இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.
அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 12.08.2026 அன்று அன்புடன் காகபுசண்ட மாமுனிவர் அருளிய கூட்டுப்பிரார்த்தனை குழுவினருக்கான ஞான பாடங்கள் வாக்கு - பகுதி 4
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகள் போற்றி !!!
===========================
# அன்புடன் காகபுசண்ட மாமுனிவர் வாக்கு
===========================
அகிலத்தை ஆளக்கூடிய அகிலாண்ட தேவியே!!!, அகிலாண்ட ஈஸ்வரனே!!!
பணிந்து பரப்புகின்றேன், புசண்டனே.
( பகுதி 3 அதன் தொடர்ச்சியாக …)
===========================
# அகத்திய மாமுனிவர் சொல்வதை கேட்டால் பெரும் புண்ணியமே.
===========================
காகபுசண்ட மாமுனிவர்:- பின் கேட்போர் சிலர். கேட்காமல் இருப்போர் பலர்.
சுவடி ஓதும் மைந்தன் :- கேட்பது சில பேர். கேட்காமல் இருப்பது?
அடியவர்கள் :- பல பேர்.
சுவடி ஓதும் மைந்தன் :- பல பேர்.
காகபுசண்ட மாமுனிவர்:- ஆனால் உன் கடமை செய், அவ்வளவுதான். அகத்தியன் சொல்லிவிட்டான் அல்லவா?
சுவடி ஓதும் மைந்தன் :- உன் கடமை செய், அவ்வளவுதான். அகத்தியன் சொல்லிட்டார், இறைவன்.
காகபுசண்ட மாமுனிவர்:- இதை அறிவித்து— எவை என்று கூற— அறிய— இப்புண்ணியம் அறிந்தும் கூட— அகத்தியன் சொல்வதை கேட்டால் பெரும் புண்ணியமே.
சுவடி ஓதும் மைந்தன் :- அகத்தியர் சொல்றது சாதாரணம் இல்ல. அகத்தியர் சொல்றதை கேட்டாலே ?
அடியவர் :- பெரிய புண்ணியமே.
சுவடி ஓதும் மைந்தன் :- பெரிய புண்ணியம் என்றார்.
காகபுசண்ட மாமுனிவர்:- சுலபமாக கிடைக்கும் சில விஷயங்களை எல்லாம்.
சுவடி ஓதும் மைந்தன் :- சுலபமாக கிடைக்கும் சில விஷயங்கள் கிடைக்கும்ன்றார்.
காகபுசண்ட மாமுனிவர்:- அறிந்தும்— ஏதாவது எவை என்று கூற— உங்களுக்கு என்ன தேவை இப்பொழுது? என் விளக்கம் போதும்.
சுவடி ஓதும் மைந்தன் :- என் விளக்கம் நான் சொல்லிட்டேன், அது போதும் எனக்கு. அகத்தியர் சொல்றதுக்காக வந்துட்டேன். உங்கள் விளக்கங்கள் என்ன வேணும்? நீங்க கேள்வி கேட்கலாம், ஐயா.
அடியவர் 11 :- குருநாதருக்கு வணக்கம், ஐயா. எங்கள் விளக்கம் மனசுல இருக்கு, நீங்களே சொல்லிட்டீங்க, ஐயா. இந்த சூழ்ச்சிகள்— இங்க சூழ்ந்து சூழ்ந்து உலகத்தில் நாங்க வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இறைவனைப் பற்றி சொன்னாலும், நல்ல விஷயங்களை சொன்னாலும், கேட்டுக்கொள்ள மனப்பக்குவம் இல்லை. ஒருவர் ஒருவர் சொல்லிக்கொண்டு பொறாமை இல்லாமல்— அந்த போட்டு பொறாமை இல்லைன்னு உலகத்திலே நாங்க வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அப்ப எங்கள் பக்குவத்தை நீங்கள் இன்னும் அதிகமாக பெருக்கி, பேச வைக்கணும். இறைவனுடைய சித்தர்களுடைய விஷயத்தை நாங்கள் பரப்பவும் . எங்களுக்கு மன தைரியத்தையும், மனப்பக்குவத்தையும் நீங்களே வழங்க வேண்டும் என்று அது மூலம் கேட்டுக்கொள்கிறோம், இறைவனே.
