“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Thursday, March 12, 2026

சித்தர்கள் ஆட்சி - 586 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - 08.03.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு. - பகுதி 2

 இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.



அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 08.03.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு. - பகுதி 2 


நாள் : 08/03/2026 (ஞாயிற்றுக்கிழமை) 

நேரம் : காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 

இடம் : ராஜா ராணி திருமண மண்டபம், திருவண்ணாமலை 

நேரலை :-  https://www.youtube.com/live/AzhIXYoqaoM


( இவ் கூட்டு பிரார்த்தனையின் அனைத்து வாக்குகளும் உங்கள் பார்வைக்கு இங்கு ஒவொரு பதிவிலும் , படிக்க ஏதுவாக கொடுக்கப்பட்டுள்ளது.


சித்தர்கள் ஆட்சி - 585 :-  பகுதி 1

https://siththarkalatchi.blogspot.com/2026/03/585.html


சித்தர்கள் ஆட்சி - 586 :-  பகுதி 2

https://siththarkalatchi.blogspot.com/2026/03/586.html


சித்தர்கள் ஆட்சி - 587 :-  பகுதி 3

https://siththarkalatchi.blogspot.com/2026/03/587.html


சித்தர்கள் ஆட்சி - 588 :-  பகுதி 4

https://siththarkalatchi.blogspot.com/2026/03/588.html


சித்தர்கள் ஆட்சி - 589 :-  பகுதி 5

https://siththarkalatchi.blogspot.com/2026/03/589.html


சித்தர்கள் ஆட்சி - 590 :-  பகுதி 6

https://siththarkalatchi.blogspot.com/2026/03/590.html


சித்தர்கள் ஆட்சி - 591 :-  பகுதி 7

https://siththarkalatchi.blogspot.com/2026/03/591.html


சித்தர்கள் ஆட்சி - 592 :-  பகுதி 8

https://siththarkalatchi.blogspot.com/2026/03/592.html


சித்தர்கள் ஆட்சி - 593 :-  பகுதி 9 (நிறைவு பகுதி)

https://siththarkalatchi.blogspot.com/2026/03/593.html


)

================================

# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு

================================ 


ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 


================================

அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 08.03.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு. - பகுதி 2 

================================



==============================

# "அப்பா என்ற ஒற்றைச் சொல்: அகிலத்திற்காக மாணிக்கவாசக பெருமான் கேட்ட அன்பு வரம்!"

==============================


காகபுசண்ட மாமுனிவர்:-  அப்பா என்று எதை என்று கூட சந்தோஷம். ஆனாலும் அறிந்தும் இவை புரிந்து கொண்ட இன்னொரு யான் கேட்கின்றேன் அனைத்தும் எதை புரிந்து. ஆனாலும் பின் அழகாக யான் மனதால சந்தோஷித்தேன் அப்பா என்று. ஆனாலும் அதேபோல் உன்னை இவ்வுலகத்தில் அப்பா என்று சொல்லிவிட்டால், நீ உடனடியாக இறங்கி அனைவருக்கும் அருள் புரிய வேண்டும். செய்வாயா என்ன ?



அடியவர் :-  நமச்சிவாய !!!!! எவ்வளவு பெரிய கருணை  எவ்வளவு பெரிய கருணை… அந்த சின்ன குழந்தைக்கு. எவ்வளவு பெரிய கருணை!!!!!  எவ்வளவு பெரிய கருணை !!!!!  அப்ப நான் ஒன்று கேட்கிறேன். நான் அப்பான்னு உன்னை கூப்பிடலாம் என்று இறைவா நீ சொல்லிவிட்டாய். இதே போல யாரெல்லாம் உன்னை அப்பான்னு கூப்பிடுறாங்களோ, அவங்களுக்கு  நீ மனசு இறங்கி உடனே நீ அவங்களுக்கு அருள் புரியணும்.  உடனே வந்து சொல்லணும் அப்படின்னு சொல்றாங்க 


========================================

# மாணிக்கவாசக பெருமான் கேட்ட  வரம்.

# எம்பெருமான் சொக்கநாதரே  அசந்து விட்டார். 

======================================= 


காகபுசண்ட மாமுனிவர்:-  எதை என்று சொக்கனுக்கே அசந்து விட்டான். எப்படி இவ்வருள்கள் தருவது என்று???? 


சுவடி ஓதும் மைந்தன் :-  சொக்கன் என்ன பண்ணிட்டாரு? 


அடியவர் :-  முழிக்கிறார் 


சுவடி ஓதும் மைந்தன் :-  (இப்படி ஒரு கேள்வி கேட்டு விட்டானே)


=======================================

# “மாணிக்கமே!!!!  எப்படி நீ கேட்ட வரங்களை உனக்கு தருவது?” 

=======================================


காகபுசண்ட மாமுனிவர்:-  ஆனாலும் அழகாக தோள்களில் கையையிட்டு பின் உட்கார்ந்து, மாணிக்கமே!!!!  எப்படி இவையெல்லாம் (உனக்கு தருவது) என்று? 


சுவடி ஓதும் மைந்தன் :-  ( ஈசனார்  அழகாய்  மாணிக்கவாசகர்  தோளில்  கையை போட்டுக்கிட்டு,  அப்பா , மாணிக்கவாசா!!! நான் எப்படி இதெல்லாம் உனக்கு தருவது என்று கேட்கின்றார் )


==========================================

# அப்பா ! நீங்கள் எனக்கு வரம் தரவில்லையென்றால் , குளத்தில் குதித்து என் உயிரை மாய்த்துக் கொள்வேன் என்று மிரட்டல்கள் 

==========================================  


காகபுசண்ட மாமுனிவர்:-  இதை அறிவித்து எதை என்று அறிய ஆனாலும் நீ மனம் இறங்க வேண்டும் அவ்வளவுதான். இல்லையென்றால் நான் குளத்தில் குதித்து விடுவேன். 


அடியவர் :- சிவாய நம !!!!! 




