“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Wednesday, November 22, 2023

சித்தர்கள் ஆட்சி - 236 : அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 5-9-2023 உரைத்த வாக்கு - பகுதி 32


 பகுதி - 32


“அனைத்தும் இறைவா நீ”


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரை அடியவர் ஒருவர் இல்லத்தில் இரண்டாம் நாள் உரைத்த வாக்கு - 05.09.2023 ( மதுரை வாக்கு - பகுதி 32) 



இந்த வாக்கின் முந்தைய பகுதி கீழே உள்ள பதிவில் படிக்கவும்


https://siththarkalatchi.blogspot.com/2023/11/235-5-9-2023-31.html?m=0




அடியவர்:- ஐயா இராமேஸ்வரம் போகச்சொன்னாங்க …. 

(அம்மை ஒருவர் இராமேஸ்வரம் செல்வது குறித்து கேள்வியை குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி பாதம் பணிந்து மதுரையில் அடியவர் இல்லத்தில் வைத்து கேட்ட போது, அன்பே வடிவான  அகத்திய பிரம்ம ரிஷி உலகோர் நண்மைக்காக இதுவரை உலகம் அறியாத இரகசிய வாக்கு ஒன்றை அருளானார்கள். அந்த வாக்கு உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கின்றோம்)


குருநாதர்:- அம்மையே, அப்பனே அனைவரும் கேட்டுக்கொள்ளுங்கள். இராமேஸ்வரத்திற்க்கு எதற்கு போகச்சொன்னேன்?  அதுவே கடைசி பின் ஈர்ப்புத்திறன் அதாவது தனுசுகோடி அங்குதான் இவ் ஆன்மாக்கள் ( முன்னோர்கள் ) அனைத்துமே தேங்கி நிற்க்கும். 


ஒரு சக்தியானது இவ் ஆன்மாகளை அங்கு இழுத்துக்கொள்ளும்.  அங்கு சென்றால்  (தனுசுகோடி) அருகே சென்றால் உங்களுக்கும் அவ்சக்திக்கும் நிச்சயம் ஈர்ப்பு விசை ஏற்ப்பட்டு மீண்டும் அவ்ஆன்மா ( முன்னோர்கள் ) ஆனது உன்னிடத்தில் வந்து பின் பிறவி எடுக்க வில்லை என்றாலும் நிச்சயம் வேறு வேறு உயிருக்கு அதாவது அப்படியே அவ் ஆன்மா மாறிவிடும்(பிறவி எடுத்து விடும்) .


 (அப்படி பிறவி எடுக்கவில்லை) இல்லை என்றால் அங்கு நீ செல்கின்றாயே உள்ளே (அன்னை பர்வதவர்த்தினி உடனுறை ஆதி ஈசன் இராமநாத சுவாமி ) ஈசனிடத்தில் பின் அது சரணாகதி (முக்தி) அடைந்து விடும். இது யாருக்குமே தெரிவதில்லை. அதனால்தான் அங்கு போகச்சொல்கின்றேன். போகச்சொல்கின்றேன்


(முதலில் தனுஸ்கோடி அடிக்கடி சென்று பின் ஆதி ஈசன் இராமநாத சுவாமி தரிசனம் செய்ய வேண்டும். அப்போதுதான் முன்னோர்கள் ஆத்மா சாந்தி அடைந்து மனிதர்கள் வாழ்வில் சந்தோசங்கள் ஏற்ப்படும்


குருநாதர் அகத்தியர் புகழினை அழகாக உரைத்த அடியவர் :- பயங்கரமான உண்மை ஐயா இராமேஸ்வரம். 


நாடி அருளாளர்:- அறிவியல் ரீதியாக சொல்லிட்டாங்க. 