காகபுசண்ட மாமுனிவர்:- பக்குவம் எவ்வாறு என்பது— உயிரை உயர பக்குவங்கள் ஏற்பட வேண்டும். அறிந்தும்— பின் ஆளும் பின் தாழ்வு— பின் வரக்கூடாது எப்பொழுது. அதனால் நிச்சயம்— அறிந்தும்— பல மக்களுக்கு நன்றி. அறிந்தும்— அதாவது, அகத்தியன் பின் சொல்லியிருக்கின்றான் என்று சொல்லுங்கள். பின்— அதாவது, வாழ்ந்தால் பின் வாழட்டும்.
அடியவர் 11:- சரி, குருதேவா. அதையே சொல்லிக்கொண்டிருக்கின்றோம். சித்தமாக நாங்க செய்கிறோம். செய்கிறோம் என்று— செய்கிறோம் என்று— செய்கிறோம், ஐயா.
சுவடி ஓதும் மைந்தன் :- அடுத்தது, ஐயா. ஐயா— கேள்வி— என்னென்ன பண்ணனும்னு கேளுங்க, ஐயா. என்ன வேணும்— என்ன வேணும்ங்க, ஐயா. சொல்லுங்க, ஐயா.
அடியவர் ஒருவர் :- குருநாதருக்கு வணக்கம். தங்களது அருள் ஆசிகள் வேண்டும். மேலும் நிறைய சிக்கல்கள். ……………………….. ஆபத்து ஏற்படுத்த துடிக்கிறார்கள்.
காகபுசண்ட மாமுனிவர்:- மானிடனே அறிந்தும்— எதை என்று புரிய— அதாவது, சொல்லிவிட்டேன், இதனை— அதாவது, ஒன்றின் பக்கத்தில் இருந்தால் நன்மையே.
சுவடி ஓதும் மைந்தன் :- இதெல்லாம் சொல்லிட்டாரு. உண்மைதான். அதன் பக்கத்துல பூஜ்ஜியமா இருந்து நீங்க வந்து— அவர் பார்த்துட்டு போறார் மொத்தம். அவ்வளவுதான்.
அடியவர் ஒருவர் :- உண்மைதான், குருநாதா.
காகபுசண்ட மாமுனிவர்:- அகத்தியன் சொன்னது போல் மக்களுக்கு நன்மை செய்யுங்கள். பின் உன்னை நீ பாதுகாப்பது போல்..
சுவடி ஓதும் மைந்தன் :- அகத்தியர் சொன்னது போல வந்து— நன்மை செய்யுங்கள். அடுத்து— அடுத்து—
===========================
# எல் நினோ (El Niño) குறித்த கேள்வி
===========================
அடியவர் 5 :- புஜண்டர் அப்பாவுக்கு சரணம். இப்ப கிளைமேட்டிக் கண்டிஷன்— எல் நினோன்னு ஒன்னு சொல்றாங்க. அதுல ஒரு பக்கம் கடுமையான வறட்சி இருக்கு. மழை இருக்கு. இந்த நிலை நீங்கி நல்ல நிலை வரணும், குருதேவா. அதுக்கு உங்கள் ஆசிகள்.
காகபுசண்ட மாமுனிவர்:- இதுதான் அகத்தியன் சொன்னான். அறிந்தும்— ஏது என்று புரிய— அனைவரும் பின் கூட்டமாக கூடி— இன்னும் பலமாக சில மந்திரங்கள் உச்சரித்தாலே போதும். எதை என்று அறிய— அனைத்தும் நலமாகும். பின் ஏது என்று அறிய— இதனால் மனம் விரும்புவார்கள். பின்— அதாவது, ஞானிகளும் இன்னும் குருமார்களும் இன்னும்— எதை என்று அறிய— அதாவது, நீங்கள் கத்தினால் மட்டும் போதும்.
சுவடி ஓதும் மைந்தன் :- கத்தினால் மட்டும் போதும்னா?
அடியவர் 5:- சரி, குருதேவா..புரியுது.
சுவடி ஓதும் மைந்தன் :- கூட்டி— அவங்க கத்தினால் மட்டும் போதும்னா என்ன?
