“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Saturday, March 21, 2026

சித்தர்கள் ஆட்சி - 594 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - 14.03.2026 அன்று இந்தோனேசியாவின் அழகிய தீவான பாலியில் உரைத்த வாக்கு. பாலி ஆன்மீகப் பயணம் - பகுதி 1

 இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.










அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 14.03.2026 அன்று இந்தோனேசியாவின் அழகிய தீவான பாலியில் உரைத்த   வாக்கு. பாலி ஆன்மீகப் பயணம் -  பகுதி 1 


முதல் நாள் : 14.03.2026  (சனிக்கிழமை)

வாக்குரைத்த  தலம் # : முதல் புனித தலம்  -  -  “புரா  தீர்த்த எம்புல் (Pura Tirtha Empul)”


வாக்குரைத்த ஸ்தலம் முகவரி :  புரா தீர்த்த எம்புல், தம்பக்சிரிங், ஜியான்யார் ரீஜென்சி, பாலி 80552, இந்தோனேசியா.


கூகிள் மேப் லிங்க் :- https://maps.app.goo.gl/f9K7r2SmVv7cddmn6

Address :- Pura Tirtha Empul, Tampaksiring, Gianyar Regency, Bali 80552, Indonesia



( இவ் தொடர் வாக்கின் 10 பகுதிகளும் இங்கு அடியவர்கள் படிக்க வசதியாக கொடுக்கப்பட்டுள்ளது ................ 

சித்தர்கள் ஆட்சி - 594  - பகுதி 1
சித்தர்கள் ஆட்சி - 595  - பகுதி 2
சித்தர்கள் ஆட்சி - 596  - பகுதி 3
சித்தர்கள் ஆட்சி - 597  - பகுதி 4
சித்தர்கள் ஆட்சி - 598  - பகுதி 5
சித்தர்கள் ஆட்சி - 599  - பகுதி 6
சித்தர்கள் ஆட்சி - 600  - பகுதி 7
சித்தர்கள் ஆட்சி - 601  - பகுதி 8
சித்தர்கள் ஆட்சி - 602  - பகுதி 9
சித்தர்கள் ஆட்சி - 603  - பகுதி 10

)

======================================

# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 

=====================================


ஆதி மூலனை மனதில் எண்ணிச் செப்புகின்றேன், அகத்தியன். 


அப்பனே, எம்முடைய ஆசிகளப்பா. 


==============================

# மானிடப் பிறவியின் ஆச்சரியமூட்டும் மறைக்கப்பட்ட ரகசியங்கள்!

================================


அப்பனே, இங்கு பல வகையான அப்பனே  பின் நிச்சயம் உண்மைகள் மறைத்தே. 


அப்பனே மறைத்து!!!!! எதனால் ?????என்பவை எல்லாம் அப்பனே, பல ரகசியங்கள் உள்ளது என்பேன் அப்பனே.




=================================

# இவ் ரகசியங்கள் எல்லாம் தெரிந்து கொண்டால், மனிதன்  நினைப்பதெல்லாம் தானாகவே நடக்கும். 

=================================


இவ் ரகசியங்கள் எல்லாம் மனிதன் தெரிந்து கொண்டால், அப்பனே, மனிதனின் அப்பனே என்ன அப்பனே  பின் எண்ணுகின்றானோ அவையெல்லாம் அப்பனே தானாகவே நடக்கும் என்பேன் அப்பனே!!




================================

# அனைத்து திறமைகளும் இருந்தும் அதை யாரும் அறிவதில்லை….

================================


இதனால் அப்பனே அறிந்தும் கூட, அதனால்தான் அப்பனே மனிதனுக்கு அப்பனே பின் அனைத்து திறமைகளும் கூட கொடுத்திருக்கின்றான். அப்பனே.


ஆனாலும் அதை யாரும் அறிவதில்லை!!!!!.


==============================

# இறைவனை , அங்கும் இங்குமாக, எவ்வளவு கஷ்டத்திலும் ,  நிச்சயம் அலைந்து பணிந்து பணிந்து வணங்குபவர்களுக்கு நடக்கும் அதிசயங்கள் …..

==============================


இதனால்தான் எதை என்று புரிய, அங்கும் இங்குமாக நிச்சயம் பின் யார்? ஒருவன் இறைவனை நிச்சயம் அதிக அளவு பின் பணிந்து பணிந்து தொழுகின்றானோ…. பின் எவ்வளவு கஷ்டத்திலும் கூட!!!......


நிச்சயம் இறைவன் பின் எங்கெங்கு… செல்ல வேண்டுமோ, அங்கு அழைத்து அருள்கள் கொடுத்து, பின் தான் வேண்டிய பின் விருப்பங்களை நிச்சயம் ஈடேற்றுவான்.


இதுதான் (ரகசியம்).


அதுமட்டுமில்லாமல் எதை என்று புரிய !!!


==================================

# யாரும் அறியாத இந்திர தேவன் கதை …கலியுகத்தில் முதன் முறையாக 

==================================


அதாவது இந்திரன் பல வழிகளிலும் கூட பின், அதாவது பல பாவங்களைப் பெற்றுக் கொண்டான். எப்படி?, ஏது? என்று!!


ஆனாலும் அனைத்தும் பின் மனிதர்களுக்கு நன்மை செய்யப் போய் எதை என்று. 


ஆனாலும் பின் எதை என்று லோகத்தில் பல வழியிலும் கூட பல பல விசித்திரங்கள்.


===========================

# தேவேந்திரனின் பாவங்களும் தீராத சாபமும்!

=============================


ஆனாலும் எங்கு?  ஏது? என்று கடைசியில் பூலோகத்தில் விழுந்துவிட்டான்.


ஆனாலும் எங்கும் நிறைந்தது. 


எங்கும், எங்கெங்கு எதை என்று அறிய பல ரிஷிகளை கண்டுணர்ந்தான்.


( அவ் ரிஷிமார்களும் ) அங்கு செல்!!    இங்கு செல்!!!     என்றெல்லாம்.


ஆனாலும் பல வகையில் கூட பின் கங்கை!! காவிரி!!! இன்னும் பல வகையிலும் கூட. 


பின் எங்கெங்கு சென்று தரிசனங்கள் கண்டு!! கண்டு!! பல பல தீர்த்தங்களில்  நீராடினான். 


============================

# படைக்கும் கடவுள் பிரம்ம தேவரின் அதிர்ச்சியூட்டும் விதி: புனித நதியில் நீராடினாலும் கரையாத பாவம்!

===============================


ஆனாலும் தன்,  பின் பாவங்கள் அப்படியே இருந்தது. 


ஏன்?, எதற்கு? என்றால், ஆனாலும் கங்கை நதியிலும், இன்னும் பல தாமிரபரணி, இன்னும் பல வழியிலும் கூட பின் எங்கெங்கு? ஏது? என்று காவிரி, இன்னும் நதிகள் பலவற்றை. !!!


ஆனாலும் பாவம் கரைந்திற்று.


ஆனாலும் பிரம்மனோ பின் எங்கு சென்றாலும் இவந்தன் பாவம் கழியக்கூடாது என்று ஒரு உத்தரவை. அதாவது விதியின் தன்னிலே ஏற்படுத்தி இருந்தான். 


ஆனாலும் அறிந்தும் கூட மீண்டும் பின், அதாவது அங்கு, அதாவது அவ்வவ் நதிகளில் கூட பல ரிஷிகள் பின், அதாவது நீராடச் சொன்னார்கள் அல்லவா!!!!


பின் நிச்சயம் பின், அதாவது அங்கு பாவங்கள் போவிடும். 


ஆனாலும் அப்பாவம் சிறிது நேரத்திலே மீண்டும் இவனுக்கு வந்துவிட வேண்டும் என்றெல்லாம் நிச்சயம் பிரம்மன்.!!  (இந்திரன் விதியில்)


ஏனென்றால் பிரம்மனும் கூட அறிந்து!!!




ஆனாலும் இவனுக்கு பல பின் ரிஷிகள் பின், அதாவது உதவிகள் செய்வார் என்று பின் ஏற்கனவே, அதாவது முன் முன் உதாரணமாகவே, அதாவது முன்பே நன்றாக உணர்ந்து வைத்திருந்தான்.


ஆனாலும் இவந்தன், அதாவது எதை என்று புரிய, இவை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட பல வகையும் கூட பல பிறப்புகள் எடுத்து எடுத்து வாழ்ந்தான் இந்திரனே.


===============================

# வயதுகள் ஆகிவிட்டதே என்ற கவலை…..

===============================


இதை தன், இவைதன்..... ஆனாலும் அசைக்க முடியாத ஒன்று அறிந்தும், ஆனாலும் எப்படி?, ஏது? என்று மீண்டும் பல வழியிலும் கூட பின் உடம்புகளில் பின் காயங்கள், இன்னும் கூட பின் வயதுகள் ஆகிவிட்டதே, ஆகிவிட்டதே என்றெல்லாம்.


ஆனாலும் அங்கும் இங்கும் திரிந்து எங்கும் ஏன்? எதற்கு? மீண்டும், அதாவது பின் பிரம்ம லோகத்திற்கு, பின் பிரம்ம லோகத்திற்கு போக ஆசைப்பட்டான்.


==================================

# பிரம்ம தேவரிடம், பல  கேள்விகள் கேட்ட இந்திர தேவன் 

==================================


எதை, எவை என்று குறிக்க, ஆனாலும் பிரம்மனிடம் சென்றான்.


பின் பிரம்மனே!!!! அறிந்தும் ஏன் இத்தனை?? ஏன் இத்தனை??? அவகாசங்கள். 


எதற்காக இத்தனை பிறவிகள் கொடுத்து? 


எதற்காக கர்மத்தை என்னால், அதாவது கர்மம் போகின்றது என்று பின், அதாவது ரிஷிகள் !!!!!


