“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Thursday, November 9, 2023

சித்தர்கள் ஆட்சி - 222 : அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 4-9-2023 உரைத்த வாக்கு - பகுதி 19

பகுதி - 19


“அனைத்தும் இறைவா நீ”


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - அடியவர் ஒருவர் இல்லத்தில் உரைத்த வாக்கு - 04.09.2023 ( பகுதி 19 )


இந்த வாக்கின் முந்தைய பகுதி கீழே உள்ள பதிவில் படிக்கவும்


https://siththarkalatchi.blogspot.com/2023/11/220-4-9-2023-18.html?m=0



குருநாதர்:- அப்பனே உடலில் அழுக்குகள் தங்கி இருக்கிறது. அதை எடுக்கச்சொல் முதலில் அப்பனே. நீ கூறு ஏன் என்றால் அப்பனே இவை எல்லாம் யான் என்ன சொல்வது. ( அடியவரை கேள்வி கேட்ட அடியவருக்கு பதில் உரைக்க திருவாய் மலர்ந்து அருளினார் குருநாதர் ) 



அடியவர்:- உடம்பு முழுதும் அழுக்கு இருக்குன்னு  அப்பா சொல்கின்றார். ( உடல் கழிவை வெளியேற்ற சில உரையாடல்கள் - பேதி கொடுத்தல், நல் எண்ணெய் குளியல், விரதம் இருத்தல், விரதம் உடலை சுத்தப்படுத்த , இயற்கை ஆகாரங்கள் எடுத்தல்,)


குருநாதர்:- அம்மை யே மீண்டும் என்ன சந்தேகம் கூறு.?


அடியவர்:-  (திரிபலா, திரிகடுகம் எடுத்தாலே அனைத்து கழிவுகளும் உடலை விட்டு நீங்கிவிடும் என்று குருநாதர் பல முறை உரைத்துள்ளார்கள்.)



குருநாதர்:- அப்பனே புரிகின்றதா? அம்மையே ( திரிபலா, திரிகடுகம் ) அனைத்தும் சொல்லி விட்டும் யாரும் அதை பயன்படுத்துவதில்லை. இதனால்தான் துன்பங்கள். அதனால் தான் கஷ்டங்கள் கொடுத்துத்தான் நிச்சயம் நல்வழி படுத்தமுடியும் என்பேன் என்னால் அம்மையே. யான் செய்வது சரியா தவறா நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்?


அடியவர்:- சரிதான்


அடியவர்:- கஷ்டம் கொடுத்தாலும் சில பேர்கள் தெய்வத்திடம் வரமாட்டேன் அப்டின்னு…. ( இருக்காங்க) 


குருநாதர்:- அம்மையே எவை என்று கூற பாவங்கள் இருந்தால் இறைவனைக் கூட நெருங்க முடியாது சொல்லிவிட்டேன். இறைவனே பின் நோக்கி வந்தாலும் இறைவன் கூட நீ அப்படியே இருந்து விடு என்று சொல்லிவிடுவான் அம்மையே.

அம்மையே ( மனிதர்களுக்கு ) வயது ஆகிக்கொண்டே போகின்றது. ஆனால் அறிவுதான் இல்லை அம்மா. 



அடியவர்:- ( உலகில் ) புற்று நோய் அதிகமாக இருக்கு. 


குருநாதர்:- அப்பனே ஒரு வலைத்தளத்தை நடத்துகின்றான் இங்கு. 


( சித்தன் அருள் வலை தளம், திரு. அக்னிலிங்கள் ஐயா அவர்கள் - https://siththanarul.blogspot.com ). 


அப்பனே எத்தனை பதிவுகள் அப்பா. அவை எல்லாம் படித்தாலே நீ திருந்திவிடுவாய் அப்பனே. படிப்பதே இல்லை அப்பனே. அதை படித்துவா. அப்பனே உன் ரகசியத்தை அனைத்தும் சொல்கின்றேன் அப்பனே. 



