பகுதி - 29
“அனைத்தும் இறைவா நீ”
அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரை அடியவர் ஒருவர் இல்லத்தில் இரண்டாம் நாள் உரைத்த வாக்கு - 05.09.2023 ( மதுரை வாக்கு - பகுதி 29 )
இந்த வாக்கின் முந்தைய பகுதி கீழே உள்ள பதிவில் படிக்கவும்
https://siththarkalatchi.blogspot.com/2023/11/232-5-9-2023-28.html?m=0
குருநாதர்:- அறிந்தும் அறிந்தும் அதனால் அப்பனே நல்லதை செப்பிக் கொண்டிருக்கின்றேன் அப்பனே. ஏற்றுக் கொள்ளுங்கள் அப்பனே. ஏற்றுக்கொள்ளாவிடில் அப்பனே தீயவைதான் நடக்கும் சொல்லிவிட்டேன்.
அதனால்தான் அப்பனே வாக்குகள் வாக்குகள் என்று கேட்கிறார்கள் அப்பனே. ஆனாலும் யான் சொன்னாலும் அப்பனே அவன்தன் பாவத்தில் இருக்கின்றான் என்பேன் அப்பனே. முதலில் அப்பனே எப்படி மனிதனாக வாழவேண்டும் என்று எண்ணி வாழவேண்டும் அப்பனே. அப்பொழுதுதான் நன்றாக இறைவன் எங்கு இருக்கின்றான், எங்கு வலம் வந்து கொண்டிருக்கிறான், அப்பனே எங்கு இருக்கிறான் அங்கு சென்றால் எப்படி நலமாகும் என்பவை எல்லாம் உங்களுக்கு என்ன தேவை? அப்பனே எப்படி என்று சொல்லி தர முடியுமே தவிர , அப்பனே பின் அழுக்குகள் உள்ளே இருந்து எவ் இறைவனை வணங்கினாலும் ஒன்று செய்யப்போவதில்லை என்பேன் அப்பனே. கஷ்டங்கள், கஷ்டங்கள் என்று கடைசியில் பின் இறைவனே இல்லை. யான் அங்கு பரிகாரம் செய்தேன், இங்கு பரிகாரம் செய்தேன், எத்தனை திருத்தலங்கள் சென்றேன் என்பதை யெல்லாம் அப்பனே ஒரு பிரயோஜனம் இல்லையப்பா தெரிந்து கொள்ளுங்கள். அதனால் தான் நீங்கள் அனைவருமே பூஜியத்திலேயே இருக்கின்றீர்கள் என்பேன் அப்பனே. அதனால் அப்பனே தெரியவிடில் அப்பனே கேட்டு தெளிவு பெறுங்கள் அப்பனே.தெரியாது என்ன அப்பனே கூறு?
அடியவர்:- அறிவும்தான்.
குருநாதர்:- அப்பனே நீ அழைத்து வந்தாயே, அனைவரிடத்திலும் கேட்டு சொல்.
அடியவர் 1:- தெரியாதது என்ன் ஐயா? ( ஒரு அடியவர் மற்றொரு அடியவரை கேட்டார்)
அடியவர் 2:- அறிவுக்கு புலப்படாதது அது தெரியாது.
குருநாதர்:- அப்பனே அறிவுக்கு புலப்படாதது எது என்று கூறு?
அடியவர்:- ஐயா , மாயை மறைத்தால் அறிவுக்கு பலப்படாது.
குருநாதர்:- அப்பனே மாயை எப்படி மறைக்கும் என்று கூறு.
அடியவர்:- இறை அருள் இல்லை என்றால்
மாயை மறைக்கும்.
குருநாதர்:- அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய அனைவரும் இறைவனின் படைப்புகள் தான். அப்பனே அப்படி இல்லாமல் அதாவது இறைவன் இல்லாமல் எப்படியப்பா போகும் கேள்?
