“அனைத்தும் இறைவா நீ”
அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரை அடியவர் ஒருவர் இல்லத்தில் இரண்டாம் நாள் உரைத்த வாக்கு - 05.09.2023 ( மதுரை வாக்கு - பகுதி 24 )
இந்த வாக்கின் முந்தைய பகுதி கீழே உள்ள பதிவில் படிக்கவும்
https://siththarkalatchi.blogspot.com/2023/11/227-5-9-2023-23.html?m=0
அடியவர் 1:- சாமி மூலன் எப்படி முட்டாள் ஆவார்? ( ஆசை அறுமின் ) அதில் தான் சந்தேகம். ஈசனிடம் இருக்கும் ஆசையைக்கூட அறுக்கனுமா?
அடியவர் 2:- ஆம்
அடியவர் 3:- அருணகிரிநாதர் மட்டும் முருகனோடு இருக்கும் போது முருகா, முருகா என்று சொன்னாலும் முருகன் நேரா வந்து கேட்டாலும் அவரையும் அறுத்திட்டாரு. பூலோகத்துல அவர் ஒருத்தர்தான் அப்படி நடந்து இருக்கின்றார். வேறு யாரும் அப்டி நடக்கல. அது மாதிரி நாங்களும்….
குருநாதர்:- அப்பனே இதை அதாவது கதையை பற்றிக்கூட யான் எடுத்து உரைத்து விட்டேன் அப்பனே (திருச்)செந்தூரிலே. அதே படித்தாயா முதலில்?
அடியவர்:- படித்தேன் சாமி என்னுடைய பிறப்பு என்னுடைய இறப்பும் தெரியாது. ஆனால் இந்த இடைப்பட்ட காலம் வந்து நான் வந்து ஆசைபடுகின்றேன். போன ஜென்ம கர்மாவில் விழுந்து அடிபடுகின்றேன். அது வந்து நான் நிச்சயக்கப்பட்டவனா இல்ல சித்தர்களால் …
குருநாதர்:- அப்பனே யான் சொல்லிவிட்டேன் அப்பனே நேற்றிலிருந்து இதைத்தான் சொல்லி இருக்கின்றேன் அப்பனே. ஏற்கனவே அனைத்தும் இவ்வாறு நடக்க வேண்டும், அவ்வாறு நடக்க வேண்டும் என்றெல்லாம் எழுதி வைத்துத்தான் அழகாகவே இங்கு அனுப்புகிறான் (இறைவன்) அப்பனே. அவ் எழுதி வைத்ததைவிட மனிதன் பின் மீண்டும் ஆசைகளோ நோக்கி செல்கின்றான். அப்போது தான் அப்பனே கர்மா வந்தடைகின்றது அப்பனே.
அடியவர்:- (விதியை) மீறுவதற்க்கு (என்னால்) முடியாது இல்ல. நான் இப்ப உங்கள சந்திக்க வருவது நிச்சயக்கப்பட்டது. இந்த நான் கேள்வி கேக்குறது நிச்சயிக்கப்பட்டது. இதை மீறி நான் என்ன செயல்பட முடியும்?
குருநாதர்:- அப்பனே செயல்பட முடியும் என்பேன் அப்பனே. அப்பனே ஆனாலும் உன் நண்பன் அப்பனே இதை பொதுவாகவே சொல்கிறேன் அப்பனே. அப்பனே உலகம் மாயை பின் நம் தான் பின் இன்பமாக இருக்கலாம் வா (என்னுடன்) இன்பத்திற்க்கான பின் அனைத்து யான் வழிகளையும் சொல்கிறேன் என்றால் அப்பனே நீ சென்று விடுவாயா இல்லை யான் வருவேன் என்று சொல்வாயா? வர மாட்டேன் என்று சொல்வாயா?
அடியவர் 1:- இருங்க யாரு பதில் சொல்லுங்க இதுக்கு.
அடியவர் 2:- இல்ல இதுக்கு பதில் சொல்லுங்க.
கேள்வி கேட்ட அடியவர்:- தெரியல. நான் அதான் சொல்ல வர்ரேன்.அதுவும் (விதி) அதுல எழுதி இருந்தாதானே நான் சொல்ல முடியும் என்ன?
குருநாதர்:- அப்பனே விதியில் இல்லை அப்பா.
