“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Thursday, November 16, 2023

சித்தர்கள் ஆட்சி - 231 : அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 5-9-2023 உரைத்த வாக்கு - பகுதி 27


 

பகுதி - 27


“அனைத்தும் இறைவா நீ”


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரை அடியவர் ஒருவர் இல்லத்தில் இரண்டாம் நாள் உரைத்த வாக்கு - 05.09.2023 ( மதுரை வாக்கு - பகுதி 27 )



இந்த வாக்கின் முந்தைய பகுதி கீழே உள்ள பதிவில் படிக்கவும்


https://siththarkalatchi.blogspot.com/2023/11/230-5-9-2023-26.html?m=0



கேள்வி கேட்ட அடியவர்:- அந்த அந்த அந்த பிரச்சனை கேளுங்க.


குருநாதர்:- அப்பனே ஒரு காலில் நில்.


கேள்வி கேட்ட அடியவர்:- ( எழுந்து ஒரு காலில் நின்றார்) 


குருநாதர்:- அப்பனே அப்படியே நில்.


( ஏறக்கனவே நின்று கொண்டு இருக்கும் அடியவர் ஒருவரை ) அப்பனே நீ நிற்கின்றாயே இவனை ஏன் நிற்க வைத்தேன் என்று கூற வேண்டும்.? 


அடியவர்:- சரியான பாடம் புகட்ட


குருநாதர்:- அப்பனே அவன் தனக்கு என்னென்ன தவறுகள் செய்தோம் என்பது அவனுக்கே தெரியும். அப்பனை மீண்டும் என்னிடத்தில் கேட்டுக் கொண்டிருக்கிறானே , இது நியாயமா என்று அவனிடத்தில் கேள்? 



கேள்வி கேட்ட அடியவர்:- ( பல கேள்விகள் கேட்டது)  தப்பு தாங்கய்யா. அதுக்கு தாங்கய்யா நிக்கிறேன். 


குருநாதர்:- அப்பனே இரு கைகள் மேலே  கூப்பி ( தூக்கி குவித்து )  வணங்கு.


கேள்வி கேட்ட அடியவர்:- சரிங்க ஐயா ( ஒற்றைக்காலில் நிற்க ஆரம்பித்தார்)


குருநாதர்:-  அப்பனே அப்படியே நில்.


அடியவர்கள் :- ( சிரிப்பு ) 


கேள்வி கேட்ட அடியவர்:- இருங்கயா பேலன்ஸ் பன்னி நிக்கிறேன். கஷ்டம் தாங்க ஐயா. நான் பாத்துக்கிறேன். 


குருநாதர்:- அப்பனே அனுதினமும் இப்படியே நின்று  மந்திரத்தை சொல்லிக் கொண்டே இரு அப்பனே அனைத்தும் மாறும் அப்பா சொல்லி விட்டேன் அப்பனே. பின் என்னால் முடியவில்லை என்று கூறிவிட்டால் அப்பனே சொல்லி விட்டேன் யான். 


கேள்வி கேட்ட அடியவர்:- நிக்கின்றேன் ஐயா. சுதர்ஷன மந்திரமா ஐயா? 


குருநாதர்:- அப்பனே முதலில் நின்று எவ் மந்திரத்தையும் ஜெபி. 


( அடியவர்கள் இந்த வாக்கை நன்கு உள் வாங்கவும் மந்திர ஜெபங்களுக்கு குருநாதர் காட்டிய சூட்சும வழி )


கேள்வி கேட்ட அடியவர்:- ஐயா நான் பல குழப்பத்தில் உள்ளேன். எனக்கு தெளிவாக..


குருநாதர்:- அப்பனே இதை செய். குழப்பமும்  நீங்கும் என்பேன் அப்பனே. இதில் கூட அர்த்தம் உள்ளதப்பா.


அடியவர்:- மனதை ஒருமுகப்படுத்தல்…


குருநாதர்:- அப்பனே மனிதன் ( அவனுக்கு) அனைத்தும் கொடுத்தாலும் அப்பனே மற்றவர் தயவால் தான் வாழ்கிறான். நீயும் அதுபோலத்தான் அப்பனே. (மனிதர்களை) புடித்து விட்டாய் அங்கு அப்பனே உன் நிலைமை இப்பொழுதே புரிகின்றதா? அப்பனே நீயாக சரியாக ( எங்களையே நம்பி ) ஒரே காலில் நின்றிருந்தால் யாங்கள் வந்து காத்து இருப்போம் அப்படனே. ஆனால் மனிதர்களை நம்பி விட்டாய் நீ.