அடியவர்:- ( இங்கு மீண்டும் அந்த அம்மை இது தொடர்பாக கேட்க) 


குருநாதர்:- அதனால் அம்மையே பல கஷ்டங்கள் (உந்தனுக்கு உள்ளது) அம்மையே அவ் ஆன்மா அங்கு அலைந்து கொண்டு இருந்தது என்பேன்.  (இது போல இராமேஸ்வரத்திற்கு ) அதாவது (அடிக்கடி) சென்று கொண்டேஇரு. (அவ் ஆன்மா உன்னிடத்தில் வந்து உன்னை ) ஈர்க்கும். இறைவனிடத்தில் விட்டு விடு. அப்பொழுதுதான் (உனக்கு) சந்தோசங்கள் (உனது வாழ்வில் உண்டாகும்). 


( கருணைக்கடல் இந்த அம்மையை அங்கு இதே போல பல முறை செல்ல உத்தரவு இட்டார்கள்) 


அடியவர் கேள்வி:- எனது தம்பி ஈசனிடம் முக்தி அடைந்து விட்டாரா? 


அகத்திய பிரம்ம ரிஷி:- அப்பனே நிச்சயம்  (உனது தமயைன் முக்தி அடையாமல்)  அலைந்து கொண்டு இருக்கின்றான் அப்பனே. (இராமேசுவரத்திறக்கு அடிக்கடி ) சென்று கொண்டே இரு அப்பனே. யான் பார்த்துக்கொள்கின்றேன். அப்பனே இதன் ரகசியங்களும் முன்னே அப்பனே இப்பொழுது புரிகின்றதா? அப்பனே. அங்கேயே தான் இருக்கின்றான் அப்பனே. 


< ======================== >


இந்த வாக்கு தொடர்பாக சில புரிதல் விளக்கங்கள் இங்கு பகிர்கின்றோம்:-


இந்த பொன்னான வாக்கின்  விளக்கம்:-


அகத்திய பிரம்ம ரிஷி பாதம் காப்பு


ஒரு மனிதனை மிக வேகமாக கீழே அதள பாதாளத்தில் தள்ளிவிடுவது 3 முக்கிய கர்மாக்கள். 

இந்த மூன்றும் அவனது வாழ்க்கை எனும் பாத்திரத்தில் உள்ள 3 பெரிய ஓட்டைகள். (கீழே கொடுக்கப்பட்டுள்ள சதவிகிதம் ஒரு தோராயமே - உங்கள் புரிதலுக்காக மட்டுமே) 


1) பித்ரு கர்மா ( இந்த தளத்தில் உள்ளது போல் வழிபட இந்த மிகப்பெரிய ஓட்டை குரு அருளால் அடைபடும்) 

2) வம்சத்தின்/குலத்தின்/பரம்பரையின் பூர்வ பாவங்கள் 

3) அந்த தனி மனித ஆத்மாவின் பூர்வ ஜென்ம பாவங்கள்.


இந்த ஓட்டைகளை அடைக்காமல் எந்த மகத்தான முன்னேற்றமும் ஒரு மனிதனின் வாழ்வில் சாத்தியமாகாது. ஓட்டை பாத்திரத்தில் நீர் ஊற்றுவது போல. 


நம்மை தாக்கும் எதிரிகள் இந்த மூவர் கூட்டணி என்று சொன்னால் அது மிகை ஆகாது. அதள பாதாளத்தில் உள்ள நம் அனைவரின் வாழக்கையிலும் , அதி உச்ச இமாலய வெற்றி கொள்ள இந்த மூவரையும் அழிக்க வேண்டியது மிக மிக அவசியம். கருணைக்கடல் குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி இதனை பல வாக்குகளில் உணர்த்தி, அறிவுறுத்தி நம் அனைவரையும் நல் வாழ்வு வாழ வைக்க அருளுகின்றார். 


நாம் அனைவரும் குருநாதருக்கு ஒரு எறும்பு போல. இருப்பினும் நமக்கு , மனித குலத்திற்கு இந்த ரகசிய வழிமுறைகளை அருளுகின்றார். சித்த கருணாமூர்த்தியான அகத்திய பிரம்ம ரிஷியின் கருணையோ கருணை. 


