“அனைத்தும் இறைவா நீ”
அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - அடியவர் ஒருவர் இல்லத்தில் உரைத்த வாக்கு - 04.09.2023 ( பகுதி 21 )
இந்த வாக்கின் முந்தைய பகுதி கீழே உள்ள பதிவில் படிக்கவும்
https://siththarkalatchi.blogspot.com/2023/11/223-4-9-2023-20.html?m=0
அடியவர் பாண்டியம்மாள்:- கொரோனாவிலே ( Covid period ) அரிசி கொண்டுவந்து என்ன சோறு போட சொன்னாங்க. எல்லாத்துக்கும் எட்ட நின்னு ( சோறு ) போடனும்னு சொன்னாங்க. அம்மா பசின்னு வர்ரவங்களுக்கு நாங்க குடுத்தது நீங்க சாப்பாடு போடுங்கமா அப்டினுட்டு வீட்டு வாச, வேலை வெட்டி இல்லாதவர்களுக்கு நின்னு இப்டி எட்டத்துல ( தள்ளி நின்று சோறு ) போட சொன்னாங்க. எனக்கு என்ன ஆகப்போகுது ? (நாம்) இறப்பதும் பிறப்பதும் ஒரு நாள் தான். எப்போ (இறைவன்) கூப்பிடுரானோ அப்போ போயித்தான். புள்ள குட்டி இருக்குது , தங்க இருக்கு எல்லாரும் இருக்குதுன்னு பிடிக்க வந்தா வந்தா எமன் விட்டுட்டு போறானா ? கிடையாது. நனக்கிறது தான் நடக்கும். அதனால நான் பாட்டுக்கு சோற போட்டேன். சாமி கொண்டாந்து அரிசி குடுத்தாங்க. சாமி அகத்தியர் சாப்டாரு.
நாடி அருளாளர்:- இப்ப கூட அகத்தியர்தான் உங்கள வரவைத்தார்கள்.
அகத்தியர்தான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிஞ்சு கிட்டார் (கொடுத்தார்).
அடியவர்:- ( பாண்டியம்மாள் அவர்களை மதுரைக்கு குருநாதருன் நாடி வாக்கு கேட்க அழைத்து வந்தார்கள் )
அடியவர் பாண்டியம்மாள்:- (அரிசி) உலை கூட வச்சேன் சாமி. உல இன்னைக்கு காயில்லையே, அரிசியில்லையே இன்னைக்கு உல வச்சுட்டேனே அப்படின்னு கேட்டா எங்க வீட்டுகார் அலுவலகம் எல்லாம் உக்காந்து இருப்பாங்க. ஒருத்தன் கொண்டாருவேன் நீ உக்காந்து இருக்குறயா அப்படீன்னு..
எப்படியாச்சும் ஒருத்தரு 2 பிடி இந்தாங்கமா இந்த காய்கறி கஞ்சியாச்சி ஊத்தி ரெண்டு ஊறுகாவாச்சும் குடுத்துறுவேன். கிரை தளயகூட பிடுங்கி 15 வருசம் முன்னாடி சாப்பாடு போட்டு இருக்கேன்.
இந்த முடியாதவக , மென்டலா இருக்காக, லூசா இருக்காங்க, வானீர் (எச்சில்) வடிச்சிகிட்டு திரியுராக அப்படின்னா அவனுக்குலாம் பாக்ககூடாது. ( எந்த பேதம் பார்க்காமல் அன்னம் இடல் வேண்டும் ). ( அவர்கள் ) முன்னால கலெட்டரா இருத்திருப்பான், தாசில்தாரா இருத்திருப்பான், இஞ்சினியா இருந்திருப்பான் அவங்க இப்ப உள்ள வங்க இருப்பாங்க என்ன சொல்றீங்க? ( முன்பு மதிப்பு மிக்கவரகள் வாழ்க்கை சூழலில் இப்படி கர்ம வினை வசத்தால் தலை கீழாக இருக்க வாய்ப்பு உண்டு - என்னே ஒரு இறை ஞானம் இந்த அம்மைக்கு)
அந்த இது வந்து இப்டி வாங்குறாகளே, எச்சி வடியுது, இப்படி ஒரு குஷ்ட ரோகி வாராங்களே அப்படி நினைக்க கூடாது. தட்ட கழுவிதான் சாப்பாடு போடுவோம். நான் கூட கிடையாது கடவுள் குடுப்பாரு கடவுள் சாப்பிடுவாரு என்னுகிட்ட எதுவும் கிடையாது. ( உயர் ஞானங்கள் பெற்ற அம்மை இவர்கள் எனபதை நிறுபிக்கும் உயர் சித்த ஞான வாரத்தைகள் )
அப்டின்னு என்னால முடிஞ்சத செய்றேன்.