அடியவர்:- நல்ல வழி போகாமல் குறுக்கு வழியில் போய் கர்மம் சேர்க்குறாங்க இல்லையா?
குருநாதர்:- அப்பனே இவ் வார்த்தை மட்டும் குறுக்கு வழியில் மட்டும் ஏன் சொன்னாய் அப்பனே.?
அடியவர்:- நான் தப்பு பன்னி இருக்கேன். சொல்றேன் ஐயா.
குருநாதர்:- அப்பனே இதேபோலத்தான் தவறு செய்வன் தான் வாயில் இருந்துதான் அப்பனே எந்தனுக்கு நோய் இருக்கிறது. எந்தனுக்கு கஷ்டம் இருக்கிறது என்று வரும் அப்பா. தெரிந்து கொண்டீர்களா அப்பனே? இதுதான் உண்மை. அப்பனே அதனால் தர்மம் பின்பற்றினால், அப்பனே அவன் வாயிலிருந்து பின் யான் தர்மம் செய்து கொண்டிருக்கின்றேன். இன்னும் மென்மேலும் செய்ய வேண்டுமென்று வரும் அப்பனே. அதனால் நீங்கள் அனைவருமே இன்பத்தைப் பற்றித்தான் கேட்கின்றீர்கள் அப்பனே. அதனால் எதை மனது நினைக்கின்றதோ அதுவாகவே நீங்கள் ஆகுவீர்கள் என்பேன் சொல்லிவிட்டேன்.
நாடி அருளாளர்:- ( புரிய வைத்தல் / உரையாடல்கள்)
குருநாதர்:- அப்பனே குறுக்கு வழியில் வாழ்வது எப்படி என்று அப்பனே முன்பே நிற்பவனே நீ கேள்?
அடியவர் 1:- குறுக்குவழியில் வாழ்வது எப்படின்னு சொல்லிங்கய்யா?
அடியவர் 2:- ஒருத்தனை ஏமாத்தனும் என்றால் குறுக்கு வழியில் போகனும்.
குருநாதர்:- அப்பனே ஏன் ஏமாற்றி என்று ஒன்று வந்து இருக்கிறது என்று தெரியுமா? அவன் பல பேரை ஏமாற்றி இருக்கிறான் அப்பனே. அதனால் எதையாவது சொல்லி அவன் கர்மா சில தீரட்டும் என்று யான் உரைத்துக்கொண்டிருக்கின்றேன் அவன்தனக்கு. ( சில தனிப்பட்ட கடுமையான தவற்றை சுட்டும் வாக்குகள்) இதனால் ஆனாலும் சில கர்மாக்களைக்கூட் யான் அழித்திருக்கின்றேன் அவன் தனக்கும் கூட ஆனாலும் கவலையில்லை. ஏன் ஏமாற்றினாய் என்று விளக்கம் தா?
அடியவர்:- ஐயா ஏன் ஏமாத்துனீங்கய்யா?
அடியவர்:- பொருளாதார பிரச்சினை. அதனால்…
குருநாதர்:- அப்பனே இவன் மட்டும் செய்தானா அனைவரும் இப்படித்தான் செய்து கொண்டிருக்கிறார்களா என்று கேள் அவனை?
அடியவர்:- என் தவறை நான் ஒத்துக்கொள்கின்றேன்.
குருநாதர்:- அப்பனே அதனால் எதையும் அறியாமல் கூட அதனாலும் சில கர்மாக்கள் இவனுக்கு சேர்ந்து விட்டது அப்பா இப்பிறவியிலே. அதனால் நிச்சயம் யான் இருக்கின்றேன் என்று சொல் தைரியமாக.
குருநாதர்:- அப்பனே அவன் மூக்கை அப்பனே எது என்று அறிய அறிய முட்டியை தொடச்சொல்.
( அடியவர்கள் சில விளக்கங்கள் குனிந்து மூக்கினால் முட்டியை தொட …….)
அடியவர்:- டம்மி பெருசா இருக்கு தொட முடியல.
