“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Saturday, December 18, 2021

முதல் ஆலய கந்த நாடி - Aug19 , 2018

   
                                             


வானோ புனல்பார் கனன்மா ருதமோ
ஞானோ தயமோ நவினான் மறையோ
யானோ மனமோ வெனையாண் டவிடந்
தானோ பொருளா வதுசண் முகனே!

திருச்சிற்றம்பலம்

காற்றாகி நண்மை அனுகூலம் கண்டணன் மங்கை லாபம்.கண்டதொரு வேளை அது அனுகூலம்.

சித்தர்கள் செயத்தொரு அன்னதான
தர்ம பூசை தன்னில் 7 சித்தர் ஆசி உனக்கு கிடைத்ததென்பேன்.

கண்டதொரு ஏற்றுக்கொண்ட மாதேஸ்வர பூசை மிக சௌக்கியம் என்பேன். அதுமுதலாய் அகத்தியனும் உன் மீது பிரியம் கொண்டு ஆலயம் அமைக்க ஆயத்தம் ஆனதே. *( 7 சித்தர்கள் அதில் அகத்தியரும் ஒருவர். அதில் இருந்து அகத்தியர் ஆலயம் அமைக்க ஆயத்தம் ஆகியிருக்கார் அவரே)

மகிமை புகழாய் ஆலயம் அமைக்கின்ற யோகம்  உண்டு. ஐப்பசி திங்கள் பின் முயற்ச்சி செய். கொண்டதொரு அனுகூலம் அமைப்பு எல்லாம் முறையாக பொதிகை முனிவன் போல் அமைத்துக்கொள். நலமாக கண்டதொரு கட்டுமான பணி எல்லாம் கிழ திசையில் அமைக்க வேணும். (கிழக்கு திசை).
கோபுரம் தன்னில் முறையதாகும் கந்தவடிவேலனுக்கும் , சிவனுக்கும் உருவம் கொள். (முருகனுக்கும் சிவனுக்கும் கண்டிப்பாக உருவம் இருக்கிற மாதிரி கோபுரம் பாத்துக்கனும்)
கண்டதொரு வேளையாகும் முறை உண்டு லாபமாகும். கிழக்கு திசை தன்னில் அகத்தியனும், தெற்க்கு திசைதன்னில் முறையாகவே உபதேசம் செய்கின்ற சுவாமி நாதனும், மேற்க்கு திசை தன்னில் விஷ்ணுவும், வடக்கு திசை தன்னில் பிரம்மனுக்கும் சிறப்புறவே அனுகூலமாய் சிற்ப்பங்கள் மேல் கொண்டு ஒரு நிலை கோபுரம் கொள். தாமரை கோபுரம் கொள். ( தாமரை வடிவில் கோபுரம்). முறை உண்டு லாபமாகும் உள்ளுக்குள் லோபமுத்திரை வேணாம். தனியாகவே அனுகூலம். பொதிகை மலையில் எப்படி உள்ளதோ அப்படியே அமைத்துக்கொள். முறை உண்டு லாபமாகும். நல்லபடியானதொரு குடும்பஸ்த்தரகள் எல்லாம் பூசித்து பலன் பெறட்டும்.

*நல்லதொரு சித்தர்கள் ஆட்சி*.

இந்த விக்கிரகம் பிரதிஷ்டை பின்னர் அரசியல் மாற்றம் வரும். அரசாங்க மாற்றம், மனை மண் மாற்றம் , ஊருக்குள் மாற்றம், உலக மாற்றம் வரும். ( இங்க உக்காந்தார்னா நீங்க பன்றது மூலம் உலகத்திற்கே நண்மை நடக்குமாம்). சீருண்டு முறையாக நண்மையாகும் ஆகமப்பண்டிதர்கள் உண்டு பரங்கிரி தன்னிலே இருக்கின்ற பாடசாலை பிள்ளைகளை அமர்த்து பிரதிஷ்டை செய்துகொள். ( திருப்பரங்குன்றம் பாடசாலை பிள்ளைகளை வைத்து பிரதிஷ்டை பன்னுக்குறதாம். அங்கேயே பன்னிக்கனுமாம். வேறு எங்கேயும் போக வேண்டாம்.)

ஆகமச்சாத்திரங்கள் போலும் பரங்கிரி நாதனுக்குரியதொரு ஸ்தபதிதனை நாடு. அளவோடு சிற்ப்ப நூட்பங்கள் எல்லாம் அறிவிப்பான் அன்னவன். ( அந்த பாட சாலையில பேசி அவங்களோட ஸ்தபதியே பேசி , என்ன அளவு, என்ன மாதிரி கட்டுமானம் கோபுர அளவு என்ன எப்படி படி வைக்கிறது எல்லாம் ஸ்தபதியே முடிவு பண்னிக்கிட்டும். முருகன் எதிலையும் தலையிட்டுக்கல. திசை மட்டும் கிழக்கா இருக்கனும். இதுக்கு வேண்டிய எல்லாரும் பரங்குண்றத்தில் உள்ள பாடசாலையில் இருந்து வரணும்.)

