மதுரை அகத்திய மஹரிஷி ஆலயம் முகவரி

திருவாசகம் - உரை

அகத்திய பிரம்ம ரிஷி அருளிய , முதல் தர புண்ணியம் உங்களுக்கு பெற்றுத்தர உதவும் நாடி வாக்குகள்.

Thursday, November 23, 2023

சித்தர்கள் ஆட்சி - 237 : அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 5-9-2023 உரைத்த வாக்கு - பகுதி 33


 பகுதி - 33


“அனைத்தும் இறைவா நீ”


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரை அடியவர் ஒருவர் இல்லத்தில் இரண்டாம் நாள் உரைத்த வாக்கு - 05.09.2023 ( மதுரை வாக்கு - பகுதி 33 ) 



இந்த வாக்கின் முந்தைய பகுதி கீழே உள்ள பதிவில் படிக்கவும்


https://siththarkalatchi.blogspot.com/2023/11/236-5-9-2023-32.html?m=0



(பொது எச்சரிக்கை :- குரு அருள் இல்லாமல் குண்டலினி/வாசி யோகம் வேண்டாம். இந்த யோகம் மிக கடுமையான பக்க விளைவுகளை உண்டாக்கும். இந்த பதிவு இந்த யோகத்தை தவறாக செய்வதால் எழும் விளைவுகளை சுட்டும் பதிவு. குருநாதர் அகத்தீசர் பாதம் சரணம். )


அடியவர்:- ஐயா “கற்பமென்ன கருநெல்லிச்சாறு” activate ஆகிவிட்டது. அகத்தியர் ஐயா சொன்ன கற்பமென்ன  கருநெல்லிச்சாறு உள்ளுக்குள் ஆடிக்கொண்டு இருக்கின்றது. அதை ( குண்டலினி சக்தி ) சாந்தப்படுத்த வேண்டும். 


( இந்த கேள்வி தொடர்பான அகத்தியர் ஞானம் என்ற பாடலில் உள்ள சில வரிகளை அடியவர்கள் அறிய தருகின்றோம். 


கற்பமென்ன வெகுதூரம் போக வேண்டா!


கன்மலையில் குவடுகளில் அலைய வேண்டா;


சர்ப்பமென்ன நாகமதோர் தலையில்நின்று


சாகாத கால்கண்டு முனை யிலேறி


நிற்பமென்று மனமுறுத்து மனத்தில்நின்று


நிசமான கருநெல்லிச் சாற்றைக் காணு;


சொற்பமென்று விட்டுவிட்டால் அலைந்து போவாய்;


துரியமென்ற பராபரத்திற் சென்று கூடே.


இந்த அடியவர் கேட்ட கேள்வி இந்த யோக சாஸ்திர பாடல் தொடர்புடைய கேள்வி. இப்போது குருநாதர் வாக்கின் உள் செல்வோம்.)


குருநாதர்:- அப்பனே இவன் தனக்கு எல்லாம் சாட்டை அடி அடி.  எழுந்து நிற்கச்சொல் அப்பனே. 


அடியவர்:- (எழுந்து நின்றார்). 

(உடலில் ஒரு பகுதியை சுட்டிக்காட்டி) இந்த இடத்தில் vibration அதிகமாக இருக்கின்றது. சாந்தப்படுத்த வேண்டும்.


குருநாதர் அகத்தியர் புகழினை அழகாக உரைத்த அடியவர் :-  அதனால் உங்களுக்கு என்ன பாதிப்பு வருகின்றது? 


அடியவர்:- எனக்கு அதிகமான தலை இறுக்கம், மன பதட்டம் இருக்குது. 


குருநாதர்:- அப்பனே இதற்காக எங்கு சென்றான்? எப்படி ( குண்டலினி யோகம் ) இதை கற்றுக்கொண்டான் என்பதை நீயே கூறு.?