குருநாதர்:- அப்பனே இதையே செய்ய முடியவில்லை என்பேன் அப்பனே. மற்றவர்கள் வாழ்க்கையை திருத்துகின்றானாம் அப்பனே. வேடிக்கையாக உள்ளது என்பேன் அப்பனே. அப்பனே உன்னால் முடியாது அல்லவா? மற்றவனை செய்யச்
சொல் அப்பனே யாராவது தேர்ந்தெடுத்து.
( இந்த அடியவர் மூக்கால் முட்டியை தொட இயலவில்லை. கருணைக்கடல் குருநாதர் உத்தரவால் அங்கு உள்ள அடியவர்களை அவர்கள் மூக்கால் முட்டியை தொடச்
சொன்னார். இங்கு பல உரையாடல்கள்…)
குருநாதர்:- அப்பனே நிச்சயம் சொல்.
அடியவர்:- மடக்காம தொடனுமா?
அடியவர்:- ஆமாம்
அடியவர்:- (முயற்சி செய்து மூக்கால் முட்டியை தொட்டு விட்டார்)
( இதனை அடுத்து கருணைக்கடல் உரைத்த பின் வரும் வாக்கு அனைவருக்கும் பொருந்தும். அந்த மகத்தான வாக்கு…)
குருநாதர்:- அப்பனே இப்படி நிச்சயம் ( மூக்கால் முட்டியை ) தொட்டால் தன் மனதை அடக்கலாம் அப்பனே. அப்பனே அவன் தொடவே இல்லை அப்பா. அப்பொழுது எப்படியப்பா மனதை அடக்க முடியும். நீயே கூறு?
( தொட முடியாத இந்த அடியவரை அனைவரும் முயற்சி செய்து அடக்க சொன்னார்கள் பயிற்சியின் மூலம். )
குருநாதர்:- அப்பனே இதனால் உன்னையே நீ அடக்கு என்பேன் அப்பனே. அனுதினமும் இப்பயிற்சி செய்து கொண்டே வந்தாலே தன்னை முதலில் அடக்க முடியும் என்பேன் அப்பனே. தன்னை முதலில் அடக்கியவனுக்கு அப்போதுதான் அனைத்தும் விளங்கும் என்பேன் அப்பனே. சொல்லிவிட்டேன்.
( அடியவர்கள் இந்த பயிற்சியை செய்து தொப்பையை குறைத்து மூக்கால் முட்டியை தொட்டு, அதே போல் உடலை என்றும் வைத்து உங்கள் மனதை அடக்கி தன்னை உணரும் உயர்நிலையை அடையுங்கள். தானாகவே அனைத்தும் விளங்கும். )
குருநாதர்:- அப்பனே இவை பெண்களுக்கும் இதற்கு மாற்று உண்டு என்பேன் அப்பனே. அதாவது அதிகாலையிலேயே நிச்சயமாய பின் 4 மணி அளவில் எழுந்து நிச்சயமாய் இல்லத்தை சுத்தம் செய்து பின் அதாவது பசும் ( பசுமாடு ) எது என்று அறிய பின் மூலிகையை ( பசுஞ்சாணி) பின் கைகளால் பின் நிலத்தை சுத்தம் செய்து வந்தாலே நிச்சயம் அனைத்தும் மாறும். ஆனால் என்றாலும் யாரும் செய்வதில்லை.
ஆனால் நிச்சயம் அதை செய்யாமல் இருந்தால் கோபங்கள் அதிகரித்துவிடும் பெண்களுக்கு சொல்லிவிட்டேன்.
அடியவர்:- சாமி பசும் சாணம் கிடைக்காது.
குருநாதர்:- அப்பனே பசு மாட்டை மேய் அப்பனே.
அடியவர்கள்:- ( உற்சாக சிரிப்பு அலை )
அடியவர்:- மேய்க ready சாமி. எவங்கிட்டேயும் இல்ல பசுஞ்சாணம்.