இந்த தளத்தில் குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த படி அனைவரும் அடிக்கடி பல முறை இராமேஸ்வரம் சென்று வழிபட்டு வெற்றி வாகை சூடுங்கள். உங்கள் குடும்பத்தில் சந்தோசங்கள் பொங்கி வழியட்டும். தலை நிமிர்ந்து பெருமையுடன் நீங்கள் வாழ்க வளமுடன். 


குரு அருளால் இந்த வாக்கை அடுத்தவருக்கு எடுத்து சொல்லி , அவர்களையும் இராமேஸ்வரத்திற்கு பயணம் செய்ய வைத்து,  இறை தரிசனம் பெற வைத்து புண்ணியத்தையும் பெற்றுக்கொள்ளுங்கள். இந்த வாக்கை அனைத்து தளங்களிலும் இட உதவுங்கள். தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் கொண்டு சேரக்க உதவுங்கள். 


(இந்த விளக்கம் ஒரு புரிதலுக்காக) ஒவ்வொரு குடும்பத்தின் குலத்திலும் 5 முதல் 10 முன்னோர்கள் மறு பிறப்பு எடுக்காமல், முக்தி/சாந்தி அடையாமல் தனுஸ்கோடியில் தவிக்க வாயப்புகள் மிக அதிகம். சில நேரங்களில் ஒரு ஆன்மா பிறவி எடுக்க 500 முதல் 1000 வருடங்கள் கூட தோராயமாக ஆகலாம். ஒரு நூறு ஆண்டுகளுக்கு நமக்கு 3 தாத்தாக்கள்  ( அப்பா, மகன், பேரன் ). 1000 ஆண்டுகளில் அதாவது 10 நூற்றாண்டுகளில்  30க்கும் மேற்ப்பட்ட நம் முன்னோர் தாத்தாக்கள் வரிசையாக பூத உடல் நீங்கி இருப்பர். அதில் குறைந்த பட்சம் 5 முதல் 10 முன்னோர் தாத்தாக்கள் ஆத்மாக்கள் மறு உலகத்தில் ( தனுஸ்கோடி - இராமேஸ்வரம் ) சிரம்ப்பட வாய்ப்பு அதிகம். இது போல பாட்டிமார்கள், மற்றும் இதர முன்னோர்கள் அங்கு பரிதவிக்க (ஏறத்தாழ ,  தோராயமாக) வாய்ப்பு உண்டு. 


அத்துடன் அந்த வம்சத்தில் வாரிசு இல்லாமல் பிதுர் தர்ப்பணம் செய்யாமல் பல ஆத்மாக்களும் தனுஸ்கோடியில் தவிக்க வாய்ப்பு உண்டு. அங்கு அவர்கள் அனைவரும் அல்லல் பட, இங்கு குடும்பங்கள்/அந்த வம்சங்கள் அல்லல் படும் என்பதே பித்ரு தோஷத்தின் உள் விளக்கம். இந்த மகத்தான புரிதலை  அனைவருக்கும் பரப்புவது தமிழகமே கூடி ஒரு பெரிய தேர் இழுப்பது போல. 


குருஅருளால் ஓவ்வொருவரும் குறைந்த பட்சம் 108 நபர்களுக்கு பேசி புரிய வையுங்கள். குருஅருளால் அனைவரும் பல முறை இராமோஸ்வரம் சென்று ஆதி ஈசனை தரிசித்து,  அனைவரும் நன்றாக சந்தோசமாக வாழட்டும். 


உலகம் இதுவரை அறியாத , மறைக்கப்பட்ட இராமேஸ்வர ரகசியம் இன்ற கருணைக்கடல் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி அருளால் வெளிவந்து உள்ளதை என்பதே ஒரு மகிழ்ச்சியான செய்தி ஆகும்.


இந்த தனுஸ்கோடி-இராமோஸ்வரம் குறித்த வாக்கு எப்படி ஒருவர் வாழ்வில் சந்தோசங்கள் உண்டாகும் என்ற அதி சூட்சும ரகசிய வாக்கு. இந்த வாக்கை அனைத்து இனைய தளங்களிலும் பகிர வேண்டுகின்றோம். 


