“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Thursday, September 10, 2026

சித்தர்கள் ஆட்சி - 710:- அன்புடன் அகத்திய மாமுனிவர் - சென்னை சத்சங்க வாக்கு - 05/07/2026 - பகுதி - 15

 இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 05/07/2026  அன்று சென்னையில் நடந்த   அன்புடன் அகத்திய மாமுனிவர் யாத்திரை குழுவினருக்கான சத்சங்க வாக்கு - பகுதி 15


வாக்குரைத்த நாள், நேரம்  :-  05/07/2026 (ஞாயிற்றுக்கிழமை) , காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 


===========================

# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 

===========================


ஆதி சிவசங்கரியின் பொற்  கமலத்தை பணிந்து செப்புகின்றேன், அகத்தியன். 


அம்மையே, அப்பனே, அனைவருக்குமே எம்முடைய ஆசிகள். 


( பகுதி 14  அதன் தொடர்ச்சியாக ….)


குருநாதர் :-   அப்பனே, கேள். 


சுவடி ஓதும் மைந்தன் :-  கேட்கலாம். 


அடியவர் #4:- அப்பா பைத்தியசாமிக்கு பெற்றோர்களை அரிசி தர சொல்லி இருந்தீர்கள். அவர்கள் ஒரு பங்கு கொடுத்திருக்கிறார்கள். ஆசீர்வதிக்க வேண்டும். 


குருநாதர் :-   அப்பனே, இது எவ்வாறு நியாயம்? இன்னும் கொடுக்கச் சொல்.  சொல்கின்றேன். 


அடியவர் #4:-  ஐயா, மனம், மனம், இப்பொழுதிற்கு அவர்களிடம் இல்லை. 


குருநாதர் :-   அப்பனே, உன்னிடம் இருக்கின்றது அல்லவா? 


அடியவர் #4:-  செய்கின்றேன் அப்பா . 


குருநாதர் :-   அப்பனே, எது என்று அறிய  அப்பனே, நிச்சயம் தன்னில் , நீ செய். அவர்களுக்காக, 


அடியவர் #4:-  நிச்சயமாக…. 


அடியவர் #4:- ஐயா, இந்த நாவல்வனநாதருக்காக, அம்பாள் சிலை செய்கிறார்கள். 


சுவடி ஓதும் மைந்தன் :-  ….? 


அடியவர் #4:-  நாவல்வனநாதருக்கு, அம்பாள் சிலை செய்கிறார்கள். அம்மா, சாநித்யத்துடன் வரவேண்டும். 


குருநாதர் :- அப்பனே, நிச்சயம். 


அடியவர் #4:- ஐயா, அங்கே அடிக்கடி மூன்று நாமம் கொண்ட அரவு தென்படுகிறது. 


குருநாதர் :-  அப்பனே, எழுப்பு. அழைத்து வந்தவனை, அழைத்து வந்தாயே. 


சுவடி ஓதும் மைந்தன் :- அவரே, கேள்.


( இவ் அடியவரை , மற்றொரு உடன் வந்த அடியவரை பார்த்து கேள்விகள் கேட்க சொன்னார்கள் )  


அடியவர் #4:- ஐயா, அவர்களையும் நான்தான் அழைத்தேன். 


குருநாதர் :-  அப்பனே, நிச்சயம். 


சுவடி ஓதும் மைந்தன் :-  அவரையே  கேளுங்க. 


அடியவர் #4:- ஐயா, அந்த சிவன் கோயில் இருக்கு இல்லையா? 


அடியவர் #5:-  ஆமாங்க, ஐயா. 


அடியவர் #4:-  அங்க அடிக்கடி வந்து, அந்த நாகம் நல்லா பண்ணுது. பின்னாடி மூன்று நாமம் போட்ட மாதிரி, அடிக்கடி அங்கேயே சுத்திட்டு இருக்கு. சிவன் கிட்ட இல்ல, அந்த கோயிலை சுத்தி அடிக்கடி தென்படுது. அது எதை உணர்த்துகிறது? 