ஆனாலும் மீண்டும் சிறிது நேரத்திலே பற்றிக் கொண்டது.


ஆனாலும் பின் இதை ரிஷிகள் இப்படித்தான் எழுதி வைத்திருக்கின்றார்கள். 


ஆனாலும் ஒரு ஒரு சரியான ஒரு ஞானி நிச்சயம் தன்னில் கூட (என்னிடத்தில்.... நீ)  மீண்டும் பிரம்மனிடத்திலே!!!! கேள்,!!!! 


உன் விதியை சரியாக நன்கு பின் உணர்ந்து கொண்டு வந்தாலே, பின் அறிந்தும் நீ வெல்லலாம்.


நீ எதை நினைத்தாயோ என்று!!!


==================================

# இவ் கதையின் மூலம் ஒரு உண்மை - நாம் அனைவரும் பூமியில் ஏதாவது ஒரு காரியத்துக்காக தான் இங்கு வந்திருக்கின்றோம் என்று உணருங்கள். அவ் காரியம் என்ன என்று அறிய முயலுங்கள்…..

==================================


ஏனென்றால், ஒரு அதாவது மனிதன் பின் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன், ஏதாவது ஒரு காரியத்துக்காகத்தான் இங்கு வந்திருக்கின்றான் என்று. ( பூமியில் மனிதன்  பிறப்பு)


ஆனாலும் அதை அறியாமல், தெரியாமல், மீண்டும் எதை என்று புரியாமலும், மீண்டும் மீண்டும் பிறப்புகள் எடுத்து எடுத்து அறியாமலும், தன்னைத்தானே அறியாமலும், பிறரைப் பற்றி அறியாமலும், மீண்டும் மீண்டும் எதற்காக??? என்று பிறவிகளே தெரியாமலே எடுத்து வந்து சென்று கொண்டே இருக்கின்றான். 


என்ன பயன்???    என்று, ஏது??    என்று அறியாமலே. 


=================================

# மீண்டும் இந்திர தேவன் கதை.

# சலிப்படைந்த இந்திரனும் பிரம்மலோக சண்டையும்…. 

=================================


இதனால் மீண்டும் அதாவது இந்திரன் பின் பிரம்மனிடத்தில்…. பின் பிரம்ம லோகத்திற்கே சென்று பின் பிரம்மனிடம் சண்டையிட்டான். 


ஏன்?, எத்தனை?, ஏது? என்று கூட!!!! தெரியாமல்தான் செய்த பிழைகள்.


ஆனாலும் இதற்கு இவ்வளவு?? பின் எதற்கு??, எத்தனை?? பாவங்கள், எங்கு சென்றாலும் கழியவில்லையே.


பின் பல ரிஷிகளை பார்த்தேன். பின் அங்கும் இங்கும் கூட!!!


அவர்களும் சொன்னார்கள்.  ஆனாலும் சென்றிட்டேன்.


மீண்டும் பாவ வினைகள் வந்தாயிற்று.


ஆனாலும் இவ்வாறுதான் சொன்னார்கள். பாவம் போயிற்று, மீண்டும் வந்துவிட்டது என்று. 


=========================

# பூலோகப் பிறவியின் பெருந்துயரம்: இந்திரனின் கண்ணீர்!

===========================


எதற்காக படைப்பு  பிரம்மனே  இப்படியெல்லாம் !????


நிச்சயம்!!... ஆனாலும் அனுபவித்து தான் தீர்த்தேன்.


எவ்வளவு, எவ்வளவு????.........


பூலோகத்தில் பிறந்தால், எவ்வளவு, எவ்வளவு???? கஷ்டங்கள் என்பது எல்லாம் நீ அறிவாய்.


================================

# பிரம்மதேவனே !!!! என் பிறவிகளை  முடித்துவிடு 

================================


அதேபோலத்தான் யானும் பின் பிறந்திட்டு எத்தனை, எத்தனை ??......


அதனால்தான் மீண்டும் உன்னிடத்தில் வந்தேன்.


இதனால், இதனால் பிறவிகள் பின் இதோடு முடித்துவிடு என்றெல்லாம்.


================================

# இந்திரனே!!!!!!!! நீ ஒரு சரித்திரம் படைக்க வேண்டும்.

================================


பின் பிரம்மனோ!?? நிச்சயம் இந்திரனே!!!!!!!! அப்படியெல்லாம் கூறக்கூடாது.


ஏனென்றால் உன்னால் ஒரு சரித்திரம் படைக்க வேண்டும். 


பின் உலகம் இருக்கும் வரை…. நீயும் பின் அதாவது உன் பெயரும் பின் அழியாமல் இருக்க வேண்டும் அல்லவா.


==========================

# “பிறவிகள் வேண்டாம், நிறுத்து பிரம்மனே!” - கதறிய தேவேந்திரன்! 

============================


பின் அதனால்தான் நிச்சயம் எவை என்று அறிய.


இதனால்தான் இத்தனை ஆட்டங்கள், இத்தனை பாவ வினைகளோடு, பின் எத்தனை??, எத்தனை?? ஆட்டங்கள் என்றெல்லாம்.


போதும். நிறுத்து, பிரம்மனே.!!! எதை, எவை என்று அறிய!!! போதும். பிறவிகள் வேண்டாம். 


பிறவிகள் அறிந்தும், அறிந்தும் பிறந்து, பிறந்து எதற்காக??


நிச்சயம் பின் ஆசைகளின் அலை ஓய்ந்து, அலை பாய்ந்து எதை என்று தெரியாமலும் பின் சிக்கலில் மாட்டிக்கொண்டு!! தவித்துக் கொண்டு!!! உடம்பும் வீணாகி பல நோய்களையும் பின் ஏற்படுத்திக் கொண்டு!!!... மீண்டும் எதை என்று தெரியாமலே வலியுடனே!!........


அதாவது இப் பிறவி போதும் இதோடு முடித்துக் கொள்கின்றேன்!!! அதாவது என்றெல்லாம் பிரம்மனிடம்!!!!


==============================

# பிரமதேவர் பதில் வாக்கு ……

==============================


ஆனாலும் இல்லை பின் இத்தனை வருடங்கள் இவ்ஆன்மாவிற்கு!!!


ஆனாலும் நீயும் கூட பின் ஏதோ ஒரு உடம்பை எடுத்துக்கொண்டு எடுத்துக்கொண்டு வந்துவிட்டால் நிச்சயம் எதை என்று புரிய!!!!


இதனால் பல ஆண்டுகள் அதாவது இன்னும் வாழ வேண்டும்!!!


அதனால்தான் அறிந்தும் புரிந்தும் கூட பின் மீண்டும் மீண்டும்!!!!


====================================

# இருவருக்கும் கடுமையான வாக்குவாதங்கள்!

====================================


இதனால் பின் இருவருக்கும் வாக்குவாதங்கள்!!...


பிரம்மனே எதை என்றறிய நிச்சயம் போதும்! போதும்!! என்றெல்லாம்!!!


ஆனாலும் பிரம்மனும் நிச்சயம் விடுவதில்லை!!!!


அதாவது ஏன்? நீ இங்கு வந்தாய்???..


நிச்சயம் பின் அதாவது அறிந்து கூட அதாவது மீண்டும் இந்திரனோ!!! 


பின் பல கோபங்கள் பின் பல வகைகளிலும் பட்டு!!... 


பிரம்மனே வேண்டாம்!!


எதை என்று அறிய இப்படி எல்லாம் செய்தால் யார்?? எதை என்று உன்னையும்… அதாவது இவ்வுலகம் இறைவனை ஏற்கும் … 


எதை என்று புரிய நல்லதுதான் செய்தேன்!!!


====================================

# இந்திர தேவனே ….நீ தீயவை செய்ததை  மறந்துவிட்டாய்… 

===================================


ஆனாலும்!!! பிரம்மனும் நல்லது செய்தாய் நல்லது செய்தாய் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கின்றாய்!!!


தீயவை செய்ததை பின் மறந்துவிட்டாயே!!!!! என்று!!!


ஆனாலும் பின் மீண்டும் இந்திரனும் என்ன தீமை செய்தேன்???? என்று!!


பிரம்மனும் ஆனாலும் யூகித்து பின் சொல்லட்டுமா!? என்று!!!




===============================

# செய்த பாவத்தை எடுத்துரைத்தால் , உனக்கு பாவங்கள் வந்துவிடும்.

===============================


ஆனாலும் அதாவது நிச்சயம் யான் சொன்னால் இன்னும் பாவங்கள் உந்தனுக்கு வந்துவிடும்!!!


===============================

# ஆனால் நீயே யோசித்தால் நிச்சயம் பாவங்கள் வளராது!!!

===============================


நீயே யோசித்தால் நிச்சயம் பாவங்கள் வளராது!!!


ஏதோ சில பின் ஆண்டுகள் அதாவது பின் மீண்டும் பிறந்து மீண்டும் அதாவது வந்துவிடலாம்!!!


அதாவது என்ன விருப்பமோ? என்றெல்லாம்!!


==============================

# செய்த தீயவற்றை யோசிக்க அவகாசம் தேவை …..

==============================


(இந்திர தேவனே ) அதனால் யான் சொல்லட்டுமா!??? 


நீ யோசிக்கின்றாயா என்று!!!!


அவகாசம் கொடு என்று இந்திரனும் கூட!!!


அதாவது யோசித்தான்!! யோசித்து எதை எவை என்று ஆனாலும் அறிந்து கொண்டான்!!


ஆனாலும் பின் மீண்டும்  பிரம்மதேவனிடம் நிச்சயம் அதாவது யோசித்தேன்!!!


இதற்காவது எதை என்று புரிய இத்தனை பின் பாவங்களா??? என்று!!


==============================

# பிரம்ம தேவர்  உடைத்த ரகசியம்: இந்திரன் செய்த அந்த மாபெரும் தவறு என்ன?

==============================


ஆனாலும் பின் அதாவது சொல்லிவிடுகின்றேன்!!!