உங்கள் நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என அனைவருடமும் அவசியம் பகிரவும். இதனால் எந்த தகவலும் தெரியாமல் அல்லல் படுபவர்கள் பலர். அவர்களிடம் உங்களால் இயன்ற அளவு எடுத்து கூறவும். 


மகத்தான, மகிமை புகழ் வாக்கினை அனைவரும் எடுத்துரைத்து, இதனை பின்பற்றி அவர்கள் குடும்பத்துடன் சந்தோசமாக வாழ உதவுங்கள்.


<========================>




அடியவர்:- ( தனி வாழ்வு சம்பந்தப்பட்ட கேள்வி / பதில்)



குருநாதர்:-  அம்மையே புண்ணியங்கள் செய்.  சிறிது சிறிதாக அம்மையே முடியாத ஜீவராசிகளுக்கெல்லாம் அப்பனே அனுதினமும் உணவளிக்க சொல் அப்பனே.


குருநாதர் அகத்தியர் புகழினை அழகாக உரைத்த அடியவர் :-  பசு மாட்டுக்கு அகத்திக்கீரை கொடுங்க அம்மா. பைரவர்களுக்கு உங்களால முடிஞ்ச ஒரு பால் கலந்த சாதம் கொடுக்கணும். சரிங்களா. பறவைகளுக்கு வந்து மேல மாடி மேல வையுங்க. அனில்களுக்கு , காக்காய்க்கு, எறும்புகளுக்கு ( வாய் பேச முடியாத அனைத்து உயிரினங்களுக்கும் முடிந்தவரை அன்போடு) வையுங்கள். எப்பவுமே சாப்பிடறதுக்கு முன்னாடி உணவு நீங்க சாப்பிடறதுக்கு முன்னாடி இறைவனுக்கு வச்சுட்டு அத பிற ஜீவராசிகளுக்கு வையுங்க. 


எப்பவுமே கைல வந்து பிஸ்கட் பாக்கெட் வச்சீங்க. போகும்போது நாய்க்கு போடுங்க. வாரத்துக்கு தினசரி ஒரு தடவையாவது பசு மாட்டுக்பு அகத்திக்கீரை கொடுங்க. எல்லா பிரச்சனையும் குருநாதர் அருளால் சரியாகும்.


அடியவர் :- ( பல தனிப்பட்ட கேள்வி பதில்கள் ) 


குருநாதர்:- அப்பனே. வாழ்க்கை பற்றி எடுத்துரை. 


குருநாதர் அகத்தியர் புகழினை அழகாக உரைத்த அடியவர் :-  அதாவது இந்த வாழ்க்கை என்ற கஷ்டத்தை அனுபவிக்கத்தான் வந்திருக்கிறோம். இந்த உடம்பு இறைவன் கொடுத்த உடம்பு. கர்மாவை அனுபவிக்கத்தான். இந்த உடம்பே கர்ம உடம்புதான். சரிங்களா. நாம பிறப்பே பாவம் ஆன பிறப்புதான். ஏன் இந்த உடம்பு இறைவன் கொடுத்திருக்கின்றான் என்றால் நம்ம முன் ஜெனமம் செய்த வினைகளை அனுபவிக்கறதுக்காக இறைவன் இந்த உடம்பை கொடுத்து இருக்கான்.  


அப்டின்றப்போ ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான கஷ்டங்கள் இருக்கும். சரிங்களா. அது எல்லாம் சரி செய்து,வழி நடத்தத்தான் இறைவன் இந்த மாதிரி ஜீவநாடி மூலம் நமக்கு வழி காட்டுது.

நீங்க நம்பி அகத்தியர் சொல்றத செய்ங்க. சரி  பன்னுவார்.  


