உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:-
அனைத்திலும் இறைவன் எதை என்று அறிய அறிய அப்பனே யான் ஒன்றைச்சொல்கின்றேன் அப்பனே. இதை சரியாக கேட்டுக்கொள்ளுங்கள். அப்பனே எவை என்றும் அறிய அறிய வாழ்க்கை இன்பமாகவே இருந்தால் அப்பனே நீங்கள் இறைவனையே வணங்கமாட்டீர்கள் என்பதை எல்லாம் நீங்கள் அறிந்ததே. அறிந்தும் அறிந்தும் கூட ஆனால் அப்பனே இறைவன் எதை என்றும் கூற அனைவரையுமே படைக்கின்றான். ஆனாலும் அப்பனே நீங்கள் பின் இறைவன் விரும்பியது போல் இல்லை. அதனால்தான் அப்பனே எதை என்று கூற ஒரு கஷ்டத்தை எதை என்று கூற வைத்து பின் இறைவன் விரும்பியதைப்போல் உங்களைச்செய்கின்றான். இது தவறா அப்பனே?. எதை என்று அறிய அறிய இதனால் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே. என்னை நம்பியவர்கள் கூட நிச்சயம் கஷ்டங்களுக்கு உட்படுத்துவேன் அப்பனே. யார் ஒருவன் எதை என்று உரிய உரிய நம்பிக்கைவைத்து என் அகத்தியன் காப்பாற்றுவான் என்று அப்பனே நிச்சயம் வருகின்றானோ அவன்தனக்கு அனைத்தும் கொடுத்து அப்பனே மேலே உயர்த்திவைப்பேன். அவை விட்டு விட்டு எதை என்றும் அறிய அறிய இப்படி நம்பினோனே எதை என்றும் அறிய அறிய ஒன்றுமே நடக்கவில்லையே. மீண்டும் அங்கு செல்வோமா இங்கு செல்வோமா அலைந்து கொண்டிருந்தால் அப்பனே வாழ்க்கையே இப்படித்தான் அலைந்து கொண்டிருக்க வேண்டும் என்பேன் அப்பனே.
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!
No comments:
Post a Comment