அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:-
தீபம் ஏற்றுவதும், தூப தீபங்கள் காட்டுவதும், மலர் ஆரங்கள் சாற்றுவது மட்டும் பூசை என்று எண்ணிவிடாதே. புற சுத்தியும், இது போன்ற தூப தீபங்களும் முக்கியம் என்பதை நாங்கள் மறுக்கவில்லை. இந்த சூழல் மனித மனதிற்கு, அமைதியையும், நெகிழ்ச்சியையும் தரலாம். ஆனால் இவைகள் மட்டுமே பூஜைக்குரிய விஷயமல்ல. மனம் பக்குவப்பட்டு (ஒரு கலையை ரசிக்கும் பொழுது, எப்படி அங்கே ஐம்புலன்களும் ஒடுங்குகிறதோ), இறைவன் மீது ஒடுங்க மனதிற்கு பயிற்சி தந்து கொண்டே இருக்க வேண்டும். மனம், வாக்கு, காயம், சிந்தனை புலன்கள் எல்லாம், வேறு எதனையும் நோக்கியும் சென்றிடாமல், இறை நாமத்தில், இறைவனின் திருவடியில், தனக்கு தெரிந்த இறை உருவத்தை எண்ணி பிறகு, அந்த உருவமும் மறைந்து போய், நீக்கமற நிறைந்துள்ள அந்த பரம்பொருளின், திவ்ய தரிசனத்தை ஒளியாக, ஒலியாக, எஹ்தும் அற்ற நிலையாக, அது வேறு, தான் வேறு அல்லாத நிலைக்கு ஒன்றிவிடவேண்டும். செய்கின்ற வேலையிலே, தன்னை மறந்து ஒரு மனிதன் எப்படி விருப்பமுடன் ஈடுபடுகிறானோ, அதைப்போன்று, செய்கின்ற வழிபாடும், பூசையும்தான் உயர்ந்தது. எடுத்த எடுப்பிலேயே இது வராது என்றாலும், மெல்ல, மெல்ல முயற்சி செய்து மேலேற வேண்டும்.
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!
No comments:
Post a Comment