(பிரம்மனும்) பரவாயில்லை என்று!!!


ஆனாலும் பின் யோசித்தாய் அல்லவா!!!!  அதே பெரியது என்று!!!


=================================

# மனதிற்குள் இருந்த தீய எண்ணங்களே கர்ம வினையாகத் தொடர்கிறது
=================================


=================================

# தீய எண்ணங்கள் 1 :- (தவறு #1)  மற்றொரு அரசனை வென்றுவிட வேண்டும். அவன் தோல்வி அடைய வேண்டும் என்ற எண்ணம்.

=================================


பிரம்மாவிடம் அதாவது பிறரை அதாவது நல்மனதாக பின் அரசனாக யான் இருந்தும்… மற்றொரு அரசனை வென்றுவிட வேண்டும் என்று!!! ஒரு பின் அதாவது அவன் தோல்வி அடைய வேண்டும் என்று எண்ணமும் வந்துவிட்டது!!!




=================================

# தீய எண்ணங்கள்2 :- (தவறு #2 )  காம வினைகள்…..

=================================


பின் சில காம வினைகளும் எதை இன்னும் பலவற்றைகளிலும் போட்டி கூட கூட பின் போட்டியில் வென்றுவிடலாம் என்றெல்லாம்!!


பின் அறிந்தும் எதை என்று கூட இன்னும் இன்னும் கூட !!!


================================

# கர்மம் சேராத நல்ல எண்ணம் :- தோல்வி அடைந்தாலும் வெற்றி அடைந்தாலும்,   அனைத்திருக்கும் இறைவனே காரணம் என்று உணர்தலே. இப்படி இருந்தால் கர்மம் சேராது. 

================================


ஆனாலும் இங்கு யான் நினைக்கவில்லை. 


பின் தோல்வி அடைந்தாலும் வெற்றி அடைந்தாலும் பின் எதை என்று புரிய அனைத்தும் இறைவனே காரணம் என்று யான் உணர்ந்திருக்கவில்லையே!!!!!   நிச்சயம் என்று!!!


அதேதான்!!!


============================

# மனதால் நினைத்தாலே பாவமா? அதிர்ச்சியில் உறைந்த இந்திரன்! 

============================


பிரம்மதேவனே!! பிரம்மதேவனே!!!! இப்படியெல்லாம் ஏது என்று அறிய இப்படி நினைத்தாலே பாவங்களா????????


பிரம்மனும்….


ஆம்!!!.... புரிந்து கொண்டாயா இந்திரனே!!!!!


===============================

#  மனதில் என்னென்ன தீய எண்ணங்கள் வளர்ந்தாலும் அதுவும் பாவம் பாவம்தான்.

=============================== 


நிச்சயம் மனதில் என்னென்ன?? தீய எண்ணங்கள் வளர்ந்தாலும் அதுவும் பாவம் பாவம்தான் எதை என்று கூட!!!


நீ செய்தாலும் பின் செய்யாவிடிலும் மனதில் எண்ணினாலே பாவங்கள் பாவங்கள் தான்!!!!




===============================

# எப்போது ஒருவருக்கு பாவங்களே சேராது ? - அதி சூட்சும வாக்கு.

===============================


ஏனென்றால் இறைவன் பின் அனைத்தும் இறைவன் அறிந்திருக்கின்றான். 


அனைத்தும் அதாவது பின் இறைவனே என்று விட்டுவிட்டால் பாவங்கள் சேராது!!!!


இதனால் நீ எண்ணியவை எல்லாம் பல வகைகளும் கூட பின் பாவங்கள் என்று!!!!!


(இந்திரன்.....) பிரம்மதேவனே!!! நிறுத்தும்!!!!


போதும்!!!


ஏதோ பின் மனது கலங்கடிக்கும் எதை என்று புரிந்து கொள்ளாமல் ஏதோ நினைப்பு எதோ வந்து விடுகின்றது!!!!


அதுவே பாவமா??? என்று!! 


பிரம்மனும் 


இந்திரனே நில்லும்!!!! ஆமாம்!!!


பின் அறிந்தும் கூட பின் நினைத்தாலே பாவம்தான் !!!


============================

# மனிதர்கள் நினைவுகளிலே, எண்ணங்களிலே  பாவமும் , புண்ணியமும் உள்ளது என்ற அதிர்ச்சியான வாக்கு. 

===========================


மனித உடம்பு எடுத்து எதை பின் அதாவது நல்லது நினைத்தால் பின் புண்ணியங்கள்!!!


தீயவை நினைத்தால் பின் பாவங்கள் என்று!!!


இப்படித்தான்  பல வகைகளில் கூட பின்...நீயும் நினைத்திருக்கின்றாய்!!!


அதாவது எதிரி நாட்டு அரசன் கூட  பின் வந்திருக்கின்றான். 


இவனை வீழ்த்தி விட வேண்டும் என்று நினைத்தாயே!!!!


அதுவும் ஒரு பாவமே!!!!


ஏன்? எதற்கு? பின் இப்படி இருந்தால் எப்படி? ஏது? என்று அறிய நீ தேவலோகத்திலிருந்து பிறந்தவன்!!!


இதனால் இன்னும் இன்னும் எத்தனை? எத்தனை? எதற்காக? பாவங்கள் என்றெல்லாம் அப்பனே யான் சொல்வேன் அப்பனே எதை என்று கூட!!!


=========================

# சிவபெருமானை வணங்க என்ன தகுதி வேண்டும்? 

# அகத்திய மாமுனிவர்  கூறும் மிகப்பெரிய உண்மை ! 

=========================


பின் இறைவனிடத்தில் இருந்து கொண்டு!!!


ஏனென்றால் இந்திரன் பல வகையிலும் கூட பின் ஈசனின் பக்தனாக இருந்தான்!! 


சிவபக்தனாக பல வகையிலும் கூட!!!


==============================

# சிவபெருமான்  பக்தர்கள் - சிறிது தவறாக நினைத்தாலே போதும் …அதுவே பாவமாக போய்விடும்.

==============================


பின் இதனால்தான் அப்பனே பின் சிவபக்தனாக இருந்து சிறிது அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் எதை என்று அறிய அப்பனே பின் அதாவது தவறாக நினைத்து விட்டாலே போதும் என்பேன் அப்பனே!!!


நிச்சயம் அது பாவம் பாவம் என்பேன் அப்பனே!!!!


=================================

# ஏன் ஈசனை அப்பனே வணங்குவதற்கு தகுதிகள் வேண்டும்!! 

=================================


அதனால்தான் ஈசனை அப்பனே வணங்குவதற்கு தகுதிகள் வேண்டும்!! தகுதிகள் வேண்டும்!! என்றெல்லாம் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே!!!!


சாதாரணமாக இல்லை ஈசன் என்பேன் அப்பனே!!!


இதனால்தான் நிச்சயம் தன்னில் கூட பின் பிரம்மதேவனும் நிச்சயம். 


==============================

# சிவபெருமான்  பக்தர்கள் மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும் 

==============================


பின் இந்திரனே!!! பின் யாராக இருந்தாலும் ஈசனை நினைத்து பாவம்.


அதாவது மனதில் நினைத்தாலே, பின் சில செய்கைகள் எல்லாம் அது பாவம்… பாவம்தான்!!!


அதை அனுபவித்தே தீர வேண்டும் என்றெல்லாம்!!!


நிச்சயம் செல் மீண்டும்!! என்றெல்லாம்!!!


================================

# மீண்டும் தொடர்ந்த சண்டைகள் 

================================


ஆனாலும் பிரம்மதேவனே நிறுத்தும்!!!!!


ஆனால் இத்தனை வெற்றியாளராக யான் திகழ்ந்தேன்!!!


ஆனால் இதைப்பற்றி யான் உணரவில்லை!!!!


மீண்டும் பிறப்பா ?? என்றெல்லாம்!!!


அதாவது நிச்சயம் பிரம்மதேவனும் சரி!!!... அறிந்தும் எதை என்று கூட நீயும் கூட பல வகையில் கூட….. பின் அதாவது இப்பொழுது கூட பின் சிவபக்தனாக தான் இருக்கின்றாய்!!!


================================

# பிரம்ம தேவர் உரைத்த பாவம் போக்கும் உபாயம்  

================================


பல வழிகளிலும் செல்!!!!! நிச்சயம் தன்னில் கூட. 


பின் அதாவது யானே நிச்சயம் தன்னில் கூட!!! 


ஐயோ என்று!!! எவை என்று புரிய போதும்!! என்று பிறவிகளை எதை என்று புரிந்து கஷ்டங்களை பட்டுப்பட்டு இருப்பாய் அல்லவா ?


==================================

(அதாவது , பூமிக்கு சென்ற இந்திர தேவன் , பல கஷ்டங்களை பட்டு ..ஐயோ !!! போதும் எனக்கு இந்த பிறவி என்று நினைக்கும்போது …..பிரம்ம தேவர் அப்போது வந்து முழுமையான பாவம் நீக்கும் ரகசியங்களை உரைப்பேன் என்று அருளினார்கள் )

==================================


அப்பொழுது யானே உந்தனுக்கு வந்து பின் உத்தரவிடுகின்றேன்!!!


அதாவது இங்கு செல்…. நிச்சயம் அனைத்தும் நீங்கும்!!!


அதாவது அறிந்தும் புரிந்தும் கூட என்றெல்லாம்!!!


================================

# மீண்டும் இந்திர தேவனை பூமிக்கு அனுப்பிய பிரம்ம தேவர் 

================================


ஆனாலும் பிரம்ம தேவனும், பின் சரியாக சென்றிட்டு வா என்றெல்லாம்!!!


இந்திரனும் பின் மீண்டும் பூலோகத்திற்கு வந்தான். 


