“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Wednesday, March 11, 2026

சித்தர்கள் ஆட்சி - 585 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - 08.03.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு. - பகுதி 1

 இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.




அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 08.03.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு. - பகுதி 1 


நாள் : 08/03/2026 (ஞாயிற்றுக்கிழமை) 

நேரம் : காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 

இடம் : ராஜா ராணி திருமண மண்டபம், திருவண்ணாமலை 

நேரலை :-  https://www.youtube.com/live/AzhIXYoqaoM


( இவ் கூட்டு பிரார்த்தனையின் அனைத்து வாக்குகளும் உங்கள் பார்வைக்கு இங்கு ஒவொரு பதிவிலும் , படிக்க ஏதுவாக கொடுக்கப்பட்டுள்ளது.


சித்தர்கள் ஆட்சி - 585 :-  பகுதி 1

https://siththarkalatchi.blogspot.com/2026/03/585.html


சித்தர்கள் ஆட்சி - 586 :-  பகுதி 2

https://siththarkalatchi.blogspot.com/2026/03/586.html


சித்தர்கள் ஆட்சி - 587 :-  பகுதி 3

https://siththarkalatchi.blogspot.com/2026/03/587.html


சித்தர்கள் ஆட்சி - 588 :-  பகுதி 4

https://siththarkalatchi.blogspot.com/2026/03/588.html


சித்தர்கள் ஆட்சி - 589 :-  பகுதி 5

https://siththarkalatchi.blogspot.com/2026/03/589.html


சித்தர்கள் ஆட்சி - 590 :-  பகுதி 6

https://siththarkalatchi.blogspot.com/2026/03/590.html


சித்தர்கள் ஆட்சி - 591 :-  பகுதி 7

https://siththarkalatchi.blogspot.com/2026/03/591.html


சித்தர்கள் ஆட்சி - 592 :-  பகுதி 8

https://siththarkalatchi.blogspot.com/2026/03/592.html


சித்தர்கள் ஆட்சி - 593 :-  பகுதி 9 (நிறைவு பகுதி)

https://siththarkalatchi.blogspot.com/2026/03/593.html


)

================================

# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு

================================ 


ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 


அனைவருக்குமே எம்முடைய ஆசிகள் பரிசுத்தமானவை. அனைவருக்கும் நிச்சயம், பின் அனைத்தும் நிச்சயம். எவ்விதத்தில் கொடுக்க நிச்சயம் சித்தர்கள், நாங்கள் அறிவோம். 


அதேபோல் நிச்சயம் உங்களுக்கு கொடுப்போம். இன்னும், உங்களால் பின் அவை எதை என்று அறிய, எங்கெல்லாம் திருத்தலங்களை தரிசிக்க செல்ல வேண்டுமோ, ஆனாலும் அதுவும் முடியாது. 


ஆனால் அடியார்களை வைத்து உங்களுக்கு தேவையானதை யாங்களே கொடுப்போம்; கவலைகள் வேண்டாம். பின், இன்று முதலில் ஒரு 15 பாடல்களை, அபிராமி பாடல்களை பாடுங்கள். 


===================================

# பெண்ணாக பிறந்து, ஒரு மிகப்பெரிய சிவன் பிள்ளையாகவே வளர்ந்த, ஆண் சிவனடியாரை பற்றி - இதுவரை  உலகம் அறியாத ரகசிய வாக்கு 

===================================


குருநாதர் :- எதை, எவை என்று புரிய. பின், அதாவது பெண்ணாக பிறந்து ஒரு மிகப்பெரிய சிவன் பிள்ளையாகவே வளர்ந்தவனைப் பற்றி தான் எடுத்துரைக்கப் போகின்றோம் இன்று சித்தர்கள் நிச்சயம் இதை உரைப்பார்கள். 





சுவடி ஓதும் மைந்தன் :- ஒரு பெண்ணாக பிறந்து மிகப்பெரிய சிவன் மகனாக வாழ்ந்தவர் யாரும் தெரியல; சொல்வார், அவரைப் பற்றி தான் இன்னைக்கு சித்தர்கள் உரைக்கப் போகின்றோம். ஆனா யாரும் தெரியாது, எந்த சித்தர் வருவாருன்னு தெரியாது. நான் சொல்ல, நான் உரைக்கப் போறேன்னு சொல்லல, அகத்தியர். சித்தர்கள் இன்றைக்கு உரைப்போம்னு சொல்லிட்டாரு. பார்ப்போம்,




சுவடி ஓதும் மைந்தன் :- அதுக்கு முன்னாடி...அபிராமியை நினைச்சே முதல்ல இன்னைக்கு வந்து ஒரு 15 பாடல் பாடணும். 


பாடகர் :- ( அபிராமி அந்தாதி பாடல் பாடினார்கள் )

 https://www.youtube.com/watch?v=AzhIXYoqaoM&t=4h22m31s


பாடகர் :- ( பாடி முடித்த பின்னர் குருநாதர் வாக்குகள் உரைத்தார்கள் )


================================

# தூக்க கலக்கத்திற்கு செல்ல உள்ள அடியவர்கள் முழித்துக் கொள்ள முருகப்பெருமான் பாடல்

================================


குருநாதர் :-  அப்பா அறிந்தும் இதை என்று அறிய அனைவருக்கும், அனைவருமே அப்பனே நிச்சயம் தூக்க கலக்கத்திற்கு சென்றிடுவார்கள். அப்பனே முருகனே அப்பாடலைப் பாடு, பின் நிச்சயம் காதுகளில் பின் நுழைந்து உள்ளே செல்லும், முழித்துக் கொள்வார்கள். சித்தர்கள் அப்பொழுது செப்புவார்கள். 


பாடகர் :- ( முருகப்பெருமானின் சக்தி மிக்க  பாடல் ஒன்று பாடினார்கள் )

https://www.youtube.com/watch?v=AzhIXYoqaoM&t=4h32m41s


பாடகர் :- ( பாடி முடித்த பின்னர் குருநாதர் வாக்குகள் உரைத்தார்கள் )


குருநாதர் :- அப்பனே, அழகாக அப்பனே, வாழும், அண்ணாமலையில் வாழும். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அப்பனே, மேலே. 


சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, ( திரு அண்ணாமலையில் வாழும் ஈசனாரின் செல்ல குழந்தைகள் , சாதுக்கள் ) நீங்க எல்லாம் கொஞ்சம் மேலே வாங்க, ஐயா. அப்பனே, அழகாக. 


குருநாதர் :-  அப்பனே, தாயவளை நினைத்து பாடலைப் பாடு. 


