“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Friday, November 10, 2023

சித்தர்கள் ஆட்சி - 223 : அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 4-9-2023 உரைத்த வாக்கு - பகுதி 20

பகுதி - 20


“அனைத்தும் இறைவா நீ”


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - அடியவர் ஒருவர் இல்லத்தில் உரைத்த வாக்கு - 04.09.2023 ( பகுதி 20) 


இந்த வாக்கின் முந்தைய பகுதி கீழே உள்ள பதிவில் படிக்கவும்

https://siththarkalatchi.blogspot.com/2023/11/222-4-9-2023-19.html?m=0


அடியவர்:- காளான் உணவு வந்து சைவம் என்று நிறைய எடத்துல சாப்பிடுகின்றனர். அது தவறா?


குருநாதர்:- அப்பனே தெரிந்துகொள். இவையெல்லாம் ஒரு கேள்விகளே இல்லை அப்பனே.


அடியவர்:- திருச்சுனையில் பாண்டியம்மா வந்திருக்காங்க. அன்ன சேவை செய்து கொண்டு உள்ளார்கள். 


( அகத்திய பிரம்ம ரிஷிகள் பரிபூரண ஆசி பெற்று மாமனிதனாக வாழும் இந்த அம்மையை அங்கு உள்ள அடியவர்கள் முன்னே சென்று அமர வைத்தனர். மகத்தான சேவை செய்துவரும் இந்த அடியவரை பற்றிய தகவல்களை பின் வரும் பதிவில் காண்க

https://siththanarul.blogspot.com/2023/11/1491.html?m=1


குருநாதர் ஆசி வேண்டும். திருச்சுனையில் கும்பாபிஷேகம் பன்னப்போகின்றார்கள். வள்ளளார் மடத்தில் அன்னதானமும் இருபத்தைந்து வருஷமா செய்து கொண்டு வருகின்றார்கள். 


குருநாதர்:- அம்மையே உன்னை பல முறையும் யான் பார்த்தேன் அம்மையே.  வள்ளல் பெருமானும் நல்ல விதமாகவே உந்தனக்கு பல சேவைகளை செய்திருக்கின்றான் என்பேன் அம்மையே. அதனால் தான் எது என்று அறிய அறிய எப்பாவங்களும் உன்னை அனுகவில்லை என்பேன் அம்மையே. ஆனாலும் அமைதியாக இரு அம்மையே சித்தர்களே வந்து உந்தனுக்கு உதவிடுவார்கள். என்ன தேவை தாயே? அதனை நான் கொடுப்பேன் உந்தனுக்கு மட்டும்.


(இந்த இடத்தில் தட்டச்சு செய்யும்போது உடல் முழுவதும் மயிர்கால்கள் எழுந்து நின்றது இந்த அம்மையின் புண்ணிய பலத்தை உணர்ந்து என்பது உண்மை. 


வணக்கம் அடியவர்களே, சர்வ வல்லமை படைத்த அகத்தீசர் இதுவரை இப்படி எந்த வரம் வேண்டும் என்றாலும் தருகின்றேன் என்று யாருக்கும் உரைத்ததில்லை. முதல் முறையாக இப்படிப்பட்ட மகத்தான வாக்கை படிக்கும் பாக்கியம் உங்களுக்கு என்று உணர்க. ) 


மற்ற அடியவர்கள்:- என்ன வேணும்னு கேளுங்கள் அப்பாகிட்ட. உங்களுக்கு மட்டும் கொடுக்கின்றேன் என்று சொல்கின்றார். 


( இதுவரை எந்த அடியவர்கள் பெயரையும் இந்த வாக்கில் குறிப்பிடவில்லை. அம்மை பாண்டியம்மாள் அவர்களின் புண்ணிய சேவையை உலகோருக்கு தெரிவிக்கும் வகையில் அவர் சேவைக்கு சிரம் தாழ்த்தி தலை வணங்கி அவர்கள் பெயரை இங்கு பதிவிடுகின்றோம் ) 


அடியவர் பாண்டியம்மாள் :- எனக்கு என்றைக்கும் சாதம் போடுவது மட்டும் , அன்னம் போடுவது மட்டும் வேண்டும். ( பிறருக்கு அன்ன சேவை செய்யும் பாக்கியம் வேண்டும் ) . 



