“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Monday, November 27, 2023

சித்தர்கள் ஆட்சி - 241 : அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - கோவையில் உரைத்த வாக்கு - பகுதி 1


 

பகுதி - 1 


“அனைத்தும் இறைவா நீ”


குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி கோவையில் வாசித்த பொது நாடி வாக்கு -  ( பகுதி 1 ) 



அடியவர்:- போன பிறவியில் எனக்கு காட்சி கொடுத்து என்ன கட்டி அணைத்துக்கொண்டதும் , இந்த பிறவியில் முருகனே வந்து என்னை அனைத்துக்கொள்வான் என்று சொன்னீர்கள் இல்லையா அகத்தீசப்பா போன முறை , அதுதான் அகத்தீசப்பா ஞாபகத்திற்கு வந்தது. 


நாடி அருளாளர்:- இப்போ அந்த பக்கம் என்ன தெரியுது என்று குருநாதர் கேட்கின்றார். 


அடியவர்:- அகத்தீசப்பா, வீடு , மரங்கள், ஆகாயம் இது எல்லாம் தெரிகின்றது அகத்தீசப்பா. 


குருநாதர்:- அம்மையே மனிதர்கள் தெரிகின்றார்களா? இல்லை என்பேன் அம்மையே. 


அடியவர்:- ஆமாம் அகத்தீசப்பா. 


குருநாதர்:- அம்மையே ஒன்றுமே இல்லை அம்மையே. மரங்கள் அது அது தன் வேலையைச் செய்கிறது அல்லவா? அதே போலத்தான் மனிதன் தன் வேலையை சரியாகச் செய்வதில்லை அம்மையே. அதனால்தான் இறைவன் கஷ்டத்தை ஏற்படுத்துகின்றான். மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று நினைத்து வாழ்ந்து வந்தாலே நிச்சயம் வெற்றிகள் தாயே. 


அம்மையே அப்பொழுது எதை என்றும் அறியாத நிலையிலும் கூட ஏன் (திருச்) செந்தூரை நோக்கி அம்மையே நீ பார்த்தது ஒன்றும் இல்லை வாழ்க்கை கூட இதுபோலத்தான் இருக்கின்றது. அது தவறு செய்து செய்து , கர்மங்களை மனிதன் சம்பாதித்துக்கொண்டு அதனாலே மீண்டும் மீண்டும் தோல்வியில் விழுகின்றான் தாயே.  


இப்படி ஒன்றுமே இல்லாமல் இருந்தால் அனைத்தும் இறைவன் காரணம் , இறைவன் காரணம். அனைத்தும் இறைவனாக விளங்குகின்றான் அனைத்துக்கும் என்றெல்லாம் நிச்சயம் மனதில் நிறுத்திக் கொண்டாலே அம்மையே தோல்விகள் ஏது அம்மா? 


அடியவர்:- (அழுது கொண்டே) சரி. அகத்தீசப்பா. 


குருநாதர்:- அம்மையே ஏன் அழுதாய் என்று கூற வேண்டும்.


அடியவர்:- அப்பா முருகன் மேல் கொண்ட அன்பு அப்பா. திருச்செந்தூர்….


குருநாதர்:- அப்பொழுது யான் உந்தனுக்காக வந்து வாக்குகள் செப்புகின்றேனே , எந்தன் மீது  அன்பு இல்லையா?


அடியவர்:- அகத்தீசப்பா!!!! சிவ சிவா. அப்பா உங்களுக்கு தெரியும் இல்ல அகத்தீசப்பா..நான் தினமும் உங்களுடன் பேசுவது….


குருநாதர்:- (அம்மையே நீ எம்முடன் அன்பாக பேசுவது ) அவை தன் எந்தனுக்கு தெரியாதா என்ன?



அடியவர்:- என்னுடைய அன்பு என்ன என்று உங்களுக்கு தெரியும் என்று திருவண்ணாமலையில் நீங்க சொன்னிங்க இல்லையா? 



குருநாதர்:- அம்மையே  நிச்சயம் ஒன்று இதற்கு நிச்சயம் பதிலளிக்க வேண்டும்.



அடியவர்:- அகத்தீசப்பா. உங்கள் திருவடி மட்டும் போதும்.  எனக்கு எதுவுமே வேண்டாம்.


குருநாதர்:- அம்மையே ( ஓர் அடியவரை அழைத்து )  அவனை வரச் சொல்.


அடியவர் 1:- ( முன்னே வந்தார் ) 


குருநாதர்:- அப்பனே அப்பனே எங்கும் இருக்கிறான் இறைவன். அப்பனே எங்கும் காட்சியளிக்கின்றான் இறைவன். அப்பனே அப்படி இருக்க நீ எதற்காக இங்கு வந்தாய் கூற வேண்டும்.?