சுவடி ஓதும் மைந்தன் :- அம்பாளை நினைச்சு ஒரு பாடல் பாடுங்க அய்யா  


பாடகர் :- ( அம்பாள் பாடல் - “சொல்லடி அபிராமி” என்ற பாடல் பாடினார்கள் )

https://www.youtube.com/watch?v=AzhIXYoqaoM&t=4h39m54s


பாடகர் :- ( பாடி முடித்த பின்னர் அன்புடன் காகபுசண்ட  மாமுனிவர் வாக்குகள் உரைத்தார்கள் )


சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, படிக்கிறேன். 



=========================================

# அன்புடன் காக புசண்ட மாமுனிவர் வாக்கு 

=========================================

https://www.youtube.com/watch?v=AzhIXYoqaoM&t=4h46m36s


காகபுசண்ட மாமுனிவர்:- "அண்ணாமலையோனை, ஆட்சி செய்கின்ற தலைவனை பாதமே பணிந்து உரைக்கின்றேனே, புசண்டனவன்." 


காகபுசண்ட மாமுனிவர்:- அறிந்தும் இவையென் தெரியாமல் வாசகத்தை இன்னும் பாடப்பாடா என்ன லாபம்? 


சுவடி ஓதும் மைந்தன் :- திருவாசகத்தை தெரியாமல் பாடி என்ன லாபம்? 


காகபுசண்ட மாமுனிவர்:- இதை இயற்றியவனோ பின் எவன் என்றே? 


காகபுசண்ட மாமுனிவர்:- ஆனாலும் அவனைப் பற்றி தெரியவில்லையே மூடனுக்கு. 



சுவடி ஓதும் மைந்தன் :-  ( எல்லோருக்கும் இதை இயற்றியவர் மாணிக்கவாசகப் பெருமான் என்று தெரியும். ஆனால் அவரை பற்றி உண்மைகள் யாருக்கும் தெரியாது.  )


காகபுசண்ட மாமுனிவர்:- அறிந்தும் இதையே பின் புரிந்து கடைசியில் பாடுக, அனைத்தும் புரிந்து என்று. அதையும் இன்னும் புரியவில்லையே மனித மூடனுக்கு. 


சுவடி ஓதும் மைந்தன் :- ( திருவாசத்தில் , சிவபுராணத்தில் கடைசியில் வரும் வரி - நல்லா புரிஞ்சு பொருள் உணர்ந்து பாடினா மட்டும்தான் நீங்கள் வேண்டிய நலன்கள் கிடைக்கும், இல்லைன்னா கிடைக்காது. ) 


==================================

# உலகம் இதுவரை அறியாத மாணிக்கவாசகப் பெருமான் ரகசியங்கள்.

==================================


காகபுசண்ட மாமுனிவர்:- இப்பொழுதே இவனைப் பற்றி யான் சொல்வேன். 


சுவடி ஓதும் மைந்தன் :- ( மாணிக்கவாசக பெருமானை பற்றி இப்போது நான் சொல்லப் போகிறேன் ). 


காகபுசண்ட மாமுனிவர்:- இதைத்தன் இவை அறிய பின் இதை ஒன்றிணைந்து பார்த்தாலும் முதலில் அர்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள், பின் அனைத்தும் பிறந்தாகிவிட்டது. அதைத்தன் சரியாக தேர்ந்தெடுத்து தேவைகளும்…..




சுவடி ஓதும் மைந்தன் :-  ( ஒரு தடவை நீங்க பாடுங்கன்றார் வந்து. புல்லாகி என்ற வரியில் இருந்து )


ஓதுவார் :- ( சிவபுராணம் பாடினார்கள் ) 


(....ஆடியோ தடங்கல்கள் …)


புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்… 



(....ஆடியோ தடங்கல்கள் …)

https://www.youtube.com/watch?v=AzhIXYoqaoM&t=4h48m35s


ஓதுவார் அடியவர் :- ( இவ் ஆடியோ தடங்கல்கள்  வந்த நேரத்தில், வாக்கு உரைக்கும் போது, சுவடி ஓதும் மைந்தனுடன் மேடையில் இருந்த  அடியவர் , ஓதுவார்  அடியவர் இவ் நேரத்தில் பின்னர் உரைத்த உரைகள் தொகுப்பு  சுருக்கம் உங்கள் பார்வைக்கு கீழே… )


=================================

# சிவபுராணம் பொருள் உணர்ந்து பாட வேண்டும். அப்போதுதான் பலன் கிட்டும். 

=================================



ஓதுவார்  அடியவர் உரை சுருக்கம்  :- ( - 3/10/2026 audio transcription - ஐயா, அது காகபுசண்டர்  அய்யா  என்ன சொல்றாருன்னா, ஃபர்ஸ்ட் வந்து பாத்தீங்கன்னா, சிவபுராணத்துல வந்து பாத்தீங்கன்னா, அந்த இத்தனை பிறப்புன்னு சொல்லி இருக்காரு. அதை பத்தி பாடுன்னு சொன்னாருங்க ஐயா. 


அது பாடும்போது தான் அந்த புல்லாகி, பூடாய், புழுவாய், மரமாகி, பல்விருகமாகி, பறவையாய், பாம்பாகி, கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய், வல்லசுரராய், முனிவராய், தேவராய் செல்லாது நின்ற இத்தாவர சங்கமத்துள் எல்லா பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் அப்படின்னு படிச்சேன் ஐயா. 


அப்படி முடிஞ்ச உடனே அதுக்கான அர்த்தம் என்னன்னு கேட்டாருங்க ஐயா. அர்த்தம் என்னன்னு எல்லாரையும் கேட்டாரு ஐயா. 


அப்ப இது படிக்கும் போது தான் எல்லா பிறப்பும், அதாவது இத்தனை பிறப்பு பிறந்தும் இறைவனை அடைய மனித பிறப்புதான் சரியான பிறப்புன்னு மாதிரி,  நம்ம எல்லாம் சொன்னோம் ஐயா. 


அதுக்கு காகபுசண்டர்  அய்யா சொன்னாரு, எல்லா பிறப்புலயும் எத்தனையோ பிறப்பு பிறந்தும் இறைவனை கண்டறிய முடியலையே. அதுதான் எத்தனை பிறப்பு, அதாவது புல், பூடு, புல்லாய், பூடாய், புழுவாய், மரமாகி, பல்விருகமாகி, பறவையாய், பாம்பாகி, கல்லாய், மனிதராய், கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய், வல்லசுரராய், முனிவராய், தேவராய் செல்லாது நின்ற இத்தாவர சங்கமத்துள் எல்லா பிறப்பும் பிறந்து கூட ஈசனை வந்து கண்டறிய முடியல. அதுதான் இதனுடைய அர்த்தம். 


இது எத்தனை பேர் தெரிஞ்சு பாடுறீங்க அப்படின்ற மாதிரி எல்லாரையுமே கேட்டாருங்க ஐயா. 