குருநாதர்:- அதனாலதான் உந்தனுக்கு கொடுக்கிறேன் என்று ( யான் உரைத்தேன் ) ஆனால் மற்ற அனைவருமே கருமத்தைத்தான் கேட்பார்கள் தாயே. உனக்கு கொடுத்து விட்டேன். வள்ளல் பெருமானே இருக்கிறான் அங்கே.


(திருச்சுனையில் அடியவர் பாண்டியம்மாள் அன்ன சேவை செய்யும் இடத்தில் வள்ளல் பெருமான் நிரந்தரமாக அருளுகின்றார்.)


நாடி அருளாளர்:- அப்போ மற்றவங்க எல்லாருமே கருமத்தைதான் கேப்பாங்க. அதனால நான் கொடுக்கவில்லை என்று  சொல்லிவிட்டார். உங்களுக்கு மட்டும் ஏன் நீங்க என்ன கேட்டாலும் குடுக்பேன் என்று சொன்னார் குருநாதர்? . அந்த பதிலை கேட்டீங்களா? 


குருநாதர்:- அம்மையே குற்றங்கள் இல்லை. குறைகள் இல்லை. அதனால் அம்மையே நல்லவிதமாகவே இன்னும் வாக்குகள் காத்துக் கொண்டிருக்க அம்மையே உன் ரகசியத்தை எல்லாம் சொல்கின்றேன். ஏன் எதற்காக இப்புவிதன்னில் பிறந்தாய் அம்மையே எதற்காக அதனால் உன்னை எதற்காக ஈசன் ஆட்கொண்டான் என்பதை எல்லாம் நிச்சயம் சொல்கிறேன் தாயே. உன் வேலையை நடத்து யான் பார்த்துக்கொள்கிறேன்.



நாடி அருளாளர்:- பாத்தீங்களா அம்மா (அடியவர் பாண்டியம்மாள்).உங்களுக்கு மட்டும்தான் சென்னார் அகத்தியர். நீங்கள் என்ன கேட்டாலும் கூட கொடுக்கின்றேன் என்று சொன்னார்கள். வேற யாருக்காவது கொடுக்கின்றேன் என்று சொன்னார்களா குருநாதர்?  குருநாதருக்கு தெரியும் யார் என்ன கேள்வி கேட்பார்கள் என்று. உங்களுக்கு மட்டும் தெரியமாக நீங்கள் என்ன வேண்டும் ஆனாலும் கேளுங்கள் தருகிறேன் என்று சொன்னார்கள்.

ஆனால் இங்கு உள்ள மற்றவர்களுக்கு இதே கேள்வியை கேட்டு இருந்தால், என்ன அவர்கள் கேட்டு இருப்பீர்கள்? நீங்க மாயை தான் கேட்டு இருப்பீர்கள். இவர்கள் (அடியவர் பாண்டியம்மாள்) என்ன கேட்டாங்க என்று சொல்லுங்கள்? 


அடியவர்கள்:- அடுத்தவர்கள் பசியை போக்கனும்.


குருநாதர்:- இதனால் அம்மையே , ( அங்கு உள்ள மற்ற அடியவர்களிடம் )  தன்னால் இருப்பதை அவரிடத்தில் (அடியவர் பாண்டியம்மாளிடம் ) கொடுங்கள் அம்மையே காசுகளாக பின் அன்னத்தை (அடியவர் பாண்டியம்மாள் பிறருக்கு ) ஈயட்டும். பின் இதையாவது செய்யுங்கள்.


( அங்கு உள்ள அடியவர்களிடம் காசுகள் கொடுக்கச்சொன்னார்கள் குருநாதர். எல்லையே இல்லாத புண்ணியத்தை இங்கு ஒரு புரிதலுக்காக கீழே ஒரு படத்தில் கொடுத்து உள்ளோம். கர்ம வட்டத்தில் எதை கேட்டாலும் அதை இறை வழங்குவது கடிணமே. ஆனால் இதற்கு வெளியில் எதை கேட்டாலும் அருளும் என்பதை உணர்க. இங்கு இறைவன் அதே போல் இந்ந அம்மைக்கு உடனே அருளினார்கள். )




 ( அடியவர்கள அங்கு தன்னிடம் உள்ள காசுகளை புண்ணிய பலம் ஓங்கி சேவை செய்யும் பாண்டியம்மாள் அவர்களிடம் வழங்கினர்கள். )


குருநாதர்:- அம்மையே ( பாண்டியம்மாள் ) யான் இருக்கின்றேன் உந்தனுக்கு அம்மையே. அதனால் நிச்சயம் என்னை பற்றி எடுத்துரை் அனைவருக்குமே. 


