“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Wednesday, September 16, 2026

சித்தர்கள் ஆட்சி - 722 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - 12.08.2026 அன்று அன்புடன் காகபுசண்ட மாமுனிவர் அருளிய கூட்டுப்பிரார்த்தனை குழுவினருக்கான ஞான பாடங்கள் வாக்கு - சிவபுராணம் என்பது என்ன? - பகுதி 1

 இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.



அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 12.08.2026 அன்று அன்புடன் காகபுசண்ட மாமுனிவர் அருளிய கூட்டுப்பிரார்த்தனை குழுவினருக்கான ஞான பாடங்கள் வாக்கு -  சிவபுராணம் என்பது என்ன? - பகுதி 1


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகள் போற்றி !!!



===========================

# அன்புடன் காகபுசண்ட மாமுனிவர் வாக்கு 

===========================


அகிலத்தை ஆளக்கூடிய அகிலாண்ட தேவியே!!!, அகிலாண்ட ஈஸ்வரனே!!!

பணிந்து பரப்புகின்றேன், புசண்டனே. 


அறிந்தும்  இன்றும் இதை என்று புரியாத வகையிலும் இருந்தாலும், முதலில் சொற்கள் சரியில்லை. பேசுவது—அதாவது சரியில்லை—எப்படி? 


அதாவது, ஒன்றை கேட்கின்றேன்; அதற்கு பதில் சொல்லுங்கள் பார்ப்போம். உங்கள் திறமை எப்படி இருக்கின்றது என்று பார்ப்போம். 


பின்பு, அதாவது, வாய்தான் அறிந்தும் எதை என்று கூற, அறிந்தும் முன்னுக்குச் செல்கின்றதே தவிர, நிச்சயம் உள்ளங்கள் முன்னுக்குச் செல்லவே இல்லை. 


வாயினால் அனைத்தும் ஜெயிக்கலாம் என்று இருக்கின்றார்கள்; 


ஆனாலும் அவ்வாயில் எதை என்று அறிய, உணவு மட்டுமே உட்கொள்ள முடியும். 


அதுவும் ஏது என்று புரியாத நிலையில் இருந்து, எவை உணராத வகையில் கூட. 


===========================

# சிவபுராணம் என்பது என்ன?

===========================


காகபுசண்ட மாமுனிவர் :-  இதனால், ஒன்றுக்கு மட்டும் அர்த்தம் சொல்லுங்கள் பார்ப்போம். 


பின்பு, நீங்கள் திறமைசாலிகளா என்று பின் பார்ப்போம். 


***** அதாவது, சிவபுராணம் என்பது என்ன? *****


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, காகபுசுண்டர்  என்ன சொல்றார் என்றால், "வாய் விடுறீங்களேப்பா, வாய் பேசுறீங்களேப்பா" அதிகமா. சிவபுராணம் என்றால் என்ன?


அடியவர் 1:-  ஈசன் அய்யா. ஆதி  ஈசன். இறைவன் அய்யா.


காகபுசண்ட மாமுனிவர் :- இவ்வளவுதான் உன் புத்தி. 


சுவடி ஓதும் மைந்தன் :-  (இது பதில் இல்லை) சிவபுராணம் என்றால் என்ன? உங்களோட புத்தி எவ்வளவு நிலைமையில, நீங்க வந்து எவ்வளவு நிலைமையில இறைவன் இருக்கிறாங்கன்னு சொல்லிட்டு கேட்கிறார். 


அடியவர் 2 :- ஐயனே, வணக்கம். இறைவனைப் பற்றிய, ஈசனைப் பற்றிய முழுமையான விளக்கம் சிவபுராணத்தில் இருக்குங்க  அய்யா. 


காகபுசண்ட மாமுனிவர் :-  ஏது என்று அறிய, அறிந்தும் அறிந்தும் ஏனையோர்கள் சொல்க. 



சுவடி ஓதும் மைந்தன் :-  அதான், ஏனையவர்கள் சொல்க.  அடுத்து?

…….


சுவடி ஓதும் மைந்தன் :-  அம்மா , பேசுங்க  அம்மா சிவபுராணம் என்றால் என்ன?


அடியவர் 3:- நம்ம மனசுல இருக்க அழுக்கு, இருள். நம்ம கிட்ட இருக்கிற அழுக்கு, இருள்—இதெல்லாம் நீக்கணும். இதை நீ தான்ப்பா போக்கணும். இந்த பிறவி பயனை நீ தான்… உன் காலடியில் சமர்ப்பிக்கிறோம். எங்களுக்கு இனி பிறவி வேண்டாம். அப்படின்னு இறைவனை நினைந்து, கெஞ்சுவது, ஏங்குவது நினைந்து நிறுத்தி…..