அதுதான் பொருள் உணர்ந்து இதை தெரிஞ்சு பாடினா, இறைவனை, ஈசனை அடையலாம், இதனுடைய பலன் கிடைக்கும் அப்படின்ற மாதிரி சொன்னாருங்க ஐயா. 


சும்மா நான் வசித்து பாடுறதுனால ஒரு பிரயோஜனம் கிடையாது. தெரிஞ்சு பாடணும், உணர்ந்து பாடணும் அப்படின்னு சொன்னாருங்க ஐயா. )


சுவடி ஓதும் மைந்தன் :-  ( இறைவா , திரும்பவும் ஒரு பிறவி கொடுப்பா. உன்னை கண்டுபிடிக்க தான்….. ஆமா, இது அர்த்தம் தெரியுமா? )


================================

# “மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்”

================================


அடியவர் :- (சிவபுராணம் ) “மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்” 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப நீங்க என்ன கேக்குறீங்க? பாடல் பாடி.


அடியவர் :- (இறைவா ) உன்னை அடையனும்.


===============================

# முறையாக சிவபுராணம் பாடல் ரகசியங்கள் தெரிந்து பாடினால் தன்னை வெல்லலாம். அதன் மூலம் அடைந்த வெற்றியை உலகத்திற்கும் காட்டலாம். 

===============================


காகபுசண்ட மாமுனிவர்:- இதை என்று அறிய, இதை தெரிந்து கொண்டால் உன்னையும் வெல்லலாம். இவ்வெற்றியை உலகத்திற்கும் காட்டலாம். 



சுவடி ஓதும் மைந்தன் :-   இந்த பாட்டோட அர்த்தத்தை தெரிஞ்சுக்கினா மட்டும்தான் உங்களை நீங்க வெல்லலாம்.


அடியவர் :-  உலகத்தையும் வெல்லலாம்.


சுவடி ஓதும் மைந்தன் :-   உலகத்தையும் வெல்லலாம்.


அடியவர் 2 :- வெல்லலாம்.


=============================

# சிவபுராணம் - உண்மை உணர்ந்து பாட வேண்டும் 

=============================


காகபுசண்ட மாமுனிவர்:- அப்படி இல்லையேல், அறிந்தும் எதையே ஒன்று பாடிக்கொண்டிருக்க எப்படி உண்மை நிலை தெரியும்? 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப உணராம நம்ம வந்து பாடிகிட்டு இருந்தா…


அடியவர் :-  உண்மை நிலை தெரியாது.



======================================

# 60 வயது அடியார்களுக்கு பெண்ணாக பிறந்து, மீனாட்சி அன்னை அருளும் மதுரையை  சுற்றி சுற்றி வந்த அவ்  அடியார் அவர் நாமமே மாணிக்கம். 

=======================================


காகபுசண்ட மாமுனிவர்:- பின் இவற்றை அறிந்தும் இன்னும் ஞானங்கள் தித்திக்கின்ற பின் மாணிக்கனோ அருமையாக அறிந்தும் எவை என்று மீனாட்சி தாய் இதை என்று வந்த குழந்தையாகவே இதை என் புரிவித்த.


காகபுசண்ட மாமுனிவர்:-  இவன் பின் இவன் இவனுடையது எது ஏது என்று அறிந்த புரிந்து கொள்ள பாடில்லையே.  இவைதன் பின் மீனாட்சி தாயே அறிந்தும் பல பல பல சேவை செய்தவர்களே ஈசனுக்கும், அதாவது சொக்கனுக்கும், எதை அறிந்தும் கூட. 


காகபுசண்ட மாமுனிவர்:- ஆனாலும் பிறந்திட்டாள்  பின் கடைசியில் 60 வயது பின் அடியார்களுக்கு பின் பெண்ணாக.  பெண்ணாக பிறந்து அறிந்தும் காக்க முடியவில்லையே. திரிந்தாள், அலைந்தாள்  பின் மதுரை சுற்றி சுற்றி. அவன் நாமமே மாணிக்கம். 


சுவடி ஓதும் மைந்தன் :-  பெண்ணாக அதை எப்படி சொல்றார் தெரியுங்களா.


சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :-  ( மீனாட்சி அன்னை  உடனுறை  சொக்க நாதர் அவர்களிடம் இருந்த தீவிர அடியார்களுக்கு குழந்தை இல்லை. அந்தத் துயரத்திற்காக அவர்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்து, பூஜைகள் செய்து, மனமார வேண்டிக்கொண்டனர். அவர்களின் நீண்டநாள் வேண்டுதலுக்குப் பிறகு, அவர்களது 60 ஆம் வயதில்  இறுதியில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்தப் பெண் குழந்தையை அவர்கள் தெய்வ அருளாகக் கருதி மிகுந்த பக்தியுடன் வளர்த்தனர். பின்னர், அந்தப் பெண் குழந்தையே வருங்காலத்தில் மாணிக்கவாசகராக அவதரித்தார் ) 


காகபுசண்ட மாமுனிவர்:- இதைப்பற்றி யான் இப்பொழுது பரப்புவேன் 



சுவடி ஓதும் மைந்தன் :- இதைப்பற்றி தான்,  மாணிக்கவாசகர் பற்றி நான் சொல்லுவேன்.


===================================

# மாணிக்கவாசக பெருமானின்  உண்மை வரலாற்றை அழித்து விட்ட மனிதர்கள். அதாவது நாம் இப்போது அறிந்த மாணிக்கவாசக பெருமானின்  வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்ட ஒன்று. இப்போது சித்தர்கள் கருணையால் நமக்கு உண்மைகள் உரைக்கப்பட்டு கொண்டிருக்கின்றது.

===================================


காகபுசண்ட மாமுனிவர்:- ஆனால் வரலாறோ எழுதப்பட்டது. அதைத்தன் அழித்துவிட்டான் மனிதனே. 


சுவடி ஓதும் மைந்தன் :- வரலாறு மாத்தி எழுதிட்டாங்க.



===========================

# “நரியைக் குதிரைப் பரியாக்கி” - உண்மை பொருள் என்ன ?

==============================


காகபுசண்ட மாமுனிவர்:- ( ஆடியோ தடங்கல்கள் ) பெண் அதாவது ஆணாகவும் மாற்றலாம் என்பதை எல்லாம் எதை குறிக்கின்ற இறைவனிடத்திலே. பின் அதனால்தான் பழமொழியும் எவை என்று நரிகளும் எதை என்று புரிய புரிந்து கொண்டீர்களா?



=========================

மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தில் 3 இடங்களில் நரியைப் பரியாக்கிய விபரம் கூறப்பட்டுள்ளது.

கீர்த்த்தித் திருவகவல் 36வது வரியில் – “நரியைக் குதிரை ஆக்கிய நன்மையும்.”

திருவேசறவு 1:- - “நரிகளெல்லாம் பெருங்குதிரை ஆக்கியவாறன்றே உன் பேரருளே.”