அடியவர் 1:- ஐயா குருநாதர் வாக்கு கேட்கவேண்டும்.


குருநாதர்:- அப்பனே நீ அங்கிருந்தே கேட்டிருக்கலாமே?



அடியவர் 1:- நிச்சயம் கேட்டிருக்கலாம். இருந்தாலும் நேராக பார்க்கக்கூடிய வாய்ப்பு…குருநாதரோடு travel செய்ய வாய்ப்பு


குருநாதர்:- யான் அங்கேயே இருக்கின்றேனே அப்பனே.


அடியவர் 1:- நிச்சயம்.


குருநாதர்:- அப்பனே இதனால் உன் இல்லத்தவளை வரச்சொல்.


(அடியவர் துணைவி அருகே வந்து நின்றார். அமரவில்லை.) 


அடியவர் 2:- எனது ஊரில் பாம்புகள் தெரிய ஆரம்பித்தது. வீட்டின் உள்ளே எனக்கு ஐந்து தலை பாம்பே தெரிந்தது. இது எனக்கு புரியவில்லை. இது எல்லாம் எதன் அறிகுறி? 


குருநாதர்:-  (அவர் கணவரைப் பார்த்து) அப்பனே கிரகங்கள் ராகு கேது அப்பனே புரிந்து கொண்டாயா?


( இந்த இடத்தில் ஒரு சூட்சும வாக்கை உரைத்து அம்மையை உடன் செய்ய வைத்தார் கருணைக்கடல். இந்த அடியவர் ஜோதிட தசா புத்தியை உரைக்க ( கர்மா ) , அதை உடன் அவர் இல்லத்தரசியை வைத்தே போக்கினார்கள் என்பதே உண்மை. கருணைக்கடல் செய்த கர்ம நீக்கம் அங்கேயே நடந்தது. ) 


அடியவர்கள் கவணத்திற்கு :- ஜோதிடம் சம்பந்தப்பட்ட எந்த ஒரு விசயங்களை பேசினாலும் கர்மா உண்டு. அந்தப்பக்கமே போகாமல் , தலை வைக்காமல் இருப்பதே கர்மங்களை சேர்க்காமல் இருக்க ஒரு எளிய வழி. ஜோதிடம் வேண்டவே வேண்டாம் அடியவர்களே. இறைவன் பாதத்தை சிக்கென பிடியுங்கள். குருநாதர் வழியில் நடக்க அனைத்தும் நன்மையாகும்.


( இந்த அம்மைக்கு  நடக்க இருந்த கொடும் நிகழ்வை  விவரித்தார் கருணைக்கடல்.  )  


ஆலால் அம்மையே ஈசன் உன்னை விட்டுவிடவில்லை. 


அடியவர் 2:- ஆனால் எனக்கு அதன் சத்தம் நன்கு கேட்டது. கனவில் பலமுறை பார்த்து உள்ளேன். நேரில் ஐந்து தலை ( அரவம் ) பார்த்தேன். 


குருநாதர்:- அம்மையே  ஆனாலும் அனைத்தும் மாறிவிடும் என்பேன் அம்மையே. 


அப்பனே அம்மையே யான் ஏற்கனவே சொன்னேன். இத்தனை நாட்கள் ஏன் செல்ல வில்லை நடைப்பயணம்?.


அடியவர் 2:- தெரியவில்லை ஐயா. 


குருநாதர்:- அம்மையே பின் யான்

கூட தெரியவில்லை என்று சொல்லி விட்டு இருந்தால் எப்படி அம்மையே?



குருநாதர்:- அம்மையே பின் யீன் தெரிகின்றேனா? இல்லையா?


அடியவர் 1:- அகத்தியர் உன் கண்ணுக்குத் தெரிகின்றாரா? இல்லையா? 


அடியவர் 2:- மனசு அளவுக்கு தெரிகிறது. அவர் வந்தால், போனால் தெரிகிறது. 


குருநாதர்:- அம்மையே இப்பொழுது தெரிகின்றேனா இல்லையா?


அடியவர் 2:- ஆமாம்


குருநாதர்:- அம்மையே அப்போது தெரியவில்லை என்று ஏன் சொன்னாய்?


அடியவர் 2:- எனக்குப் புரியவில்லை first.


குருநாதர்:- அம்மையே அதனால் நிச்சயம் இவன்தன் வில்லன் என்றால் இவன் தனக்கு மேலே இருக்கின்றாய் நீ அம்மையே. அதனால் தான் இவன் உட்கார்ந்திருக்கிறான் நீ நின்று கொண்டிருக்கிறாய் அம்மையே இதற்கு பதில் தெளிவாக கூற வேண்டும் நீ.