காகபுசண்ட மாமுனிவர் :-  எவை ஏது என்று புரிய, அறிவு அவ்வளவுதான். 


சுவடி ஓதும் மைந்தன் :-  அடுத்து?


அடியவர் 4:- ஐயா, இறைவனுடைய …(ஆடியோ தடங்கல்) … சொல்ல சொல்ல, நம்முடைய மனம் சுத்தமாகி, இறைவனுடைய ஆசீர்வாதமும் மன நிலையும் உயரும்.


காகபுசண்ட மாமுனிவர் :-  ஏது என்று புரிய, அனைத்தும் சொன்னாலும் மனம் சுத்தமாகுமா என்ன? இறைவன் நினைத்தால் மட்டுமே உண்டு. இல்லையென்றால் சுத்தமும் ஆகாது, எதை என்று அறிய.


அடியவர் 4:-  முயற்சி தான், ஐயா.


காகபுசண்ட மாமுனிவர் :-  எதை, எவ்வாறு என்பது எல்லாம். பின் முயற்சி எடுத்தாலும் சரியாக நடந்து விடுமா என்ன? அனைத்தும் இறைவன் முயற்சி எடுக்க வேண்டும். அவ்வளவுதான். 


சுவடி ஓதும் மைந்தன் :-   ஐயா, அடுத்துங்க. ஐயா? 


அடியவர் 5:-   காகபுசுண்டர் அப்பாவுக்கு கோடான கோடி நமஸ்காரங்கள். எனக்கு என்ன தோணுதுன்னா….அப்பா…. இந்த இறைவன்—இறைவன் நிலையிலிருந்து எப்படி ஒரு ஆன்மா பிரிந்து வந்து, பல்வேறு பிறவி எடுக்குது?  சிரமப்படுது? மீண்டும் என்ன மாதிரி வாழ்ந்தா இந்த பிறவிக் கடலை நீந்தி, மீண்டும் இறைவனிடம் சேரலாம் என்ற அந்த…..


காகபுசண்ட மாமுனிவர் :-  எது என்று அறிய, எவை என்று அறிய. அதாவது, பயணக்கணக்கை சொல்லிக் கொண்டிருக்காதே. உடனடியாக ஒரு பதில் சொல். 


சுவடி ஓதும் மைந்தன் :-   பயணக்கணக்கை சொல்லிக் கொண்டிருக்கின்றாதே. உடனடியாக ஒரு பதில் சொல்.


அடியவர் 5:-  எப்படி ஒரு மனித ஆன்மா… எப்படி வாழ்ந்து….மீண்டும் இறைவனை அடைவது.. பிறவியை நீக்குவது…..அப்படிங்கறதை சொல்லக்கூடியதா இருக்குன்னு நினைக்கிறேன் அப்பா.


காகபுசண்ட மாமுனிவர் :-  எவை, ஏது என்று புரிய, மீண்டும் உன் பயணத்தை சொல்லிக் கொண்டிருக்காதே. 


சுவடி ஓதும் மைந்தன் :-   ஐயா, ஒரே ஒரு வரியில் ஏதாவது சொல்லுங்க. டக்குனு. இதா, அதா?


அடியவர் 6:- அவன் அருளாலே , அவன் தாள் வணங்கி.


காகபுசண்ட மாமுனிவர் :-  எதை, ஏது என்று அறிய, இவ்வளவுதான் அறிவு.


அடியவர் 7:-  ஐயனே, புராணம் என்பது வரலாறு.  ஆதி முதல் அந்தம் வரை, ஆதி தோற்றம் முதல் கடைசி வரை உள்ள…. ஈசனுடைய படைப்பு முதல், ஆதி முதல் அந்தம் வரை உள்ள புராணங்கள்  ஐயனே.


காகபுசண்ட மாமுனிவர் :-  எதை, ஏது என்று புரிய, உன் புராணமே உனக்கு தெரியவில்லை. அறிந்தும் அதாவது, சிவனுடைய புராணத்தை நீ அறிந்திருக்கின்றாயா என்ன?


அடியவர் 7:-   இன்னும் அறியல ஐயனே.. அடியேனைப் பத்தி.


காகபுசண்ட மாமுனிவர் :-  அறிந்தும் இத்தனை அறிவுகள் இருந்து…. அகத்தியன் எதை என்று புரிய, அகத்தியன் எவ்வளவு பெரிய அறிவானவன். ஆனாலும், நீங்கள் எதை என்று அறிய  சிறிது அளவிலாவது அறிவு இருக்க வேண்டும் அல்லவா? அறிவே இல்லை. 


சுவடி ஓதும் மைந்தன் :-   அகத்தியன்  எவ்வளவு பெரிய அறிவாளி.  நீங்க அந்த அறிவாளி கொஞ்சமாவது இருக்கணும். ஏதாவது சொல்லுங்கன்றார்.