அடியவர் #5:-   ஐயா, பொதுவாக சித்தனே, சிவன். சிவனே, சித்தன். எங்கெல்லாம் சிவனுடைய ஸ்தலங்கள் இருக்கிறதோ, அங்கு வந்து சித்தர்கள் வருகின்ற உருவமே அரவம் தான். அந்த உருவத்தில் அவர்கள் வருவார்கள், போவார்கள். அது வந்து ஒரு நற்காரியத்திற்காக.  அதிகமான பூர்வ புண்ணியம், அதிகமான அளவுக்கு சித்தர்கள் பற்று இருக்கிறவர்கள் மட்டும்தான் அந்த வனத்துக்குள்ள இருக்கக்கூடிய சிவலிங்கத்தை போய் பார்க்க முடியும். மற்ற கோயில்கள் மாதிரி 365 நாள் கூட்டம் எல்லாம் வராது. சிவனுக்குரிய நாள் எது? 


அடியவர் #4:- சிவராத்திரி. 


அடியவர் #5:-  மாதத்தில் சிறப்பு? 


அடியவர்கள்:- பிரதோஷம், 


அடியவர் #5:-  பிரதோஷம் என்ற ஒரு நாள்ல மட்டும் அல்லது பௌர்ணமி நாள், இந்த நாட்கள்ல மட்டும்தான் அங்க கூட்டம் வரும். மற்ற நேரத்தில் கூட்டம் வராது. அவர் கேட்டு பாருங்க. 


அடியவர்கள்:- ஆமா, ஐயா. 


அடியவர் #5:-  அப்போ அந்த புனிதமான இடம் எந்தவிதமான சத்தமும், ஆரவாரமும் இல்லாத இருக்கிற இடத்துல நம்ம போய் தியானித்தாலோ அல்லது நம்முடைய பிரச்சனைகளை சொன்னாலோ, அதற்கான பலன் நிச்சயமா கிடைக்கும். ஏன்னா, கூட்டம் சேர்ந்தா அந்த பலன் போயிடும். தனித்திரு, விழித்திரு, நினைத்திருன்னு ஏன் சொல்றோம்? அந்த எண்ணத்தில் அந்த இடம் அமைந்திருக்கும். அதனால உங்களுக்கு எந்த குழப்பமும் வேண்டாம். நீங்க ஏன் இப்ப வர வர அடிக்கடி குழப்பம் ஆகுறீங்க? அவர் மாற்றிவிடுவார்.


அடியவர் #5:- (..........................) 


குருநாதர் :-  அப்பனே, ஏனென்றால் இவன் குழப்பவாதி தலைவன் என்பேன் அப்பனே. 


அடியவர்கள்:-  ( குபீர் சிரிப்புகள்…. )


அடியவர்கள்:- ஏன்னா இவர் குழப்பவாதி என்னோட தலைவர், தலைவர் ஐயா. 


குருநாதர் :- அம்மையே, கவலைகள் இல்லை. எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட நீ ஏதும் இல்லை என்று நினைத்து விடாதே. மாணிக்கம், பின் அதனுள்ளே இருக்கின்றது. 


சுவடி ஓதும் மைந்தன் :-  நீ ஏதும் ஒன்னும் நினைக்காதம்மா. அது உள்ள ஒரு மாணிக்கமே இருக்கு. 


சுவடி ஓதும் மைந்தன் :- கேட்கலாம். 


===========================

# வாழ்வில் குழப்பம் நீங்க என்ன வழி?

===========================


அடியவர் #4:-  ஐயா, இந்த குழப்பவாதி என்ற பட்டம் நீங்கி, அறிவாளி என்ற பட்டம் எப்பொழுது கிடைக்கும்? 


குருநாதர் :-  அப்பனே, பின் நிச்சயம் அழைத்து வந்தவனை . எழு, 


சுவடி ஓதும் மைந்தன் :- அவரே கேட்டு சொல்றார். 


அடியவர்கள்:-  (சிரிப்புகள்…. )


அடியவர் #5:- ( எழுந்தார்கள் ) 


அடியவர் #4:- ஐயா, இந்த குழப்பமான மனநிலை நீங்கி, தெளிவான மனநிலை அமைய………


அடியவர் 7 :- அறிவாளிங்கிற நினைப்பு வேணும். 