குருநாதர் அகத்தியர் புகழினை அழகாக உரைத்த அடியவர் :-  எதை கற்றுக்கொண்டீர்கள்? தவறான பயிற்சி ஏதோ செய்து  இருக்கின்றீர்கள். அதனாலதான் குருநாதர் சொல்கிறார். தவறான பயிற்சி செய்தால் அங்க இருக்கக்கூடிய நாடி நரம்பு ஏதோ பாதிப்பு அடைஞ்சதனால சுழுமுனையில் ஏதோ பாதிப்பு ஏற்பட்டு துடிக்குது. 


அடியவர்:- அதை சாந்தப்படுத்த வேண்டும். 


குருநாதர்:- அப்பனே இதுபோல் அதாவது நம்பிக்கொள்வது ஏதாவது செய்யச் சொன்னால் அப்பனே அதனால் குருவருள் ஒன்று வேண்டும் அப்பா. அனைத்தும் அப்பனே சாதிப்பதற்கு. ஆனால் தெரியாமல் சென்று விட்டான் அப்பனே. யான் தான் வழி. பொறுத்திருக்க சொல்.


குருநாதர் அகத்தியர் புகழினை அழகாக உரைத்த அடியவர் :-  குரு இல்லாத வித்தை பாழ். இரண்டாவது மானிடராக இருக்கிற குருவை யாரையும்  நம்பாதீர்கள்என்று ஐயா சொல்லிவிட்டார் clearஆக. ( அதாவது மனித குரு என்பது தரித்திரம் என்று முன்பேகுருநாதர் உரைத்து விட்டார்கள் ) . மானிடன் தரித்திரம்  பிடித்தவன். அவன் பிரச்சனையைஅவனாலே சரி பண்ணிக்க முடியாது.  நீ அவன்கிட்ட போய் கலையை கத்துக்கிற என்றால், கலையை கத்துக்கல கர்மாவைத்தான் கற்றுக்கொண்டு வருகின்றாய்.


குருநாதர்:- அப்பனே கேள். எந்தனுக்கு ஏதாவது ஒன்றை சொல் என்று.


குருநாதர் அகத்தியர் புகழினை அழகாக உரைத்த அடியவர் :- எனக்கு எதாவது சொல்லுங்க. நீங்க என்ன கத்துக்கிட்டீங்க? 


அடியவர்:- வாசி யோகம் பயிற்சி


குருநாதர் அகத்தியர் புகழினை அழகாக உரைத்த அடியவர் :-  அதெல்லாம் அவங்கதான் ( சித்தர்கள்) சொல்லி கொடுக்கனும். இதெல்லாம் மானிடர்கள் யாருக்கும் தெரியாது. 


குருநாதர்:- அப்பனே பின் வாசி யோகத்தை கற்றுக்கொண்டால் அப்பனே காமம் தலைக்கு ஏறிவிடும் என்பேன் அப்பனே. அதை அவனிடத்தில் கூறு.


குருநாதர் அகத்தியர் புகழினை அழகாக உரைத்த அடியவர் :- ஐயா நிறைய வாக்கில் சொல்லிஇருக்காங்க முன்பே. வாசி யோகம் செய்யும் பொது அது உங்கள் விந்து சக்தி மேலெழும்பிச்சுன்னா காமம் கண்ணா பின்னான்னு ஏறிடும். 

அதனால முறையான ஒரு ( பல ஆயிரம் ஆண்டுகளாக வாழும் சித்த) குரு இல்லாம வாசி யோகா பயிற்சி செய்யவே கூடாது.


குருநாதர்:- அப்பனே பின் தெரியாததை தெரியும் என்று ( பொய் ) சொல்பவன் தான் மனிதன் என்பேன் அப்பனே.


குருநாதர் அகத்தியர் புகழினை அழகாக உரைத்த அடியவர் :- தெரியாததை தெரியும் என்று சொல்ரவன் மனுஷன்.


குருநாதர்:- அப்பனே உந்தனுக்கு ( வாசி யோகத்தை தவறாக)  சொல்லிக் கொடுத்தானே ( தரித்திரம் பிடித்த மனித குரு) அவன் ஏன் உனக்கு இதை சொல்லி கொடுக்கவில்லை? என்று கேள் அப்பனே.