அடியவர்கள்  :- ( கைதட்டல்கள் , சிரிப்புகள் )


சுவடி ஓதும் மைந்தன் :-  ( திருப்பி என்ன பண்றாரு? நீ மனம் இறங்கணும். இல்லைன்னா நான் குதிக்கிறேன்)


====================================

# அன்னை மீனாட்சி நமக்கு என்ன என்று இந்த திருவிளையாடலை அழகாக  வேடிக்கை பார்த்தார்கள் அவ் நேரத்தில்.

====================================


காகபுசண்ட மாமுனிவர்:-  இதை அறிவித்து பின் தாயே அழகாக பார்த்துக் கொண்டிருக்கின்றாள். விளையாடட்டும் நமக்கு என்ன என்று. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப அந்த தாய் என்ன பண்ணிக்கிறாங்க? 


அடியவர் :- மீனாட்சி தாயை சைலெண்ட்டா பார்த்துட்டு இருக்காங்க. 


சுவடி ஓதும் மைந்தன் :-   ( இவங்க ஆச்சு. இவங்க கூத்தாச்சு. இவங்க என்னவோ செய்யட்டும் என்று வேடிக்கை பார்க்கின்றார். )


=======================================

# எச்சரிக்கையாக ஈசனாரின் சிந்தனை ஓட்டங்கள் 

=======================================


காகபுசண்ட மாமுனிவர்:-  இவை அறிவித்து சரி பின் சிந்திப்போம். மறு கேள்வி கேள் என்று. 


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப அந்த அந்த (chapter)  சாப்டரை விட்டு. என்ன பண்ணாரு? அடுத்த கேள்விக்கு போயிட்டாங்க. நீ வேற கேள்வி கேள் என்று. 


=====================================

# மாணிக்க வாசகர் கேட்ட அடுத்த வரம் - “இவ்வுலகத்திலே சிறந்த பின் அறிவியாளியாக யான் இருக்க வேண்டும். அப்போதுதான் அனைவரின் கர்மத்தையும் நீக்கமுடியும்.”

======================================


காகபுசண்ட மாமுனிவர்:- இவைத்தன் அப்படியா ஆனாலும் பின் இவன் யோசித்தான் இதை என்று அறிய அறிவாளியாக இருந்தால் நிச்சயம் அனைவருக்கும்  கர்ம (.......  )  மனதில் குதித்தது பின் அப்பா அறிந்தும் இவ்வுலகத்திலே சிறந்த பின் அறிவாயாளியாக யான் இருக்க வேண்டும் என்று தருவாயா என்று 




அடியவர் :- சிறப்பு, ஒருத்தர் வந்து அறிவாளியா இருந்தா, கர்மத்தை எல்லாம் தொலைச்சிரலாம் 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப இந்த உலகத்தில் இவ்வளவு கஷ்டப்படுறாங்க மனிதர்கள். அப்ப நம்ம அறிவாளியா இருந்தா, இந்த உலகத்தில் இருக்கிற கஷ்டம் பண்ணிக்கிறாங்க இல்ல, அவங்களை இந்த அறிவை வச்சு என்ன பண்ணலாம்? கஷ்டத்தை போக்கிடலாம். புண்ணியங்கள் செய்யலாம்.


====================================

# கலியுகத்தில் மனிதன் இறைவனிடம் பணம் தான் கேட்பான் 

==================================== 


காகபுசண்ட மாமுனிவர்:-  ஆனால் எதை என்று புரிய இன்றைய மனிதன் என்ன கேட்பான் என்றால் இறைவன் வந்தால் பின் பணம் தான் கொடு என்று கேட்பான் கலியுகத்தில்.




சுவடி ஓதும் மைந்தன் :- ஆனால் இன்றைய மனிதன்,  ஈசனே வந்தா என்ன கேட்பாராம்? எனக்கு அது பணத்தை கொடுப்பான்னு கேட்பாராம். ஆனா அந்த குழந்தை ? 


அடியவர் :- அறிவு கேட்டிருக்குது. 


சுவடி ஓதும் மைந்தன் :- என்ன அறிவு கேட்டிருக்குது? 


அடியவர் :-  ( தெளிவான அறிவு. கருமத்தை நீக்கும் அறிவு) 


சுவடி ஓதும் மைந்தன் :- ( "சிவபெருமான் நேரடியா வந்து வரம் கொடுக்கலன்னாலும், 'அப்பா'ன்னு கூப்பிட்டா உடனே இறங்கி வந்துடுவாருன்னு மாணிக்கவாசகர் நம்புனாரு. ஆனா, அவர் எதிர்பார்த்த அந்த வரம் கிடைக்காதப்போ, ஒரு நிமிஷம் திகைச்சு நின்னுட்டு அடுத்த கேள்வியை யோசிச்சு கேக்குறாரு. 'சரி, இவர் இப்படி திகைக்கிறாரே... அப்போ நாம இந்த உலகத்துலயே பெரிய அறிவாளியா இருந்தா, எல்லாருடைய கர்மாவையும் மொத்தமா தீர்த்துட முடியுமே'ன்னு ஒரு தெளிவோட மாணிக்கவாசகர் சொல்ல வர்றாரு. அதாவது, இறைவனோட அந்தப் பேரறிவும் கருணையும் கிடைச்சா, இந்த உலகத்து வினைகள் எல்லாம் தானாவே முடிவுக்கு வந்துடும்ங்கறதுதான் அவரோட பாயிண்ட்." )


காகபுசண்ட மாமுனிவர்:-  இவை தன் எதை என்று அறிவித்து, ஆனாலும் நிச்சயம் வேண்டுமென்றால் இதை எடுத்துக்கொள் என்று. 


காகபுசண்ட மாமுனிவர்:-  இதை எவை என்று புரிய பின் அப்பா அனைத்தும் தருவாய் என்றுதான் பிழைக்க வைத்துவிட்டாய். உன்னைப்போல் அறிவு வேண்டும் என்று. 



அடியவர் :-  அருமை 


சுவடி ஓதும் மைந்தன் :- ( அப்புறம் திருப்பி இன்னொரு கேள்வி கேட்டாரு. அப்பா என்னை பொழைக்க வச்சு இல்ல நீ என்னை பொழைக்க வச்சுட்ட இல்ல அப்ப என்ன வேண்டும் என்று கேட்கின்றார் ? ) 


அடியவர் :-  ஈசனுக்கு சமமான அறிவு வேணும் 


சுவடி ஓதும் மைந்தன் :- (  ஈசனுக்கு சமமான அறிவு எனக்கு வேணும் என்று கேட்கிறார்.)