அடியவர் 10 :- பாடல்.. பாடல் பாடுறது… வேண்டுறது—
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- (சித்தர்கள் மனிதர்களை நல்ல பாதைக்கு அழைக்க பல விதமான முறைகளில் மனதை “இறக்க” முயற்சிக்கிறார்கள். கூட்டமாக கத்தச் சொல்லுவது…அதாவது இறைவனை நோக்கி…..நல் உணர்வுடன் பாடச் சொல்லுவது, மந்திரம் சொல்லச் சொல்லுவது— இவை எல்லாம் மனுஷன் உள்ளே இருக்கும் அழுக்கு, சோம்பல், சிதறல், அசுத்த எண்ணங்களை உடைக்க உதவும் வழிகள். காகம் கத்துவது போல கூட்டம் கத்தினால், மனம் விழித்தெழும்; அதனால் சித்தர்கள் அந்த கூட்டத்தை உருவாக்கி, மனிதன் உள்ளே இருக்கும் சக்தியை எழுப்ப முயற்சிக்கிறார்கள். இதுபோன்ற அறிவு உலகத்தில் எளிதாக கிடைக்காது; இதை புரிந்து கொள்ளவும், கேட்கவும், பெறவும் மனிதன் முன்பு செய்த சிறு புண்ணியங்களே காரணம். அதனால், சித்தர்கள் சொல்லும் வழிகளைப் பின்பற்றி, மனதை இறக்கி, நல்ல எண்ணங்களை வளர்த்தால் தான் ஆன்ம சக்தி பெருகி, மனிதன் நன்மை நோக்கி நகர முடியும். )
===========================
# சித்தர்கள் யாரை தேர்ந்தெடுப்பார்கள்?
===========================
காகபுசண்ட மாமுனிவர்:- அறிந்தும் இதைத்தன் அறிய, யாரை தேர்ந்தெடுப்பார்கள் சித்தர்கள்? அறிந்தும் எவை என்று கூற— கெட்டுப் போனவர்களை.
சுவடி ஓதும் மைந்தன் :- சித்தர் யார் தேர்ந்தெடுப்பாங்க, ஐயா. ஐயா—
அடியவர் 4:- கெட்டுப்போனவங்களை தேர்ந்தெடுத்து, அவங்களை நல்லவங்களாக்கி, அதன் மூலம் உலகத்தை…
===========================
# இறைவனிடம் அருளை பெறுவது எப்படி ?
===========================
# மிக முக்கிய ஞான பாடங்கள்
===========================
காகபுசண்ட மாமுனிவர்:- இவ் வாய்ப்பை எதை என்று அறிய— நிச்சயம் தண்ணீர் கூட சரியாக— பின் அறிந்தும் கூட— அதாவது உண்மை இதனை உணர்ந்து, அனைவரும் ஒன்றாக செய்யுங்கள் போதும்.
***** காக்கையை பாருங்கள். *****
சுவடி ஓதும் மைந்தன் :- காக்காவை பாருங்கன்றாரு. எல்லாரும் ஒன்னா சேர்ந்து நல்லா செய்யுங்கப்பான்றாரு. காக்காவை பாருங்கப்பான்றாரு.
காகபுசண்ட மாமுனிவர்:- எதை என்று அறிய— அனைவரையும்— அதாவது கூட்டி— எதை என்று கூற— அறிந்தும்— ஒரு காக்கை பின் வரும் முதலில்— பின் அனைத்தும்— பின் அதாவது கூட்டத்தை கூட்டி— அனைவரும் சந்தோசமாக— அறிந்தும் கூட. அதற்கே அவ்வளவு அறிவு என்றால்— மனிதன் அவ்வளவு விட கேவலமானவனா?
சுவடி ஓதும் மைந்தன் :- காக்கைக்கே அவ்வளவு அறிவு இருக்குதுப்பா.
அடியவர் :- எப்படி சாப்பாடு வாங்கணும்னு தெரியும்.
சுவடி ஓதும் மைந்தன் :- தெரியும்.
காகபுசண்ட மாமுனிவர்:- எதை என்று கூற இப்பொழுது கூறுங்கள். அருளை எப்படி பெற வேண்டும் என்று?
அடியவர் 4 :- அனைவரும்— அனைவரும் ஒன்றாய் சேர்ந்து….
சுவடி ஓதும் மைந்தன் :- சத்தமா கேக்கணும், ஐயா.
சுவடி ஓதும் மைந்தன் :- சத்தமா கேக்கணும். அப்பதான் இறைவன் என்ன பண்ணுவாரு? டேய் , யாரோ கதறுறாங்கடா. நம்ம ஏதாவது போயிட்டு சாப்பாடு போட்டு வருவோமேன்னு அப்பதான் நினைப்பாராம்.