ஏன்? எதற்காக? என்றெல்லாம்!!!


===============================

# மீண்டும் பூமிக்கு வந்த  இந்திர தேவனின் கவலைகள் …..

===============================


ஆனால் எப்படி அனுபவிக்கப் போகின்றோமே!? என்று!!!


ஆனாலும் நல்முறையாக அனைத்தும் செய்து கொண்டிருந்தான். பல சிவாலயங்களுக்கு சென்று தரிசனம் கண்டிருந்தான்!!!


ஆனாலும் பின் வாழ்க்கை பின் போதும் என்றெல்லாம் ஆகிவிட்டது 


எவ்வாறெல்லாம்!!!


============================

# இவ்விடத்தில் ஏராளமான ரகசியங்கள் காத்துக் கொண்டிருக்கின்றது.

# இப்போது இந்த வாக்கு , ஒரு ரகசியம் மேட்டுமே இது!!!!! அவ்வளவுதான்.

============================


இதை பின் நிச்சயம் தன்னில் கூட இன்னும் இன்னும் அப்பனே ஏராளமான ரகசியங்கள் காத்துக் கொண்டிருக்கின்றது!!!


ஒரு ரகசியம் இது!!!!! அவ்வளவுதான் இங்கு நடந்தது எதை என்று புரிய!!!!


=============================

# ஈசனாரின் திருவிளையாடல் ஆரம்பம் 

=============================




ஆனாலும் என்றென்று ஏது என்று அறிய இதனால் பல வகைகளோடு சென்று கொண்டிருந்தான் இந்திரன்.


ஆனாலும் பின் ஈசனும் பிரம்மதேவனிடம் வந்து நிச்சயம் எதை என்று கூற பின் அதாவது இவனுடன் விளையாடலாம் விளையாடுகின்றேன்! யான்!!!



===========================

# ஆதி ஈசனார் உத்தரவு 

=========================== 

# பிரம்மாவே, “நான் இந்திரனிடம் விளையாடும் போது , நீ   மௌனத்தை  தான் காத்திருக்க வேண்டும்”

===========================


மீண்டும் அவன் உன்னிடத்தில் வருவான்!!!


அப்பொழுது நீ மௌனத்தை  தான் காத்திருக்க வேண்டும் என்று, ஈசனும் பின் ஈசனும் பின் பிரம்மாவிடம் கூட!!!


===========================

# இவ் திருவிளையாடல்கள்  அனைத்தும் விஷ்ணுவும் பார்த்துக் கொண்டே இருந்தார்.

===========================


ஆனாலும் இதை பின் அறிவித்து, அனைத்தும் விஷ்ணுவும் பார்த்துக் கொண்டே இருந்தான். அனைத்தும் எதை என்று கூட!!!


============================

# ஏன் இங்கு மும்மூர்த்திகள் இவ் விளையாட்டில் இப்போது வந்தனர் ?

# குருநாதர் இது குறித்து பின்னால் உரைக்க உள்ளார்கள். 

============================


அப்பனே இவை மூன்றும் (மும்மூர்த்திகள்) ஏன் எதற்கு என்றெல்லாம் அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட பின் மூவரும் பின் பின்னாலே யான் உரைப்பேன் இதைப்பற்றி ரகசியமாக அப்பனே!!!!


இன்னும் ரகசியங்கள் இருக்கின்றது என்பேன் அப்பனே!!


=============================

# மும்மூர்த்திகள் அனைத்தும் ஒரு உடம்பா? 

# மும்மூர்த்திகள்  ஒரு உடம்பிலிருந்து மூவரும் பிரிந்தவர்களா?

# குருநாதர் , வரும் காலத்தில் வாக்குகள் உரைக்கும் போது புரியும்

=============================


ஏன்? எதற்கு? இவர்கள் பிரிந்தார்கள்???? 


அப்பனே பின் அனைத்தும் ஒரு உடம்பா????


அப்பனே ஒரு உடம்பிலிருந்து மூவரும் பிரிந்தவர்களா????? என்பவை எல்லாம் வரும் வரும் காலத்தில் அப்பனே யான் விவரமாக விவரிக்கும் பொழுது விவரிக்கின்ற பொழுது தெரியுமப்பா!!


=============================

# ரகசியங்கள் ஒவ்வொன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்.

=============================


அப்பொழுதுதான் அப்பனே!!!


ஒவ்வொன்றாக தெரிந்து கொள்ள வேண்டும் என்பேன் அப்பனே  ரகசியங்கள்!!!


=============================

# பிரம்ம தேவன் வருத்தம் - இந்திரனிடம் இப்படி ஈசன் நாடகம் நடத்த உள்ளாரே ..என்ன செய்வது என்று ….

=============================


இதனால் அப்பனே மீண்டும் பின் பிரம்மதேவன் அதாவது பின் மனம் வருந்தினான்!!!!


அடடா!!!!!!... இவனை பின் எப்படியாவது நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது எதை தெரியாமலே அனுப்பிவிட்டோம்!!


ஏதாவது ஒரு முறையில் காப்பாற்றி விடுவோம் என்பதை எல்லாம் நிச்சயம் தன்னில் கூட!!!(என்று பிரம்மா யோசித்தார்)


ஆனாலும் ஈசன் இப்படி!?? 


=================================

# ஈசனின் திருவிளையாடல்: மனித ரூபத்தில் இந்திரனை சோதிக்க வந்த சிவபெருமான்!

====================================


ஆனாலும் பின் எதை என்று புரிய ஆனாலும் ஈசனும் கூட பின் அறிந்தும் எதை என்று கூட மேலும் பின் மனித ரூபம் எடுத்து ஆனாலும் வந்து…. 


( ஆதி ஈசனார் - இந்திர தேவனை பார்த்து )


“நிச்சயம் மானிடனே!!! நில்லும்!!!!”


“ஏன் எதற்காக?? எதற்காக??? இத்தனை சிவாலயங்கள் சென்று கொண்டிருக்கின்றாய்???”   என்று!!!!


ஆனாலும் எதை என்று அறிய… 


==========================

# ஆதி ஈசனை பற்றி, ஆதி ஈசனாரிடமே இந்திர தேவன் உரைத்த பதில்

=========================


(இந்திர தேவன் பதில் :- )   “என் ஈசன்… என் மனதில் நின்றவன்!!!”


“பின் (நீ) யார்?” எதை என்று கூற “ஏன்? நீ கேட்கின்றாய்???” என்று பின் இந்திரனும் கூட ஈசனிடத்தில் கூட!!!


=============================

# ஈரேழு பதினான்கு உலகை ஆளும் ஆதி ஈசனார் , இந்திர தேவனை பார்த்து கேட்ட கேள்வி - புண்ணியங்கள் உண்டாகும் திருவிளையாடல்கள் ……

=============================


( ஆதி ஈசனார் , இந்திரனை பார்த்து ) 


அதாவது இப்படி ஒரு படைப்பா??? பின் உந்தனுக்கு என்னதான் இருக்கின்றது??????


அனைத்தும் இழந்து கொண்டு ஈசனை பின் அதாவது ஈசன்!! ஈசன்!! என்று திரிந்து கொண்டிருக்கின்றாய்!!!


ஈசன் உனக்கு என்னதான் செய்தான்??? 


யோசித்துப் பார்!! என்று !!!


ஈசனே எது என்று புரிய (மனித ரூபத்தில் வந்த ஈசன்)


==================================

# ஆதி ஈசனாரின் சோதனையில், மனம்  தடுமாறிய இந்திர தேவன் 

==================================


ஆனாலும் எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட பின் ஆனாலும் இந்திரனும் யோசித்தான்!!!...


( ஆதி ஈசனை பார்த்து இந்திர தேவன் பதில்)


ஆம்!! நிச்சயம் ஈசன் ஈசன் என்று திரிந்து கொண்டிருக்கின்றோம்!??......ஆனாலும் பிரம்மனும் அனுப்பிவிட்டான் எதை என்று அறிந்து!!!


இங்கு செல்க என்று!!!


அதாவது எங்கு எதை என்று கூற.. பாவ வினைகள்  வந்து யான் திருத்துகின்றேன் என்று!!!


ஆனாலும் பிரம்மன் வரவில்லை!!


ஆனாலும் பின் எதை என்று கூற… பின் அதாவது ஈசனுடைய பக்தன் தானே நீ என்று பிரம்மாவும் நிச்சயம் தன்னில் கூட!!


==================================

# திருவிளையாடலின் உச்சக்கட்டம் ……

==================================


( ஆதி ஈசன் , இந்திர தேவனை பார்த்து )


ஆனாலும் ஒன்றும் ஆனாலும்… அதனால்தான் மீண்டும் ஈசன்… பின் அதாவது… 


“மானிடனே!!!” 


எதை என்று புரிய 


“பின் இன்னும் ஈசன் கொடுக்கப் போவதில்லை… உனக்கு !!!”


“ஏன் ஈசனை வணங்குகின்றாய் நீ ???” 


“எங்கேயாவது செல் நிச்சயம் தன்னில் கூட” என்றெல்லாம்!!!


==================================

# "ஈசனுக்கு மனசாட்சி இல்லையா?" - பொறுமையிழந்த இந்திரனின் வீழ்ச்சி!

==================================


“ஆம்!! ஆம் !!!” எதை என்று கூற பின் எதை “இன்னும் இவ்வளவு அலைந்தேனே!!!! நிச்சயம் தன்னில்”  எதை என்று அறிய எவை என்று புரிய!!!


“ஈசனை கண்டுகொள்ளவில்லையே !!!”


“ ஈசனுக்கு மனசாட்சி இல்லையா????”


“யான் இன்னும் ஈசனை. பின் அதாவது வணங்கப் போவதில்லை இனிமேலும்” என்று என்றெல்லாம்!!


