“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Saturday, November 25, 2023

சித்தர்கள் ஆட்சி - 239 : அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 5-9-2023 உரைத்த வாக்கு - பகுதி 35


பகுதி - 35


“அனைத்தும் இறைவா நீ”


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரை அடியவர் ஒருவர் இல்லத்தில் இரண்டாம் நாள் உரைத்த வாக்கு - 05.09.2023 ( மதுரை வாக்கு - பகுதி 35 )


இந்த வாக்கின் முந்தைய பகுதி கீழே உள்ள பதிவில் படிக்கவும்


https://siththarkalatchi.blogspot.com/2023/11/238-5-9-2023-34.html?m=0


( கருணைக்கடல் அகத்திய பிரம்ம ரிஷி இதுவரை பொது கேள்வி பதில் உரைத்தார்கள். இப்போது நாம் இந்த மதுரை வாக்கின் இறுதி பகுதிக்கு வந்து விட்டோம். இதன் பிறகு அங்கு இருந்த அனைத்து அடியவர்களுக்கும் பல நபர்களுக்கு விதியினை எடுத்து உரைத்து அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு அழகாக, அருமையாக உரைத்த பல வாக்குகள் இங்கு நீக்கப்பட்டது. இந்த வாக்குகள் மிக வேகமாக அனைவருக்கும் படிக்கப்பட்டது. இப்போது அதில் உள்ள சில பொது நன்மை அளிக்கும் வாக்குகளை பார்ப்போம்.)


அடியவர்:- ( அம்மை ஒருவருக்கு வாக்கு கேட்ட பொது ) 


குருநாதர்:- அம்மையே ஏதாவது ஒரு பாடலை பாட வேண்டும்.


அடியவர்:- ( அம்மை அவர் கந்த வடிவேலவன் அருளால் அருணகிரிநாதர் அருளிய 

 திருப்புகழில் உள்ள முத்தைத்திரு என்ற பாடலை மிக அருமையாக பாட ஆரம்பித்தார். அந்த மகிமை புகழ் பெற்ற மகத்தான பாடலை அடியவர்களுக்கு பகிர்கின்றோம். இந்தப்பாடல் முருகப்பெருமான் அருணகிரிநாதருக்கு அடி எடுத்துக் கொடுக்கப் பாடிய பாடல் இது.)


முத்தைத்தரு பத்தித் திருநகை

அத்திக்கிறை சத்திச் சரவண

முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்


முக்கட்பர மற்குச் சுருதியின்

முற்பட்டது கற்பித் திருவரும்

முப்பத்துமு வர்க்கத் தமரரும் அடிபேணப்


பத்துத்தலை தத்தக் கணைதொடு

ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு

பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப்


பத்தற்கிர தத்தைக் கடவிய

பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்

பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே


தித்தித்தெய ஒத்தப் பரிபுர

நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி

திக்கொட்கந டிக்கக் கழுகொடு கழுதாடத்


திக்குப்பரி அட்டப் பயிரவர்

தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு

சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக எனவோதக்


கொத்துப்பறை கொட்டக் களமிசை

குக்குக்குகு குக்குக் குகுகுகு

குத்திப்புதை புக்குப் பிடியென முதுகூகை


கொட்புற்றெழ நட்பற் றவுணரை

வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி

குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே.


( கருணைக்கடல் அகத்திய பிரம்ம ரிஷி பாடல் முடியும் வரை கேட்டார்கள். இந்த அம்மை செய்த பாக்கியம்) 


குருநாதர்:- அம்மையே இவை தன் யான் சொல்லுகின்றேன் அம்மையே. யாருக்கும் சில அறிவுரைகளே இல்லை அம்மா.  அனுதினமும் அம்மையே அதாவது இல்லத்திலேயே தீபம் ஏற்றி ஒரு மண்டலம் வரை ( 48 நாட்கள் இந்த பாடலை ) இதை உரைத்து அனைவரையும் பாடச்சொல்லிட்டு மீண்டும் வாக்குகள் கேட்கச்சொல். அதன் உள்ளே சில விசயங்கள். அனைவருமே கர்மாவில் இருக்கின்றார்கள் அம்மையே. அதனை (யான்) மாற்றி அமைக்கின்றேன் என்று நீ கூற வேண்டும். எழுந்து நில்.