ஆனந்தமாலை 7:- - “நரியைக் குதிரைப் பரியாக்கி ஞாலமெல்லாம் நிகழ்வித்தாய்.”

============================



சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- (மதுரை சொக்கநாதப் பெருமானின் திருவருளால், 'நரி' என்பது பெண் வடிவில் இருந்த மாணிக்கவாசகப் பெருமாட்டியைக் குறிப்பதாகவும், அவர் 'பரி' எனும் குதிரையாக (ஆண் வடிவம்) மாற்றப்பட்டார் என்பதே "நரி பரியான" பழமொழியின் உண்மைத் தத்துவம் என்று காகபுசண்டர் விளக்குகிறார். )  


================================

# பெண்ணைக பிறந்து, மதுரையில் தாய் தந்தையரை இழந்து  கொடுமையில்  வளர்ந்த “மாணிக்கவாசகர்” 

===============================


காகபுசண்ட மாமுனிவர்:- இவை அறிவித்து நன்னாளில் எவருக்கு ஏது என்று புரிய வளர்ந்தாள்  பல பல வழிகளிலும் கூட. தாய் தந்தையரே இழந்து கொடுமையில் கொடுமை அது. 



காகபுசண்ட மாமுனிவர் :- (அந்தச் சின்னப் பொண்ணு பாவம், ரொம்பச் சின்ன வயசுலயே சொல்ல முடியாத அளவுக்குப் பெரிய கொடுமைகளை அனுபவிச்சிருக்காங்க. பெத்தத் தாய் பாசமும் இல்லாம, தந்தை பாசமும் இல்லாம, ஆதரவற்ற நிலையில அவங்க பட்ட கஷ்டம் கொடுமையிலும் கொடுமையானது. )


===================================

# மதுரை மீனாட்சி தாயின் ஆலயத்தின் முன் 

===================================


காகபுசண்ட மாமுனிவர்:- இதைத்தன் எவ்வாறாக பின் மீனாட்சி தாயிடமே, அறிந்தும் இவைதன் அங்கு என்னென்ன கொடுக்க, ஏது என்று உணர்ந்து, அனைத்தும் பின் உண்டாள்,  அங்கேயே மீனாட்சி தாயிடம். 


காகபுசண்ட மாமுனிவர்:- இதை அறிவித்து இவ்வாறு என்பதை எல்லாம் பரப்ப என்றென்று சொல்ல யான்? அறிந்தும் மீண்டும் சுற்றி சுற்றி ஆனாலும் எப்பிறப்பு ஏது என்று அறியாமலும் வந்து வலங்கள் எவை என்று அறிய வந்தார்கள், சென்றார்கள் மக்கள் அறிந்தும் கூட. அழுதாள் இவள் குழந்தையாக எதை என்று யாரும் கவனிக்கவில்லை. 



சுவடி ஓதும் மைந்தன் :-  ( பாவம், அந்தச் சின்னக் குழந்தை அழுதுக்கிட்டே இருக்கு. (மீனாட்சி அன்னை ஆலயம்) அந்தப் பக்கம் மக்கள் என்னவோ வந்துட்டுப் போயிட்டுதான் இருக்காங்க, ஆனா அழுது வடியுற அந்தப் புள்ளையைத் திரும்பிப் பார்க்கவோ, கவனிச்சுக்கவோ யாருமே இல்லை. பெத்தவங்களும் இல்லாம, ஆதரவும் இல்லாம அந்த மாணிக்கவாசகப் பெருமாட்டி குழந்தை வடிவத்துல அழுது அலைஞ்சது ரொம்பக் கொடுமையான விஷயம். )


==============================

# ஏன் பெண்ணாக பிறந்தோம் ? - என்ற சிந்தனை மாணிக்க வாசக பெருமானுக்கு வந்தது.

=============================


காகபுசண்ட மாமுனிவர்:- இவை அறிவித்து ஆனாலும் வளர வளர ஏன் பெண்ணாக பிறந்தோம் என்று சிந்தித்தாள். 



சுவடி ஓதும் மைந்தன் :-  ( அந்தச் சின்னக் குழந்தை வளர வளர அனுபவிச்ச கொடுமைகள் கொஞ்சம் நஞ்சம் இல்ல. "ஏண்டா இப்படிப் பெண்ணா பொறந்தோம்? ஏன் இப்படிப் பெண்ணா பொறந்து இவ்வளவு கஷ்டப்படணும்?"ன்னு அந்த அம்மா மனசு உடைஞ்சு வருத்தப்படுறாங்க. யாருமே நமக்கு உதவி செய்ய ஆள் இல்லையேன்னு ஏங்குறாங்க. ஒருவேளை நாம பொண்ணா இருக்குறதுனாலதான் யாருமே நமக்குத் துணையா இல்லையோன்னு அந்த மாணிக்கவாசகப் பெருமான், பெண் உருவத்துல இருக்கும்போது மனசுக்குள்ள ரொம்பவும் வேதனைப்பட்டு யோசிக்கிறாங்க. )


==========================

# பெண்ணாக பிறந்த மாணிக்கவாசக பெருமாட்டிக்கு சொல்ல இல்லாத பல தொல்லைகள்,  பல கொடுமைகள், பல வழிகளில்…

==========================


காகபுசண்ட மாமுனிவர்:- இதை அறிவித்து இவ்வாறாக, ஆனாலும் பின் இதை என்று அறிய, பிச்சை எடுத்தோரும், இவை தன் பெண்ணே, எதை என்று. ஆனாலும் பல கொடுமைகள் ஆக்கி பல வழிகளில் எதை என்று துடித்தாள். 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஆனால் பல வழிகள்ல , துன்பங்கள் , கஷ்டங்கள் பல வழிகள்ல அனுபவிக்கிறாங்க 


காகபுசண்ட மாமுனிவர்:- இவை அறிவித்து ஆனாலும் இதை என்று அறிய ஆனாலும் வயது ஆக ஆக உண்மை நிலை தெரிந்தது 


சுவடி ஓதும் மைந்தன் :- வயது ஆக ஆக உண்மை நிலை தெரிகின்றது.


===================================

# பெண்ணாக பிறந்த மாணிக்கவாசக பெருமாட்டியை , மீனாட்சி அன்னை ஆலயத்தின் உள்ளே செல்ல விடவில்லை 

===================================


காகபுசண்ட மாமுனிவர்:- இவை அறிவித்து எவ்வாறே என்றெல்லாம் ஆனாலும் பாடல்களை பாடி பாடல்களை பாடி பின் அசைத்தாள் எதை என்று அறிந்தும். இவை ஒன்றும் புரியாமல் இருந்தாலும் அங்கு பின் ஆனாலும் இவளுக்கு இடமில்லையே உள்ளே. வெளியிலே நின்று நின்று வருவோர்கள் போவர்கள் எல்லாம் பார்த்து பார்த்து. 