காகபுசண்ட மாமுனிவர்:- இதனால் எவை என்று கூற— பின் அறிந்தும் — ஏது என்று புரிய — பின் மனிதன் எவ்வாறு — என்பதையெல்லாம் — அதாவது நீங்கள் கேட்டால் இறைவன் கொடுத்து விடுவானா என்ன? இல்லை. இதனால் எவை என்று கூற — பின் அறிந்தும் கூட— இதனால் பின் அனைவரும் கூடி— அதாவது பின் சற்று— எவை என்று கூற— பின் எவை என்று கூற— ஒலி விடுக.
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாரும் சேர்ந்து— அதனால் நீங்க இறைவனை நீங்க கொடுத்தாலும் நீங்க கேட்டாலும் கொடுக்க போறதில்லை. இறைவன் ஒன்று. ஓகேங்களா, ஐயா. அதனால எல்லாரும் சேர்ந்து கும்பல்ல கோவிந்தா போட்டு ஓன்னு கத்தணும். ஐயா.
அடியவர் 4:- சரிங்க, ஐயா.
===========================
# எதற்காக சாகும் பிணத்தை பார்த்து அனைவரும் ஓலம் விடுவார்கள்?
===========================
காகபுசண்ட மாமுனிவர்:- அறிந்தும்— பின் அதாவது பின் சாகும் பிணத்தை பார்த்து— அனைவரும் ஓலை விடுவார்கள். எதற்காக தெரியுமா?
சுவடி ஓதும் மைந்தன் :- சாகும் பிணத்தை பார்த்து எல்லாரும் ஓன்னு ஓலம் விடுவாங்க. எதுக்காக தெரியுமா?
அடியவர் 4:- சொல்லுங்க, ஐயா. தெரியலைங்க.
காகபுசண்ட மாமுனிவர்:- அப்பொழுதாவது இறைவன் உயிரை கொடுத்து விடுவானா என்று எண்ணி— ஆனாலும் எவை என்று கூற— இவை தன் இப்பொழுது கண்களில் தண்ணீராக…
சுவடி ஓதும் மைந்தன் :- தண்ணீர்ன்றாரு. இப்ப வந்து அது பேஷன் மாறிட்டாங்கப்பா. அப்பலாம் ஒவ்வொன்னும் கத்து வாங்கலாம். பிணம் எது இருந்தா ஒவ்வொன்னும் எல்லாரும் சேர்ந்து கத்து வாங்கலாம். ஆனா இப்ப என்ன பண்ணிட்டாங்க? உடனே உட்கார்ந்து கண்ணுல தண்ணி அழுகுறாங்கப்பா.
காகபுசண்ட மாமுனிவர்:- அப்பா, சித்தன் என்னென்ன சித்துகள் எப்படி எல்லாம் மனிதனை இயக்க வேண்டும் என்றெல்லாம். ஆனாலும் அதற்கு உங்களுக்கு சக்தி தேவைப்படுகின்றது. அவ் சக்திகள் இன்னும் அகத்தியன் தான் கொடுக்க வேண்டும். அசக்திகள் உங்களுக்கு கொடுத்துவிட்டால் உங்களை நீங்களே வெல்லலாம். பிறரையும் வெல்ல முடியும்.
அடியவர் 4:- ரொம்ப சிறப்பு, ஐயா.
அடியவர் 9 :- சிறப்பு, ஐயா.
அடியவர் 5:- குருநாதா, உங்களுடைய ஆசீர்வாதத்தாலும் விரைவான அருள் தரணும்.
===========================
# சிறப்பு - பொருள் என்ன ?
===========================
காகபுசண்ட மாமுனிவர்:- எது என்று புரிய சிறப்பு, சிறப்பு என்கின்றீர்களே…என்ன சிறப்பு என்று?
சுவடி ஓதும் மைந்தன் :- சிறப்புன்னா என்னன்னு கேக்குறாருங்க, ஐயா.
அடியவர் 5:- சிறந்தவர்கள்.
காகபுசண்ட மாமுனிவர்:- மானிடர்களே சிறப்பு என்றால்— சீவன். அதாவது சிவன் என்றே பொருள்.
அடியவர் 4:- அருமை
அடியவர் 9 :- அருமை
அடியவர் 10:- அருமை
காகபுசண்ட மாமுனிவர்:- அருமை… முழுமை… முதுமை… இன்னும் என்னென்னவோ சொல்லிக்கொண்டிருங்கள். வாய்க்கு வந்ததெல்லாம்..