காகபுசண்ட மாமுனிவர்:-  இதை அறிவித்து ஆனால் ஈசனோ இக்குழந்தை எதை என்று எதை என்று புரிந்து கொண்டு ஆனால் விட்டு எவை என்று அறிய 


சுவடி ஓதும் மைந்தன் :-  அதான் இந்த குழந்தை நம்ம விட்டு போறது மாதிரி தெரியல. எதேதோ சொல்லிட்டு, எதேதோ கேட்க போறதுன்னு நினைக்கிறார். 


===============================

# ஈசன் தனக்கு சமமான அறிவு, மாணிக்க வாசகருக்கு அருளினார்.

===============================


காகபுசண்ட மாமுனிவர்:- ( ஈசனாரும் ) தருகின்றேன் இவைதென்று அறிந்து. 



காகபுசண்ட மாமுனிவர்:-   ஆனாலும் பின் இன்னும் எதை என்று அறிய ஆனாலும் பாடலை எதை என்று புரிய ஆனாலும் இன்னொன்றும் யான் கேட்பேன். 


சுவடி ஓதும் மைந்தன் :-  ( சரி. அவர் ஈசன் என்ன பண்றாரு? தர்றேன்ட்டாரு. அறிவு கொடுக்கிறேன்ட்டாரு சொல்லிட்டாரு. அப்போது இன்னொன்று கேட்டார் மாணிக்கவாசகர் )


===================================

# மீண்டும் வரம் கேட்டு சண்டைகள் 

===================================


காகபுசண்ட மாமுனிவர்:-  இதை அறிவித்து எவை என்று அறிய நிச்சயம் தன்னில் இப்பொழுது நிச்சயம் அதாவது யான் எதை என்று புரிந்தும் கூட அறிந்தும் எவை என்று இங்கேயே படைப்போம். இங்கே கொடு மக்களை. மக்கள் பாவமாக யானே பிறந்துவிட்டேன். பின் அறிந்தும் ஆனாலும் கஷ்டங்கள் பலவாய் பல ஆயிரம் அறிந்தும். 


காகபுசண்ட மாமுனிவர்:-  ஆனாலும் அதற்கெல்லாம் தீர்வு இங்கேதான். இல்லையென்றால் உன்னை உள்ளே விடமாட்டான் என்று உள்ள விடமாட்டான் என்று சண்டைகள் இருவருக்கும். 



சுவடி ஓதும் மைந்தன், அடியவர்  :- ( நிறைய பேருக்கு கஷ்டம் இருக்குது. நானே சின்ன வயசுல கஷ்டப்பட்டேன். இப்ப இந்த இடத்திலேயே நீ கஷ்டத்தை நீக்கணும். தீர்வு கொடுக்கணும். இல்லைன்னா உங்களை கோயிலுக்குள்ள விடமாட்டேன் அப்படின்னு சண்டைகள் ) 


========================================

# திருவாசகம் - மனிதர்களுக்கு கிடைத்த உண்மை கதை

=========================================


காகபுசண்ட மாமுனிவர்:-  இதைத்தன் அறிவித்து இதை என்று பெருத்த பெருத்த எவை என்று அறிய சரி பின் கொடுக்கின்றேன் என்று. பின் எதை என்று அழகாக வாசகத்தை பின் ஈசன். 



சுவடி ஓதும் மைந்தன் :-  அழகாக ஈசன் என்ன பண்றாரு? இந்த பாவத்தை போக்க திருவாசகத்தை கொடுக்கிறார். 


அடியவர் :-  சிவாய நம !!!!! 


=================================

# திருவாசகத்தை எழுதியது யார் ?

=================================


காகபுசண்ட மாமுனிவர்:-  ( மாணிக்கவாசகரும் ) இதைத்தன் அறிந்து சொக்கனே பிழைத்துக் கொள்ளாதே. ஆனால் இதை யான் எழுதி தான் என்று சொல்வேன். 




அடியவர் :-   நமச்சிவாய !!!!! 


அடியவர்கள் :- ( கை தட்டல்கள் , சிரிப்புகள் ) 


சுவடி ஓதும் மைந்தன்  :-  அப்ப நீ மாட்டிக் கொண்டாயா ? சிக்கிக் கொண்டாயா  என்கிட்ட?  நீ எழுதலாம். ஆனால் இதை நான் எழுதியதாக சொல்லுவேன் எல்லாருக்கும். பரவாயில்லையா?  பரவாயில்லையா ?


அடியவர் :-  எல்லா பேரும் கஷ்டத்தை போக்க அவங்க வந்து இறைவன்ட்ட வழி கேக்குறாங்க. அப்ப இறைவன் வந்து திருவாசகத்தை சொல்றாரு, அப்ப திருவாசகத்தை இந்த அம்மா கேட்டுட்டு, இதை நான் சொன்னதா தான் சொல்லுவேன் அப்படின்னு சொல்றாங்க. 


காகபுசண்ட மாமுனிவர்:-  எதை என்று கூட தாராளமாக எடுத்துச் சொல் குழந்தாய். என்னை விட்டுவிடு என்று.


சுவடி ஓதும் மைந்தன்  :- இதை நீயே எழுதியதாகவே  இருக்கட்டும். நீ இதை வைத்துக்கொள் அம்மா. என்னை விட்டுவிடு அம்மா என்று  யாரு ? ஈசன், ஈசன் சொல்றார் என்னை விட்டுடு என்று. 


காகபுசண்ட மாமுனிவர்:- இதை அறிவித்து இன்னும் கூட, யான் விடப்போவதில்லை 


அடியவர் :-  விடமாட்டேன் 


சுவடி ஓதும் மைந்தன்  :- விடமாட்டேன். விடமாட்டேன் நீ தப்பிச்சிடலாமா? 