அடியவர் #4:- ஆமாம் அய்யா. தெளிவான… நல்ல அறிவு செயல்பட என்ன செய்ய வேண்டும்? 


அடியவர் #5:- யார் குடும்பத்தில், வெளியில், எங்கு சந்தித்து, எதை பார்த்தாலும், அதை உன் காதில் வாங்கி, அடுத்த காதில் விட்டு விடு.  குழப்பம் விலகும். 


அடியவர்கள்:-  (கைதட்டல்கள் ….சிரிப்புகள்…. )


சுவடி ஓதும் மைந்தன் :-  அகத்தியர் எப்படி பார்த்தீங்களா? இவர் சொல்லலாம். ஏன் அவர் சொல்ல வைக்கிறாருன்னா, அந்த டேலன்ட், அந்த நாலேஜ், இறைவன் அவருக்கு கொடுத்திருக்காரு. புரியுதுங்களா? 


அடியவர் #4:-  ஐயா, (அடியவர் #5) மாணவன் என்று  சொன்னாரு. 


சுவடி ஓதும் மைந்தன் :- பாருங்க…. அடுத்து 


அடியவர் #4:-  ஐயா, கோமதி சக்கரத்தின் சிறப்புகள் கூற வேண்டும். 


குருநாதர் :-   எதை புரிய, நிச்சயம் பின், அதாவது அனைத்தும் நீயே என்று சொல்லிவிட்டாய். கவலையை விடு. 


சுவடி ஓதும் மைந்தன் :-  என்ன சொல்லிட்டாங்க? 


அடியவர் #4:-   எல்லாமே அகத்தியர். 


சுவடி ஓதும் மைந்தன் :-   அவ்வளவுதான். அதை பத்தி இப்படி பண்ணிட்டார். அடுத்து சொல்லுவார்..


அடியவர் #4:- அன்னை லோபமுத்திரா அகத்தியரப்பா  ஆசிகள் தொடர்ந்து எல்லோருக்கும் கிடைக்கனும்…


குருநாதர் :-  அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பின் ஆசீர்வாதங்கள் இருப்பதனால் தான். அப்பனே, நிச்சயம் பின் அழைத்து வந்து பேசிக் கொண்டிருக்கின்றேன். இவ்வளவு நேரம் அப்பனே…. பல வேலைகள் எனக்கு. 


அடியவர்கள்:-  (கைதட்டல்கள் ….)


அடியவர் 7:- சாய்  ராம் 


அடியவர் #4:- அதற்கு நன்றிகள்  அப்பா. 


குருநாதர் :-  அப்பனே, நிச்சயம் தன்னில் கூட  நல்லதே செய். அதுதான் நன்றி. 


சுவடி ஓதும் மைந்தன் :-  நல்லதே செஞ்சா, அதுதான் எனக்கு கொடுக்கிற நன்றி என்றார். 


குருநாதர் :-   அப்பனே, சில எவை என்று கூற பின்  உபதேசங்கள் அவனிடத்தில், பின் நிச்சயம் கற்றுக்கொள். 


சுவடி ஓதும் மைந்தன் :- சில உபதேசங்கள் அவர் கேட்டு தெரிஞ்சுக்கோன்றார். 


அடியவர் #4:-  சரிங்க, ஐயா. 


சுவடி ஓதும் மைந்தன் :- ஓகேங்களா? உங்க கொஸ்டின் முடிஞ்சதா? 


அடியவர் #4:-  ஐயா. பாக்கியம். 


குருநாதர் :-  அப்பனே, அடுத்து, 


சுவடி ஓதும் மைந்தன் :- அடுத்து யாருக்கு வேணுமோ, அவர் பாடல் பாடலாம். யாருக்கு உங்களுக்கு வேணுமா? பாட்டு பாடி கேள்வி கேட்கணும். 


சுவடி ஓதும் மைந்தன் :- இவருக்கும், இவருக்கும். இப்ப கேள்வி கேட்டாங்களா? பாடுங்க, ஐயா. பாடுங்க. 