அடியவர்கள் :- ( பலத்த சிரிப்புகள் )
சுவடி ஓதும் மைந்தன் :- இன்னும் சொல்லுங்கடா… வாய்க்கு சொல்றதெல்லாம் சிறப்பு. ஐயோ, எப்பா. ஐயா, என்ன சொல்றாரு?
அடியவர்கள் :- ( பலத்த சிரிப்புகள் )
அடியவர் 10:- அனைத்தும் வந்தவர் நீங்க. உங்களால மீறி உங்களால என்னங்கயா பேச முடியும்? கேட்டுட்டு தான் இருக்கேன். நீங்க சொல்றது கேக்குறது தானே என் வேலை.
அடியவர் 4:- சின்ன பிள்ளைங்களோட அறிவுல என்ன தெரியுதோ அதை சொல்றோம்.
===========================
# காக்கை போல் கூடி வாழும் ஞான வாழ்க்கை பாடம்
===========================
காகபுசண்ட மாமுனிவர்:- அறிந்தும்— எது என்று புரிய— இதனால் பின்— அதாவது அறிந்தும்— எப்படி பின்— அதாவது பின்— அதாவது பின் நன்மைகள் செய்ய வேண்டும். அதாவது காக்கை போல் எப்படி பின் அழைக்க வேண்டும். அதாவது பின் வந்தால் உணவு. இல்லையென்றால் எவை என்று புரிய.
சுவடி ஓதும் மைந்தன் :- என்ன சொல்றார்ன்னா காக்கை போல் இருக்கணும். அப்பா…வாங்கப்பா. நல்லது செய்றேன்னு.. சொன்னா… வந்தா சாப்பாடு. சாப்பாடுன்றது நமக்கு நல்லது நடக்கும். இல்லையென்றால் அப்ப யார் போல் இருக்கணும்ன்றாரு? காக்கா போல்.
காகபுசண்ட மாமுனிவர்:- ஆனாலும் சில காக்கைகள் பின் வருகின்ற பொழுது எதையதோ பின் அறிந்து— எது என்று புரிய— பின் விரட்டும்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஆனால் சில காக்கை என்ன பண்ணும்?
அடியவர் 7 :- விரட்டும்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( ஒரு காக்கை அடுத்த காக்கையை ) குத்துமாம். குத்தும் இல்ல. விரட்டும்ன்றாரு.
காகபுசண்ட மாமுனிவர்:- ஆனாலும் அதுபோல் உங்களுக்குள்ளே நீங்கள் இருக்காதீர்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- என்ன சொல்றார் தெரியுமா? அதுக்குள்ள உங்களுக்குள்ளே…
( பல உரையாடல்கள்)
சுவடி ஓதும் மைந்தன் :- அதனால உங்களுக்குள்ளவே நீங்க அந்த மாதிரி இருக்காதீங்கடா. ஐயா, புரியுதுங்களா? ஐயா, சூப்பரா சொல்லி இருக்காருங்க, ஐயா.
அடியவர் 7 :- ஒற்றுமை,
சுவடி ஓதும் மைந்தன் :- ஒற்றுமை. ஏய், அதுக்குள்ள நீங்களே உங்களுக்குள்ளே நீங்க குத்திராதீங்கடான்றாரு.
அடியவர் 9 :- ஒற்றுமை… விட்டு கொடுத்தல்…
சுவடி ஓதும் மைந்தன் :- ஆமா.
காகபுசண்ட மாமுனிவர்:- எதை என்று கூற— அதாவது பின்— பின் வாய் பேசும் இடத்தில் பேசுவதில்லை.
சுவடி ஓதும் மைந்தன் :- வாய் பேசும் இடத்தில்—
அடியவர் 9 :- பேசுவதில்லை.
சுவடி ஓதும் மைந்தன் :- பேசுவதில்லை.
காகபுசண்ட மாமுனிவர்:- இப்பொழுது திறங்கள் பார்ப்போம் வாயை. என்னிடத்தில் கேளுங்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- இப்பொழுது வாய் திறந்து என்னிடத்தில் கேளுங்களேன். யாராவது நான் உங்களுக்கு சொல்றதுக்குன்றாரு.
அடியவர் 6 :- குருநாதர் கிட்ட என்ன நம்ம வாக்காட முடியாது.