அடியவர்1:-  ஐயா, சிவபுராணம் உலகை காக்கும் கவசம் ஐயா.


காகபுசண்ட மாமுனிவர் :-  எதை என்று அறிய, உனையே காக்கவில்லை. சிவபுராணம். உலகை காக்கின்றதா என்ன?


அடியவர் 8:- ரிஷி மகானுக்கு என்னுடைய தாழ்மையான பணிவன்பான வணக்கங்கள், ஐயா. நம்மளுடைய பிறவி… முற்பிறவி…. நம்ம அடுத்த பிறவி…. எல்லாம் இருக்கப் போறோம்….அப்படின்றது நம்மளுக்கு தெரிஞ்சுக்க முடியறது சிவபெருமானின் கருணையினால் தான். நம்ம காணவோ, கணக்கிடவும், உணரவும் முடியும். அதுதான் சிவபுராணம் கூறுவது.


காகபுசண்ட மாமுனிவர் :-  எது என்று புரிய, அதாவது, அனைத்தும் ஏது என்று புரிய, ஏதோ அறிந்தும் சிவனை பின் நோக்கிச் சென்றால், அறிந்தும்—அதாவது, பின் அறிந்தும்—எதை என்று புரிய, ஆசீர்வாதம் கொடுத்துவிட்டானா? கொடுத்துவிட்டானா? எவை என்று புரிய, பின் நிச்சயம் தன்னில் கூட இதனால் ஈசனையே உணரவில்லை. இதனால் எப்படி?  எதை என்று கூற?  பின் அழைத்தால் வருவானா என்ன? கொடுப்பானா என்ன? அறிந்தும் மூதாட்டியே கேள்.


சுவடி ஓதும் மைந்தன் :-  ( இது பதில் அல்ல …) 


அடியவர் 4:-  குருநாதருக்கு வணக்கம். மனிதனுடைய கர்மா நீங்குவதற்கு இறைவன் கொடுத்த எளிய வாய்ப்பு.


காகபுசண்ட மாமுனிவர் :- எதை, ஏது என்று புரிய, அனைத்தும் எளிமையானால், எது எவை என்று புரிய, இதையெல்லாம் யாம் ஏற்க முடியாது.


சுவடி ஓதும் மைந்தன் :-  ( இது பதில் அல்ல …) 


அடியவர் 9 :- குருநாதருக்கு பணிவான வணக்கங்கள்.  ஆணவமும் கன்மமும் மாயை போன்ற மும்மலங்களை நீக்கி, பிறவியில்லா பெருங்கடல் நீந்தி, இறையை பாதத்தை அணுகுவதற்காக என்று தோன்றுகிறது, ஐயனே.



காகபுசண்ட மாமுனிவர் :-  எதை தோன்றுகின்றதோ, இருக்கின்றதோ, இல்லாததோ—எவையெல்லாம் இங்கே சொல்லக்கூடாது. பெரியவனே….. அறிந்தும் சொல்லுதல்  வேண்டும். எவரோ செப்பியது…. எவரோ எதை என்று கணித்தது எல்லாம்….. எண்ணத்தில் சொல்லக்கூடாது. அறிந்தும் இதனால் 


சுவடி ஓதும் மைந்தன் :-  ( இது பதில் அல்ல …) 


காகபுசண்ட மாமுனிவர் :-  எதை என்று புரிய, எதை என்று புரிய,  இப்படி அறிந்தும் அறிவாளியாக இருக்கின்றீர்கள். இவ் அறிவாளி……அறிவாளிகளால் என்ன செய்ய முடியும் என்று நீங்களே பின் சொல்லுங்கள்?


சுவடி ஓதும் மைந்தன் :-  இவ்வளவு அறிவாளியா இருக்கிறீங்களே நீங்க….. உங்களால என்ன செய்ய முடியும்னு கேட்கிறார்?


அடியவர் 5:- ஒன்றும் செய்ய முடியாதுங்க, ஐயா.


அடியவர் 7:-  ஐயனே, எங்களால் ஆவது ஒன்றுமில்லை. எல்லாம் தந்தை அகத்திய பெருமான் அருளால்…..


காகபுசண்ட மாமுனிவர் :-  ஏது என்று புரிய, யான் வந்திட்டால் இப்படி சொல்வது. ஆனால் சென்றிட்டால்….. ஏது.. ஏதோ… பேசுவது. நியாயமா?..... 


சுவடி ஓதும் மைந்தன் :-   நான் வந்துட்டா…. என் முன்னாடி இப்படித்தான் சொல்லுவீங்க. எங்களுக்கு அறிவு இல்லைன்னு சொல்லிட்டு…… ஆனா இல்லாதபோது… அறிவு இருக்குமே, பேசுவதுன்றார். 