நாடி அருளாளர்:- ஐயா உங்களை மேய்க சொல்கின்றார். அதன் மூலம்…
அடியவர்:- ஆமாம். ஆமாம். நாங்க மேய்க ready ஆயிட்டோம்
குருநாதர்:- அப்பனே அனைத்தும் கஷ்டப்பட்டால்தான் அப்பனே முடியும் அப்பா. அப்பனே மீண்டும் மீண்டும் இங்கே சொல்கின்றேன் கேட்டுக்கொள். இதையும் பலமுறை சொல்லிவிட்டேன். அப்பனே ஒருவனுக்கு வேலை இல்லை என்றால் அப்பனே தேடி தேடி அலைந்து திரிந்து அப்பனே ஒரு வேலையில் அமர்கின்றான் அல்லவா அப்பனே எவ்ளோ கஷ்டங்கள் பட்டு அதனால் அப்பனே பசு மாட்டை மேய்த்தால் அதைவிட புண்ணியம் ஒன்றுமில்லை் அப்பா. முதலில் அதை மேய்.
அடியவர்:- ஐயா ஒரு doubtங்க. அப்போ சொல்ரப்போ எல்லாம் தெரியும் அப்டீன்னு சொன்னீங்க. இப்போ எதும் தெரியவில்லை அப்டீன்னு ..ஒன்னும் புரியலை ஐயா.
குருநாதர்:- அப்பனே அதனால் தான் சொன்னேன் அப்பனே தெரியாதது என்ன வென்று?
அடியவர் 1:- அதான் சொன்னேன் நீ கேக்கல அதான் உங்களுக்கு சொன்னாரு.
அடியவர்:- ஐயா உலகத்தில தெரியாத விசயம் எவ்வளவோ இருக்கு ஐயா.
குருநாதர்:- அப்பனே ஆனாலும் உந்தனுக்கு தெரியும் என்பேன் அப்பனே. சரியாகவே அப்பனே. அப்பனே தெரியாது.
நாடி அருளாளர்:- உங்களுக்கு பல விசயம் தெரியும் ஆனாலும் தெரியாத ஒரு விசயத்தை சொல்கின்றார்.
அடியவர் 1:- ( விளக்கம் அந்த அடியவருக்கு கூறினார்) உங்களுக்கு நிறைய விசயம் தெரியும். ஆனால் தெரியாத விசயத்தை அடுத்தவங்களுக்கு நீங்க சொல்லி கொடுக்கின்றீர்கள்.
குருநாதர்:- ஆனாலும் அப்பனே ஆனாலும் அனைத்தும் பின் தெரியாத்து பொய்கள் அப்பா அவ்வளவு தான்.
அடியவர்:- பஞ்ச பட்சிங்களா ஐயா?
நாடி அருளாளர்:- என்ன என்று ( எனக்கு ) தெரியவில்லை ஐயா. ( உங்களுக்கு மட்டும் தெரியும் )
( பலத்த உரையாடல்கள் அந்த கேள்வி கேட்ட அடியவருக்கு எது தெரியும், மற்றும் தெரியாது என்று. ஏனைனில் இந்த வாக்கு அந்த அடியவருக்கு மட்டும் புரியும் படி கருணைக்கடல் குருநாதர் உரைத்தது.)
அடியவர் 2:- இதுக்கு விளக்கம் தெரியல சாமி.
அடியவர்:- ஐயா கொஞ்சம் clearஆக சொல்லுங்க.
குருநாதர்:- அப்பனே அனைத்தும் தெரிந்தும் அப்பனே காசுகளுக்காக அப்பனே ____________ அப்பனே இதற்கு ஆசைப்பட்டு தான் அப்பனே தவறான வழியில் சென்று விட்டாய். அவ்வளவுதான் அப்படி சொல்லி விட்டேன்.
அடியவர்:- ஆமாங்க ஐயா. உண்மைதான்.
குருநாதர்:- அப்பனே இதற்கு எப்பரிகாரம் தேவையில்லை என்பேன் அப்பனே.