( குருநாதர் தன்னைப்பற்றி எடுத்து உரைக்க பாண்டியம்மாள் அவர்களிடம் உரைத்தார்கள்) 



அடியவர் பாண்டியம்மாள்:- ( பாசம் மிகுந்த அவரின் வாய் மொழியை அப்படியே இங்கு பகிர்ந்து உள்ளோம்) என் மகனுக்கு கல்யாணம் நடந்தது. கல்யாணத்துக்கு அவர் அகத்தியர் வந்து என்ன சொன்னாரு ஒருத்தர் வருவாரு. அவருக்கு வந்து ஒரு உடை எடுத்துக் கொடுங்க,  துணி எடுத்து குடுங்கன்னு கேப்பாரு. அப்ப வந்து டிவி ல போட்டு கட்டினார்கள். அதே மாதிரி கல்யாணம் மண்டபத்தில ஒரு கோவில்ல வந்து ஒக்காந்து விளக்கை ஏத்தி  எடுத்து வந்து அன்னம் கேட்டார். சாப்பிட்டாங்களா ஒரு துண்டும், ஒரு உடை மட்டும் குடுமா எந்த குறையும் இல்லாம நடத்தி குடுத்துட்டு போறேன்னு சொன்னாரு. 


மனசு போல எல்லாமே உன் மனசு எப்புடி இருக்கோ நல்லது கெட்டது பூராமே நம்மகுள்ளதான் இருக்குது. எல்லாமே வந்து நம்மளா. நல்லது நினைங்க எல்லாமே நல்லதா நடக்கும்.  தாய் தகப்பனுக்கு மட்டும் அன்னம் போடுறத விட்டுடாதீங்க. மாமியாள ஒதுக்கி வச்சு தாய மட்டும் நினைச்சுகிட்டு விட்டுடாதீக. யாருக்காக இருந்தாலும் சாப்பாடு போடுங்க. இறைக்குற கிணறுதான் ஊறும். இல்லாட்டி ( கிணறு) அடி பாசம் பிடிச்சு போயிடும். எல்லா உயிரும் இன்புற்று வாழ்க என்று இராமலிங்க அடிகள் சொல்ராரு. ஒரு இருபத்தஞ்சு வருஷமா ( அன்னம் கொடுத்து வருகின்றேன்) நான் சம்பளம் எல்லாம் கிடையாது ( எனக்கு வேலை இல்லை ) . என்னால முடிஞ்சது கடயில கூட பிச்சை எடுத்தது பிச்சைக்காரீன்னு ( என்னை சொல்லு) வாங்க. ஆமா நான் பிச்சக்காரிதான். என்ன ( நாம் ) பிறக்கையில என்னத்த கொண்டுவந்தோம். போகையில என்னத்த கொண்டு போகப்போறோம். ஒன்னும் கிடையாது. மண்ணு கரையான் திங்கிறது கூட நல்ல மனசு வந்துச்சுன்னா நல்லது இருந்தாத்தான் நல்லதோட சாப்பிடும். இல்லன்னா அது தொடாது. மண்ணோட மண்ணா இருந்தாலும் அன்னைக்கி்.. மாடி மாடியா கட்டுனாலும் நிக்காது. மண்ணுகூட சொல்லுமாம் நீ எத்தன மாடி கட்டுனாலும் கடசில திங்குறது நான் தான். 

வீட்ட கட்டு, வாசல கட்டு , அடுப்ப போடு எல்லாம் போடு … நான்தான் சாப்புடுவேன்னு சொல்லுமாம். 

சொல்லிட்டேன் சாமி.



குருநாதர்:- எதை என்றும் அறிய அறிய அதனால்  நீங்கள் சரியாகவே உங்கள் வழியில் போய்க் கொண்டிருந்தால் யானே உங்களுக்கு மனித ரூபத்தில் வந்து அனைத்தும் செய்வேன் எதை என்றும் அறிய அறிய இதுதான் அம்மையே எவை என்று கூற இன்னும் சொல்.


( ஆதி குருநாதனே ஆசைப்பட்டு இன்னும் என்னைப்பற்றி சொல் என்று கேட்ட புண்ணியத்தாயே பாண்டியம்மாள் அவர்கள்..என்னே ஒரு புண்ணியம் இந்த தாய்க்கு ) 



அடியவர் 1:- இன்னும் சொல்ல சொல்றாங்க.