===========================

# அடியவர் 6 - பாடல் பாடினார்கள்…

===========================


தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்

காடுடைய சுடலைப் பொடிபூசி என்உள்ளம் கவர் கள்வன்

ஏடுடைய மலரான்முனை நாட்பணிந் தேத்தஅருள் செய்த

பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே 


( அடியவர்  #6 பாடல் பாடி முடித்த பின்னர் ….) 


அடியவர் #6 :- ஐயா, ………… ஆலயத்துல வந்து ஒரு பழைய திருமேனி கிடைச்சிருக்குங்க ஐயா. அது டிஸ்டர்ப் பண்ணலாமா என்னென்னு தெரியல  அது அந்த இடத்துல வந்து மண்ணு…..


குருநாதர் :- அப்பனே, எது என்று புரிய அப்பனே, மிக அப்பனே பின் எவை என்று கூற, எது என்று மிகப்பெரிய அப்பனே பின் ஒரு சில விஷயங்கள் பொதிந்துள்ளது என்பே,ன். அப்பனே, அதனால்தான், அப்பனே, நிச்சயம் தங்கள் ஈசனே பொறுத்துக் கொண்டு இருக்கின்றான் அப்பனே.


குருநாதர் :- அதனால்தான் எவரிடத்திலும் உதவிகள் கிடைக்கவில்லை என்பேன். அப்பனே. 


சுவடி ஓதும் மைந்தன் :- ஓகேங்களா? 


குருநாதர் :- அப்பனே, நீ எங்கு சென்றாலும், அப்பனே, இவ்வாறுத்தான் ஈசன் தடுத்து நிறுத்துவான் அப்பனே. இதனால்  அப்பனே, பின் அங்கு பொதிந்துள்ளது பின் அதிகம் என்பேன். 


சுவடி ஓதும் மைந்தன் :-  நிறைய சில சில விஷயங்கள் எல்லாம் கிடைக்குது. இன்னும் இருக்குதுமா? வந்து அது கிடைச்சா மட்டும்தான் உங்களை அடுத்த வந்து வாய்ப்பு வந்து அங்க இது பண்ணனும்னு சொல்றாரு. வந்து ஆமா, நிறைய வந்து அங்க இது இருக்குது. வந்து அதனாலதான், வந்து அதெல்லாம் எடுத்தா மட்டும்தான், வந்து அடுத்த நீங்க வந்து கரெக்டா செய்ய முடியும்ன்றாரு. வந்து 


குருநாதர் :-  நிச்சயம் உதவி செய்கின்றேன் அப்பனே, கவலை வேண்டாம், 


===========================

# அண்ணாமலையில் நேரடியாக வந்து பேசிய அண்ணாமலையார்….

===========================

# அண்ணாமலையார் திருவடிகள் போற்றி போற்றி போற்றி !!!!!

===========================


அடியவர் #6 :- ஐயா. நீங்க, ஐயா, வந்து ஒருத்தர் ஒரு தடவை வந்து உங்ககிட்ட வந்து ………பத்தி வாக்கு கேட்டிருக்காரு. அந்த வாக்கு வந்து…. நீங்க திருவண்ணாமலை அஷ்டலிங்கத்துக்கு ஒவ்வொரு லிங்கத்துக்கும் ₹1 காயின் வந்து… மஞ்சள் துணியில வந்து ஒவ்வொரு லிங்கத்துக்கும் நடந்து கிரிவலம் வந்துட்டு, ஒவ்வொரு லிங்கத்தையும்… அங்க வச்சிட்டு…. இந்த மாதிரி நாவல்…… திருப்பணியை நல்லபடியா நடக்கணும், அப்படின்னு சொல்லிட்டு நீங்க சொன்னதா? ஐயா சொன்னாரு. 


குருநாதர் :-  அப்பனே, எது என்று புரிய அப்பனே. 


சுவடி ஓதும் மைந்தன் :-  புரிகின்றதா? என்றார். 