அடியவர்:- பொதிகைக்கு ( பொதிகை மலை ) தமிழ்நாட்டு வழியாக முன்னாடி போனாங்க. இப்ப கேரளா வழியாகத்தான் கஷ்டப்பட்டு போகின்றோம்……


குருநாதர்:- அப்பனே அனைத்தும் தவறுகள் செய்து விட்டு அப்பனே என்னிடத்தில் வந்தால் என்ன லாபம்? அப்பனே யான்தான் அனுமதிக்க வேண்டும் என்பேன். என் அருள் இருந்தால் தான் என்னையும் நெருங்க முடியும் சொல்லி விட்டேன் அப்பனே. அதனால் அவர் இவர் என்றெல்லாம் மற்றவர் மீது குற்றம் சொல்லாதீர்கள் அப்பனே. உன்னை பற்றி உங்கள் மீது என்ன குற்றம் என்று முதலில் தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே அவ்வளவுதான்.அப்பனே இன்னும் விளக்கம் ( ஏதும் வேண்டுமா?)


அடியவர்:- பொதிகை மன்னூர் கரையில் அப்பா போனதாக சொல்கின்றார்கள். 


குருநாதர்:- அனைத்துமே என்னுடையதுதான் அப்பனே. அங்கு இங்கு எவை என்று அறிய அறிய ஏன் அப்பா பின் அங்கு கூட இடத்தை பிடித்து விட்டீர்களா என்ன?


அடியவர்கள் :- ( பலர் பலத்த சிரிப்பு ) 


அடியவர்:- சர்கரை வியாதிக்கு மாற்று மருந்தாக இப்ப ஊசி போட்டு கிட்டு இருக்கேன். அதிக உச்ச அளவு ( maximum dose ) மருந்து போட ஆரம்பிச்சேன். ஆனாலும் இந்த மருந்துகள் மூலம் ஒரு முன்னேற்றமும் இல்லை. 


குருநாதர்:- அம்மையே எதை என்று அறிய அறிய முன்னேற்றம் இருக்காது அம்மா. எது என்று அறிய இதை பற்றி விவரமாக குறிப்பிட்டாலும் இப்போது வேண்டாம் அம்மையே.  யான் கவனித்துக்கொள்கிறேன் பொறுத்து இரு. 



அடியவர்:- ( தனி விளக்கம் வேண்டல் )


குருநாதர்:- ( அருள் தனி விளக்கம்)


அடயவர்:- ( தனி விளக்கம் வேண்டல் ) 


குருநாதர்:- ( அடியவர் பிறர் சொல்லிய பரிகாரங்களை செய்து தீய வினைகளால் சூழப்பட்டு இருக்கின்றார். அதாவது பரிகாரம் செய்ய சொன்னவர் கர்மாவை இந்த அடியவர் அவர் அறியாமல் ஏற்கும் சூழல் மற்றும் பரிகாரத்தால் வந்த கடும் கர்ம வினைகள். அன்பு குருநாதர் அவற்றை நீக்குவது பெரும் பாடு என தெரிவித்தார்கள். 


அடியவர்களுக்கு ஒர் வேண்டுகோள் :- 

யார் எந்த பரிகாரம் சொன்னாலும் ஏற்கவேண்டாம். பரிகாரம் செய்ய சொன்னவர்களின் கடும் கர்மாவை நீங்கள் உங்கள் முதுகில் சுமக்கும் நிலை உண்டாகும். தலைக்கு மேல் கையை தூக்கி உங்கள் குறைகளை சொல்லி குருநாதரிடம் வேண்டுங்கள். கர்மம் இல்லாமல் வாழுங்கள். இறைவனை நம்புங்கள். அதுவே அனைத்தும். ) 


(அடியவரின் பூர்வ ஜென்ம பரம ரகசியத்தை , பரிகாரமே செய்ய முடியாத வினையை எடுத்து உரைத்தார்கள்). 