நம்ம எல்லாரும் கருமங்களுக்கு ஆட்பட்டவர்களே. நீங்களும் சரி , நானும் சரி , எல்லாரும் கர்மாவுக்கு ஆட்பட்டவர்கள். இந்த மனித உடம்பு எடுத்துட்டாலே அது பூமி யோட சொத்து அப்படின்றப்ப என்ன இறையோட சொத்து என்ன? ஆன்மாவும் உயிரனுவும். அது மேல போகணும். இந்த உடம்பு மட்டும் பூமியோட சொத்து. இதை ( உடம்பை)  இழுக்கிறது என்ன?  இந்த ஈர்ப்பு சக்தி பூமியின் ஈர்ப்பு சக்தி. இந்த ஈர்ப்பு சக்தியை நாம விடனும். இந்த ஈர்ப்பு சக்தி என்பது என்ன?  நமது ஆசை. சரிங்களா.


ஒருத்தருக்கு மண்ணு மேல ஆசை. ஒருத்தருக்கு பொன்னு மேல ஆசை. ஒருத்தருக்கு பொருள் மேல ஆசை.


இந்த மாதிரி எல்லாம் பூமியிலே இருக்கக்கூடிய விஷயங்கள் மீது நம்ம எப்போ, எவ்வளவு  பற்று கொள்கின்றோமோ , இங்க விளையக்கூடிய பொருள் மேல பற்று கொள்கின்றோமோ , அப்போ நம்மால் இறை கிட்ட போக முடியாது. என்னைக்கு இதெல்லாம் இந்த ஆசை என்ற ஈர்ப்பு விசையை (வேறோடு) அறுக்கின்றோமோ, அப்போது மேல சூரியனை நோக்கி அந்த பரப்பிரம்மத்தை நோக்கி நாம எல்லாரும் பயணிப்போம். 


அதுக்குத்தான்,  அறுக்கின்றதற்குதான் இந்த பிறவிய இறை நமக்கு கொடுத்து இருக்கு.  நமது இந்த பிறவி நம்ம கர்மாவினால் வந்து இருக்கு. அப்போ அந்த கர்மாக்கு உங்கள மாதிரி பிரச்சனை உள்ள 1000 பேர் இருக்காங்க. ஆனா உங்களுக்கு மட்டும் ஜீவநாடி இருக்கின்றது என்று ஒரு இடத்துக்கு வழி தெரிஞ்சிருக்கு. அகத்தியர் ஒருத்தர் இருக்கின்றார் என்று உங்க வழியில தெரிஞ்சு இருக்கு.


அப்போ நீங்க ஏதோ புண்ணியம் பண்ணிருக்கீங்க நிச்சயமா எல்லாத்தையும் தாண்டி. குருநாதர் சொல்வதை கேளுங்கள். நிச்சயமா பிரச்சனை சரியாகும். புண்ணியங்கள் செய்யுங்க. எல்லா problem சரி ஆகும்.



குருநாதர்:- அப்பனே இவ்வாறு அனைத்தும் விதியினால் நடந்தாலும் அப்பனே மதியினால் தன்னை காத்துக்கொள்ள வேண்டும். அப்பனே மதிதான் இறைவன். அப்பனே . சரியான பத்தியை கடைப்பிடித்தாலே தானாகவே (விதி மாறும் ) , சில புண்ணியங்களை செய் அப்பனே நிச்சயம் மாற்றி அமைக்கிறேன்.


குருநாதர் அகத்தியர் புகழினை அழகாக உரைத்த அடியவர் :-  அம்மா , குருநாதர் சொன்ன மாதிரி புண்ணியம் செய்ங்க. நிறைய புண்ணியங்கள் செய்ங்க அம்மா. இல்லாதவருக்கு ஆதரவற்றோருக்கு உணவு அளியுங்கள். பசுமாட்டுக்கு அகத்திக்கீரை கொடுங்கள். வாயில்லா ஜீவராசிகள் வாயிலாக உணவு அளியுங்கள். Definiteஆ விதியை குருநாதர்  மாற்றி வைப்பார்.


குருநாதர்:- அப்பனே அனைவருக்குமே சொல்கிறேன். ஏதாவது உங்களிடத்தில் புண்ணியங்கள் இருந்தால் தான் யானும் அதை எடுத்துக்கூறி இறைவனிடத்தில் அதாவது உங்களுக்கு கஷ்டங்கள் வந்தாலும் (உங்களுக்காக இறைவனிடத்தில்) சண்டைகள் இட்டு உங்களை காப்பாற்ற முடியும்.  உங்களிடத்தில் ஏதுமில்லை என்றால் யானும் எவ்வாறு நன்மைகளை செய்வேன்? சொல்லுங்கள் நீங்களே.?