ஆனால் தட்டிக் கழித்தான். அங்கும் இங்கும் சென்று…. திருத்தலங்களை பின் அதாவது யார் சொன்னாலும் ஈசன் இல்லை என்று!!!


மீண்டும் பின் அதாவது வயதாகி எதை என்று புரிய மீண்டும் பிரம்மலோகத்திற்கு சென்றான்!!!


============================

# பிரம்மனை திட்டிய இந்திரன்: தேவலோகத்தில் வெடித்த வாக்குவாதம்! 

============================


பிரம்மனே எதை என்று கூற பின் உன் வாக்கு பொய்யாகிவிட்டது!!!

அறிந்தும் எதை என்று புரிய !!


ஆனாலும் பல வகைகளில் கூட நீதான் அனுப்பினாய் அல்லவா!?!


ஏதோ ஒருவர் பின் வருவார் நிச்சயம் தன்னில் கூட!!...


யானும் கூட வருவேன் என்றெல்லாம் நீ கூறி எதை என்று பொய் கூறுகின்றீர்களா என்று !!!


பிரம்மதேவனே!!! இவையெல்லாம்… பின் எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட. 


பின் நீயே உலகத்தை காக்கக்கூடிய, பின் அதாவது அழகாக மனிதருக்கு எழுதக்கூடிய, இன்னும் பல விஷயங்கள் செய்யக்கூடிய நீயே!!!!! 


இப்படியெல்லாம் ( செய்யலாமா?) நிச்சயம் தன்னில் கூட…(என்று)  பின் கண்டபடி பிரம்மாவை பின் இந்திரன் திட்டினான்!!!


===========================

# தலை குனிந்த பிரம்மதேவன் 

===========================


ஆனாலும் பிரம்மதேவனும் பின் தலை குனிந்தான்!!!


ஏன் ? எதற்காக என்று? 


==============================

# புலம்பி தீர்த்த இந்திர தேவன்…….. 

==============================


பிரம்மதேவனே!!!! எதை என்று கூற பின் யான் நன்றாக இருக்கின்றேனே!!! நன்றாக பின் அதாவது அனைத்தும் செய்து எவை என்று கூற பின் பல வழிகளில் கூட பின் உத்தமனாக வாழ்ந்தேனே!!!!!


பின் இதற்கு இதுதானா?? தண்டனை???


நீதானே சொன்னாயே!!! நிச்சயம் தன்னில் கூட பாசத்தோடு அனுப்பினாய் அல்லவா!!!


மீண்டும் எப்படி? அலைந்தேன்????? எப்படி திரிந்தேன்???..யான்!!!


ஈசனும் கண்டுகொள்ளவில்லை எதை என்று அறிய என்று!!!


=============================

# மீண்டும் இந்திர தேவனுக்கு காத்திருந்த ஒரு பெரும் அதிர்ச்சி 

=============================


( பிரம்மதேவன்....)  “இந்திரனே!! நில்லும்!!!! அதாவது மீண்டும் உனக்கு ஒரு பிறவி ஏற்பட்டுவிட்டது!!!”


=============================

# மீண்டும் மற்றொரு பிறவியா??? என்று கோபம் அடைந்த இந்திர தேவன் 

=============================


(இந்திர தேவன்) பின் பிரம்மதேவனே நில்லும்!!!!!


இனி இதனால் சொல்ல முடியாது. 


இப்படி எல்லாம் சொல்லிச் சொல்லி நிச்சயம் ஏன்? எதற்கு?? என்றெல்லாம்!!!


நீதானே சொன்னாய் நிச்சயம் தன்னில் கூட. 


பின் அதாவது ஒரு ஜென்மம் எடு!!! அறிந்தும் கூட பின் யான் வருகின்றேன்.


பல வழிகளில் யானே உரைக்கின்றேன் எப்படியாவது!! 


எதை என்று தெளிவிக்கின்றேன் பாவத்தை போக்குகின்றேன் என்று !!!


எப்படி நீ சொல்லலாம்??????


நீ சொன்னதெல்லாம் பொய்யா!!???????


எதை என்று கூற பின் பொய்யே!!!! பிரம்மதேவனே என்றெல்லாம் !!!


யான் அதாவது எதை என்று புரிய என்றெல்லாம் !!!


===========================

# இந்திர தேவனை சமாதானப்படுத்திய பிரமதேவர்..

===========================


ஆனால் பிரம்மதேவனும்…. நிச்சயம் பின்… இந்திரனே நில்லும்!!!!


“கோபப்படாதே!!! கோபப்படாதே!!!!!”


==========================

# கோபத்துடன் பதில் உரைத்த இந்திர தேவன் …

==========================


பின் நிச்சயம் யான் கோபப்படுவேன் பிரம்மனே!!!!!


எதை எவை என்று புரியாமலும் பேசிவிடாதே!! 


பேசிவிடாதே!!! பேசிவிடாதே!! நீ!!!....


எத்தனை?? எத்தனை??? தெரியாமல் இப்படி எல்லாம் விதிகளை எழுதி எழுதி அனுப்பி விடுவாய்… மனிதரிடத்தில் என்றெல்லாம்!!!!


=============================

# பிரமதேவர் விரிவாக எடுத்துரைத்தார்.இந்திர தேவன் செய்த தவறை

============================= 


ஆனாலும் பின் பிரம்மதேவனும்… இந்திரனே!! நில்லும்??? 


அதாவது ஈசனை நீ வணங்கிக் கொண்டிருந்தாய். 


அப்படியே வணங்கிக்கொண்டு பின்!!... யார் எதைச் சொன்னாலும், ஈசன் தான் எனக்கு துணை!!!! என்று நிச்சயமாய் சென்றிருந்தால்!!!


ஆனாலும் ஈசனே உன்னை சோதிக்க மனிதனாக வந்து… பின் அவனே சொல்ல!!!!!


அப்பொழுது கூட நீ அவரை அதாவது ஈசனாரை நீ அப்பொழுது, பின் அதாவது ஈசன் என்ன செய்திருக்கின்றான்?? என்று பின் உன்னிடத்தில் கேட்டான் அல்லவா?????


பின் ஈசன் பின் அப்பொழுது நீ உரைத்திருக்கலாம்!!! அறிந்தும் கூட!!!


பின் “ஈசன் என் ஈசன்!!! எந்தனுக்கு அனைத்தும் செய்வான்” என்று!!!


==================================

# ஈசன் மேல் நம்பிக்கையை இழந்ததால் வந்த வினை.

==================================

# அடுத்த பிறவில் குஷ்டரோகியாக பிறக்க வேண்டும் என்பது விதியாக போய்விட்டது

==================================


ஆனாலும் நீயும் மனதும் மாறிவிட்டாய் அதற்காகவே ஒரு பிறவி என்று!!!!


இந்திரனும்!!...


அடடா அறிந்தும் கூட இப்படியா????


நிச்சயம் தன்னில் கூட பின் ஈசனே என்றெல்லாம்!!!!


ஆனாலும் எதை என்று புரிய எதை என்று அறிய!!!


ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட ஆனாலும் இதை பின் சொல் எவை என்று அறிய இதை சொன்னதற்கே!!!!.... நீ அடுத்த பிறவில் குஷ்டரோகியாக பிறக்க வேண்டும் என்பது விதியாக போய்விட்டது!!!!


பின் மன்னித்துவிடு இந்திரனே என்று!!!




==================================

# இந்திரா தேவன் பாவ விமோசனம் பெறும் வழி.

 ==================================

# பல ஆலயங்களுக்கு, ஜோதிர் லிங்கத்திற்கு, மற்றும்  கைலாயத்திற்கு செல்ல பிரம்மன் இட்ட கட்டளை!

==================================


பின் அழுதான் இந்திரனும் கூட!!!...


இதற்கு வழிகளே இல்லையா என்று!!!!


பிரம்மனும்….இருக்கின்றது!!! (இந்திரனே!!!)


நீ நிச்சயம் அமைதியாக நிச்சயம் பல ஆலயங்களுக்கு அதாவது பின்  ஜோதிர் லிங்கத்திற்கு சென்று பல வகைகளிலும் கூட எதை என்று அறிய அறிய அதாவது ஈசனின் கட்டளைப்படி… நிச்சயம் கைலாசத்திற்கு செல்!!!!


அப்பொழுதுதான் இதற்கு பாவ விமோசனம் என்று!!!


==============================

# இந்திர தேவன் கேட்ட உபாயம் -  “நோயுடன் இதனை ஆலயங்களுக்கு எப்படி செல்வது?”

==============================


இந்திரனும்... யான் எப்படி போவேன்??????


இப்படி நோயை பின் படைத்துவிட்டாய்!! (எப்படி) பின் செல்வேன் என்று !!


============================

# பிரமதேவன் , இந்திர தேவனுக்கு அளித்த பதில்…. 

# அனைத்து ஆலயங்களுக்கு செல்ல,  ஒரு முனிவர் உதவுவார்.

===========================


நிச்சயம் பின் அறிந்தும் எவை என்று கூற நிச்சயம் ஒரு முனி உனக்கு துணை இருந்து காப்பான்! அழகாக!!!


சென்றுவிடு!!!


===============================

# வணக்கம் அடியவர்களே :- 

===============================

# எதற்காகவும் குருநாதரை , இறைவனை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள் ….. பின் வரும் வாக்கை 3 முறை படிக்கவும். 

===============================

# ஏன் நோய்கள் வருகின்றது? என்ற உண்மை காரணம் என்ன ?

=============================== 

# பின் வரும் வாக்கை 3 முறை படிக்கவும். 

=============================== 


ஏனென்றால் இது கட்டாயம் !!


ஏனென்றால் இவையெல்லாம் உலகத்திற்கு தெரிந்திருக்க வேண்டும்!!...


எது உண்மை?? எது பொய் ??என்று!!!


நிச்சயம் எவை எதை என்று அறிந்து.


