“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Saturday, September 16, 2023

சித்தர்கள் ஆட்சி - 151 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு

 



அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:-

நாங்கள் கூறுகின்ற சூட்ச்சுமத்தை யாரும் புரிந்துகொள்ளவே  இல்லை. ஒரு மனிதன் தன் தேவையை மறந்துவிட்டு, பிறருக்கு சேவையையும், பொதுநலத் தொண்டையும் செய்யத் துவங்கும்போழுதே, அவன் தேவையை இறைவன் கவனிக்கத் தொடங்கிவிடுவார் என்பதே சூட்ச்சுமம். எனவே, தன்னைத்தான்,  தனக்குத்தான், தன் குடும்பத்தைத்தான், பார்ப்பதை விட்டுவிட்டு, தான் , தான், தான், தான் என்பதையெல்லாம் விட்டுவிட்டு, இறைவனைத்தான், இறைவனின் கருணையைத்தான், இறையின் அன்பைத்தான், இறையின் பெருமையைத்தான், இறையின் அருளைத்தான், இறையின் பெரும்தன்மையைத்தான் புரிந்துகொண்டால், இந்தத் "தான்" ஓடிவிடும், இந்தத் "தான்" ஓடிவிட்டால், அந்தத் "தான்" தன்னால் வந்துவிடும். அந்தத் "தான்" வந்துவிட்டால், எந்தத்"தானும்" மனிதனுக்குத் தேவை இல்லை.


(இதே கருத்தை வெளிப்படுத்தும் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த மற்றொரு வாக்கு உங்கள் பார்வைக்கு)

அப்பனே இங்கு என்ன தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் அப்பனே!!!!.... 

"""""'தான் மட்டும் வாழ வேண்டும் தன் சொந்த பந்தங்கள் வாழ வேண்டும் என்று நினைக்க கூடாது அப்பனே!!!!!!! 

அங்கு அப்பனே!!!!!

 வாருங்கள் (என்று அழைத்து) பின் முதலில் அவந்தனுக்கு கொடுத்து பின் யார் ஒருவன் இருக்கிறானோ!!!!! அவன் தானப்பா!!!!! மனிதன். 

(விருந்துகளில் யாராவது இயலாதவருக்கு வரவழைத்து அன்னத்தை முதலில் அளிப்பவர்) 

ஆனால் அப்படிப்பட்ட மனிதன் எங்கு?????????! இருக்கின்றானப்பா?????????

அப்பனே இவை போன்று அப்பனே எதை என்று அறிய அறிய சொல்லிக்கொடுத்திருக்கின்றேன் அப்பனே!!!!!!!!! (நமக்கு) 

பிள்ளைகளுக்கு சொல்வதைப்போலே யான் ஒவ்வொரு வாக்கிலும் சொல்லிக்கொண்டு இருக்கின்றேன் அப்பனே!!!! 

தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!! 

அங்கு மனது எங்கு???? போய்விட்டதப்பா?????? (இரங்கும் மனது) 

அவ் (திரு) மணத்தில் எதை என்று கூட எத்தனை பேர்கள்????????? ஒருவனுக்காவது அந்த மனது இல்லையப்பா.

அதனால் அப்பனே பின் பிள்ளையோன் தலை குனிந்து இப்படியெல்லாம் இருக்கின்றார்களே!!!!!!! மனிதர்கள்!!!!

இவர்களுக்கு கொடுத்தாலும் ஒன்றும் பிரயோஜனமில்லை என்று திரும்பி பின் போய்விட்டான் அப்பனே!!! 

அப்பனே பார்த்துக் கொண்டீர்களா அப்பனே!!!!





No comments:

Post a Comment