( சில உரையாடல்கள் )


சுவடி ஓதும் மைந்தன் :-   இன்னும் அவர் விடையே வரல. நீங்க உங்களுக்காகவே காத்துட்டு இருக்கார்.


சுவடி ஓதும் மைந்தன் :-  நம்ம பேசாத யாருன்னு சொல்லணும். அவருக்கு சான்ஸ் கொடுத்துட்டார். ரெண்டு தடவை யாருன்னா சொல்லணும். ஏதாவது புக்ல ஏதாவது எடுத்து சொல்லுங்க. திடீர்னு எங்காவது பக்கத்துல ஏதாவது புக்கையோ, ஏதாவது இருந்தா.


அடியவர் 3:-   நமச்சிவாய வாழ்க !!!!!  இது ஈசனைப் பத்தி…. முழுக்க முழுக்க ஈசனைப் பத்தி…. ஈசனோட படைப்பைப் பத்தி….. ஈசன் தான் எல்லாம்—அப்படிங்கிற உணர்த்துதல் பத்தி…. எல்லாமே ஈசன் தான்…. அப்படின்னு.


காகபுசண்ட மாமுனிவர் :-  அது போல் நீ நினைத்துக் கொண்டிருக்கின்றாய், அவ்வளவுதான். அவன் நினைப்பானா என்ன? 


சுவடி ஓதும் மைந்தன் :-  ( இது பதில் அல்ல …) 


சுவடி ஓதும் மைந்தன் :-  இப்படித்தான் நினைச்சுட்டு இருப்ப. 


காகபுசண்ட மாமுனிவர் :- இதனால் அறிந்தும்—ஏது என்று அறிய, அதாவது, ஈசனைப் பற்றியே தெரியவில்லை. இருந்தும் எவை என்று கூற, ஈசனை நோக்கி, எவை என்று கூற, தவம் இருப்பதா? 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஈசன் யாருன்னே தெரியல. 


காகபுசண்ட மாமுனிவர் :- எதை என்று புரிய, சிவபுராணம் என்று எவை என்று புரிய. இதனால் பின் எதற்காக சொல்கின்றோம் என்று தெரியாமல் இருக்கின்றீர்கள். 


காகபுசண்ட மாமுனிவர் :- அதனால் பின் எவை என்று புரிய, பின்—அதாவது, இப்படித்தான் நீங்கள் செய்து கொண்டு இருக்கின்றீர்கள். தெரியாதது…. தெரியாது என்று சொல்லி விட்டு போய்விடலாம். ஆனால் சமாளிக்கின்ற—சமாளிக்கின்றீர்களே…. அதுதான் பெருமையாக இருக்கின்றது. 


சுவடி ஓதும் மைந்தன் :-  தெரிஞ்சா சொல். தெரியாதது வந்து, "எனக்கு தெரியலப்பா"ன்னு சொல்லிட்டு இருக்கலாம். ஆனா இப்படி எல்லாம் சொல்லி சமாளிக்கிறீங்க பாருங்க….


அடியவர் 7:- தந்தையே, சிவபுராணம் ஈசனால் இயற்றப்பட்டது. மாணிக்கவாசர்களால் உலகுக்கு தெரியப்படுத்தப்பட்டது. அந்த புராணத்தை மாணிக்கவாசகரே பல ஆயிரம்… பல நூறு வருடங்களாக….. திரும்பத் திரும்ப படித்தும்…. ஒரு சில பொருள் விளங்கவில்லை என்று ஈசனிடமே முறையிட்டுள்ளார். அவ்வாறு இருக்க, நாங்கள் எளிய மனிதர்கள்.  எங்களுக்கு புரியறதுக்கான வாய்ப்பில்லை, தந்தையே.


காகபுசண்ட மாமுனிவர் :- மானிடனை விடு. 


சுவடி ஓதும் மைந்தன் :-  மானிடனை விடு. சரி, விடுப்பான்றார்.


அடியவர் 7:-  தாங்களே அதை—தாங்களே அதை அருள் கூர்ந்து எங்களுக்கு விளக்குங்கள், தந்தையே.


காகபுசண்ட மாமுனிவர் :- எதை, ஏது என்று புரிய, அனைவரும் நீ கேட்டு பார். அறிந்தும்—எப்படி சமாளிக்கிறார் என்று பார்ப்போம். 


சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லாரும் நீ கேட்க சொல்லு முதல்ல. ஏதாவது ஒன்னு கேட்டு, உங்களுக்கு தெரியுமான்னு நீயே கேட்க சொல்றார். 