சுவடி ஓதும் மைந்தன் :-  ( அந்த அம்மா பல பாடல்கள் பாடினாங்க. ஆனா அந்த அம்மாவை ஒரு பெண் என்றதுனால உள்ள விடல)


================================

# மதுரை மீனாட்சி ஆலயத்தின் மூலாதாரமே மீனாட்சி அன்னையே ஒரு பெண்தான் என்று அறியாத மூடர்கள் 

================================


காகபுசண்ட மாமுனிவர்:- ஆனாலும் எதை என்று அன்றே  மனிதன் அவ்வாறாகவே பின் மூடனாகவே. பின் இருப்பதோ, பின் மூலாதாரமாக இருப்பதே ஒரு பெண் அறிந்தும். ஆனால் அதை கூட விளக்கவில்லையே அப்பெண்ணும் என்று. 



சுவடி ஓதும் மைந்தன் :-  (ஆனால் மதுரை அங்கு மூலாதாரமா  இருக்கிறது யாரு? மூலாதாரமே மீனாட்சி அன்னை.  ஒரு பெண் தெய்வம் தான். அது கூட  மனுஷனுக்கு புரியல. விளங்கல. என்ன பண்ணான் மனுஷன்?  நீ பெண். நீ அனாதை தான் எண்டு  சொல்லி, அவங்களை  வெளியே நீக்க வச்சுட்டான் மனிதன்.  ஐயா புரியுதுங்களா ஐயா?)  


காகபுசண்ட மாமுனிவர்:- இவை சார்ந்து இதை தன்மைப்படுத்தி இன்னும் இதைத்தன் அறிய ஆனாலும் தெரிந்து கொண்டாள் இவ்வாறுத்தான் எதை என்று புரிய. 



===================================

# பெண்ணாக பிறந்த மாணிக்கவாசக பெருமாட்டி தெரிந்து கொண்டார். எவ்வளவு இறைவன் பக்தி பாடலை பாடினாலும் உலகம் நம்மை மதிக்காது. மனம் உடைந்த மாணிக்கவாசகர்.

===================================


காகபுசண்ட மாமுனிவர்:- இதைத்தன் உணராமல் இருக்க முன் (மனித) குலத்தில் அவ்வளவுதான் வாழ்க்கை இனிமேல் வாழக்கூடாது என்று நிச்சயம். எவ்வாறாக பின் இறைவன் பக்தி பாடலை பாடினாலும் உலகம் நம்மை மதிக்காது. இவ்வுலகம் நிச்சயம் பின் தாழ்த்தித்தான் பேசும் பின் பார்த்துவிட்டேன் என்று. 


சுவடி ஓதும் மைந்தன் :- ( அந்தப் பொண்ணு மனசு உடைஞ்சு போய், "வேணாப்பா இந்த வாழ்க்கை"ன்னு முடிவு பண்ணுறாங்க. எவ்வளவோ மனமுருகிப் பாடல்கள் பாடியும், இறைவனை நோக்கி உருகி உருகி துதிச்சும், இந்த உலகம் அந்த அம்மாவைக் கேவலமா தான் பேசுது, தாழ்த்தி தான் பார்க்குது. "நாம என்னதான் இறை பக்தியோடு இருந்தாலும் இந்த உலகம் நம்மளை மதிக்கலையே, இப்படித் தாழ்வா நடத்துறாங்களே"ன்னு அந்த மாணிக்கவாசகப் பெருமாட்டி பெண் உருவத்துல ரொம்பவே வேதனைப்படுறாங்க. கடைசியில, "இப்படிப்பட்ட அவமானத்தோட வாழ்றதுக்கு இந்த உயிரே தேவையில்லை, போயிடலாம்"ன்னு அந்த அம்மா விரக்தியோட உச்சத்துக்குப் போயிட்டாங்க. )


================================

# மதுரை மீனாட்சி தாயிடம் மாணிக்கவாசகப் பெருமாட்டியின் உருக்கமான முறையீடு

================================


காகபுசண்ட மாமுனிவர்:- தாயே!!!!! அறிந்தும் மீனாட்சியே!!!!! இவை என்று. ஆனாலும் நீயும் ஒரு பெண்ணே. ஆனாலும் இதைப் பார்த்து நிச்சயம் நீ சிரிக்கின்றாயா என்ன? மீனாட்சியை பார்த்து. 



சுவடி ஓதும் மைந்தன் :- (  அந்தப் பொண்ணு ரொம்ப மனசு உடைஞ்சு போய் மீனாட்சி அம்மனைப் பார்த்து கேக்குறாங்க, "நீயும் ஒரு பெண்தானே? என் கஷ்டமெல்லாம் தெரிஞ்சும், நான் இவ்வளவு கொடுமையை அனுபவிக்குறதை நீ நேர்ல பார்த்துட்டு இருக்கே... ஆனா அதைப் பார்த்து நீ சிரிக்கிறியா? ஒரு பெண்ணா இருந்துட்டு இன்னொரு பெண் படுற வேதனையைப் பார்த்து நீயே இப்படி சிரிக்கலாமா?"ன்னு அந்த மாணிக்கவாசகப் பெருமாட்டி பெண் உருவத்துல மீனாட்சித் தாய்கிட்டயே நியாயம் கேக்குறாங்க. )


==================================

# மதுரை இறைவன்  சொக்கநாதரிடம் மாணிக்கவாசகப் பெருமாட்டியின் விரக்தி கலந்த வினா…….

==================================


காகபுசண்ட மாமுனிவர்:- இவையறிவித்து, ஆனாலும் பின் எவை புரிந்து, “சொக்கனாம் சொக்கன். பொய்யே”. 



சுவடி ஓதும் மைந்தன் :- ( அந்தம்மா மனசு அந்த அளவுக்கு உடைஞ்சு போயிருக்கு. "மீனாட்சித் தாயே, நீயே எனக்கு ஒரு ஒத்தாசையும் பண்ணலையே"ன்னு ஆதங்கப்படுறாங்க. அப்புறம் அந்த வேதனையோட உச்சத்தில, "சொக்கனா... அவன் ஒரு இறைவனா?"ன்னு கேக்குற அளவுக்கு அந்த அம்மாவுக்கு விரக்தி வந்துடுச்சு. அந்தச் சின்ன வயசுல பட்ட கஷ்டத்தால, மனசு தாங்காம "சொக்கன்"னு சொல்லிட்டு, அப்புறம் "அவர் ஒரு இறைவனா?"ன்னு கோவத்திலயும் வேதனையிலயும் அந்த வார்த்தை அந்தம்மா வாயிலிருந்து தானாவே வந்து விழுது. ) 


============================

# மதுரையம்பதி சொக்கநாதரின் பேரருள் வருகை !!!!!

============================


காகபுசண்ட மாமுனிவர்:- இவையறிவித்து பின் சொக்கனே பின் வந்து அறிந்தும்.