முறையாக வந்ததோரு வேளை சுவாமிநாதன் தன்னில் வருவான். சீருண்டு முறையாகும் கொண்டதொரு வேளை என்பேன் கந்தனது அனுகூலம் வந்து சேரும். ஊர் கூடும்.நல்லதொரு கொண்டாடும். குடமுழுக்கு நடக்கும். முறையாகவே 10 மாதம் திருப்பணிக்குப்பின் குடமுழுக்கு செய். ( மொத்தமாக 10 மாசம் - ஒரு வருஷம் எடுத்துக்கலாம்)

நலமாக நல்லதொரு வெளி நாட்டு நிதி எல்லாம் வரும். உள்ளூருக்குள் பணம் வந்து சேரும். அகத்தியர் பக்தர்கள் எல்லாம் வந்து சேர்வர்.

*ஆனபடியாய் அது பூசையது ஆயில்ய பூசை தவராமல் நடத்த வேணும்.நாள் பூசை, நித்த பூசை, ஆயில்ய குரு பூசை தப்பிடாதே.*
( ஆயிலயத்திற்கு மட்டும் விசேச குரு பூஜை விடாம பன்னணும்.மார்கழி ஆயில்யத்ல ஆரம்பிக்கனும்.)

நலமாக நண்மை ஆகும்.கொண்டதொரு வேளை ஆகும். கண்டிட்ட காலம் என்பேன். அனுகூலம் பிரதிஷ்டை விதிப்படி ஸ்தபதி சொல் கேள்.


அதற்க்கு முன் சென்று வரவே வேணும். சேத்திரங்கள் பல உண்டு காட்டும் காட்டும். முறை உண்டு முருகன் அருளினாலே முறையாக திருவிடைக்கழியும் செல்லு. (திருக்கடையூரில்்இருந்து அஞ்சு கிலோமீட்டரில் திருவிடைக்கழி - வீசாகம் நட்சத்திரம் அன்று செல்லனும்)


முறை உண்டு லாபம் எனபேன். தீர்த்தங்கள் வைத்து பூசையது
செய்துதரும் ஆலயம். இருக்கின்ற உருவாகும் இடம்தன்னில் தெளித்த பின் ஆரம்பம் கொள். (....) முறையாக ஸ்தபதி வருவர். ஆனதொரு அர்ச்சகர், தலமை அர்ச்சகர் வந்து சேர்வர்.
ஆகமப்பண்டிதர் வருவர். சீராக சித்தர்கள் வருவர். முனிவர்கள் வருவர். சூட்சுமத்திலே பலர் வந்து வழி காட்டுவர். அந்த அகத்தியனும் அங்கு வந்து அமர்வான் கந்த சீடன். லோபாமுத்திரை தன்னோடு அமர்வான்.

ஆனபடியாய் அலங்காரம் பெறுவான். ஆராதனை பெறுவான். ஊர்தன்னை காப்பான். பயம் பீதி இல்லை. பெரும் அதிஷ்டங்கள் மாற்றங்கள் அபூர்வ மாற்றங்கள் திருவிளையாடலகள் எல்லாம் பல நடக்கும்.

பலர் வந்து சேர்வர் ஆதலாலே ஆனபடியாய் ஒப்பந்தம் தன்னிலே முறையாக ஆலயம் அமையும் நேரம் முறையாக ஓர் அனுகூலம் அறக்கட்டளை ஒன்றை ஸ்தாபனம் கொள். கண்டதொரு வேளை ஆகும் அறக்கட்டளை தனக்கும் யோகம். கொண்டதொரு வேளை என்பேன். அகத்தியன் பேர் தன்னிலே வை. 

நலமாக நண்மையாகும். 11 பேர் சேர்வர். முறையாக பென்கள் மூன்றும் ஆன்கள் எட்டும்.  நலமுண்டு வாக நண்மை 11 பேரும் சேர்வர். அதற்க்கு மேல் உன் விருப்பம்.
நலமுண்டு லாபமாகும். இறை அருளும் குருவருளும் உண்டு அஞ்சேல். நல்லதொரு ஆலயக்கைங்கரியங்கள் சேரும்.  குடமுழுக்கு செய்வதும் பொறுப்பெல்லாம் நல்லதாக்கு.
சீராக நல்லதொரு பரங்கரி கந்தனிடமே விடு. மச்ச முனியையும் பிரார்த்தனை செய்.

நலமுன்டு நண்மை என்பேன். சிவனாரின் புத்திரனாம் கும்பமுனிக்கோர் கோவில் எழுவது மிக நல்லதே. இயற்கை சீற்றங்கள் உறையும். கண்டதொரு நெருப்பினால் வரும் அழிவு நீங்கும். எடுத்து செய் உன் குடும்பம் தளையும். சீராக வணங்குவோர்க்கெல்லாம் கல்யாண கோலத்தோடு பிள்ளைஎன மகவினோடு ஆன்மீக ஞானமும் வந்து சேரும். சிறப்பாக நல்லதொரு தனப்பிராப்தி வரக்கூடும். பணத்திற்க்கோ தடையில்லை. குணத்திற்க்கோ தடையில்லை. சண்டை என சச்சரவில்லை. செய்வதற்க்கு பலர் காத்திருப்பர். அறிவிப்பு கொடுத்தே செய். ( ஓப்பனா அறிவிப்பு கொடுத்தே பண்ணலாம் ) மறுபடியும் பத்து மாதம் கழியவே கேள்.

-( நாடி உரை முற்றே )-