சுவடி ஓதும் மைந்தன் :- தெரியலன்னா, அப்புறம் நான் சொல்றேன். நீயே கேளுப்பா. எல்லாரையும் யாராவது தெரியுமா, யாராவது சொல்றீங்களா?


அடியவர் 7:-  ( இப்போது அனைவரிடமும் கேட்க ஆரம்பித்தார்கள் ) 


அடியவர் 7:-  ஐயா, இது—இது தவிர வேற எது விளக்கம் இருந்தா சொல்லுங்க, ஐயா. நான் கூறிய கருத்து என்னவென்றால், தந்தை பலமுறை கூறியிருக்கின்றார்.


அடியவர் 7:- மாணிக்கவாசகப் பெருமானுக்கே ஒரு சில வரிகளின் அர்த்தம் புரியவில்லை என்று…. நாம்…. இதை சிவபுராணத்தை இயற்றியவர் மாணிக்கவாசகர் என்று கருத்தில் கொண்டு நாம் நினைக்கும்போது….. அவருக்கே தெரியவில்லை என்றால்…. உறுதியாக மனிதர்களுக்கு தெரிய வாய்ப்பே கிடையாது.


காகபுசண்ட மாமுனிவர் :-  எதை, ஏது என்று கூற, பேசுவார்களே. வளவள என்று.  பேச சொல், மானிடா. 


சுவடி ஓதும் மைந்தன் :-  இப்ப.. எது எதோ பேசுவாங்க இல்ல, வளவளன்னு சொல்லிட்டு, இப்ப பேச சொல்லுப்பா  என்று சொல்றாரு. 


===========================

# அன்போடே சொல்கின்றேன். கவலைகள்  வேண்டாம். 

===========================


காகபுசண்ட மாமுனிவர் :-  எதை அறிந்தும்—அகத்தியன் உதவியோடு அறிந்தும் வந்தேன். அதாவது, சுலபமாகத்தான் யான் சொல்வேன். அன்போடே சொல்கின்றேன். கவலைகள்  வேண்டாம். 


சுவடி ஓதும் மைந்தன் :-  அகத்தியர் வந்து—அகத்தியர் சொன்னதுனால்தான் வந்தேன். நான் எதுவும் சொல்ல மாட்டேன். அன்போடுதான் சொல்றேன். நீங்க சொல்லுங்கன்றார்.


அடியவர் 3:- எங்களுக்கு தெரியல, நீங்களே சொல்லுங்க. 


அடியவர் 7:-  தந்தையே என் அறியாமைக்கு….( சொல்லி முடிப்பதற்குள் )



காகபுசண்ட மாமுனிவர் :-  அறிந்தும்—தெரிந்தும்—அறிந்தும்—அதாவது, தெரியாமலும் எவை என்று அறிய. தெரிந்தது போல் நடிப்பது. 


சுவடி ஓதும் மைந்தன் :-  எப்படி சொல்றான்னா, தெரியாதது ஒன்னு…. தெரிஞ்சது போல் நடிப்பது. 



காகபுசண்ட மாமுனிவர் :-  அறிந்தும்—இவை எல்லாம் பாவத்தை உண்டாக்கும். 


===========================

# சிவ புராணம் = ஜீவ புராணம் = உயிர்.

===========================


காகபுசண்ட மாமுனிவர் :- அறிந்தும்—எதை என்று அறிய, அறிந்தும்—இவை என்று புரிய, எதற்கு எவை என்று அறிய, பின் ஜீவ…அறிந்தும்—புராணமே என்று பொருள். அதாவது, உயிர் என்றே பொருள். 


அடியவர் 8:-  ( ஆச்சரியத்தில் ) அப்பா !!!!!


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, என்ன சொல்றார் தெரியுங்களா? ஜீவபுராணம்.


அடியவர் 1:- சிவபுராணம் — ஜீவ புராணம் என்று சொல்லிட்டார்கள். அருமை !!!!!


சுவடி ஓதும் மைந்தன் :- ஜீவ புராணம்.


அடியவர் 1:- ஜீவ புராணம். ஓகே.


===========================

# சிவ புராணம் = ஜீவ புராணம் = உயிர் காப்பது. 

# இதுவே இதன் தத்துவம். 

===========================


காகபுசண்ட மாமுனிவர் :- அறிந்தும்—எதற்காக ஜீவன்?  எதை என்று புரிய? அதாவது, பின் அறிந்தும்—எவை என்று அறிய.  


***** பின் உயிர் காப்பது ***** 


அறிந்தும்—எதை என்று அறிய. 


***** இதுவே இதன் தத்துவம். *****


சுவடி ஓதும் மைந்தன் :- உயிர் காப்பது, அதாவது, ஜீவ. ஐயா, சிவபுராணம்னா, ஜீவபுராணம். அப்ப உயிரை காக்கும். 