சுவடி ஓதும் மைந்தன் :- சொக்கனே வந்துட்டாரு. சொக்கர் வந்துட்டாரு 


காகபுசண்ட மாமுனிவர்:- இவை அறிவித்து எதை அறிவித்து குழந்தாய் அழகாக பாடினாயே அறிந்தும் ஆனாலும் யானை கேட்டேன் இங்கிருந்து. 


சுவடி ஓதும் மைந்தன் :-  நீ நல்லா பாடினாய். நான் இங்கிருந்தே வந்து கேட்டேன். 


அடியவர் :- கேட்டேன் 


காகபுசண்ட மாமுனிவர்:-  எதை இவையும் கூட சொக்கனுக்கு தெரிந்துவிட்டதோ யான் திட்டியதை அதனால் உன்னால் உணர முடிந்ததோ 


சுவடி ஓதும் மைந்தன் :-  (நான் சொக்கனை திட்டினேன் என்று சொல்லிட்டு,  இந்த அம்மா சொல்றாங்க. இறைவன் தாங்க வந்தது. ஆமா வந்தது இறைவன் தான். ஆனால்  யாரோ என்று நினைச்சு பேசுறாங்க… ) 


காகபுசண்ட மாமுனிவர்:-  இவை அறிவித்து (ஈசனாரும் ) சொக்கன் மிகவும் நல்லவன் என்று பின்.


சுவடி ஓதும் மைந்தன் :- (ஆனா ஈரேழு பதினான்கு உலகை ஆளும் எம்பெருமான் ஈசனே நேரில் வந்து,  ஈசனை பற்றி அவரே  சொல்கிறார். என்ன சொல்கிறார்?  ஈசன் அவர்  மிகவும் நல்லவர் என்று….) 


அடியவர்கள் :- (கைதட்டல்கள்……)


காகபுசண்ட மாமுனிவர்:-  அறிந்தும் இவை என்று புரிய, நல்லவன் ஆகில் என்னை ஏன் பிறக்க வைத்தான் இங்கு? 


சுவடி ஓதும் மைந்தன் :-  ( ஈசன் அவர்  நல்லவராக இருந்தால் எனக்கு ஏன் பிறவி கொடுத்தார் இங்க? எனக்கு ஏன் இங்க வந்து பிறவி கொடுத்தாருன்னு சொல்லிட்டு அந்த அம்மா கேக்குறாங்க ) 


====================================

# மாணிக்கவாசக அம்மையாருக்கு , மதுரை சொக்கநாதர் அருளிய வரம் 

====================================


காகபுசண்ட மாமுனிவர்:-  இவை அறிவித்து நன்று உணர்ந்து. ஆனாலும் எவை என்று புரிய, சொக்கன் உனக்கு அனைத்தும் தருவான் பின் அறிந்தும் என்று மறைந்திட்டான். 


சுவடி ஓதும் மைந்தன் :-  ( பாருங்க, அந்தப் பொண்ணு அவ்ளோ அழுது புலம்பி, "சொக்கன் எல்லாம் பொய்"னு சொன்ன உடனே, மதுரையம்பதி சொக்கநாதரே நேர்ல வந்துட்டாரு. வந்தவரு அந்த அம்மாவுக்கு வேண்டிய எல்லாத்தையுமே வாரி வாரி கொடுத்துட்டாரு. என்னென்ன தேவையோ, என்னென்ன கஷ்டம் இருந்ததோ எல்லாத்தையும் தீர்த்து வச்சுட்டு, "எல்லாமே உனக்குக் கிடைச்சிருச்சு"ன்னு சொல்லிட்டு, ஒரு நிமிஷத்துல கண்ணு முன்னாடியே மறைஞ்சு போயிட்டாரு. அந்த அம்மாவுக்கு என்ன நடக்குதுன்னே புரியாத அளவுக்கு இறைவனோட அந்தத் திருவிளையாடல் டக்குன்னு நடந்து முடிஞ்சிருச்சு. )


======================================

# மாணிக்கவாசக அம்மையார் , மதுரை மீனாட்சி அன்னை ஆலயத்தின் உள்ள  பொற்றாமரைக் குளம் அதனில் விழுந்து உயிரை மாய்க தயாரானர்.

======================================= 


காகபுசண்ட மாமுனிவர்:-  ஆனாலும் முடியவில்லை இவளால். பின் அதாவது பின் தாமரை தன்னிலே அறிந்தும் இவை என் மனமாகக் கொண்டு, இனியும் இறைவனும் தேவையில்லை. எதுவும் தேவையில்லை. அறிந்தும் பின் குளத்தில் பின் அதாவது குதிப்போம் என்று. 


=====================================

# பொற்றாமரைக் குளம் அதனில் விழுந்த அம்மையை , ஒரு தாமரையின் மீது அழகாக மேலே எடுத்தார் எம்பெருமான் சொக்கநாதர்.

======================================


காகபுசண்ட மாமுனிவர்:-  அறிந்தும் அப்பொழுதெல்லாம் எவ்வளவு ஏது என்று அறிய எதை என்று புரிய குதித்தால், எதை என்று அறிய, அழகாகவே பின் தாமரை தன்னில் கூட மேலே எடுத்தான் பின் சொக்கனே.



சுவடி ஓதும் மைந்தன் :-  ( அந்தப் பொண்ணு வாழ்க்கையே வெறுத்துப் போயி, "இனிமேல் வாழவே பிடிக்கல"ன்னு சொல்லிட்டு துணிஞ்சு தாமரை குளத்தில் குதிச்சுட்டாங்க. ஆனா, அங்கதான் ஒரு பெரிய அதிசயம் நடந்துச்சு! அந்தத் தாமரை குளத்தில் விழுந்த அந்த அம்மாவை, வேற யாரும் இல்ல, நம்ம மதுரை சொக்கநாதப் பெருமானே நேரில் வந்து காப்பாத்திட்டார். ஒரு தாமரை மலர்  மீது  இருந்து மென்மையாக, எம்பெருமான் ஈசனே  வந்து அந்தப் பெண்ணை அப்படியே கையால் தூக்கி எடுத்துட்டாரு. ) 



=====================================

# அடியவர்கள் சிந்தனைக்கு ஒரு கேள்வி…சற்று சந்தித்துவிட்டு வாக்கினை தொடருங்கள்…….. 

=====================================


காகபுசண்ட மாமுனிவர்:-  இதை ஏன் சொன்னேன்? யாருக்காவது அறியுமா புரியுமா? 


காகபுசண்ட மாமுனிவர்:-  பின் வாக்கில் வருவார்கள் சித்தர்கள்.. 