அடியவர் 2:- கோயில பத்தி சொல்லுங்க


அடியவர் 3:- அகத்தியரை பற்றி சொல்லுங்க


( அடியவர்கள் உற்சாகமாக இந்த அன்ன சேவை தாயிடம் வாக்கு கேட்க ஆவலானார்கள் ) 


அடியவர் பாண்டியம்மாள்:- அகத்தியர் வந்து ரெண்டு ஒருத்தர் என்ன சொல்ரது பரதேசி பண்டாரம் சாப்டுறது இந்த இடத்துக்கு வந்து நாங்கலாம் குடுக்க மாட்டேன்னு கிராமத்துல சொல்லிட்டாக. நான் என்ன செஞ்சேன் ஒரு தக்காளி சாதம் வாங்கி குடுத்து தக்காளி சாதம் போட்டு , பொங்கல் போட்டு சாப்பாடு.  இது பரதேசி பண்டார இருக்கிற இடத்துல சித்தர் வந்து என்ன என்ன நினைச்சிட்டு செஞ்சிட்டு போராரு, உன் சாதம் காலியாகும். அவங்க என்ன ஞானியா, பெரிய எஸ்.பி யா, தாசில்தார், கலேட்டரா இவுக உல்லாம் சாப்பிடற அந்த சாதம் மிச்சப்பட்டு போச்சு அள்ளி  தள்ளுனாங்க அரிசி அரைச்சி,  இந்த பரதேசி பண்டாரம் ( தன்னை சொல்கின்றார் )  நான் ஒரு மெண்டல் மாறி இருக்கிறவ ( சாதம் ) ஆக்குனதுல  அதுல வந்து அகத்தியரே சாப்பிட்டு போய்டாரு. கொடுப்பதும் கடவுள் சாப்பிடுரவனும் கடவுள். என்ன சரியா. குடுப்பதும் அவர்தான். சாப்பிடுரதும் அவர்தான். யாரையும் வேத்துமையா ( நினைக்காதீக). 



குருநாதர்:- அம்மையே எதை என்று கூற அனைவரும் புரிந்து கொண்டிர்களா என்ன? . எந்தனுக்கு  எதுவுமே தேவையில்லை என்று யார் ஒருவர் ஆசையை அடக்கி வைத்துக் கொண்டிருக்கிறார்களோ அவருக்குத்தான் யான் உதவி செய்வேன். மீண்டும் எதனையும் என்னை கேட்டு விடாதீர்கள் சொல்லிவிட்டேன். அதனால் உங்களுக்கு எந்த நேரத்தில் எதை செய்ய வேண்டும் என்பவை எல்லாம் நிச்சயம் செய்வேன். இதை பல உரையில் கூட எடுத்து உரைத்துவிட்டேன் அம்மையே. அம்மையே, மகளே கேள் எதை என்றும் அறிய அறிய நீ இதை எ எதிர்பார்த்து தான் வந்தாயா.?



அடியவர் பாண்டியம்மாள்:- எதுவும் கிடையாது. இந்த காசு வந்து உங்ககிட்ட இருக்கு. என்கிட்ட இருக்கு. யார் கிட்டயும் இருக்கும். அந்த தெய்வத்தோட நம்பிக்கை, ஒரு அகத்தியரோட நம்பிக்கை வந்துச்சுனா அந்த காசு எல்லாத்து கிட்டையும் போய்விடும் ( வந்து விடும் ). இந்ந காசு 10 ரூபாயா இருந்தாலும் அது (பிறருக்கு பயன்) பலன் படனும். 



குருநாதர்:- ( அனைவரையும் நோக்கி ) அப்பனே , அம்மையே பின் தெரிந்து கொண்டிர்களா?  எதை என்றும் அறிய அறிய அதனால் இறைவன் அருளை முதலில் பெறுங்கள்.எவை என்றும் புரிய புரிய அதனால் தானாகவே அனைத்தும் நடந்தேறும். அப்படி இல்லை என்றால் அதை இதைக் கேட்டுக் கொண்டிருந்தாலும், இறைவன் நிச்சயம் தரமாட்டான். எதையும் எதிர்பார்க்காமல் இறைவா எதை கொடுத்தாலும் யான் ஏற்றுக்கொள்கின்றேன் என்று அன்போடு நெருங்குங்கள் இறைவனை. அப்பொழுதுதான் அனைத்தும் கொடுப்பானே தவிர மற்றவை எல்லாம் செல்லுபடியாகாது.  தாயே இவை யானே கொடுத்தேன் என்று வைத்துக்கொள். இன்னும் கொடுக்கிறேன் உந்தனக்கு. 