கேள்வி கேட்ட அடியவர்:- அப்டீங்களா ஐயா ( குருநாதர் கருணையால் அடியவர் மனம் மாற்றம் அடைய ஆரம்பித்த தருணம் இது ) 


அடியவர்:- மனிதனை பிடிச்சுட்டார்


கேள்வி கேட்ட அடியவர்:- தப்புங்க ( தவறுதான் ) ஐயா


குருநாதர்:- அப்பனே அதனால்தான் தன்னோடு இருக்கும் குறைகளை அப்பனே நீக்கவே இறைவன் சில கஷ்டங்களை தருகின்றான். இப்பொழுது கூட என் பேச்சை கேட்க மாட்டாய் வரும் காலங்களில் என்று யான் சொல்வேன். 

யான் காலை கீழே விடு என்று சொல்ல வில்லை. நீ விட்டு விட்டாய் அப்பனே.  (அடியவர்கள் சிரிப்பு அலை) இப்பொழுதே புரிகின்றது இதில் இருந்து.


கேள்வி கேட்ட அடியவர்:- ஐயா இந்த…


குருநாதர்:- அப்பனே எங்கிருந்து வந்தாய் நீ?


கேள்வி கேட்ட அடியவர்:- ( தன் ஊர் பெயரெ செப்பினார் ) 


குருநாதர்:- அப்பனே என்று கூற. அதிகாலையில் இருந்து யாரு கூட பேசினாய்?


கேள்வி கேட்ட அடியவர்:- ( இரு அடியவர்கள் பெயர்கள் கூறினார் ) 


குருநாதர்:- அப்பனே  அவர்கள் இருவரையும் எழச்சொல்.


( அந்த இரு அடியவர்களும் எழுந்து நின்றனர் அங்கு. குருநாதர் அந்த இரு அடியவர்களிடம் வாக்கு உரைக்க ஆரம்பித்தார்கள்… )



குருநாதர்:- அப்பனே பின் நீங்கள் சொல்வதை இவன் வாழ்க்கையில் மறக்கக்கூடாது. அப்படி சொல்ல வேண்டும் இப்பொழுது அப்பனே.  அப்பொழுதுதான் உங்களுக்கும் என்னுடைய ஆசிகள்.  


கேள்வி கேட்ட அடியவர்:- (என்னை) திட்டுங்கய்யா. 


கேள்வி கேட்ட அடியவரிடம் எடுத்து உரைக்கும் அடியவர்:-     நம்பிக்கை வர வேண்டும். குருநாதர் சொன்னார் ஒரு வார்த்தை சொன்னார். ஒற்றைக்காலை தூக்கி கையை கூப்பி நிக்கச்சொன்னார்கள். நீங்க நின்று இருந்தீர்கள் என்றால் கர்மம் நீக்கி இருப்பார் அகத்தியர்.


கேள்வி கேட்ட அடியவர்:- ஐயா நிக்க முடியல


கேள்வி கேட்ட அடியவரிடம் எடுத்து உரைக்கும் அடியவர்:- நிக்கல நீங்க. முயற்சி செய்யுங்க தப்பு இல்லை. நீங்க முயற்சி செய்யலையே. 


கேள்வி கேட்ட அடியவர்:- நிக்குறேன் ஐயா. 


கேள்வி கேட்ட அடியவரிடம் எடுத்து உரைக்கும் அடியவர்:- தயவு செஞ்சு நில்லுங்க. 


கேள்வி கேட்ட அடியவர்:- ( ஒரு கால் அடுத்த காலில் வைக்கும்போது ) பேன்ட் வழுக்குது…


கேள்வி கேட்ட அடியவரிடம் எடுத்து உரைக்கும் அடியவர்:- நீங்க எல்லாம் வேற விளையாட்டா நினைச்சுகிறீங்க. உண்மையில சொல்ரேன் . ஐயா சொன்னார்னா விளையாட்டு கிடையாது. சிரிப்பு கிடையாது. அது நிச்சயம் தயவு செஞ்சு நில்லுங்க.