சுவடி ஓதும் மைந்தன் :-  ( பின்னாடி வாக்கில் சித்தர்கள் வந்து இதற்குரிய அர்த்தத்தை சொல்வார் ) 


====================================

# மாணிக்க அம்மையாருக்கு உண்டான வியப்பு 

====================================


காகபுசண்ட மாமுனிவர்:-  இவை அறிவித்து எவை என்று புரிய ஆனாலும் பின் தாமரை தன்னில் அழகாக அறிந்தும் இவை நினைத்தால், ஆஹா!!!! அறிந்தும் இறக்க குதித்தோமே!!!!! என்ன ஆச்சரியம்!!!! என்று. 


====================================

# பாசத்துடன் சொக்கநாதர் கேட்ட கேள்வி …..

====================================


காகபுசண்ட மாமுனிவர்:- பின் சொக்கனும், பின் குழந்தாய் நன்றாக இருக்கின்றாயா? என்று. 


======================================

# அம்மை ஈசனாரை உணர்ந்த தருணம் 

======================================


காகபுசண்ட மாமுனிவர்:-  இதை அறிவித்து பின் எதை என்று புரிய ஆனாலும் உணர்ந்து கொண்டாள் இவளே பின் இவன்தான் சொக்கன் என்று 


சுவடி ஓதும் மைந்தன் :-  அந்த அம்மாவுக்கு தெரிஞ்சுச்சு. இது தான் சொக்கன். இதுதான் இறைவன் என்று. 


======================================

# எம்பெருமான் சொக்கநாதர் கண்களில் நீர் …….

======================================


காகபுசண்ட மாமுனிவர்:-  ஓடியோடி  அணைத்துக் கொண்டாள் கெட்டியாக. ஈசனும் அறிந்தும் எதை என்று நிரூபிக்க கண்களில் நீர். 



======================================

# மாணிக்கவாசக அம்மையாரின் பாசத்தின் வலிமை 

======================================


காகபுசண்ட மாமுனிவர்:-  இதுபோல் பாசமோ, இவ்வுலகத்தில் எதுவுமே நினைக்கவில்லை. என்னை திட்டினால் அல்லவா? அங்குதான் நீ நிற்கின்றாய். 


சுவடி ஓதும் மைந்தன் :- (பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக இவ்வாறு கூறுகிறார்: "இதுபோன்ற ஒரு தூய்மையான பாசத்தை நான் எங்குமே பார்த்ததில்லை. என் மீது எத்தனையோ பாடல்கள் பாடினாய், உருகினாய்; ஆனால் இறுதியில் ஒரு கட்டத்தில் என் மேல் கொண்ட வெறுப்பால் என்னையே திட்டினாய். உண்மையில், என்னை உரிமையோடு திட்டுவதற்கு இங்கு எவரும் இல்லை. நீ எந்தத் தவறும் செய்யாமல், என் மீது கொண்ட அமிதமான அன்பினாலும் உரிமையினாலும் மட்டுமே என்னைச் சாடினாய். உன்னுடைய அந்த நிந்தனை கூட எனக்கு அன்பாகவே இனித்தது," என்று ஈசன் நெகிழ்ச்சியுடன் உணர்த்துகிறார்.)


====================================

#  "நரி பரியான ஞான ரகசியம்" - 

====================================

===================================

# பெண்மை மறைந்து ஆண்மை மலர்ந்தது.

===================================

====================================

# "பெண் உருவை மாணிக்கமாய் மாற்றிய சொக்கநாதாரின் பேரருள்"

====================================

====================================

# உலகின் விலை மதிக்க முடியாத மாணிக்கம் உருவான அதிசயம்.

====================================



காகபுசண்ட மாமுனிவர்:-  இதைத்தன் எவை அறிய ஆனாலும் சிறுமியும் அறிந்து பின் பிறவி என்று வேண்டாம். யான் இப்பொழுதே மூழ்கிப் போகின்றேன். எனக்கு என் எது என்றெல்லாம். 


காகபுசண்ட மாமுனிவர்:-  பின் குழந்தாய் இரு எதை என்று அறிய, உன்னை மாற்றுகின்றேன் என்று. 


காகபுசண்ட மாமுனிவர்:-  அறிந்தும் எவை என்று புரிய, இவ்வுலகத்தில் விலை மதிக்க முடியாத மாணிக்கமாக உன்னை மாற்றுகின்றேன் என்று. 



அடியவர் :- நமச்சிவாய!!!!!  நமச்சிவாய!!!!! 


அடியவர்கள்  :- ( பலத்த கை தட்டல்கள் ….) 


சுவடி ஓதும் மைந்தன் :-  ( அந்த அம்மா மனசு ரொம்பவே விரக்தியில இருக்கு, அதான் சொக்கர்கிட்ட, "இல்லப்பா, எனக்கு இந்த வாழ்க்கையே வேணாம், இந்தப் பிறவியை இதோட நான் முடிச்சுக்கிறேன்"னு சொல்லிக் குளத்துல குதிக்கப் போறாங்க. ஆனா அந்த நேரத்துல சொக்கநாதப் பெருமான் விடல, "குழந்தாய் நில்லு, உன்னை இந்த உலகமே போற்றும்படி விலை மதிக்க முடியாத மாணிக்கமா மாத்துறேன்"னு சொல்லிட்டு ஒரு பெரிய அதிசயம் பண்றாரு. எவ்வளவோ கஷ்டப்பட்டு "ஏண்டா பெண்ணா பொறந்தோம்"னு அழுதுட்டு இருந்த அந்தப் பெண் உருவத்தை, ஈசன் தன் திருவருளால அப்படியே ஒரு கம்பீரமான ஆண் உருவமா மாத்துறாரு. இப்படித்தான் அந்தப் பொண்ணு மாணிக்கவாசகப் பெருமானா, ஒரு ஞானம் நிறைந்த ஆணா உருமாறினாங்க. )



======================================

# சித்தர்கள் உரைக்கும் ஞானிகளின்  கதையை கேட்டாலே புண்ணியம்.

======================================


காகபுசண்ட மாமுனிவர்:-  அறிந்து (...........) என்று புரிய நிச்சயம் சில ஞானிகளில் கூட சித்தர்கள் எதை என்று அறிவித்து, பின் சொன்னார்கள். அதை தன் காதால் கேட்டாலே புண்ணியம் புண்ணியமே 



அடியவர் :- சிவாய நம !!!!


சுவடி ஓதும் மைந்தன் :-  சில ஞானிகள் ஞானிகளை பெயரை கேட்டாலும் புண்ணியம். ஞானிகள் வரலாறை கேட்டாலும் புண்ணியம். அவங்களை பத்தி பாடினாலும், புண்ணியம். அதுக்கு தான் மாணிக்கவாசகர் எவ்வளவோ நீங்க பாடிட்டு இருக்கீங்க. வந்து பாடிட்டு இருக்கும் பொழுது அவரை பத்தி தெரியல. அப்ப தெரிஞ்சுக்கிறதும் நீங்க காதிலே  கேட்டதும் பெரிய புண்ணியம். எல்லாமே புண்ணியம் உண்மையான வரலாறு தெரிஞ்சுக்கிறது பெரிய புண்ணியம். ஆமா…. 