அடியவர்:- முன்னோர்கள் ஆத்மா சாந்தி அடையனும் என்றால் என்ன செய்ய வேண்டும்? 


குருநாதர்:- இதனைப்பற்றி எல்லாம் ஏற்கனவே சொல்லிவிட்டேன்.


அடியவர்:- ( தனி விளக்கம் வேண்டல் )


குருநாதர்:- ( அருள் தனி விளக்கம்)


அடியவர்:- சில வருடம் முன்னர்  ஒரு கோயில் போனபோது ஒருத்தர் வந்து…


குருநாதர்:- அப்பனே அன்னத்தை அளிக்கின்றாய் அல்லவா? இவளையும் அழைத்துச் சென்று அப்பனே பின் என்று அறிய கொடுத்திட்டு பின்பு உரைக்கின்றேன். ( அடியவரை அன்ன சேவை செய்ய அருளினார்கள்.)


அடியவர் :- ( தனிப்பட்ட பிரச்சினை குறித்த கேள்வி )


குருநாதர்:- யான் சொல்லியதை விட்டு விடு அப்பனே. ( அசைவம் சாப்பிடுவதை நிறுத்த உத்தரவு )


அடியவர்:-  …………


குருநாதர்:- அப்பனே அறிவுப்பூர்வமாக கேட்டு விடாதே. அனைவரும் உட்கொள்கிறார்களே அனைவரு ம் நன்றாக இருக்கிறர்கள் என்று கேட்டு விடாதே. ஆனால் இதை 

யும் நீ கேட்பாய் என்பது நன்றாக தெரியும். ஆனால் இப்பொழுது நீ கேட்கவில்லை என்றாலும் நீ இல்லத்தில் சென்று யோசிப்பாய் அப்பனே. யோசிப்பதில் வல்லவனப்பா.


அடியவர் 1:- கரி சாப்புடுரவுங்க நல்லாத்தான் இருக்காங்க அப்டீன்னு நீங்க நினைக்கலாம். 


அடியவர் 2:- அப்படி யோசிப்பதில்லை.


அடியவர் 3:- அசைவத்த வளர்ப்பு பிராணிகளுக்கு வாங்கி கொடுப்பது…


குருநாதர்:- எதற்காக அப்பா ( வாங்கி கொடுக்கின்றாய்?) 


அடியவர்:- தெரியாமல் கேட்கின்றேன்.



அடியவர் 2:- எனது பாப்பாவிற்கு ரெண்டு வயசு ஆகுது. Egg கொடுக்கலாமா?



குருநாதர் :- அப்பனே அனைவரும் சரி என்று யார் என்று கூற பின் யார் என்று கூற அனைவரும் கேளுங்கள். அனைவருமே இருக்கிறார்கள் அல்லவா? யார் சரி யார் தவறு என்று அனைவரையுமே கேள்?


( இந்த கேள்வியே தவறு என்றபோதும் அங்குள்ள அனைவரின் விவாத்த்திற்கே விட்டுவிட்டார்கள். பலத்த அடியவர் உரையாடல்கள்) 


 

குருநாதர்:- அப்பனே அம்மையே (எந்த அசைவம் சாப்பிட்டால்) கர்மமும் விடாது என்பேன். நோய்கள் அனுபவித்தே தீர வேண்டும். 



அடியவர்:- எல்லோருமே இறை வழிபாட்டில் இருக்கின்றோம். பல நேரங்கள்ல எங்களுக்கு மனம் ஒருமுகப்பட வில்லை… 


குருநாதர்:- அம்மையே இதனால் ஆசைகள் இதற்கு காரணம் என்பேன்


(மதுரையில் அகத்திய பிரம்ம ரிஷி அடியவர் இல்லத்தில் உரைத்த இந்த வாக்கு பின் வரும் பதிவில் தொடரும் ………)

https://siththarkalatchi.blogspot.com/2023/11/223-4-9-2023-20.html?m=0


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!



 

No comments:

Post a Comment