குருநாதர் அகத்தியர் புகழினை அழகாக உரைத்த அடியவர் :- உங்களுக்கு சொல்லிக் கொடுத்தார்ல இந்த வாசி யோக பயிற்சியை, இதை ஏன் சொல்லி கொடுக்கவில்லை? உங்கள் பிரச்சினையை சரி செய்ய ஏன் சொல்லி கொடுக்கவில்லை? அவர் ஏன் சரி பண்ண முடியவில்லை? 


அடியவர்:- அவர் போய்விட்டார். 


குருநாதர்:- அப்படி அதை வைத்துக் கொண்டு அவன் (உயிரோடு) இருந்திருக்கலாமே?


குருநாதர் அகத்தியர் புகழினை அழகாக உரைத்த அடியவர் :- வாசி யோகம் என்பது சாகாக்கலை பயிற்சி. மரணமில்லா பெரு வாழ்வு. அதுக்குத்தான் வாசி யோகம் என்று சொல்றாங்க. 


அடியவர்:- ஊரை விட்டு வேற எங்கேயோ போய் விட்டார். இப்போது நான் எல்லா கோயிலுக்கும் போகும்போது அதனுடய துடிப்பு அதிகமாக இருக்கு. அதனால மனம், நரம்பு எல்லாமே பாதிப்பாக இருக்கிறது. 


குருநாதர்:- அப்பனே (அவன்) கர்மத்தை இவன் பால் விட்டு விட்டுச் சென்றான். அவ்வளவுதான் அப்பனே.


குருநாதர் அகத்தியர் புகழினை அழகாக உரைத்த அடியவர் :-  அவர் இந்த மாதிரி நிறைய சேர்த்து உங்க கிட்ட கொடுத்து விட்டு போயிட்டார்.அதனாலதான் உங்களுக்கு பிரச்சனை.


குருநாதர்:- அப்பனே இவன் விதியில் ( வாசி யோகம் ) அதை கற்றுக்கொள்ளும் தகுதியே இல்லையப்பா. ஆனால் ஏன் கற்றுக்கொண்டான் அப்பனே?  அதுதான் அப்பனே விதியில் இல்லாததை அப்பனே செய்தால் இப்படித்தான் அப்பா.


குருநாதர் அகத்தியர் புகழினை அழகாக உரைத்த அடியவர் :-  விதியில் உங்களுக்கு வாசி யோகம் இல்லைங்க. அந்த மாதிரி ஒரு பயிற்சி செய்து,  யாரோ தவறானவர்கள் பேச்சை கேட்டு நீங்க அந்த வழி போய் இதை நீங்க தெரிஞ்சு, அதனால் உங்களுக்கு இந்த மாதிரி பிரச்சனை. விதியிலே இல்லை என்று குருநாதர் சொல்கின்றார். 


குருநாதர்:- அப்பனே இப்பொழுது மூச்சை எவ் நாசியில் வருகின்றது என்று கேள்?


குருநாதர் அகத்தியர் புகழினை அழகாக உரைத்த அடியவர் :- இப்போ எந்த நாசி வழியாக ஓடுகிறது? மூச்சு வலது நாசி வழியாகவா? இடது நாசி வழியாகவா?  நீங்க வாசி யோக பயிற்சி செய்து இருக்கீங்க என்று சொன்னீங்கல்ல? 


அடியவர்:- ( எனது சுவாசம் தற்போது ) இடது நாசியில் ( ஓடுகின்றது ). 


குருநாதர்:- அப்படியே இடது நாசி செல்லலாமா என்று கூறு.


குருநாதர் அகத்தியர் புகழினை அழகாக உரைத்த அடியவர் :- ( வாசி யோகம் பயின்றவருக்கு ) இடது நாசியில் மூச்சு ஓடலாமா? 


அடியவர்:- வலது நாசியில்தான் ( ஓடவேண்டும் )


குருநாதர் அகத்தியர் புகழினை அழகாக உரைத்த அடியவர் :-  ஏன்? 


அடியவர்:- சூரிய கலை இயங்கும். 