=================================

# இவளை போய் பிழைக்க வைத்தோமே என்று ஈசனாரும் தலையில் கையை வைத்து நொந்து போய் விட்டார்.

=================================


காகபுசண்ட மாமுனிவர்:- என்று எதை அதாவது எவை என்று ஆனாலும் பிழைக்க வைத்தேனே என்று ஈசனுக்கே தலையில் வைத்துவிட்டான்.  


சுவடி ஓதும் மைந்தன்  :- என்னடா இது தொந்தரவா போச்சுன்னு.. ஏன்னா… ஈசன் என்னடா பிழைக்க வச்சு, குளத்துல குதிச்சு இறக்கப்போறவங்களை காப்பாத்திட்டு இப்படி மாட்டிக்கிட்டோமே அப்படின்றாரு…


==================================

# ஈசன் -  அன்புக்கு மட்டுமே அடிமை. 

=================================

# இவ்வுலகில் அன்பே மூலாதாரமானது

=================================


காகபுசண்ட மாமுனிவர்:- இங்கு ஏன் சொன்னேன் எதற்காக சொன்னேன் ஈசனின் கருணையோ கருணை இதனால் ஞானிகள் அனைவருமே எடுத்துச் செல்கின்றார்கள். அன்பே மூலாதாரமானது என்பது. ஈசனுக்கு அன்புக்கு மட்டுமே அடிமை 




சுவடி ஓதும் மைந்தன்  :- ( எல்லா ஞானிகளும் சொல்ற ஒரே விஷயம் இதுதான்—அந்த ஈசனுக்கு 'அன்பு' தான் மெயினான மூலாதாரம். அவர் உண்மையான அன்புக்கு அப்படியே கட்டுப்பட்ட ஒரு அடிமை. நீங்க  மனசார உருகி, உண்மையான கஷ்டத்தோடயும் கருணையோடும் அவர்கிட்ட போய் நின்றால் , ஈசன்  அப்படியே உருகிடுவாரு. 'இந்தாப்பா, உனக்கு என்ன வேணுமோ அதை நீயே எடுத்துக்கோ, எனக்கு இதெல்லாம் வேணாம்'னு சொல்லிட்டு, தன் வசமே இருக்கிற எல்லாத்தையும் அந்தக் கருணைக்கடல் அள்ளித் தந்துடுவாரு. )


====================================

# மாணிக்கவாசகரின் அன்பு சண்டைகள் தொடர்கின்றது 

====================================

# மீண்டும் வரம் கேட்ட மாணிக்கவாசகர் 

====================================


காகபுசண்ட மாமுனிவர்:- இதை அறிவித்து இன்னும் பாடல்கள் ஒவ்வொருவரும் அறிந்தும் சிறு குழந்தையாக இருந்தும் பெண்ணாக பிழைக்க வைத்து, அனைத்தும் அனுபவித்து சிறுவயதிலே. அறிந்தும். ஆனால் இன்னும் காலப்போக்கில் மனிதன் எத்தனை வருடங்கள் வாழ்வான் என்பதும் கணித்து. ஆனாலும் ஒவ்வொரு வழியிலும் ஒவ்வொரு பிரச்சனை அதை தீர்க்க நிச்சயம் பாடல் நீ தர வேண்டும் என்று. 


அடியவர் :-  சிவாய நம !!!!! பெருங்கருணை 


சுவடி ஓதும் மைந்தன்  :- (அறிவு கொடுத்துட்டாரு. அடுத்து… இன்னும் நானே சின்ன வயசுல ஒரு பெண்ணாக பிறந்து… இவ்வளவு கஷ்டப்பட்டேன்…எவ்வளவு கஷ்டப்பட்டேன்… இன்னும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான கஷ்டங்கள் இருக்கும். அதுக்குரிய தீர்வை நீதான் கொடுக்கணும்ன்றாங்க. நீங்க தான் கொடுக்கணும்னு சொல்லிட்டு… நீதான் அந்த பாடல் மூலமா கண்டிப்பா கொடுக்கணும்ன்றாரு…. தீர்வு கொடுக்கணும்ன்றாங்க…)


=================================

# ஈசனாரும் மீண்டும் நொந்து போய் “ மாணிக்கமே , உன் தொல்லை பெரும்  தொந்தரவு எனக்கு”

================================


காகபுசண்ட மாமுனிவர்:- இதை அறிவித்து பின் தொந்தரவு. பெரும் தொந்தரவு உன்னிடத்தில் என்று, மாணிக்கமே என்று.


காகபுசண்ட மாமுனிவர்:- ஆனாலும் பிழைக்க வைத்து பிழைக்க வைத்தாய் அல்லவா எதைக் கேட்டாலும் நீ தர வேண்டும் அவ்வளவுதான். இல்லையென்றால் குளத்தில் குதித்து விடுவேன். 


அடியவர்கள் :- ( சிரிப்புடன் பலத்த  கை தட்டல்கள் )


==============================

# அதிர்ச்சியில் உறைந்த ஈசன் 

==============================


காகபுசண்ட மாமுனிவர்:- இவைதன் ஈசன் இப்படியும் பின் தலையாட்டவில்லை அப்படியும் தலையாட்டவில்லை. நின்றான். 


சுவடி ஓதும் மைந்தன்  :-  அப்ப ஈசன் என்ன பண்ணாரு? 


அடியவர் :- சரி என்றும் சொல்ல முடியவில்லை.  மலைச்சு போய் நிக்கிறாரு. 


சுவடி ஓதும் மைந்தன்  :-  இப்படியும் சொல்ல முடியல. 


அடியவர் :- அப்படியும் சொல்ல முடியல.


=====================================

# ஈரேழு பதினான்கு உலகங்களின் மன்னன் ஆதி ஈசன் , மாணிக்கவாசக பெருமானிடம் திருவாசகம் சுவடியை ஒப்படைத்தார் 

=====================================


காகபுசண்ட மாமுனிவர்:- இதை உணர்ந்து இயற்றியது எதை என்று புரிய அனைத்தும் பின் அமர்ந்து, அறிந்தும் பின் (திருவாசகம்) சுவடியை வைத்துக்கொள் என்று 


====================================

# மாணிக்கவாசக பெருமான் - “ திருவாசகத்தை நான் தான் எழுதியதாக சொல்வேன் “

====================================


காகபுசண்ட மாமுனிவர்:- இதைத்தன் எவை என்று அறிய ஆனாலும் உன் பெயர் நிச்சயம் எதை என்று யானே சொல்வேன் என்று (மாணிக்கவாசக பெருமான்)


காகபுசண்ட மாமுனிவர்:-  பின் எப்படியாவது சொல்லி போ ( என்று ஈசனாரும் ). 