அடியவர்கள்:- ( மௌனம் ) 


குருநாதர் அகத்தியர் புகழினை அழகாக உரைத்த அடியவர் :-  அதாவது இந்த பாவம் என்பது,  நம்ம முற்பிறவியில் செய்த பதிவுகள் எல்லாம் வந்து மூளைக்குள்ள வந்து செல்களுக்குள் பதிஞ்சு இருக்கு. சரிங்களா?. இதுதான் நமக்கு இயக்கமாக மாறுவது. 


இப்போ ஒருத்தருக்கு கர்மா எப்படி  நடக்குதுனா ஒரு நாள் இரவு தூங்குறோம். தூங்குறப்ப வந்து பாத்திங்கன்னா சிரசில் இருக்கக்கூடிய அனுக்களுக்கு எல்லாம் ஆன்ம அனுவானது உணவு அளிக்கும். அந்த உணவு அளிக்கின்றபொழுது அதீத வெப்பத்தினால் சில பதிவுகள் எல்லாமே கரைந்து வெளியில் வரும். 


அது நமது முற்பிறவி பதிவுகள் எல்லாம் கரைந்து, காலத்துல வந்து நமக்கு வந்து அந்த பஞ்ச இந்திரியங்கள் ( கர்ம இந்திரியங்கள் ) வழியாக செயலாக வெளிப்படும். 


=========================

(அடியவர்கள் புரிதலுக்காக கர்மேந்திரியங்கள் மற்றும் ஞானேந்திரியங்கள் குறித்த விளக்கம் கீழே ) 


கர்மேந்திரியங்கள் அல்லது செயற்கருவிகள் வாக்கு, கைகள், கால்கள், உடற்கழிவுகளை வெளியே தள்ளும் உறுப்புகள் (குதம் மற்றும் சிறுநீர் குழாய்), மற்றும் பிறப்புறுப்புக்கள் ஆகிய ஐந்தும் கர்மேந்திரியங்கள் (செயற்கருவிகள்) என சமசுகிருத மொழியில் அழைப்பர்.


ஞானேந்திரியங்கள் வெளி உலக பொருட்களைக் குறித்த அறிவை நமக்கு தரும் உடல் உறுப்புகள் ஞானேந்திரியங்கள் ஆகும். கண், காது, மூக்கு, நாக்கு, மற்றும் தோல் ஆகிய உடல் உறுப்புக்களின் மூலம் வெளி உலக அறிவை நாம் அடைவதால், இந்த உடலுறுப்புக்களுக்கு சமசுகிருத மொழியில் ஞானேந்திரியங்கள் என்று அழைக்கப்படுகிறது. இந்த உறுப்புகளான காதின் மூலம் ஒலியும், தோல் மூலம் தொடு உணர்வும், கண் மூலம் வெளிப்புற காட்சிகளும், நாக்கின் மூலம் சுவையுணர்வும், மூக்கின் மூலம் மணம் எனும் ஐந்து உணர்வுகள் நமக்கு கிடைப்பதால் இவ்வுறுப்புக்களை ஞானேந்திரியங்கள் என்பர்.


( வாருங்கள் மீண்டும் வாக்கின் உள் செல்வோம் ) 


=========================


அப்போ அந்த வெளிப்படக்கூடிய அந்த கர்மா,  வாயு ரூபத்துல் வெளியில வரும். அதை அழிப்பதற்கு இறை சக்தி வேணும். காந்த சக்தி என்ற இறை சக்தி வேண்டும். அப்போ நம்ம கிட்ட புண்ணியம் இருந்தாதான் அந்த வெளிப்படக்கூடிய வாயுவான அந்த கர்மாவை அழிக்க முடியும்.அகத்தியரால், அவர் அருளால். 