கேள்வி கேட்ட அடியவர்:- நிக்கிறேன்…


கேள்வி கேட்ட அடியவரிடம் எடுத்து உரைக்கும் அடியவர்:- தயவு செஞ்சு நில்லுங்க. விளையாட்டுக்கு சொல்லல.. நீங்க திருப்பி திருப்பி உங்க குறைகளை கேக்குறீங்களே ஒழிய. அவர் ( குருநாதர் ) சொல்றத கேக்க மாட்டேங்குறீங்க. 


கேள்வி கேட்ட அடியவர்:- ________


கேள்வி கேட்ட அடியவரிடம் எடுத்து உரைக்கும் அடியவர்:- அது சரி. அதுவும் சொல்லுவார் ஐயா.  முயற்சி செய்யுங்க. தப்பு இல்ல.  இது ஒரு யோகா. அவ்ளோதான். இதுனால ரத்தம் மேல போகும்ங்க.  மூளைக்கு அதிகப்படியா ரத்தம் போச்சுன்னா மனசு தானாக அமைதி ஆகும். மூளைக்கு ரத்தமே போக மாட்டேங்குது. அதை கொண்டு போங்க. மனசு தானாக அமைதி அடையும். 



குருநாதர்:- அப்பனே ( இருவரில்) ஒருவன் மட்டும் சொன்னான் அப்பனே. மற்றவன வாயை மூடிக் கொண்டிருக்கின்றனே பேச்ச்சொல்.


அடியவர்கள்:- ( சிரிப்பு அலை ) 


கேள்வி கேட்ட அடியவரிடம் எடுத்து உரைக்கும் அடியவர் 2:- ஐயா அவர் கருணைக்கடல். அவர் நம்ம எல்லாரையும் 

இந்த இடத்தில கூட்டி ( அழைத்து வாக்கு உரைக்கின்றார்கள் ). அந்த கருணைக்கடல் நம்ம 

பிரச்சனைகளுக்கு எதிராக ( நம்மை ) ஒரு ஆட்கொண்டு சொல்ரார். அவர் தெய்வம். தெய்வம் வந்து அவ்ளோ கருணையோட சொல்லும் போது அதை மீறி எதுவுமே இல்லங்க ஐயா. அப்படியே கெட்டியாக பிடிச்சுக்கனும்.



குருநாதர்:- அப்பனே மூன்று நாட்கள் நான்கு நாள்களுக்கு முன்பே முன்பே இப்பொழுது சொன்னானே ( அடியவர்# 2) அவனுக்கு ஒரு பெரிய மரண கண்டம் அப்பா. ஆனாலும் அப்பனே அதை மாற்றி எழுதி வைத்து விட்டேன் அப்பனே. இப்பொழுது பார்த்தீர்களா விதியை கூட என்னால் மாற்ற இயலும் அப்பனே. (ஆனால்) உன் விதியை என்னால் மாற்ற இயலாது அப்பனே. எவை என்று புரிய புரிய அப்பனே, மூடனே, முட்டாளே.


( இந்த அடியவருக்கு ரயிலில் ஒரு பெருய மரண கண்டம் இருந்ததாக அங்கு அடுயவர்கள் பேச்சு)


குருநாதர்:- அப்பனே அனைவருக்கும் சொல் அப்பனே. விதியைக் கூட எப்படி என்னால் எப்படி மாற்ற இயலும்  என்று நீ (அடியவர்# 2) கூற வேண்டும் அப்பனே. முதலில் நீ கூறு?


( இந்த அடியவரின் மரண கண்டம் இதனை எப்படி விதி மூலம் மாற்றினார்கள் என்று எடுத்துஉரைக்க ஆரம்பித்தார் இரண்டாம் அடியவர். இந்த அடியவருக்கு காலே துண்டாகி போய் இருக்க வேண்டிய கொடுமையான கண்டம். ஆனால் கருணைக்கடல் அகத்திய பிரம்ம ரிஷி இந்த அடியவருக்கு ஆச்சரிய மூட்டும் வகையில் காப்பாற்றி உயிர் பிச்சை இட்டு உள்ளார்கள். அந்த அடியவர் சொனவற்றை அப்படியே வாய் மொழி வழக்கி்ல் இங்கு கீழே…..) 