( சில அடியவர்களை இல்லறத்தில் ஈடுபடுத்தி அவர்களை ஒரு நல் வாழ்வு வாழ அவர்கள் இல்லத்தரசிகளுக்கு பலம் அதிகம் கொடுத்து விடுவார் இறைவன். இந்த சூட்சும நிகழ்வு பல இல்லங்களில் நடந்து கொண்டே உள்ளது இறைவன் அருளால். அதாவது இல்லத்தில் கணவனை விட மனைவிக்கு பலம் அதிகமாக , கணவன் ஒரு திறமையாளனாக இருந்தும் - வெளியில் புலி, வீட்டில் எலி - அடங்கி வாழும் நிலை உண்டு. அதன் மகத்தான காரணத்தை குருநாதர் எடுத்து உரைத்தார்கள்) 



குருநாதர்:- அம்மையே  இதற்கும் காரணம் உண்டு அம்மையே. நீ இல்லை என்றால் இவன் பைத்தியனாக ( ஞான வழியில் ) திரிந்து இருப்பான். உண்மையா இல்லையா என்று அவனைப் பார்த்துக் கேள்.


அடியவர் 1:- உண்மைதான்.


குருநாதர்:- அதனால்தான் அப்பனே நீ கீழே உட்கார்ந்து இருக்கிறாய் அவள் தன் மேலே இருக்கின்றாள் ( நிற்கின்றாய்). அப்பனே புரிகின்றதா? அப்பனே அவள் இல்லை என்றால் எங்கெங்கோ சென்று அப்பனே ருத்ராட்சத்தை அணிந்து பின் ஐயோ!! அது இது என்றெல்லாம் ( கூறி )  பின் பாடங்கள் , எந்தனுக்கு  ஞானம் வந்து விட்டது , அனைவரும் அதைச்செய்கின்றேன், இதைச்செய்கின்றேன் என்றெல்லாம் தெருத்தெருவாக ஓடி இருப்பாய். இதனால்தான் அப்பனே யான் சொல்லி விட்டேன். 


அப்பனே பல பேர்களும் கூட அப்பனே அதனால் நிச்சயம் பின் தட்டிக்கேட்க அளவுக்கு ஒருவள் இருந்தால்தான் அப்பனே அனைத்தும் அடங்கும்மப்பா. 



அதனால் இவள்தனுக்கு  நீ அடங்கியே ஆக வேண்டும் அப்பனே . ஊருக்கு அடங்காவிடிலும் இவள் தனக்கு அடங்கி இரு அப்பனே. அனைத்தும் புரியும் என்பேன். 



இதனால் அம்மையே அனைத்தும் கிடைக்கும் கிடைக்கும்.  நான் சொல்லியது அம்மையே நிச்சயம் நடை பயணத்தை நிச்சயம் மேற்கொள்.  அனைத்தும் மாறும்.  அதனால் எக் குறைகளும் இல்லை. நல் நேரங்கள் தான் அம்மையே. ஆனாலும் சில சில புண்ணியத்தால் அம்மையே ( கடுமையான கண்டங்களில் இருந்து ) நீ தப்பித்து விட்டாய் அம்மையே.



அம்மையே மீண்டும் சொல்கின்றேன் அம்மையே. இவன்தன் இறைவன் இறைவன் என்று பைத்தியனாகிவிடுவான். அதனால்  அடிக்கடி தலையில் கொட்டிக் கொண்டே இரு. 



அதனால் நிச்சயம் எதையோ சொல்லி ஆனாலும் நீ நம்பவில்லை தாயே அதுவே போதுமானது என்பேன். அதுவும் இறைவன் செயலே. 


இதனால் அம்மையே எக்குறைகளும் கொள்ளத்தேவை தேவை. உன் பிள்ளைகளுக்கு நல்வாழ்க்கை யான் தந்துவிடுகின்றேன். 


அப்பனே கவலை இல்லை. ஒன்று 

என்று தெரியாமல் கூட ஒன்று என்று ஒருவளை கேட்டேன் அவளை வரச்சொல்.

( முதலில் வாக்கு கேட்ட அடியவரை அழைத்தார்கள் கருணைக்கடல்) 


அடியவர்:- அகத்தீசப்பா. லோபா அம்மா. 


குருநாதர்:- அம்மையே யான் என்ன கேட்டேன் அம்மையே. அதை நிச்சயம் ( என்னுடன்  ) வாதாடு. 


அடியவர்:- அப்பா, என்னுடைய சிற்றறிவுக்கு எட்டவில்லை அகத்தீசப்பா. 