சுவடி ஓதும் மைந்தன்  :-  ஆனா நான் கொடுக்கிறேன் என்று,  ஈசா  நீங்கள் எங்கும்  சொல்லக்கூடாது. இது நான்தான். நான்தானே கஷ்டப்பட்டேன். ஐயா புரியுதுங்களா? என் பேர்தான் முதல்ல வரணும் வரணும்னுட்டாங்க.


காகபுசண்ட மாமுனிவர்:- (ஈசனாரும் ) பின் எவை என்று கூற விட்டால் போதும் யான் அமர்கின்றேன் அங்கே பக்கத்தில் மீனாட்சி பக்கத்திலே எனக்கு. 


சுவடி ஓதும் மைந்தன்  :- நீ எல்லாம் எடுத்துக்கோ. நான் மீனாட்சி அன்னையின் பக்கத்தில் , அங்கே போதும்னு சொல்றார் 


=================================

# அப்பா !!! நீங்கள் எனக்கு இன்னும் தெளிவு தர வேண்டும் 

=================================


காகபுசண்ட மாமுனிவர்:- இவைத்தன் அறிவித்து மீண்டும் எதை என்று அறிய. ஆனாலும் நில். பின் அப்பா அறிந்தும். ஆனாலும் இதை என்று அறிவிக்க ஆனாலும் பின் தெளிவு தர வேண்டும் ( என்று மாணிக்க வாசக பெருமான் )


==========================

# ஈசனாரின் சமயோஜிதம் 

=========================


காகபுசண்ட மாமுனிவர்:- இவை அறிவித்து, ஆனால் ஈசனோ பின் அறிவாளியாக அறிந்தும். ஆனால் இன்னும் சுலபமாக கிடைத்துவிட்டால் அறிந்தும் எதை என்று புரியாமல் இன்னும் கேள்வி மேல் கேட்டு பின் சாகடிப்பார்.  



சுவடி ஓதும் மைந்தன்  :- ஈசன் நினைக்கிறார். அப்பா இங்கதான் நம்ம டேலன்ட்டா (திறமையை ) யூஸ் பண்ணி கொடுக்கணும். ஐயா புரியுதுங்களா? சுலபமா கொடுத்துட்டோம்னா இவ வந்து நம்மள கேள்வி மேல கேள்வி கேட்டே சாககடிசிருவான்னு.. யார் நினைக்கிறாரு? ஈசன் நினைக்கிறார். 


=====================================

# மாணிக்கவாசகர் பாடிய திருவாசக திருத்தலங்களின் ரகசியங்கள் 

=====================================


காகபுசண்ட மாமுனிவர்:- இவை அறிவித்து எதை என்று புரிய பல வழியில் கூட அங்கங்கு எதை என்று அறிவிக்க பல வழியில் கூட பின் அங்கங்கு பின் எங்கு எதை என்று, கூற ஒரு சாதாரணமாக பின் ஒரு ஊசியை கொடுக்கின்றேன். 


காகபுசண்ட மாமுனிவர்:- பின் நான் ஊசியை எடுத்து எடுத்து எங்கெல்லாம் உன் மனது என்னை நினைக்கின்றதோ அங்கெல்லாம் பின் இதில் இருக்கும் பாடலை பாடு. 


காகபுசண்ட மாமுனிவர்:- பின் மனிதர்கள் அங்கெல்லாம் வருகின்ற பொழுது, அன்னன்நோய் தொலையும்.  அதிர்ஷ்டம் ஏற்படும். 


அடியவர் :- சிவாய நம !!!!! 


சுவடி ஓதும் மைந்தன்  :- அப்ப ஒரு ஊசியை கொடுக்கிறார். நீ எங்காவது போய்க்கோ. நீ என்னை விட்டுடு. அதான் இந்த ஊசி எடுத்துக்கோ. போயிட்டே இரு. உனக்கு எங்கெல்லாம், என்ன தோணுதோ அங்க ஊசி அங்க எடு. அங்க ஊசியை  அங்க போடு.  அங்க பாட்டை பாடு. 


காகபுசண்ட மாமுனிவர்:- இதைத்தன் இவை இயற்றிய பின் திருத்தலங்களே எவை எவை என்று அறிய, அனைத்திற்கும் விடிவு உண்டு. ஆனால் மக்களிடையே இல்லை. 


சுவடி ஓதும் மைந்தன்  :- அப்ப இது இப்படி எல்லாம் பாடல் பெற்ற ஸ்தலங்கள் தான் என்னது? 


அடியவர் :- எல்லாத்துக்கும் விடிவு இருக்கு 


சுவடி ஓதும் மைந்தன்  :-  விடிவு இருக்குது அப்பா. 


அடியவர் :-  எல்லா பிரச்சனைகளுக்கும் விடிவு 274 தலங்கள் தான் இதெல்லாம் வந்து பாடல் பெற்ற ஸ்தலங்கள் வந்து 




சுவடி ஓதும் மைந்தன்  :- அப்ப இங்கெல்லாம் வந்து சில இடங்களுக்கெல்லாம் போகின்ற பொழுது, என்ன ஆகும்? உங்கள் குறையே வந்து , பாவமே போயிட்டு , புண்ணியம் சேரும்.  சேரும் அதை கூட மனுஷனுக்கு தெரியவில்லையே என்று சொல்கின்றார்.