அடியவர் :- உயிரை காக்கக்கூடிய கவசம். 


காகபுசண்ட மாமுனிவர் :- அறிந்தும்—மானிடா, உன்னை எப்படி காப்பது என்பதே அதன் அர்த்தம். அதாவது, எவை பொருள். 


சுவடி ஓதும் மைந்தன் :-  அதாவது, ஒரு மனிதனை…. ஐயா?


அடியவர் :- எப்படி காக்க வேண்டும் என்பதுதான் அதனுடைய அர்த்தம். 


சுவடி ஓதும் மைந்தன் :- எப்படி காக்க வேண்டும் என்பதே அதனுடைய பொருள். 


காகபுசண்ட மாமுனிவர் :- இதனாலே கூர்ந்து கவனித்து பார்த்தாலே அனைத்து விடயங்களும் தெரியும். அறிந்தும்—இதை எவை என்று புரிய, இதனையே பின் தெரியாமல் இருந்தால், ஈசன் எப்படி அருள் கொடுப்பான்? கர்மத்தை எப்படி தொலைப்பான்?  நீங்களே சொல்லுங்கள். 


சுவடி ஓதும் மைந்தன் :- இதுவே தெரியல. சிவபுராணம்னா, ஜீவபுராணம். அது வந்து—.


அடியவர் 5:- புரியுதுங்க, ஐயா. புரியுது.


சுவடி ஓதும் மைந்தன் :- ஜீவபுராணம்.


சுவடி ஓதும் மைந்தன் :- ஜீவபுராணம். அதுவே வந்து தெரியாம, ஈசனை வணங்கினால், ஈசன் என்ன செய்வான் என்று கேட்கிறார். 


…….. ( ஆடியோ தடங்கல்கள்) …


காகபுசண்ட மாமுனிவர் :- அறிந்தும்—இதன் தன்மையை, எதை என்று புரிய, இதனால் அனைத்தும் அறிந்தும் இப்படித்தான் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் உயிர் பிழைக்கும் என்று சொல்வதே ஜீவபுராணம். 


சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, ஒரு மனுஷன் இப்படித்தான் இருக்கணும். இப்படி வாழ்ந்தால்தான் இந்த உலகத்துல உயிர் பிழைக்க முடியும். ஐயா, புரியுதுங்களா?


அடியவர் 5:- புரியுது, ஐயா.


சுவடி ஓதும் மைந்தன் :- அதுதான்—அதுதான்? 


அடியவர் 5:- சிவபுராணம். 



சுவடி ஓதும் மைந்தன் :- சிவபுராணம். ஒரு மனிதனுக்கு என்னென்ன—ஒரு உயிருக்கு என்னென்ன தேவையோ, அது எழுதப்பட்டிருக்கிறது. வந்து….எப்படிங்க, எப்படி—எப்படி நம்ம பொருள் சொல்றது? நல்லா சொல்லுங்க, யாராவது.



அடியவர் 1:-  ஐயா, எப்படி வாழணும்? அறம், பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டி, அந்த மாதிரி எப்படி வாழணும்னு சொல்லி பெருமானார் சொல்றாரு, ஐயா. இந்த ஜீவன் எப்படி….


சுவடி ஓதும் மைந்தன் :- இந்த உயிர்.


அடியவர் 1:- அந்த உயிர் எல்லாமே—ஒரு உயிர் எப்படி பிறக்குது? என்ன மாதிரி பண்றோம்?  எத்தனை பிறப்பு எடுத்திருக்கோம்?  அந்த பிறப்போட சுழற்சி எப்படி?  அதோட எப்படி வாழணும்னு சொல்லி பெருமானார் சொல்றாரு, ஐயா. அதனால, இந்த ஜீவன் வந்து நம்ம உடம்புல இருந்து வாழணும்னா, தினமும் சிவபுராணம் படிக்கணும்ன்றது புரியுது, ஐயா.



காகபுசண்ட மாமுனிவர் :- எதை என்று கூற, பின் படித்தால், பின் நிச்சயம் தன்னில் கூட உயிர், எதை என்று புரிய. இதனால் உணர்ந்து ஓதுதல் வேண்டும். இதுவே தெரியவில்லை. 


சுவடி ஓதும் மைந்தன் :- படித்தால் மட்டும் போதாதுப்பா.


அடியவர் 1:-  நன்றி. ஓகே. குருநாதர்.


சுவடி ஓதும் மைந்தன் :-  சிவபுராணம்னா என்னன்னு தெரிஞ்சுக்கணும் முதல்ல. 


===========================

# சித்தர்கள், உயிர் காக்கும் ஜீவ புராணம் அதன் பொருள் விளக்கத்தை வரும் காலத்தில் அனைவருக்கும் சொல்லுவார்கள்….

===========================



காகபுசண்ட மாமுனிவர் :- அதன் விளக்கத்தை பின்பு சித்தர்கள் சொல்வார்கள். 