சுவடி ஓதும் மைந்தன் :- எப்படி செய்யணும்? ஏதாவது எப்படி செய்யணும்னு ஏதாவது கேளுங்க. ஏதாவது அழகா அவரே சான்ஸ் கொடுக்குறாருங்க, ஐயா.
காகபுசண்ட மாமுனிவர்:- ஏதோ அறிந்தும் இன்றைய நாளில் அம்பாளுடைய அருளை அகத்தியன் அழகாக பெற்று தந்துவிட்டான்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஏதோ இன்றைய நாள்ல வந்து அகத்தியர் வந்து அழகாக ஆசிகள் பெற்று தந்துவிட்டார் .
காகபுசண்ட மாமுனிவர்:- அறிந்தும் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- திறமைகளை வளர்த்துக்கோங்கப்பான்றாரு.
அடியவர் 7 :- திறமைகளை வளர்த்துக் கொள்வது எப்படி என தாங்கள் தான் உரைக்க வேண்டும்.
காகபுசண்ட மாமுனிவர்:- காகங்களை… கூட்டுக…. காகங்களை
சுவடி ஓதும் மைந்தன் :- மக்களை கூட்ட சொல்றாருங்க, ஐயா. வந்து—
அடியவர் 3 :- சரிங்க அய்யா .
===========================
# அனைவரையும் அழைக்கும் அந்த முதல் காக்கையாக இருங்கள்.
===========================
# பலரை அழையுங்கள், அழைத்து வாருங்கள் கூட்டுப் பிரார்த்தனைக்கு…
===========================
காகபுசண்ட மாமுனிவர்:- அறிந்தும்— ஏது என்று புரிய— அதாவது காக்கை அனைத்தும்— ஏது என்று கூற— அதாவது அறிந்தும்— எவை என்று கூற— பின் அதாவது உணவை இடுகின்ற பொழுது ஒரு காக்கை அனைத்து காக்கைகளும் பின் நெற்றியில்— ஏது என்று புரிய— அழைக்கும். இதனால் அக் காகத்திற்கு எக்காகம் அழைத்ததோ அதற்கு புண்ணியம் அதிகமடா.
அடியவர் :- சிவாய நம
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, புரியுதுங்களா? எல்லாரும் கா கா கான்னு வாடா வாடான்னு சொல்லிட்டு அந்த காகத்துக்கு புண்ணியம். அதே மாதிரி நீங்க வந்து மத்தவங்கள வந்து கூப்பிடுறோமா? எவ்வளவு நல்லது வா…நல்லது நடக்குது. சாப்பாடு போடுறோம், இது பண்றோம், அது பண்றோம்னு சொல்றது வந்து… உனக்கு புண்ணியம் என்று சொல்றார்.
காகபுசண்ட மாமுனிவர்:- இதனால் அறிந்தும்— ஏவை என்று புரிய— இதனால் மனிதனை முதலில் புண்ணியமாக்குவதே அகத்தியனுடைய வேலை.
சுவடி ஓதும் மைந்தன் :- ஏன்னா அகத்தியர் வந்து என்ன மனிதனை ஒரு புனிதனா ஆக்கணும்ன்றாரு. அகத்தியர் வந்து அதுதான் வேலையா வச்சிருக்காருப்பான்றாரு.
அடியவர் :- புண்ணியவனாக்க—
சுவடி ஓதும் மைந்தன் :- புண்ணியவனாக்குறதுதான் அவருடைய வேலை என்றாரு.
காகபுசண்ட மாமுனிவர்:- அறிந்தும்— இதனால் ஏது என்று புரிய— இதனால் பாவத்தில் இருப்போர் எல்லாம் புண்ணியம் ஆக்குவதே அவனுடைய வேலை. அழைத்து அழைத்து. இதனால்தான் நீங்கள் பாவத்தில் இருந்து உள்ளீர்கள். அதனால்தான் உங்களை அழைத்துள்ளான். நீங்களும் மற்றவருக்கு அழைத்து புண்ணியத்தை பெற்றுத்தாருங்கள். போதும்.
அடியவர் 9 :- சரிங்க, குருதேவா. சரிங்க, குருநாதா.
===========================
# யார் குரு?
===========================
காகபுசண்ட மாமுனிவர்:- அறிந்தும்— புரிந்தும்— குருதேவா, குருதேவா என்றால் என்ன?
சுவடி ஓதும் மைந்தன் :- குருதேவா, குருதேவா என்றால் என்னன்னு கேட்டாருங்க, ஐயா.