குருநாதர் :-  எது என்று தெரிய 


சுவடி ஓதும் மைந்தன் :-  பண்ணிட்டீங்களா? 


அடியவர் #4 :- ஐயா, அது பண்ணிட்டாங்க. அது கடைசில அம்மணி அம்மன் (அம்மணி அம்மாள்) கோவில் இருக்குல்ல. ஆமா, ஈசன் லிங்கத்துக்கு எதிர்ல அங்க முடிச்சிட்டு உட்கார்ந்துட்டு இருக்கும்போது, ஒரு பரதேசி மாதிரி ஒரு ஆன்மா வந்து எல்லாம் நல்லா நடக்கும், திருப்பணி நல்லா நடக்கும், அப்படின்னு சொல்லிட்டு போனா, அந்த சாது யாரு? ஆன்மா யாரு? 


குருநாதர் :-  அப்பனே, நிச்சயம் இன்னும் பல ரகசியங்கள் உள்ளது என்பேன். அப்பனே, நிச்சயம் பொறுத்திருந்தால், அப்பனே, பின் சொல்வேன். 


சுவடி ஓதும் மைந்தன் :-   இப்ப நான் பல ரகசியங்கள் இருக்குது. இப்ப வேணாம்ப்பான்றாரு. எல்லா இடத்துலயும், 


அடியவர் #6 :- ஐயா, இன்னொரு விண்ணப்பம் ஐயா, அந்த …………ஆலயத்துல இருக்கிறவங்க வந்து, இந்த கோயிலை நான் நினைச்சா இடிச்சிருவேன். அடுத்த வருஷம் எல்லாம் jcp வைச்சு இடிச்சிருவேன், அப்படின்னு சொல்ராங்க ஐயா . 


குருநாதர் :- அப்பனே, எது என்று புரிய, பின் இறைவனை இடிப்பதா? அப்பனே, முட்டாள் பேச்சு… 


குருநாதர் :-  ஏனென்றால், அப்பனே, எது என்று புரிய அப்பனே, நிச்சயம் தன்னில் கூட நீங்கள் தவறானது என்று எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். அவ்வளவுதான். 


சுவடி ஓதும் மைந்தன் :-  அவங்க என்ன பண்ணிருக்காங்கன்னா, வந்து அப்படி எல்லாம் பயம் வைக்கிறாங்க. உங்களை வந்து,.....டேய், நீ என்னடா பண்ற? ஏதோ பண்ற? உங்களை தவறா ஏதோ நினைச்சுக்கிட்டு, உங்களை பயம் வைக்கிறதுக்காக பண்ணிக்கிறாங்க. ஆனா, முடியாதுன்றாரு. ஈசனை கை வச்சுக்கன்றாரு. முடியாதுங்க, ஐயா. உங்களை ஏதோ அவங்க வந்து ஒரு அபிப்பிராயம் தவறா இது பண்ணி சித்தரிச்சுக்கிறாங்க. 


அடியவர் #6 :- அந்த இடம் சாமிக்கு உண்டான இடம். சாமிக்கே வந்து சேரணுங்க, ஐயா. 


குருநாதர் :- அப்பனே, சொல்லிவிட்டாய் அல்லவா? எதை என்று புரிய அப்பனே, 


குருநாதர் :- அப்பனே, இவையெல்லாம் ரகசியமே. இன்னும் சில மாதம் செல்லட்டும், உரைக்கின்றேன். 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, சில ரகசியம் நிறைய இருக்குதுங்க, ஐயா. அதனால, இப்ப சொல்ல மாட்டேன்றாரு. ஐயா, அவர் வந்து 


குருநாதர் :- அப்பனே, ஆனால் எவை என்று அறிய  பின் அண்ணாமலையில் பேசியது ஈசனே. 


அடியவர் 7 :- சாய் ராம்  


அடியவர்கள்  :- ( பரவசம் )  


சுவடி ஓதும் மைந்தன் :- அண்ணாமலை வந்து பேசிகிறார் ஈசன்….. 


அடியவர் 7 :-  உங்ககிட்ட பேசினது ஈசன்….. 