( ஆசிகள் என்று வாக்கு உரைத்து வாக்கை நிறைவு செய்ந குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி , இந்த அம்மை பேசி முடித்த உடன் மறுபடியும் மீண்டும் ஆர்வமாக வாக்கு தர ஆரம்பித்தார்கள் என்றால் பாண்டியம்மாள் அவர்களின் உயர் சேவை புண்ணிய பலம் என்ன என்பதை உங்கள் ஆன்மா மூலம் உணர்ந்து கொள்வீர்களாக)
குருநாதர்:- அப்பனே இப்போது கேட்கிறீர்கள் கடைசியில் அதாவது என்னிடத்தில் இல்லை ஏதும் இல்லை என்று அதை அனைவருமே அதை பயன்படுத்தினாலே வெற்றி உண்டு. என்னிடத்தில் ஏதுமில்லை அப்பா. இறைவா அனைத்தும் கொடு என்றால் அக் கைகளுக்கு இறைவனே கொடுப்பான் அப்பனே.
( அகத்திய பிரம்ம ரிஷி 3/4/2022 அன்று திருவையாற்றில் உரைத்த வாக்கு கீழே உங்கள் புரிதலுக்காக:-
“என்னால் ஒன்றும் முடியாது இறைவா!!!! நீ பார்த்துக் கொள்... இதுதான் இறைவனுக்கு பிடித்த விஷயம் இறைவனுக்கு பிடித்த விஷயம் தெரிந்து கொள்ளுங்கள் மக்களே!!” )
அதனால் தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே வாழ்க்கை தெரியாமல் எவையென்று ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என்பேன் அப்பனே. அப்படி ஓடிக் கொண்டிருந்தால் இன்னும் ஓடிக்கொண்டே ஓடிக்கொண்டே அப்பனே கடைசியில் அப்பனே ஓடிக்கொண்டு அது மறு பிறவியாகவம் கூட அப்பொழுது பின் ஓடிக்கொண்டே தான் இருக்க வேண்டும் அப்பனே. ஒரு தெளிவு கூட பிறக்காது அப்பனே. அதனால் தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே அதனால் தெரிந்து தெரிந்து பல வாக்குகள் செப்புகின்றேன் அப்பனே,
அது சரியான முறையில் பயன்படுத்தினால்தான் மட்டுமே உங்கள் விதியைக் கூட யான் மாற்ற முடியும் என்பேன் அப்பனே. சொல்லி விட்டேன் அப்பனே விதியை மாற்றி விடலாம் என்று. ஆனாலும் அப்பனே அதை வைத்துக் கொண்டு நீங்கள் சரியான வழியில் பயன்படுத்த மாட்டீர்கள் என்பேன் அப்பனே. மீண்டும் குற்றங்கள் செய்து விடுவீர்கள். அதனால் தான் அப்பனே பக்குவங்கள் படுத்தி படுத்தி அப்பனே உங்களுக்கு ஒவ்வொன்றாக யான் தருவேன் அப்பனே. அதனால் அகத்தியனிடம் எதை யும் கேட்டு விடாதீர்கள் அப்பனே பின் ஆராய்ந்து ஆராய்ந்து அனைத்தும் செய்வான் அப்பனே. பின் எடுத்துக்காட்டாக இவ்வம்மாவை ( அன்ன சேவை அடியவர் பாண்டியம்மாள் ) வைத்துக் கொள்.
அதனால் எத்தனை எத்தனை மனிதர்கள் எவை என்று புரியாமல் கூட, இன்னும் வாக்குகள் பலமாக எடுத்துரைப்பேன். இன்னும் யான் பலகையில் கூட பல பல வழிகளில் கூட பின் நல்லவிதமாகவே காட்சிகளும் அளித்துள்ளேன். அதனால் முதியவன் வேடத்திலும், இளைஞன் வேடத்திலும், குழந்தை ரூபத்திலும் யான் வந்து கொண்டு நன்மைகள்தான் செய்து கொண்டிருக்கிறேன் அனைவருக்குமே. அதனால் எவையும், எவைபற்றியும் கவலைப் படாதீர்கள். எவ் நேரத்தில் எதை செய்ய வேண்டும் என்று எண்ணி நிச்சயம் யானே செய்வேன். வருத்தப்பட தேவையில்லை. கேளுங்கள்.
( புண்ணியப்பிறவி பாண்டியம்மாள் தொடர்பாக அருள்வாக்கு அளித்த மகிழ்வில், மறுபடியும் கேள்வி பதிலுக்கு உத்தரவு இட்டார்கள் )
( ஆசிகள் சொல்லி முடித்த பின்னர் கேள்வி/பதில் மீண்டும் ஆரம்பமானது. குருநாதர் சில தனிப்பட்ட வாக்குகள் கொடுத்து அருளினார். )
(மதுரையில் அகத்திய பிரம்ம ரிஷி அடியவர் இல்லத்தில் உரைத்த இந்த வாக்கு பின் வரும் பதிவில் தொடரும் ………)
https://siththarkalatchi.blogspot.com/2023/11/226-5-9-2023-22.html?m=0
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!
No comments:
Post a Comment