பின் இப்படி எல்லாம் சொன்னால்,  இப்படி எல்லாம் பின் நோய்கள் வரும் என்பவை எல்லாம். 


பின் அதாவது உன்னிடம்......இருந்து மற்றவர்கள் அறிய வேண்டும்!!!


அவ் நிச்சயம் அவ்விஷயத்திற்கு நீதான் பயன்பட்ட ஆள் !!


ஏனென்றால் பின் உன்னை விட்டு,  உன்னை வைத்து தான்.. இன்னும் பல வழிகள் ( பிறக்கும் ) என்று!!!


=====================================

# தேவேந்திரனுக்கா இந்த நிலை? 

# குஷ்டரோகியாக பூலோகத்தில் தவித்த அவலம்!

=====================================


மீண்டும் பின் அதாவது வயதிலே… எதை என்று கூற குஷ்டரோகியாக பிறந்து!!!


பிறந்து எதை எவை என்று புரிய ஆனாலும் மாற்று பல வகையிலும்… இவ்வாறாகவே, ஆனாலும் இந்திரனை யாரும் தொடவில்லை!!!


================================

# ஏழுமலையான் முதல் அண்ணாமலை வரை: தீராத நோயுடன் அலைந்த இந்திரன்!

================================


இவ்வாறாக பல திருத்தலங்களை!!!... 


பல திருத்தலங்களில் கூட உள்ளே கூட விடவில்லை அறிந்தும்!!


எதை என்று கூற பின் பல வழிகளில் கூட நாராயணனிடத்தில் அதாவது ஏழுமலையானிடத்தில் (திருப்பதி திருமலையில்) பின் இதில் பல வழிகளில் அதாவது பின் வாழ்ந்தான்!!


ஏதோ ஒன்று பின் பழங்களை உட்கொண்டு, உட்கொண்டு!!!!


===============================

# ஏன் திருப்பதி சென்றால் இந்திரனை போல் வாழ்வை பெறலாம்?

===============================

# திருப்பதி ஏழுமலையில் இந்திர தேவன் சக்தி பரந்து கிடக்கின்றது

===============================


இப்பொழுதும் எதை என்று கூற பின் ஏன்?? எதற்கு?? (திருப்பதி ) அங்கு சென்றால் இந்திரனை போல் வாழ்வை பெறலாம் என்பவை எல்லாம். 


(திருப்பதி)  அங்கும் அவன் சக்தி பின் பரந்து கிடக்கின்றது!!!





===================================

# இந்திர தேவன் பாவ விமோச்சனம் தேடி அலைந்த ஆலயங்கள் 

===================================

# திரு அண்ணாமலை , மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம் , சங்கரன் கோயில்..இன்னும் பல ஆலயங்கள் 

===================================


அதேபோல் அண்ணாமலைக்கும் வந்தான்!!! அங்கேயும் கூட பின் நின்றான் பல வகையிலும் கூட பல எதை என்று கூற திரிந்து கொண்டிருந்தான்!!!!


இன்னும் எதை என்று கூற மதுரை மீனாட்சி தன்னில் கூட !! 

சங்கரன் கோயில் தன்னில் கூட!!...


இன்னும் பல ஆலயங்களை ஏறி ஏறி ஆனாலும் விமோசனம் கிடைக்கவில்லை!!!!


==============================

# இந்திரா தேவன் கடைசியில்  12 ஜோதிர்லிங்கங்களை தரிசித்தார் !!!!

==============================


கடைசியில் பல வழிகளில் கூட பின் 12 ஜோதிர்லிங்கங்களை தரிசித்தான்!!!!


=============================

# கைலாயத்திற்கு முடியாமல் தவித்த இந்திர தேவன்

=============================


மீண்டும் கைலாயத்திற்கு போக ஆசைப்பட்டான்!!!


கைலாயத்திற்கு கூட போக முடியவில்லை!!!


===============================

(பழங்காலத்தில் வாகன வசதி இல்லாமல் , பொருள் இல்லாமல், வழிகாட்டுதல்கள் இல்லாமல், கைலாயத்திற்கு செல்வது மிக கடினம் )

===============================


ஏனென்றால் அன்றெல்லாம் நிச்சயம் தன்னில் ஒரு இடத்திற்கு சென்றாலே எது என்று புரிய!!.... 


ஆனாலும் எப்படியாவது பின் கைலாயத்திற்கு செல்ல வேண்டும் என்று!!!


ஆனாலும் முடியவில்லை அறிந்து கூட!!!


அவ்வளவுதான் வாழ்க்கை என்று!!!


================================

# திருவண்ணாமலை ஞானி சொன்ன ரகசியம்: பாவங்களை போக்கும் ரகசிய வழிகாட்டுதல்! 

================================


ஆனாலும் பின் அழகாக பின் ஞானியவன் பின் அதாவது எதை என்று அண்ணாமலையிலிருந்து!!! நிச்சயம் பின் ஓரிடம் இருக்கின்றது!!!


எத்தனை பாவங்கள் ஆயினும் நிச்சயம் அறிந்தும் புரிந்தும் கூட !!



================================

# பாவங்கள் அதிகமாக இருந்தால் , அவ் ரகசிய இடம் கண்ணனுக்கு தெரியாது 

================================


ஆனாலும் பின் பாவங்கள் அதிகமாக இருந்தாலும் உன் கண்ணுக்கு அது தெரியாது !!


நிச்சயம் நீ சென்று கொண்டே இரு!!!


================================

# இந்திர தேவனே, எங்கு சூரியன் உன் தலையில் விழுகிறதோ , அங்கு நீ தானாகவே ..பலமாக “நமச்சிவாயா” என்று சொல்வாய்

================================


அங்கு பின் சூரியன் பலமாக பின் உன் தலையில் விழுந்து… பின் பலமாக பின் தானாகவே நீ… நமச்சிவாயா!!! என்று சொல்வாய்!!!


==============================

# அடியவர்களே , இவ் வாக்கின் ஒட்டுமொத்த மையப்புள்ளி , இன்னும் சற்று நேரத்தில் உங்களுக்கு புரியவரும் 

==============================


==============================

# மறைந்திருந்த அவ் ஊற்று…..

==============================


அங்கேதான் பின் அவ் ஊற்று… பின் பலமாக ஆனாலும் உன் கண்களுக்கு தெரியாது!!!


ஆனாலும் அங்கே அறிந்தும் புரிந்தும் கூட பின் அங்கு…. 


“ஓம் நமச்சிவாயா!!!!”  என்று பின் “நீ உரத்து  கத்தினால்!!”...


(பெரும் சப்தம் எழுப்பி கத்தினால்)


============================

# உமையன்னை, சக்தி   தாயவள் தர உள்ள சூலம்.

# காட்டில் நிகழப்போகும் அற்புதம்!

============================


நிச்சயம் தாயவளோ!!! (உமையன்னை)


நிச்சயம் பின் அதாவது சூலத்தை உனக்கு தருவாள்!!!


அங்கே குத்து!!!!


அங்கே நீர் எழும்பும்!!!


==============================

# இந்திர தேவனின் பாவத்தை போக்க உருவாக உள்ள நீர் ஊற்று ரகசியங்கள் ….

=============================


அதில் நீ நீராடு!!!


நிச்சயம் தன்னில் பிழைத்துக் கொள்வாய் என்று!!!


இதனால் பல வழிகளிலும் தேடித்தேடி!!!!


பின் ஆனாலும் உண்ண உணவில்லாமல் அவ் நோயுடனே வந்தான் எங்கு? ஏது? என்று!!


================================

# அவ் ரகசிய ஊற்று இருக்கும் இடத்தை அடைந்த இந்திர  தேவன்

================================ 


—-------- ஆனாலும் ஓரிடத்திற்கு வந்தான்!!! —-------------


=====================================

# சூரிய ஒளியில் தோன்றிய ஈசன் நாமம்: தன்னை மறந்த இந்திரன்! 

=====================================




நிச்சயம் சூரியன் ஒளி தலைமீது பலமாக பட்டது!!!


“நமச்சிவாய!!!” 

 என்று தன்னை அறியாமலே!!!


ஆனாலும் பின் அது இங்குதான்!!!! 


===========================

# இந்திர தேவன் வந்த அந்த இடம் 

# புரா தீர்த்த எம்புல் (Pura Tirtha Empul)

===========================


===========================

# இவ் புண்ணிய வாக்கு உரைக்கப்பட்ட “ - புரா தீர்த்த எம்புல்”- (Pura Tirtha Empul) இங்கு தனது சாப விமோசனம் கிடைக்க உள்ள இடம் அறிந்தார்  இந்திர தேவன் 

===========================


ஆனாலும் உணர்ந்து கொண்டான். எதை என்று புரிய நிச்சயம் இங்கு என்று!!!


==============================

# “தாயே!!!!” என்று பக்தி பரவசத்தில் “புரா தீர்த்த எம்புல்”- (Pura Tirtha Empul)  இங்கு உமை அன்னையை உரக்க அழைத்த இந்திர தேவன். அதாவது திரு அண்ணாமலையிலே அவ் ஞானி சொன்னது போல்…

============================== 


ஆனாலும் தாயே!!!! எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது ஞானி சொன்னது போல்!!!!!


திரு அண்ணாமலையிலே ஞானி!!! ஞானி சொன்னது போலே.. 


===============================

# உலகை காக்கும் அன்னை பராசக்தி அளித்த  திவ்ய தரிசனம்.

===============================

# மகா சக்தி படைத்த  சூலத்தை கொடுத்தார்கள் இந்திர தேவனிடம்.

===============================

# உலகம் அறியாத “புரா தீர்த்த எம்புல்”- (Pura Tirtha Empul) - உருவான உண்மை கதை.

===============================


நிச்சயம் பின் தாய் சூலத்தை நிச்சயம் தன்னில் கொடுத்தாள்!!!


நிச்சயம் பின் (இந்திரனும்) குத்தினான்!!