குருநாதர்:- அப்பனே எது எந்த கீழிருந்து மேல் இருக்கிறாளே முதலில் உன் மனைவியைக் கேள்.


அடியவர் 1:- நீ கவனித்தாயா? ஒன்று என்று குருநாதர் உரைத்த வாக்கினை…


அடியவர் 2:- கேட்கவில்லை கடைசியில்


அடியவர் :- அகத்தீசப்பா உங்கள் திருவடி மட்டும் போதும் என்று நான் கேட்டேன் அகத்தீசப்பா. நீங்க ஒன்று மட்டும் கேட்டீர்கள்,  அகத்தீசப்பா. 


அடியவர் 2:- அந்த ஒன்று மட்டும் போதுமா என்று குருநாதர் கேட்கின்றார்கள். 


அடியவர் 1:- குருநாதர் அதற்கு முன் திருச்செந்தூரில் முருகனைப் பார்த்து அழுதீர்கள் என்று சொன்னபோது, குருநாதர் என்னைப் பார்க்கவில்லையா (அன்புடன்) என்று கேட்டார் இல்லையா?


அடியவர் :- ஆமாங்கய்யா


அடியவர் 1:- அப்போதுதான் சொல்கின்றார் ஒன்று என்று. அதாவது அவர் ( திருச்செந்தூர் முருகன் ) வேறு இல்லை நான் ( அகத்தியன் ) வேறு இல்லை என்று…


குருநாதர்:- அம்மையே இறைவன் ஒருவனே. அனைவருக்கும் இதை யாங்கள் உணர்த்தினோம்.  இன்னும் உணரவைக்கப் போகிறோம்.  அப்போது நம்பி விடுவான் (மனிதன்).  அம்மையே நீ சொன்னாயே அனைவருக்கும்  பின் தான தர்மங்கள் செய்யவேண்டும் என்று (எண்ணுகின்றாயே) , உன் பக்கத்தில் இருக்கின்றாளே அவன் பின் மூதேவியாகவா இருக்கின்றாள்?. அவள் தனக்கு தேநீர் கொடு உன் கைகளால்.

(அடியவரை தேநீர் கொடுக்கச்சொன்னார்கள்  கருணைக்கடல்) 


குருநாதர்:- அம்மையே, அப்பனே இதனால் நல்ஙிதமாகவே இன்னும் வாக்குகள் சிறக்க பொருத்திருக.


அடியவர் 1:- குருநாதா!!!!!!!!!!


நாடி அருளாளர் :- ஐயா யாராவது 

விருச்சிக ராசி, மகர ராசி, கும்ப ராசி அதன்பின் மேஷம் யாரும் இருக்கின்றீர்களா? 


( அங்கு உள்ள பலர் தனது ராசியை தெரியப்படுத்தினர். அவர்கள் அனைவரையும் நாடி அருளாளர் முன்னே வந்து அமரச்சொன்னார்கள். இந்த ராசியினர் வருவார்கள் என்று முன்பே நாடி அருளாளருக்குத் தெரியப்படுத்தி விடுவார் கருணைக்கடல். )  



குருநாதர்:- அதன் முன்னே எதை என்று கூற குருவானவன், முதலில் வில் அம்பு…


நாடி அருளாளர்:- தனுசு ராசி யாரும் இங்கு வந்து உள்ளீர்களா?


( தனுசு ராசி அடியவர்கள் முன்னே அமர்ந்தனர்) 



குருநாதர்:- அப்பனே இதனால்  சில பக்குவங்கள் நிச்சயம் அப்பனே அனைத்தும் இழந்தாலும் ஆனால் இருக்கின்றது அப்பனே இதற்கு பதில் அளி. 


அடியவர் 4:- இறை நம்பிக்கை நம்பிக்கை மட்டும் தான்.


குருநாதர்:- அப்பனே இதை அனைவருக்குமே சொல்.  எழுந்து நில்.


அடியவர் 4:- இறை நம்பிக்கை ஒன்று மட்டும் இருந்தால் போதும் . யாரும் கவலைப்படாதீர்கள். அது ஒன்று மட்டுமே உங்கள் எல்லாரையும் காப்பாற்றும்.



குருநாதர்:- அப்பனே , நீ இறக்கக்கூடியவன். இவ் (இறை) நம்பிக்கை உன்னை காப்பாற்றி விட்டது. அப்பனே பின் கஷ்டத்திலும் இறைவன் இருக்கின்றான். இதற்கு பதில் அளி அனைவருக்குமே.


(கோவையில் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த இந்த வாக்கு பின் வரும் பதிவில் தொடரும்…...) 


https://siththarkalatchi.blogspot.com/2023/11/242-2.html?m=0

ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!




No comments:

Post a Comment