அடியவர்# 2:- கோயம்புத்தூருக்கு ஐயா ஜீவ நாடி ஐயா வந்து இருக்கின்றார்ங்க என்று தெரிந்து போனோம். போயிட்டு வரும்போது நான் அடியவர்#1 காரில் இரண்டரை மணிக்கு பெரியார்ல இறக்கி விட்டாங்க. அங்க இருந்து எனக்கு  4 மணி இருந்ததனால ஐயாவுடைய youtube கேட்டுக்கிட்டே இருந்து அப்பறம் (train) unreserved என்பதால் கூட்டம் அதிகமா இருந்துச்சு. நான் ஏறின வாசலுக்கு opposite வாசல்ல உட்காந்து இருக்காங்க.  ( மதுரை to தென்காசி trainல ) .  உட்கார்ந்துகிட்டு இவருக்கு மெசேஐ் எல்லாம் அனுப்பிவிட்டு பாக்கெட்ல போட்டுகிட்டு  ஐயாவோட அன்னைக்கு ஜீவ நாடியதான் மனசுல ( அகத்தியர் ) ஐயா பேரதான் உச்சரிச்சு கிட்டே இருந்தேன். ஒரு 5 நிமிஷம் கூட ட்ரயின் கிளம்பிடுச்சு. ஒரு 20 நிமிசத்துக்கு அப்புறம் வந்து பாத்தீங்கன்னா மதுரை to கள்ளிக்கொடி இந்த ஸ்டேசன்ல பிளாட்பாம்ல என் காலு உள்ள இருக்கு. Platform ல ( என் கால் ) விரு விருன்னு கால்ல அடிக்கிரது மட்டும் sound கேட்டுச்சு. நான் எப்படி மேல வந்தேன்?  ( எனக்கு ) காலே இல்ல அப்டிங்குற ஒரு feel வந்துச்சு வெளிய எடுக்கும் போது ஆனா பாத்தீங்கன்னா வலி அவ்வளவு உயிருபோச்சு. உடனே இவருக்கு ( அடியவர்# 1) phone அடிச்சேன். என்னமோ நடந்துச்சு. ஆனா ஐயாதான் fullஆ தூக்கி உட்ட மாதிரி காப்பாத்தீட்டாரு. இது உடனே ஐயாவே phone அடிச்சு அன்னைக்கே சொல்லிட்டேன். என்னால முடிநல. என்னால முடியல சுத்தமா 100% இல்ல 1000% ஐயா( அகத்தியர்) இல்லாம என்னால மேல வந்துஇருக்க முடியாது. எல்லாருக்கும் சொன்னோம். பௌர்ணமி அன்னைக்கு அன்னதானமும் வெச்சு இருந்தோம். அப்படி அங்க போவது அப்டினு எனக்கே தெரியாம அந்த யோசனை வந்தது. ஆனால் ஒரு சிறு சொட்டு ரத்தம் மட்டும்தான் வந்துச்சு. அவ்வளவு பெரிய accident. ஒன்னுமே ( எந்த சேதமும் ) இல்லாம போச்சு. இன்னைக்கு ( எந்த இழப்பும் ) ஒன்னுமே இல்லை என் கால்ல.  எல்லாமே குருநாதர். உடனே நான் சொல்லிட்டேன். ஐயாதான் ( எனக்கு உயிர் பிச்சை கொடுத்தார்).


மற்றொரு அடியவர்:- அங்க கோயம்புத்தூர்ல இதே மாதிரி ( ஜீவ நாடி )  சத்சங்கம் நடக்கும்போது இவ்விடத்தில் இருக்கக்கூடிய ஒருவனுக்கு மரண கண்டம் அப்டின்னு ஐயா சொல்லி இருந்தார்கள். அப்பா ஐயாகிட்ட பேசும்போது ஐயா அந்த ( நாடி வாக்கு ) வார்த்தையோ அப்டின்னு யோசன பண்ணி சொன்னேன். 


குருநாதர்:- அப்பனே எதை என்றும் அறிய அறிய இப்படியும் கூட. அதனால் அப்பனே விதியில் கூட என்ன இருந்தாலும் அதை சிறியதாக என்னால் குறைக்க முடியும். ஆனால் நம்பிக்கை வேண்டும். உயிரை அப்பனே இறந்திருக்கக் கூடியவனைக்கூட யான் உயிர்ப்பித்து இருக்கின்றேன் இன்னும் நலன்கள் செய்ய. நின்று கொண்டு இருக்குன்றானே இவன் தனக்கு உயிர் பிச்சை கொடுத்து விட்டேன் அப்பனே. 