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப இன்னும் அந்த சிவபுராணத்தை, அந்த விளக்கத்தை, இதையே வந்து இப்பதான் தெரிஞ்சுக்கிறீங்க. நீங்க வந்து…. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அய்யா இதை ரெக்கார்ட் பண்ணுங்க. பொது வாக்குல உரைக்கலாம்… ( அனைவருக்கும் பகிரலாம் ) 


சுவடி ஓதும் மைந்தன் :-   அப்ப இதுவே இப்பதான் நீங்க தெரிஞ்சுக்கிறீங்க. இதுக்குள்ள இருக்கிறது வந்து எப்ப நீங்க—ஐயா, புரியுதுங்களா, ஐயா? ஹலோ?


அடியவர் 7:-  புரியுது, ஐயா. புரியுதுங்க, ஐயா.


அனைத்து அடியவர்களும் :-  புரியுது, புரியுது. சொல்லுங்க, ஐயா. 


காகபுசண்ட மாமுனிவர் :- அறிந்தும்— அறியாதவர் எவர்? 


உணர்ந்தும்—உணராதவர் எவர்? 


இதை இருந்தும்—அறிந்தும்—பின் எதை பெற்றோர் எவர்? 


பெறாதோர் எவர்? 


எவர் என்று கூற முடியுமா? 


அனைத்து அடியவர்களும் :-  ஐயா….?


அடியவர்கள் :- ( அமைதி ) 

………


காகபுசண்ட மாமுனிவர் :- அறிந்தும்—இதனை கூட அறிந்தும்—பின் திருடரை  போல் முழிப்பார்கள். 


எதை என்று அறிய, 


***** அனைத்தும் உயிரே. *****


அறிந்தும்  இவ்வுயிரை காக்க, எதை என்று புரிய, அறிந்தும்—இதனால்—இதற்கூற , 


பின் அனைத்தும் இது அடங்கியுள்ளது. 


***** இதன் தத்துவமே ஜீவ புராணம். *****


சுவடி ஓதும் மைந்தன் :- உடலுக்குள்ள எல்லாமே என்னென்ன, ஐயா? 


அடியவர்கள் :-  ஐயா, சொல்லுங்க…கேக்குறோம்ங்க அய்யா எல்லோரும் 


சுவடி ஓதும் மைந்தன் :- என்ன சொல்றதுன்னா—எக்ஸ்பிளைன் பண்ணுங்க, யாராவது. …….ஐயா, …….ஐயா.


அடியவர் 5:- சொல்லுங்க, ஐயா.


சுவடி ஓதும் மைந்தன் :- எக்ஸ்பிளைன் பண்ணுங்க, ஐயா. கொஞ்சம் மூச்சு வாங்குது.


அடியவர் 5:- அதான், ஐயா, எனக்கு புரிஞ்ச வரைக்கும் எப்படின்னாங்க, ஒரு மனித உயிர் எடுத்துட்டா, எப்படி வாழ்ந்தா, அது இந்த பிறவியிலும் காக்கப்பெறும். வந்த நோக்கமும் நிறைவு பெற்று.. இறைவனை அடைய முடியும். அப்படிங்கறதுக்கான வழிமுறைகள் அதுல சொல்லப்பட்டிருக்கு. அது வெறுமனே வாசிச்சா, வாயால வாசிச்சா பயன் கிடையாது. அதுல சொன்ன ஒன்னொன்னையும் உணர்ந்து, உணர்ந்து, பின்பற்றி வாழணும். அப்படின்னு சொல்றாங்க, அப்பான்னு நினைக்கிறேன், ஐயா.


===========================

# சிவபுராணம் என்ற  தலைப்பைப் பற்றியே யாருக்கும் இவ்வுலகில் தெரியவில்லை…… தலைப்பை உணராமல் ஓதி என்ன பயன்?

===========================


காகபுசண்ட மாமுனிவர் :-  தலைப்பைப் பற்றியே தெரியவில்லை. அதில் இருக்கும் பின் சிறந்த எழுத்துக்களை எப்படி இவர்கள் பின் நிச்சயம் ஏற்பார்கள், அதாவது, பின் உணர்ந்து ஓதுவார்கள் என்று நீ நினைக்கின்றாயே? 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, என்ன சொல்றார் தெரியுங்களா? தலைப்பைப் பற்றியே தெரியலையே, அப்பா. தலைப்பு என்னது, ஐயா?



அடியவர் 7 :- சிவனுடைய புராணம்.


சுவடி ஓதும் மைந்தன் :-  ஜீவபுராணம். 