=============================

# பூமியில் பீறிட்டு எழுந்த புனித நீர்: இந்திரனின் பாவம் நீங்கிய புண்ணிய தலம்!

=============================

===============================

# உலகம் அறியாத "புரா தீர்த்த எம்புல்”- (Pura Tirtha Empul) - இன்னும் இங்கு  வந்து கொண்டே இருக்கின்றது

===============================


பின் அவ் ஊற்றுதான் இங்கு இன்னும் வந்து கொண்டே இருக்கின்றது!!!!




===============================

# ஆதி ஈசனாரே , முப்பெரும் தேவர்களே !!!! 

# இந்திரன் எனது  பாவத்தை நீக்கிக் கொண்டேன்.  இதுவே போதும்.

===============================


இதனால் ஈசனும் பின் அதாவது முப்பெரும் தேவர்களையும் கூட அதாவது முப்பெரும் பின் அதாவது இறைவன்களையும் கூட அறிந்தும் எதை என்று கூற பின் அதாவது என் பாவத்தை நீக்கிக் கொண்டேன்.  இதுவே போதும்!!!!


================================

# இறைவா !!!! இனி வேண்டாம் , வேண்டாம்… மனித பிறவி 

================================


மனித பிறவியே தேவையில்லை போதும்!!!


=================================

# சில தவறு செய்துவிட்டேன். அதற்காக இவ்வளவு தண்டனைகளா?

=================================


பல வழிகளில் கூட பின் ஏதோ தேவலோகத்தில் பிறந்து பல வழிகளில் ஏதோ சில தவறு செய்துவிட்டேன்!!!


அதற்காக இவ்வளவு தண்டனைகளா?????


===============================

# முப்பெரும் தேவர்களிடம் இந்திரன் கேட்ட மாபெரும் வரம்! 

===============================

===============================

# மனம் திருந்தி வருவோர்க்கெல்லாம் , "புரா தீர்த்த எம்புல்”- (Pura Tirtha Empul)  என்ற  இவ் நதியானது அதாவது இவ் நீர் ஊற்றானது அனைவரின் பாவத்தை போக்க வேண்டும். 

# புண்ணியத்தை அள்ளித் தந்திட வேண்டும்.

# வரம் கொடுங்கள் 

===============================




அதனால் மனிதர்கள் பின் நன்மைகளாக… மனம் திருந்தி வருவோர்க்கெல்லாம்…. 


நிச்சயம் அதாவது இவ் நதியானது  நிச்சயம் அதாவது இவ் நீர் ஊற்றானது,  


( "புரா தீர்த்த எம்புல்”- Pura Tirtha Empul ) 


அனைவரின் பாவத்தை போக்க வேண்டும். 


புண்ணியத்தை அள்ளித் தந்திட வேண்டும் என்று வரங்கள் கொடுங்கள் என்று!!! 


(இந்திரன் முப்பெரும் தேவர்களிடம் கேட்டார்)


===============================

# விண்ணிலிருந்து தூவிய பூக்கள்: பாலி தீவின் புனித நீரூற்று உருவான வரலாறு!

===============================


முப்பெரும் இறைவன்களும் கூட அங்கிருந்தே பூவை தூவினார்கள்!!!!!


உன்ன எண்ணம் படியே இன்றிலிருந்தே நடக்கட்டும் என்று!!



===============================

# பல பாவங்கள் இங்கே தொலையும். பின் ஆற்றலும் பெருகும்.

===============================


பின் நிச்சயம் தன்னில் கூட பல பாவங்கள் இங்கே தொலையும். பின் ஆற்றலும் பெருகும் ஆசிகள்!! ஆசிகள்!!!


================================

# இன்னும் பல ரகசியங்கள் , ஆற்றல்கள் “புரா தீர்த்த எம்புல்” இங்கு இருக்கின்றது

================================

# புரா தீர்த்த எம்புல் குறித்து இன்னும் வரலாறு இருக்கின்றது. 

================================




இன்னும் பல எவை என்று அறிய இன்னும் ஆற்றல் இங்கு இருக்கின்றது இன்னும் பின் வரலாறு இருக்கின்றது. 


===============================

# “புரா தீர்த்த எம்புல்” என்ற இவ் புண்ணிய ஊற்று  குறித்து இன்னும் இன்னும் வருங்காலத்தில் யான் உரைப்பேன்

===============================


அவையெல்லாம் இன்னும் இன்னும் வருங்காலத்தில் யான் உரைப்பேன்.. உரைப்பேன்.. 


============================

# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு

# ஆசிகளுடன் இப்பொழுது  நிறைவு 

============================


இப்பொழுது போதும். 


ஆசிகள்!!! 


ஆசிகள்!!


=================================




==========================

பாலி: ஒரு சிறு அறிமுகம்

==========================


இந்தோனேசியாவின் அழகிய தீவான பாலி, இயற்கை எழில் கொஞ்சுவது மட்டுமல்லாமல், இந்து தர்மத்தின் வேர்கள் ஆழமாகப் பதிந்த ஒரு புண்ணிய பூமியாகும்.


சுமார் 45 லட்சம் மக்கள் வாழும் இந்தத் தீவில், பாலி மொழி மற்றும் இந்தோனேசிய மொழிகள் முதன்மையாகப் பேசப்படுகின்றன. இந்தோனேசியா உலகிலேயே அதிக முஸ்லிம்கள் வாழும் நாடாக இருந்தாலும், பாலி தீவில் மட்டும் சுமார் 87% மக்கள்  சிவ-பக்தர்களாகவும், இந்துக்களாகவும் வாழ்வது ஆச்சரியமான உண்மை.



முதல் நாள் பயணம்: புரா தீர்த்த எம்புல் (Pura Tirtha Empul) ஆன்மீகப் பயணத்தின் முதல் தடம்,  'புரா தீர்த்த எம்புல்'.


தீர்த்தங்களின் மகிமை:

இங்குள்ள புனிதக் குளத்தில் மொத்தம் 21 தீர்த்தக் குழாய்கள் (Fountains) உள்ளன. பாலி மக்களின் நம்பிக்கையின்படி, இந்தத் தீர்த்தங்கள் ஒவ்வொன்றும் தனித்தனி பலன்களைத் தரவல்லவை:


* கர்ம வினை நீக்கம்: கடந்த காலப் பாவங்களைப் போக்கும் தீர்த்தம்.

* தீய சக்தி நீக்கம்: எதிர்மறை ஆற்றல் மற்றும் செய்வினை கோளாறுகளை நீக்கும் தீர்த்தம்.

* கனவு தோஷ நிவர்த்தி: தீய கனவுகளால் வரும் மன உளைச்சலைப் போக்கும் தீர்த்தம்.

* பித்ரு கடன்: முன்னோர்களுக்குச் சடங்கு செய்யப் பயன்படும் தீர்த்தம்.

* வரப்பிரசாத தீர்த்தம்: நாம் வேண்டிய நற்பலன்களைத் தரும் சக்தி வாய்ந்த தீர்த்தம்.


தற்போது 14 தீர்த்தங்களில் மட்டுமே புனித நீராட அனுமதி வழங்கப்படுகிறது. இந்தத் தீர்த்தங்கள் அனைத்தும் இந்திரன் நிலத்தைத் துளைத்து உருவாக்கிய "அமிர்த நீர்" என்று போற்றப்படுகிறது.


இன்றைய குருநாதர் வாக்கின்படி இந்த தீர்த்தம் இந்திரனுக்கு ஏற்பட்ட சாபத்தை தீர்ப்பதற்காக இந்திரன் அம்மனிடம் வாங்கிய சூலாயத்தை கொண்டு பூமியை துளைத்து உருவாக்கிய இடத்திலிருந்து இந்த 21 தீர்த்தங்களுக்கு புனிதநீர் செல்கிறது....


தீர்த்த குளம் விபரங்கள்:-  


பாலி தீவில் உள்ள 'புரா தீர்த்த எம்புல்' (Pura Tirta Empul) ஆலயத்தில் உள்ள புனித ஊற்றில் (தீர்த்தத்தில்) நீராடுவதன் சிறப்புகளை அகத்தியப் பெருமானின் ஜீவநாடி வாக்கு மிகத் தெளிவாக விளக்குகிறது. அதன் முக்கியச் சிறப்புகள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன:


1. தீராத பாவ வினைகள் தொலையும்:

கங்கை, காவிரி, தாமிரபரணி என பல புண்ணிய நதிகளில் நீராடியும், பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களைத் தரிசித்தும் தீராத இந்திரனின் கடுமையான பாவங்கள், இந்தத் தீர்த்தத்தில் நீராடியவுடனேயே முழுமையாக நீங்கியது. மனிதர்கள் செய்த முந்தைய தவறுகளை உணர்ந்து, திருந்திய மனதோடு இங்கு நீராடினால் எப்பேர்ப்பட்ட பாவங்களும் தொலையும்.


2. கொடிய நோய்கள் குணமாகும்:-

சாபத்தின் காரணமாக இந்திரன் மனித உருவில் பெற்றுத் தவித்த கொடிய 'குஷ்டரோகம்' (தொழுநோய்) போன்ற நோய்கள் இந்தத் தீர்த்தத்தில் நீராடியதாலேயே முழுமையாகக் குணமானது. எனவே, இது தீராத உடல் பிணிகளைத் தீர்க்கும் அபரிமிதமான வல்லமை கொண்டது.


3. புண்ணியத்தை அள்ளித் தரும்:-

தன்னுடைய பாவங்கள் நீங்கிய சந்தோஷத்தில் இந்திரன் வேண்டியதற்கிணங்க, முப்பெரும் தேவர்களும் (சிவன், பிரம்மா, விஷ்ணு) நேரில் தோன்றி, "இங்கு நீராடும் மனிதர்களின் பாவங்களைப் போக்கி, அவர்களுக்குப் புண்ணியத்தை அள்ளித் தர வேண்டும்" என்று இந்த ஊற்றுக்கு வரம் அளித்துள்ளனர்.