=======================================

# சித்தர்கள் மனிதர்களுக்கு புண்ணியங்கள் கொடுக்கும் முறை 

=======================================

=======================================

# ஞானிகள் பற்றிய  உண்மை ரகசியங்கள் 

=======================================

# ரகசியங்கள் தெரிந்து கொண்டாலே புண்ணியங்கள் உண்டாகும்.

# ரகசியங்கள் உங்கள் காதால் கேட்டாலே புண்ணியங்கள் உண்டாகும்.

# பிறருக்கு எடுத்துச் சொன்னாலே  புண்ணியங்கள் உண்டாகும்.

=======================================


காகபுசண்ட மாமுனிவர்:-  இவைப் போன்று அறிந்தும் எதை என்று நல்லோர் பின் மக்களை பின் இதை என்று ஞானிகளை பின் அறிந்து கொண்டாலே, கேட்டாலே பின் புண்ணியம் புண்ணியமே. இதுபோலத்தான் பின் நாங்களும் உங்களுக்கு புண்ணியத்தை பின் கொடுக்க முடியும். 


அடியவர் :- சிவாய நம !!!!


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப புண்ணியத்தை எப்படி கொடுக்க முடியும்? 


அடியவர் :-   பல வழிகள். அதுல இது ஒரு வழி 


சுவடி ஓதும் மைந்தன் :- அதுல ஒரு வழி இது வந்து எல்லாரும் திருவாசகத்தை பாடுறீங்க. புரியாம பாடுறீங்க. புரிஞ்சுகிட்டீங்கன்னா , அந்த ஞானியை பத்தி தெரிஞ்சுகிட்டாவே உங்களுக்கு பெரும் புண்ணியம். பெரும் புண்ணியம்.


==================================

# உங்கள் புண்ணியங்கள்  ஆறு போல பெருகி ஓடும் ரகசியங்கள் 

================================== 


காகபுசண்ட மாமுனிவர்:-  கேட்காமலே தானாக ஓடும் பின் ஆறு… 



அடியவர் :-  அப்பா !! 


சுவடி ஓதும் மைந்தன் :- ஆறுன்னா , இதெல்லாம் நீங்க தெரிஞ்சுக்கணும். அது கேட்டா, அது கேட்டுட்டு தானே திடீர்னு வரும் ஆறு.  நீங்களும் உண்மை ஞானிகள் பற்றி தெரிந்து கொண்டால் என்ன ஆகும்? 


அடியவர் :- புண்ணியம் எனும் ஆறு பெருக்கெடுத்து ஓடும் 


சுவடி ஓதும் மைந்தன் :-  பெருக்கெடுத்து ஓடும்.


=========================================

# உண்மை பொருளை கற்றுக் கொள்ளாமல்  செய்தாலும் பாவம் , பாவமே 

=========================================


காகபுசண்ட மாமுனிவர்:-  ஓடுகின்ற பொழுது (..........ஆடியோ தடங்கல்…...)  செய்தேன் என்று உண்மைப் பொருளை பின் நீங்கள் கற்றுக் கொள்ளாத, பின் கற்றுக் கொள்ளாத பின் அளவிற்கு இருந்தாலும், பின் பாவம் பாவமே!!! 


சுவடி ஓதும் மைந்தன் :-  ( என்ன சொல்கின்றார் என்றால் , எல்லாத்தையும் சொல்லிட்டு, இதை செய்தேன். அதை செய்தேன்னு சொல்லிட்டு சொல்லிட்டு வந்து, செஞ்சா மட்டும் வந்து பாவம் பாவம்தான்.  உண்மை நிலை புரியாம பாவமே வரும் ) 


காகபுசண்ட மாமுனிவர்:-  இவை தன் அறிவித்து இதைத்தன் பார்த்து (.......ஆடியோ தடங்கல்…) சொல்லும் 



சுவடி ஓதும் மைந்தன் :- (இதெல்லாம் ஞானிகளைப் பற்றி நீங்க நல்லா அறிஞ்சிட்டீங்கன்னா,  எங்கிருந்து நாம் வந்தோம்?  அப்ப திருப்பியும் எங்க போகணும்னு உங்களுக்கு தெரியும். 


அடியவர் :- ம் 


சுவடி ஓதும் மைந்தன் :- நடுவுல என்னென்ன அறிஞ்சுக்கணும், விஷயங்களும் உங்களுக்கு தெரிஞ்சிரும்.


===============================

# யாரும் அறியாத  மாணிக்க வாசகப் பெருமான் உண்மை கதை

===============================

===============================

# இவ்வுலகின் விலை மதிக்க முடியாத மாணிக்கம் உருவான கதை

===============================


காகபுசண்ட மாமுனிவர்:-  இவைப் போன்று இருவரும் எதை என்று அறிய அறிந்தும், ( ஈசனார் வாக்கு )  “இவ்வுலகத்தை எதை என்று அறிய குழந்தாய்!!!! இனிமேல் நீ மாணிக்கம்”. 


அடியவர் :- ம் 


சுவடி ஓதும் மைந்தன் :- ( அந்த குழந்தையை சொல்றாருங்க ஐயா. நீ இனிமேல் ஒரு மாணிக்கம். சொக்கநாதர் , எம்பெருமான் ஈசன் அந்த பெண் குழந்தையை, மாணிக்கம் என்று சொல்லிவிட்டார்  )


====================================

# சொக்கநாதரின் செல்லம் , பாசம் -  இவ் மாணிக்கத்திற்கு….

====================================


காகபுசண்ட மாமுனிவர்:-  என்ன வேண்டும் இவ் மாணிக்கத்திற்கு என்று செல்லமாக? 


சுவடி ஓதும் மைந்தன் :- ( மதுரையில் கேட்கிறார் ஈசன் அந்த பெண் குழந்தையை பார்த்து,  உனக்கு என்ன வேணும் மாணிக்கமேன்னு கேட்கிறார். இந்த மாணிக்கத்திற்கு என்ன வேணும்? ) 


காகபுசண்ட மாமுனிவர்:-  ஒரே ஒரு முறை உன்னை தந்தை என்று அழைக்கலாமா 


அடியவர் :- சிவாய நம !!!!


அடியவர்கள் :- ( கை தட்டல்கள் ) 


காகபுசண்ட மாமுனிவர்:-  (ஈசனாரும்)அறிந்தும் அழைக்கலாமே மாணிக்கமே” 



(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 08.03.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்குகள் தொடரும்……)



ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.  சர்வம் சிவார்ப்பணம்.