அடியவர் பாண்டியம்மாள்:- ( குருநாதரின் கருணை மழையில் நெகிழந்த தருணம்… ) 


குருநாதர்:- எதை என்று அறிய அறிய ஏன் அனைவரையும் பின் கேட்டீர்களே? யாராவது மற்றவருக்கு சேவை செய்ய வேண்டும். ஏதாவது கொடு என்று நீங்கள் கேட்டீர்களா என்ன? நிச்சயம் இல்லை. அப்பொழுதே உங்கள் பக்தி எங்கு உள்ளது என்று புரிந்து கொள்ளுங்கள். அப்போது இறைவன் எப்படி தருவான்?. தா , தா என்று கூற பிச்சை எடுத்துக்கூட எவை என்று அறிய மற்றவருக்கு கொடுத்தால் இறைவன் உங்களுக்கு கொடுக்க தயாராக இருக்கிறான்.  ஆனால் உன் மனது அதாவது உங்களுடைய மனது அப்படி இல்லையே. குறுகிய மனமே வைத்திருக்கின்ற பொழுது இறைவன் அவ் குறுகிய மனதில் வரமாட்டான் சத்தியமாக.


( சுயநல கர்ம வட்டத்தில் இருந்து மனதை விடுவித்து பெரிதாக்குங்கள். அந்த புரிதலுக்கு கீழே ஒர் படம். குருநாதர் உரைத்த உங்கள் ஆறாவது அறிவை திறக்க ) 






குருநாதர்:- அதனால் பெரிதாக்குங்கள் மனதை. பெரிதாக வைத்துக்கொள்ளுங்கள் எது என்று புரிய புரிய அங்கே (இறைவன்) அமர்ந்து கொண்டால் இறைவன் அனைத்துமே கொடுத்துவிடுவான். அதனால் நல்ல எண்ணங்களோடு,  தான் மட்டும் , தன் பிள்ளைகள் மட்டும் பின் இறைவனிடத்தில் வேண்டாமல் அனைவருக்காகவும் வேண்டிக்கொள்ளுங்கள். இறைவன் எப்படி அதாவது எவ் ரூபத்தில் வரவேண்டும் என்பதை எல்லாம் எண்ணி எண்ணி இறைவனே வந்து உதவிகள் உங்களுக்கு செய்வான் இக்கலியுகத்தில். ஏன் கஷ்டங்கள் வருகின்றது? எவை என்றும் அறிய அறிய இவ்வம்மையை விட உங்களுக்கு கஷ்டங்களா கூறுங்கள்? 



அடியவர்:- வீட்டுலேயும் இவங்களுக்கு சப்போட் ( ஆதரவு )  கிடையாது. எல்லாருமே ஒதுக்கி வைச்சுட்டாங்க. 


நாடி அருளாளர்:- இந்த அம்மாவ விட நீங்க கஷ்டமான்னு கேட்கின்றார் குருநாதர். 


அடியவர்:- ( பாண்டியம்மாள் அவர்கள் ) வீட்ட விட்டு தனியா வந்து தங்கி அவங்க பேரனை வச்சிக்கிட்டு சமைச்சிட்டு இருக்காங்க. யார் சாப்போடும் ( ஆதரவும் ) கிடையாது. ஒத்தையா ஆளா போராடிகிட்டு இருக்காங்க 25 வருசமாக…



அடியவர் பாண்டியம்மாள்:- ( என்ன பத்தி ) ரிப்போர்ட பண்ணிட்டாங்க. எங்க _________ சோறு போட கூடாதுன்னு (அன்னதானம் செய்யக்கூடாது என்று) சொல்லி. அங்க எல்லாமே சொல்லி இந்த புள்ள சோறு போடக்கூடாதுன்னு. இப்ப அவங்கதான் நான் ஸ்டேசன்ல கூட சொன்னேன். நான் சோறு,  கணவன் வேணாம். ஒரு மரத்துல காய்கிது.  ஒரு இடத்துல பூக்குது.  எனக்கு நாலு குழந்தைகள்.  அது இதுக்கு இந்த ஆண்டவர் இந்த அகத்தியரும் சிவனும் அது அதுக்கு ஒரு அது அதுக்கு கல்யாணம் காட்சி பன்னா என்னோட ஆசை வந்து அவரு நாலு பேருக்கு சோறு போடனும்ன்னு என்னைய வவுத்துல (என்) தாயின் கருவிலேயே படைச்சிட்டாங்க. எனக்கு இது தான் அது எனக்கு சொத்து வேண்டாம் சுகம் வேண்டாம். நீங்களே கையெழுத்து போட்டு தாங்க. வேற கல்யாணம் கூட பன்னிக்குங்க. எனக்கு தர்ம சாலையிலே இருந்து என்ன (கடைசியில்) தூக்கி போட்டா போதும்….( இறுதி மூச்சு உள்ளவரை பிறருக்கு சேவை செய்ய வேண்டும் ). 



