“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Saturday, December 18, 2021

விநாயகர் வழிபாடு பற்றி ஸ்ரீ அகத்தியர் அருளிய ஜீவ வாக்கு

 


மூத்தோனை வணங்கு. வணங்கி பின் பயணம் துவங்கு. மூத்தோனை வணங்கு. வணங்கி, வணங்கி உன் தடைகளை அகற்று. மூத்தோனை வணங்கு. வணங்கி, வணங்கி உன் பாவ கர்மாவை அகற்று. மூத்தோனை வணங்கு. வணங்கி, வணங்கி உன் செயல் யாவும் ஜெயமாகும் என்ற நினைப்புக்கு ஆளாகு. மூத்தோனை வணங்கு. வணங்கி, வணங்கி உன் குறையெல்லாம் அகற்றிக்கொள். மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு என்று நாங்கள் எம் முன் அமர்பவன் இளையோனாக இருந்தாலும், மூத்தோனாக இருந்தாலும் கூறுகிறோமே. ஏன் ? மூத்தோனை வணங்கு. மூத்தோனை வணங்கு என்றால் அங்கு மூப்பை குறிப்பதல்ல. அது மூப்புக்கெல்லாம் மூப்பான அந்த மூத்தோன், இறையின் அந்த வடிவம் விக்கினங்களைக் களையக்கூடியது. தடைகளை களையக்கூடியது. எண்ணிய காரியத்தை ஜெயமாக்கக் கூடியது. எனவேதான் நாங்கள் எதையெடுத்தாலும் ‘ மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு ‘ என்று கூறுகிறோம். இஃதொப்ப ஒருவன் வினவலாம். நீக்கமற நிறைந்துள்ள பரம்பொருள் ஒன்றுதான். வடிவம்தான் வேறு, வேறு என்று கூறுகின்ற சித்தர்கள் ‘ ஏன் மூத்தோனை வணங்கு, இளையோனை வணங்கு, அன்னை ‘ திரு’ வை வணங்கு ‘ என்று கூறவேண்டும் ? பரம்பொருளை வணங்கு என்று கூறலாமே ? கூறலாம்தான். ஆனால் இஃதொப்ப பலமுறை நாங்கள் உதாரணம் கூறியிருக்கிறோம். சுவையான இனிப்பு பண்டங்கள் விற்கின்ற அங்காடியிலே முன்பெல்லாம் ஒரு வகையான இனிப்பு பண்டங்கள் அதிலும் குறிப்பாக ஆலய திருவிழாக்களில் விற்பார்கள். அனைத்தும் சுவையான இனிப்பிலே விதவிதமான வண்ணங்களிலே செய்யப்பட்டிருக்கும். ஒன்று மிளகாய் பழம் போல் இருக்கும். இன்னொன்று பாகற்காய் போல் இருக்கும். ஒன்று சிங்கம் போல் இருக்கும். இன்னொன்று கிளி போல் இருக்கும். கடித்து சுவைத்தால் அனைத்தும் ஒரே சுவைதான்.  ஆனால் இதை அறியாத குழந்தை என்ன சொல்லும் ? ‘ எனக்கு மிளகாய் பழம் மிட்டாய் வேண்டாம். அந்த சுவை நன்றாய் இராது. நாவிலே காரம் தாங்காது. கனி வடிவத்தில் இருக்கின்ற சுவையை வாங்கிகொடு ‘ என்று கூறும். வடிவம்தான் வேறு. ஆனால் சுவை ஒன்று என்பது குழந்தைக்கு தெரியாததுபோல அனைத்துவிதமான தெய்வ வடிவங்களும் விதவிதமாக இருந்தாலும் இருக்கின்ற பரம்பொருள் ஒன்று. பிறகு ஏன் மூத்தோனை வணங்கு என்று கூறுகிறோம் ? ஒரு மனிதன் அலுவலகத்தில் அதிகாரியாக அரசாட்சி செய்கிறான். இல்லத்தில் தாரத்திற்கு கணவனாக செயலாற்றுகிறான். பிள்ளைக்கோ தகப்பன் என்ற நிலையில் செயலாற்றுகிறான். நன்றாக கவனிக்க. அவன், அலுவலகத்தில் ஒரு கைசான்று இடவேண்டுமென்றால் அதற்கான விதிமுறை வேறு. அதே தருணம் பிள்ளையவன், வித்தை கூடத்திலிருந்து ஒரு கைசான்று கேட்கிறார்கள் என்றால், அலுவலகத்தில் கடைப்பிடிக்கும் அதே விதிமுறையை பின்பற்ற இயலுமா ? இயலாதல்லா?

இப்படி ஒரே மனிதன் இல்லத்தில் ஒருவிதமாகவும், அலுவலகத்தில் ஒருவிதமாகவும், பொது இடத்தில் ஒருவிதமாகவும், ஆலயத்தில் ஒருவிதமாகவும் நடந்துகொள்ள வேண்டிய கட்டாயம் இருப்பதுபோல பரம்பொருளும் தடைகளை நீக்கும்பொழுது விநாயக வடிவத்திலும், அஃதொப்ப செவ்வாய் தோஷம் போன்ற தோஷங்களை நீக்கும்பொழுது முருகப்பெருமான் என்ற வடிவத்திலும், மனிதனுக்கு அன்பை போதிக்கும்பொழுது அன்னை வடிவத்திலும், மனிதனுக்கு பொருளாதார நெருக்கடியை தீர்க்கும்பொழுது மகாலக்ஷ்மி வடிவத்திலும், இறை, மனிதனுக்காக தன் உருவத்தை மாற்றிக்கொள்கிறார். இதில் பேதங்கள் ஏதுமில்லை. அதற்காக உருவத்தை மாற்றி வணங்கினால் கேட்டது கிடைக்காது என்ற தவறான பொருளை கொள்ளவேண்டாம். இல்லை, ‘ எனக்கு பிடித்த ஒரே உருவத்தை நான் எப்பொதுமே வணங்கிக்கொள்கிறேன் ‘ என்றாலும் பாதகமில்லை. இருந்தாலும் நாங்கள் கூறுகிறோம் என்றால் அதில் இறைவனின் சூட்சும காரணங்கள் இருக்கும் என்பதால் மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு. பின் பயணம் துவங்கு. ஆசிகள்.

No comments:

Post a Comment