குருநாதர்:- அப்பனே நேற்றே சொல்லிவிட்டேன். வசி யோகத்தை கற்றுக்கொண்டவன் ( எப்பொழுதும் சுவாசத்தை ) வலதிலே ( வலது நாசி/சூரிய கலை ) விட்டு விட்டுக் கொண்டு இருப்பான். அவன் தான் உண்மையானவன் சொல்லிவிட்டேனே. உண்மையானவன் யாரும் இல்லை. நீங்கள்தான் அப்பனே நல்லவன் சேகரித்து கற்றுக் கொள்ள வேண்டும் அப்பனே. 


அடிநவர் 1:- இதுதான் எங்களுக்கு எப்படி என்று தெரியலையே. ( யாரை நம்புவது? விதி என்ன ? ) 


குருநாதர் அகத்தியர் புகழினை அழகாக உரைத்த அடியவர் :-  இவர் என்ன கேட்கின்றார் என்றால் , விதியில் இல்ல என்று சொல்றோம்ல எனக்கு எப்படி விதியில் உள்ளதை தெரிந்து கொள்வது என்று இவர் கேட்கின்றார்.


குருநாதர்:- அதனாலதான் அப்ப னே சிறுபிள்ளையாகவே இருக்கின்ற பொழுது தாய் தந்தையர் இறைவனை வணங்கு. இறைவன் தான் அனைத்து காரணம் என்றெல்லாம் சொல்லுகின்றார்கள் அப்பனே. ஆனால் ( அவ்வாறு இல்லாமல் ) அப்பொழுதே அப்பனே முதலில் தோல்வியில் நுளைந்து விடுகின்றீர்கள் அப்பனே. பேராசைகள் அப்பா மனிதனுக்கு. அவன் அப்படி இருக்கிறானே , இவன் இப்படி இருக்கிறானே என்று பேராசைகள் தான் மனிதனை கெடுத்து கொண்டே இருக்கின்றது. இப்போது புரிகிறதா?


விதிலேயே இல்லை. ஆனால் விதியில் தெரிந்து கொள்வதற்கும் அப்பனே தகுதிகள் வேண்டும். அதனால்தான் புண்ணியங்கள் அப்பனே நல்லதையே செய்யுங்கள், நல்லதையே நினையுங்கள். இன்னும் பல கோடி புத்தகங்கள் இருக்கின்றது அப்பனே.  யாராவது ஒருவன் படித்தானா என்ன அப்பனே, மாணிக்கவாசகன் என்ன முட்டாளா என்ன அப்பனே? ( திருவாசகம் என்ற நூல் அதனை) எழுதி வைத்திருக்கிறானே அதைப் படித்து வரச்சொல். அவன் தனக்கு அனைத்துமே புரியும் என்பேன் அப்பனே. முதலில் அதை படித்து வரச்சொல் அவந்தனை. (பின்பு) சொல்கின்றேன் வாக்குகளாக.


அடியவர் 1:- சாமி. திருவாசகம் படிக்கிறேன். சரியான ஆசிரியர் ஒருத்தன் ஒரு விளக்கம் கொடுக்கான். இன்னொருத்தன் இன்னொரு விளக்கம். நான் எந்த விளக்கத்தை எடுத்துக்கிறது? . நானே குழம்பி போய் இருக்கேன்.


குருநாதர்:- அப்பனே படி. மாணிக்கவாசகப் பெருமானை நினைத்து படி. அவந்தனே உனக்கு அப்பனே பக்தியோடு சிரத்தையோடு படி. அவந்தானே உனக்கு கற்றுக் கொடுப்பான் அப்பா.  


உனக்கு அளவு அதாவது ஒரு 10 நாட்களுக்கு முன்பு இங்கு வருவாய் என்று நினைத்தாயா அப்பனே?. 