அடியவர் :-  எல்லா பிரச்சனைகளுக்கும்… இந்த 274 தலங்கள்ல தீர்வு இருக்கு 


====================================

# மீண்டும் சில ஆண்டுகள் கழித்து , மதுரைக்கு வந்த மாணிக்கவாசகர்

====================================


காகபுசண்ட மாமுனிவர்:- இவைதன் மீண்டும் பின் அப்படியே சில ஆண்டுகள் புறப்பட்டு, பின் அதாவது மதுரைக்கு வந்து, சொக்கா !!!! சொக்கா !!!!  என்று.  எங்கே ஒளிந்து கொண்டிருக்கின்றாய் என்று. 


அடியவர்கள் :- ( பலத்த சிரிப்பு அலைகள்  ) 


சுவடி ஓதும் மைந்தன்  :- திருப்பியும் பல ஆண்டுகள் எங்கோ போயிட்டு ,பாட்டு எல்லாம் படிச்சிட்டு, திருப்பி வர்றாங்க. வந்து தேடுறாங்க. எங்க இருக்கிற சொக்கா, சொக்கா, சொக்கான்னு…. எங்க இருக்கேன்னு தேடுறாங்க. 


====================================

# மாணிக்கவாசக பெருமான் உரைத்த வெற்றி ரகசியங்கள் 

====================================


காகபுசண்ட மாமுனிவர்:- இதை என்று அறிவித்து எவை என்று புரிவித்து அறிவித்து. ஆனாலும் இதை என்று அறிய அறிய, என்றெல்லாம்.  ஆனாலும் இவ்வறிவை வைத்துக்கொண்டு பின் அதாவது இவ் மாணிக்கனோ, பல வழி இவங்க கூட அரசர்களுக்கும் இன்னும் எதை புரிய, இன்னும் பின் அரசபை இருப்பவர்களுக்கும் உலகத்தை ஆளக்கூடிய இன்னும் தகுதி பெற்ற மனிதருக்கெல்லாம் சொல்லிக் கொடுத்தான். இதை செய்தால் வெற்றி என்று. 


சுவடி ஓதும் மைந்தன்  :- அப்ப இந்த ஞானத்தை அறிவை வச்சுக்கொண்டு மாணிக்கவாசகர் என்ன பண்றாரு?  


அடியவர் :- நிறைய பேருக்கு சொல்லிக் கொடுக்கிறாங்க. 


சுவடி ஓதும் மைந்தன்  :- நிறைய பேருக்கு சொல்லிக் கொடுக்கிறார் 


அடியவர் :-  உலகத்தை வெல்வதற்கு… 


சுவடி ஓதும் மைந்தன்  :- உலகத்தை வெல்வதற்கு 


==============================

# மாணிக்கவாசகரை அழிக்க திட்டமிட்ட பல அரசர்கள் 

==============================


காகபுசண்ட மாமுனிவர்:- ஆனாலும் இதில் பல அரசர்கள் இவன் பொய்யன் இவனை பின் இவனை அழித்து விடலாம் என்று எண்ணியும் கூட 


சுவடி ஓதும் மைந்தன்  :- இதிலே சில அரசர்கள் என்ன பண்ணாரு? இவன் பொய்யன் இவன் சொல்லிதான்…. 


அடியவர் :-  ஆள முடிச்சிடலாம் அப்படின்னுட்டு சில பேர் நினைக்கிறாங்க. 


சுவடி ஓதும் மைந்தன்  :- பொய்யன். ஆமா இவர்  சொல்லிதான் பெரிய விஷயம் எல்லாம் நடக்குது. பெரிய பெரிய வெற்றிகள் எல்லாம் கிடைக்குது. இவரை  ஒழிச்சிடலாம்னு சொல்லிட்டு… பல அரசர்களும் திட்டமிடுறாங்க.


====================================

# ஆதி ஈசனாரை “அப்பா!!!!!” என்று அழைத்தால் நடக்கும் அதிசயங்கள் 

===================================== 


காகபுசண்ட மாமுனிவர்:- இதைத்தன் எவை என்று அறிய ஆனாலும் திட்டமிட்டாலும் பின் இவனுக்கு தெரிந்தது நிச்சயம் தன்னில் கூட. “அப்பா” என்றால் அனைத்தும் மாற்றி விடுவார்கள் என்று.


அடியவர்கள் :- ( சிரிப்பு ) 


சுவடி ஓதும் மைந்தன்  :-  மாணிக்கவாசகப் பெருமானுக்கு தெரிஞ்சு போச்சு. அரசன் வந்து நம்ம சிறையில போட்டாலும் சரி. கொன்னாலும் சரி. என்ன பண்ணுவாரு? 


அடியவர் :- அப்பான்னா போதும்…. 


சுவடி ஓதும் மைந்தன்  :- அப்பான்னு கூப்பிட்டா? 


அடியவர் :- ஓடி வந்துருவார் 


=============================

# நரிகள்….குதிரையான மற்றொரு ரகசியம்… “அப்பா” என்று அழைத்தால் போதும்.

=============================


காகபுசண்ட மாமுனிவர்:- இதை அறிவித்து எவை என்று அறிய ஆனாலும் இதன் தன்மையும் கூட. இதனால்தான் பல பல வழிகளில் கூட பின் நரிகள் எவை என்று அறிய. 


சுவடி ஓதும் மைந்தன்  :- அதனால நரிகளும் குதிரையை மாத்துறது இந்த இதுலயே தான்ன்றாரு இதுக்கு எல்லாம் இது ஏன் சொல்லலன்னா இதை சிம்பிளா சொல்றாரு ஐயா புரியுதுங்களா அப்பா என்று சொன்னால் 


அடியவர் :-  எல்லாத்தையுமே மாத்திரலாம். 

ஆணை,  பெண்ணாக  மாத்திரலாம். 

பெண் ஆணா மாத்திரலாம்.

குதிரையை நரியாக்கிடலாம். 

நிறைய குதிரை ஆக்கிடலாம். 

எல்லாமே மாத்திரலாம். 

அப்பான்னு சொன்னா எல்லாத்தையும் மாத்தி கொடுத்துருவார் (ஈசன்)




சுவடி ஓதும் மைந்தன்  :- இவரு எல்லாமே மாத்தி கொடுத்துருவாரு 


===================================

# மாணிக்கவாசகர் திருவாசகம் பாடிய , பாடல் பெற்ற ஸ்தலங்களுக்கு சென்றாலே பாவம் நீங்கும்

===================================


காகபுசண்ட மாமுனிவர்:- இவை அறிவித்து, இவைதன் பின் நிச்சயம் தன்னில், அழகாக இவ்வாறு, இவன் தன் பாடல் பெற்ற ஸ்தலங்களுக்கு சென்றாலே பாவம் நீங்கும். நீங்குமடா முட்டாள் மனிதனே. 