( இந்த வாக்கில் உள்ள பின் வரும் பொது வாக்கு அனைவருக்கும் கருணைக்கடல் உரைத்த வாக்கு)
அப்பனே பின் அனைவருக்கும் சொல்கிறேன். இப்பொழுது அமர்ந்தானே இவன் அதாவது பக்கத்தில் அப்பனே இவன் மனதிலே என்னை வைத்துக்கொண்டு அப்பனே வெளியில் தேடுகிறான் அப்பா எப்படி? எப்படி அப்பா யான் சிக்குவேன். ஆனாலும் அதனால் நல்மனதில்தான் குடி கொள்வேன். சிலையாக வடிவமைத்து விட்டான். ஏன் அனைவருக்கும் சொல்கின்றேன். இவன் தன் தாய் தந்தையருக்கே சிலை அமைக்க வில்லை. எந்தனுக்கு ஏன் சிலை அமைத்தான் என்று நீங்கள் கூறுங்கள் அப்பனே?
அடியவர் 1:- ஏன் ஐயா ( அகத்தியருக்கு சிலை அமைத்தீர்கள் ) ?
அடியவர் 2 :- குரு நாதர்தான் தாயும் தந்தையாக இருக்கின்றார்.
குருநாதர்:- அப்பனே தாய் தந்தையரை மதித்தால்தான் யானே வருவேன் முட்டாளே.
அடியவர் 3:- அப்பா அம்மாதான் முதல் தெய்வம்.
குருநாதர்:- அப்பனே இவன்தனக்கு சொல் அதை.
அடியவர் 3:- ( அந்த அடியவருக்கு பின்வருமாறு எடுத்து உரைக்க ஆரம்பித்தார் ) அப்பா அம்மாதான் முதல் தெய்வம். ( நாம் அனைவரும் ) இந்த உலகத்துக்கு வந்ததே அவங்களுடைய அனுக்கிரகத்தினால்தான். அவங்கதான் முதல்ல நாம வழிபட்டு, மனச திருப்தி படுத்தினால் ஈஸ்வரனும், சித்தர்களும் அருள்வாங்க.
குருநாதர்:- அப்பனே சிலை வைத்து விட்டால் யான் வந்து விடுவேனா என்ன கூறு?
அடியவர்:- இல்லங்க ஐயா
குருநாதர்:- அப்பனே சிலை யாருக்கு வைப்பார்கள் என்று கூறுங்கள்?
அடியவர்:- வா.வூ.சி அவங்கள மாதிரி உள்ளவங்களுக்கு…
குருநாதர்:- அம்மையே முட்டாளே , பைத்தியமே , இறந்தவருக்கு மட்டுமே ( சிலை வைப்பார்கள் ). அப்பனே பக்கத்தில் இருப்பவனே, வீரமாக வந்தவனே, அனைத்தும் தெரிந்தவனே நான் இறந்தவனா என்ன?
அடியவர்:- இல்லை.
அடியவர்:- அப்பொழுது எப்படி வைக்கலாம் என்னை? உன் மனதிலேயே இருக்கின்றேனே, உந்தனை பக்குவப்படுத்தி உத்தனுக்கு பல அருள்களை புகுத்தி மற்றவர்களுக்கு ( எடுத்து ) சொல்லுமாறு யான் ஏற்பாடு செய்து கொண்டு இருந்தேன். ஆனால் உன்னை தட்டி இருப்பேன். பிழைத்துக்கொண்டாய் நீ.
அடியவர்:- ஐயா மன்னிச்சுக்க சொல்லுங்க..
(மதுரையில் அகத்திய பிரம்ம ரிஷி அடியவர் இல்லத்தில் உரைத்த இந்த வாக்கு பின் வரும் பதிவில் தொடரும் ………)
https://siththarkalatchi.blogspot.com/2023/11/234-5-9-2023-30.html?m=0
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!
No comments:
Post a Comment