(பதில் புரிதல்:- இந்த புரிதலுக்காக இந்த அடியவரை குருநாதர் 10 நாட்களுக்குள் மதுரைக்கு அழைத்து இந்த கேள்விக்கு பதிலை உரைத்தார்கள் என்ற பொருள் கொள்ள வேண்டும்)


அடியவர் 2:- ஐயா போகர் பழனியில் போகரை சந்தித்து ( தரிசித்து ) வெளியில் வந்தேன். அகத்தியர் ஐயா எழுதி போட்ட பாடல்தான் இருந்தது. எனக்கு யாருமே சொல்லலை. ஆனா போய் படித்தேன். 


(அந்த அடியவர் பழனியில் படித்த அகத்தியர் பாடல்:- 


கற்பமென்ன வெகுதூரம் போக வேண்டா!

கன்மலையில் குவடுகளில் அலைய வேண்டா;

சர்ப்பமென்ன நாகமதோர் தலையில்நின்று

சாகாத கால்கண்டு முனை யிலேறி

நிற்பமென்று மனமுறுத்து மனத்தில்நின்று

நிசமான கருநெல்லிச் சாற்றைக் காணு;

சொற்பமென்று விட்டுவிட்டால் அலைந்து போவாய்;

துரியமென்ற பராபரத்திற் சென்று கூடே.


குருநாதர்:- அப்பனே உந்தனுக்கு ஒரு தேர்ச்சி. அதில் தேர்ச்சி ( புலமை வல்லமை )  பெற்றுவிட்டால் உந்தனை சரி செய்து விடுகின்றேன். இதை இப்பொழுது கேட்டானே அவன் இடத்தில் கூறு.


அடியவர் 1:- சாமி விளக்கம் சொல்லுங்கள்.


அடியவர் 2:- ( மீண்டும் அந்த பாடலை பாடி விளக்க ஆரம்பிக்கும் முன்னர் )


குருநாதர்:- அப்பனே ( அடியவர் 2) பொறு மகனே. இவ்விளக்கத்தை நீ கூற வேண்டாம். அவனை ( அடியவர் 1) கூறச்சொல்.


அடியவர் 1:- எனக்கு அது தெரியாது. 


குருநாதர்:- அப்பனே வேலை இல்லாமல் கேள்விகளை கேட்டுக் கொண்டிருக்கின்றான் அவன். அப்பனே இதை நிச்சயம் கூறச்சொல். 


அடியவர் 1:- இல்ல எனக்கு அவங்க சொல்ர பாட்டு அவர் அங்க போய் படித்து…


குருநாதர்:- அப்பனே அனைத்தும் உணர்ந்தவன் என்று சொல்கிறானே.  மீண்டும் அவனிடத்தில் பாடு.


அடியவர் 2:- ( பின்வரும் அதே அகத்தியர்

 ஞானம் பாடலை பாடினார் ) 


கற்பமென்ன வெகுதூரம் போக வேண்டா!

கன்மலையில் குவடுகளில் அலைய வேண்டா;

சர்ப்பமென்ன நாகமதோர் தலையில்நின்று

சாகாத கால்கண்டு முனை யிலேறி

நிற்பமென்று மனமுறுத்து மனத்தில்நின்று

நிசமான கருநெல்லிச் சாற்றைக் காணு;

சொற்பமென்று விட்டுவிட்டால் அலைந்து போவாய்;

துரியமென்ற பராபரத்திற் சென்று கூடே.


அடியவர் 1:- அந்த கற்பம் என்றால் என்ன என்று கேட்டேன்?  வெகு தூரம் நான் போகலை ஐயா. அந்த கற்பம் என்றால் என்னன்னு நான் புரிஞ்சுகிடனும்ல. 


குருநாதர் அகத்தியர் புகழினை அழகாக உரைத்த அடியவர் :-  அதை நீங்கதான் சொல்ல வேண்டும் என்று குருநாதர் கூறுகின்றார். 


அடியவர் 1:- எனக்கு தெரியலை. தெரிந்தால் நானே சொல்லுவேன். 


குருநாதர்:- அப்பனே முதலில் நீ சொல்ல வேண்டும் மகனே. முதலில் இதன் தத்துவத்தை புரிந்து கொண்டு வா. பின்பு விவரிக்கின்றேன் என்று நீ சொல்ல வேண்டியதுதானே அறிவாளியே (அடியவர் 2) . 