அடியவர்:- ஈஸ்வரா…


குருநாதர்:- அப்பனே இதனால் யார் யாருக்கு தெரியும்? என்னை நம்பியவர்களை அப்பனே கைவிட்டதாக சரித்திரமே இல்லை என்பேன் அப்பனே. சோதனைகள் வைப்பேன் அப்பனே. ஏன் என்றால் அப்பனே உங்கள் நன்மைக்காகத்தான் அப்பனே. கடைசியில் அனைத்தும் சீராக்குவேன் அப்பனே. அகத்தியனால் முடியாதது இவ்வுலகத்தில் எவராலும் முடியாதப்பா. ஈசனாயினும் சரி. விஷ்ணுனாயினும் சரி.பிரம்மனாயினும் சரி. 


அடியவர்# 1:- எல்லாமே அவர்தான்.


குருநாதர்:- அப்பனே இப்பொழுது புரிந்து கொள்ள மாட்டார்கள் அப்பனே. அப்பனே பின்பு விவரிக்கின்றேன். அதாவது அனைத்து சொல்லிவிட்டு பக்குவங்கள் ஏற்படுத்தி ஏற்படுத்தி மனிதனுக்கு அப்பனே பக்குவங்களே இல்லையப்பா நேற்றைய பொழுதில் சொல்லிவிட்டேன். பக்தி என்பது உண்மை என்பது கூட அப்பனே இன்னும் அப்பனே பூஜியத்திலேயே இருக்கின்றான் மனிதன் அப்பனே. அப்படி இருந்தால் எப்படியப்பா புரியும் இன்றைய மனிதர்களுக்கு? புரியாதப்பா.



அப்பனே அதனால் முதல் வகுப்புக்கு அழைத்து வர வேண்டும். அப்பனே இரண்டாம் வகுப்புக்கு இன்னும் மூன்றாம் வகுப்புக்கு அப்பனே இப்படி அழைத்து வந்து சொன்னால்தான் புரியும் அப்பா. அப்படி இல்லை என்றால் புரியாதப்பா புரியாமலே இறந்து விடுகின்றான் அப்பனே. மீண்டும் பிறவிகள் எடுத்து அப்பொழுதுகூட புரிவதில்லை என்பேன் அப்பனே. இவ்வாறு பிறவிகள் எடுத்து எடுத்து கஷ்டங்களை பட்டு பட்டு அப்பனே ஆதனால்தான் என்னிடத்தில் வருபவர்கள் கூட சில சோதனைகளை கொடுத்து கொடுத்து , அப்பனே திருத்தி திருத்தி முதலில் அப்பனே முதலில் பிறவிக்கடனை   முடிப்பேன் அப்பனே.  அவ்வளவுதான் என்பேன் அப்பனே. அதற்காக யான் பாடுபடுவேன் நீங்கள் அமைதியாக இருந்தாலும். 


அடியவர்கள்:- ( அமைதி )


குருநாதர்:- அப்பனே என்னை பற்றி எடுத்துரை.


அடியவர் :- ஆதியும் அவரே. அந்தமும் அவரே.  ஈசனும் அவரே.  பிரம்மாவும் அவரே. விஷணுவும் அவரே. முருகனும் அவரே. 


அதாவது அகஸ்தியர் ஒரு பாடல் இருக்கு. பிரம்மாவாகவும் விஷ்ணுவாகவும் கால பைரவர் ஆகவும் , தட்சணாமூர்த்தியாகவும் சக்தியாகவும்,  எல்லாமாகவும்்இருப்பது யாமே. அதாவது ஈசனுக்கு மேல அகத்தியர் வாக்கு சொல்லி இருக்கிறார் குருநாதர். ஈசனுக்கு மேல் மித மிஞ்சிய சக்திகள் எனக்கு உண்டுன்னு சொல்லி இருக்கிறார். அப்போ அந்த வார்த்தை படிக்கும்போது ஈசன்தான் பிரதான தெய்வம் அப்டின்னு நாம நினைக்கிறோம். அதையும் மீறி மிஞ்சிய சக்தின்னா இவருதான் ஆதி. அதுக்கப்புறம் தான் அதாவது தன்னை சுருக்கிக் கொண்டு குறுக்கிக்கொண்டை மற்ற தெய்வங்கள் வெளிப்படுத்துறார். ஆனா இவர்தான் ஆதி. ஆதியும் அந்தமும் சர்வ சொரூபியும் இவர்தான். ஆனா மற்ற தெய்வங்களை முன்னிலைப்படுத்தி எல்லாரையும் முன்னிலைப்படுத்தி சொல்றாரே தவிர, இதுக்கு முன்னாடி ஆதியே இவர்தான்.  ஆகி பகவானை வணங்கலாம் என்று சொல்ராங்க இல்ல. அது இவர்தான். சர்வமும் அகத்தியர்.