கேள்வி கேட்ட அடியவர்:- சாமி இல்ல தீர்மானம் எடுக்குறதுல் இறைவன் தலையிட்டுதான் இங்க வந்து இருக்கேன்.
இப்ப ஒரு செயல் பண்ணுங்க….
அடியவர் 1 :- நான் சொன்ன வந்தது நீங்க…
கேள்வி கேட்ட அடியவர்:- இல்ல கேளுங்க நீங்க சொல்ல வந்தது தெரியுது தெரியுது.
அடியவர் 2:- எல்லாமே தெரியுது இப்டி சொல்றீங்க…
கேள்வி கேட்ட அடியவர்:- இல்ல அதாவது ஒரு தீர்மான ம் நடக்குது.
அடியவர் :- ஆமாம்
கேள்வி கேட்ட அடியவர்:- நடக்குது. (விதி) அங்க நிச்சயிக்கப்பட்டுத்தான் (இங்க) நடக்குது.
நாடி அருளாளர்:- அது இல்ல. இதுக்கு கேள்வி கேகட்கின்றார் குருநாதர். இப்போ வந்து ஒரு நண்பர் கேட்கின்றார் வந்து ஓகேங்களா. நீங்க போவீங்களா போக மாட்டீங்களா என்று கேட்கின்றார்.
கேள்வி கேட்ட அடியவர்:- நான் போக மாட்டேன்.
குருநாதர்:- அப்பனே இதனால் அப்பனே தப்பித்துக்கொண்டாய். ஆனால் செல்வாய் என்றால் அப்பனே கர்மா ஆனாலும் நீ சொன்னபடியே அவன் தனக்கும் பின் விதி இருந்தால்தான் உன்னிடத்தில் கேட்கவும் முடிந்தது. ஆனால் இப்படியே இருந்திருந்தால் அப்பனே கர்மா சேராது. ஆனால் சென்றிருந்தால் (சேரந்துவிடும்). அப்பனே புரிகின்றதா இதனையிலும் கூட.
கேள்வி கேட்ட அடியவர்:- புரியுது
மற்றொரு அடியவர்:- இந்த எண்ணம் எதனால் வருகின்றது?. போகனும் இல்ல போகக்கூடாது என்று?
குருநாதர்:- அப்பனே அனைத்தும் சொல்லிவிட்டேன் நேற்றைய பொழுதில் என்ன சொன்னேன் அப்பனே?. (மூளையில் உள்ள ஒரு ) செல்லில் அனைத்து பதிவுகளும் கூட இருக்கின்றது. அதனால் அனைவருமே தவறான பாதையில் செல்வதும் உத்தம பாதையில் செல்வதும் அப்பனே பதிவுகள் அப்பா அனைத்தும் கூட புரிகின்றதா?
( அடியவர்கள் இந்த மூளையில் உள்ள செல் ( karma memory card in our brain ) இதன் பதிவு எப்படி ஆட்டுவிக்கின்றதை என்ற ரகசியங்களை இதற்க்கு முந்தைய பதிவுகளில் அவசியம் படிக்கவும்)
கேள்வி கேட்ட அடியவர்:- அது இல்ல சாமி. இப்ப பொது தளம் ( பொது இடம் ) இருக்கு, அதில் நான் யாரோ அவர் யாரோ தெரியாது. எனக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
பப்ளிக்குல ( பொது இடத்தில் ) நான் வந்து அவர அடிச்சு அவரு மரணம் மாதிரி ஆயிடுச்சு. அப்ப அது விதியா? இல்ல என்னோட….
குருநாதர்:- அப்பனே அவன்தனை நீயே ஏன் அடிக்க வேண்டும் அப்பனே?. இதனையும் நேற்றைய பொழுது சொல்லிவிட்டேன். முன் பிறவியில் உன்னை அடித்திருக்கின்றான் அப்பனே. அவ்வளவுதான். இப்பிறவியில் அவனை அடித்து கருமா சரி செய்து கொள்கின்றாய்.
அவ்வளவுதான் அப்பனே.
நாடி அருளாளர்:- ஐயா நீங்க கேக்குற பதில் எல்லாம் நிறைய நேத்தே சொல்லிட்டாங்க.