சுவடி ஓதும் மைந்தன் :- ஏதோ ஒரு எங்கேயோ பேசிகிறார். அவ்வளவுதான். அது எங்கன்னு நீங்க கெஸ் பண்ணிக்கோங்க. 


அம்மை அடியவர்  :- ஐயா,திருவண்ணாமலை நீங்க சொன்னீங்களா? ஐயா, அந்த இது படிக்கும்போது, அண்ணாமலையார் அடி, அண்ணாமலையார்ல வந்து மாணிக்கவாசகர் கோவில்ல எப்பவுமே திருவாசகம், திருவெண்பாவை படிச்சிட்டு இருந்தோம். அப்போ ஒரு அம்மா வந்து ஃபுல்லா துறவி மாதிரிதான். நான் ஃபுல்லா காவியோட இவள பார்த்துட்டு வந்து…. என் பக்கத்துல உட்கார்ந்து இருந்தாங்க. அதுக்கு எத்தாப்புல ஒரு ஐயா வந்து…. ஃபுல்லா சடா மூடி வச்சிட்டு…. தியானம் பண்ணிட்டு இருந்தாரு. அவங்க முன்னால வந்து… ஒரு ஒண்ணுமே இல்…லை. எதைச்சா ஒரு ஐயா வந்தாரு…., வெள்ளை வேஷ்டி தான் கட்டிக்கிட்டு சாதாரணமா வந்து விபூதி கொடுத்துட்டு போயிட்டாரு. நல்லா இருக்குன்னு சொல்லிட்டு வாழ்த்திட்டு போயிட்டாரு. இவ யாரு? உங்க பொண்ணா? அப்படின்னு சொல்லிட்டு போயிட்டாங்க. அதுதான்…


குருநாதர் :-  எது என்று புரிய நிச்சயம் தன்னில் தாயே  இன்னும் ரகசியங்கள் சொல்கின்றேன். அமைதியாக இருங்கள். இப்பொழுது என்னுடைய ஆசிகள். பார்த்துக் கொள்வோம். 


அடியவர் #6 :- ஐயா, இவங்க….. கிளி  வந்து மண்டலம் பூஜை முடிஞ்ச உடனே காஞ்சிபுரம் ஏகாம்பநாதர் கோவில்ல இருந்து வந்ததுங்க. ஐயா, அங்க நாங்க எதைச்சா அடியார்களோட போனா வந்தது. அதுல இருந்து அவங்க கூடயே இருக்கு. 


குருநாதர் :-  அப்பனே, எது என்று புரிய அனைத்தும், அப்பனே, ஒரு தேவைக்காகத்தான் பொறுத்திரு. 


சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாமே ஒரு தேவைக்காகத்தான் வந்தவை. அதனால, பொறுத்திருன்றார். அடுத்து?


ஒரு அடியவர் :- அதான் இந்த கிளி மேல வந்து ரொம்ப பாசம் வச்சிருக்காங்க. நாளைக்கு அந்த கிளிக்கு ஏதாவது இந்த கிளி பறந்துருச்சுன்னாவோ, இது உயிருக்கு ஏதாவது ஆச்சுனாவோ, நாய் வந்து இவன் மேல ரொம்ப அடிக்ட் ஆகுற. இவருக்கு ஏதாவது நடந்தா, 


குருநாதர் :-  எது என்று அறிய  ஐயா, உன்மேல் காதல் கொண்டிருக்கின்றான். அவ்வளவுதான். 


சுவடி ஓதும் மைந்தன் :- அது வந்து, அது கிளி மேல் இல்ல, உங்க மேல காதல் லவ். அவருக்கு வந்து…. அந்த லவ்ல, அந்த லவ்ல அந்த கிளியை பார்த்து சொல்றாரு. கேக்குறாரு, அதனாலதான் அங்க வந்து அதுல ஒன்னும் பிரச்சனை இல்லை. விடுங்க, ஐயா, அதுல ஒன்னும் இல்ல. 


ஒரு அடியவர் :- அது எனக்கு ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா, குழந்தை இருக்காதுல, ஐயா. அதனாலதான் 


குருநாதர் :-  எது என்று அறிய, நிச்சயம் தன்னில் அவன் அதைப்பற்றி கவலைப்படவில்லை. உன்னை பற்றி கவலைப்படுகின்றான். 