அதனால நம்மிடம் அந்த புண்ணிய பலன் இல்லை என்றால் அந்த ஆன்மா தான் செஞ்ச தவறுக்கு எதை ( இன்பம் , துன்பம் ) அனுபவிக்கனுமோ,  அதை வாயு ரூபமாக வெளிப்பட்டு செயலாக மாறி அதனுடைய கர்மாவை அந்த உடம்பு மூலமாக அனுபவிப்பாங்க. 


அப்போ அந்த புண்ணிய பலம் நம்ம இருக்குறப்போ , அகத்தியர் தன்னுடைய இறை ஆற்றல்  மூலம் அதாவது அவரிடம் உள்ள இறை ஆற்றலினால் வெளிவர கூடிய வாயுவை அழித்து அதை (கர்ம) செயலாக மாற்றாமல் நமக்கு நல்லது செய்வார். இதுதான் realஆ நடக்கின்றது. அதைத்தான் குருநாதர் ஐயா சொல்கின்றார். 


குருநாதர்:- ( அடியவர் விதியின் சூட்சுமத்தை கருணைக்கடல் அழகாக எடுத்து உரைத்தார்கள். முன் செய்த வினையால் விதியே தவறாக வழிநடத்தும் சூழல். அதை மதியினால் மட்டுமே வெல்ல இயலும் என்று உரைத்தார்கள்.)



குருநாதர்:- ( மீண்டும் அங்கு உள்ளவர்களுக்கு வாய்ப்பு அளித்தார்கள்)

அப்பனே கேள்.


அடியவர்:- ஐயா விக்கிரமங்கலம் சிவன் கோயிலுக்கு ஏடு படிக்க நீங்க வரனும். 


குருநாதர்:- அப்பனே யான் அங்கே தான் இருக்கின்றேன். . அப்பனே ( நாடி அருளாளர்) வருவான் அப்பா.


அடியவர்:-  விக்கிரமங்கலம் பெருமாள் கோயில் கட்டலாமா? 


குருநாதர்:- அப்பனே அனைத்தும் நடக்கும் அப்பா. அப்பனே நீயே அறிவாளிதான் அப்பனே.கட்டி விடுவாய் என்பேன் அப்பனே. உன்னால் முடியும். முடியாது என்றால் யாராலும் முடியாதப்பா. போ.


அடியவர்:- ஐயா ராமேஸ்வரத்த குறித்து சொன்னீங்க அய்யா.  எல்லாருமே ஒரு எதோ எல்லாரும் சொல்றாங்க. அப்படின்னு ஒரு பரம்பரை பரம்பரையா நம்ம நம்பிக்கையில் நாங்க போய் செஞ்சுட்டு இருந்தோம். ஆனா அதுக்குள்ள இருந்த அறிவு பூர்வமான விளக்கத்த இன்னைக்கு சொல்லிட்டீங்க.


குருநாதர்:- அம்மையே இதுபோல் ( உண்மை விளக்கம் அளிக்கும் )  நூல்கள் பல இருந்தன. அம்மையே காசுக்காக ஆசைப்பட்டு பக்தர்களே விற்று விட்டார்கள் அம்மையே.  இதை எல்லாம் சொன்னால் பிழைத்து விடுவார்கள் என்று பத்திரமாக வெளிநாடு தான் அதாவது பின் அப்படியே ( வெளிநாடுகளில் ) சேகரித்து விட்டனர் மக்களுக்கு தெரிய க்கூடாது என்று. ஆனால் நாங்கள் விட்டு விடுவோமா என்ன தாயே.


(கருணைக்கடல் உரைத்தது போல தனுஸ்கோடி-இராமேஸ்வர ரகசியத்தை பயன்படுத்தி நன்கு சந்தோசமாக பிறரை மகிழ்வித்து மகிழுங்கள். ) 


(மதுரையில் அகத்திய பிரம்ம ரிஷி அடியவர் இல்லத்தில் உரைத்த இந்த வாக்கு பின் வரும் பதிவில் தொடரும் ………)


https://siththarkalatchi.blogspot.com/2023/11/237-5-9-2023-33.html?m=0


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!







No comments:

Post a Comment