அடியவர்:- ஐயா போன பிறவியில் அவரை அடிச்சார் என்பது இந்த பிறவியில நம்மை அடிக்க தூண்டுது என்றால், அதை தடுப்பதற்க்கு நமக்கு விதி இருக்கா இல்ல அய்யாவோட ஆசிர்வாதம் வேணுமா?
குருநாதர்:- அப்பனே இதுதான் அப்பனே சூட்சுமம். அப்பனே இப்பொழுது புரிகின்றதா? அப்பனே. அங்கும் கூட பின் ஐயோ பாவம் செல்லட்டும் என்று விட்டு விட்டால் அங்கு தான் அப்பனே புண்ணியம் அப்பனே அதிகரிக்கின்றது. எனவே அப்பணி அதனால் புண்ணியங்கள் அதிகரிக்க அதிகரிக்க இறைவன் உன் பக்கத்திலேயே வந்து அப்பனே இப்பொழுது கேட்டானே அதனைக்கு மீறிய செயல் எல்லாம் இறைவனே செய்து வைப்பான். விதியில் இல்லாத கூட கொடுத்து விடுவேன் என்பேன் அப்பனே. அதனால் தான் அப்பனே மனதை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். அப்பனே மாமனிதனாக வாழ வேண்டும். அப்பனே புரிகின்றதா?
கேள்வி கேட்ட அடியவர்:- சாமி புண்ணியங்கள் தேட வேண்டும். புண்ணியங்கள் எந்த வகையில் தேட வேண்டும்?.
குருநாதர்:- அப்பனே இப்பொழுது கேட்டாயே அப்படியே விதியில் கூட அவனைப் பின் அடிக்கலாம் என்று கையை ஓங்கிவிட்டாய் அல்லவா? பழிக்குப்பழி அப்பனே அங்கே ( அவனை அடிக்காமல் ) நிறுத்தி விட்டால் அப்பனே இதுவே ஒரு புண்ணியம் தான் அப்பா. அப்பனே யார் மனம் முதலில் புண்படக்கூடாது என்பேன் அப்பனே. முதலிலே கோபம் வரக்கூடாது என்பேன் அப்பனே. கோபம் வந்து விட்டாலே புண்ணியங்கள் அழிந்து விடும் என்பேன் அப்பனே.
அடியவர்:- கோபம் வராமல் கட்டுப்படுத்துவது எப்படி?
குருநாதர்:- அப்பனே இதன் விளக்கத்தையும் யான் சொல்லிவிட்டேன். முன்னோர்கள் தியான பயிற்சி செய், மூச்சு பயிற்சி அப்பனே இன்னும் இன்னும் எதை எதையோ கற்றுக்கொண்டு (வாழ்ந்தார்கள்) அதையெல்லாம் செய்வதே இல்லை அப்பனே. எப்படி அப்பா? அதனால் தன் மீது குறையை வைத்துக் கொண்டு இவை எல்லாம் நீ படித்தாயா என்ன அப்பனே! ஆனால் இந்த அளவு கூட கலியுகத்தில் எதையோ படிக்கிறார்கள்? ஆனால் நல்லதை படிக்க முடிவதில்லையே அப்பனே!!!!!. அப்பனே புரிகிறதா?
கேள்வி கேட்ட அடியவர்:- ஜீவாத்மா பேசுது. ஜீவாத்மா எங்க எல்லாரையும் வழி நடத்துது. ஒவ்வொரு மனிதனும் ஒரு வித்தியாசத்துல இருக்குறாங்க. அந்த வித்தியாசத்தை உண்டுபன்றதே இறைவன் தான். அதை காப்பது சித்தர்கள். நீங்க சொல்லி அத மாற்றக்கூடாதா? .