அடியவர் 5:-  ஜீவபுராணம். 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஜீவன் என்றால் உயிர். அந்த உயிர் வாழ்வதற்கு என்னென்ன—அதுல ஏதோ இருக்குதுன்றார் வந்து. அந்த தலைப்பையே தெரியல இன்னும். இதுல இருக்கிறதுக்கு பொருள் எப்படிப்பா தெரியும்ன்றார்?


அடியவர் 5:- மாணிக்கவாசகப் பெருமானே கடைசில எழுதி இருக்காங்க. சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ் என்று. அந்த கண்டிஷனை சொல்லி இருக்காங்க.


சுவடி ஓதும் மைந்தன் :-  தலைப்பே தெரியலன்றார். 


காகபுசண்ட மாமுனிவர் :-  அப்பா, இவ்வளவு அறிவுகள் வைத்திருந்தால், பின் எவை என்று கொடுக்க, அதனை அழகாக நீங்கள் எப்படி காத்துக் கொள்வீர்கள்? 


சுவடி ஓதும் மைந்தன் :-  இவ்வளவு அறிவு வச்சு, ஏதாவது கொடுத்தா, உங்ககிட்ட நீங்க எப்படி காப்பீங்கன்றார் வந்து, ஐயா?


அடியவர் 5:- ம் …. சொல்லுங்க அய்யா 


===========================

# சித்தர்கள் தான், பக்குவம் பெற்ற மனிதர்களை தேடி வரவேண்டும்.

===========================


காகபுசண்ட மாமுனிவர் :-  அப்பா, அறிந்தும்—பின் செல்லமாகவே சொல்கின்றேன். சித்தனை வணங்குவதற்கும் ஒரு தகுதி—தகுதி வேண்டும். அத்தகுதி யாரும் பெற்றிருக்கவில்லை. 


( அமைதி ) 


காகபுசண்ட மாமுனிவர் :- அகத்தியன் ஏதோ கருணை காட்டி, ஏதோ, பின் பிழைத்துக் கொள்ளுங்கள் என்று விட்டு வைத்திருக்கின்றான். அவ்வளவுதான். 


காகபுசண்ட மாமுனிவர் :-  சித்தனை வணங்குவதற்கும், அறிந்தும் அவ்வழியில் வருவதற்கும் எதை என்று புரிய.. வந்து பாருங்கள். எவ்வளவு அடிகள்  என்று, பின் நீங்கள் உணர்வீர்கள். எதற்கடா வந்தோம் என்றெல்லாம். 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, புரியுதுங்களா? 


காகபுசண்ட மாமுனிவர் :-  ஆனாலும், எதை என்று புரிய, பின் சித்தர்கள் அறிந்தும்—அதாவது, எங்களைத் தேடி, (நீங்கள்) பின் வந்துவிட்டாலும், யாங்கள் ஏற்றுக்கொள்வோமா என்ன? 


காகபுசண்ட மாமுனிவர் :-  ***** உங்களைத் தேடி யாங்கள் வரவேண்டும். ***** 


***** அவ் பக்குவத்தை நீங்கள் பெற வேண்டும். *****


**** அவ்வளவுதான். *****


( அமைதி )


காகபுசண்ட மாமுனிவர் :- பக்குவங்கள் பெறவில்லை. ஆனால், ஏதோ, பின் பாவம் என்று—அதாவது, ஏதோ தவறு செய்துவிட்டார்கள். மன்னித்து விடுவோம் என்று, ஏதோ, பூர்வ ஜென்மத்தின் தொடர்பாக, அகத்தியன் வந்திருக்கின்றான். அவ்வளவுதான். 


காகபுசண்ட மாமுனிவர் :- பின் அப்படி, பின் வந்திருந்து, ஆனாலும், மிகப் பெரிய அறிவாளியாக—அறிவாளிகள் எல்லாம் இங்கு இல்லை. சாதாரண முட்டாள்களே. சிறிது அறிவு கொடுத்து, அகத்தியன் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றான். அவ்வளவுதான். 

…..

காகபுசண்ட மாமுனிவர் :- அறிந்தும்—ஏது என்று கூற, வாய்தான் அதிகம். பின்—அதாவது, வாய் அதிகம் என்பது, பின் பேசுவதல்ல, பொய் சொல்வது. 


சுவடி ஓதும் மைந்தன் :-   ஐயா, புரியுதுங்களா, ஐயா?


அடியவர் 1 :- புரியுது அய்யா.


(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 12.08.2026   அன்று   அன்புடன் காகபுசண்ட மாமுனிவர் அருளிய கூட்டுப்பிரார்த்தனை குழுவினருக்கான ஞான பாடங்கள் வாக்குகள் …. தொடரும் ) 


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.  சர்வம் சிவார்ப்பணம்.