அப்பனே. 

பின்பு பின் (பிற ஏதும் அறியாத மனிதர்கள் வார்த்தைகளை) நம்பிவிட்டீர்கள் என்றால் நிச்சயம் நரகம்தான் அப்பனே. 

நரகத்தில் என்னென்ன நடக்கின்றது என்பதை எல்லாம் யான் எடுத்துரைப்பேன் வரும் வரும் காலங்களில். ஏனென்றால் என்பக்தர்கள் அப்பனே பல யுகங்கள் அனைத்தும் தெரிவித்து எப்படி எல்லாம் நடந்து கொண்டார்கள். ஆனால் கலியுகத்தில் அவ்வாறு இல்லையப்பா. 

அதனால்தான் துன்பங்கள். அதனால் என்பக்தர்களுக்கு வரும் காலங்களில் எப்படி மனிதன் பிறக்கின்றான்?. 

எப்படி வாழுகின்றான்?. 

எப்படி எல்லாம் கர்மத்தை சேர்த்துக்கொள்கின்றான்?. 

மீண்டும் பிறவிக்கு நுழைகின்றான்?. 

என்னிடத்தில் அவ் ஆன்மா எப்படி வருகின்றது?........


(மதுரையில் அகத்திய பிரம்ம ரிஷி அடியவர் இல்லத்தில் உரைத்த இந்த தொடர்வா கீழே உள்ள பதிவில் காண்க ………)

https://siththarkalatchi.blogspot.com/2023/10/202-4-9-2023-5.html?m=0


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!

No comments:

Post a Comment