குருநாதர்:- அப்பனே மாற்றிக் கொண்டுதான் இருக்கின்றான். மாற்றக்கூடாது என்று அறிய அப்பனே அனைவரையும் கூட மாற்றிக் கொண்டேதான் இருக்கின்றேன். அதனால்தான் அப்பனே இதையும் நேற்றைய பொழுது சொல்லி விட்டடேன். தவறான பாதையில் சென்று சென்று உலகத்தை அழித்துக் கொண்டிருக்கிறான் மனிதன் என்பேன் அப்பனே. இதுவும் விதியின் விளையாட்டு என்று எது என்று குறிப்பிடாதே அப்பனை உன் விதியில் மற்ற உயிர்களை கொல்லாதே என்று இறைவன் எழுதி வைத்திருக்கிறான். ( இந்த விதி பொது என்பதை உணர்க). ஆனால் மற்ற உயிர்களை கொன்று குவித்து பின் உட்கொண்டு இருக்கின்றீர்களே அப்பனே, யாங்களே சில கஷ்டங்கள் கொடுத்துத்தான் மாற்ற வைக்க முடியும் என்பேன் அப்பனே. இங்கு விதியில் இல்லாத கூட எப்படி செயல்படுத்த? மனிதனால் அப்பனே. அதனால்தான் அப்பனே மனிதனை விட்டு விட்டால் அப்பனே யான்தான் அனைத்தும் எந்தனுக்கு தெரியும். இறைவனா இறைவன் எல்றெல்லாம் இறைவனேயே சாடுவான் ( திட்டுவான் ). அதனால்தான் இறைவனே துன்பத்தை வைக்கின்றான் என்பதைக்கூட அனைத்தும் சொல்லிவிட்டேன் நேற்றைய பொழுதுலே.
அடியவர்:- அதாவது கடந்த முறையில நம்ம எல்லா பயிற்சியும் எல்லாத்தையும் கத்துக்குட்டோம். திருமணத்திற்கு அப்புறம் அதை தொடங்க ( தொடர ) முடியாத சூழ்நிலை என்ன செய்ய வேண்டும்? இது தொடர்வதற்கு ஆசிர்வாதம்…
குருநாதர்:- அப்பனே இதுதான் மாயை அப்பா. இறைவன் அனைத்து ஆசீர்வாதங்கள் கொடுத்துதான் அனுப்புகின்றான், ஆனால் சரியாக பயன்படுத்துவதே இல்லை. ஆனால் யார் ஒருவன் சரியாக பயன்படுத்துகின்றானோ அவன் வெற்றியாளானாக திகழ்கின்றான் அப்பனே. சரியாக பயன்படுத்தவில்லை என்றால் அப்பனே யாங்களே கஷ்டங்களை கொடுத்து கொடுத்து அடித்து அடித்துத்தான் அப்பனே நல்ல வழிக்கு ஆனாலும் அப்பனே விதி மதி இதைப்பற்றி எல்லாம் நேற்றைய பொழுது சொல்லி விட்டேன்.
விதியில் என்ன உள்ளதோ அதுதான் இங்கு நடக்கும். ஆனாலும் அப்பனேஅதை மீறி அப்பனே மனிதன் சென்று விட்டான். அப்பனே உந்தனுக்கே சொல்கின்றேன். விதியிலே இல்லை அப்பா. அதாவது வேற்று கிரகத்திற்கு அப்பனே இங்கிருந்து கருவி அனுப்புகிறான் அப்பனே. அதனால் விதியில் இல்லாத கூட செய்து விட்டான் அப்பனே. ஆனால் அதனால் என்ன பிரயோஜனம் என்று கூறு.?
கேள்வி கேட்ட அடியவர்:- ஒரு பிரயோஜனம் இல்லை.
குருநாதர்:- அப்பனே அதனால் ஒன்றை சொல்கின்றேன். விதியில் இல்லாததை செய்தால் அப்பனே துன்பங்கள்தான் மிஞ்சும் என்பேன். ஆனாலும் நீயும் கேட்கலாம் விதியில் உள்ளதை எப்படி தெரிந்து கொள்வது என்று கூற அப்பனே தியானங்கள் அப்பனே முறையான பயிற்சிகள் அப்பனே இறைவா நீ தான் (அனைத்தும்). நீ எதை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்கிறேன். கோபம் இல்லாமல் அனைத்தும் எவர் எதைச் சொன்னாலும் தாழ்வாக அதாவது அமைதியாக சென்று கொண்டே இரு அப்பனே. நிச்சயம் உன் விதியின் ரகசியத்தை கூட அப்பனே நீயே அறிவாய் என்பேன் அப்பனே. அப்போது உன்னையே நீ காத்துக்கொண்டு அப்பனே மற்றவர்களுக்கு உதவிகரமாக இருக்கலாம் எனபேன் அப்பனே. ஆனால் அப்படிப்பட்டவர்கள் அப்பனே இங்கு குறைவு அப்பா. அதாவது பூலோகத்தில் குறைவு அப்பா.