அப்பனே இன்னும் கூறு அவனிடத்தில் நீ என்னென்ன எங்கெல்லாம் தரிசனங்கள் பார்த்தாய் என்று. ( அத்துடன் ஒரு பாடலை பாடவும் சொன்னார்கள் ) 


அடியவர் 2:- (தனது அனுபவத்தை பகிர்ந்தார்.) 


குருநாதர்:- அப்பனே உன்னை கேள்வி கேட்டானே விதி, மதி, கதி என்று. அப்பனே விதி இல்லையப்பா. மதி இல்லையப்பா. கதி இல்லையப்பா. யான் பட்ச

சொன்னேன். நீ பாடினாய் அப்பனே. அப்பனே விதி என்ன? கதி என்ன ? மதி என்ன? அப்பனே இவற்றைப் பற்றி தெரிந்து கொள்ள புண்ணியங்கள் அவசியமாகிறது.


அப்பனே கவலைகள் இல்லை. பலமுறை உன்னை பார்த்திட்டேன் அப்பனே. சரி செய்கிறேன். கவலையை விடு. ஒரு பாடலை பாடு.


அடியவர் 2:- ( திருமந்திரம் பாடலை பாடினார் ) 


உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்


வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் 

தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்


கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கே


குருநாதர்:- அப்பனே எனக்குப் பக்கத்தில் இருப்பவனே. இதன் அர்த்தத்தை அனைவருக்கும் எடுத்துரை.


குருநாதர் அகத்தியர் புகழினை அழகாக உரைத்த அடியவர் :- 


உள்ளம் என்பது பெருங்கோவில். ஊனுடம்பு ஆலயம்.  உள்ளம் என்றால் என்ன? மனசு. சரிங்களா. மனசில் என்ன இருக்கு? இறைவன் இருக்கிறார். தெரியுமா? அப்புறம் மனசுதான் இறை 

வன் so இறைவன் நாம உள்ளுக்குள்ளே வச்சுட்டு வெளியே தேட வேண்டாம். அதுநான் உள்ளமே பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம். 


வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்

வாய்தான் ஆலய வாசல். 


கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கே

நமது ஐந்து புலன்கள் அதை தூய்மையாக வைத்துக்கொண்டால் அதுவே ஆலயத்தின் விளக்கு ஆகும். 


( அடியவர் கூறிய விளக்கத்தின் சாரம்:-


உள்ளம் பெருங்கோயில் = உள்ளம் ஒரு பெரிய கோவில்


 ஊன் உடம்பு ஆலயம் = இந்த மாமிச உடம்பு ஒரு ஆலயம்


வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல் = வாய் தான் அந்த கோபுரத்தின் வாசல்


தெள்ளத் தெளிந்தார்க்குச் = சந்தேகம் இல்லாமல் தெளிந்த மனம் உடையவர்களுக்கு


சீவன் சிவலிங்கம் = சீவனே சிவன். சிவன் வேறு எங்கும் இல்லை


கள்ளப் புலன் ஐந்தும் = கள்ளமான புலன்கள் ஐந்தும்


காளா மணிவிளக்கு = இருட்டைப் போக்கும் விளக்கு )


அடியவர் 1:- ஈசன் எங்கும் இல்லை நமக்குள் தான் இருக்கின்றார். 


குருநாதர்:- அப்பனே இப்பொழுது புரிந்து கொண்டீர்களா? பின் ஈசன் அனைத்தும் செய்வார் என்று அப்பனே. எப்படி அப்பா செய்ய மாட்டான் என்பேன் அப்பனே. ஆனால் நீங்கள் தகுதியானவனாக இருங்கள் அப்பனே. உன் மனதிலேயே குடி கொள்வான் அப்பா. அனைத்தும் செய்வான் அப்பா.  அப்பனே திரியத்தேவை  இல்லையப்பா.