சுவடி ஓதும் மைந்தன்  :- மாணிக்கவாசகர் எங்கெல்லாம் போயிட்டு,  பாடல் பெற்ற ஸ்தலங்களை போனாவே, அங்க போய் வந்தாலே, நமக்கு பாவங்கள் எல்லாம் நீங்கும். அது தெரியாமல் இருப்பதால்  நம்மள முட்டாள்கள்னு திட்டுறாங்க. 


===================================

# ஈசனாருடன் நேரடி தொடர்பில் இருந்த மாணிக்கவாசகருக்கே அவரின்  பாவம் தீர்த்த திருத்தலம் - திருஅண்ணாமலை 

===================================


காகபுசண்ட மாமுனிவர்:- இப்படிப்பட்ட இப்படிப்பட்டவனுக்கே பாவம் ஏற்பட்டது அறிந்தும். ஆனாலும் எங்கே தீர்த்துக் கொண்டான் என்றால், அண்ணாமலையிலே தீர்த்துக் கொண்டான். 


அடியவர் :- சிவாய நம !!!!! 


அடியவர்கள்  :- ( பலத்த கை தட்டல்கள் ) 


சுவடி ஓதும் மைந்தன்  :- அப்ப இவ்வளவு அறிவு உள்ள , இவ்வளவு இறைவனிடம் பேசியும் மாணிக்கவாசகருக்கு என்ன பண்ணது ஐயா? 



அடியவர் :- அவருக்கே சில வினைகள் சில விஷயத்தில் பாவம் ஏற்படுது அது எங்க தீர்த்துக் கொண்டாரு?


அடியவர் :-  அண்ணாமலையில் தீர்த்துக்கிட்டு இருக்காங்க 


சுவடி ஓதும் மைந்தன்  :- அண்ணாமலையில் தான் தீர்த்துக் தீர்த்திருக்காங்க.


=================================

# திருவண்ணாமலையில் , எப்பொழுதும் அண்ணாமலையார் பக்கத்திலேயே இருக்கும் வரத்தை பெற்றார் மாணிக்கவாசகப் பெருமான். அண்ணாமலை வருபவர்களுக்கு வரங்களை வாரி அருளும் மாணிக்கவாசகப் பெருமான். 

==================================

# அடியவர்கள் கெட்டியாக இதனை பயன்படுத்தி நலம் பெறுக.

==================================


காகபுசண்ட மாமுனிவர்:- இவைத்தன் அறிவித்து எதை என்று கூற “அப்பா !!!!! எப்பொழுதும் அறிந்தும் கூட உன் பக்கத்திலேயே நிற்க வேண்டும்”  என்றெல்லாம் வரங்களை. 


காகபுசண்ட மாமுனிவர்:- பின் அறிந்தும் இதனால் பின் ஈசன் இருக்கும் இடத்திலே, பின் அதாவது பக்கத்திலே மாணிக்கவாசகனும். 


சுவடி ஓதும் மைந்தன்  :- ( அப்ப மாணிக்கவாசகப் பெருமான் என்ன பண்றாரு? வரும் அடியார்களுக்கு  பாவத்தை நீக்கிட்டு,  உன் பக்கத்திலேயே இருக்கணும்.  நீ வரம் கொடுக்காம போய்விட்டாய் என்றால்,  நான் அவர்களுக்கு வரம் கொடுக்கணும் இல்ல?  )


அடியவர் :-  சிவாய நம !!!!! …..ம் 


சுவடி ஓதும் மைந்தன்  :-  நான் உன்னோட பக்கத்துல தான் இருப்பேன். நீ ஏதாவது பண்ணியான்னா நான் அப்படின்னு சொல்லிட்டு… அப்ப திருவண்ணாமலை என்னங்கிறார்…. ( நால்வர் சன்னிதி ) அது பக்கத்திலே இருக்கிறார்.



====================================

# மாணிக்கவாசகப் பெருமான் திருவண்ணாமலையில் கேட்ட மற்றொரு வரம் :-

==================================== 

# “அப்பா !!!! உலகம் இருக்கும் வரை, மற்றவர்களுக்கு நிச்சயம் இவ்வாறு, இவ்வாறு என்றெல்லாம் சொல்லி, மாற்ற வேண்டும் என்று தகுதி எனக்கு கொடு.”

====================================


காகபுசண்ட மாமுனிவர்:- எவை அறிவித்து பின் அப்பா!!!!!  யான் உலகம் இருக்கும் வரை, மற்றவர்களுக்கு நிச்சயம் இவ்வாறு, இவ்வாறு என்றெல்லாம் சொல்லி, மாற்ற வேண்டும் என்று தகுதி எனக்கு கொடு.


சுவடி ஓதும் மைந்தன்  :-  ஐடியா மணி 


அடியவர் :- ம் 


சுவடி ஓதும் மைந்தன்  :-  ( இங்க மாணிக்கவாசகப் பெருமான் என்ன சொல்றாருன்னா… மாணிக்கவாசகப் பெருமான் ஐடியா மணிங்க ஐயா.  நான் திருவண்ணாமலை இங்கே இருக்கிறேன். மக்களுக்கு ஏதாவது கெட்டது நடந்துச்சுன்னா,  நான்  மாத்தணும் அதுக்குரிய தகுதியை நீ எனக்கு கொடு அப்படின்றாங்க கேக்குறாங்க ஐயா )


====================================

# திருஅண்ணாமலைக்கு சென்றாலே தானாகவே சில பிரச்சனைகளுக்கு விடிவெள்ளி கிடைத்துவிடும் ரகசியம் - மாணிக்கவாசகப் பெருமான் அருள் மழை.