அடியவர்:- சரியான குருமார்கள் இல்லை.
குருநாதர்:- அப்பனே எப்படி சொல்லலாம் அப்பா? சரியான குருமார்கள் இல்லை என்று. அப்பனே இப்பொழுது நீ வந்திருக்கிறாய் அப்பனே அப்படியே தேடி தேடி வர வேண்டும் என்பேன் அப்பனே. அப்பனே பின் அதாவது அங்கு பணங்கள் இருக்கிறது என்றால் ஓடி விடுகிறாய் அப்பனே. ஆனால் அங்கே குரு நல்ல இருக்கின்றான் என்றால் குருவா அவன்? அவன் கேடு கெட்டவன். அவை எல்லாம் பொய் என்று நீ கூறி் விடுகின்றாய். எப்படி அப்பா ? பணத்துக்கு மட்டும் ஓடுகின்றாய் அல்லவா. அப்பனே இதுபோல் ஓடு. அங்கு அங்கு ஓடு. அப்பனே இப்பொழுது வெளி தேசங்களுக்கு சென்றால், உடனடியாக உனக்கு வெளி தேசத்தில் யான் அனைத்தும் செய்கின்றேன் அங்கு ஒரு கோடி பின் உனக்கு கிடைக்கின்றது என்றால் அப்பனே நீ நிச்சயம் அங்கு போய் விடுவாய்.
ஆனால் இங்கே இருக்கின்றான் ஒரு சித்தன். பின் அவனிடத்தில் சென்றால் அனைத்தும் கிடைக்கும் என்றால் அப்பனே அவனா சித்தன்? அவன் பொய். சுவடிகளும் பொய். எந்தனுக்கு ஒரு கோடி வந்துவிட்டால் யான் அனைத்தும் செய்து விடுவேன் என்றுதான் நீ செய்வாய். யான் சத்தியம் அடித்து சொல்கின்றேன்.
இப்பொழுது அப்பனே எங்கிருக்கிறான் குரு? அப்பொழுது குரு யார்? பணம். அதை தேடிச் சென்றால் அதன் மூலமே அழிவுதான். மீண்டும் கடைசியில் எதை என்று அறிய அறிய அப்பொழுதே சொன்னான் அவ் குரு அங்கிருக்கின்றான் என்று. ஆதனால் அப்பனே பின் அடிபட்டு உதை பட்டு வந்தால்தான் அப்பனே உண்மை நிலை தெரியும் என்பேன் அப்பனே.
அடியவர்:- பணத்தின் பின்னாடியே போக கூடாது.
குருநாதர்:- அப்பனே எங்கு சென்றாலும் உந்தனுக்கு தீர்வு கிடைக்கவில்லை அப்பா. அதனால் தான் அப்பனே உன் மனது இப்படி சொல்கின்றது அப்பனே. நிச்சயம் யான் அறிவேன் அனைத்தும் கூட அப்பனே. உண்மையில இதை பார்த்தால் அனைத்தும் பொய்தானப்பா.
அடியவர்:- ஜீவன் மூக்திக்கு என்ன வழி சொல்கின்றார் அகஸ்தியர்?
குருநாதர்:- அப்பனே ஒன்றும் செய்யாது அப்பா. என் வழியில் வாருங்கள் போதுமானது அப்பனே. யாங்களே இழுத்துச்செல்வோம்.
அடியவர் 1:- நீங்க வெறுத்துட்டீங்க. இதனாலதான் அப்டி சொல்கின்றார்.
அடியவர:- நான் வெறுக்கல. வெறுக்குற மாதிரி த்துல நடந்துக்குறாங்க.
அடியவர் 1:- அதுதான் சொல்கின்றார்
அடியவர்:- இந்த பக்கத்துக்கு வர வர நீங்களே வந்து இது நீங்க…
குருநாதர்:- அப்பனே இத்தனை வாக்குகளில் அப்பனே அனைத்தும் பொய் என்று வேடதாரிகள் என்று கூட சொல்லி இருக்கின்றேன் அப்பனே. அதை கூட புரிந்து கொள்ளவில்லையா நீ அப்பனே?.