ஆனால் திரிந்தாலும்  கூட சில சக்திகள் அப்பனே எதற்காக என்றெல்லாம் வருங்காலத்தில் எடுத்துரைக்கத்தான் போகிறேன். அப்பனே விதி , மதி , கதி எது என்று அறிய அப்பனே இவையெல்லாம் எப்படி செயல்படுகிறது என்பதை எல்லாம் அப்பனே மனதில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் எப்படி என்றும் புரியாமல் இருந்தாலும் அவை தன் அறிவியல் வழியாக உரைத்தால்தான் அப்பனே தெரிய எவை என்று புரியும் என்பேன் அப்பனே. அதனால் இன்னொரு பாடல் நீ பாட வேண்டும்.


அடியவர் 2:- ( சித்தர் கொங்கணர் பாடலான வாலை கும்மியில் இருந்து பின் வரும் பாடலை பாடினார் ) 


ஊத்தைச் சடலமென் றெண்ணாதே - இது

உப்பிட்ட பண்டமென் றெண்ணாதே

பார்த்த பேருக்கு ஊத்தையில்லை - இதைப்

பார்த்துக்கோ உன்றன் உடம்பினுள்ளே 

உச்சிக்கு நேராயுண் ணாவுக்கு மேல்நிதம்

வைத்த விளக்கும் எரியுதடிஅச்சுள்ள விளக்கு வாலையடி அவி

யாம லெரியுது வாலைப்பெண்ணே!


குருநாதர்:- அப்பனே அர்த்தத்தை நீயே கூறு?


அடியவர் 2:- நமது உச்சிக்கு நேராக, நமது உள் நாவிற்கு மேலே , அச்சுள்ள விளக்கு அவியாமல் எரிகிறது வாலை பெண்ணே. அந்த ஈசன் நம் உள் இருக்கும் இடமே அதுதான். வேற எங்கேயும் தேட வேண்டாம். 

( அடியவர்கள் புரிதலுக்காக:- இந்த இடத்தை pineal gland என்று google images மூலம் தேடி உணர்ந்து கொள்ளவும்

அந்த உச்சி அங்கதான் இருக்கிறது. அதை பிடித்துவிட்டால் எல்லாம் முடிந்தது. 


குருநாதர்:- அப்பனே இன்னும் ஒரு பாடலைப் பாடு.


அடியவர் 2:- 

தென்னாடுடைய சிவனே போற்றி!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!


குருநாதர்:- அப்பனே கடைசியில் ( ஈசனிடம் ) வந்துவிட்டாய் அல்லவா. அப்பனே அனைத்திற்கும் ஒருவனே அப்பனே. இது தான் உண்மை என்பேன் அப்பனே. ஆனால் இப்போது சொன்னால் அது மனிதன் ஏற்க மாட்டான் அப்பா. 


அப்பனே விதி எங்கு எழுதியிருக்கின்றது?.

அதை எப்படி அழிக்கலாம்? மதி என்பது என்ன? இன்னும் இன்னும் விளக்கங்கள் மனிதனுக்கு யான் கற்பிக்கத்தான் போகின்றேன் அப்பனே. அப்பொழுதுதான் தெளிவு பெறுவார்களே தவிர இல்லையென்றால் தெரிவுகளே…அப்பனே எங்கள் நாமத்தைக் கொண்டு இங்கு ஒருவன் வந்திருக்கிறேன் தான் எழுந்திருக்கச்சொல்.


அடியவர் :- ( சித்தர்கள் நாமம் கொண்ட அடியவர் எழுந்து நின்றார்) 


குருநாதர்:- அப்பனே உன்னை பார்த்து ஒரு கேள்வியை கேட்கிறேன்.  அலைந்தாய் திரிந்தாய்  என்ன லாபம் அனைவருக்கும் கூறு.? 



(மதுரையில் அகத்திய பிரம்ம ரிஷி அடியவர் இல்லத்தில் உரைத்த இந்த வாக்கு பின் வரும் பதிவில் தொடரும் ………)

https://siththarkalatchi.blogspot.com/2023/11/238-5-9-2023-34.html?m=0


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!

No comments:

Post a Comment