குருநாதர்:- அம்மையே, அப்பன்களே நீங்கள் பெரியர்களா? அதாவது உங்களிடத்தில் அனைத்தும் இருக்கிறது. அப்பொழுது இவள் இங்கு பெரியவளா என்று கூறுங்கள்?  யான் கூறுகின்றேன் இவன் தான் பெரியவள்.



அடியவர்:- ( இந்த அம்மைக்கு நடந்த கொடுர நிகழ்வுகளை விவரித்தார்கள். அந்த நிகழ்வில் அக்கணமே இறைவன், சித்தர்கள் நொடியில் தண்டனையும் பிறருக்கு உடன் வழங்கிவிட்டனர். )


அடியவர் பாண்டியம்மாள்:- ( தனக்கு கொடுமை, அவமானம் அளித்தவர்களையும் மன்னித்துவிட்டார்கள் ) 


( அகத்திய பிரம்ம ரிஷிகள் பரிபூரண ஆசி பெற்று மாமனிதனாக வாழும் இந்த அம்மையை அங்கு உள்ள அடியவர்கள் முன்னே சென்று அமர வைத்தனர். மகத்தான சேவை செய்துவரும் இந்த அடியவரை பற்றிய தகவல்களை பின் வரும் பதிவில் காண்க

https://siththanarul.blogspot.com/2023/11/1491.html?m=1

பாண்டியம்மாள் செய்கிற அன்னம் பாலிப்புக்கு அகத்தியப்பெருமானே உதவி செய்கிறார் என்பதேஉண்மைநாமும் இயன்ற அளவு இவருடன் ஒன்று சேர வேண்டும் என்பது ஒரு சிறிய வேண்டுகோள்அப்படி பங்குபெற விரும்புகிறவர்களுக்கு தகவலாக 


இவர் பெயர்:திருமதி பாண்டியம்மாள்,

தொடர்பு எண்9047261080 [UPI கிடையாது].


வங்கி கணக்கு விவரங்கள் - 

https://siththanarul.blogspot.com/2023/11/1491.html?m=1


இவரை  போன்ற அகத்தியர் அருள்கனிவு பெற்ற ஒருவர் செய்கிற அன்ன சேவைக்கு உதவுவதுமிகப்பெரிய புண்ணியம்நம் ஒவ்வொருவரின் குடும்பத்திலும் நடை பெரும் ஒவ்வொரு நல்லநிகழ்ச்சியின் பொழுதும் ஒரு சிறு தொகையை அனுப்பி வைத்தால்அவர் அன்னம் பாலித்துவிடுவார்.


)

குருநாதர்:- அப்பனே அனைவருமே எந்தனக்கு அவை வேண்டும் இவை வேண்டும். ஆனால் இவள் தனக்கு உன்னத்தான் கேட்கிறாள். இதுபோல் அதனால் இறைவனிடம் எதையும் கேட்காதீர்கள் உங்களுக்கு எது தேவை என்று கூற இறைவனே பூர்த்தி செய்வான். இது தான் கடைசி வரையும் நீடிக்குமே தவிர மற்றவை எல்லாம் நீடிக்காது சொல்லி விட்டேன். அனைவருக்குமே என்னுடைய ஆசிகள் மீண்டும் வந்து வாக்குகள் பரப்புகின்றேன்.  ஆசிகள். ஆசிகள். 


(மதுரையில் அகத்திய பிரம்ம ரிஷி அடியவர் இல்லத்தில் உரைத்த இந்த வாக்கு பின் வரும் பதிவில் தொடரும் ………)

https://siththarkalatchi.blogspot.com/2023/11/224-4-9-2023-21.html?m=0



ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!

 




No comments:

Post a Comment