அடியவர் 5 :- குரு என்பதற்கு இருளை நீக்குபவர் என பொருள் கொள்ளலாம் என நினைக்கிறேன்.
காகபுசண்ட மாமுனிவர்:- அப்பப்பா, அறிந்தும்— இவையெல்லாம் சொன்னதே சொல்லிக் கொண்டிருக்காதே. புதிதாக சொல்.
அடியவர் 11 :- குரு என்பவர் ஆசிரியருக்கு சமமானவர், ஐயனே.
காகபுசண்ட மாமுனிவர்:- அறிந்தும் இவையெல்லாம் எழுதிவிட்டு சென்றுவிட்டார்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- இதெல்லாம் ஏற்கனவே சொல்லிட்டாங்கப்பா. புதுசா சொல்லுப்பா.
அடியவர் 11 :- ஐயா, புத்தகத்தில் எழுதாத செய்தியினை நீங்கள் தானே, ஐயனே, சொல்ல வேண்டும். நாங்கள் எல்லாம் எழுதினதை தான் சொல்ல வேண்டும்.
காகபுசண்ட மாமுனிவர்:- அறிந்தும் ஏது என்று அறிய பின் ருணத்தை உணர்ந்தவன்.
சுவடி ஓதும் மைந்தன் :- ருணத்தை உணர்ந்தவன். ருணம் உணர்ந்தவன்—
அடியவர் 3:- ருணம் உடைய குணங்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, ருணம்னா ருணம்…
சுவடி ஓதும் மைந்தன் :- ருணம், நோய், கடன், ருணத்தை உணர்ந்தவன்….
அடியவர் 7 :- துன்பம், ஐயா, துன்பம்.
அடியவர் 8 :- வலிங்க, கடன்….
அடியவர் 1 :- கடன்
அடியவர் 3 :- கடன்
காகபுசண்ட மாமுனிவர்:- புரிகின்றதா? கடன் என்று சொல்லிவிட்டீர்கள். இதனால் அறிந்தும்
***** பின் உங்கள் கடன்களை பல பிறவிகளில் அறிந்தும் எதை எதை விட்டு சென்றிருக்கின்றீர்கள் என்பதெல்லாம் உணர்ந்தவனே குரு. *****
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, புரியுதுங்களா, ஐயா?
அடியவர்கள் :- புரியுதுங்க, ஐயா.
சுவடி ஓதும் மைந்தன் :- உங்களுடைய விஷயங்கள் எல்லாம் இறைவனுக்குத்தான் தெரியும் என்றார்கள். உங்களோட கடமைகள் உங்களுக்கு என்னன்னா, நீங்க எல்லாம் ஒரு மனிதர்கள். அதெல்லாம் வந்து இந்த தர்மத்துல வந்து நீங்க வந்து தெரிஞ்சுக்கோங்கடா. ஆமா, குரு, புரியுதுங்களா? அது எப்படி இருக்குன்றத பார்த்தீங்களா? குரு அந்த “ரு” போட்டு எடுத்துட்டு வந்தாரு. அப்புறம் குருக்கு அட்டை கொடுத்தாரு. “ரு” போட்டு ருணம்னு எடுத்துட்டு வந்தாரு. ஐயா, குரு இருக்குது இல்ல? அந்த “ரு” போட்டு ருணத்தை எடுத்துட்டு வந்தாரு. அப்புறம் குரு எடுத்துட்டு வந்துட்டாரு. ஐயா, உண்மையிலேயே சொல்றேன் பாருங்க, ஐயா, இதெல்லாம் வந்து தெரிஞ்சுக்க முடியாத ஒன்றுங்க, ஐயா. வந்து உண்மையிலேயே இந்த விஷயங்கள் எல்லாம் ஒன்னு, ஐயா. என்னையும் சேர்த்து தான் சொல்றேன். ஏதோ அது இறைவன் தான், ஐயா. ஏதோ வந்து அவ்வளவுதாங்க, ஐயா. இனிமேல் நம்ம வந்து அது நல்லது நடக்குறதும், தீமை ஏற்பட்டிருக்கிறதும் நீங்க தான், ஐயா. அதனால தயவு செய்துங்க, ஐயா. நன்றாக பேசி எல்லாம் எல்லாமே ஒரு ஒரு வேலை ஒருத்தர் செஞ்சு செய்யுங்க, ஐயா. இவ்வளவு சொல்றாருன்னா நமக்காக இறங்கி வந்து அது நமக்கு ஒன்னும் தெரியாம மூடநம்பிக்கையா இருக்குன்னு அர்த்தம்.
