“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Friday, March 13, 2026

சித்தர்கள் ஆட்சி - 587 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - 08.03.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு. - பகுதி 3

 இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.



அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 08.03.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு. - பகுதி 3 


நாள் : 08/03/2026 (ஞாயிற்றுக்கிழமை) 

நேரம் : காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 

இடம் : ராஜா ராணி திருமண மண்டபம், திருவண்ணாமலை 

நேரலை :-  https://www.youtube.com/live/AzhIXYoqaoM



( இவ் கூட்டு பிரார்த்தனையின் அனைத்து வாக்குகளும் உங்கள் பார்வைக்கு இங்கு ஒவொரு பதிவிலும் , படிக்க ஏதுவாக கொடுக்கப்பட்டுள்ளது.


சித்தர்கள் ஆட்சி - 585 :-  பகுதி 1

https://siththarkalatchi.blogspot.com/2026/03/585.html


சித்தர்கள் ஆட்சி - 586 :-  பகுதி 2

https://siththarkalatchi.blogspot.com/2026/03/586.html


சித்தர்கள் ஆட்சி - 587 :-  பகுதி 3

https://siththarkalatchi.blogspot.com/2026/03/587.html


சித்தர்கள் ஆட்சி - 588 :-  பகுதி 4

https://siththarkalatchi.blogspot.com/2026/03/588.html


சித்தர்கள் ஆட்சி - 589 :-  பகுதி 5

https://siththarkalatchi.blogspot.com/2026/03/589.html


சித்தர்கள் ஆட்சி - 590 :-  பகுதி 6

https://siththarkalatchi.blogspot.com/2026/03/590.html


சித்தர்கள் ஆட்சி - 591 :-  பகுதி 7

https://siththarkalatchi.blogspot.com/2026/03/591.html


சித்தர்கள் ஆட்சி - 592 :-  பகுதி 8

https://siththarkalatchi.blogspot.com/2026/03/592.html


சித்தர்கள் ஆட்சி - 593 :-  பகுதி 9 (நிறைவு பகுதி)

https://siththarkalatchi.blogspot.com/2026/03/593.html


)

================================

# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு

================================ 

ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 

=================================

அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 08.03.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு. - பகுதி 3 

================================


குருநாதர் :- எதை என்று அறிவித்த அப்பனே, நலங்களாக எம்முடைய ஆசிகள் அனைவருக்குமே. நிச்சயம் சித்தர்களை  வரவழைத்து, நிச்சயம் அவனவன் சொன்னான் அல்லவா, நிச்சயம் அதை நிறைவேற்றும் வந்து. 



சுவடி ஓதும் மைந்தன் :- அகத்தியப் பெருமான் சொல்றாங்க, "அவங்க எல்லாம் சொல்லி விட்டால்  மட்டும் போதுமா? எல்லாரும் வந்து நிறைவேற்றட்டும்” 


===============================

# அடியவர்கள் அனைவரும் பிழைத்துக் கொள்ள - போகர் பெருமான் உரைக்க உள்ள மந்திரங்கள்.

===============================


குருநாதர் :-  நிச்சயம் இதைத் தன் பின், அதாவது அழகாக தன் குழந்தையை, பின் அதாவது இதை என்று அறிவித்து முருகனை, பின் நின்றானே போகன், நிச்சயம் தன்னில் கூட அழகாக, பின் அவ் பிரசாதத்தையும் கொடுத்து, அதற்குரிய மந்திரத்தையும் போகனே சொல்வான், "பிழைத்துக் கொள்ளுங்கள்." 


அடியவர்கள் :- ( பலத்த கை தட்டல்கள் ) 


சுவடி ஓதும் மைந்தன் :- ( முந்தைய கூட்டுப் பிரார்த்தனை வாக்குகளில் போகர் பெருமான் சில பிரசாதங்களை எடுத்து வந்து அடியவர்களுக்கு கொடுக்க உத்தரவு இட்டு இருந்தார்கள். இப்போது அவ் பிரசாதத்திற்கு போகர் பெருமான் இப்போது மந்திரங்களை உரைக்க உள்ளார்கள் ) 


===================================

# முறையான மந்திரம் என்ற உயிர் கொடுக்காமல் , பிரசாதம் எப்படி நலமாகும்?

===================================


குருநாதர் :-  அறிந்தும் அனைவரும் கொடுக்கலாம், ஆனாலும் உயிர் கொடுப்பதில்லையே, எதை என்று கூட, எப்படி நலமாகும்? 


சுவடி ஓதும் மைந்தன் :- (  எல்லாரும் விபூதி குடுக்கலாம், பிரசாதம் கொடுக்கலாம், ஆனால் அதற்கு உயிர் கொடுப்பதில்லையே, அதனால்தான் அந்த பிரசாதம் என்ன ஆகுது, பலிக்காமல் போகுது. )


குருநாதர் :-  ஆனாலும் சித்தர்கள், பின் நிச்சயம் அப்படி இல்லை, அனைத்தும், பின் நலம், அறிந்தும், இன்னும் சொல்கின்றோம், எதை என்று கூறிய, இப்படி சொன்னானே, பின் புசண்டனின், பின் அருளாசிகள் அனைவருக்குமே, எதை என்று அறிவிக்க, நிச்சயம் தன்னில். 


குருநாதர் :-  அதாவது மாணிக்கனின் பாடலே பாடுங்கள், நிச்சயம் அனைவருக்கும். ஆசிகள். 