4. உடலிலும் மனதிலும் ஆற்றல் பெருகும்:-

இந்தத் தீர்த்தத்தில் நீராடும்போது மனிதர்களுக்குத் தேவையான உடல் மற்றும் ஆன்மீக ஆற்றல் (Energy) அபரிமிதமாகப் பெருகும் என்று அகத்திய மாமுனிவர்  தன் வாக்கில் ("ஆற்றலும் பெருகும்") ஆணித்தரமாகக் குறிப்பிடுகிறார்.


5. அம்பாளின் சூலாயுதத்தால் உருவான புனிதம்:

இது இயற்கையாக உருவான சாதாரண நீரூற்று அல்ல; நோயால் அவதியுற்ற இந்திரன் "ஓம் நமச்சிவாய" என்று சிவனை மனமுருகி வேண்டியபோது, அம்பாள் (தாய்) நேரில் தோன்றி வழங்கிய சூலாயுதத்தைக் கொண்டு பூமியைக் குத்தியபோது உருவான அதிர்வுகள் நிறைந்த மிகவும் புனிதமான ஊற்றாகும்.


சுருக்கமாகச் சொன்னால்: அறியாமல் செய்த பிழைகளை நினைத்து வருந்தி, சரணாகதி அடைந்த மனதோடு இந்தத் தீர்த்தத்தில் நீராடினால், மனிதர்களின் முன்வினைப் பாவங்கள் அழிந்து, நோய்கள் தீர்ந்து, மும்மூர்த்திகளின் முழுமையான ஆசியுடன் புதிய ஆற்றலைப் பெற்றுத் திரும்பலாம் என்பதே இதன் மிகப்பெரிய ஆன்மீகச் சிறப்பாகும்.



தீர்த்தா எம்புல் (Tirta Empul) என்பது இந்தோனேசியாவின் பாலி தீவில், தம்பக்சிரிங் (Tampaksiring) பகுதியில் அமைந்துள்ள ஒரு மிகவும் புனிதமான, பழமையான நீர் இந்துக்கோயில் ஆகும். இது 'புனித நீரூற்று' என்று பொருள்படும், இங்குள்ள புனித நீரில் நீராடி, ‘மெலுகாட்’ (Melukat) எனப்படும் சுத்திகரிப்பு சடங்கின் மூலம் உடலையும் ஆன்மாவையும் தூய்மைப்படுத்த உள்ளூர் மக்களும் சுற்றுலாப் பயணிகளும் செல்கின்றனர். 


முக்கிய சிறப்பம்சங்கள்:

அமைவிடம்: உபுட் (Ubud) நகருக்கு அருகில் டம்பக்சிரிங் மாவட்டத்தில் அமைந்துள்ளது.


வரலாறு: கி.பி. 962 இல் வர்மதேவ வம்சத்தின் போது கட்டப்பட்ட இது, நீர் தேவன் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.


சடங்கு (Melukat): கோயிலின் நடுமுற்றத்தில் உள்ள (Jaba Tengah) இரண்டு பெரிய கல் குளங்களில், 30க்கும் மேற்பட்ட நீரூற்று நீரை (சுமார் 13-15 நீரூற்றுகள்) கொண்டு மக்கள் தங்கள் பாவம் மற்றும் நோய்களைப் போக்க நீராடுகிறார்கள்.


சிறந்த நேரம்: காலை 9 மணி முதல் 11 மணி வரை கூட்டம் குறைவாகவும், வானிலை குளிர்ந்தும் இருக்கும். 


பார்வையாளர்களுக்கான குறிப்புகள்:-

கோயிலுக்குள் நுழைய தோள்பட்டை மற்றும் கால்களை மறைக்கும் ஆடைகளை அணிய வேண்டும் (சரோங் வழங்கப்படுகிறது).

மூன்றாவது குளத்தில் குளிப்பதைத் தவிர்க்கவும், அது சடங்குகளுக்கு மட்டுமே.


பத்தூர் மலையடிவாரத்தில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் இந்த கோயில் உள்ளது.


பாலி தீவில், உபுத் நகரிலிருந்து சுமார் 14 கி.மீ வடக்கே நீங்கள் பிரமிக்க வைக்கும் தீர்த்த எம்புல் கோயிலைக் காணலாம்.


தீர்த்த எம்புல் கோயில் இந்து நீரின் கடவுளான விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, மேலும் இது பாலியில் உள்ள மிகவும் புனிதமான கோயில்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.


புரா தீர்த்த எம்புல் அல்லது தீர்த்த எம்புல் கோயில், உபுத்திலிருந்து வடகிழக்கே சுமார் 14 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. போக்குவரத்தைப் பொறுத்து, உபுத்திலிருந்து அங்கு செல்ல உங்களுக்கு சுமார் 30 - 45 நிமிடங்கள் ஆகும்.


தீர்த்த எம்பூல் கோயில்:- 

நீங்கள் கோவிலுக்கு வந்ததும் முதலில் பார்ப்பது வாகன நிறுத்துமிடம். உங்கள் மோட்டார் சைக்கிளுக்கு வாகன நிறுத்துமிடம் ஒதுக்கப்பட்டுள்ளது (நீங்களே ஓட்ட முடிவு செய்தால்). வாகன நிறுத்துமிடத்திற்கு 2000 IDR செலவாகும். வாகன நிறுத்துமிடத்திலிருந்து நீங்கள் நுழைவுச் சாவடியைக் காணலாம். நுழைவுச் சீட்டை (ஒரு நபருக்கு 15000 IDR) வாங்கிக் கொண்டு கோவிலின் திசைக்கு சிறிது தூரம் நடந்து செல்லுங்கள். நீங்கள் கோவிலுக்குள் செல்வதற்கு முன், விதிகள் மற்றும் ஒரு சாவடியுடன் கூடிய ஒரு பலகையைக் காண்பீர்கள், அங்கு நீங்கள் அணிய ஒரு சரோங்கைப் பெறலாம். ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் நீண்ட பேன்ட் அணிவது கட்டாயமாகும். சரோங்கை வாடகைக்கு எடுக்க எந்த கட்டணமும் இல்லை, அது விலையில் சேர்க்கப்பட்டுள்ளது!


இங்கிருந்து நீங்கள் கோயிலைச் சுற்றி சுதந்திரமாகத் திரியலாம். கோயில் மூன்று வெவ்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: ஜபா புரா (முன் முற்றம்), ஜபா தெங்கா (மத்திய முற்றம்) மற்றும் ஜெரோன் (உள் முற்றம்). சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பிரபலமான பகுதி ஜபா தெங்கா ஆகும், ஏனெனில் இங்குதான் குளங்கள் அமைந்துள்ளன மற்றும் சுத்திகரிப்பு சடங்கு நடைபெறுகிறது. ஜபா தெங்காவின் பின்னால் அமைந்துள்ள ஜெரோன், புனித நீரூற்றைக் காணலாம், ஒரு அதிர்ச்சியூட்டும் மற்றும் தெளிவான நீரூற்று, இது சுத்திகரிப்பு சடங்கிற்குப் பயன்படுத்தப்படும் நீர்.

தீர்த்த எம்புல் கோயில் திறக்கும் நேரம்: திறக்கும் நேரம் வழக்கமாக மாறிக்கொண்டே இருக்கும்.


தீர்த்த எம்புல் கோயிலுக்கான ஆடைக் குறியீடு: இது ஒரு வழிபாட்டுத் தலம் என்பதால் அடக்கமாக உடை அணிய மறக்காதீர்கள். உங்கள் கால்களை மறைக்க ஒரு சரோங் வாடகை விலையில் சேர்க்கப்பட்டுள்ளது, ஆனால் உங்கள் தோள்களை மறைக்க ஸ்லீவ்களுடன் கூடிய சட்டையை அணியவும் மறக்காதீர்கள்.


தடைசெய்யப்பட்ட பகுதிகள்:  கோவிலில் நீங்கள் நுழைய அனுமதிக்கப்படாத பல தடைசெய்யப்பட்ட பகுதிகள் உள்ளன, ஏனெனில் அவை பிரார்த்தனைக்காக ஒதுக்கப்பட்டுள்ளன, இந்த விதிகளை மதிக்க மறக்காதீர்கள்.


சுத்திகரிப்பு சடங்கு கட்டணம்:  நீங்கள் சுத்திகரிப்பு சடங்கைச் செய்யத் திட்டமிட்டால், ஒரு லாக்கர் மற்றும் சரோங் வாடகைக்கு மேலும் 25K IDR செலுத்த எதிர்பார்க்கலாம், மேலும் சடங்கு குறித்த வழிகாட்டுதலைப் பெற விரும்பினால் மற்றொரு 50K IDR நன்கொடை செலுத்தலாம்.


தீர்த்த எம்புல் கோவிலில் பார்க்கிங் கட்டணம்: பார்க்கிங் கட்டணம் 2 ஆயிரம் ஐடிஆர்.


தீர்த்த எம்புல் கோயிலின் நுழைவு கட்டணம்: நுழைவு கட்டணம் ஒரு நபருக்கு 15K IDR மற்றும் நுழைவுச் சாவடியில் செலுத்தலாம்.பல வலைத்தளங்கள் தீர்த்த எம்புல் கோயில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும் என்று கூறுகின்றன.


முதல் குளத்திற்குள் நுழைவீர்கள். முதல் குளத்தில் 13 வெவ்வேறு நீரூற்றுகள் உள்ளன, நீங்கள் இடது புறத்தில் தொடங்குவீர்கள்.



(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 14.03.2026 அன்று இந்தோனேசியாவின் அழகிய தீவான பாலியில் உரைத்த   வாக்குகள்  தொடரும் …….)


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.  சர்வம் சிவார்ப்பணம்.