சுவடி ஓதும் மைந்தன் :- அதெல்லாம் கவலைப்படல. அவரு உன்னை காதல் பண்றார். அவ்வளவுதான். முடிஞ்சு போச்சு. ஓகேங்களா, ஐயா? அதை பத்தி கவலைப்படாதீங்க. நல்லதாகும். ஓகேங்களா, அம்மா? சந்தோஷம்.


குருநாதர் :-  அடுத்த வாக்கில் சில ரகசியங்கள் குறிப்பிடுவேன். 


சுவடி ஓதும் மைந்தன் :- அடுத்த வாக்கு எங்க இருந்தாலும், ஐயா, சில ரகசியங்கள் சொல்றேன்னு சொல்றாருங்க. ஐயா, 


அடியவர் :- (அடுத்த சத்சங்கத்தை) சொல்கின்றேன் அய்யா (இவர்களிடம்)


சுவடி ஓதும் மைந்தன் :- நல்லதே நடக்கும் ஐயா. 


ஒரு அடியவர் :-  ஐயா, மூணு ராவுக்கு முன்னாடி வந்து மலை மேல வந்து சூலம் நட்டு வச்சிருந்தேன். அடியார் மூணு பேர் வந்தாங்க. அன்னைக்கு தான் வந்து நாங்க பேசிட்டு இருந்தோம். மலையில ஏதாவது சூலமாவது இல்ல, ஒரு வேலாவது நட்டு வைக்கணும். ஏன்னா, போன வருஷம் வந்து மலையில தீபம் ஏத்தி, 


குருநாதர் :-  எது என்று புரிய பின் எக் கவலையும் கொள்ள வேண்டாம். எதை எதை தர வேண்டுமோ, அப்பொழுது அப்பொழுது நான் தருகின்றேன். இன்னும் பின் , நீயே பார். 


சுவடி ஓதும் மைந்தன் :- நீ அமைதியா இருமா? உனக்கு என்னென்ன தரணுமோ, அப்பப்போ நான் தரேன்னு சொல்லிட்டாங்க. 


அடியவர் #6 :-  அந்த சூலத்துக்கு அடியில………… ……………….. ……………… …………….. …………….. ……………… ………………. ……………… ……………… ……………….. ………………….. ………………அந்த கல்லுக்கு அடியில….. 


குருநாதர் :-  கவலை இல்லை. தாயே, நிச்சயம் தன்னில் கூட அதிசயங்கள் பல பல ரகசியங்கள் இப்பொழுது சொல்லப் போவதில்லை. 


சுவடி ஓதும் மைந்தன் :- அம்மா, கொஞ்சம் இருங்கம்மா. 


அடியவர் 7  :- விட்டுடுங்கம்மா. வேண்டாம், 


சுவடி ஓதும் மைந்தன் :- ஏன்னா அகத்தியர் சொல்றாருன்னா ஏதோ ஒரு ரகசியம் இருக்கு. 


அடியவர் 7  :-  நிறைய ரகசியம் இருக்குது. 


சுவடி ஓதும் மைந்தன் :- வெளிக்கொண்டு வருவார். வர வர சரிங்களா? பார்த்துட்டே இருங்க. எங்கெங்க எல்லாம் வரணும்னு இவர் வச்சு பண்ணியே இருங்க. படிச்சிடலாம். எல்லாம் ஓகேங்களா? 


===========================

# அடியவர் #8 - பாடல் பாடினார்கள்…

===========================


பச்சை மயில் வாகனனே சிவ

பால சுப்பிரமணியனே வா - இங்கு

இச்சை இல்லாம் உன்மேல் வைத்தேன்

எள்ளளவும்ஐயமில்லை 

……………………………………….


குருநாதர் :-  தாயே, இதைவிட என்ன வேண்டும் உனக்கு? 


அடியவர் #8  :- ஒன்றுமில்லை. இந்த பிறவி எதற்காக எடுத்திருக்கிறேன் என்று மட்டும் எனக்கு சொல்லவேண்டும்? 