அடியவர்:- ( இந்த அம்மை அங்கு உள்ள அடியவர்களுடம் பின் வருமாறு உரைத்தார்கள்)  48 நாளைக்கு உங்க வீட்டில் தினமும்  தீபம் ஏற்றி, இந்த முத்தைத்திரு என்ற பாடலை பாடுங்கள். 48 நாள் முடிந்த பின் வாக்குகள் குருநாதர் ஐயாவிடம் கேளுங்கள். 


குருநாதர்:- அம்மையே நீயே பாட வேண்டும் இல்லத்தில் கூட. 


அடியவர் 2:- ( மற்றொரு அம்மை வாக்கில் வந்த பொது வாக்கு ) 


குருநாதர்:- அம்மையே யான் நிச்சயம் என்னை நம்பி வந்து கூட யான் விதியை மாற்றுகின்றேன் அம்மையே. ஆனாரும் அம்மையே விதியில் உள்ளதை யாரும் சொல்ல மாட்டார்கள் தாயே. பரிகாரம் தான் சொல்லுவார்கள். அம்மையே யான் சொல்லிவிட்டேன்.  மாற்றி அமைத்து விடுகின்றேன் அம்மையே. 


அடியவர் 3:- தீய சக்தியில் இருந்து எப்படி காத்துக்கொள்வது?  


குருநாதர்:- அப்பனே இதற்கு அதிகாலயிலே பல பல வழிகளில் உண்மை உண்டு. அதனால் சுதர்சன மந்திரத்தை செப்பிக்கொண்டே இரு.


அடியவர் 4:- ( பல கேள்வி பதில்கள் அதில் ஒன்று ) பொருளாதாரம் ரொம்ப மொசமாக இருக்கின்றது ஐயா. 


குருநாதர்:- அப்பனே உன் அருகிலேயே யான் இருக்கின்றேன். தருகிறேன். பொருத்திருக. 


அடியவர் 4:- kidney Dialysis (சிறுநீர் கலவை பிரிப்பு பிரச்சினை) குறித்த கேள்வி கேட்டார். 


குருநாதர்:- அப்பனே ஒரு விளக்கத்தை கூறி விளக்கு? 


குருநாதர் அகத்தியர் புகழினை அழகாக உரைத்த அடியவர் :- 


( ஓர் விளக்கம் மற்றும் சித்த வைத்தியம் தொடர்பாக விளக்கம் எடுத்து உரைத்தார். ரத்தத்தை சுத்தப்படுத்த காலையில் அருகம்புல், துளசி, வில்வம் , வேப்ப இலை. தினமும் திரிபலா , திரிகடுகம் எடுக்க வேண்டும் என்று இந்த அம்மைக்கு உரைத்தார்.)  


அடியவர் 5:- ( இந்த அடியவர் கடைசி பிறப்பில் உள்ளார். ஆனால் சில பிரச்சினைகள். இதற்கு குருநாதர் உரைத்த வாக்கு - இதில் கடைசி காலத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்ற சூட்சுமம் அடங்கிய மறுபிறவியை தடுக்கும் வாக்கு) 


குருநாதர்:- இவை எல்லாம் விட்டுவிடு அப்பனே. ஈசன் ஆலயத்திற்கு சென்று அமைதியாக தியானங்கள் செய்திட்டு வா. போதுமானது அப்பனே. கடைசி காலத்தில் சரியாக கழித்து, அப்பனே மோட்சத்தை பெற்றுக்கொள் அப்பனே. அவை இவை என்று நினைத்துக்கொண்டிருந்தால் அப்பனே அப்படியே மறுபிறவி எடுத்து விடுவாய். சொல்லிவிட்டேன் அப்பனே. பின் சரியாக பயன்படுத்திக்கொள் அப்பனே. 



(மதுரையில் அகத்திய பிரம்ம ரிஷி அடியவர் இல்லத்தில் உரைத்த இந்த வாக்கு பின் வரும் பதிவில் தொடரும் ………)

https://siththarkalatchi.blogspot.com/2023/11/240-5-9-2023-36.html?m=0


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!




 

No comments:

Post a Comment