குருநாதர்:- அப்பனே எது என்று அறிய போதவில்லை என்பேன்.


அடியவர்:- உண்மைதாங்க ஐயா. ஏன்னா அது வந்து புலஸ்தியர் வந்து பொதிகையில் வந்து ஒரு புகழ் மாலை பாடினார். அதாவது நான் சொன்னது மனிதனல்ல உங்கள பத்தி ஒரு துளி கூட யாருக்குமே தெரியாது அகத்தியனை பத்தி சொல்லுவார் ( புலஸ்திய மஹரிஷி). (அடியேன் சொன்னது) அதுல ஒரு துளி கூட கிடையாதுதான். உண்மைதான். 


குருநாதர்:- அப்பனே அப்படி தெரியாமல் என்னிடத்தில் எப்படி கேள்விகள் கேட்க வேண்டும் என்று கூட மனிதனுக்கு தெரியவில்லையே அப்பனே. அப்பொழுது கூட யான் உரைத்துக்கொண்டு இருக்கின்றேன் அப்பனே. நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று அப்பனே. இதனை கூட அதாவது புண்ணியம் இருந்தால் தான் அப்பனே என்னுடைய வாக்குகளும் கேட்க முடியும் சொல்லி விட்டேன் அப்பனே. 


அப்போது உண்மைகள் அனைவருக்குமே யானே குவித்து ( ஊட்டி ) விடுகின்றேன் அப்பனே.  அதனால் எக்குறையும் கொள்ள தேவையில்லை. இன்னும் இன்னும் மாற்றங்கள் இவ்வுலகத்தில் ஏற்கனவே சொல்லிவிட்டேன் அப்பனே. கர்மா கடலில் நீத்தி கொண்டிருக்கின்றீர்கள் என்பேன் அப்பனே. அவ்வாறு கடலில் நீந்தினால் அப்பனே யாருமே உதவி செய்ய மாட்டார்கள் அப்பா. ஆனால் அப்பனே சித்தர்கள் யாங்கள் அப்பனே நீந்தாதே  என்று கையை பிடித்து இழுத்து வருகின்றோம். அதுபோலத்தான் உங்களை அனைவருமே நீங்கள் கஷ்டத்தில் நுழைந்து நுழைந்து அப்பனே சென்று கொண்டிருக்கிறார்கள். அவ்கஷ்டத்தை யாராலும்  தடுக்கவும் முடியாது. அதனால் யாங்களே இவ்வாறு இருக்கின்றானே என்று சில வழிகளில் கூட இழுத்து, அப்பனே அரவணைத்து நல்லது செய்து கொண்டிருக்கிறோம் அப்பனே.


அதனால் எங்களால் மட்டுமே முடியும் நல்லது செய்ய. மற்றவரால் முடியாதப்பா. நீ என்ன பரிகாரம் செய்தாலும் அப்பறம் எப்படி பின்பட்டாலும் அப்பனே ஊர்ந்து சென்றாலும் அப்பனே தலைகீழாக நின்றாலும் ஒன்றும் நடக்கப்போவதில்லை அப்பா ஒன்றும் நடக்கப் போவதில்லை. அப்பனே. யாங்கள் மனதை வைத்தால்தான் அப்பனே அதற்கு தகுந்தாற்போல் நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் கேட்காதீர்கள். நீதி, நேர்மை தர்மத்தை கடைப்பிடியுங்கள் போதுமானது யாங்களே வருவோம்.


அடியவர்:- அந்த ஒரு ஊரில் ஒரு நபர்…


குருநாதர்:- அப்பனே உன்னை பற்றி பேசு. அதனால் உன் நிலைமையே இப்படி இருக்கிறது மற்றவர்களை பற்றி பேசுகிறாயே அப்பனே. வேண்டாம் அப்பனே. அப்படி பேசினால் அவன் கர்மா  உன்னை வந்தடையும். அப்படித்தான் சம்பாதித்துக் கொண்டாய். அதனால் என் நிலமை பின் சீர் செய் என்று பின் புத்திகள் வரவில்லை அப்பனே இப்போது கூட கேட்கவில்லையே அப்பனே. அப்பனே வாய் அகலமானவனே கூறு.