சுவடி ஓதும் மைந்தன் :- (அப்ப இப்ப மாணிக்கவாசகர் பாடல் இதை ஒரு தடவை பாடுங்க, அப்புறம் நான் சொல்றேன்டாரு திருப்பியும். )


அடியவர்கள் திருக்கயிலாய வாத்தியம் வாசிப்பு ……..

Start - https://www.youtube.com/watch?v=AzhIXYoqaoM&t=5h35m18s

End -  https://www.youtube.com/watch?v=AzhIXYoqaoM&t=5h53m33s


அடியவர்கள் சிவபுராணம் பாடினார்கள்  ……..

Start - https://www.youtube.com/watch?v=AzhIXYoqaoM&t=5h53m33s

End -  https://www.youtube.com/watch?v=AzhIXYoqaoM&t=6h05m47s


சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- ( இறைபக்தி, பொறுமை மற்றும் இறைவனின் கருணை பற்றிய முக்கிய கருத்துக்களின் சுருக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது)



  • எதிர்பார்ப்பற்ற பக்தி மற்றும் பொறுமை: இறைவனிடம் எந்தவொரு பலனையும் எதிர்பார்த்து வணங்கக் கூடாது, மாறாக முழுமையான அன்பால் மட்டுமே இறைவனை வணங்க வேண்டும். ஒரு மனிதனுக்கு எப்போது, எதைக் கொடுக்க வேண்டும் என்பது இறைவனுக்கு நன்றாகத் தெரியும். அவசரப்பட்டு காரியங்களைச் சாதிக்க நினைத்தால் தோல்வியே மிஞ்சும்; எனவே பொறுமையைக் கடைப்பிடித்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் (பொறுத்தார் பூமி ஆள்வார்).



  • மற்றவர்களுக்கு உதவும் குணம்: இறைவன் ஒருவருக்கு வளங்களை வழங்குவதற்கு முன், அவர் அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வாரா என்ற தகுதியைப் பார்க்கிறார். மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற பக்குவம் மனதில் தோன்றினால் மட்டுமே, இறைவன் நம்மை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வார்.



  • இறைவனைத் தேடுதல்: மனிதர்கள் பணம், ஆசை, பொறாமை மற்றும் தேவையற்ற விஷயங்களைத் தேடி அலைகிறார்கள், ஆனால் உண்மையாகத் தேட வேண்டிய இறைவனை மறந்து விடுகிறார்கள்.



  • சுத்திகரிக்கும் நெருப்பான இறைவன்: இறைவன் என்பவர் நெருப்பைப் போன்றவர். நெருப்பில் கை வைத்தால் சுடுவது போல, இறைவனை நெருங்கும் போது அவர் நம்மிடம் உள்ள தீய எண்ணங்களையும் கர்மவினைகளையும் மெதுவாக எரித்து அழிப்பார். இது நமக்குச் சில கஷ்டங்களைக் கொடுத்தாலும், அது நம்மைச் சுத்தப்படுத்தும் செயலாகும். உலகியல் தேர்வுகளான IAS, IPS போன்ற பதவிகளை அடைவதை விட, பக்தியில் வெற்றி பெறுவது மிகவும் கடினமானது.




  • இறைவன் மீதான பயம்: அகத்தியர் கூறுவது போல், ருத்ராட்சம் அணிந்து கொண்டோ அல்லது நெற்றியில் பொட்டு வைத்துக்கொண்டோ தவறு செய்தால் இறைவன் கடுமையாகத் தண்டித்து விடுவார் என்ற பயத்தினாலேயே பலர் இறைபக்தியிலிருந்து ஒதுங்கி இருக்கிறார்கள்.




  • இறைவனின் வழிகாட்டுதலும் திருத்தமும்: வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் இறைவனின் நாமத்தை முழுமையாக நம்புபவர்களுக்கு, யாரோ ஒருவர் மூலமாக இறைவன் நிச்சயமாக உதவுவார். நல்ல மற்றும் உயர்வான எண்ணங்களை வளர்த்துக் கொண்டால், இறைவன் நமக்குள் வந்து தங்குவார். ஒரு ஆசிரியர் எப்படி மாணவர்களை முதலில் சொல்லியும், பிறகு அடித்தும் திருத்துகிறாரோ, அதேபோல இறைவன் முதலில் நல்ல முறையில் சொல்லிக் கொடுத்துத் திருத்துவார்; அப்படியும் கேட்கவில்லை என்றால் தண்டித்துத் திருத்துவார்.




  • சித்தர்கள் மற்றும் புண்ணியம்: திருவண்ணாமலையில் உள்ள சித்தர்களும் ஞானிகளும், நல்ல எண்ணம் கொண்ட மனிதர்களைத் தேடி அவர்களை உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள். மேலும், இறைவனைப் பற்றிப் பேசுவதற்கும், கேட்பதற்கும் கூட புண்ணியம் செய்திருக்க வேண்டும்




சுவடி ஓதும் மைந்தன் பொது உரையை தொடர்ந்து,  அன்புடன் இடைக்காடர் சித்தர்  வாக்கு ஆரம்பம் ஆனது. அதனை அடுத்த பதிவில் காண்போம் …….


(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 08.03.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்குகள் தொடரும்……)



ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.  சர்வம் சிவார்ப்பணம்.