====================================


காகபுசண்ட மாமுனிவர்:- இதனால்தான் அண்ணாமலைக்கு வந்தால் தானாகவே சில பிரச்சனைகளுக்கு விடிவெள்ளி கிடைத்துவிடும். 


அடியவர் :-  சிவாய நம !!!!! 


அடியவர்கள் :- ( கை தட்டல்கள் ) 



சுவடி ஓதும் மைந்தன்  :- அப்ப அண்ணாமலைக்கு ஏன் வர சொல்றாரு?  நீங்க வந்தாவே, சில பிரச்சனைகள் தானாவே வந்து தீர்ந்துரும். விலகிவிடும். சில பிரச்சனைகளுக்கு மாணிக்கவாசகர் அருளால தானா விலகிடும். 


======================================

# மாணிக்கவாசகனை யாம் பெண்ணோன் என்று அழைப்போம் 

=====================================


காகபுசண்ட மாமுனிவர்:- இவைதன் இன்று பெண்ணோன் பற்றி சொல்லிவிட்டேன். யான் பெண்ணோன் என்றே  அழைப்பேன் அவனை. 


அடியவர் :-  சிவாய நம !!!!! 


சுவடி ஓதும் மைந்தன்  :-  (நான் இன்னைக்கு பெண்ணோனைப் பற்றி சொல்லிவிட்டேன். மாணிக்கவாசகப் பெருமான் அவர் பெண்ணுதான் எனக்கு.  ஏன்னா பெண் குழந்தையை வந்து,  அவர் ஈசன் தான் மாத்துனார். அதனால எனக்கு அவர் பெண்ணுதான்.) 


======================================

# இப்படிப்பட்ட மாணிக்கவாசகப் பெருமான் பற்றி யாருக்கும் தெரியாமல் எப்படி நல்லது அடியவர்களுக்கு நன்மைகள் கிடைக்கும்?

======================================


காகபுசண்ட மாமுனிவர்:- எதை அறிவித்து இவ்வளவு ஞானி….. இவனைப் பற்றி, இவளைப் பற்றி அறிந்திருக்கவில்லையே. ஆனால் எவ்வாறு நியாயம்?  எப்படி கிடைக்கும் பொருட்கள்? நீங்களே கூறுங்கள்? 


சுவடி ஓதும் மைந்தன்  :- இவ்வளவு பெரிய ஞானி… மக்களுக்காக இறைவனிடம் போராடி…. இவர் பற்றி நீங்க தெரிஞ்சுக்காம இருந்தா… உங்களுக்கு எப்படி கிடைக்கும்?


அடியவர் :-  யாருக்காவது தெரியுமா அவங்க பெண்ணுன்னு? அதுதான் கேக்குறாங்க. 


============================

# நம் அனைவரின் உடம்பிற்கு மருந்து - மாணிக்கவாசக பெருமானின் உண்மை கதை 

============================


காகபுசண்ட மாமுனிவர்:- இதைத்தன் பின் உடம்பிற்கு இப்பொழுது மருந்து கொடுத்துவிட்டேன் 


சுவடி ஓதும் மைந்தன்  :- இப்ப என்ன பண்ணார்? உடம்பிற்கு மருந்து கொடுத்தார். அவரைப் பற்றி சொல்லி, உடம்புக்கு மருந்து கொடுத்தார். உடம்புக்கு ஒரு மருந்து கொடுத்துட்டார்.



==================================

# வணக்கத்திற்கும் , பெரும் மரியாதைக்கும் உரிய மகத்தான காகபுசண்ட மாமுனிவர் இவ் உலகிற்கு மகத்தான ரகசியங்களை வாரி வழங்கினார்கள்.

==================================

# இது கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் நமச்சிவாய வாழ்க !!!!!  நமச்சிவாய வாழ்க !!!!!  என்று அழைத்த அதன் பலன் ஆகும்.

==================================

# கூட்டுப் பிரார்த்தனை - ஒன்று கூடினால் மகத்தான வாழ்வு உண்டு, உண்டு, உண்டு…..

==================================


காகபுசண்ட மாமுனிவர்:- இன்னும் சித்தர்கள் வருவார்கள். செப்புவார்கள். இது போதும். பின் நீங்கள் பின் அதாவது இத்தொலை எதை புரிந்து கொள்ள, இத்தனை பின் பாடல்கள் பாடி பாடி நமச்சிவாயா !!!!!  நமச்சிவாயா !!!!!  என்று. 


காகபுசண்ட மாமுனிவர்:- அதற்காக இறங்கி வந்து சொல்லிவிட்டேன். மீண்டும் சந்திக்கின்றேன். ஆசிகள்  !!!!!  ஆசிகள்  !!!!! 


அடியவர் :-  சிவாய நம !!!!!.... பெருங்கருணை…. புசண்ட பெருமான் திருவடிகள் போற்றி !!!!!


சுவடி ஓதும் மைந்தன்  :- என்ன சொல்றார் தெரியுமா கடைசில? நீங்க நமச்சிவாய வாழ்க !!!!!  நமச்சிவாய வாழ்க !!!!!  தொடர்ந்து சொல்றீங்க ….ஆனா ஒன்னும் நடக்கல. ஆனா கடைசில வந்து நீங்க இது மாதிரி சொல்லி சொல்லி…. இதே மாதிரிதான் போயிட்டு இருப்பீங்க.  அதனால நான் வந்து உண்மை  சொல்லிட்டேன். தெரிஞ்சுக்கோங்க. அந்த புண்ணியத்தும் உங்களுக்கு நான் கொடுத்துட்டேன். அடுத்து நான் இன்னொரு வாக்கிலும் திருப்பி வேற ஒன்னு நான் சொல்றேன். அப்படியென்றால்  இப்ப  அடுத்த சித்தர் வருவாருங்க ஐயா. ஓகேங்களா. 


மற்றொரு அடியவர்  :- ( மதிய உணவு அழைப்பு அனைவருக்கும் அன்புடன் தெரிவித்தார்கள் …….)


===============================================

மீண்டும் அன்புடன் அகத்திய  மாமுனிவர் வாக்கு ஆரம்பமானது ….

===============================================



(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 08.03.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்குகள் தொடரும்……)


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.  சர்வம் சிவார்ப்பணம்.