அடியவர்கள் :- ( சிரிப்பு ) 

அடியவர்:- என்னை ஏன் குருநாதர் அப்படி அழைக்கின்றார்…


( சில உரையாடல்கள் ) 



குருநாதர்:- அப்பனே அகல வாய் என்று சொன்னேனே எதற்காக சொன்னேன் என்று கூறுகின்றேன் அப்பனே. உன்னிடத்தில் அப்பனே வாய் கொடுத்து யாரும் ஜெயிக்க முடியாதப்பா. அதானால் தான் சொன்னேன்.  யாராவது ஜெயிக்க முடிந்தால் அவனிடத்தில் பேசுங்கள் அப்பனே. ஜெயித்து காட்டுங்கள் அனைத்தும் தருகின்றேன். 



கேள்வி கேட்ட அடியவர்:- ( இவ்வளவு விளக்கத்திற்கு பின்னும் ஒரு கேள்வியை கேட்க ஆரம்பித்தார்) 


குருநாதர்:- அப்பனே எத்தனை உரைகள் அப்பனே சொல்லி இருக்கிறேன். அதனால் இப்பொழுது சொன்னேனே உன் விளக்கத்தை பற்றி அப்பனே நீயே கூறு அப்பனே எப்படி எல்லாம் ஏமாற்றுவார்கள் என்று.



குருநாதர் எடுத்து உரைக்க சொன்ன அடியவர்:- ஏமாத்துறது வந்து பாத்திங்கன்னா நிறைய வழிகள் ஏமாத்துறாங்க. சரிங்களா. நான் அகத்தியர் சிஷ்யன். நான்தான் அகத்தியன். அகத்தியர் என்னை வழி நடத்துகின்றார். அப்டின்னு சொல்லிகிட்டு அவர் பெயரை சொல்லிவிட்டு நிறைய பேர் வந்து நம்மள ஏமாத்திகிட்டு இருக்காங்க. நம்ம அவங்க வழியில ( ஏமாந்து ) சொல்கின்றோம். 

அது மட்டும் கிடையாது. நாடிகளையும்  வந்து பாத்திங்கன்னா ஜீவ நாடிகளில் நிறைய வந்து பொய் நாடிகள் இருக்கு. இறைவாக்கு சொல்லி மக்கள் வந்து தவறான மக்கள வந்து தவறான வழியில செலுத்திகிட்டு இருக்காங்க. இது மாதிரி ஏமாத்துரத்துக்கு நிறைய வழி இருக்கு. 


குருநாதர்:- அப்பனே மீண்டும் சொல்கின்றேன் அப்பனே. ஏமாற்றுபவனைவிட ஏமாறுபவனுக்குத்தான் அதிக தண்டனை என்பேன் அப்பனே. ( ஏமாற்றும் ) அவனுக்கு தண்டனை இல்லை. ( ஏமாறும் ) இவனுக்குதான் தண்டனை அப்பனே இப்பொழுது அப்பனே.


அப்பனே அனைத்தும் தெரிந்தும் கூட அப்பனே உன்னை ஏமாற்றுபவன் அதனால் நீயே ஒரு ஏமாற்றுக்காரன் அப்பனே. உன்னை ஏமாற்றி இருந்தால் அப்பனே அவளோ அவன் எவ்வளவு பெரிய ஏமாற்றுக்காரன் என்று நீயே புரிந்து கொள்.


அடியவர்:- ( சில உரையாடல்கள் ) ஏமாறாமல் இருக்க ஏதாவது solution இருக்கா?


குருநாதர்:- அப்பனே மீண்டும் இதைத்தான் இவ்வளவு நேரம் அப்பனே நீயே கூறு.?



(மதுரையில் அகத்திய பிரம்ம ரிஷி அடியவர் இல்லத்தில் உரைத்த இந்த வாக்கு பின் வரும் பதிவில் தொடரும் ………)

https://siththarkalatchi.blogspot.com/2023/11/232-5-9-2023-28.html?m=0


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!





No comments:

Post a Comment