குருநாதர் :-  எது என்று கூற பின், அடுத்த வாக்கில் சொல்கின்றேன். அமைதியாக இரு. 


குருநாதர் :-  ஏனென்றால் இன்னும் பல விஷயங்கள் நீ பின் கேட்க வேண்டும். இப்பொழுது சொல்லி விட்டால், அவ்வளவுதான் அகத்தியன் சொல்லிவிட்டான். திரும்பவும் பின் ஏன் வருவது என்று அங்கேயே நின்று விடுவாய். இதனால்  எது என்று கூற.


அடியவர் #8  :- ………வலி அதிகமா இருக்கு. 


குருநாதர் :-  எவை என்று அறிய  நிச்சயம் தன்னில் கூட வயது எவை என்று புரிய நிச்சயம் கவலை இல்லை. பார்த்துக் கொள்வோம். 


குருநாதர் :- தாயே, எம்முடைய ஆசிகள். அனைத்தும் வழங்குகின்றேன் உனக்கு. 


சுவடி ஓதும் மைந்தன் :-  முடிஞ்சு போச்சு. 


===========================

# அடியவர் #10 - பாடல் பாடினார்கள்…

===========================


சுவடி ஓதும் மைந்தன் :-  அடுத்துமா? 


அடியவர் 7:- பாடும்மா…. 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஏதாவது சினிமா பாட்டு பாடிடாதம்மா. 


அடியவர்கள் :- ( சிரிப்புகள் ).... 


அடியவர் #10 :- ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா

கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே

ஹரே ராம ஹரே ராம

ராம ராம ஹரே ஹரே


குருநாதர் :- அருமை, தாயே. இதைவிட உனக்கு ஒன்றும் தெரியவில்லை. 


அடியவர்கள் :- ( சிரிப்புகள் ).... 


சுவடி ஓதும் மைந்தன் :-  நல்ல பாட்டுதான். இதைவிட உனக்கு ஒன்றும் தெரியவில்லை. 


குருநாதர் :-  எது என்று புரிய கேள். 


சுவடி ஓதும் மைந்தன் :-  அதனால கேளுமா? 


அடியவர் #10 :- எங்க தாத்தா இப்ப எப்படி இருக்காரு? எதனால……? 


குருநாதர் :-  எது என்று கூற தாயே, எவை என்று கூற எவை பற்றி இப்பொழுது கேட்கக்கூடாது. 


அடியவர் #10 :- எங்க மதன் மாமா எப்போது வருவாங்க? 


குருநாதர் :-  எது என்று அறியப்பின், எவை என்று புரிய எவையும் இப்பொழுது கேட்கக்கூடாது. 


அடியவர் #10 :-  எங்க அப்பாவோட அண்ணன்? 


குருநாதர் :- எதை என்று எதையும் கேட்காதே. நன்றாக படி. 


சுவடி ஓதும் மைந்தன் :- அம்மா, எதையும் பற்றி கேட்காதே, நீ நல்லா படிச்சா போதுமா? 


குருநாதர் :- பின்  எது என்று புரிய? நிச்சயம் தன்னில் கூட. பின் எவை என்று அறிய  சரியாக, நிச்சயம் சதவீதத்தை என்னிடத்தில் காட்டி சொல்கின்றேன். 


சுவடி ஓதும் மைந்தன் :- சதவீதம்னா என்ன சொல்றது தெரியுங்களா? மார்க் எடுத்து, மார்க் எடுத்து, சதவீதம் எனக்கு காட்டுமா? ஒரு 90%, ஒரு 80% எனக்கு காட்டு. நான் உனக்கு எல்லாம் சொல்றேன்னு சொல்லிட்டாருமா? பாப்போம். 


( அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 05/07/2026  அன்று சென்னையில் நடந்த   அன்புடன் அகத்திய மாமுனிவர் யாத்திரை குழுவினருக்கான சத்சங்க வாக்குகள் தொடரும் ……. ) 



ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.  சர்வம் சிவார்ப்பணம்.