அடியவர் 4:- குருநாதா, போர் சூழல் எல்லாம் இல்லாம அமைதியா உலகம் இருக்க உங்களுக்கு ஆசீர்வாதம்.
அடியவர்கள் :- ஐயா?
அடியவர் 4:- இந்த போர் இல்லாத சூழல் ஏற்படணும். உலக மக்கள் அமைதியா இருக்கணும்.
காகபுசண்ட மாமுனிவர்:- எது என்று புரிய— இதனால் அறிந்தும்— அதை நாங்கள் பார்த்துக் கொள்வோம். நீங்கள் நன்மையை செய்து கொள்ளுங்கள். அதாவது உங்களுக்கு அகத்தியன் என்ன சொல்கிறாரோ அதை கேளுங்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- அதெல்லாம் நாங்க பார்த்துக்குவோம்பா.
காகபுசண்ட மாமுனிவர்:- அறிந்தும்— ஏது என்று கூற— பின் இறைவனை பின் வணங்கினால் எவை என்பதை பின் உடனே போரை நிறுத்தி விடுவானா? ஏற்பாடு செய்வதே இறைவன் தான்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஏற்பாடு செய்வதே இறைவன் தான். நீங்க சொன்னா இறைவன் கேட்டுருவாரா?
காகபுசண்ட மாமுனிவர்:- எது என்று கூற. அழுது கூறுங்கள். அனைவரும் சேர்ந்து…. இறைவனும் மனம் விரும்புவான். அவ்வளவுதான்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஏதோ எல்லாரும் ஒன்னு கூடி காக்கை போல அழுது….. எப்பா பண்ணாதீங்கப்பான்னு எல்லாத்தையும் ஏதோ ஒன்னு பரவாயில்லைன்னு சொல்லிட்டு அவர் விலக்கம் அளிப்பார். அவ்வளவுதான்.
அடியவர் ஒருவர் :- குருநாதருக்கு வணக்கம். ஒரே ஒரு விஷயம், தாங்களுக்கு நான் நன்றி கூறவில்லை……. என்ன விஷயம் என்றால் ……………… எனக்கு ஒரு ………அளித்தீர்கள். அப்போது…
காகபுசண்ட மாமுனிவர்:- அறிந்தும்— என்று புரிய— எவை என்று அறிய பின் இவையெல்லாம் மறந்துவிட்டு அடுத்து என்ன செய்வது மக்களுக்கு என்று சிந்தித்துப் பாரடா. பின் அவை தானாக வந்து தெரியுமாடா அகத்தியன் தெரிவிப்பானடா.
சுவடி ஓதும் மைந்தன் :- மக்களுக்கு நன்மை செய். உன்னால் முடிந்தவரை தானாக உனக்கு தெரிய வரும் என்றார்.
காகபுசண்ட மாமுனிவர்:- ஆசிகள். அறிந்தும் எதை என்று அறிய. இன்னும் அகத்தியன் சொல்கின்ற பொழுது பின் இன்னும் ஏது என்று கூற சரியாக அறிவாளியாக இருந்து கேள்விகளை கேளுங்கள். நிச்சயம் தன்னில் கூட
சுவடி ஓதும் மைந்தன் :- அகத்தியரும் வருவாரு. அப்ப நீங்க அறிவாளியாக கேள்வி கேளுங்கப்பான்னுட்டார்.
அடியவர்கள் :- சரிங்க, குருதேவா.
காகபுசண்ட மாமுனிவர்:- அறிந்தும்— ஏது என்று அறிய— எவை என்று புரிய— ஆசிகள், ஆசிகள். மீண்டும் ஒரு நாள் வந்து. அப்பொழுது தவறுகள் செய்திருந்தால் நிச்சயம் தன்னில் கூட பின் எதை என்று புரிய மன்னிப்பே கிடையாது.
அடியவர்கள் :- ஓகே, ஐயா. நன்றிங்க, நன்றிங்க.
அடியவர்கள் :- நமஸ்காரம்.
(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 12.08.2026 அன்று அன்புடன் காகபுசண்ட மாமுனிவர் அருளிய கூட்டுப்பிரார்த்தனை குழுவினருக்கான ஞான பாடங்கள் வாக்குகள் …. நிறைவு அடைந்தது )
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.