எவனாலும், எதையாலும் அப்பனே ஒன்றும் சாதிக்க முடியாது அப்பனே. அனைத்தும் பொய்கள் அப்பா. அதனால் தான் சித்தர்களே யாங்கள் வந்து மனிதனை கஷ்டத்தில் உள்ளாக்கி அப்பனே திருந்துங்கள் திருந்துங்கள் என்று எல்லாம் அப்பனே கூறிக்கொண்டிருக்கின்றோம். ஆனால் ஒன்றை மட்டும் சொல்கிறேன் அப்பனே இப்படியே சென்று கொண்டிருந்தால் நேற்றைய பொழுது சொல்லிவிட்டேன் சித்தனே பொய் என்று சொல்லி விட்டு இருப்பான் அப்பனே அதனால்தான் அப்பனே அடித்து நொறுக்கி யாங்கள் எங்களையே அப்பனே காண்பித்து கொள்கிறோம் அவ்வளவுதான் அப்பனே. கஷ்டங்கள் வரும் சித்தனை நம்பினாலும் அப்பனே எவை என்று கூற இறைவனை நம்பினாலும் அப்பனே ஏன் என்றால் கஷ்டங்கள் வைத்துத்தான் எங்களாலும் திருத்த முடியும். கஷ்டங்களை எவ்பரிகாரத்தாலும் ஆகாதப்பா. யாங்கள் நினைத்தால்தான் உங்களுக்கு வாழ்க்கையில் விடிவெள்ளி சொல்லிவிட்டேன்.
அடியவர்:- முன்னடி சொன்னார், ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின், அந்த வாரத்தையோட அர்த்தம் தெளிவுபடுத்த வேண்டுகின்றோம்.
குருநாதர்:- அப்பனே ஆனாலும் அதாவது பின் துன்பத்திற்கு காரணம் ஆசை என்பது கூட அப்பனே முன்னோர்கள் அதாவது பின் ஞானிகளே அப்பனே உணர்ந்து உணர்ந்து அப்பனே அது உங்களுக்கே தெரியும்.
ஆனாலும் அப்பனே தன் கடமையை சரியாக செய்தாலே போதுமானது அப்பா. இறைவன் உன்னிடத்தில் வருவான் என்பேன் அப்பனே.தன் கடமையை சரிவர செய்யாமல் நமச்சிவாயா நமச்சிவாயா என்று அவனுடத்தில் உட்கார்ந்தாலும் அவன் ஒன்றும் செய்யப்போவதில்லை அப்பா. அதனால் ஈசன் என்ன சொல்லுவான் தெரியுமா? பின் உந்தனுக்கு கடமைகள் இருக்கிறது. அதை மறந்து விட்டு என்னிடத்தில் உட்கார்ந்திருக்கின்றாயே முட்டாளே. உனக்கு கொடுத்தும் லாபம் இல்லை என்று ஆனால் இவனோ யான் ஈசன் உடன் அதாவது ஈசன் நாமத்தைத்தான் உச்சரித்து கொண்டிருந்தேனே, ஒன்றுமே ஈசன் கொடுக்கவில்லையே என்று கடைசியில் ஈசன் மீது பழி சுமத்துவான் அப்பனே.
அடியவர்:- பற்றுக பற்றுக பற்றற்றவன் திருவடியை - என்ன அர்த்தம் ஐயா.
குருநாதர்:- அப்பனே யாராவது இங்கு சொல்லலாம். பின்பு யான் உரைக்கின்றேன். அனைத்துமே யான் உரைத்து விட்டால் நீங்களும் அறிவு உள்ள வராக இருங்கள்.
நாடி அருளாளர்:- ஐயா யாராவது சொல்லுங்கள்.
அடியவர்:- அதாவது நம்ம அலை பாய்கின்ற மனச….
குருநாதர்:- அம்மையே எது என்று அறிய அம்மையே பற்று எதுனுடைய அறிய அறிய அம்மையே பின் எதைப் பற்றிக் கொள்ள வேண்டும் முதலில் அம்மையே?
(மதுரையில் அகத்திய பிரம்ம ரிஷி அடியவர் இல்லத்தில் உரைத்த இந்த வாக்கு பின் வரும் பதிவில் தொடரும் ………)
https://siththarkalatchi.blogspot.com/2023/11/229-5-9-2023-25.html?m=0
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!
No comments:
Post a Comment